அத்தியாயம் இரண்டு
கல்யாண மண்டபம் :
கதறி அழுபவனை யாரும் தேற்றவில்லை , காதல் தோல்வி பெற்றால் பெண்கள் மட்டும் தான் உடைந்து போவார்கள் என பலர் நினைப்பர் . ஏதோ ஆண்களுக்கு மட்டும் இதயமும் மனமும் கல்லால் உருவாக்கப்பட்டது போல , அவர்கள் தன் உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தி உள்ளுக்குள்ளே மருகுவதை பலர் உணர்வதில்லை . இன்றும் சித்தும் காதல் இழந்த வலியில் துடிக்கிறான் . ஆனால் , உண்மை தெரிந்த பின்பு இந்த நாளை நினைத்து அவன் மனம் எப்படி நினைக்குமோ ?. அவனுக்கு இது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்ற பேராசையும் எழுந்தது . சுத்தமாக புரியவில்லை அமிழ் தனக்காக கூறிய வார்த்தைகள் எல்லாம் கண் முன் ஓடியது . எதற்காக விட்டுச் சென்றாள் என்பதை யோசிக்க யோசிக்க இதயம் ரணமாய் வலிக்க , சில நிமிடத்தில் தன்னை சமன் படுத்திக் கொண்டவன் எழுந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் . இவ்வளவு நாட்கள் இருந்த மகிழ்ச்சி பூரிப்பு என எல்லாம் மாயமாய் மறைந்து இருக்க , சோகமே உருவாக சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான் .
சித்தார்த் ஐ சிறிது நேரம் தனித்து விட்ட சந்துரு இப்போது கதவை திறந்து உள்ளே வந்தான் . தன் நண்பனின் நிலையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது . அவன் அருகில் சென்று தோளில் கை வைக்கவும் தான் சித் உணர்வே பெற்றான் .
” மச்சான் ..வெளிய கூப்பிடுறாங்க டா ”
அதற்கு விரக்தியாக சந்துருவை பார்த்தவன் எழுந்து வெளியே செல்ல பார்க்க , அவனை தடுத்தான் சந்துரு .
” முகத்தை கழுவிட்டு போவோம் டா ” என்று அவனை இழுத்து குளியலறை உள்ளை தள்ள , பொம்மை போல அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்தவன் முகத்தை கழுவி தன் தோளில் இருந்த பட்டு துண்டாலே துடைத்துக் கொண்டான் . பின்பு சந்துருவே அவனை அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்தான் . எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாதவன் ஐயர் செய்ய சொல்லியவற்றை கடனுக்கென்று சொன்னான் .
சில பெண்கள் தன்னை அலங்கரிக்க , அதை ரசிக்க தோன்ற முடியவில்லை மகிக்கு . மனது முழுவதும் ஏற்கனவே ஒருவனால் அடிமேல் அடி வாங்கி சில்லு சில்லாய் உடைந்து இருந்து . இன்று தன் பெற்றோரும் தன்னை புரிந்துகொள்ளாமல் இப்படி நடப்பது மேலும் அவளை நொறுக்கியது . அவர்களை கூறி எந்த தப்பும் இல்லை என்று நினைத்தாலும் இந்த கல்யாணத்தை செய்ய மனம் தன் கண்ணாவை நினைத்து வலித்தது . எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் கண்ணாடியை வெறித்து பார்த்திருந்தாள் .
” மகி வெளிய அழைக்குறாங்க வா மா ” என்று தன் தாய் செல்வியின் குரல் கேட்க , சந்தியா அவளை அழைத்து சென்றாள் . மணமேடையை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தது .
இள நீள பட்டுப் புடவை தங்க ஜரிகையை ஓரத்தில் தாங்கி இருக்க , நீண்டு இருக்கும் கண்கள் இரண்டும் மைகளை தீட்டு அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது . உருத்தாமல் இருந்த அலங்காரம் தேவலோகத்து பெண்ணாகவே அனைவருக்கும் காட்சி அளித்தாள் . என்ன ஒரு குறை சிரிப்பு என்றால் என்ன என்று தெரியாத முகம் போல இருந்தது . பெண்கள் பிறந்த வீட்டை விட்டு செல்வதால் கல்யாணம் அன்று சந்தோஷம் இருந்தாலும் முகத்தில் கவலை இருக்கும் , எனவே இதுவாக தான் இருக்கும் என்று வந்திருந்தவர்கள் எதுவும் பெற்றவர்களை கேட்டே தொந்தரவு செய்யவில்லை . மகியின் நெருங்கிய தோழியான சந்தியாவிற்கு உலகை வென்று விட்ட மகிழ்ச்சி தான் . தன் தோழிக்கு திருமணம் என்று முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அவளை அழைத்து சித்தார்த் அருகில் அமர வைத்தாள் .
அருகில் அமிழ் இல்லாமல் வேரு ஒருவள் அமருவதை உணர்ந்தவனால் , கை விரல்களை இறுக மூடி கோபத்தை கட்டுப் படுத்த முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அமிழுக்காக பார்த்து பார்த்து எடுத்த சேலையை இன்று வேறு ஒருவள் அனிந்தது மட்டும் அல்லாமல் தன் அருகிலே வந்து அமர்ந்திருப்பது ஏதோ அவனுக்கு நெருப்பில் அமர்ந்து இருப்பது போல இருந்தது . இங்கு மகியோ மறந்தும் கூட தலையை நிமிர்த்த வில்லை . சித்தார்த்தின் முகத்தை பார்க்க துளியும் அவளுக்கு விருப்பம் இல்லை என்பதை விட தைரியமும் இல்லை . ஐயர் மங்கலநானை கொடுக்க , அதை வாங்கியவன் மகியின் கழுத்தருகே கொண்டு சென்று மீண்டும் கையை இறக்கினான் . அதில் மற்றவர்கள் சற்று அதிர்ச்சியாக பார்க்க , மீண்டும் தன்னை கட்டுப்படுத்தியவன் மகியை சரிபாதியாக அவள் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு மாற்றினான் . பின்பு ஒவ்வொரு சடங்குகளையும் செய்து முடித்தான் . இன்னும் மகி தான் சித்தார்த் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை . வந்திருந்தவர்கள் அனைவரும் பரிசுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கட்டி அனைத்துச் சென்றனர் . ஒருவாறாக திருமணம் முடிந்து விட , மகியை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க பெற்றவர்கள் தயாராணார்கள் .
ஏற்கனவே ஒரு பெண் தங்களை தவிக்க விட்டும் அவமானத்தை வாறி வழங்கியும் சென்று விட , இன்று வீட்டில் எந்த நேரமும் ஓட்டமும் பாட்டமுமாக இருப்பவளும் செல்ல இறுக்கிறாளே !! என இருவரும் துடித்தனர் . அதை செல்வி வெளிப்படையாக கண்ணீரால் கரைய , கதிரவன் தன் மனைவி தேற்றினார் . அவருக்கு குற்ற உணர்வாக இருந்தது தன் மகளை இப்படி சூழ்நிலை கைதியாக மாற்றியது அவரை கொன்றது , அவருக்கும் வேரு வழி இல்லையே!!. செல்வி மகியை விடமால் கட்டிக்கொண்டு அழ அவளோ தன் தாயை கட்டிக்கொண்டாளே தவிர கண்ணீர் வரவில்லை கண்களில் . ராதாவும் வாசுதேவனும் அவர்களை சற்று சகஜமாக்க நினைத்தனர் . அவளை மணந்துக் கொண்டவனோ , ஒரு ஓரமாக கை கட்டி நின்று கொண்டு இருந்தான் . சந்தியா மகியை பிறகு செல்பேசியில் அழைப்பதாக கூறி கட்டிக்கொண்டாள் . மகியின் மற்றொரு தோழியான சௌமியாவும் கட்டி அனைத்து வழி அனுப்பினாள் .
பொறுமை இழந்த சித் அனைவரும் இருப்பது பொருட்படுத்தாது விரு விருவென காரில் சென்று அமர்ந்தான் . சந்துரு அதை பார்த்தே தலையில் அடித்துக் கொள்ள , வாசுதேவனோ தன் மகனை முறைத்தார் . மகியும் தன் பெற்றோர்களிடம் விடை பெற்று சித்தார்த் அருகில் சென்று அமர்ந்தாள் . முன் டிரைவர் இருக்கையில் சந்துரு ஏறி காரை உயிர்ப்பிக்க , சித்தின் பெற்றோர்கள் செல்வியிடமும் கதிரவனிடமும் விடைபெற்று மற்றொரு காரில் ஏறி அவர்களின் வீட்டை நோக்கி சென்றனர் .
கலைகட்டி இருந்த மண்டபம் வெருச்சோடி இருக்க , அவர்களுக்கு பரிசாக கொடுக்க ஆசையாக வாங்கி வைத்த மரக் கன்றுகள் எல்லாம் சந்துருவே அனைவருக்கும் கொடுத்து அனுப்பி விட்டான் .
கார் மயான அமைதியாய் இருக்க , அந்த சூழ்நிலையை மாற்ற சந்துருவே பேச ஆரம்பித்தான்
” ஏன் மா லைப்ரரி மாறி இவ்வளவு அமைதியா வர ” என்றவன் கூற்றுக்கு தான் மகி தலையை நிமிர்ந்து பார்த்தாள் . அவள் வாயை திறக்கும் முன்
” இப்போ நீ அமைதியா வரல வாயை ஒடச்சுருவேன் டா ” என்றான் பற்களை கடித்தவறே , அவன் பேச்சுக்களை அவன் இருக்கும் கோபத்தை எடுத்துக் காட்டியது . மகி அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான் , அவளுடைய பிரவுன் நிற விழிகளை பார்த்தவாறே
” எதுக்கு என்ன பாக்குற உனக்குலாம் அசிங்கமா இல்ல …இப்படி அக்காவுக்கு பார்த்த பையன நீ கட்டிட்டு இருக்க ” என்றவன் கூற்றை கேட்டு பிரேக் அடித்து காரை நிறுத்தினான் சந்துரு . வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்ட மகி
” இவ்வளவு கேட்குற நீ எதுக்கு என்ன கல்யாணம் பண்ண ” என்றாள் மகி , அதில் சந்திருவிருற்கு தான் ‘ சாபாஷ் சரியான போட்டி ‘ என்றிருந்தது , மகி கேட்டதிற்கு வாயை திறக்காதவன் சிரிக்கும் நண்பனின் தலையிலே ஒரு அடியை வைத்தான் . அது மகிக்கும் சேர்த்து என அவளுக்கு புரிந்தது . பின்பு மறுபடியும் அமைதியே குடிக்கொள்ள … அந்த கார் மாளிகை போன்று இருந்த சித்தார்த்தின் வீட்டு வாயிலில் நின்றது .
சித்தார்த்தின் வீடு
அனைவரும் காரிலிருந்து இறங்க சிரித்த முகத்துடன் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் ராதா . உள்ளே நுழைந்தவன் மற்றவர்கள் அழைப்பையும் கண்டுக்காமல் நேராக மாடி ஏறி தன் அறைக்குச் சென்றான்.
” சந்துரு அவன கீழ கூப்பிட்டு வா …மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான் ” என்று வாசுதேவன் கூற , மகிக்கு தான் இதெல்லாம் கஷ்டமாக இருந்தது .
” விடுங்க மாமா ” என்ற மகியின் பதிலை கேட்டு படி ஏறிய சந்துரு அப்படியே இறங்கி ஹாலிற்கு வந்தான் . பிறகு யார் சித்தார்திடம் அடி வாங்குவது .
” மகி நாங்க பண்ணது தப்பு தான் டா … ஆனா வேற வழி தெரியல டா ” என்று ராதா அவள் அருகில் அமர்ந்தவாறே அவள் கையை தன் கைக்குள் வைத்து பேச , அவருக்கு ஒரு பொய்யான இதழ் விரிப்பை கொடுத்தவள்
” உங்க மேல எந்த தப்பும் இல்ல அத்தை … எல்லாம் எங்க மேல தான். சரி விடுங்க அத்தை அதை பத்தி பேசுறது நாள எதுவும் ஆக போறது இல்லை ” என கூறுபவளை விழி அகலாமல் தான் அனைவரும் பார்த்தனர் .
” சித் நிலைமையை கொஞ்சம் புரிஞ் ” என்று பேசவரும் முன்னே தடுத்தவள்
” இனி அவரை நான் பாத்துக்கிறேன் அத்தை ” என்றாள் அவர் கையில் அழுத்தம் கொடுத்து . மகியின் மாற்றம் சற்று ஆச்சிரியமாக தான் இருந்தது . மகியின் மாற்றமெல்லாம் தோழி சந்தியா செய்த மாயமே !! .
மேலே சென்றவன் தன் உடைகளை கிழிக்காத குறையாக கழட்டி வீசினான் . பின் ஒரு சர்ட் பேண்ட் எடுத்து போட்டுக் கொண்டவன் போன வேகத்தில் கீழே இறங்கி காரை எடுத்துக் கொண்டு சென்றான் . அதில் வாசுதேவன் தான் காதில் புகை வராத குறையாய் இருந்தார் . பார்வையை சந்துரு புறம் திருப்ப
” நா போய் கூட்டிட்டு வரேன் பா ” என்று விட்டால் போதும் என்று ஓடி விட்டான் . வெளியே சென்று தன் காரை எடுத்தவன் தன் நண்பன் எங்கு சென்றிருப்பான் என நன்கு அறிந்தவனாய் காரை அவ்விடத்தை நோக்கி செலுத்தினான் .
மகி வந்ததிலிருந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து
” என்ன மா டிரஸ் எதுவும் சேஞ் பண்ணிக்கலையா ” என்று வாஞ்சையுடன் ராதா கேட்ட ,
” டிரஸ் எங்க வச்சுருக்காங்கனு தெரியல அத்தை அதான் ”
” எங்ககிட்ட கேட்கலாம்ல டா ” என்றவர் சித்தின் அறையிலே வைத்திருப்பதாக கூறினார் . பிறகு மாடியை நோக்கி சென்றவள் சித் அறையின் வாசலிலே தயங்கி நின்றாள் , அவள் கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் தரையை நனைத்தது . திடிரென தன் தோளில் கை இருப்பதை பார்த்து பதறி திரும்ப அங்கு ராதா தான் மகிக்கு என்ன சொல்லி தேற்றுவது தெரியாமல் நின்றிருந்தார் . சூழ்நிலையை கருதி இப்படி ஒரு திருமணத்தை செய்தே வைக்க வேண்டியதாய் ஆயிற்று , மகியின் நிலைமையை யாரும் யோசிக்கவில்லையே என வருந்தினார் .
அவரின் வருத்தம் முகத்தை காண விரும்பாதவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு சித் அறையினுள் நுழைந்தாள்.
” டிரஸ் மாத்திட்டு வா மா…சாப்பிடலாம் ” என்று அழைத்து விட்டு கீழே சென்றார் . மகியும் தன் சூட்கேஸ்லிருந்து ஒரு துணியை எடுத்து மாட்டியவள் மெத்தையில் வந்து அமர்ந்தாள் . அவள் செல்பேசி சத்தம் இட , அதை பார்த்தவள் அதிர்ச்சியானாள் .
பிரியாமல் தொடரும் 😍💋…..
உங்களின் புல்லட் வெடி 🎉
Sidharth enga poirupan,Mahi ku phone la enna vaa irukum 🤔🤔🤔……….. waiting for ur next epi …..💯all the best …👍✨
Thankyou ❤️🥰🥰🥰❤️
👌🏻👌🏻🥺🥺
Thankyou 😁😁❤️🥰
Ladduuu ipa tha knjm comedy la varuthu 🤭 varatuu varatuu 💙💙semmaaaaayaaa irukuuu nalla pannu
நன்றி சகா 🥰🥰😁❤️
ஏன்டா டேய் அக்காவுக்கு நிச்சயம் பண்ணவன கல்யாணம் பண்ணிக்கிட்டியே உனக்கு வெக்கமா இல்லனு கேக்குறியே….அக்காவ நிச்சயம் பண்ணிட்டு தங்கச்சகய கல்யாணம் பண்ணி இருக்கியே உனக்கு வெக்கமா இல்லை….அவள் என்னடா பண்ணாள்….எல்லாரும் உங்க உங்க சுயநலத்துக்காக அவள கல்யாணப்பொணீணாக்கிட்டு இப்ழோ பேசுறான் பாரு பேச்சு….முதல் நாளே இந்த பேச்சு பேசுறானே….இனி மகிய என்ன பாடு படுத்த போறானோ….
மகியும் சலச்சவங்க இல்ல 😂…நன்றி சகி 🥰🥰🥰
அருமையான சுவாரஸ்யமான பதிவு சூப்பர்😊
சித்தார்த்தோட காதல் வலியை நினைச்சு கவலைபடலாமானு யோசிக்கிறதுக்குள்ள ஞானசூனியமா மகியை கஷ்டபடுத்துனதுல உனக்குலாம் இது தேவைதாண்டானு யோசிக்க வைச்சிட்டான் எனக்கு புரியல பெத்தவங்க பண்ண தப்புலயும் காதலி பண்ண தப்புலயும் பாதிக்கபட்ட மகி அவகிட்ட தான் இவனோட கோபத்தை காட்டுவானா இதான் மனிசங்களோட இயல்பு போல பாதிப்பை தந்தவனை விட்டுட்டு பாதிக்கபட்டவனை அடிக்கிறது இவனோட தலையில தட்டி புத்தி சொல்லு சந்துரு இல்லனா இன்னைக்கு பதிலடி வாங்குனவன் நாளைக்கு கல்லடி வாங்குறதை யாராலயும் தடுக்க முடியாது பார்த்துக்கோ மகி நீ இப்படியே இரு அவனால பிரச்சனை வந்தா நெருப்பா மாறிடு அதுப்போதும் இந்த காதல் தோல்வி பயலை சமாளிக்கிறதுக்கு புரிஞ்சதாா😒😒😉😉😉
நன்றி சகி 🥰🥰🥰😁❤️
செல்பேசியில் அழைத்தது அமிழா? சித் அவ்ளோ வேகமா எங்க போறான்?
காத்திருப்போம் ..நன்றி சகி 🥰🥰
மகி நல்லா பதிலடி கொடுத்திட்டா அவ்வளவு பீலிங்கஸ் ஆப் இந்தியாவா இருக்கிறவன் மானம் போனாலும் பரவலைன்னு அடிச்சு சொல்லிருக்கணும் இந்த கல்யாணம் வேணாம்ன்னு🧐🧐🧐 லூசு மாறி அவள திட்டுறான்😤.
காதல தோல்வியாம் 😂😂😁..நன்றி சகி 🥰🥰😁
என்ன சித் இப்படி அழாறான்..மகியை விட இவனை பார்க்க பாவமா இருக்கு…சித் மகிகிட்ட அப்படி கேட்ருக்கக்கூடாது..சந்துரு இன்னும் எத்தனை அடி வாங்கப்போறானோ🤣🤣🤣🤣🤣…மகிக்கு கால் பண்றது யாரா இருக்கும்🤔🤔🤔..
நன்றி சகி 🥰🥰
Sidh pavam….. Pidikalane pidikanu munnadiye sollirukanum…. Oru ponna kadhaluchu Vera ponna marriage pannikurathu kodumai…. Aana ivlo selfish ah iruka kudathu…. Thanaku vantha retham avalukuna thakkali chutney ya…. Magi kum thn sudden mrg ava accept pannika ready ya thn iruka…. Very bad sidh…. Yar athu phn la ami ya? Kanna va?
நன்றி சகி 🥰🥰
அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!
நன்றி சகி 🥰🥰
♥️♥️👌