Loading

அத்தியாயம் பதினேழு

மருத்துவமனை:

உள்ளே நுழைந்தவனை பார்த்ததும் அனைவரும் வாயை மூடிக் கொண்டனர். வந்தவன் மகியை பார்த்து முறைக்க , அவளோ தலை குனிந்து கொண்டாள். 

” சந்துரு இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்க இருப்ப , உன்ன மாறி நா சும்மா இருக்கல நிறைய வேலை இருக்கு வா போலாம் ” என்று கடு கடுப்பாக பேசினான்.

அனைவருக்கும் தெரியுமே  அவன் யாரை  கூறுகிறான் என. கூறியவன் வெளியே செல்ல , சந்துரு தான் மனதில் தன் நண்பனை திட்டிக் கொண்டு இருந்தான்

” மகி நிஜமாகவே இவன லவ் பண்ணியா இப்படி சிடு சிடுனு பேசுறான் ” என்று சந்துரு கலாய்க்க

” சந்துரு கேட்க போகுது அமைதியாக இருங்க ” என்று அடுத்தவர்களிடம் தன் கவலையை காட்ட விரும்பாமல்  ஒரு சின்ன புன்னகையை கொடுத்வள் சந்தியாவிடம் சென்றாள்

” சரி டி  நா கிளம்புறேன்  எதையும் நினைச்சு உன்ன வருத்திக்காத  உன் காதலுக்கு தகுதி இல்லாதவங்கல நீ நிமிர்ந்து கூட பார்க்க கூடாது சரியா ” என பல அட்வைஸ்களை வழங்கியவள் வெளியே சென்றாள் . ஸ்ரீயை பத்தி தெரிந்தவளுக்கு தன் தோழியை காதல் எண்ணும் பெயரில் விளையாடி மீண்டும் வந்து நாடகம் ஆடுபவனிடம் சந்தியா சென்று விட கூடாது என்று உறுதியாய் இருந்தாள்  மகி.  வெளியே செல்லாமல் சந்துருவும் சந்தியா அருகில் வந்தவன்

” ஆமாங்க காதலுக்கு தகுதி  இல்லாதவங்கல காதலிக்க கூடாது ,  இந்த காதல் தோற்று போனதுனால நீங்க மறுபடியும்  வேற ஒரு காதல் வந்த அதை வெறுத்திடாதிங்க ,  என்ன மாறி காதலோட அருமை தெரிந்தவன் வந்து காதல சொன்னா ஏத்துக்கோங்க சரியா ” என்றும் மிரட்டும் தோனியோடு சொல்ல , அவனை  மிரட்சி நிறைந்த விழிகளோடு ஏறிட்டாள் .

” என்ன சரியா ” என்று மீண்டும் குரலை உயர்த்த , சந்தியாவின் தலை தானாக ஆடியது .

” சரி அப்போ ஐ லவ் யூ ” என்று அவளின் கன்னம் தட்டி செல்ல ,  அதிர்ச்சியாக சந்துருவின் முகத்தை பார்க்க சௌமியாவோ வாயை பிளந்து விட,  கெத்தாக தன் கூலிங் கிளாசை மாட்டியவன் வெளியே சென்றான் .

சந்தியாவின் காதலை பார்த்ததும் தனக்கும் இவ்வாறான உண்மை காதல் வேண்டும் என்று தான் தோன்றியது , ஒரு காதலின் அருமை அதை இழந்தவருக்கு தானே புரியும் . சந்தியாவின் காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும் , மிரட்டி காதலை கூறிவிட்டான் .

தன் பங்கிற்கு கொஞ்சமாவது  தோழியின்  மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என தோன்றியது தான் ஆனால் அவளிடம் எப்படி இருக்கும்,  சித்திடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது . சும்மா இருந்தாலே ஆயிரம் குற்றம் கூறுபவன் இன்று பணம் வேண்டும் என்று கேட்டாள் என்ன என்ன கூறுவானோ?  சந்துருவும்  ஒரு நல்ல நண்பனாக தான்  பேசுகிறான் இருந்தாலும் அவனிடமும் கேட்க முடியவில்லை . சரி எப்படியும் பணம் வேண்டும் என்று தயங்கி கொண்டே சித் அருகே சென்றவள் அவன் அருகே அமைதியாக நிற்க ,

” போலாமா ” என்ற வார்த்தையே அவ்வளவு கடுமையாக கேட்டான் .

” அது …அது காசு…கொஞ்சம் வேனும் ” என்று கேட்டும் விட, அவளை கேலியாக ஏறிட்டவன்

” என்கிட்ட இல்லை ” என்று கூறி அவன் பாட்டுக்கு கிளம்பி விட்டான் .மகிக்கு தான் ஒரு மாறி ஆகிவிட்டது .

‘ சே கேட்காமலே இருந்திருக்கலாம் ‘ என்று தன் மனதுக்குள்ளே திட்டிக் கொண்டாள் . பணம் கட்டும் இடம் சென்றவள் தன் தங்க வளையலை கலட்டி அவர்கள் முன் வைத்தாள் . அவர்கள் வாங்க மாட்டார்கள் என்று நன்றாக தெரியும் இருந்தாலும் மனது கேட்கவில்லை  தோழியை இப்படி விட்டு செல்ல , இதுவே அவளின் தாயும் தந்தையும் இருந்திருந்தால் இந்த நிலையில் விட்டு செல்வார்களா என்ற எண்ணமே தோன்றியது மகிக்கு . 

” சிஸ்டர்ஸ் கேஷ் இல்லை  சந்தியா பேசன்ட்க்கு பில் பே பண்ணனும் கோல்ட் வாங்குவிங்களா ” என்று கேட்டாள் உள்ளே போன குரலில்  . எப்போதும் தைரியமாக அனைவரையும் எந்த வித பயமும் இல்லாமல் பேசுபவள் கொஞ்ச நாட்களாக எல்லா குணங்களும் மாறி இருந்தது. அந்த சிஸ்டர் மகியை ஒரு மாறி பார்த்து

” அவங்களுக்கு இப்போ தான் மேம் பே பண்ணாங்க, அதோ அவர் தான் ” என்று சந்துருவை கை காட்டினாள் ,அந்த  கவுண்டர் குட்டி .

இப்போது தான் மகிழ்ச்சி மீண்டும் மகி முகத்தில் வந்தது , தன் வளையலை அனிந்து கொண்டவள் சந்துருவை நோக்கி சென்றாள் .  மகி பணம் கேட்க போவது எல்லாத்தையும் பார்த்தான் , கொஞ்சம் கெத்து காண்பிக்கலாம் என்று வராத போனை காதில் வைத்துக் கொண்டு மகி அருகில் வந்தும் அவளை பார்க்காதது போல் சீன் போட ஆரம்பித்தான்

” நா இல்லேனா ஒரு வேலை கூட பண்ண மாட்டிங்களா … சரி நா சொல்லற மாறி பண்ணுங்க ” என்று ஆள் இல்லாத கடையில் டீயை ஆத்த , மகியோ சந்துருவிற்கு நன்றி தெரிவிக்க காத்திருந்தாள் . அவன் போட்ட சீன் வீன் போகும் படி சந்துருவின் அழைபேசி சத்தம் எழுப்ப மாட்டிக்கொண்ட சந்துரு திரு திரு திருவென முழிக்க, மகியோ இடுப்பில் கைவைத்து முறைத்து பார்த்தாள் .

” ஓஓ   இவ்வளவு நேரம்  போன் பேசுனிங்க அப்படிதானே சந்துரு “

” அது ஈஈஈஈ” என்று தன் மொத்த பல்லையும் காட்டினான் .

” ரொம்ப தேங்க்ஸ் சந்துரு  ” என்று சந்தியாவிற்கு பணம் கட்டியதற்கு கூற,

“என்னோட லவ்வர்க்கு நான்  பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன் ” என்று கண்ணடித்து கூறிச் செல்ல, அதில்  மகி வாயை பிளந்து அவன் பின்னே ஓட , சந்துருவோ வேண்டும் என்றே நடையின் வேகத்தை கூட்டி கார் இருக்கும் இடம் சென்றான் .

” ஏன் டா வர்றதுக்கு இவ்வளவு நேரமா ” என்று சித் இருவரையும் முறைக்க,

‘ இவன் ஒருத்தன் மூஞ்சிய எப்போ பாரு இஞ்சி சாப்ட ஏதோ மாறி வச்சுப்பான் ‘ என்று மனதில் மட்டும் தான் நினைத்தான் . சித்திடம் பல்லை காட்டியவன் பின் இருக்கையில் சென்று அமர‌, மகியும் அவன் அருகில் அமர்ந்தும் சித் காரை உயிர்பித்தான் .

” மகி கண்டிப்பா நீ எல்லாம் கடைசி வரை சிங்கிள் தா ” என்று கிசுகிசுப்பாக மகியின் காதல் கூற , அவளோ புரியாது முழித்தாள் .

” உன்ன அவன் கூட  முன்னாடி உட்கார வைக்க பிளான் போட்டு நா பின்னாடி வந்தா நீயும் வர ” என்று தன் தலையில் நங்கென்று அடித்துக் கொண்டான்.

அவனுக்கும் தன் மொத்த பல்லையும் காட்டியவள் .

” சந்துரு நீ எனக்கு ஒரு ஃப்ரண்டுனு மறந்திட்டு வேற ஏதோ வேலை பன்ற மாறி இருக்கு ” என்று சந்துருவை வாறி கெக்க பெக்க என சிரிக்க

” என் தோழிக்காக என் இன்னுயிறையும் தருவேன் ” என்று டயலாக் அடித்தான் சந்துரு.

” சரி அத விடுங்க  இப்போ ஹாஸ்பிடல் என்ன சொன்னிங்க “

” என்ன சொன்னேன் …” என ஒன்னும் தெரியாத பாப்பாவை போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

” அது தான் சந்தியாவ ” என இழுத்ததும் அவளை கை நீட்டி தடுத்தவன்

” ஒரு பையன் கிட்ட எப்படி லவ் வந்துச்சுனுலாம் கேட்க கூடாது . யாரு மேல வேனும்னாலும் லவ் வரலாம் .எனக்கு சந்தியா மேல் வந்திருக்கு, அந்த ஸ்ரீ உண்மையா இல்லாமலே இவ்வளவு காதல கொட்டறவ , ஒரு உண்மையான காதல் உணராம போயிர கூடாது. அதுக்குனு நான் பரிதாபம் படல… எனக்கு சந்தியா காதல் வேனும்னு தோனுச்சு அதான் லவ்வ சொல்லிட்டேன் ”  என சந்துரு இயல்பாக கூற , மகிக்கு தான் சந்துருவிற்கான மனதில் உள்ள இடம் மேலும் உயர்ந்தது . பெருமையாக அவனையே பார்த்தாள், அதையும் கண்டு கொண்டவன்

” இதோ பாரு மகி இப்போ நீ சந்தியா ஓட  லவ்  இல்லைனு ஆகிடுச்சு  நீ அவளுக்கு வேற ஒரு வாழ்க்கை அமையனும்னு நினைப்பியா இல்ல இப்படியே காலம் எல்லாம் சோகமா இருக்கட்டும்னு நினைப்பியா “

”  நா அவளுக்கு புரியவச்சு கண்டிப்பா வேற ஒரு பையன பார்த்து நானே கல்யாணம் பண்ணி தான் வைப்பேன்  ” என்று யோசிக்காமல் பதிலுறைத்தாள் .

” சோ நீ வேற ஒரு வாழ்க்கையை உன் தோழிக்கு அமைச்சு தருவ “

” ம்ம்ம் ”  என்பது போல் தலையை ஆட்டினாள்

“அதே தான் நானும் சொல்லுறேன் சித்க்கு வேற ஒரு வாழ்க்கை அமையனும்னு நினைக்கருதுல என்ன தப்பு .அவன் காதல் இப்போ இல்ல …சோ நீ அவன உன் காதல் கொண்டு சரி பண்ணுன்னு நா சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு ” ‌என்ற கூற்றுக்கு மகி அமைதியாக அமர்ந்திருந்தாள் . மீண்டும் சந்துருவே தொடர்ந்தான்

” சோ நீ என்ன பண்றேனா, இனி சித் அ லவ் பன்ற ” என்று குதுகலமாக கூற , அவளும் சிரித்து விட்டாள் .

” ம்ம் எனக்கு புரியுது சந்துரு ..இனி பாருங்க ” என்று அவளும் கூறி சிரித்தாள் .

” என்ன‌ மகி உன் அன்பு கணவர் கண்ணாடி வழியா பார்த்து முறைக்கிறாரு ” என்று கூற

” உங்களுக்கு தெரியாது சித் நா பேசுனா… ஏன் சிரிச்சா கூட என்ன பார்த்து முறைச்சிட்டே இருப்பாரு ” என்று தன் முகத்தை சோகமாக வைத்தாள்

” இல்லையே மகி இப்போ முறைக்கிறது பொறாமையில இருக்குறது மாறி தெரியுதே ” என்று சந்துரு கூற

” அது ஒன்னு தான் குறைச்சல் ” என்றவள் தன் உதட்டை சுழித்தாள்.

உண்மையிலே சித்தின் விழிகளுக்கு மட்டும் கண்ணகி பவர் இருந்திருந்தால் இருவரையும் எரித்திருப்பான் அவ்வளவு நெருப்பு அவன் கண்களில் எதற்கு என்று அவனுக்கு மட்டுமே தெரியும் . இருவரும் சிரித்து சிரித்து பேச இங்கே ஒருவனின் வயிறு தக தகவென எரிந்தது .  தன் நண்பனை நன்கு அறிந்த சந்துருவிற்கு புரிந்து விட்டது தான் மகியிடம் பேசுவது அவனுக்கு பொறாமையை தூண்டி விடுகிறது என. அதை நினைத்து மகிழ்ந்து, அவனை மேலும் கடுப்பேற்றும் விதமாக மகியுடன் பேஸ்ட் விளம்பரத்திற்கு வரும் கதாபாத்திரத்தை போல தன் முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி காட்டி சிரித்து சிரித்து பேசினான் , மகியும் அதை புரிந்து கொள்ளாமல் அவனுடன்  எப்போதும் போல சிரித்து பேசினாள் . பொருத்து பொருத்து பார்த்தவன் முடியாது போக

” சந்துரு நீ வந்து டிரைவ் பண்ணு எனக்கு முதுகு வலிக்குது ” என்றவன் சந்துரு சரி என்று சொல்லுவதற்குள்ளே காரை நிறுத்தி இறங்கி பின் கதவை திறந்து  சந்துரு இறங்க காத்திருந்தான் . தன் நண்பனையும் மகியையும் மாறி மாறி பார்த்து உதட்டுக்குள்  சிரித்தான். மகி திரு திருவென முழிக்க அவளை முறைத்து கொண்டு பின் இருக்கையில் அவள் அருகில் அமர்ந்தான் அவளது கண்ணா  .  பின்னாடி சித்திடம் இருந்தால் கண்டிப்பாக திட்டு வாங்குவோம் என்று நினைத்தவள் முன்னே சொல்லலாம் என முடிவெடுத்து

” சந்துரு ஒரு நிமிசம் இருங்க , நானும் முன்னாடி வரேன் ” என்று மகி கூற , சந்துருவிற்கு ‘ சரி இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு ‘ என மனதினுள் நினைத்துக் கொண்டான் . வந்து அமருமாறு தலை அசைப்பை கொடுக்க , அவளும் எழுந்தாளோ தவிற இறங்க முடியவில்லை . சந்துரு கண்ணாடி வழி புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க  , தன் கையை பார்க்குமாறு கண்களாளே சந்துருவிற்கு காட்ட , அப்போது தான் கவனித்தான் சித் மகியின் கையை பிடித்து அணைப்போட்டிருப்பதை . மகி பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சித்தை பார்க்க , அவள் கையை பிடித்திருந்தவனோ மகியின் முகத்தை பாராது

” சந்துரு நேரம் ஆகிடுச்சு கார் ஸ்டார்ட் பண்ணு ” என்று கட்டளையாக கூறினான் . தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன் காரை கிளம்பி சித் வீட்டிற்கு வண்டியை விட்டான் . கொஞ்சம் நேரத்தில் வீட்டை அடைந்தனர் அனைவரும் . சித் இறங்கி செல்ல , மகியோ சந்துரு சிரிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தாள்

” மகி பார்த்தியா உன் அன்பு கணவருக்கு எவ்வளவு பொறாமைனு “

” பொறாமைலாம் இல்லை நான் சிரிச்சா என் கண்ணாக்கு பிடிக்காது ” என்று உதட்டோறம் விரக்தியாக புன்னகையை படர விட்டாள் .

” சித் பத்தி எனக்கு தெரியும் மகி அவனுக்கு நான் உன்கிட்ட பேசுறது பொறாமை . நீ வேனும்னா பாரு சித் கண்டிப்பா உன் காதல் புரிஞ்சு உன்ன காதலிப்பான் ” என்று தன் நண்பனை நன்கு தெரிந்தவனாய் கூற , அப்படி நடந்தாள் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்காலாமே என்று நினைத்துக் கொண்டாள் . சந்த்ரு விடம் விடைபெற்று உள்ளே செல்ல நினைக்கையில் அவளை தடுத்தவன்

” மகி சொன்னதை கொஞ்சம் யோசித்து பாரு  உன் காதலால கண்டிப்பா உன் கண்ணாவ மாத்த முடியும்” என்று கூற

” கண்டிப்பா  இனி ரோமியோ மகிய பார்பிங்க ” என்று அவனுக்கு பதில் உரைத்து , தானும் சிரித்துக் கொண்டு உள்ளே சென்றாள் . தன் அத்தையிடம் தோழியின் உடல் நலத்தை கூறி விட்டு தங்களின் அறைகளுக்கு சென்று அமைதியாக ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் .

இப்படியே   தாமரை இலையின் ஒட்டாத நீரை போல இருவருக்கு இடையே உள்ள உறவு சென்றது . மகி எவ்வளவு முயற்சி செய்தாலும் சித் மசிவதாய் தெரியவில்லை.  அவ்வபோது ஏதாவது செய்து திட்டு வாங்கி கொண்டே இருந்தாளும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் கண்ணாவை எப்படியாவது மாற்றி விட இல்லை இல்லை தன் காதலை அவனுக்கு புரியவைக்க வேண்டும் என நினைத்தாள். வேறு வழி இல்லாமல் எரிச்சலுடனே  தன் தந்தை வாசுதேவனின் அறிவுரை படி சித்தே தினமும் காலையில் மகியை இறக்கி விடுவதும் மதியம் உணவு உன்ன வரும் போது கல்லூரியில் இருந்து மகிமை கூட்டிவிட்டு வருவதுமாவும் இருக்க, அதை கெடுக்கும் விதமாய் அமைந்தது ஒரு நாள்.

 

பிரியாமல் தொடரும் 😍💋..

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
21
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  13 Comments

  1. Chandhru semma comedy 😂😂😂
   Chandhru kullaiyum oru romeo irukan pa 😍😍😂😂

  2. Love feel irukaa?
   Ahhh feel varuthu varuthuuu😍😍😍❤️❤️❤️❤️❤️

  3. Ini ore loves tha pola 💕❤️😍 waiting for next epi ❣️❣️

  4. Janu Croos

   சந்ரு அடேய்…என்னடா இது….டூ மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி வந்த….அட்வைஸ் பண்ண ….ப்ரோபோஸ் பண்ண…கெளம்பிட்ட…..மெய்யாலுமே நீ யுனிக் பீஸ் தான்….

   என்ன சித்து….உனக்கு தான் மகிய புடிக்காதே….அப்புறம் அவள் சந்ரு கூட பேசி சிரிச்சா என்ன….உனக்கு ஏன் அடிவயிறு திபு திபுனு எரியுது…ஓஹ்….பொஸஸிவ் ஆ….வரட்டும் வரட்டும்…..நல்லா வரட்டும்…அப்படியாவது மகி லவ் உனக்கு புரியுதானு பாக்கலாம்…..

  5. அருமையான பதிவு❤❤ சித்தின் பொறாமை க்யூட் 🤣🤣 மகி வாழ்க்கைல நல்லது நடக்கட்டும்💝💝