Loading

அத்தியாயம் இருபத்து ஒன்பது

‘ கண்ணா ‘ என்ற அழைப்பு காதில் தேனாய் பாய்ந்தாலும் அதை கூறியவளையும் அவள் நிலைமையையும் பார்த்த மகியின் மன்னவன் அதிர்ச்சியாகி நிலையில்லாமல்  பாதங்கள் இரண்டும் தடுமாறி கீழே விழுந்து விட, இரத்தத்தில் கிடந்த மகியை பார்த்தவன் எழுந்து அவள் அருகில் ஓடி வந்து மண்டியிட்டு கதறி அழுதான்.

” மகிமா என்னை பாறு….ஐயோ ஏன்டி என்ன உயிரோட எரிக்குற. மகி என்ன பாறு… ஹெல்ப் … ஹெல்ப்  ” என அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவன் மார் நனைக்க, அவனையே பார்த்திருந்தவளுக்கு தன்னவன் தனக்காக துடிப்பது இதமாக இருந்தது. இப்போதாவது தனக்காக மட்டும் யோசித்து தன்னை நினைத்து தன்னவன் அழுக அதை துடைக்க நினைக்காமல் அவள் இதழ்கள் சிரித்தது. 

மகி சிரிப்பதை பார்க்க பார்க்க துடித்து போனான் ஆடவன். மகியின் கைகளோ வலியிலும் மெல்ல எழுந்து தன்னவனின் கண்ணம் பட ” உ..னக்..கு  எது…வும் இல்..லை..யே ” என திக்கி தினறி வர, அதை புரிந்து கொண்டவனின் இதயமோ நொறுங்கியது.

” மகிமா என்ன பாரேன் …எழுந்திரு டி…பிலீஸ் …ஐயோ நீதான் கண்ணா …ஐயோ  ” என அவன் கத்தி கொண்டு இருக்க, மகியோ தன்னவனை விழிகளுக்குள் நிரப்பி மெதுவாக அதனை மூடிக் கொண்டாள்.

சித்தோ தன் மகிமாவின் கண்ணங்களை மாறி மாறி அடித்தே எழுப்ப பார்க்க, மயங்கியே பேதைக்கு தன்னவனின் பேச்சுக்களும் கதறல்களும் கேட்க வில்லை. சித்தின் குரல் கேட்டு அலுவலகத்தில் உள்ளிருந்து அனைவரும்  ஓடி வர,  சந்துருவோ கண்ட காட்சியில் ஒரு நிமிடம் உறைந்து போனான். சில நிமிடங்களில் தன்னை சுதாரித்து சித்தை நோக்கி ஓடி வந்தவன் மகியை  கைகளில் தூக்கி கொண்டு ஓட, அதன் பிறகே புத்தி வந்த சித்தார்தோ சந்துரு பின்னால் ஓடினான்.

சந்துரு மகியை காரின் பின் இருக்கையில் கிடத்தி வண்டியை ஸ்டார்ட் செய்ய, கண்ணீர் வடிக்க வந்த சித்தோ தன்னவள் தலையை மடியில் கிடத்தி அவனும் பின்னே அமர்ந்து கொண்டான்.

” சந்துரு வேகமா போ…ஐயோ மகிமா என்ன பாரு …பிளீஸ் கண்ணை திற. கண்டிப்பா உன்னை இனி திட்ட மாட்டேன் , எதுவும் சொல்ல மாட்டேன்… என்ன விட்டு போக மாட்ட தானே . எல்லாம் என்ன விட்டு போய்டுச்சு நீயாச்சும் என் கூட இரு ஐயோ…. ” என கேட்காது என தெரிந்தும் அவன் கத்தி கதற, சந்துருவிற்கோ தன் நண்பனை போட்டு அடித்து கொள்ளும் வெறியில் இருந்தான்.

கார் பறக்க கொஞ்சம் நேரத்தில் மருத்துவமனை வந்ததும் தன்னவளை குழந்தையாய் கைகளில் தாங்கி கொண்டு உள்ளே ஓடினான் சித். 

” டாக்டர்… டாக்டர் ” என அவன் கத்தி கொண்டு ஓட , உள்ளிருந்த அனைவரும் அவனை தான் பார்த்திருந்தனர். ஐசீயு வில் கொண்டு படுக்க வைத்தவனை , மருத்துவர்கள் வரமாட்டேன் என்றவனை வழுக் கட்டாயமாக வெளியே  தள்ளினர். அந்த அறை வாசலில் வெளியே தரையில் அமர்ந்து  ‘ மகிமா  ‘ என அவன் உதடுகள் சவம் போல் உச்சரிக்க, சற்று முன் தன்னை தள்ளி விடும் போது அவள் கூறிய ‘ கண்ணா ‘ என்ற அழைப்பு அவனை முற்றிலும் குழப்பம் அடைந்து உடைய செய்தது.

காரை பார்க் செய்து வந்திருந்த சந்துருவோ தன் நண்பனின் பார்த்து இறக்கம் வந்தாலும் அவனை சமாதானம் செய்ய முற்பட வில்லை. சித் தன் நண்பனை பார்த்து ஓடி வந்து அனைத்துக் கொள்ள, தன்னிடம் இருந்து வம்படியாக தன் மச்சானை பிறித்தவன்  கைகளோ சித் கன்னத்தை பதம் பார்த்தது.

” மச்..சான் ” என வார்த்தைகள் மெல்லமாய் வெளியே வர, தன் கன்னத்தை பிடித்து  சந்துருவை பார்க்க, அவன் கண்களில் தெரிந்த கோபத்தை உணர்ந்தான் சித். தன் நண்பனின் சட்டையை பிடித்தவனோ

” என்ன டா நடிக்குறியா… அவ எத்தனை தடவ சொன்னாலும் நம்மல விட்டு போக மாட்ட அதான்   ஒரேயடியா போகட்டும்னு இப்படி பண்ணியா… இப்போ அவ செத்துட்டா சொன்னதும் இங்க இருந்து போவ அப்படி தானே ” என்று தன் நண்பன் இவ்வாறு செய்ய மாட்டான் என தெரிந்தாலும் அவன் வார்த்தைகளோ மன பாரத்தை கொட்டியது.அதை கேட்ட சித்திற்கோ மேலும் கண்ணீர் வடிந்தது.

” என்ன என்ன பாக்குற… எல்லாம் அவள சொல்லனும் இந்த உலகத்தில பல உண்மையான காதல புரிஞ்சுக்கிற மனிசங்க இருந்தும் ,  காதல புரிஞ்சுக்க தெரியாத உன்னை போய் இரண்டு வருசமா  ஒரு வார்த்தை கூட பேசாமா உன்னை மட்டும் ரசிச்சு ரசிச்சு லவ் பண்ணா பாரு அவள சொல்லனும். பைத்தியம் தானே அவ பல தடவ சொன்னே அவன விட்டு போய்ரு உனக்கு கஷ்டமா இருக்கும் சித் வேற ஒரு லவ் பண்ணிருக்கானு  கேட்டா தானே ? என் சித் குடும்பம் அவமான பட கூடாது என் கண்ணாவ நான் மாத்துவேனு சொல்லிட்டு திருஞ்சா இப்படி தான் நடக்கும் . உன்னை போய் லவ் பண்ணி கண்ணா கண்ணானு பித்து பிடிச்சு சுத்துறா பாரேன் ” என இத்தனை நாள் மகி படும் கஷ்டங்களை வார்த்தைகளால் கொட்டி தீர்க்க, அதை கேட்டவனோ அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். கண்களில் இருந்து நீர் துளிகள் தரையை நனைக்க, அவனை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் அனைத்தையும் கூறி விட வேண்டும் என்றே நினைத்தான் சந்துரு.

” மச்சான் … அவ கூடையே தானே இருக்க ஒரு முறை கூடையா  மகி கண்ல காதலை நீ பார்க்கல?  ” என சந்துரு கேட்க, அப்போது தான் மகி அவ்வபோது ஏக்கத்துடன் தன்னை பார்ப்பதும் பின்பு மறைத்து கொள்வதும் புரிந்தது. ஆனால் எப்படி அன்று மகி தன்னை பார்க்க வரும் போது அமிழ் இருந்தால் என்றும் தனக்கான அவள் வைக்கும் உடைமைகளும் அவளிடம் இருந்தது என்பது மட்டும் புரியவில்லை ஆணவனுக்கு. சந்துரு கத்தி கொண்டே இருக்க

” நா என்னோட மகிமாவ தான் லவ் பண்ணிருக்கேன் …அமிழ நான் காதலிக்கல ” என அந்த இடமே அதிரும் அளவு கத்த, இப்போது அதிர்ச்சியாவது சந்துரு முறையானது.

” என்ன …என்ன சொன்ன ” என்று தான் கேட்டது உண்மை தானா  என மீண்டும் கேட்க, இருக்கையை விட்டு எழுந்தவனோ தன் நண்பனை கட்டி கொண்டு

” நிஜமா தான் சொல்லுறேன் மச்சான் நா மகிமாவ தான் லவ் பண்ணேன் …எங்கையோ தப்பு நடந்திருச்சு , அவ எனக்கு வேனும் டா ” என தன் நண்பனை கட்டி கொண்டு அழுக, சந்துருவிற்கு மகிழ்ச்சி வார்த்தைகளால் உறைக்க முடிய வில்லை,

” பின்ன அமிழ லவ் பண்ணது …” என்று அவன் இழுக்க,

” இல்லை இல்லை …ரெண்டு வருசமா என் முன்னாடி கூட வரமா என்னோட பேசாம…என் உணர்வுகளை மட்டும் புரிஞ்சு லவ் பண்ண என் மகிமாவ மட்டும் தான் லவ் பண்ணேன் ” என சித் கத்த, தன் நண்பனை இருக அனைத்துக் கொண்டான் சந்துரு. எங்கோ தவறு நடந்திருக்கிறது என புரிந்து கொண்டான்.

” நீ கூட என்கிட்ட ஏன் டா சொல்ல…உனக்கு தான் என் மகிமா என்னை லவ் பண்றானு தெரிஞ்சிருக்கே ” என தன் நண்பனை கேள்வியாய் பார்க்க, அவன் உன் மகிய பற்றி உனக்கு தெரியாதா என்றவாறு பார்வையை செலுத்த அதை புரிந்து கொண்ட சித்தோ மீண்டும் மகி இருந்த அறை வாசலில் சாய்ந்து நின்றான். ‘ என்கிட்ட வந்துருவ மகிமா …நம்ம லவ் நம்மள சேர்க்கும் … சீக்கிரம் வா மகிமா ‘ என அவன் மனது உரைக்க , அவன் விழிகளோ ஊமையாய் கண்ணீர் வடிந்தது.

_____

மகி கூறுவதை கேட்டதும் யாரோ தான் தன் நண்பனின் விதை நெல்லின் பேப்பர்களை வெளி எடுத்து பலி வாங்க வேண்டும் என செய்திருக்கிறார்கள் என புரிந்து கொண்டான் . அதனாலே விதை நெல் சரியாகி விட்டதாக கூறி அனைவரும் முன்பும் சித்தை அலுவலக வருமாறு பணித்தான், அப்போது யார் வியப்படைகிறார்களோ அவர்களே கயவர்களுக்கு உதவி செய்தார்கள் என தெரிந்து கொள்ளலாம். அவன் நினைத்து போலவே அனைவர் முன்பும் கூறியதும் அவனின் பிஏ அதிர்ச்சியாகி ஓரம் போவதை பார்த்து புரிந்து கொண்டான் அனைத்து இவன் வேலை என்று, ஆனால் அவனுக்கு தெரியாதே அனைத்தும் கதிரவன் செய்தது என்று.

ராம் அதிர்ச்சியானது என்னவோ உண்மை தான் அவனிடம் தான் பணத்தாசை காட்டி ஆனந்த் முதலில் உதவி கேட்டிருந்தான் , அவனால் துளியும் செய்ய முடியாது போக அவனை விட்டு கதிரவனை மிரட்ட சென்றான். வாய்க்கு எட்டியது கைக்கு எட்டாது போக , சரி விதை நெல் சரி செய்து விட்டார்கள் என கூறினால் ஏதாவது தேறும் என நினைத்து அவன் ஒதுங்க சந்துரு ராம் தான் காரணம் என நினைத்து விட்டான்.

சரி தன் நண்பன் வந்த பிறகு அவனை பார்த்து கொள்வோம் என நினைத்து அமைதி காத்தான்.

___

தான் பட்ட அனைத்து கஷ்டங்களும் வீணானதை  ஆனந்தால் கொஞ்சம் கூட ஜிரனிக்க முடிய வில்லை. தன்னவளை உபயோக படுத்தி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் துடித்து கொண்டு இருந்தவன் , இந்த மாறுபட்ட பாக்டீரியாவை உருவாக்கி பல கோடி செலவழித்திருக்க இப்போது அனைத்தும் வீணாகி இருப்பதை பார்த்தவன் மண்டை சூடானது.

‘ ஐயோ …ஐயோ என் பாப்பாவ பயன் படுத்தி இதை செஞ்சேனே…எல்லாம் போச்சே . இல்லை இல்லை அவன் ஜெய்க்க கூடாது ….அவன சும்மா விட மாட்டேன் . அவனால தான் எல்லாம் போச்சு என் பாப்பாவ பணயம் வச்சேன் , பணம் போச்சு இப்படியே போனா எல்லாமே என்ன விட்டு போய்ரும் . அவன் உயிரோடு இருந்தா தானே அவன் இதை முழுசா செய்வான் ‘ என தனக்குள் கத்தியவன் மீண்டும் ராமிற்கு அழைத்து சித் அலுவலகம் வரும் போது தான் கூறும் எண்ணிற்கு சொல்லுமாறு கூறி போனை வைத்தான். அவனுக்கும் தெரியாது சித்தை ஆனந்த் கொள்ள நினைப்பான் என்று . 

சித் வருவது தெரிந்ததுமே சரி எல்லாம் சரியாகி விடும் இனி தன்னவனை விட்டு சென்று விடுவோம் என்று நினைத்து மகி வெளியே வர, அப்போது தான் ராம் ஆனந்த் கொடுத்த எண்ணிற்கு அழைத்து சித்தார்த் வந்துவிட்டான் என தெரிய படுத்த, அது நன்றாகவே அவள் காதில் விழுந்தது அவளும் வாயிலை நோக்கி பார்க்க, தூரத்தில் இருந்து லாரி வேகமாக வருவதை பார்த்தே உணர்ந்து கொண்டாள் . தன்னவனை தள்ளி விட்டு தானும் அவன் புறம் விழுந்து விடுவோம் என்று தான் வேகமாக ஓடி வந்தாள் , அவள் போதாத நேரம் தன் கண்ணா வை காப்பாற்றியவள் தானும் குதிக்க பார்க்க, வேகமாக வந்த லாரியோ அவள் இட பக்கத்தை இடித்து சென்றுதது. நடந்தது அனைத்தும் நிமிடங்கிளில் முடிந்து விட , எந்த உண்மையையும் அறியாத சித்தோ உடைந்து போனான்.

___

அறையிலிருந்து மருத்துவர் வெளியே வர , அறை வாசலில் நின்றவனோ கண்ணீரோடு 

” என்னோட மகிக்கு ஒன்னும் இல்ல தானே டாக்டர்…எப்போ கண் முழிப்பா, நான் போய் பார்க்கவா ” என சித் உள்ளே செல்ல பார்க்க, அவனை தடுத்து நிறுத்தியவர்

” இல்லை மிஸ்டர் நீங்க இப்போ பார்க்க முடியாது , அவங்களுக்கு டிரீட்மெண்ட் போய்ட்டு தான்  இருக்கு. அவங்க இடது கையும் காலும் ரொம்பவே அடி பட்டுருக்கு, எழுந்து நடக்கவே  பல மாதங்கள் ஆகும் . கை சரியாக  மாதங்கள் கூட ஆகலாம் , எழும்பு பிரேக் ஆகிருக்கு . சோ அவங்க கண் முழிச்சதும் நீங்க போய் பாருங்க ” என்று அவர் கூறி விட்டு செல்ல , தன்னவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றதுமே நிம்மதி ஆனான்.

‘ என் மகிமாவுக்கு ஒன்னும் இல்லை… என்கிட்ட வந்துருவா ‘ என தன்னை சமன் படுத்தி கொண்டே திரும்ப, குடும்பத்தார் வந்திருந்தனர். இடைப்பட்ட நேரத்தில் சந்துரு தான் இரு குடும்பத்திற்கும் தெரியப்படுத்திருந்தான். அனைவரும் அழுகையுடன் இருக்கும் சித்தை பார்த்து தான் ஆச்சிரியமாக பார்த்தனர். பின்னே அவ்வளவு மகியை திருமணம் செய்ய முரண்டு பிடித்தவன் இப்படி இருந்தால் யாருக்கு தான் வியப்பாக இருக்காது. 

ராதா  அழுகையுடனே வேகமாக வந்து தன் மகனை அனைத்து கொண்டார்.

” அம்மா ஒன்னும் இல்லை …இன்னும் கொஞ்சம் நேரத்தில என் மகிமா கண் முழிச்சிருவா ” என்று அவருக்கே ஆறுதல் கூற, தயங்கி கொண்டே வந்த கதிரவன்  சித் அருகில் வந்து அவனிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்க, அவன் கைகளை தட்டி விட்டு புரியாது முழித்தான்.

” என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை…நான் தான் உங்க ஆபிஸ் வந்து எல்லாத்தையும் போட்டோ  எடுத்து அந்த ஆனந்த்கு அனுப்சேன்.  எனக்கு அமிழ காப்பாத்த  வேற வழி தெரியல மாப்பிள்ளை  ” என மீண்டும் கைகூப்பி மன்னிப்பு கேட்க , அவரின் கையை மீண்டும் ஒருமுறை தட்டி விட்டவன் தன் நண்பனை பார்க்க, சந்துரு விழிகளை மூடி திறக்க, ஏதோ உள்ளது என நினைத்து கொண்டவன் , கதிரவனிடம் 

” ஐயோ  யாரா இருந்தாலும் இதை தான் பண்ணிருப்பாங்க ” என்று அவரையும் தேற்றினான். ஒரு புறம் மகியின் அன்னை செல்வி ஒப்பாரி வைக்க அவரையும் சமன் படுத்தினான் மகியின் மன்னவன் .

தன் நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே சென்ற சித் புரியாது என்ன நடந்தது என்று கேட்க, நடந்த அனைத்து ஆனந்த் செய்த  உண்மைகளையும் கூறினான்.

சித் , ” இவ்வளவு நாள் அவன சும்மா விட்டது தப்பா போச்சு… எப்போ வெளிநாட்ல இருந்து எதுவும் கிடைக்க கூடாதுனு திட்டம் போட்டானோ அன்னைக்கே அவனை ஏதாச்சு பண்ணிருக்கனும். அமிழ்காக பாத்தது தப்பா போச்சு ” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

” நீ ஒன்னும் கவலை பட வேணாம் அவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுத்துட்டேன் ” என அசால்ட்டாக கூறினான் சந்துரு.

” அப்படி என்ன பண்ண…எனக்கு வர கோபத்துக்கு, என் மகிமா சரி ஆகட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு ” 

” அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை …அவன் பண்ண எல்லாத்தையும் அமிழ்கு போன் பண்ணி சொல்லிடேன். காதலி கையாள கிடைக்குற  தண்டனை தான்  பெரிய வலியே ! ” என கூறி 

” அது மட்டும் இல்லை மச்சான் நீ உயிரா நேசிச்ச பயிர் எதுக்கு ஒன்னும் ஆகல …மகி , அதான் உன் மகிமா நீ ஆபிஸ்ல இருந்தே போனதுல இருந்து ஒழுங்கா கூட தூங்காம ஏதேதோ செஞ்சு சரி பண்ணிட்டா ” என்று அவன் கூற , சித்தின் விழிகளோ ஆச்சரிய உச்சத்தில் விரிந்தது.

” என்…என்ன டா சொல்லுற ” என தன் காதில் விழுந்தது உண்மை தான் என்று கேட்க, 

” நான் சொன்னது உண்மை தான் …என்ன செஞ்சானு உன் மகிமா முழித்ததும் கேட்டுக்கோ  ” என்றவன் சிந்தை அனைத்துக் கொண்டான்.

” நிஜமா மச்சான் அவள நீ மிஸ் பண்ணிராத…அவ்வளவு காதலிக்குறா உன்ன ” என கூறிய சந்துருவின் வார்த்தைகளில் இருந்து உண்மை தன்மையை நன்கு உணர முடிந்தது. 

‘ எப்பவும் விட மாட்டேன் டி உன்ன… சீக்கிரம் கண்ண திற  மகிமா நா உன்னை பாக்கனும் ‘ என்று சித் , சந்துருவை அனைத்தவாரு மனதினுள் நினைக்க, அது அவனுடைய மகிமாவுக்கே கேட்டது போல, உள்ள படுத்திருந்தவள் காஃபி நிற விழிகளை மெல்லமாக விரித்தாள்.

அறை வாசலில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தே இருவரும் உணர்ந்து கொண்டனர் மகி விழித்து விட்டாள் என, ஆனால் இவ்வளவு நேரம் தன் மகிமா விழிக்க வேண்டும் என நினைத்தவனோ  உள்ளே செல்ல தயங்கி கொண்டு இருந்தான் . இத்தனை நாட்களாய் அவளை காயப்படுத்தி இருக்கிறான் , அவனுக்கு தெரியுமா என்ன தான் அறியாது செய்ய குழப்பம் இங்கு வந்து நிற்குமென. நண்பனை நன்கு உணர்ந்தவனாய் சித் தோளில் கையை வைத்து அழுத்தினான் சந்துரு. அதில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தது. தன்னை சமன் படுத்தி மெல்லமாக அடிகளை வைத்து மகி இருந்த அறை வாசலிலே பிரேக் போட்டான் சித்.

அங்கு தன் நண்பன் தயங்கி கொண்டு இருக்க, சந்தருவோ அறையினுள் நுழையாமல் மருத்துவமனை வாசலுக்கு சென்று விட்டான் சந்துரு. எதற்காக இருக்கும் மகியின் பெற்றோர் வந்ததுமே நைசாக பேசி சௌமியாவின் நம்பரை வாங்கி நடந்ததை கூறி விட்டான். எப்படியும் சந்தியாவிற்கும் தெரிந்து இருவரும் வருவர் என நன்கு தெரிந்தவன், தன்னவளை பார்க்க வாயில் எச்சில் ஒழுக,  சந்தியாவிற்காக வெக்கம் கெட்டு காத்திருந்தான். 

பிரியாமல் தொடரும் 😍💋…

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
18
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  9 Comments

  1. Inth tension la yum chandruku romance keakuthu ….😂😂
   Waiting for next episode 😍😍😍😍

  2. Intha ranakalathulayu unaku kilukiluppu kekuthaaaa………. Pombala sokkuuuu kekuthaaa en da pombalaaa sokkuuu 😂😂😂manam ketta payaleee 😂😂

  3. Archana

   Bullet சந்துரு கிட்டயிருந்து இன்னும் எதிர்பார்த்தேனே 🤣🤣🤣🤣 ஒர் மினி ஆக்ஷன் சீன் எதிர்பார்த்தா தலைவன் கூல்லா பெரிய ஆப்பா வெச்சுட்டானே😂😂😂 இனி அமி என்ன பண்ண போதுன்னு பார்க்கணும் 🙊🙊🙊🙊

  4. Janu Croos

   ஏன் சந்த்ரு…இந்த ரணகளத்துலயும் உனக்கு கிலுகிலுப்பு கேக்குதுல…அங்க ஒருத்தி அடி பட்டு இருக்காள்…அவள் புருஷன் அங்க பதறிட்டு இருக்கான் நீ என்னடானா இங்க வாயில வாட்டர் ஃபால்ஸ்அ ஓபின் பண்ணகட்டு உனீ ஆளுக்கு வெயிடீ பண்ணிட்டு இருக்க…
   நல்லா வருவ சந்த்ரு…

   ஆனந்து…உனக்கு ஆப்பு வைக்க சித்து வருவான்னு பாத்தா சந்த்ருவே காரியத்தை கச்சிதமா முடிச்பிட்டானே…ஏன் வீக் பாயிண்ட் தெரிஞ்சு அடிச்சிருக்கான்… எப்படி தப்பிக்குறனு பாக்கலாம்…மாட்டினடா நீயி….