Loading

அவன் கிட்சேன் வந்த நேரம் அவள் கொழுக்கட்டை செய்து கொண்டு இருந்தாள். முன்னை போலவே பின் இருந்தே அவளை அனைத்து கொண்டவன் “ஏன் நான் முத்தா கொடுக்கக் கூடாது” என்ற குரலில் கோபம் தெரிந்தது.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க, இவள் பதில் பேசாத கோபத்தில் தன் இதழ் கொண்டு அவளின் காதை மெல்லிதாகக் கடிக்க, “ஸ்….ஸ்….” என்ற அவளின் சத்தம் மட்டும் தான் அவனுக்குக் கேட்டது. ஆனாலும் எதுவும் பேசவில்லை.

சிறிதாக இருந்த காதை விட அவளின் கழுத்து அவனை அதன் புறம் இழுக்க, அணைப்பை இறுக்கிக் கொண்டு அடுத்த டார்கெட் கழுத்தை நோக்கிச் சென்றான். அவனின் மூச்சுக் காற்றில் அதை அறிந்து “கண்ணா ப்ளீஸ்…” என்றாள் பலவீனமாக. தடுப்பதாக நினைத்து அவனை மேலும் உசுப்பி விட்டதை அறியாமல்.

பேசாத கோபத்தில் தண்டனை என்றே அவன் கடிக்க நினைக்க ஆனால் அது எப்பொழுது முத்தமாக மாறியது என்று இருவரும் அறியவில்லை. அவளைத் திரும்பி சமையல் மேடையில் சாய்த்து நிறுத்தியவன் முத்தத்தை மட்டும் நிறுத்தவே இல்லை.

நெற்றியில் தொடங்கியவன் கண் இரண்டிலும் முத்தம் பதிக்கும் போது “என் பரி எப்பவும் எனக்கு மட்டும் தான்” என்று மெதுவாக முணுமுணுக்க, அது அவளுக்குக் கேட்காதது அவளின் துரதிஷ்டம் தான். 

அடுத்து அவன் இரு கன்னத்திலும் இதழ் பதித்து , அவளின் இதழை நெருங்கினான். அவளின் கண்கள் மூடி தான் இருந்தது. முதலில் மெதுவாக இதழ் ஒற்றி எடுத்தவன் அடுத்த முறை அழுத்தமாக இதழ் பதித்து இருந்தான்.

அந்த நேரத்தில் தான் மாதவ் உள்ளே வர நினைத்தான். அவனுக்கு பிரணவ்வின் பின் புறம் மட்டும் தான் தெரிந்தது.   ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவு சின்ன பிள்ளை இல்லையே.   சத்தம் செய்யாமல் கார்டனுக்குச் சென்று விட்டான்.

குழந்தையாகவே அவனைப் பாவித்து வந்தவளை ஒரே முத்தத்தில் மொத்தமாகச் சிதற வைத்து விட்டான். அவளை விலகி அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவளால் இந்த புதிய உணர்ச்சியிலிருந்து உடனே வெளியே வர முடியவில்லை. கண்களை இறுக்க மூடி தான் நின்று இருந்தாள்.

“பரி… பரி…” என்று ஹஸ்கி வாய்ஸில் அழைக்க, “ம் ம்” என அவனோ நடந்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல் “கொழுக்கட்டை செய்யலையா” என 

பட்டென கண்ணைத் திறந்தவள் அவனை முறைக்க முயன்று தோற்றும் போனாள். என்ன தான் ஆறடி ஆண் மகனாக இருந்தாலும் குழந்தை குணம் தானே. இப்ப நடந்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவானோ என்று பதட்டம் வேறு இருந்தது.

அவளுக்கோ பெரும் தயக்கம் இருந்தும் “கண்ணா நம்ம பிரெண்ட்ஸ் தானே”  அவனோ உடனே “நீ என் வொய்ப் இல்லையா” என்று புரியாமல் கேட்க,  “ஆமா ஆமா நான் உன் மனைவி தான். இப்ப நமக்குள்ள நடந்ததை யார் கிட்டவும் சொல்லக் கூடாது செகிரெட் ஓகே வா” என 

“லூசு உனக்குத் தெரியாத கணவன் மனைவிக்குள் நடக்கிறதை வெளியே சொல்லக் கூடாது. அதே மாதிரி இரண்டு பேர் உள்ளே செகிரெட் எல்லாம் இருக்க கூடாதுனு அம்மா சொல்லுவாங்க” என 

‘ஏப்பா இதுவரை உனக்குத் தெரியுதே’ என்று பெருமூச்சு விட்டு “போய் மாதவ் எங்கன்னு பாரு நான் என் வேலையை பார்க்கறேன். இதை எல்லாம் முடிச்சா தான் சாமி கும்பிட முடியும்” என்று அவனை வெளியேற்றி விட்டு பெருமூச்சு விட்டாள்.

முதல் என்றால் அவளுக்கு அவனைப் பார்த்து கொண்டே வாழ்ந்தால் போதும் என்று தான் இருந்தது. ஆனால் இப்பொழுது அவனோடு சந்தோசமாக வாழவேண்டும் என்ற ஆசை கொள்ளை கொள்ளையாய் இருக்கிறதே.

அவளைப்  பெரிதும் ஈர்த்துக் கொண்டு இருக்கிறான்.  பேசுவது புரியாமல் முழிக்கும் போது, தப்பு செய்து விட்டு பாவமாகப் பார்க்கும் போது, விளையாட்டில் திருட்டுத்தனம் செய்து ஜெயித்து திருத்திரு என்று திருட்டு பார்வை பார்க்கும் போது, யாரவது திட்டினால் முகத்தை அழுவது போல் வைப்பது, முத்துப் பற்கள் தெரியச் சிரிப்பது என்று அவனின் பல செயல்கள் அவளை காந்தம் போல் இழுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இப்படியே அவன் வாழ்க்கை இருக்கக் கூடாதே.  அவன் வேண்டும் ஆனால் அவன் ஆசை கொண்ட அனைத்தையும் அவனுக்குக் கொடுத்து,  அவனை முழுமையாகி அடைய ஆசை. அதற்காகப் போராட போகிறாள். அந்த போராட்டம் வெற்றியில் முடியக் கண்டிப்பாகப் பல இன்னல்களைத் தாண்ட வேண்டும், தாண்டுவாள்.

மாதவ்விடம் விளையாட இரண்டு கார் போம்மையை எடுத்துக் கொண்டு வர, மாதவ்விற்கு மனதில் ஒரு வித பயம். அவனும் பிரணவ் வை சிறு குழந்தையாகத் தானே பார்க்கிறான். கணவன் மனைவி உறவு எல்லாம் அவனுக்குப் புரியுமா. அந்தரங்கம் ரகசியமானது. அவனால் புரிந்து கொள்ள முடியுமா இல்லை யாரிடமும் சொல்லக் கூடாததை சொல்லி விடுவானோ என்று அண்ணனாக ஒரு பயம்.

வீட்டுக்கு வாழ வந்த பெண் யாரின் வாயிலும் அரைபட விரும்பவில்லை. அதனாலே “பிரணவ் கிட்சேன்ல என்ன பண்ணிட்டு இருந்த” என்றான். அங்கே நடந்தது தெரியும் இருந்தும் சங்கடத்துடன் தான் கேட்டான்.  அவனின் பதிலைத் தெரிந்து கொள்ள நினைத்தான். எதாவது தவறாகச் சொன்ன திருத்தலாம் என்றே எண்ணினான்.

“கிட்சேன்ல ம்…ம்…” என்று சிறிது யோசித்தவன் பின் “எனக்குப் போர் அடிச்சுதா. நீயும் இல்ல அதான் பரி என்ன பண்றனு பார்க்கப் போனேன்” என 

அவனின் பதிலில் ஆழ மூச்சு எடுத்தவன் ‘ப்ரீ குட்டி சொல்லிக் கொடுத்து இருப்பா போல. நல்லது தான்’ என்று நினைத்தவனுக்குத் தெரியவில்லை தன் தம்பி இதில் எல்லாம் ரொம்ப தெளிவு என்று. 

ஜான்வி அன்று ப்ரணீதாவை காண இவர்களது இல்லம் தேடி வந்தாள். வந்த நோக்கம் பிரணவ்வின்  நடைமுறை மற்றும் எப்படி அவன் எல்லா விதத்திலும் நடந்துக்கொள்கிறான் என்று கவனிக்கவே. அதன்படி டிரீட்மென்ட் கொடுக்க நினைத்தாள்.

சில மணி நேரங்கள் இருந்தவள் அதன் பின் தான் சென்றாள். ஆனால் அவள் வந்ததிலிருந்து ஒருவன் தன்னிலை இழந்து அவள் பின்னே பார்வையைச் செலுத்தி இருந்தான். வாழ்வில் நான் அன்றாடம் பலரைக் கடந்து வந்தாலும் ஒரு சிலரைத் தான் நம் மூளை நியாபகம் வைத்து இருக்கும், அதிலும் குறிப்பிட்ட சிலரை மட்டும் தான் மனதில் பதிக்க முடியும். 

மாதவ் ‘எனக்கு என்ன தான் ஆச்சு.என் கண்ணு என் கண்ட்ரோலில் இல்லையே. கண்டிப்பா செருப்படி தான் டா’ என்று எவ்வளவு முயன்றும் பார்வையை மாற்ற முடியவில்லை.  ஒரு அளவுக்கு மேல் ஜான்வியே அதை உணர்ந்து சீக்கிரமாகக் கிளம்பி விட்டாள்.

இரவு உணவு முடித்து பிரணவ் தன் அறையில் எதோ செய்து கொண்டு இருக்க, மாதவ் யோசனையுடன் கார்டனில் அமர்ந்து இருக்கும் ப்ரணீதாவை பார்த்து விட்டு அவளிடம் சென்றான்.

“என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு” என,  “நான் பெருசா என்ன யோசிச்சிட போறேன். மாம்ஸ் நாளையிலிருந்து நான் பைக் ஓட்ட கத்துக்க போறேன்” என 

“என்ன சடனா  இந்த முடிவு” 

“அது பிரணவ்விற்கு பைக் ஓட்ட சொல்லி தர ஒருத்தர் கிட்டக்  கூட்டிக்கொண்டு போனேன். அவன் அவங்களை நெருங்க கூட விடலை. ஆனால் பைக் மேல தான் இருந்தாங்க. அதில் இருந்து எழுந்துக்கவே இல்லை. அதான் நான் கத்துக்கிட்டு அவனுக்குப் பைக் ஓட்ட  கொடுக்கலாம்னு ஒரு எண்ணம்” என்றவள் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தான்.

“நான் சொல்லி தரேன். உனக்கே பைக் எட்டாது. இதில் நீ அவனுக்குச் சொல்லி கொடுக்க போறியா” என 

“கண்டிப்பா மாம்ஸ் என்னால முடியும். நீங்கச் சொல்லி கொடுப்பிங்க தான். பட் நீங்க சொல்றதை அவன் கேட்கணும் தானே. நான் பார்த்துகிறேன். அப்பறமா சொல்ல மறந்துட்டேன் பாருங்களேன். ஜான்வி சொன்ன பிரணவ் கிட்ட நிறைய மாற்றங்கள் இருக்காம். முன்ன விட அவன் ப்ரைன் நல்லவே திங்க் பண்ணுது. இன்னும் கொஞ்சம் மாசம் தான். பழைய பிரணவ் நம்ம கிட்ட வந்துடுவான்” என்று சந்தோசமாக சொல்லி விட்டு தன் அறைக்கு வர, பிரணவ் கோபத்திலிருந்தான் போல. அறை முழுவதும் பல பேப்பர் துண்டுகள். பில்லோ கவர் எல்லாம் தூக்கி எறிந்து இருந்தான்.

முதலில் அறையின் நிலையைப் பார்த்து அதிர்ந்தவள் பின் “என்ன கண்ணா இது” என்று கோபமாகக் கேட்க,

அவனும் கோபமாக “அந்த பையன் பெயர் என்ன” என்றான் சம்பந்தமே இல்லமால்.

எதுவும் புரியாததால் “எந்த பையன்” என “அதான் உன் ஸ்கூல் க்கிரஷ்” என 

அவன் கேள்வியில் அதிர்ந்து, மாதவ்  அவனின் குணம் வேறு கண்ணின் முன்னால் வந்தது.  “அப்படி எல்லாம் எதுவும் இல்லையே” என்று சமாளிக்கப் பார்க்க,

“இல்ல அந்த டாக்டர் ஆண்ட்டி கிட்ட நீ சொன்னதைக் கேட்டேன்” என்றான். டான்சரில் இருந்து டாக்டராக மாறியதை நினைத்து, அந்நிலையிலும் சிரித்துக் கொண்டாள்.

“எனக்கு இந்த பிரணவ் கண்ணாவைத் தான் ரொம்ப பிடிக்கும். யார் என் வாழ்விலிருந்து  இருந்தாலும்  உன்னைத் தான் ரொம்ப பிடிக்கும்” என்று இருகையால் அவனின் தலையைக் கலைத்து விட்டே சொல்ல,

“அப்ப ஒரு முத்தா தா நான் நம்பறேன்” என்று  சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதிக்க,

“இப்படி இல்லை. நான் காலையில் கொடுத்தேன் அப்படி” என்று கைகளைக் கட்டி கொண்டு கண்ணால் அவளை முறைத்துக் கொண்டு சொல்ல,  ‘ரொம்ப பண்ற மேன் நீ” என்று அவன் கேட்டதைக் கொடுக்க தொடங்கினாள்.

முகம் அறிய அறியா ஒருவன் வருகையால், இருவரின் வாழ்விலும் என்ன மாற்றம் வர உள்ளதோ???

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்