அத்தியாயம் பதிமூன்று
கல்லூரி :
இருவரும் வந்து சேர்ந்திருந்தனர் கல்லூரிக்கு , வந்ததும் நேராக தன் வகுப்பிற்கு செல்லாமல் பார்க்கிங் ஏரியாவிலே நின்று தன்னவனை பார்த்து ரசித்து விட்டாள் . இருவரும் ஒரே நிறத்தில் வந்திருப்பதை நினைத்து வாயெல்லாம் சிரிப்பு . அதனை தோழிகளிடம் சொல்வதற்கு தன் வகுப்பை நோக்கி புறப்பட்டாள் .
” மகி பேசிருப்பானு நினைக்குற ” என்றே சௌமி கேட்க , மகியை நன்கு அறிந்தவளாய்
” கண்டிப்பா பேசி இருக்க மாட்ட அவன பார்த்தாலே கை , கால் எல்லாம் பதட்டத்துல நடுங்கும் இதுல அவ பேசி காதல சொல்ல வாய்ப்பே இல்லை ..ஹா ஹா ” என்று இருவரும் சிரிக்கும் போதே , அவர்களின் பேச்சிற்கு சொந்தக்காரி வந்து அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள் .
” என்ன இரண்டு பேருக்கும் இவ்வளவு சிரிப்பு ” என்று எப்போதும் போல முகத்தில் சிரிப்பை பூசிக் கொண்டு கேட்க ,
” அதான் டி நீ கண்டிப்பா சித்தார்த் கிட்ட போன் பேசியிருக்க மாட்ட , அதைதான் சந்தியா அடிச்சு சொல்லுறா ..ஹி ஹி ”
தன் தோழி தன்னை நன்கு அறிந்து வைத்திருக்கிறாள் என்று மகிழ்ச்சி கொண்டாலும்
” எத்தனை தடவ சொல்லுறது என் கண்ணாவ பேர் சொல்லாதனு ” என்று சௌமி மண்டையில் கொட்டியவள்
” அது…அது வந்து …நா பேசிட்டேன் ” என்றாள் சிறிது வெட்கத்துடன் தன் நகத்தை சற்று பிய்த்த வாறே !!
அதில் சந்தியா வாயை பிளந்தே விட்டாள் .
” சௌமி டாக்டர் அ கூப்பிடு டி … நெஞ்செல்லாம் வலிக்குற மாறி இருக்கு ” என்று தன் நெஞ்சை பிடித்துக் கொண்டாள் சந்தியா .
” ரொம்ப பண்ணாதிங்க டி ” என்று நடந்ததை கூறி முடித்துவிட்டு தன் தோழிகளை பார்க்க , இருவரும் மகியை கேவலமாக பார்த்திருந்தனர்.
” என்ன எதுக்கு இப்படி பார்க்கிரிங்க ”
” இல்லை அசிங்கமா கேட்டுட்டு காரிதுப்பளாமா …இல்ல காரிதுப்பிட்டு அசிங்கமா கேட்களாமானு பார்க்குறோம் ” அதில் அவ திரு திருவென முழிக்க ,
” ஏன்டி …போன போட்டு பேசாம ஒரு மெசேஜ் அனுப்பிட்டு இந்த அலப்பறையா ” என்று சௌமி கேட்க , சந்தியா அதற்கும் ஒரு படி மேலே போய் ” ஹா த்து ” என்று துப்பி விட்டாள் .
” நான் என்ன பண்ண எனக்கு பயம் வந்துருது ” என்று ஒன்னும் தெரியாத பிள்ளை போல அப்பாவியாய் முத்தத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் .
” வாய் கிழிய பேசுறேல .. எல்லாரையும் வம்பிலுத்து கலாய்க்க தெரியுதுல அவன்கிட்ட பேச மட்டும் என்ன டி பயம் ” என்று தன் தலையே வலிக்கும் அளவு அடித்துக் கொண்டனர் இருவரும் .
” அதான் அஞ்சு மணிக்கு பேச போறேனே ” என்று கண்களை சிமிட்டி கூறுபவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தனர் .
காதலிப்பவர்களுக்கு தானே தெரியும் பேசுவது அவ்வளவு எளிதல்ல என்று . மகி தான் அவன் மூச்சு காற்று உள்ள இடத்திலையே பதற்றம் வந்து விடும் இதில் அவள் பேசுவாள் என எதிர் பார்த்தது தோழிகளின் தப்பும் இல்லை , அவர்கள் எதிர் பார்த்ததை செய்யாமல் விட்ட மகி தப்பும் இல்லை , எல்லாம் காதல் செய்யும் மாயை .
” சரி இப்போ என்ன தான் பண்ணலாம்னு இருக்க ” என்று சந்தியா சலித்துக் கொண்டு கேட்க
மகி ” அதுக்கு ஏனாம் இவ்வளவு சலிப்பு ”
” பின்ன என்ன டி இரண்டு வருசம் முடிய போது …இன்னும் நீ அவன்கிட்ட பேசுன பாடு இல்லை ”
மகி ” சரி சரி ரெண்டு பேரும் பாருங்க … இன்னைக்கு காதலை சொல்லுறேன் .. நாளைல இருந்து கண்ணா தான் வந்து என்ன டிராப் பண்ணுவான் நீங்க அத பார்த்து ஆச்சிரிய பட போறிங்க ” . நாளை முதல் தன் வாழ்வே மாறப் போவது அறியாமல் .
” இப்படி வாயிலே வட சுடாம …செஞ்சு காட்டு ” என்று இருவரும் எதிர் நாட்டு வீரர்களை போல சவால் விட்டுக் கொண்டனர் . அடுத்த அடுத்த ஆசிரியராய் வந்து பாடத்தை நடத்திக் கொண்டு இருக்க , தோழிகள் காதில் இரத்தம் வராத குறை தான் . எல்லாம் ஆசிரியர்கள் நடத்தியதால் வந்தது அல்ல மகி தன் கண்ணாவின் புராணம் பாடி சாகடிக்காத குறையாய் பேசினாள் இல்லை ,பேசிக்கொண்டு இருக்கிறாள் .
” என் கண்ணா சூப்பர்ல அவனோட இயற்கையை இரசிக்குற மனசுக்கும் …என் கவிதையை படிக்கும் போது சரிக்கும் போதும் ஐயோ ..செம்ம ” என்று கூறி தன் தோழிகளை பார்த்தாள்
” என்ன டி நா மட்டும் தான் பேசுறேன் … நீங்க எதுவும் பேசமாட்டிறிங்க ” என் இருவரையும் உலுக்க
” நூத்தி ஐம்பத்து ஒன்று ” என்றாள் சந்தியா
” என்னா டி ..எதுக்கு இப்போ நம்பர சொல்லுற ”
” இது நம்பர் இல்லை டி , இத்தனை தடவ என் கண்ணா செம்ம செம்மனு சொல்லுருக்க ” என்று ரத்தம் இல்லாத காதில் கையை வைத்து காட்ட , மகியோ பல்லை காட்டினாள் . பின்பு சௌமியை பார்க்க , அவளோ நன்றாக பெஞ்சில் தலையை சாய்த்து படுத்திருந்தாள் . மகி அவளை எழுப்ப
” நா இன்னும் சாகலையா ” என்றாள் அறை தூக்கத்தில் இருப்பது போல ,
அவளை ஒரு குத்து குத்தி ” இவ ஒருத்தி பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னா , ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பா !! ” என்று சந்தியா தலையில் அடித்து சிரித்தாள் . இப்படியே நிமிடங்கள் சிரிப்புக்களிலும் கேலி பேச்சுக்களிலும் செல்ல மணி மதியம் சாப்பிடும் நேரம் ஒன்றை நெருங்கியிருந்தது . மூவரும் கேன்டினிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு கிளம்ப மகி வரவில்லை என்று கூறி அங்கேயே அமர்ந்து விட்டாள் . சந்தியாவும் சௌமியாவும் தலையில் அடித்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றனர் .
மகிக்கு தான் வகுப்பிற்கு சென்றாலும் கவனிக்க போவது இல்லை என்று அவளும் சித்தும் சந்திப்பதாய் கூறி இருந்த இடத்தில் சென்று காத்திருந்தாள். இன்னும் ஐந்து மணி நேரம் இருக்கிறது என்று மூளை கூறினாலும் காதல் கொண்ட மனமோ காத்திருக்க கூறியது . காதலில் மட்டுமே காத்திருப்பதும் சுகத்தை தரும் . காதல் வெற்றி காத்திருப்பு சுகமாகும் , அதுவே தோல்வியாய் இருந்தாள் நரகமாக மாறி விடும் .
மகியின் கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை அந்த நேரம் காலில் காயத்துடன் அமிழ் வந்தாள் .
” அமிழ் என்ன ஆச்சு, எப்படி அடி பட்டுச்சு ” என்று தன் அக்காவின் காயத்தை பார்த்து பதறி கேட்டாள் .
” படில ஸ்லிப் ஆகிட்டேன் மகி ” என்று அவள் அருகில் அமர்ந்தாள் .
” சரி வா ஹாஸ்பிடல் கிளம்பலாம் ”
” இல்லை மகி அதெல்லாம் கட்டு போட்டாச்சு …எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பன்னு ”
” ம்ம் சொல்லு ”
” இந்த பேப்பர்ஸ் எல்லாம் எங்க கிளாஸ்ல யார்ட்டையாச்சு குடுத்திடு .. இப்போ என் பிரண்ட் வந்துருவா நா அவ கூட கிளம்பிறே ”
மகி சிறிது யோசித்தாள் அங்கிருந்து கிளம்ப , தன் கண்ணா வந்து விட்டாள் என்ன செய்வது என்று மனது ஒரு புறம் கூற மகியின் மூளையோ அவளின் அதற்குள் வந்தே விட மாட்டான் என்று உரைத்தது , மகி யோசிப்பதை பார்த்த அமிழ்
” அடியேய் போய் குடுத்திட்டு வா மகி … ரொம்ப முக்கியமான பேப்பர்ஸ் கால் வேற வலிக்குது இல்லேனா நானே போய்ருப்பேன் ” என்றபடி வலியில் முகத்தை சுருக்கினாள் .
தன் மணிக்கட்டை பார்த்தவள்’ அதான் இன்னும் ஐந்து மணி ஆக நிறைய நேரம் இருக்கே , அதுக்குள்ள போய்டு வந்திடலாம் ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டு ” சரி ” என்றவள் தன் கை பையை அமிழிடம் கொடுத்து அவளிடம் இருந்து பேப்பர்களை வாங்கி அவளுக்கு உதவி செய்தாள் . தன் காதல் பரிபோகும் என்று நினைத்திருந்தால் உதவி செய்து இருக்க மாட்டாளோ என்னவோ !! .
சித்தும் வேகமாக தன் தேர்வை முடித்து விட்டுடான் , அவனுக்கும் பொறுமை தாங்க வில்லை …இத்தனை நாள் கண்ணாமூச்சி விளையாட்டை தந்திரமாக விளையாண்டு , இன்று கண் முன் வரப்போகிறாள் என்ற இனம் புரியாத மகிழ்ச்சி . அவனும் ஆர்வம் தாங்காமல் தான் தன்னவளை காண ஐந்து மணி வரை காத்திருக்க முடியாமல் மகி கூறிய நேரத்திற்கு முன்னே வந்திருந்தான் . மகி கூறிய இடத்திற்கு வந்தவன் பார்த்தது அமைதியாக அமர்ந்து இருந்த அமிழை தான்
” ஒரு வேளை இவங்க தான் அவங்களா இருக்குமோ ” என்று யோசித்தவன் அமிழ் அருகே செல்ல நினைத்தான் . பின்பு ‘ எத்தனையோ பேர் இங்கு வருவர்’ என்று அந்த எண்ணத்தை புதைத்து விட்டான் . ஆனாலும் சித்தின் பார்வை அந்த இள நீல நிற விழிக் கொண்ட அமிழை அவ்வபோது தீண்டிச் சென்றது , அந்த நேரம் பார்த்து அமிழின் தோழி வந்துவிட்டாள்
” கிளம்பலாமா அமிழ் ” என்று அவள் கேட்க , சரி என்று வேகமாக அமிழ் எழுந்ததில் அமிழ் மடியில் வைத்திருந்த மகியின் கைப்பை கொட்டி விட , அதை பார்த்த சித்தின் கண்கள் அப்படியே விரிவடைந்தது . மகி தினமும் ஒட்டும் ஸ்டிக்கி நோட், கண்களில் ஹார்ட் கொண்டிருக்கும் எமோஜி ( 😍 ) எல்லாம் கீழே விழுந்தது . அதை எடுக்கும் அமிழை கண்கள் காதல் பொங்க பார்த்தான். அதை பார்த்ததும் சித் முடிவு செய்து விட்டான் அமிழ் தான் தனக்காக கவிதையை எழுதி தன்னை காதலிப்பவள் என்று . அப்போது தான் அமிழ் காலில் அடி பட்டிருப்பதை கவனித்தான் . தன்னவள் முகம் சுருங்கி இருப்பதை தாங்க முடியாமல் அவள் அருகில் செல்ல நினைக்கையில் அமிழ்தினியும் அவள் தோழியும் நடக்க ஆரம்பித்தனர் . அமிழை கண் கொட்டாமல் பார்த்தவாறே அவளை பின்தொடர்ந்து அங்கிருந்து சென்று விட்டான். உன்மையான காதலை கொட்டிய வளை பார்க்காமல் .
கொஞ்சம் நேரத்தில் அமிழ் கூறிய வேலையை முடித்து வந்தவள் தன்னவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் . கண்கள் , முகம் , உதடுகள் என்று எல்லாம் சிரிப்பையும் காதலையும் கொட்டி தீர்க்க , எப்போது சித் வருவான் என்று காத்திருக்க ஆரம்பித்தாள் .
எவ்வளவு காத்திருந்தாலும் தன் கண்ணா வரப் போவது இல்லை என்று அந்த காதல் கொண்ட மனதிற்கு தெரியவில்லை . மகியின் விதி அவள் வாழ்க்கையில் விளையாடி விட்டுச் சென்றதும் அந்த பேதைக்கு தெரியவில்லை . தன் அக்காவிற்கு ஒரு உதவி செய்ய போய் , அது வினையில் முடிந்து விட்டது என எதுவும் தெரியவில்லை மகிக்கு . எதையும் உணராமல் மணியையும் தன் காஃபி நிற கயல்விழிகளையும் அங்கும் இங்கும் சுழல விட்டவாறே , இன்று எப்படியாவது காதலை கூறி விட வேண்டும் என்றே காத்திருந்தாள் .
பிரியாமல் தொடரும் 😍💋…..
உங்களின் புல்லட் வெடி 🎉
🥺💔And finally
Cheri Cheri 🥰🥰.. thankyou 🥰
🥺🥺🥺💔💔💔💔💔💔
🤧🤧🤧🤧🤧மகி….. இன்னிக்கு எபியே இப்படி மகி வாழ்க்கையில்லே விளையாடி முடிச்சுட்டீங்களே😭😭😭😭😭😭
Nallathu nadakum sahi 🥰🥰🥰
விதி இப்படியா மகிய சோதிக்கனும்😭😭😭….எவவ்ளவு ஆசையா இருந்தாள் அவன் கிட்ட காதல சொல்ல🤧🤧🤧…ஆனா அவன் அவன லவ் பண்றவள விட்டுட்டு இன்னொருத்திய தான் தன்ன லவ் பண்றவள்னு நினைச்சிட்டு போய்ட்டானே…சித்து நேர போய் கேட்டிருந்தாலே எல்லாம் சரியா இருந்திருக்கும்….உதவி செய்யப்போய் எல்லாம் கெட்டதா நடந்திடிச்சே மகிக்கு🥺🥺🥺🥺🥺….
மிக்க நன்றி சகி 🥰🥰🥰..
Ayo pavom Mahi ipdi aakituche atha solluvangale vithi epo epdi maarum nu teriyathu 😭😭athu crt tha pola……. waiting for next epi❣️❣️
நன்றி சகி 🥰🥰🥰😁❤️
பாவம் மகி இப்டி அவ வாழ்க்கைல விளையாடிட்டிங்களே
🏃🏃😂
Oru help panna poi athu ava motha life ah yum mathun nu terunjuruntha ava pannirukkave matta … Pavam….
Thank you pa 🥰🥰