அத்தியாயம் பத்தொன்பது
சித்அலுவலகம் :
சந்துரு சொன்னது தான் தாமதம் மீட்டிங் அறையில் இருந்தவன் வேகமாக தன் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டான், அவனை பின்தொடர்ந்து வந்த சந்துருவிற்கு தான் நண்பனின் நடவடிக்கைகள் குழப்பத்தை தந்தது .
” என்ன மச்சான் தலை ஏதும் வலிக்குதா … முக்கியமான மீட்டிங்ல இப்படி சொதப்பிட்டு இருக்க ” என்று புரியாமல் கேட்க , அதற்கோ சித்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை . அவன் இத்தனை ஆண்டுகளாய் கண்டுபிடித்த புதிய வகை விதை நெல்லின் அங்கீகாரத்திற்கு இன்று நடக்கின்ற மீட்டிங்கானது மிக முக்கியமாகும் . ஆனால், சித் திணறுவதை பார்த்து அவர்கள் ஏதேனும் ஒப்புதல் அழிக்காமல் சென்றுவிட்டால் அவனது உழைப்பு முழுவதும் வீணாகி விடும் , என்ன நடக்கின்றது என தெரியாமல் சந்துரு முழித்துக் கொண்டு இருந்தான்.
” மச்சான் என்ன தான் டா ஆச்சு … ஆபிஸ் வந்ததுல இருந்து ஒரு மாறி இருக்க .. அம்மா ஏதும் திட்டிடாங்கலா ” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவன் திரும்பவும் அமைதி ஆனான். பொதுவாகவே சித் எதற்கும் அதிகம் கோபம் படும் ரகமல்ல, அப்படி வந்தாலும் அவன் கோபத்தை எதிரிலிருப்பவரால் தாங்க முடியாது , இந்த கல்யாணம் நடந்த பிறகு தான் நண்பனின் குணம் மாறிவிட்டதை உணர்ந்தான் , எப்போதும் கோபமுகத்தை அனைவரிடமும் காட்டியவன் இன்று கவலையா அல்ல குழப்பமா என்ன நிலையில் இருக்கிறான் என புரியாமல் சிக்கி கொண்டான் சந்துரு .
” என்ன தான்டா ஆச்சு ” என்று பொறுமை இழந்தவனாய் அப்படியே சித் எதிரே அமர்ந்தான்.
” மகிமா …” என்று சித் வாயை திறக்க சந்துரு விற்கும் ஆச்சிரியமே இத்தனை நாட்களை வராத வார்த்தையல்லவா .
” மகிக்கு என்ன ஆச்சு ” என்று சந்துரு கேட்க , சர்வசாதாரணமாக ” என்ன அடிசிட்டா ” என சித் கூற , இருக்கையை விட்டு எழுந்தே விட்டான் சந்துரு .
” எதுக்கு மச்சான் நீ எதுவும் பண்ணியா ” என்று அதிர்ச்சியுடன் கேட்க
” அது …அது ” என்று தன் நண்பன் திணறையிலே புரிந்துக் கொண்டான் ஏதோ நடந்திருக்கிறது என்று. காரணம் இல்லாமல் சண்டை போடும் ஆள் மகி இல்லை , அவ்வளவு காதலிப்பவள் சித்தை அடித்தாள் என்றால் கண்டிப்பாக மிகவும் கஷ்டப்படுத்தி இருப்பான் என்பதை உணர்ந்தான் . தன் மச்சான் பேசாமல் இருப்பதை பார்த்தவன்
” புரியுதா மச்சான் உனக்கு …நீ மகிய அடிச்ச காரணத்தை சொல்லரதுக்கே இவ்வளவு தயங்குற … அப்போ அவளுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் ” என்றவன் மேலும் எதுவும் கூறாது வெளியே சென்று விட்டான். ஏற்கனவே அப்படி பட்ட வார்த்தைகளை கூறியதை நினைத்து மனதுக்குள் புலுங்கியவன் சந்துரு கூறுவது மேலும் அவனை வதைத்தது . ஏனோ அவள் தன்னவள் தான் என்பதை அவன் மனம் உணர மறுத்தது . எதற்காக தன்னுடைய மகிமாவிற்காக இவ்வளவு வருந்துகிறான் என்பதையும் அறிந்து கொள்ள நினைக்காமல் மீண்டும் அவளின் அழுகை முகத்தை நினைத்து கலங்கி போனான்.
வெளியே சென்ற சந்துருவிற்கோ என்ன ஆனது என தெரியாமல் மகிக்கு போனை போட அவள் எடுக்கவே இல்லை , எங்கே மகி தான் கண்ணீர் கடலில் இருந்தாளே!. பல முறை முயற்சி செய்தவன் மகி எடுக்காது போக , மீட்டிங்கிற்கு நேரமாவதை உணர்ந்து அங்கே சென்றான் . சித் திணறுவதை பார்த்து சந்துருவே சித்தின் கண்டுபிடிப்பை சில காரணங்களை கூறி சந்துருவே அரங்கேற்றினான். ஒருவழியாய் நல்லபடியாக எல்லாம் முடிந்து, வந்தவர்களும் ஒப்புதல் அளித்தனர். இனி மூன்று மாதத்தில் சித் விதை நெல்லை அதிக விளைச்சல் கொண்டு வந்தால் அவ்வளவுதான் அனைத்து விவசாய மக்களுக்கும் இதனை அறிமுக படுத்தி நல்ல ஆரோக்கியமான உணவுகளை இன்னும் கொஞ்ச வருடத்தில் உண்ணலாம் . இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததும் முகத்தை கவலையுடன் வைத்திருந்த சித்தை நோக்கி வந்தான் சந்துரு
” மச்சான் என்ன டா ? இத்தனை வருடம் நீ கஷ்டப்பட்டதுக்கு முதல் வெற்றி கிடைச்சும் இப்படி உட்கார்ந்திருக்க ” என்று கேட்க , அதுதான் சித்திற்கும் புரியவில்லை . மகி அடித்ததும் ஒன்னும் அவ்வளவு வலிக்வில்லை அவனுக்கு அதெல்லாம் தூசி போலவே , ஆனால் அவள் பார்த்த பார்வையில் சித் மனம் நொறுங்கி விட்டது , அதில் ஆயிரம் அர்த்தங்கள் . அவன் மனம் அவ்வளவு எளிதில் தான் காதலித்த பெண்ணை மறந்து வேறு ஒரு பெண்ணிடம் பாய்கிறது என்ற அசிங்கம் , அந்த பைத்தியதிற்கு தெரியவில்லை அவன் உயிருக்கு உயிராய் காதலித்ததே மகியை தான் என்று . மனது முழுவதும் ரணமாய் இருக்க மிக பெரிய வெற்றி கிடைத்ததும் அவன் மனமோ தன்னவளின் நினைவில் சிக்கித் தவித்தது.
” சரி மச்சான் அதான் எல்லாம் முடிஞ்சுருச்சுல வீட்டுக்கு போ நீ… மகிய பார்த்து போய் பேசு ” என சந்துரு கூறியதும் , அவனை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாது தன் அறையில் இருந்து வெளியே சென்று விட்டான். தன் நண்பனின் மாற்றத்தை பார்த்து சந்துவிற்கு நம்பிக்கை வந்தது கண்டிப்பாக சித் மாறிவிடுவான் என்று .
சித் அறை :
தன்னவன் கூற்றில் முற்றிலுமாக உடைந்து போனவளோ கண்ணீரில் கரைந்து அழுது அழுது சோர்ந்து எப்படி உறங்கினாள் என்று தெரியவில்லை அப்படியே சாய்ந்தவாறு உறங்கி போனாள் . ராதா மதியம் சாப்பிட அழைத்தும் பசிக்கவில்லை என மறுத்துவிட்டாள். அலுவலகத்திலிருந்து மனம் கேளாது வந்தவனோ முதலில்
கண்டது கைகளை குறுக்கி கொண்டு உறங்குபவளை தான், அழுது அழுது முகம் வீங்கி சிவந்து இருந்தது . அதை பார்த்ததும் ஏதோ உள்ளுக்குள் செய்ய மகியை வெறுக்கவும் முடியாமல் , தான் காதலித்த பெண்ணை அதற்குள் மறந்து வேறு ஒருவளை மனம் அனுமதிப்பது வேறு அவனை கேவலமாக சித்தரித்தது. மகியையே பார்த்தவன் அதற்கு மேலும் முடியாமல் போக எழுந்து வெளியே சென்று விட்டான் .
அஅ கம்பெனி ஆஃப் பெஸ்டிசைட்ஸ் :
(AA Company of pesticides : )
மேஜையில் இருந்த அனைத்து பொருட்களையும் கீழே போட்டு நொறுக்கி கொண்டு இருந்தான் ஆனந்த்.
” எப்படி …எப்படி …இது நடந்தது ” என பைத்தியம் பிடித்தவன் போல் மண்டையை இறுக்கி அலறுபவனை பார்த்து அங்கு இருந்த அனைவருக்கும் பய பந்து வயிற்றில் உருண்டது . பதில் பேசாது அவனையே வெறிக்க , ஆனந்திற்கு மேலும் ஆத்திரம் கூடியது .
” உங்க கிட்ட தான் கேட்கிறேன் …எப்படி நா இவ்வளவு தடுத்தும் அவங்க சித்தார்த் ஓட விதைக்கு ஒப்புதல் குடுத்தாங்க ” என்று மீண்டும் அலற , அவன் முன்னே வந்து பிஏ
” சா..ர் வந்த..வங்க ரொ..ம்ப நேர்மை..யானவங்காலாம் சா.ர்ர் ..எதுக்குமே மசியல ” என்று திக்கி தினறி கூறியவனை பார்த்து கண்களாலே எறித்தவன் மேலும் மேஜையை ஓங்கி அடித்தான் அதில் கண்ணாடி சில்லு சில்லாய் உடைய , அவன் எதிரில் இருந்த அலுவலக பணியாளர் அனைவரும் சற்றே பின்னே நகர்ந்தனர். பிறகு இருக்காதா மகியின் மன்னவன் இந்த விதை நெல்லை உற்பத்தி செய்து சரியாக அமைந்து விட்டாள் , இனி பூச்சி மருந்திற்கு வேலையே இருக்காது , எந்த பயிரை விளைவிப்பவர்களுக்கும் தேவையின்றி போனால் ஆனந்த் கம்பெனிகள் அனைத்தையும் மூட வேண்டியது தான் , அதற்கு தான் அத்தனை குறுக்கு வலிகளையும் கையில் எடுத்தான், கடைசியில் எதுவும் வெற்றி பெறவில்லை . மிருகத்தை போல் நடந்து கொள்பவனை பார்த்து யாரும் வாய் திறக்காது தினறினர். அப்போது ஆனந்தின் அழைபேசி ஒலி எழுப்ப அதை பார்த்தவனுக்கு அனைத்து கோபமும் பறந்தது, அழைப்பை ஏற்றவன்
” சொல்லு பாப்பா ” என்று கூறியதும் , இவ்வளவு நேரம் பயந்து நடுங்கி கொண்டு இருந்தவர்கள் படாரென தலையை ஒருசேர நிமிர்ந்து ஆனந்தை பார்த்தனர் . பின்னே , இவ்வளவு நேரம் காட்டு குரலில் கத்தியவன் தற்போது தன்மையாக பேசுகிறான் அல்லவா , அனைவருக்கு அது யாராக இருக்கும் என யோசித்தனர். வேரு யாரு அவனின் காதல் மனைவி அமிழ்தினி தான்.
” எப்போ வருவிங்க ” என மறுபுறம் காதல் குரலில் கேட்க
” இன்னும் கொஞ்சம் நேரத்தில வந்திடுறேன் டா ” என்று தன்னவளுக்கு அதே தன்மையான குரலில் பதிலளித்தான். அமிழ் அமைதியாக இருக்க , அழைப்பை துண்டிக்க போனவன் காதில் ‘ச்ச்’ என்ற முத்த சத்தம் கேட்டது . இது தான் ஆனந்த் அனைவரிடமும் மிருகமாய் அரக்கணாய் இருப்பவன் அமிழிடத்தில் மட்டும் தன்மையாக நடந்து கொள்வான் . அத்தனை பெண்களை பார்த்தும் வராத உணர்வு அமிழிடத்தில் மட்டுமே அவனுக்கு தோன்ற, அதை இழக்க விரும்பாதவனாய் தான் எப்போதும் நடந்துக் கொள்வான். அதே நேரத்தில் இந்த தோல்வியையும் அவன் மனம் ஏற்காமல் வேறு வழி இருக்கிறதா என மூளைக்கு வேலையை கொடுத்தவன் அங்கு இருந்த அனைவரையும் முறைத்து விட்டு தன் பாப்பாவை காண கிளம்பினான்.
சித்தார்த் வீடு:
வீட்டில் இருந்த வேலைகளை முடித்து வந்த தன் மாமாவையும் அத்தையும் அழைத்தவள் தான் சமைத்த உணவுகளை பறிமாறினாள். எவ்வளவு தனக்கு கஷ்டம் வந்தாலும் அதை தன்னை நேசிப்பவர்களிடம் அன்று எவரிடமுமே காட்ட விரும்பாத ரகமே மகி . அழுது அழுது ஓய்ந்தவள் ஒரு குட்டி உறக்கத்தை போட்டு எழுந்திருந்தாள், பிறகு மீண்டும் சௌமியாவிற்கு ஒரு போனை போட்டு வேலையை பற்றி கேட்டுவிட்டு, தன்னை சமன்படுத்தியவள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவி கொண்டு இரவு உணவை சமைக்க தாயாரானாள். இருவருக்கும் பரிமாறியவள் தனக்கு வழக்கம் போல ஒரு தட்டில் உணவை வைத்து கொண்டவளாள் ஒரு வாய் கூட வைக்க முடியவில்லை. வாய் அருகே கொண்டு செல்லும் போதெல்லாம் சித் கூறிய ‘ பணத்திற்காக தான கல்யாணம் செஞ்ச ‘ என்றதே நினைவுக்கு வர, மகியால் சாப்பிட முடியவில்லை .
” என்ன மகி சாப்பிடாம தட்டுல கோலம் போடுற ஹா ஹா ” என்று வாசுதேவன் கேட்க , அதற்கு ஒரு புருவத்தை சுறுக்கி செல்லமாக முறைத்தாள்.
” வேற எதுக்காக இருக்கும் என் பையன் அதான், அவளோட புருசன் சாப்பிடாம சாப்பிட பிடிக்கல போல ” என ராதா கூற, கணவரும் மனைவியும் மருமகளை கேலிசெய்து சிரிக்க, அவர்களை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் . அவளின் வலி புரிந்தால் இருவரும் இப்படி நிம்மதியாய் சாப்பிட முடியாது என அவர்களுக்கு தெரியவில்லை, தெரிய படுத்தவும் மகி விரும்பவில்லை . தன்னை கட்டுப்படுத்தி மீண்டும் உணவை பினைந்து வாய் அருகே கொண்டு செல்ல , லேசான காலடி சத்தத்துடன் வந்தாள் மகியின் மன்னவன் . நிமிர்ந்து பார்க்காமலே யாரென புரிந்து கொண்டவளின் கை மீண்டும் தட்டை நோக்கி உணவை வைத்தது.
” வா டா இவ்வளவு நேரமா … உட்காரு அம்மா சாப்பாடு பரிமாறுறேன் ” என்று எழ போனவரை தடுத்தாள் மகி .
” நீங்க சாப்பிடுங்க அத்தை நா அவருக்கு வைக்குறேன் ” என வேகமாக தன் கையை கழுவி கொண்டு வந்தவள் அவனுக்கு உணவை வைத்தாள். மகியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இல்லாமல் குனிந்து இருந்தவனுக்கோ அவள் எதுவும் நடக்காதது போல எப்போதும் போல் நடந்து கொள்வது மேலும் மேலும் அவனை உடைத்தது . அவன் குற்ற உணர்வில் துடிக்க, அவனை பெற்றவர்களோ தன் மகன் மாற்றம் அடைந்து விட்டான் என்றும் இருவரும் சீக்கிரம் மாறி விடுவார்கள் என மகிழ்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.
” எப்போ சித்தார்த் வேலையை ஆரம்பிக்க போற …அரசு ஒப்புதல் குடுத்திட்டாங்னு சந்துரு மதியம் சொன்னான் ” என்று அவனை பெற்ற தந்தை உற்சாகமாக கேட்க , அதற்கு சந்தோச பட வேண்டியவனோ சாதாரணமாக இருந்தான் .
” இன்னும் ரெண்டு நாள்ல ஸ்டார்ட் பண்ணிருவேன் பா ”
” உன்ன நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு சித்தார்த் … நல்லபடியாக நடக்கும் கவலை படாம இரு ” என்று அவனின் தந்தையாக சிறு கர்வத்துடன் கூறினார். அவருக்கு ஒரு புன்னகையை கொடுத்தவன் மீண்டும் தலையை தொங்க போட்டு உண்ண ஆரம்பித்தான் . இதனை கேட்ட மகிக்கோ அவ்வளவு மகிழ்ச்சி இத்தனை வருடம் தன்னவன் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்து விட்டதாய் கடவுளுக்கு ஒரு நன்றியை மனதில் செலுத்தினாள் .
” மகி நீயும் சாப்பிடு அதான் சித்தார்த் சாப்பிட ஆரம்பிச்சுடான்ல ” என்று ராதா மீண்டும் கூற , தன்னவன் காலையில் கூறிய வார்த்தைகள் அவளை வாட்டியது. மறுபடியும் தட்டில் கோலம் போட்டவளாய் வாயை திறந்தாள்
” அத்தை நாளைல இருந்து என் பிரண்ட்ஸ் கூட காலேஜ் போகவா அத்தை ” என கூறி இருவரையும் பார்க்க , இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி அவர்களுக்குள் சந்தேகமாய் இருந்தது, ஒருவேளை தங்கள் மகன் தான் ஏதோ கூறிவிட்டானோ என இருவரும் அவனை பார்க்க , சித்தோ மகியை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
” பிளீஸ் அத்தை நா என் பிரண்ட்ஸ் கூட போறேனே..அவங்க கூட போனா எனக்கு ஜாலியா இருக்கும் அத்தை . நா இந்த வீட்டு மருமகனு கண்டிப்பா தெரியாத அளவு முகத்தை மறைச்சிட்டு போறேன் ” என வேண்டுதலாக கேட்கும் மகியிடம் என்ன கூறுவது என தெரியாமல் முழித்தனர்.
” ஓ மேடம் இதை சொல்ல தான் அரைமணி நேரமா சாப்பிடாம கோலம் போட்டிங்களோ ” என சற்று கராராண குரலில் வாசுதேவன் கேட்க , மகியோ தலையை மண்ணில் புதைத்துக் கொண்டாள் . சித்திக்கு நன்றாக புரிந்தது அவன் காலையில் கூறியதற்கு தான் அவனுடைய மகிமா இவ்வாறு செய்கிறாள் என்று புரிந்து கொள்ளாத அளவு ஒன்றும் அவன் முட்டாள் இல்லையே !.
” அதுக்கு ஏன் மகி முகத்தை உம்முனு வச்சுகிற , நீ போடா ” என்று ராதா கூறியதும் சிரித்து அவரை கட்டிக் கொண்டவள், வாசுதேவனை பார்க்க அவரும் தன் தலையசைத்து சம்மதம் அளித்தார் .
” பார்த்து பாத்திரமா போவேனு வாக்கு குடுத்தா நா அனுபதிப்பேன் ” என்று அவர் கூறியதும் மேலும் கீழும் சம்மதமாக தலையை ஆட்டி உண்மையாக மகிழ்ந்தாள் . சித்தும் எதுவும் கூறாமல் சாப்பிட ஆரம்பித்தான். மூவரும் சாப்பிடுவதை தொடர , ஏனோ மகியினாள் சாப்பிட முடியவில்லை, அவளுடைய ஒரு திட்டம் எப்படியோ நடந்து விட்டது . நாளை மட்டும் தனக்கு வேலை கிடைத்தாள் போதும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் .
“என்ன மகி சாப்பிடுற ஐடியா இல்லை போல ” என்று அவள் தலையில் கொட்டி முறைத்த ராதாவை பார்த்து தன் மொத்த பல்லையும் காட்டியவள்
” எனக்கு பசிக்கல அத்தை அதான் என்று, உதட்டை பிதுக்கி, நா அப்புறம் சாப்பிடவா ” என்று கண்ணை சிமிட்டி குறும்புடன் கூறுபவளை பார்க்க சிரிப்பு தான் வந்தது . அவர் லேசாக சிரித்து விட அப்படியே கையை கழுவி எஸ் ஆகிவிட்டு , தங்களின் அறைக்கு வந்தாள் . அவளுக்கு தானே தெரியும் பசிக்கவில்லையா இல்லை தன்மானம் தடுத்ததா என்று . எப்போதும் போல் மெத்தையில் உறங்க விரும்பாதவள் சித் அறையில் இருந்த சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டாள் .
சித் அறை :
கீழே மூவரும் சாப்பிட்டு விட்டு அவர் அவர் அறைக்கு செல்ல , அவன் அறைக்கு வந்தோ சித்தோ மகி வேறு இடத்தில் படுத்திருப்பதை பார்த்து மனம் புலுங்கியது . அவளிடம் எப்படி பேசுவது என்றும் தெரியாமல் மகியின் ஒதுக்கம் வேறு அவனை ஏதோ செய்தது . என்ன செய்வது என்றே புரியாமல் வந்து அவனிடத்தில் படுத்தவன் தனக்கு முதுகை காட்டி சோஃபாவில் உறங்கும் மகியையே பார்த்திருந்தான் . திரும்பி படுத்திருந்தவளுக்கோ சத்தமில்லாமல் விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது .
பிரியாமல் தொடரும் 😍💋…
உங்களின் புல்லட் வெடி 🎉
Panurathala pannitu ipo feel panna enna artham sidh epdiyo mahi Yoda plan workout agituchu ini job ku poo va Mahi…ini tha semma ya irukum ✨waiting for next epi❣️❣️
நன்றி சகி 🥰🥰🥰
Summa pesu sidhuu pesuna ella prblm solve aagu❤️
நன்றி சகா 🥰🥰
Mahi romba paavam 😭😭
நன்றி சகி 🥰🥰
Na neneche sid oda opp party anandh dhaan nu athey pola nadanthiduchu😌😌😌😌😌
குட் கெஸ் …நன்றி சகி 🥰🥰😁❤️
பேசக்கூடாதது எல்லாம் பேசிட்டு இப்போ என்ன ஃபீலிங்கு…உன்ன லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் எத்தனை பேச்சு உங்கிட்ட இருந்து அவள் கேக்கனும்னு இருக்கோ….
அடேய் ஆனந்து…தெரியும்டா நீ ஒரு மங்கூஸ் மண்டையன்னு….
தைரகயம் இருந்தா நேரா மோதுடா….அத விட்டுட்டு பின்னாடி இருந்து குழிபறிக்குற….
அமிழ் அவள் வீட்டுல வந்து பேச சொல்லியும் நீ பேசாம இழுத்துடிச்சு கல்யாணத்துக்கு முதல் நாள் வந்து அவள கூட்டிட்டு போனது இதுக்கு தானா?
அப்படி பண்ணா சித் கல்யாணம் நிண்ணிடும்…எல்லாரும் அவன அவமானப்படுத்துவாங்க…அதுல இருந்து வெளிய வர அவனுக்கு நாளாகும்…அதுக்குள்ள அவனோட ஆராய்ச்சிய இல்லாம பண்ணிடலாம்னு திட்டம்போட்டு தானே இந்த வேலை பாத்திருக்க….
த்தூ….இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்தலாம்…..
சித்துக்கு மட்டும் தெரியட்டும் நீ பண்ற வேலை எல்லாம்….அப்புறம் உனக்கு இருக்குடி கச்சேரி…..
நினி நன்றி சகி 🥰🥰😁❤️
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.
Thankyou so much pa 🥰🥰❤️
Unaku innum venum da…. . Ipo feel panni enna Panna pora…. Po poi thongu nalaki epdi avala hurt pannalamnnu yosi….
😑😑😑🤕