Loading

அத்தியாயம் ஒன்று

எங்கும் மேல சத்தம் ஒலித்தது .‌ நுழைவாயினுள் சித்தார்த் கிருஷ்ணன் வெட்ஸ் அமிழ்தினி என்று சிவப்பு இதயத்தினுள் ஊதா மற்றும் வெள்ளை நிற ரோஜா பூக்களால் அழகாக பொறிக்கப்பட்டு இருந்தது . மண்டபம் முழுவதும் இயற்கையால் நிரம்பி கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது . அழகான பல வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மேள சத்தம்  காதை கிழிக்க கேட்டது . 

இயற்கை வேளான்மையில்  காதலை கொண்டுள்ளதால் பல விவசாயிகளுக்கு தோழன் ஆகி போனான் சித்தார்த் , இந்த திருமணத்தின் மாப்பிள்ளை  .  பல இந்தியச் செடிகள் , உணவு தாவரங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதால் பல தொழிலதிபரகளையும் தெரிந்து வைத்திருந்தான் தன் பிஸ்னஸ் மூலம் . அவனின் தந்தையே பல கம்பெனிகளை நடத்தி வர சொந்த பந்தம், நண்பர்கள் , தொழிலதிபர்கள் அவர்கள் நடத்தும் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் என அந்த மண்டபமே நிறைந்து இருந்தது . 

அவனுக்கு காதல் திருமணம் அல்லவா !! அனைவரும் தங்கள் காதலை நினைத்து பொறாமை பட வேண்டும் என்று தான் இவ்வளவு அலப்பறையும் ,வந்தவர்கள் வந்து கொண்டிருப்பவர்கள் என அனைவரும் புகழ்ந்து தள்ளினர் .  வருபவர்கள் அனைவருக்கும் பழங்கள் இனிப்புகளுடன் சேர்த்து இரண்டு மர கன்றுங்களையும் பரிசாக கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் . 

அதிகாலை ஐந்தரை மணி முகூர்த்த நேரமாக இருக்க மணமகளை எழுப்ப அவளின் தாயான செல்வி அமிழ் அறையை நோக்கி நடந்தார் . கதவை திறந்தவருக்கு அதிர்சியே காத்திருந்தது அங்கு அமிழ் இல்லாது போக மெத்தையில் தூங்கிய மகியை எழுப்பினார் .

” மகி  , அமிழ்  எங்க ?? …பாத்ரூம்லையும் இருக்குற மாறி தெரியல …எங்க போனேனு சொல்லிட்டு போனாளா மா ” என்று சிறிது பதற்றத்துடனே கேட்டார் . அதிகாலை மூன்று மணிக்கு வந்து தன் பெற்ற பெதும்பையை காணவில்லை என்றால் எந்த  தாயுள்ளமும்  பதற தானே செய்யும் . அவர் மட்டும் விதிவிலக்கா என்ன ! . 

” அம்மா இப்போ எதுக்கு பதறுற …இங்க தா எங்கயாச்சு இருப்பா இருங்க நா போய் பாக்குறேன் ” என்ற அமிழின் தங்கை குளியலறை நுழைந்து தன்னை சுத்தப்படுத்தியவள் தன் அக்காவை தேடி வெளியே  சென்றாள்  . செல்வி உள்ளேயே அமர்ந்திருக்க , அறைமணி நேரம் கழித்து  அதிர்ச்சி, பதற்றம் என இரண்டையும் அப்பட்டமாக  முகத்தில்  காட்டி நுழைந்த தன் மகள் மகிழ்தினியை பார்த்தவர் , எழுந்து நின்றார் .  மகியின் முகமே கூறாமல் கூறியது  அமிழ்தினி இல்லை என்று  இருந்தாலும் , சிறிது நம்பிக்கை வைத்து மகியிடம் கேட்க 

” இல்ல மா ..அமிழ் காணோம் மா ” என்றவளின் வாய்மொழி கூற்றை கேட்டவர் மயங்கி சரிந்தார் . ஓடி வந்து தாங்கிக் கொண்டாள் மகி . அவள் கண்களிலும் நீர் பூத்திரிருந்தது . அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தன் தாய் செல்வி முகத்தில் தெளிக்க , கண்ணை திறந்தவர் அழுக ஆரம்பித்தார் . 

சென்ற மனைவியை காணாமல் அவரை தேடி வந்தார் அவரின் கணவன் கதிரவன் .  முகத்தில் தன் மகளுக்கு திருமணம் என்ற கலை சற்று அதிகமாக இருக்க இதழில் புன்னகை தவழ்ந்து இருந்தது . கதவை திறந்து உள்ளே வந்தவர் தன் மனைவி நிலையை பார்த்து பயந்தே விட்டார் .

” மகி என்னா ஆச்சு .. அம்மா ஏன் அழுறா… நீ வேற ஏன் இப்படி இருக்க..ஐயோ யாராச்சு சொல்லுங்க என்ன தான் ஆச்சு ” என்று கதிரவன் கதி கலங்கி விட்டார் . 

” அப்பா அமிழ் ..” 

” அமிழ்க்கு என்ன ” 

” இங்க எங்கையு இல்ல பா ..” என்றாள் கண்களில் கண்ணீர் சத்தமில்லாமல் வடிய   

         ❤️

மணமகனை எழுப்ப சித்தார்த்தின் நண்பன் சந்துரு வர … எங்கே அவன் தான் ஏற்கனவே குளித்து முடித்து பட்டு சட்டை , வேஷ்டி ஒரு கையில் காப்பை அனிந்து மறு கையில் கூலர்ஸ் வைத்து கொண்டு என அனைத்தையும் அணிந்து தயாராகி நின்றான் . தன் நண்பனின் கோலத்தை பார்த்தவன் சத்தமாக சிரித்துக்கொண்டு அவன் தோளில் கையை போட்டான் .

” இருந்தாலும் இவ்வளவு அவசரம் ஆகாது டா மாப்பிள்ளை ஒனக்கு ” 

கண்ணத்தில் குழி விழ முத்து பல் தெரிய சிரித்த சித்தார்த்

” லவ் மேரேஜ் ல டா ..அப்படி தான் இருக்கும் ” என்றான் சிறிது வெட்கம் கலந்த சிரிப்போடு . 

” அடேய் நீ எந்திரிச்சத கூட ஏத்துக்கிறேன் டா ..தயவு செஞ்சு வெட்கம்லாம் படாத … ஹார்ட் வலிக்குது ”  என்றான்  தன் இட மார்பை தடவியவாரே , தன் நண்பன் வயிற்றில் தன் முலங்கை கொண்டு‌ குத்தினான் சித்தார்த் .

” ரொம்ப சந்தோஷம் டா  ” என்றவனை தானும் அனைத்துக் கொண்டான் . இன்னும் சில நிமிடத்தில் இவர்களின் சந்தோஷம் பறிபோகும் என்பது அறியாது !! .

    ❤️

” என்ன சொல்லுற மகி .. நல்லா பாரு மா ” 

” இல்ல பா அவ இல்ல ..நம்மல எல்லாம் விட்டுட்டு போய்ட்டா ” என்றால் மகி . 

” ஐயோ இப்போ நான் என்ன பதில் சொல்லுவேன் .. இவ்வளவு பெரிய ஆளுங்க நம்ம வீட்டு பொன்னு தான் வேனும்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணவங்களுக்கு நா இப்போ என்னா சொல்லுவேன் ” என்றவர் அப்படியே தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டார் .

” அப்பா பிலிஸ் … வேற வழி இல்ல ..சொந்தம்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க .. மாப்பிள்ளை வீட்டுக்கு  இதை சொல்லிருங்க ” 

” எப்படி டா சொல்ல சொல்லுற …இன்னைக்கு நம்மனால அவங்களும் அசிங்கப் பட்டு நிக்கப் போறாங்க . என்ன சொல்ல என் பொண்ணு ஓடி போய்ட்டா இந்த கல்யாணம் நடக்காதுனுனா ” என்றார் வேதனை தோய்ந்த குரலில் , அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை . 

அவளும் என்ன செய்வாள் நினைத்து பார்க்க வில்லை யாரும் , சித்தார்த் கல்லும் கரைந்து போகும் அளவு பெண் பார்த்து நிச்சயம் செய்த நாளிலிருந்து காதலை கொட்டுகிறான்,  அவனை விட்டுப் போக எப்படி அமிழ்க்கு மனது வந்தது என புரியவில்லை மகிக்கு . தன் தந்தை தோளை தொட்டதும் தான்  யோசனையிலிருந்து மீண்டாள் 

” மகி எனக்கு வேற வழி தெரியல டா … நம்மள நம்பி வந்தாங்கடா  எவ்வளவு பெரிய ஆளுங்க … அவங்களுக்கு அவமானம் ஏற்படுத்த கூடாது டா  ” என்று இழுத்தவர் நேரடியாக விசியத்திற்கு வந்தார் .

” அப்பாவ மண்ணிச்சுரு டா .. தயவு செஞ்சு இந்த கல்யாணத்த நீ பண்ணிக்க டா ” என்றவர் கை கூப்பி கேட்டார் . தன் தந்தையின் கையை தட்டி விட்டவள் பதில் கூறாது தினறி போனாள் . ஏற்கனவே மனது நொந்து போனவள்  , இதையும் கேட்டு உடைந்து போனாள் . மகியின் மனது தான் ஏற்கனவே கண்ணா திருடி விட்டு அதை கீழேயும் போட்டு விட்டான் … இப்பொழுது என்ன கூறுவது என்று கலங்கி போனாள் .

” மகி புரிஞ்சுக்க டா ” என்று கண்கள் கலங்க பேசும் தன் தந்தையின் கூற்றை கேட்டு ஒத்துக் கொள்ளவும் முடியாமல் அவர் கூறுவதை கேட்கவும் முடியாமல் தவித்து போனால் பேதை . 

” சரி பா நா கல்யாணம் பண்ணிக்கிறேன் ” என்றாள்  காபி நிற கண்களில் வடியும் கண்ணிரை துடைக்க மறந்து  . தன் மனது முழுவதும் தன் கண்ணாவிற்கான  காதலே உயிர் மூச்சாக இருக்க ,    இன்று  தன் குடும்பத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் திருமண மண்டபத்திலிருந்து சென்ற தன் உடன் பிறந்த  ‘ அமி ‘ யை நினைத்து கோபத்தையும் தாண்டி இயலாமையே அதிகமாக இருந்தது  .  அனைத்து வழிகளும் அடைக்க பட்டது போல் இருந்தது  ‘ மகி’ க்கு .  

தன் மகளின் தலையை  வேதனையுடன் வருடியவர் அங்கிருந்து மணமகன் அறைக்கு  இந்த விசியத்தை கூற சென்றார் . 

❤️

” எங்கல மன்னிச்சிருங்க சம்மந்தி …நாங்க நினைச்சு கூட பார்க்கல ” என்றவர் நடந்தது அனைத்தையும் கூறி  முடித்தார் .

சித்தார்த்தின் தாயும் தந்தையும் சிறிது முதலில்  கலங்கி தான்  போகினர் . பிறகு , மகியுடன் திருமணம் என்று கூறியது அவர்களுக்கு மகிழ்ச்சியே … அவர்களுக்கு ஏற்கனவே இருவரையும் மிகவும் பிடிக்கும்  இவர்களுக்கு இங்கே சம்மதம் தான் ..பிறகு அனைவர் முன்னிலையிலும் கூனி குருக தேவையில்லை அல்லவா !!.. ஆனால் , தன் மகனை எவ்வாறு சம்மதிக்க செய்வர் . அவன் முகத்தில் அவ்வளவு காதல் , மகிழ்ச்சி இப்போது எல்லாம் அப்படியே மொத்தமாக வடிந்து போகுமே !! .

” வேற வலி இல்லங்க … இவ்வளவு பேர கூப்பிட்டுட்டோம் மீடியா வேற இருக்கு … ரொம்ப அசிங்க படுத்திருவாங்கங்க …சித்கு நம்ம புரிய வைப்போம் வாங்க ” என்று தன் கனவனை  அழைத்தார் ராதை  . 

மணமகன் அறையில் நுழையும் போதே அவ்வளவு சிரிப்பு சத்தம் சித்தார்த் தான் முகம் கொள்ள மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருந்தான் . தன் தாய் தந்தை இருவரும் உள்ளே வருவதை பார்த்து சிரித்தவாறே அவர்களை நோக்கினான் .

அவனின் குணம் அறிந்த சித்தார்த்தின் தந்தை வாசுதேவன் பட்டென்று போட்டு உடைத்தார் . 

” சித் அமிழ்தினி  இங்க இருந்து ஓடி போய்ட்டா ” 

” வாட் ” என்றவன் எழுந்து நின்றான் அப்படியே மகிழ்ச்சி முகம் அதிர்ச்சியாக மாற , சந்துருவிற்கும் அதே அதிர்ச்சிதான் .

” என்ன பா சொன்னிங்க பொய் தானே … சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னிங்க ” என்றவன் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது . 

” ஆமா  டா அமிழ்தினி   போய்ட்டா … ” என்றவர் மேலும் தொடர்ந்தார் 

” எங்களுக்கு வேற வழி தெரியலை நீ மகிய கல்யாணம் பண்ணிக்கோ ” .

ஏற்கனவே தன் இரண்டு வருட காதல் ஒரு வினாடியில் இதயத்தில் இருந்து சில்லு சில்லாய் உடைய , வேரு ஒருத்தியை மனதில் நினைக்கவே கசந்தது . 

” அம்மா நீங்க நினைக்கிறது நடக்கும்னு எதிர் பார்க்காத …என் மனசுல அவ தான் இருந்தா …. எப்பவும் இருப்பா  ” என்று அந்த அறையே அலரும் அளவு கத்திகொண்டு இருந்தான்  ‘சித்  ‘ சித்தார்த் கிருஷ்னன் .

”  முட்டாள் மாறி பேசாத டா …. உனக்கு ஏன் புரிய மாடிங்குது அவ எல்லாரும் வேணாம்னு தா இத்தனை பேரு முன்னாடி நம்மள அசிங்க படுத்தி ஓடிட்டா…இன்னும் அவ புராணம் பாடாத ” என்று தன் கட்டுப்பாட்டை இழந்து அவரும் கத்தினார் . 

” அவ என்ன உயிருக்கு உயிரா காதலிக்குறா புரிஞ்சுகோங்க பா பிளீஸ் ” என்று கண்ணீர் வடியா குறையாய் தன் தந்தைக்கு புரிய வைக்க முயற்சி செய்தான் . ஆனால் அவர் கேட்ட பாடு இல்லை . அவருக்கும் என்ன செய்வது என்று புரியில்லை அளவில்லாமல் உயிருக்கு உயிராக  காதலிக்கிறாள் என்று மகன் கூறுகிறான்… ஆனால் , அப்பொழுது ஏன் இப்படி   கல்யாண நாளன்று  மண்டபத்தை விட்டு  யாரிடமும் கூறாமல்  ஓட வேண்டும் என்று அவர் குழப்பம் அடைந்தார் . அவரை போலவே அங்கிருந்த சித்தின் தாய் மற்றும் தோழன் சந்துரு என  குடும்பமே குழம்பி போனது . 

” சித்தார்த் இப்போ நீ கல்யாணம் பண்ணல ..இந்த அம்மாவ உயிரோட பாக்க முடியாது ” என்று கூறினார் ராதை.  தன் கணவரும் மகனும் அனைவர் முன்னிலையிலும் தலைகுனிவு ஏற்படக்கூடாது என்ற எண்ணமே !!… அவர் கூற்றில் அனைவரும் சற்று அதிர்ச்சி தான் ஆகினர் .  தன் கணவரை கூட திட்ட விட மாட்டார் , இன்று இவ்வாறு கூறியது வாசுதேவனுக்கே அதிர்ச்சி தான் . 

” அம்ம்மாமா ” என்றான் ஆதங்கத்துடன் . இருவரும் தன் முடிவை மாற்றிக் கொள்ள போவது இல்லை என நன்றாகவே புரிந்தது . சந்துருவிற்கும் இது பிடிக்க வில்லை என்றாலும் அவனுக்கும்  இந்த நிலைமையை இவ்வாறு தான் சரி செய்ய முடியும் என உணர்ந்தான் . ஆனால் , தன் நண்பனின் மனது என்ன பாடு படும் என நினைக்கவே கஷ்டமாக தான் இருந்தது . 

கணீர் என்ற குரலில் சித்தார்த் கூறிய கூற்றில் அனைவரும் அவனை ஆச்சிரியமாக பார்த்தனர் .  அவனை சம்மதிக்க அதிக நேரம் தேவை படும் என நினைத்தார்கள் , ஆனால்  தன் மகன் ஒத்துக் கொண்டது சிறிது மிகிழ்ச்சியை கொண்டாலும் முழுதாய் மகிழ முடியவில்லை . அவர்களும் காதல் திருமணம் தானே !!   தன் மகனின் காதல் தோற்றுவிட்டது என அவன் மனம் எப்படி கூப்பாடு போடும் என உணர முடிந்தாலும் … இப்பொழுது வேறு வழி இல்லையே . 

” இப்போ என்ன அம்மா இந்த கல்யாணம் நடக்கணும் அதானே  உங்க எல்லாருக்கும்….நல்லா நியாபகம் வச்சுக்கோங்க அவ கூட சேர்த்து ஒன்னா சேர்ந்து வாழ்வேனு மட்டும் கனவு காணாதிங்க  ” என்றான் சித் .  தன் தாய் தந்தை வெளியே சென்றதும் அந்த அறையில் இருந்த அனைத்தையும் போட்டு உடைத்தான் சித் . அவன் செயலில் பதறி போய்  வழியில்லது தடுக்க போனவனையும் கதவை திறந்து வெளியே தள்ளியவன் , அப்படியே கதவில் சரிந்து அமர்ந்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான் . 

நொறுங்கிய இதயங்கள் சேருமா !!

அல்லது 

காதல் தந்த வடுக்களில் சாதலாகுமா !! 

பிரியாமல் தொடரும்… 😍💋

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
25
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  18 Comments

  1. Love panni thana marriage pannanga apro ethuku Amil odi Poona…..🤔🤔🤔🤔 Over excited ta irukku ……💯 Pavom Mahi 🥺avoloda lover la vituttu inga marriage panna pora…..😭😭……

   1. Janu Croos

    சித் சொல்றத வச்சு பாத்தா அமியும் சித்தும் லவ் பண்ணி இருக்காங்க….அதுவும் இரண்டு வருஷமா….சித் அவள லவ் பண்ணக காதல் மழைய பொழிஞ்சது மகிக்கும் தெரிஞ்சிருக்கு….அப்புறம் ஏன் கல்யாணம் அன்னைக்கு ஓடிப்போகனும்….புடிக்கலனா ஏன் காதலிக்கனும்….சரி அப்புறம் புடிக்காம போச்சுனா ஏன் கல்யாணம் அன்னைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும்…..
    அமி அவளோட வாழ்க்கைய தேடி போய்ட்டாள்….அவளோட அம்மா அப்பா சம்மந்தி வீட்டுக்காரங்க பாவம்னு யோசிக்குறாங்க….சித்தோட அம்மா அப்பா மீடியா சொந்தகாரங்க முன்னால அவமானப்படக்கூடாதுனு யோசிக்குறாங்க….சித் தான் காதலிச்சவள தவிர தன்னோட மனசில யாருக்கும் இடம் இல்லனு பேசிட்டு இருக்கான்….இதுல எந்த தப்புமே பண்ணாம மத்தவங்களோட ஆசைக்கும் விருப்பத்துக்கும் தன்னோட வாழக்கையவே ஒருத்தி குடுக்க இருக்காள் அத யாருமே கண்டுக்கல….
    மகி இனிமேல் என்ன பண்ண போறாளோ….

  2. Such a heart touched 🥲💕 excited to read the continuation…superbbbb ladduuu 💙

  3. Archana

   ஆமா ஏன் அவ போன 🤔🤔🤔 மகியும், அமியும் ட்வின்ஸா??

  4. Nancy Mary

   அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் சூப்பர்😊
   சித்தார்த் அவளை உயிருக்குயிரா நேசிச்சிருக்கா ஆனா அவ நேசிச்சாலா அந்த நேசிப்பை இவன் உணர்ந்தானா இதைபத்தி புரிதலே இல்லாம இத்தனை ஆடம்பரமா நடந்த ஏற்பாட்டால இன்னொரு பெண்ணோட வாழ்க்கை பலியாகிருச்சே பெத்தவங்க நாலு பேருக்கு தர முக்கியத்துவத்தை ஏன் நாலு பேரை கொண்ட தன் குடும்பத்துகிட்ட காட்ட மாட்டேங்குறாங்க பொழுதுபோக்கு இல்லாதவனும் தன் குறையை மறைக்க போராடுறவனும் எடுக்குற பெரிய ஆயுதமே புரணி பேசுறது தான் அப்படிபட்ட முதுகெலும்பில்லாத கோழைகளுக்காக தன் உயிருக்குயிரா நேசிக்கிற பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்கணுமா இவங்க விஷயத்துல பிரச்சனையில்ல ஆனா இந்த முடிவு சரியான தீர்வு இல்லையே இப்படி exchange ஆஃபரா போகுற பெண்ணோட வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சாங்களா இப்போவும் மணப்பெண் மாறுனதுக்கு பேசாமலா இருப்பாங்க அந்த பேச்சை கடக்க முடியும்னா ஏன் நிதர்சனத்தை ஏத்துக்க முடியல தனது விருப்பத்துல போனவளோட வாழ்க்கை விரும்பியபடி சரியா அமையுமா பெத்தவங்க விரும்பத்துக்காக போனவளோட வாழ்க்கை விரும்புற மாதிரி அமையுமா பொறுத்திருந்து பார்க்கலாம்🙂🙂🙂👏👏

  5. என்னடா இது சித்து உயிருக்கு உயிராக அமிழ்தினி என்னை காதலிக்கறானு சொல்றான்..அப்றம் அமிழ்தினி எப்படி ஓடிப் போவா🤔🤔..ஏதோ இருக்கு..மகி வேற கண்ணா கண்ணானு யாரையோ விரும்புறா..