Loading

அத்தியாயம் இருபத்து ஐந்து

ஏதோ பொருளை அள்ளி போட்டுக் கொண்டு போவது போல, மகியை பிடித்து உள்ளே தள்ளி காரை கிளப்பினான்.  மகி ஏறிய இடத்திலிருந்து கால் மணி நேரம் தான் ஆகும் , அதனால் அந்த தடி பயல்கள் சென்றிருக்க மாட்டார்கள் என காரை பறக்க விட்டிருந்தான். சந்துரு பின் கதவை திறந்து ஏற பார்க்க , கார் பறந்திருந்தது. கீழே விழுந்து அடி வாங்கிய சந்துருவோ தன் பின்னாடி பிட்டத்தை  தேய்த்த படி வீட்டுக்குள் அடிகளை வைத்தான். 

கார் பறக்கிறது போல இருந்தது  மகிக்கு , எதற்காக என்றே கூறினாலும் பரவாயில்லை காரை புயல் வேகத்தில் ஓட்டி வந்திருந்தவனோ நேராக மகி ஓடி வந்த இடத்திற்கு தான் வந்திருந்தான். 

தன் இருக்கையில் இருந்து இறங்கியவன் மகிக்கும் கதவை திறந்து விட்டான். 

” எந்த பஸ் ஸ்டாண்டில ஏறுவ ” என்று கோபக் குரலில் கொப்பளித்தவன் அவள் கூறியதும் அந்த இடத்திற்கு கையை பிடித்து இழுத்து சென்றான்.

மகி சென்றதால் இன்னும் அந்த தடி பயல்கள் வேறு பெண்ணிடன் அதே போல் வம்பிலுக்க , முதலில் நின்றவன் பின் காலரை பிடித்து இழுத்து முன்னால் திருப்பி விட்டான் பாரு ஒரு குத்து,  அடி வாங்கியவன் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அதில் மீதம் இருந்த இருவரும் சற்று பின்னால் நகர்ந்தனர். 

விட்டால் போதும் என்று அங்கு அவர்களிடம் மாட்டிக் கொண்ட பெண் மகி அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.

தன் கண்ணாவின் அதிரடியில் வாயை பிளந்து விட்டால் சித்தின் மகிமா. 

அந்த தடியன் மூக்கை துடைத்து கொண்டே ஓரம் போக, மீதம் இருந்த இருவரும் தாக்க வந்தனர். ஏற்கனவே சில நாட்களாக தன் மேல் தவறு இருந்ததில் குற்ற உணர்ச்சியில் இருந்த சித்திற்கு அதை போக்க இடம் கிடைத்ததாய் நினைத்து ஓடி வந்தவனின் பிறப்பு உறுப்பில் தன் கால் முட்டியை வைத்து நங்கென்று ஓங்கி இடிக்க, அப்படியே சுருண்டு விழுந்தான் அவன். மீதி இருந்த ஒரு குண்டனும்  சித்தார்த்தின் அவதாரத்தில் பயந்து ஓடி விட்டான்.  கீழே விழுந்த இருவரையும்  கோபம் அடங்கும் வரை மிதித்துக் கொண்டு இருக்க, விட்டால் கழுத்தில் மிதித்தே கொண்டிருவான் போல் இருந்தது. அதில் மகி தான் பதறி விட்டாள்

” சித் விடு போதும் … செத்திர போறாங்க…போதும் ” என்று தைரியத்தை வரவழைத்து தன்னவன் கையை பிடித்து இழுக்க, மகியின் தொடுதலில் கோபம் எல்லாம் பனியாய் கரைந்தது. அதில் சித் திரும்பி அவள் பிடித்து இழுத்த கையை பார்க்க , படக்கென தன்னவன் கையை விட்டாள். 

‘ சே கேஷுவலா தானே பார்த்தோம்… ஏதோ கைய விடுனு சொன்ன மாறி பதறுறா ‘ என்று தனக்குள் நினைத்தவன் ஆத்திரம் அடங்கியதில் அங்கிருந்த பெண்ணை அனுப்பி வைத்து விட்டு காரில் அமர்ந்தான். 

நடப்பது அனைத்தும் கனவா நனவா என்று தெரியாமல் தன் விழிகளையே கசக்கி பார்த்துக் கொண்டாள் மகி.

தனக்காக தன் கண்ணா சண்டை இடுகிறானா என்று நினைக்கையிலே மகியின் மனது அவன் காட்டும் வெறுப்புகளை மறந்து  குத்தாட்டம் போட்டது. முகம் முழுவதும் சிரிப்பை தாங்கி இருந்தாள் குயிலவள்.

இன்னும் மகி காரில் ஏறாமல் ரோட்டில் நின்று கனவு கண்டு கொண்டிருக்க, அவளை பார்த்தவன் ஹாரனை அழுத்தினான். அப்படி என்றால் உள்ளே வந்து அமர வேண்டுமாம்.

மகியும் நல்ல பிள்ளையாய் வந்து அமர்ந்தாள்.

_____

“எங்கடா‌ என் பையன் …நீ மட்டும் வந்திருக்க  ” என்று சந்துருவின் பின்னால் வருகிறானா என பார்த்தவாறே கேட்டார் ராதா. 

பின்பகுதி டேமேஜ் ஆகி இருக்க, அதை கவனிக்காது அவரின் கொத்தமல்லி பையனை தேடுவதை பார்த்து மூக்கில் புகை வந்தது.

” அம்மா நா இங்க அடிபட்டு வந்திருக்கேன்… அதை பாக்காம , உங்க பையனை மட்டும் தேடுறிங்கலா. ” என்று கூறி கொண்டே வந்தான் சந்துரு. 

” ஐயோ அடி பட்டுருக்கா …வா டா வந்து உட்காரு என்றவர்  ஒரு இடத்தை கை காட்டி , சந்துருவிற்கு இதமாக இருக்கும் என்று குசனை  எடுக்க செல்ல, ராதாவின் பாசத்தில்  சோஃபாவில் என்ன இருக்கிறது என்று பாராமல் உட்கார்ந்த சந்துருவின் பின் பகுதி மீண்டும் அடி வாங்கியது. ராதா கையில் இருந்த பேடல் சீப்பை அங்கிருந்த சோஃபாவில் போட்டு விட்டு குசனை எடுக்க செல்ல, சரியாக சந்துரு அந்த சீப்பு மேலே அமர்ந்தான். பின்னால் மீண்டும் பஞ்சராகியது தான் மிச்சம். 

” ஆஆஆ ” என கத்தியவன் எழுந்து நின்று, ஓடி வந்த ராதாவை முறைத்து கொண்டு இருந்தான். சோஃபாவில் சீப்பை பார்த்த ராதாவிற்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட தன் பல்லை காட்டியவாறு வந்து கையில் இருந்த பஞ்சு போன்ற தலையனையை அவனிடம் நீட்ட, அவனுக்கு காதில் புகை வந்தது.

” அது எப்படி மா …பிள்ளைய கிள்ளி விட்டே தொட்டியில போட்டு தாலாட்டு பாடி ஆட்டுறிங்களா ” என்றான் வலியில். அதில் ராதா சிரித்துக் கொண்டே சோஃபாவில் தலையனை வைத்து அதில் சந்துருவை அமர வைத்தார். இப்போது தான் சந்துருவிற்கு இதமாக இருந்தது.

___

இருவரிடமும் அமைதியே நிலவியது. அளவில்லா சந்தோசத்தில் மகியும், இப்போதாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என சித்தும் இரு வேறு நிலையில் இருந்தனர்.  தன்னை தயார் படுத்திய சித் அவனே ஆரம்பித்தான்

” மகிமா ….” என்று அவன் இழுக்க, மகி மனதில் இவ்வளவு நாள் பட்ட துயரம் போய் ஓராயிரம் பட்டாம்பூச்சி பறந்தது. மெல்லமாக தலையை நிமிர்த்தி அவனை பார்க்க, அவனோ அவள் முகத்தை பார்க்காது இருந்தான். இவளுக்கு தான் சந்தேகம் வந்தது ஒருவேளை பிரம்மை யாக இருக்குமோ ?,  என்று திரும்பி கொண்டாள். 

” அது… மகிமா ரொம்ப சாரி ” என்று அவன் மீண்டும் தொடரவே , அது நிஜம் தான் என புரிந்தது.  ஒரு மாதமாய் இருவரும் முகத்தை கூட பார்க்காது இருந்தவர்களுக்கு இந்த தனிமை மிகவும் அவசியமாய் இருந்தது. 

இப்போது தான் மகி அனைத்தையும் மறந்து தனக்காக சண்டை போடுகிறான் என்று மகிழ்ச்சியடைந்தாள்,  தன் கண்ணா எதற்காக மன்னிப்பு கேட்கிறான் என புரிந்ததும் அந்த சிரிப்பே அப்படியே ஆஃப் ஆனது. 

” அது …ஏதோ ஒரு கோபத்துல, சத்தியமா நா வேனும்னு சொல்லல…பிலிஸ் என்ன மன்னிச்சுட்டேனு மட்டும் சொல்லு. குற்ற உணர்ச்சியில இந்த ஒரு மாசமா செத்திட்டு இருக்கேன் ” என்று அவன் உள்ளே போன குரலில் கேட்க, மகிக்கு தன் கண்ணா கெஞ்சுவது பிடிக்கவில்லை தான் இருந்தாலும் அவன் கூறிய வார்த்தைகள் இன்னும் அவள் மனதில் இருந்து கத்தியாய் குத்த போய் தான் வேலைக்கு செல்கிறாள், அவனை பார்க்காது தலையை குனிந்து கொண்டு அவள் அமர, இப்போது மகியை பார்த்திருந்த சித்திற்கு தான் மேலும் வலித்தது.

” அது ..நிஜமா …சாரி ” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க, மகி கையை காட்டி தடுத்திருந்தாள். பிறகு எங்கு சித் பேச, அவனும் வாயை மூடி காரை ஓட்டினான். அவனுக்கும் தெரியுமே கோபத்தில் விட்ட வார்த்தையின் வீரியம். மகி அமைதியாகவே இருக்க, அவனுக்கு மேலும் கஷ்டமாக இருந்தது.

” நீங்க சொன்னதுல தப்பு இல்லை தானே ! ” என்றவள் குரல் உடைந்தது. அதில் சித்திற்கு தான் ஒரு மாறி ஆனது.

” ஐ மீன் எனக்கு அங்க எந்த உரிமையும் இல்லை.. அது தான் உண்மை , என்னால முடிஞ்ச பணத்தை மாசம் மாசம் தந்திரேன் ” என்றவள் சன்னலோறம் திரும்பிக் கொண்டாள். 

” இல்லை …அன்னைக்கு என் மேல் தான் தப்பு … ” என்று தனது பக்கம் தான் தவறு இருப்பதை  என்றோ உணர்ந்தவன் பேச பார்க்க,

” பிலிஸ் இதை இத்தோட விடுங்க சித் ” என மகி நிறுத்த சொல்ல,  இந்த முறை வாயை மூடிக் கொண்டான். 

மகிக்கு இதை நினைக்க விருப்பமே இல்லை , தன்னவன் தன்னிடம் பேசுவது, தனக்காக கோபம் கொண்டு அடித்ததை மட்டுமே அவள் மனம் நினைக்க தோன்றியது. அப்படியே சித் அமைதியா காரை ஓட்டி வந்து வீட்டில் நிப்பாட்டி இருந்தான். மகி இறங்கி உள்ளே நடக்க, அவளை தொடர்ந்தே சித் வந்தவன் மகியின் சிரிப்பில் தொலைந்து போனான். அப்படி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

” என்ன என்ன ஐடங்களோ…இந்த புது நாட்டினிலே ” என்று வடிவேலை போல வாங்கிய பிட்டம் அடி ராதா டேபிளிலில் சமைத்து அடுக்கி வைத்த உணவை பார்த்ததும் மறைந்து , எழுந்து வடிவேலை போல ஆடி பாடி கொண்டிருக்க மகியாள் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளின் பின்னால் இருந்தவன் தன் மகிமாவின் சிரிப்பை பார்த்து தன் உதட்டோறமும் புன்னகை குடி கொண்டது.

” சந்துரு முடியல …பிலிஸ்  நிறுத்துங்க  ” என்று அவள் வயிறை பிடித்துக் கொண்டு அவள் சிரிக்க, அப்போது தான் மகி வந்ததை பார்த்த சந்துரு தன் ஆட்டத்தை நிறுத்தி அவளிடம் பல்லை காட்டினான். 

சிரித்துக் கொண்டே மகி அவனருகில் போய் நின்று மீண்டும் சிரிக்க, தன் ஆட்டத்தை பார்த்து விட்டாளே என கொஞ்சம் ஷையாக இருந்தது சந்துருவிற்கு. 

” மகி எதுக்கு டா இப்படி சிரிக்குற …” என்று வேற ஒரு உணவை டேபிளில் வைத்த வாரு ராதா கேட்க, அவரிடம் வாயை திறக்க போனவளின் வாயை கையை கொண்டு அடைந்தான் சந்துரு. அவள் திமிர விடுவதாய் இல்லை. ராதாவும் இவர்களின் விளையாட்டை பார்த்து சிரித்தே வேற உணவை எடுக்க சென்றார். எல்லாம் சந்துரு வந்த ஸ்பெசல் தான். ஒரு மாதமாய் வீடு வராதவனுக்கு பிடித்த உணவுகளை செய்து அடுக்கினார் ராதா.

இவர்களின் சேட்டையை பார்த்து அவர் சிரித்து  கொண்டே வேலையை  தொடர, சித்தோ கடுப்புடன் நின்றிருந்தான். 

எதற்காக அவனுக்கு பொறாமை வருகிறது என கேட்டாள் சித்திற்கு தெரியாது , இருந்தாலும் அவன் மனதிற்கு பிடிக்கவில்லை. தன் நண்பனை பார்த்து வேகமாக சென்றவன் மகி முன் நின்று அவன் வாயில் இருந்த சந்துருவின் கையை எடுத்து விட்டு தன் பக்கம் இழுத்தான். இப்போது சிரித்து கொண்டிருந்தவளுக்கு மனது படபடக்க ஆரம்பித்தது. அதில் சந்துருவிற்கு சந்தோசமாக இருந்தது ‘ சரி மச்சான் விழுந்திட்டான் ‘ என்று மனதில் நினைத்தவன் மீண்டும் சீண்ட ஆரம்பித்தான்.

” மகி சிரிப்ப நிறுத்து ” என்று மகி பக்கம் வர , இருவரையும் நெருங்க விடாது இடையில் சித் வந்து நின்றான். மகி சிரிப்பை நிறுத்தி பல நிமிடங்கள் ஆகி விட்டது. மூவரும் வரிசையாக நின்று கொண்டிருக்க , அதை பார்த்த ராதா தான் சிரித்தார்.

” இப்போ எல்லாரும் கையை கழுவி சாப்பிட வரல… எல்லாத்தையும் எடுத்து வச்சிடுவேன் ” என அவர் சிரித்து கூற, அந்த வார்த்தையை முடிக்கும் முன்னே சந்துரு ஓடி வந்து சாப்பிட அமர்ந்திருந்தான்.

மெல்லமாக திரும்பி தன் பின்னால் ஒளித்து வைத்திருந்த மகியை பார்க்க, அவளோ தன்னவன் பார்வையில் மயங்கி நின்றாள். தீடீரென தொண்டையை செருமும் சத்தம் கேட்க இருவரின் பார்வையும் விலகியது. வேறு யாராக இருக்கும் சந்துரு தான் இருவரையும் பிரித்திருந்தான். 

மகி லேசாக சிரித்து கொண்டே கையை கழுவி சந்துரு அருகில் அமர்ந்து கொள்ள, கடுப்புடன் மகி எதிரில் சாப்பிட அமர்ந்தான் அவளின் கண்ணா. 

எதற்கென்றே புரியவில்லை ஆனால் மகி அழுவது சித் மனதை வதைத்தது. கொஞ்சம் நாட்கள் முன்னால் தன் தந்தையுடன் ஒரு மீட்டிங்கிற்காக சென்னை  சென்றவன் , அப்போது தான் அமிழ் ஆனந்துடன் இருப்பதை பார்த்து முதலில் அதிர்ந்தான். பின்பு இருவருக்கு திருமண ஆகிவிட்டது என தெரிந்து கொண்டவன் , ஆனாலும் அவ்வளவு வலியை தர வில்லை. ஏனென்றும் அவனுக்கு தெரியவில்லை. ஒருவேளை தன் மனது அமிழை மறக்கிறது போல என நினைத்துக் கொண்டான் அந்த ஆணழகன்.

கண்களில் அனல் தெறிக்கும் அளவு இருவரையும் முறைத்துக் கொண்டு அவன் உன்ன, அதை கவனித்த சந்துரு மேலும் கடுப்பேத்தும் விதமாக மகிக்கு ஊட்டி விடுவது என எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.

அனைத்து உணவையும் ஒரு கை பார்த்து வயிறு முட்ட தின்ற சந்துரு வீட்டிற்கு கிளம்ப தயாரானான். மகி காதருகே சென்றவன்

” மகி , மச்சான் விழுந்திட்டான் ” என கிசுகிசுத்து

” மகி இனி வேலைக்கு போக தேவை இல்லை , அப்படி போயே திருவேனா… எங்க கம்பெனிக்கு வரலாம் அதுல நானும் பாட்னர் தான். முடிவு எடுக்க உரிமை இருக்கு, நீ நாளைக்கு இல்ல… இல்ல  நானே ஆன்லைன் டைப்பிங் வேலையை உனக்கும் தரேன். அதுக்குன்னு எக்ஸ்ட்ரா சேலரி எதிர் பார்க்காத , எல்லாத்துக்கும் தர சம்பளம் தான் தருவேன் ” என ஆர்டராய் கூறி தன் நண்பனை  திமிராக பார்த்து  தன் வீட்டிற்கு சென்றான். 

சந்துரு பேச ஆரம்பித்ததும் வெட்கத்தில் இருந்தவள் , கடைசி வரை அவன் மூச்சு முட்டி பேச , இவளுக்கு தான் டயர்டு ஆனது. சரி தான் வேலை செய்ய வேண்டும் அதை எங்கு செய்தால் என்ன என நினைத்தவள் நாளை சந்துரு சொல்கின்ற வேலைகளை செய்யலாம் என முடிவு எடுத்திருந்தாள்.  சந்துரு வீட்டில் இருந்தே வேலையை கொடுத்ததாள், அவள் லேட்டாகா வீடு வர தேவை இல்லை ,  இன்று நடந்த மாறி எதுவும் நடக்காது என யோசித்து  அவை  நன்றாக இருக்க அந்த ஒப்பந்தத்தை தேர்ந்தெடுத்து,   சந்துரு சென்றதும் தங்கள் அறைக்கு படுக்க சென்றாள் மகி.

காதில் புகையுடன் தன்னிடம் மட்டும் சிரித்து பேச மாட்டுகிறாளே என்று சித்தும் அவளை ஃபாலோ செய்து வந்து அவள் சோஃபாவில் உறங்க மெத்தையில் இருந்து பார்த்தவாறு இருந்தான். இத்தனை நாட்களில் இன்று மகி சந்தோஷமாக நித்திரை கொண்டாள். 

அவளையே பார்த்திருந்தவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் குழம்பி போனான். ஆனாலும் அதை தீவிர யோசிக்க அவன் மனம் நினைக்காது அவனை உறங்க வைத்தது.

____

அனைவருக்கும் விடியல் அழகாக இருக்க, இன்று மகியை தானே கல்லூரிக்கு கூட்டி செல்வோம் என்று அடித்து பிடித்து எழுந்து கிளம்ப ஆரம்பித்தான் சித். 

கீழே சமைத்து முடித்து , தானும் உண்டு  தன் அறைக்கு வந்து பையை எடுத்து கொண்டு வாசலை நோக்கி செல்ல , அங்கு ஒரு கார் ரெடியாக இருந்தது. அதை பார்த்து அவள் வாயை பிளக்க, மகியை தானே கூட்டி செல்லலாம் என வேகமாக கிளம்பி  மகி பின்னால் வந்து நின்ற சித்தின் முகம் கடுப்பில் சிவந்தது.

பிரியாமல் தொடரும் 😍💋…..

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
22
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    14 Comments

    1. Paruda Namma hero fight la Pattaya kilapuraruuuu…..🔥.summava rowdy yara vampupannanga mahi la apo kovam varatha seiyum…💞love started……………chandru tha pavom kila vilunthu pala adi vangiruchu odambuu😂irunthalum kurumbu adangalayeee(so cuteee😍😍) mahi kaiya pidichathula sir ku enna oru aanantham athu ore second la poitucheyy ni partha parvaila Ava kaiya vittu ta romance sa pakanum atha vittu tu kovam ma patha ipdi tha nadakum ………😂 Un Mela thappu illa ellam Mahi ya sollanum aven epdi paakuranu kuda terila🤦…..apro sidh yen kovamma nikiran enna vaa irukum🤔🤔 waiting for next epi ❣️❣️❣️❣️…….

    2. Chandhru tholla thangala🤣🤣🤣🤣🤣 mithi vaangama po maatan pola

    3. Sidh ku possesive ekka chakkama varuthe… Car la irukurathu Namma Chandru Thane… Aven thn pakka care edukura baiyan ache… Namma mahi ya nethu incident ku aprm thaniya vida payanthu vanthuruban… Soooo sweet….

    4. சித்து…செம மாஸ் போ…நீ ரொமாண்டிக் ஹீரோனு நினைச்சா நீ ஆக்ஷனும்ல பண்ற….
      சந்த்ரு உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலை பாரு உன்னால சித் கடுப்பாகுறான்

      1. Author

        😂😂😂😂… நன்றி சகி 🥰🥰🥰😁❤️