Loading

அத்தியாயம் நான்கு

சித்தின் அறை :

    உறங்கி கொண்டிருப்பவளை சிறிது நேரம் விழி அகலாமல் பார்த்தான் சித். சில நிமிடங்கள் தன்னை சுதாரித்து கொண்டவன் , அவள் அருகில் சென்றவன் அவளை எழுப்பலாமா இல்லை வேண்டாமா என்று யோசனையாக இருக்க… அம்மா வேறு சாப்பிட அழைத்து வர கூறினார் , இவள் வேறு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் எழுப்பலாமா என்று நினைத்தவன் கடைசியில் 

” அவ சாப்பிட்டா என்ன பட்டினி கிடந்தா எனக்கு என்ன ” என்று அவன் அறையில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து தனது லேப்டாப் திறந்து எதோ ஒரு உரத்தை தயாரிக்கும் முறையை படிக்க ஆரம்பித்தான் . கண்கள் மட்டுமே அங்கு இருக்க மூளையில் சந்துரு கூறிய அறிவுரை தான் கேட்டது 

‘அவளும் என்ன பண்ணுவா …இந்த கல்யாண பேச்சு நடக்கும் போது எப்பையும் சிரிச்ச முகத்தோடு பேசுவா… இன்னைக்கு முகத்தை கூட பார்க்கல மகிமா மேலும் தப்பு இல்லையே ‘என்று தன் மூளையை சலவை செய்து , அவளை எழுப்ப மறுபடியும் அவள் அருகில் வந்து நின்றான் . 

” மகி …மகி ..” என்று அழைக்க , அவளுக்கு தான் கனவில் யாரோ கூப்பிடுவது போல் தோன்றியது . மீண்டும் மகி என்று அழைக்க

” இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன் பா ” என்றவாறே போர்வையை மேலும் இழுத்து தூங்கினாள்  , அதில் அவனுக்கு தான் லேசாக புன்னகை வந்தது 

” மகி ” என்று உறக்க அழைத்ததில் தான் பதறி எழுந்து அமர்ந்தாள் , அப்போது தான் தன் வீட்டில் இல்லாததும் கல்யாணம் நடந்ததும் நியாபகம் வந்தது . இன்னும் இவையாவும் கனவாக இருக்க கூடாதா என்ற ஏக்கமும் வந்தது . அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை எல்லாம் குறித்துக் கொண்டவன் 

” கீழ அம்மா சாப்பிட  கூப்டாங்க போ ” என்றான் கொஞ்சம் கராரான குரலில் .

அவன் மனமோ மகியிடம் பாசமாகவும் பேச முடியாமல் , வெறுப்பை காட்டவும் முடியாமல் திணறியது . 

மகிக்கு தான் இங்கு இருக்கவே பிடிக்க வில்லை சித்தின் சிடுசிடுத்த முகமும் எடுத்தெறிந்து பேசுவதும் வலித்தது . இதுவே , தன் கண்ணா என்று நினைக்கையிலே லேசாக கண் கலங்க , அதை சித்திடம் இருந்து மறைத்தாள் . ஆனால் , அவனோ பார்த்து விட்டான் . அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவள் எழுந்து கழிவறை புகுந்து முகத்தை கழுவி  வெளியே வந்தாள் . 

மகி வெளியே வந்ததும் மீண்டும் சித் ஆரம்பித்தான் .

” சர்ட்  , சார்ட் பேண்ட் லாம் போடாத … கொஞ்சம் சுடி அந்த மாறி  போடு  ” என்றான் ஆர்டராய் . 

” எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்க முடியும் ” என மகியும் பதிலுக்கு சற்று திமிராக கூறி வெளியே செல்ல போக , அவள் கையை இருக பிடித்தவன்

” நா சொல்லுறத நீ கேட்டு தான் ஆகனும் ” என்றான் மகியின் கை மனிக்கட்டை இறுக்கியவாறே , அதில் மகிக்கு கண்ணே கலங்கி விட்டது . paris brown நிற விழிகளால் சித்தை துளைத்து எடுக்க , மகியின் கண்களில் என்ன கண்டாணோ தெரியவில்லை அப்படியே கையை விட்டு விட்டான். தன் கைகளை தேய்த்து கொண்டாள் . சித்தின் இரும்பு பிடியில் கை சற்று சிவந்தே விட்டது . அவனை திட்டவும் முடியவில்லை அவன்  தன்னை அடக்க நினைப்பதையும் ஏற்ற முடியவில்லை . பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்  அப்படியே கீழே இறங்கினாள் . அதில் சித்திற்கு மேலும் கோபம் அதிகரிக்க அவள் பின்னே இவனும் சென்றான் . அவள் படி இறங்கி செல்லும் முன்னே தடுக்க நினைத்தவன் , முன்னால் தாய் வரவும் எதுவும் கூறாமல் நடந்து வந்து டைனிங் டேபிளில் அவள் எதிரில்  அமர்ந்தான் 

” என்ன மகி  டிரஸ் மாத்திட்டு சாப்பிட தானே வர சொன்னே ” என்று கடிந்து கொண்டே அவளுக்கு தோசையை பரிமாறினார் ராதா.

” இல்ல அத்தை ஒரே தலைவலி அதான் ” என்றாள்  . 

” அமிழ் என்ன‌ ஏமாத்துனதுக்கும்  …உன்ன என் தலைல கட்டி வச்சதுக்கும் எனக்கு தான் தலைவலி வரனும் ” என்றான் பழத்தில் ஏத்தும் ஊசியாய் , பசியில் கொஞ்சம் தோசையை பிய்த்து  வைக்க சென்றவள் சித்தின் பேச்சில் அப்படியே கை அந்தரத்தில் நின்றது . அதில் தன் மகனை கோபத்துடன் ராதை பார்க்க அதை பொருட்படுத்தாது அவன்   சாப்பிட்டு கொண்டு இருந்தான் . மகி தன்னை கட்டுப்படுத்தி உன்ன முயன்றவளாள் முடியத்தான் வில்லை .  கஷ்டப்பட்டு இரண்டு வாயை வைத்தவள் அதற்கு மேல் முடியாமல் போக 

” அத்தை எனக்கு இப்போ பசிக்கல … அப்பறம் சாப்பிடுறேன் ” என்றவள் ராதா பேச்சுக்களையும்  தடுப்பதையும் காதில் வாங்காமல் எழுந்து தங்களின் அறையில் புகுந்து கொண்டாள் . 

” ஏன்டா இப்படிலாம் பேசுற …இப்படி அடுத்தவங்களை கஷ்டப்படுத்த எங்க கத்திட்டு வந்த ” என ராதை திட்ட , அதற்கு மசியாதவனோ 

” உங்க கிட்ட இருந்து தான் மா … என் இஷ்டம் இல்லாமல் இந்த கல்யாணத்தை உங்க உயிரை வச்சு மிரட்டுனிங்க . அதையும் செஞ்சேன் தானே ” என்றவன் சாப்பிடுவதை தொடர்ந்தான் . அதில் ராதாவிற்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது… மேலும் பேச விரும்பாமல் அவனுக்கு சாப்பாட்டை பரிமாறினார் .

அறைக்கு சென்றவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது , இருந்தாலும் அழ பிடிக்காமல் அழுகையை அடக்கிக் கொண்டாள் , அந்த நேரம் அவள் செல்பேசி ஒலி எழுப்ப சந்தியா தான்  போன் செய்து இருந்தாள்  

” மகி என்ன எல்லாம் ஓகே வா ” 

” ம்ம்ம் ” என்றதுமே புரிந்தது , ஏதோ நடந்திருக்கிறது என   மகியை வற்புறத்தி எந்த வேலையும் செய்ய வைக்க முடியாதே என நன்கு அறிவாள் . சந்தியாவிற்கு மகி சித்தின் திருமணம் அவ்வளவு மகிழ்ச்சி , இதில் மகி ஏதாவது செய்து பிரிந்து விடுவாளோ என பயம் தான் அதனாலே இப்பொழுது போன் செய்து இருந்தாள் 

” ஹாலோ மகி ” 

” இருக்கேன் சொல்லு  ” என்றவள் அமைதியாக இருக்க , சந்தியாவும் அமைதியாக இருந்தாள் . அதற்கு மேல் மகியால் தாக்கு பிடிக்க முடியாமல் நடந்தது அனைத்தையும் அமிழ் செய்தியிலிருந்து இப்போ சித் கூறியவறை கூறினாள் . எவ்வளவு கட்டுப் படுத்தியும் லேசாக கண்ணீர் கன்னத்தை தட்டிச் சென்றது . 

” மகி அதான் அமிழ் தெளிவா சொல்லிட்டாளே !! அவ ஆனந்த் லவ் பன்றானு , அப்பறம் என்ன “

” இல்ல சந்தியா சித்தார்த் ஏற்கனவே அமிழ் லவ் பண்ணிருக்கான் இதுல  அவ கல்யாணம் வர வந்துட்டு சித்த  விட்டுட்டு போனதுல இன்னும் உடைஞ்சு போய்டான் . இதுல நா என்னத்த சொல்ல சொல்லுற  வேணாம் விடு . அன்னைக்கு காலேஜ்ல  என் கண்ணா வேற பொண்ணு லவ்  பண்ணது தெரிஞ்சதோ !! அதோட என் காதலும் செத்துருச்சு. இப்போ அதை சித் கிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்லை ” என்றாள் வதங்கி உடைந்த குரலில் 

” இல்ல நீ சித்தார்த புரிஞ்சிட்டு  வாழ பாரு , இனி‌ அவன் தான்  உன்னோட வாழ்க்கை.   இனி அவன காதலிக்க டிரை பன்னு …அவன்‌ தான் எல்லாம் ” 

இதை கேட்டவளுக்கும் மனது வலிக்க தான் செய்தது . தன் கண்ணாவின் சிரித்த முகமும், அவள் காதலித்தும் கண்முன் வந்து போனது . 

” மகி சித் பேசுறத நினைச்சு கவலைபடத …அது உன்னோட கேரக்டர் இல்ல.  நீ எப்பவும் போல துரு துருனு வம்பு இழுத்திட்டு இருப்பல்ல அதான் அழகு. அவன் திட்டுனா நீயும் பதிலுக்கு திட்டு … அவன் அடிச்சா நீயும் யோசிக்காம இரண்டு அடி அடிச்சுட்டு மண்டைலே ஒன்னு போடு ” என்று கூற மகிக்கு சிரிப்பு வந்து விட்டது , பக்கென சிரித்தும் விட்டாள் . மகியின் சிரிப்பில் சந்தியாவிற்கு தான் மனது  பரவாயில்லை இன்னும் கொஞ்ச நாள்களில் தன் தோழியின் வாழ்வு மாறி மகிழ்ச்சியாக மாறும் என்றிருந்தது . அதே போல சில நிமிடம் பேசியவள் சிலபல அட்வைஸ்களை கூறிவிட்டு போனை வைத்தாள் . 

மகிக்கு இப்போது சிறிது நன்றாக இருந்தது . இனி தன்னை மாற்ற முயற்சிப்போம் என நினைத்து கொண்டாள் . தன்னுடைய பையிலிருந்து டைரியை எடுத்தவள் 

கிடைக்கப்போவது இல்லை என தெரிந்தும் 

உன்னை மனது நினைப்பதை என்னவென்று சொல்லுவேன் …

நீ தந்த காயங்கள் இதயத்தில் வடுக்களாக இருக்க ,

நின்னை நினைத்து உருகுகிறேன்  !! .

                     என் உயிர் கண்ணாவிற்கு 😍💋….

என்று எழுதி டைரியை மூடும் போது , வயிறு முட்ட திண்டு சித் உள்ளே நுழைந்தான் . அவன் வருவதை பார்த்தும் வேக வேகமாக டைரியை தலையனை கீழ் பதுக்கினாள் . அவள் அருகில் வந்தவன்

” நீ எதுக்கு என் பெட்ல இருக்க …எழுந்து சோஃபால தூங்கு ” 

அவன் கேள்விக்கு சட்டை செய்யாமல் இருந்தாள் . அவனுக்கு தான் மூக்கு மேல் கோபம் வருமே 

” ஏய் உன்ன தான் கேட்குறேன் ” என்று கத்த , அவள் காதை குடைந்தவாறே 

” எனக்கு மகிழ்தினி னு பேரு வச்சுட்டாங்க… சோ  கொஞ்சம் மரியாதையோட என் பேர சொல்லி கேளு பதில் சொல்லுறேன் ” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு ,மாறிவிடலாம் என முடிவு எடுத்து விட்டாள் போல !?.

அதில் கடுப்பை கட்டுபடுத்தி கொண்டவன்

” மகி எழுந்து சோஃபால தூங்கு ” என்று கடுப்புடன் அவள் கூறியதற்காக அவள் பேரோடு சொல்ல … அவளுக்கு இதுவே வெற்றியாய் இருந்தது , இனி கொஞ்சம் கொஞ்சமா என் பேச்ச கேட்க வச்சு என்னை காதலிக்க வைக்குறேன் சித் என மனதினுள் நினைத்துக் கொண்டாள் . ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது புரியவில்லை மகிக்கு . இன்னும் அவள்‌ பதிலுக்காக  காத்திருந்தவனை பார்த்தவள்

” அது… உங்களுக்கு தேவைனா நீ அங்க போய் படுத்துக்க. நா இங்க தான் தூங்குவேன் … நா உன்னோட மனைவின்றத நியாபகம் வச்சுக்கோ ” 

மகியின் இந்த பேச்சு மேலும் அவளை கடுப்பேற்றியது . 

” மகி என் கோபத்தை கிளராம மரியாதையா அங்க போய் படு ” என்று கூற , எங்கு அவள்‌ கேட்டாள் தானே !!.  மெத்தையின் ஒரு ஓரத்தில் நன்றாகா கால்களை நீட்டி படுத்து  போர்வையை சுற்றிக் கொண்டவள் ,  மறு ஓரத்தை  சித்திடம் கண்ணை காட்டினாள் . அவனுக்கு மகியின் செயல் ஆத்திரம் மூட்ட வேறு வழியின்றி பல்லை கடித்தவாறே மறு ஓரத்தில் சென்று அமரந்து போனை சந்துருவிற்கு போட்டான் , அவன்‌ எடுத்ததும் 

” நம்ம செய்ய போற புராஜெக்ட்க்கு விதைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிட்டியா ” என்றான் கோபமாக

” மச்சான் போன போட்டா மொத ஹலோ சொல்லனும் டா   … உனக்கு இதெல்லாம் தெரியாதா ” என்று சந்துரு நேரம் காலம் தெரியாமல் விளையாட 

” அங்க வந்தேனு வை  வாய உடச்சுருவேன் டா … கேட்ட கேள்விக்கு மட்டும் பதில சொல்லு ” என்று எரிந்து விழுந்தான். சித்தார்த் எப்போதும் இப்படி எல்லாம் பேச மாட்டான் , கோபம் வந்தாலும் காட்டாமல் நகர்ந்து விடுவான் . இன்று ஒரு காதல் என்ன பாடாய் படுத்துகின்றது அவனை . அவனிடம் விளையாட என்னி 

” அதெல்லாம் சொல்ல மாட்டேன் மச்சான் …நீ ஹலோ சொல்லு அப்போ தான் நா சொல்லுவேன் ” என சிரித்து கூற 

” இப்போ சொல்ல போறியா இல்லையா டா ” 

” நா போன வைக்குறேன் டா … நீ திருப்பி அடி , ஹலோ சொல்லி பேசு …நா பதில் சொல்லுறேன் ” என்று போனையே சந்துரு வைத்தே விட்டான் . அதை கவனித்த மகிக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது , இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள் .  ஏற்கனவே கோபத்தில் இருக்கிறான் இதில் அவளும் கோபம் ஏற்றாமல் இருக்க தான் . பல்லை கடித்து கொண்டு மீண்டும் சந்துருவிற்கு அடிக்க 

” ஹலோ ” என்று சந்துருவே ஆரம்பித்தான் 

” நாளைக்கு வீட்டுக்கு வா ” என்ற சித்  வேறு எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டான் . மறுநாள் சந்துருவிற்கு என்ன நடக்குமோ !!! 🤣

பிரியாமல் தொடரும்..😍💋

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
25
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  17 Comments

  1. Archana

   🤣🤣🤣🤣நாளைக்கு சித் கிட்ட சிக்கி சந்துரு ஒரு வழியா ஆக போறான் பாவம் பையன் ஓடிடு சந்துரு🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

  2. Janu Croos

   இந்தாப்பா ஏய்🤨🤨🤨…என்ன நினைச்சிட்டு இருக்க நீ😤😤😤….அந்தப்புள்ள ஏதோ கட்டினா சித்தார்த்த தான் கட்டுவேன்னு அடம்புடிச்சமாதிரியும்🤨🤨🤨….அவங்க அக்காவும் நீயும் ஜோடியா மணமேடையில உக்காந்துட்டு இருக்க அவங்க அக்காவ எழுப்பி விட்டுட்டு அவள் உக்காந்துட்டு….மரியாதையா தாலிய கட்டு இல்லனா உன்ன கொண்ணுடுவேன்னு உன்ன மிரட்டி கல்யாணம் பண்ண மாதிரியும்ல நீ நடந்துக்குற🧐🧐🧐…..
   அடேய் உனக்காவது விடிஞ்சா கல்யாணம்னு தெரியும்டா….அவளுக்கு அதுவே காலையில தான் தெரியும்🤷‍♂️🤷‍♂️🤷‍♂️….உன்ன விட அவள் தான் பாவம்🥺🥺🥺….
   உன் கோவத்தை உன்ன ஏமாத்திட்டு போனாளே அவள் மேல காட்டு😠😠😠….அவள தேடிப்புடிச்சு ஏன் கல்யாணத்தன்னைக்கு போனனு கேளு😤😤😤….அதவிட்டுட்டு இந்த தெய்வக்குழந்தைய ஏன்டா திட்டுற?😒😒😒
   பாவம் புள்ள🥺🥺🥺…நேத்து ராத்திரி சரியான தூக்கம் இல்லாம அழுதுட்டே இருந்தாள்😭😭😭…அப்படி பட்டவள் சாப்பிட்டு இருக்காவா போறாள்?🤷‍♂️🤷‍♂️🤷‍♂️காலையில நடந்த கலவரத்துலயும் புள்ளை சாப்பிட்டு இருக்க மாட்டாள்😟😟😟….அவள ஒரு வாய் ஒழுங்கா சாப்பிட விட்டியாடா?😤😤😤கல்நெஞ்சக்காரா😠😠😠😠…..
   சந்ரு….ராசா…அவசரப்பட்டுட்டியே குமாரு!!!🤭🤭🤭 ஃபோன் பண்ணா ஹலோ சொல்றது முக்கியம் தான்😁😁😁 …அத விட முக்கியம் பேசுறவங்களோட மூடு😅😅😅….அவன் இருந்த கோபத்துக்கு😡😡😡 எரியுற தீயுல🔥🔥🔥எண்ணெய்ய ஊத்திட்ட🛢️🛢️🛢️….அது எப்படி ஜகஜோதியா காலையில உன்கிட்ட எரிய போதுனு பாரு😂😂😂…..

  3. ஹலோ சொல்லலைனா பேச மாட்டயா நாளைக்கு வீட்டுக்கு எப்படி ஹலோ சொல்றான்னு மட்டும் பாரு

  4. Paavam nalaku chandruku enna nadakumo 🤣🤣🤣🤣🤣
   எல்லாம் சித்தின் கையில்🤣🤣🤣

  5. சந்தியா சந்தோஷப்படறதை பார்த்தா மகியோட கண்ணா சித்து வா இருக்குமோ..பிரௌன் நிறக் கண்ணைப் பார்த்தா மட்டும் ஹீரோ தடுமாறுறான்🤔🤔🤔🤔🤔..அவன் உருகி உருகி லவ் பண்ணது மகியைதானோ..சந்துரு உனக்கு இருக்குடா🤣🤣🤣🤣🤣..சந்துரு வந்தால்தான் கலகலப்பே

  6. Sangusakkara vedi

   Haiyoooo….. Evlo hint kuduthurukinga…. Onnu onna slren correct ah nu check pannikonga… Maybe amiyum mahi yum ore face cut la irukalammmm …. Yen twins ah kuda irukalam …. Apdi mattum solli en pinchu heart ah damage pannirathinga…. Yenna my story line ahum athu thn…. Awwww ulariten…. Sari vanga adutha hint pappommmm….. Mahi love failure ila yenna mahi love pannunathu Sidharth khanna va thn… Clg time la love panniruka… Aven ami ya love panran nu vilagita…. Adhuthu innoru periya twist Namma sidh love pannunathu ami ya ila Namma mahi ya thn …. Reason avaloda Kannu athu avana innum disturb pannuthu…. Innonu antha Kavitha …. Athu mahi eluthiruppa aven thappa ami eluthunathunu ninachurukalam….. Ami wrong hope kudutha nu lost epi la feel pannunen… But ipo ila intha sidh misunderstanding nu purunjuruchu…. Evlo hint ah ore epi la kudutha writer ku nandri…. Athu epdi reveal aghuthunu pakkalam…. Waiting sahi…. All the best….

  7. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  8. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.