Loading

அத்தியாயம் ஆறு

சென்னை 

அடுக்கு மாடி வீடு :

       கண்ணீர் மல்க கடவுளின் புகைப்படத்தின் முன் நின்று மனம் உருக மன்னிப்பு பிச்சை வேண்டி கரைந்து  கொண்டிருந்தாள்  அமிழ் (அமிழ்தினி ) . அவள் பின்னே நின்று தன்னவள் தோளை பற்றி திருப்பிய ஆனந்த் அமிழின் இள நீல நிற மீன் விழிகளில் இருந்து வழிந்து இறங்கும் கண்ணீரை துடைத்து விட்டவன் அவளை அன்போடு அனைத்துக் கொண்டான் .

” என்னாச்சு பாப்பா இன்னும் நீ வருத்தப்பட்டு இருக்குறதுனால ஒன்னும் நடக்கப் போறது இல்லை … மறந்திடு பாப்பா எல்லாத்தையும் ” என்று மேலும் காதலோடு தன்னோடு இறுக்கிக் கொண்டான் . தன்னவன் மார்பை கண்ணீரால் கழுவியவளுக்கு குற்ற உணர்ச்சி இன்னும் குறைந்த பாடு இல்லை . திருமணத்தன்று வந்துவிட்டாள் நிச்சயம் தன்னை பெற்றவர்களே யோசிக்காது சித் குடும்பத்தின் நிலையை கருதி கண்டிப்பாக மகியை திருமணம் செய்து வைப்பர் என்று தெரியும் ஆனால் , என்ன செய்வது தன்னுடைய காதலையும் விட்டுக் கொடுக்க முடியாது , எத்தனையோ தடவை திருமணம் பிடிக்கவில்லை என்று சித்திடம் கூற நினைத்தவளால் முடியவில்லை , இப்போது தன் தங்கையை தன் காதலுக்காக பலி கொடுத்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் அன்றிலிருந்து கண்ணீரை விட்டு மனது கேட்காமல்   மன்னிப்பை கடவுளிடம்  வேண்டுகிறாள் . அவளை அனைத்து இருந்த ஆனந்தோ தன்னவளை விலக்கி நெற்றியில் முத்தமிட்டவன் ஏதேதோ பேசி அமிழை சரி செய்ய முயற்சித்தான் .

                        ❤️

கார் பயணம் : 

      சித்திற்கு தான் ‘  சே ‘  என்றிருக்க , மறுபடியும் எதுவும் பேசாமல் அமைதியாக காரை செலுத்தினான் . மகியின் வீட்டை கார் அடைந்ததும் இருவரும் இறங்கி உள்ளே செல்ல செல்வியும் கதிரவனும் சந்தோசமாக வரவேற்றனர். எங்கே சித்தும் மகியும் இருந்த கடுப்பில் எதையும் கண்டுக்கொள்ளாமல் வந்து ஹாலில் அமர்ந்தனர் .

” மகி எப்படி இருக்க ” என்று செல்வி மகளை பிரிந்த வருத்தத்துடன் கேட்க , மகியோ 

” ஏன் ஒரு நாள்ல நல்லா இல்லாம போய்ர மாட்டேன் ” என்றாள் எரிச்சலாக . சித்தின் மனதில் அதை தான் நினைத்தான் போல மகி சொன்னதும் சிரித்து விட்டான் . செல்விக்கு தான் மகளின் பாரா முகம் கஷ்டமளித்தது  . 

” சரி மகி தம்பிய கூட்டிட்டு உன்னோட ரூம் போ , சாப்பாடு ரெடி ஆனதும் நாங்க கூப்பிடுறோம் ” என்று கதிரவன் கூற , தந்தையை தாயை போல கஷ்டப்படுத்த மதிக்கு வாய் வரவில்லை தந்தையின் செல்ல பிள்ளை ஆயிற்றே !!., எதுவும் பேசாமல் அவள் அறைக்கு செல்ல , சித்தும் மகி பின்னே சென்றான் . ஏற்கனவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறான் , என்ன மகியின் அறைக்கு வந்ததில்லை அமிழ் அறையில் தான் எப்போதும் இருப்பான் இன்று தான் மகியின் அறைக்கு வருகிறான் சித்தின் அறையை விட பாதி‌ அளவாக இருந்தாலும் அழகாக வைத்திருந்தாள் . சுவற்றில் அங்காங்கே அழகோவியங்கள் இருக்க , நிறைய படிப்பாள் போல பல புத்தகங்களை  வரிசையாய் அடுக்கி வைத்திருந்தாள் . மகி கடுப்பில்  அமைதியாக அமர்ந்திருக்க,  சித்  அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.

” நீ தான் இதெல்லாம் வரஞ்சதா ”  என்று கேட்க , அவளுக்கு சில பழைய சம்பவங்கள் கண்களுகக்குள் வந்தது . அதற்கும்  மனதிலே ஒரு விரக்தி புன்னகையை கொடுத்து,  ‘ ஆம் ‘ என்பது போல் தலையாட்டினாள் . மகியின் அறையில் சன்னலை திறைந்தவன் முகத்தில் சில்லென்ற  காற்று முகத்தில் பட்டு அவன் தேகத்தை சிலிர்க்க வைத்தது .  அவ்வளவு பூக்கள் தெரிந்தது அவள் அறையிலிருந்து  . 

ஏதோ பறந்து வர விலகி பின்னாள் ஒரு எட்டை வைக்க , பார்த்தால்  பட்டு தான் பறந்து வந்தது ( பட்டு என்பது மகி வளர்க்கும் கிளி ) வந்ததும் மகியின் தோளில் அமர்ந்தது . அதை பார்த்தவுடன் மகிக்கு மகிழ்ச்சியாக இருக்க, எப்போதும் தினம் தினம் நடக்கும் அனைத்தையும் பட்டுவிடம் கூறிவிடுவாள் . 

அது கீ..க்.. கீ என்று சத்தமிட 

” என்ன பட்டு என்ன ரொம்ப மிஸ் பண்ணியா ” அதற்கு புரிந்து போல ,  தலையை  மேலும் கீழுமாக ஆட்டியது . இருவரும் கொஞ்சிக் கொள்வதை சித் தான் புன்னகையுடன் பார்த்தான் . அவனும் இந்த இயற்கை படைத்த ஒவ்வொன்றையும் ரசிப்பான் , மகியும் அப்படி செய்வது பிடித்திருந்தது .  பட்டு மகியை விட்டு சித் தோளில் அமர அவனுக்கு தான் ஆச்சிரியமாக இருந்தது . புதிதாக வருபவர்களை பொதுவாக செல்ல பிராணிகள் அவர்களை பார்த்து கத்தும் இங்கே பட்டு அமைதியாக வந்து அவன் தோளில் வந்து அமர்வது வியப்பாக இருந்தது. பட்டுவை கை விரலில் மாற்றி அவனும் பட்டுவின் தலையை வருட , அது ஏதோ சொல்ல வாயை திறக்கும் முன் மகி பதறி எழுந்து வந்து பட்டுவை சித்தின் கையில் இருந்து பிடுங்கி, சன்னல் வெளியே பறக்க விட்டு சன்னலையும் சாத்திவிட்டாள் . சித்திற்கு தான் மகியின் செயல் புரியவில்லை 

” ஏன் இப்போ இப்படி பன்ன ” என்று அவன் வெடிக்க,

” அது என்னோட பட்டு , எனக்கு உரிய  பொருள யாரும் தொடகூடாது ” 

சித்திற்கு மகியை புரிந்து கொள்ளவே முடியவில்லை ,  சரி எதற்கு வம்பு என்று அமைதியாக அமர்ந்து இருந்தான் . சற்று நேரத்தில் செல்வி வந்து அழைக்க அனைவரும் வந்து சாப்பிட அமர்ந்தனர் . யாரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை .  சித் சாப்பிட்டு முடித்துவிட 

” தம்பி இன்னும் எதாச்சு வைக்கட்டுமா ” 

” இவ்வளவு பாசமா கேட்குறத பாத்தா கொஞ்சம் சந்தேகமா இருக்கு ஆண்டி ” என்று சித் கூற , அனைவருக்கும் புரியவில்லை அவன் என்ன கூற வருகிறான் என்று , 

” இல்லை ஆண்டி உங்க ஒரு பொண்ணு  என் காதலை உடைத்து மனச கொன்னுட்டு போய்டா !! .., உங்க இன்னொரு பொன்னு என் வாழ்க்கைல வந்து தினமும் கொள்ளுறா, அதான் நீங்க எதாச்சும் கொள்ளுற ஐடியா இருந்து இந்த சாப்பாட்டுல எதாச்சு கலந்து ஹி…ஹி ” என்று அவன் பேசி முடிக்கும் முன் 

” சட் அப் சித் திஸ் இஸ் டூ மச் , உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க… நீங்களா தான் எங்க வீட்டுக்கு வந்திங்க அமிழ் போனத்துக்கு எங்க அம்மா, அப்பா என்ன பண்ணுவாங்க , உங்க குடும்பம் அசிங்க பட கூடாதுனு தான் என்ன கல்யாணம் பண்ணி வச்சாங்க . இன்னோரு தடவை எங்க அம்மா கிட்ட அப்படி பேசுன அவ்வளவு தான் ” என மகி கத்த, 

அதில் கடுப்பு வந்து சித் கையை தட்டிலே கழுவி சென்றுவிட ‌, மகியும் எழுந்து விட்டாள் . 

” இப்போ இந்த விருந்து வைக்கலேனு யார் கேட்டா  அம்மா  இதெல்லாம் வேண்டாம் மா ” 

” எல்லாம் எங்க தப்பு தான் மகி ” என்று செல்வி கூற 

” இல்ல மா யாரோட தப்பும் இல்லை ” என்றவள் தன் தந்தையிடம் 

” ஏன்பா நீங்க என் கிட்ட பேசாமாட்டிங்கலா இந்த செல்ல மகியை மறந்துடிங்களா என்ன ? ” என்று இடுப்பில் கைவைத்து முறைத்த தன் மகளை கட்டிக் கொண்டார் .இவ்வளவு நேரம் தன் மகளை சூழ்நிலையால் இவ்வாறு செய்து விட்டோமோ என்று வலித்தது . இப்போது மகியே தன்னிடம் பேசுவது கொஞ்சம் மனம் லேசாக இருந்தது .

” சரி பா நா கிளம்புறேன்  ” என்று கிளம்பிவிட்டாள் . பெற்றவர்களுக்கு தான் கவலையாக இருந்தது . மகளின் வாழ்க்கையில் தவறு இழைத்து விட்டோமோ என வருந்தினர் . 

கடுப்புடனே வெளியே வந்தவள் காரில் பின் கதவை திறந்து அமர 

” உனக்கு நா டிரைவர் இல்ல , வந்து முன்னாடி ஏறு ”  அவன் வண்டியை எடுக்காமல் இருக்க ,

” இப்போ எதுக்கு இன்னும் இங்க நிக்கிற. ” என்று மகியும் பதிலுக்கு அவனிடம் மல்லுக்கு நின்றாள் . 

” நா உனக்கு டிரைவர் இல்ல முன்னாடி வந்து ஏறு  ” என்று சித் வீம்பு பிடிக்க , பல்லை கடித்துக் கொண்டே முன்னே அமர்ந்தாள் . மகி வந்து முன்னே அமர்ந்ததும் அவனுக்கு இதழில் புன்னகை உதிர்த்தது . அவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை . அவள் செயல்களை ரசிக்கவும் செய்கிறான் , அவளை வெறுக்கவும் செய்கிறான் . ஒரு சிரிப்பை உதிர்த்தவன் காரை உயிர்ப்பித்து  அவன் வீட்டிற்கு  விட்டான் . மகியின் முகத்தில் தான் அவ்வளவு கடுப்பு . 

சித்தின் அலைபேசி மணி அடிக்க , அதனை எடுத்து காதில் வைத்தான்

” சொல்லுடா ” என்று சித் கேட்க  

” மச்சான் நேத்து தானே நான் சொன்னே , முதல்ல ஹலோ சொல்லனும் டா ” என்று மறு முனையில் கேட்க

” சந்துரு காலைல வாங்குன அடியை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்குறேன் “

அது நியாபகம் வர ” சித் நம்ம கேட்ட மெசின் எல்லாம் வர கொஞ்ச நாள் ஆகுமாம் ” என்று நேராக விசியத்திற்கு வந்தான் . அதில் சித் சற்று ஏமாற்றத்துடனே 

” ஏன்டா எல்லாம் கரெக்ட் ஆ செட்டில்மென்ட் பண்ணியாச்சுல அப்பறம் என்ன ” 

சந்துரு ” இல்லடா மச்சான் டைம் கேக்குறாங்க ” 

” ப்ச் ” 

” விடு டா மச்சான் நம்மளுக்கு இன்னும் அஞ்சு மாசம் இருக்கு பாத்துக்கலாம் ” 

” இது விளையாட்டு இல்ல டா நம்ம மட்டும் இதை சரியா பண்ணிட்டா நம்ம நாட்டுல இருந்து பல பூச்சிக் கொல்லி மருந்த துரத்திரலாம் டா அது கண்டிப்பா நடக்கனும் ” 

” சரி டா ஒரு வாரம் டைம் குடு எல்லாம் சரி பண்ணிறேன் ” என்று சந்துரு கூறி போனை வைத்தான் . சித்திற்கு ஏற்ற நண்பன் தான் சந்துரு , அவன் மனதை எப்போதும் புரிந்து கொள்வான்  இப்போது அப்படி தான் . 

சித் இயற்கை உரங்களை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்கிறான் . அந்த உரங்களை வைத்து பயிர்களை நல்ல முறையில் வளர்த்து அனைவருக்கும் அதை நிருபித்து அவர்களையும் இந்த இயற்கை வழியே செயல் படுத்த வேண்டும் என்பதற்கு தான் இத்தனை வேலைகளும் . 

இயற்கை உரங்களை தயாரிக்கவும் கூட பல முறைகள் உள்ளன .

     1. விவசாய கழிவுகள்: வைக்கோல், அரிசி தவிடு போன்றவை.

     2. விலங்கு கழிவுகள்: கோழி எரு, பன்றி, கால்நடை மற்றும் செம்மறி எரு, .

     3. தொழில்துறை கழிவுகள்: வினாஸ், சர்க்கரை எச்சம் போன்றவை.

     4. வீட்டுக் கழிவுகள்: சமையலறைக் கழிவுகள், காய்கறிச் சந்தை மற்றும் இறைச்சிக் கூடத்தின் கழிவுகள் போன்றவை.

    5. நகராட்சி சேறு: ஆற்று வண்டல், கழிவுநீர் சேறு போன்றவை.

     பாதுகாப்பு அகற்றல் மற்றும் நொதித்தல் பிறகு, இந்த பொருட்கள்  இயற்கை கரிம உரங்கள் செய்யப்படுகின்றன. 

    இதற்காகவே சித் பல கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்தான் . அந்த வேலை தான் சற்று இழுத்து அடிக்கும் போல இருக்கின்றது , பல பிரச்சினைகள் தொந்தரவுகள் வருகின்றன .  கரிம உரங்கள் பல வழிமுறைகளுக்கு பிறகே தாயாரிக்க முடியும் . 

கரிம உரங்கள் தாயாரிக்கும் முறைகள் : 

    1) ஆர்கானிக் பொருட்கள் நொதித்தல் செயல்முறை:  

இது முழு உற்பத்தி வரிசையில் பூர்வாங்க ஆனால் தவிர்க்க முடியாத பாத்திரத்தை வகிக்கிறது. உரத்தை திருப்பவும் கலக்கவும் மற்றும் நொதித்தல் வேகத்தை விரைவுபடுத்தவும், சுயமாக இயக்கப்படும் உரம் டர்னர் மற்றும் ஹைட்ராலிக் கம்போஸ்ட் டர்னர் ஆகிய இரண்டு முக்கிய வகையான உரம் டர்னர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

     2) நசுக்கும் செயல்முறை

உரம் கட்டி பொருட்களை கிரானுலேட்டிங் செயல்முறைக்கு முன் அரைக்க வேண்டும். ஆனால் உரம் போதுமான அளவு நன்றாக இருக்கும் போது நாம் நசுக்கும் செயல்முறையை விட்டுவிடலாம். செங்குத்து சங்கிலி நொறுக்கி மற்றும் இரட்டை-தண்டு கிடைமட்ட நொறுக்கி, இரண்டு வகையான நசுக்கும் இயந்திரம் கட்டி உரம் உர மூலப்பொருட்களை நசுக்க பயன்படுத்தலாம்.

      3) கலவை செயல்முறை: 

உர உற்பத்தி வரிசையில் மூலப்பொருட்களை கலக்க இரண்டு வகையான கலவை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது: கிடைமட்ட கலவை மற்றும் செங்குத்து கலவை.

       4) கிரானுலேட்டர் செயல்முறை:

 இந்த உற்பத்தி வரிசையில் கிரானுலேட்டிங் செயல்முறை முக்கிய பகுதியாகும், எனவே வாடிக்கையாளர்களின் விரிவான தேவைகளுக்கு ஏற்ப உர கிரானுலேட்டரின் பொருத்தமான மாதிரியை நாங்கள் தேர்வு செய்கிறோம். டிஸ்க் கிரானுலேட்டர் இயந்திரம் பொருட்களை சீராக கிரானுலேட் செய்ய தேர்வு செய்யலாம்.

      5) உலர்த்தும் செயல்முறை: உரமிடும் போது, ​​உர மூலப்பொருட்களின் ஈரப்பதம் 25% க்கும் குறைவாக இருக்க வேண்டும், எனவே ஈரப்பதம் 25% க்கு மேல் இருந்தால் மூலப்பொருட்களை உலர்த்த வேண்டும். ரோட்டரி டிரம் உலர்த்தும் இயந்திரம் முக்கியமாக உரத்தை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் மற்றும் துகள் அளவு.

     6) ரோட்டரி டிரம் குளிரூட்டும் இயந்திரம்:

  உரத் துகள்களை வலிமையாக்க குளிர்விக்கும் உரத்திற்குப் பயன்படுகிறது.

     7) ரோட்டரி டிரம் ஸ்க்ரீனிங் மெஷின்:

   இது பெரிய துகள்களிலிருந்து துகள்களைப் பிரிக்கப் பயன்படுகிறது, அவை இரண்டாவது நசுக்குதல் மற்றும் கிரானுலேட்டிங் செய்ய வேண்டும். ரோட்டரி டிரம் பூச்சு இயந்திரம் உரத்தை பூசவும், உரம் ஒன்றாக ஒட்டாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

       8) கடைசி செயல்முறை பேக்கேஜிங் செயல்முறை: 

   உர பேக்கேஜிங் இயந்திரம் பைகளை அளவு மற்றும் தானாகவே பேக்கேஜ் செய்யலாம். பெல்ட் கன்வேயர், பக்கெட் லிஃப்ட் போன்ற இணைப்புக்கான சில துணை உபகரணங்களும் நமக்குத் தேவை.

     இவ்வாறு இயற்கை உரங்களையும் தாயாரிக்க பல வழிமுறைகள் உள்ளன . செயற்கை உரங்களை பல மருந்துக்களை கலந்து எளிதில் செய்து விடலாம் . இயற்கை உரங்கள் செய்ய சற்று நேரம் எடுத்தாலும் அது பயிர்களுக்கும் மனிதனுக்கு நோயற்ற வாழ்விற்கு உதவும் . 

                🍃

இருவரும் வீடு வந்து சேர்ந்து விட , மகி வேகமாக காரை விட்டு இறங்கியவள் அவர்களின் அறைக்கு சென்றாள் , வழியில் சந்துரு நிற்பதையும் கவனிக்காது  . சந்துரு தான் மகிக்கு என்ன ஆனதோ என்று கவலை பட்டான் . மகியின் பின்னே சித்தார்த்தும் கடுப்புடன் வருவதை பார்த்து சந்துருவிற்கு தான் தலை சுற்றியது . இவர்கள் இருவரும் எப்போது நிதர்சனத்தை புரிந்து கொள்வார்கள் என கவலையடைந்தான் .

பிரியாமல் தொடரும் 😍💋…..

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
19
+1
2
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  10 Comments

  1. Janu Croos

   சித்து நீ பண்றது எல்லாம் நல்லா இல்லை….அமிழ் பண்ண தப்புக்கு நீ ஏன் அவள சார்ந்தவங்கள காயப்படுத்துற…உன்னோட மனசுல ரணம் இருக்குறது வாஸ்த்தவம் தான்…ஆனா உன்னைமாதிரியே யாரும் அத எதிரப்பாக்கல தானே…. அதை புரிஞ்சுக்க பாரு…
   அமிழ்தினி…நீ அழுறதால எதுவும் மாறப்போறது இல்லை…நீ பண்ணது மகாதப்பு….அதுக்கு நீ என்ன விளக்கம் குடுத்தாலும் சரியாகாது…
   மகி நீயும் ஏன்மா கோவம்படுற….அது சரி பட்டு சித் கிட்ட ஏதோ சொல்ல வந்த மாதிரி இருந்திச்சே என்னவா இருக்கும்

   1. Bullet vedi
    Author

    நன்றி சகி 🥰🥰😁❤️… பட்டு மட்டுமே. சொல்லும் பின்னால் வரும் பதிவுகளில் 😂😂

  2. Mahi Amma appa kitta evolo thairiyam iruntha ipdi sidh pesirupan .😠😠….viduvaala Namma mahi keta paru kelvi….🔥…..apro sidh nallavana illa ketavanane terilaye …..oru vela double role la irukum moo🙄🤣.. waiting for next epi❣️

  3. கதை மாந்தர்கள் மனதில் பதிந்து விட்டனர். அழுத்தமான சமூக கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.