Loading

அத்தியாயம் பதினான்கு

கல்லூரி பூங்கா

   நொடிகள் நிமிடங்களாய் மாறி,  அந்த நிமிடங்களும் மணிநேரமாய் மாறியதே தவிற  மகியை காண அவளுடைய கண்ணா வரவில்லை . மணி ஐந்தும் ஆகி விட இன்னும் ஆர்வம் கூட காத்திருந்தாள் . இப்போது படபடப்பு வந்து ஒட்டிக் கொள்ள   ,  சிறிது நேரத்தில்  மெல்ல மெல்ல அந்த படபடப்பும் குறைந்து அழுகையாய் அவளது கயல்விழிகுள் இருந்தது.  கல்லூரி நேரம்  ஏற்கனவே முடிந்து இருந்தது,   மகிகாக காத்திருந்த அவளது  தோழிகள் அவள் இருக்கும் இடத்திற்கு வந்தனர் .  கொஞ்சம் முகம் சுருங்கி இருந்த தன் தோழியை பார்த்தும் புரிந்துக் கொண்டனர் சித்தார்த் வரவில்லை என்று . 

‘ நா நினைச்சது நடக்க கூடாது ‘ என்று மனதினுள் சந்தியா நினைத்துக் கொண்டு சந்தியா , மகியிடம் சகஜமாக பேச நினைத்தாள் 

” மகி வீட்டுக்கு கிளம்பலாம் வா ” என்று அழைக்கும் சத்தம் மகியின் செவிகளை எட்ட வில்லை . அவள் தோளை தொட்டதும் உணர்வு வந்தவளாய் தன் தோழிகளை பார்த்து சிரிப்பை முகத்தில் பூசிக் கொண்டாள் 

” மகி கிளம்பலாமா ” 

” கண்ணா இன்னும் வரல ” 

” சரி அதான் அவன் நம்பர் இருக்கே போன் பண்ணி கேலு ” 

” இல்லை  கண்டிப்பா வந்துறேனு சொன்னான் ” 

” டைம் பாறு  வா வீட்டுக்கு போவோம் ” 

” இல்லை சந்தியா  நீங்க போங்க இன்னும் கொஞ்சம் நேரம் பாக்குறேன்  ” 

” அது …அது ..” சௌமியா கூறும் போது , மகியை நன்கு உணர்ந்தவளாய் சந்தியா அவளை தடுத்தாள் .

” லேட் பண்ணாம  வீட்டுக்கு போ ” என்று சந்தியா கூற , ஒரு போலி சிரிப்புடன் தலையை ஆட்டிகொண்டாள் . இருவரும் கிளம்பி  விட ,  நேரம் ஆக ஆக மகிக்கு ஒரு பயம் வந்தது தன் கண்ணா வருவான இல்லையா என்று அல்ல , ஒருவேலை தன் கண்ணாவிற்கு ஏதேனும் ஆகிவிட்டாதா  என்று மட்டுமே . அவள் மனம் தான் அடித்துக் கூறியதே தன் கண்ணா தன்னை காதலிக்குறான் என்று . தன் மனதை அமைதி படுத்தி விழிகளை சுழல விட்டாள் . மணி ஏழை தொட்டு இருக்க இப்போதும் நம்பிக்கை போக வில்லை மகிக்கு . 

___ 

  அங்கு அமிழை பின் தொடர்ந்த சித்தோ அவள் வீடு வரை சென்று வீட்டு முகவரியை தெரிந்துக் கொண்டான் 

‘ இவ்வளவு நாள் என்ன அழைய வச்சதானே  நாளைக்கு பாரு நா உனக்கு சர்பிரைஸ் தரேன் ‘ என்று தனக்கு தானே கூறி கொண்டவன் தன் வீட்டை அடைந்தான் . சிரிப்புடன் வரும் தன் மகனை பார்த்து வாசலிலே வழி மறைத்தார் ராதா

 “என்ன டா எல்லாம் ஓகே வா” 

அவனும் சிரிப்புடனே  ” அவள பார்த்திட்டேன் மா  நாளைக்கு பொண்ணு  கேட்க போவோம் அப்பா கிட்ட சொல்லிருங்க ” 

ராதா ” என்னது நாளைக்கா ?  அவளுக்கு தெரியுமா ” 

சித் ” ஆமா மா , அவளுக்கு தெரியாது  சர்பிரைஸ் கொடுக்க போறேன்  எவ்வளவு நாள் காக்க வச்சிட்டா ” என்று ஒரு பெரு மூச்சை விட்டவன் தன் அறைக்குச் சென்றான் . 

____

     தன் மகள் வரும் நேரம் கடந்து இருக்க செல்வியும் கதிரவனும் தான் சற்று பதற்றம் கொண்டனர் . அமிழுடனே மகியின் கைப்பையுடனே செல்பேசியும் வந்து விட  , செல்விக்கு  தான் பயமாக இருந்தது . கதிரவன் நிலைமையை உணர்ந்து செல்வியை அமைதி படுத்தி மகியின் தோழி சந்தியாவிற்கு அழைத்தார் . 

” சந்தியா மகி உங்க கூட இருக்காளா மா ” என்று எடுத்ததும் கேட்டதும் சந்தியாவிற்கு புரிந்துவிட்டது . மகி வீட்டிற்கு இன்னும் போக வில்லை என்று . அவரை வருத்த நினைக்காமல் 

” ஆமா அப்பா  கொஞ்சம் புராஜெக்ட் வர்க் அதான்  இன்னும் அரைமணி நேரத்தில வந்துருவோம் பா ” என்றதும் தான் கதிரவனுக்கு உயிரே வந்தது . அதை செல்வியிடமும் கூறி பதற்ற நிலையை தவிர்த்தார் . 

   இப்போது சந்தியாவிற்கு தான் நிலமையை எப்படி கையாள வேண்டும் என்று யோசனையாக இருக்க,  தன் வண்டியை உயிர்பித்து கல்லூரிக்கு தான் விட்டாள் . மகியின் நிலமை எவ்வாறு இருக்கும் என்று நினைக்கையிலே பயமாக இருந்தது . 

அளவுக்கு அதிகமாக நம்பிக்கையில் காதலித்து விட்டாள் , ஆனால் இப்போது அவள் மனது என்ன பாடு படும் என்று புரிந்தது சந்தியாவிற்கு . பக்குவமாக கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் இருக்கும் இடம் செல்ல , அவர்கள் போகும் போது எங்கே அமர்ந்தே இருந்தாலோ அங்கேயே தான்  முகம் அப்பட்டாமாக சோகத்தை வாங்கி கொள்ள அமர்ந்து இருந்தாள் . அவள் அருகில் சென்று நின்றதும் மகி நிமிர்ந்து பார்த்தாள் .

” இன்னும் வீட்டுக்கு போகாமா இங்க என்ன பண்ற , அப்பா பயந்து போய் எனக்கு போன் அடிச்சாறு ” என்று கடிந்துக் கொள்ள 

” கண்ணா  இன்னும் வரல ” என்று கூறும்போதே வார்த்தைகள் உடைந்து வெளியே வந்தது .

” கண்ணா… கண்ணா…  கண்ணா … இப்போ வாய மூடிட்டு நீ வீட்டுக்கு போகல அறைஞ்சிடுவேன் ” என்று சந்தியா கத்தி  விட்டாள்,   எத்தனை முறை கூறி இருப்பாள் இந்த வேதனை வரக்கூடாது என்று தானே காதலை கூறிவிட்டு காதலித்து தொலை என்று தலைபாடாய் அடித்துக் கொண்டாள் . ஆனால் , இன்று எது நடக்கக் கூடாது என்று நினைத்தாலோ அதுவே நடந்து விட்டது . 

மகி அமைதியாக இருக்க , சந்தியா சற்று பொறுமையாக

” மகி கிளம்பு டைம் ஆச்சு பாறு  வா போலாம்  அடம்பிடிக்காத ” 

” இல்லை சந்தியா  கண்ணா வருவான் ” என்றாள் தேய்ந்த குரலில்  , 

” மகி என்ன அடிக்க வச்சிறாத   ஒழுங்கா எந்திரி  ” என்று அவளை கூட்டிக்கொண்டு இல்லை இல்லை இழுத்துக் கொண்டு போனாள் . மகியின் முகமே துவண்டு கிடக்க,  வருகின்ற கண்ணீரை எல்லாம் தனக்கு தானே சமாதானம் செய்து  விழிகளுக்குள் அடக்கி வைத்து இருந்தாள் . சந்தியா இழுப்பிற்கு பொம்மை போல் நடந்தாள் . சந்தியா மகியின் வண்டி சாவி கைப்பையுடன்  சென்று விட்டதை உணர்ந்து  தன் வண்டியில் ஏறச் சொல்ல 

” சந்தியா ஒரு அரைமணி நேரம் மட்டும் இருப்போமா ? என்  கண்ணா வரேனு சொன்னான் கண்டிப்பா வந்திடுவான் . பிலிஸ் டி கெஞ்சிக் கேட்குறேன் ” என்றாள் கண்கள் கண்ணீர் நிறைந்து இருக்க , மகியை என்ன சொல்லி புரியவைப்பது என்றே சந்தியாவிற்கு புரியவில்லை. 

தன் தோழியின் கெஞ்சல்களை பார்த்து சற்று மனம் இறங்கியவளாய் 

” ம்ம்ம் சரி போய்ட்டு வா ” என்று சந்தியா கூறியதும் தான் தாமதம் , மகி  குழைந்தை போல ஓடிச் சென்று அந்த தோட்டம் அருகில் காத்திருந்தாள் . காதலை பசுமையான  அழகான  இடத்தில் கூற வேண்டும் என்று நினைத்து தான் அவர்கள் கல்லூரியில் இருக்கும் அந்த பல வண்ணப் பூக்கள் இருக்கும் தோட்டத்திற்கு வர கூறினாள் . பூக்கள் பூக்கும் நேரம் தன் காதலை வெளிப்படுத்த என்னினாள் ,  ஆனால் இன்று அவள் அந்த பூக்களை பார்க்கும் போது அவையெல்லாம் மகியை  போல வாடி வதங்கி சுருங்கி இருக்க, அதனை பார்த்து விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள் . இன்னும் சித் வருவான் என்றே காத்திருக்கிறாள் மகி ,  அவள் கேட்ட அரைமணி நேரமும் தாண்டி இருக்க 

” மகி போதும் வா கிளம்பலாம் ” என்று இழுத்து அவளை அமர வைத்து கிளம்பினாள் சந்தியா . வண்டியில் செல்லும் போது அவள் விழிகளை  ஒரு ஏக்கத்துடன் சுழல  விட , அதை கண்ணாடி வழியாக பார்த்த சந்தியாவிற்கு தன் தோழியை பார்க்க கஷ்டமாக இருந்தது . 

மகியின் வீட்டை அடைந்து விட்டாள் ஆனால் மகி தான் ஏதோ யோசனையில் அப்படியே இறங்காமல் அமர்ந்து இருக்க 

” மகி … மகி  ” என்று உரைக்க கத்தியதும் தான் மகி தன்னை  மீட்டுக் கொண்டவள் இறங்கி போக பார்க்க, சந்தியா மகியின் கைகளை பிடித்து நிறுத்தினாள் 

” மகி அம்மா , அப்பா ஏற்கனவே டென்ஷன் ல இருப்பாங்க ,  கொஞ்சம் எப்பவும் போல முகத்தை வச்சுக்க  அப்பறம் எல்லாத்தையும் மறந்திடு ” என்று அந்த ‘ எல்லாத்தையும் ‘  அழுத்தி கூறி விட்டு சென்றாள் . சந்தியா கூறியது உணர்ந்து கொண்டாள்  மறக்க வேண்டும் என்று,  எல்லாத்தையும் மறப்பது பற்றி கண்டிப்பாக இல்லை , தன் தாய் தந்தையை பற்றி  மட்டுமே. கடினப்பட்டு  சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள் . 

” ஏன்டி நேரம் ஆகும்னா சொல்ல மாட்டியா  ” என்று பதற்றத்துடனும் கோபத்துடனும் கேட்க , 

” போன் இல்லை மா அமிழ் கொண்டு வந்துட்டா  இப்போ அவ கால் எப்படி இருக்கு ” 

” எல்லாம் உங்க அப்பா தர இடம் , அவ மாத்திரையை போட்டு தூங்கிறா வா சாப்பிட ” 

” இல்லை மா பசிக்கல ” 

” அது எப்படி‌ பசிக்காம இருக்கும்  ஒழுங்கா சாப்பிட வா ” என்று கத்த  , இது அனைத்தையும் கவனித்த கதிரவனோ 

” செல்வி விடு  மகி நீ போடா ” என்று கூறவும் , மகி அமைதியாக தன் அறைக்குச் சென்றாள் .

” என்னங்க எப்போ பாரு என்ன திட்டாமா … அவள கேளுங்க ” 

” கலச்சு போய் வந்துருப்பா  காலைல பேசிக்கலாம் ” என்று கூறி அவர்களும் தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர் . கதிரவன் கவனித்து விட்டார் மகியின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று , அதனாலே அதிகம் துருவாமல் மகியை அனுப்பி வைத்தார் . 

அறையில் சென்ற மகிக்கு பல மணி நேரமாய் அடக்கி வைத்த கண்ணீர் அவளின் தாமரை கன்னத்தை நனைக்க,  அமைதியாக  கண்ணீர் வடித்தாள் . சிறிது நேரம் அமர்ந்தவள் கண்ணில் அவள் ஸ்டிக்கி நோட் கண்ணீல் பட மேலும் அழுகை பீரிட்டது . மொத்தக் காதலும் கண்ணீர் கரைய ஆரம்பிக்க , இன்னும் அவள் மனம் தன் கண்ணா தன்னை காதலிக்குறான் கண்டிப்பா தன்னிடம் வந்தே சேருவான் என்று நினைத்து தன் கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டாள் . துடைத்தும் கண்ணீர் வடிய தன் போனை பார்க்க,  அவனை அழைக்க இப்போது நேற்று இருந்த பதட்டம் போய் வேதனை வந்திருந்தது . நேற்று  மகி இருந்த மனநிலை என்ன?  இப்போது இருப்பது என்ன? . தன் காதல் தோற்று விட்டதோ!!  என்று ஒரு ஓரம் அவள் மனது சத்தமிட , அதை அடக்கி வைத்தாள் .

” இல்ல… இல்ல… என் கண்ணா என்ன ஏமாத்த மாட்டான் , என் கண்ணா எனக்கு துரோகம் செய்ய மாட்டான் , அவன் என்னை தான் காதலிக்குறான் , ஏதாவது வேலையா இருந்திருக்கும்  கண்டிப்பா எனக்கு அவனே போன் பண்ணுவான் என் கண்ணா ” என்று பிதற்றிக் கொண்டு கண்களை துடைத்துக்  அழுகையை கட்டுப்படுத்த முயல , அதுவோ மகி பேச்சை கேட்காது அவளை  மீறி வடிய  அழுது கரைந்தாள் . எவ்வளவு சமாதானம் செய்தும் அவள் பேச்சை கேட்காமல் கண்ணாவின் மீது காதலை கொண்ட மனமோ கண்ணீரை தாரை தாரையாக கொட்டியது , தன் காஃபி நிற விழிகளை துடைத்தும் பயன் இல்லாமல் வழிந்தது .

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    15 Comments

    1. Chi pavom Mahi evolo wait panniyum athuku payen illa nu avalukku terilaye. en ipdi aluga vara maathirilam epi poduringa 🤧😖😭 nallaki vera aven etho surprise nu vera sonnan enna vaa irukum…………🤔🤔🤔 waiting for next epi❣️

      1. அச்சோ மகிய ரொம்ப
        அழுகவக்கிறிங்க .நாளைக்கு அவ முன்னாடியே அமிய சித் பொண்ணு கேட்டா மகி எவ்வளோ உடைஞ்சு போவா?

    2. Naanu aluka koodathunu paakure mudiyala thalaivareyy mudiyala 😶😶

    3. நாளைக்கு அவன் அமியே பொண்ணு கேட்பானே மகி இன்னும் என்ன ஆக போறாளோ😶😶😶😶😶

    4. Waiting for tomorrow surprise for both ma hi and amil…..🥺🥺💔💔❤️

    5. இந்த சித் சரியான அவசரக்குடுக்கை…சரியா புரிஞ்சுக்காம இப்போ அவன் பண்ணப்போறதால ஒருத்தி மொத்தமா உடைஞ்சுபோகப்போறது தெரியாம அவன் சந்தோஷமா இருக்கான்….

      இருந்தாலும் மகிக்கு இவ்வளவு சோதனை வரக்கூடாது….அவள் யாருக்கும் எதுவும் கெட்டது நினைச்சது இல்லை அவளுக்கு ஏன் இந்த நிலமை….

      1. Author

        நல்லது நடக்கும் சகி 🥰🥰🥰😁❤️

    6. Acho pavam mahi…. Sidh oru thadava confirm pannirukalam…. Avanala ellam sothappiruchu…. Yar ketta abvan kitta surprise…. Manga madaiya. ..