Loading

குயில்கள் கூவ…… காக்கைகள் கரைந்து பொழுது விடிந்துவிட்டதை கயலுக்கு உணர்த்தியது….. தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்தவள் ” கடவுளைப் பார்த்து காலை வணக்கம் கூறிவிட்டுதான் தன்னுடைய மற்ற வேலைகளைச் செய்வாள் “…… இன்றும் கடவுளிடம் , தன்னுடைய காலை வணக்கத்தை கூறிவிட்டு”…. ” கடவுளே நீ தான் எனக்கு உதவி செய்யனும்”…. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விடு…… ஜாதகம் இருவருக்கும் பொருந்தாத மாதிரி பண்ணிவிடு…. எனக்கு ஏன் இந்த கல்யாணம் வேணானு சொல்றேனு உனக்கு தெரியும்….. அதனால, எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திவிடு….. நான் இப்ப போய் குளிச்சி முடிச்சு வரும் போது , மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணி , ஜாதகம் பொருந்தல இல்லைனா பொண்ணு எனக்கு பிடிக்கவில்லைனு சொல்லிடனும்”……. இங்க பாரு இப்ப உன்னை நம்பிதான் போறேன்….. எதுவும் சொதப்பிட கூடாது….. என்று கடவுளிடம் வேண்டுதலை உதவியாக கேட்டுவிட்டு தன்னுடைய காலை வேலையைச் செய்ய சென்றாள்…..

 

வேலப்பன், கண்ணம்மா….. கண்ணம்மா…. 

 

என்னங்க……!!

 

வர….வர உன்னுடைய புருசனை நீ கண்டுக்கவே மாட்ற…? ….என்று குறைப்பாட….

 

எப்பா…சாமி…!! காலையிலே உன்னுடைய புராணத்தை ஆரம்பிக்காதே…. பொண்ணு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கா….. அவளுக்கு கரைட் டைம் சாப்பாடு ரெடியா இருக்கணும்…. இல்லைனா வீடு ரெண்டாகும்னு , உனக்கு தெரியாதா….?…. அவ வெளியே ஓட்டல் சாப்பாடும் வாங்கி சாப்பிட மாட்மா……. பட்டினியாதான் இருப்பா…… அப்பறம், உடம்பு சரியில்லாம போகும்….. உடனே நீ பாசமலர் படத்தை இங்க அரங்கேற்றி முடித்துவிடுவ…! எனக்கு இதெல்லாம் தேவையா….. போய் அந்த காபி தண்ணியை குடி…… போயா போ…..

 

 

வேலப்பர்……, கண்ணம்மா ….. ஆனாலும் நீ என்னை இப்பலாம் நல்லா பாத்துக்கிற மாட்ற…… எதிரே இருந்து முறைக்கும் பார்வை தன் மீது விழுவதை உணர்ந்தவுடன்……. நான் என்ன சொல்ல வந்தேனா…..!! நம்ம பொண்ணு பொறந்ததில் இருந்து , எனக்கு இம்போர்ட்டன் கொடுக்க மாட்ற……?… என்று சொல்ல….

 

 

கண்ணம்மா….. உனக்கு என்ன யா இம்போர்ட்டன் கொடுக்க வில்லை…… சும்மா …..சும்மா எதையாவது ஒலரிட்டு இருந்த என்கிட்ட அடிதான் வாங்குவ….. என்னுடைய பொறுமையை ரொம்ப சோதிக்காத யா …… நமக்கு கல்யாணம் ஆகி இருபத்தாறு வருசம் முடிந்துபோச்சு , நம்ம பொண்ணுக்கு இருபந்தைந்து வயசு ஆகுது…… இதுவரைக்கு உங்க ரெண்டு பேரையும் நல்லாதானே பார்த்துக்கொள்கிறேன்….. ஆனா, உன் நெனப்பு ஏன்தான் இப்படி மட்டமா போகுது யா…… இன்னொருமுறை இப்படி ஏதாவது பேசுன….?….. தினமும் காலையில காபி கேட்பயே குடிக்க……” அந்த காபி இனிமே கிடைக்காது…….. என்று கோபத்துடன் முடிக்க…..

 

 

வேலப்பர், “டேய் வேலா”, கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ…… என்று மனதிற்குள் நினைத்தவர்,…… தன் மனைவியை சமாதானம் படுத்த எண்ணி அவரின் அருகில் சென்று,……” இங்க பாருங்க என் அருமை மனைவியாரே “……!! நீங்க இல்லாம என் வாழ்க்கை முழுமை அடையாது….. ” நீ இல்லாத ஒவ்வொரு நாளிலும் இரவும், பகலும் ஒன்றே”… தான்….. நான் உன்னில் தொடங்கி உன்னிலே நிறைவடைகின்றேன்…… பாரதியைப் போல என்னால கவிதை எழுதி என்னுடைய காதலை வெளிப்படுத்த முடியாது….. “பாரதியின் கண்ணம்மா ” காதலின் ஆழம் எவ்வளவுனு உலகம் அறியும் … -.. இந்த வேலப்பனின் காதல் நீ மட்டும் அறிந்தால் போதும்…. என்னுடைய காதலின் வரம் நீதானடி ….!! உன்கிட்ட போய் என்னால சண்டைப் போட முடியுமா….?….. உன்னுடைய பாராமுகம் தான் என் இதயத்தை கிழிக்காதா….?…. காதலின் அவஸ்தை இதுதானோ என் கண்ணம்மா…. கூறுவாயா….. 

 

 

கண்ணம்மா, வேகமாக வேலப்பரின் வாயை தன் கைகளால் மூடி , தலையில் ஒரு கொட்டு வைத்தார்….. வேலப்பரோ நான் எதுவும் தவறாக கூறவில்லையே …! எனக்கு ஏன் இந்த பரிசு என்று தன் மனைவியைப் பார்க்க …..அவரோ தன் கையை அவரின் வாயில் இருந்து எடுத்துவிட்டு…… வீட்ல கல்யாணம் பண்ற வயசுல பொண்ண வெச்சுனு , உங்களுக்கு காதல் டைலாக் வேற கேட்குதா….?….. டி.வி பார்க்காதீங்க ….. பார்க்காதீங்கனு எத்தனை முறை சொல்லியிருப்பேன்….. இப்ப வந்த டி.வில வர டைலாக் எல்லாம் ஒப்பித்துக்கொண்டு இருக்கீங்க …… இப்பதான் நமக்கு கல்யாணம் ஆகி , நம்ம ரெண்டுபேருக்கும் இளமை ஊஞ்சலாடுதா….?…… காலம் போன காலத்தில் அமைதியாக இருக்காம….. இன்னொருமுறை இப்படி வந்து என்கிட்ட பேசினீங்க….அவ்வளவுதான் சொல்லி புட்டேன்……..

 

வேலப்பர்,. ஏன்டி மா என்னுடைய மனைவியை நான் காதலிக்குறேன்…. அதற்கு நான் வருத்தப்படனும்….. காதலுக்கு வயதில்லை தெரியாதா உனக்கு….!!….. என்னுடைய கடைசி காலம் வரை உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்…… நம்ம மனசில் இருப்பதைதான் சிலவற்றை படத்தில் டைலாக்கா சொல்லுறாங்க….. புரியுதா என்னுடைய அருமை மனைவியாரே என்று …. கண்ணம்மா நிதானத்திற்குள் வரும் முன் , தன் மனைவியின் கண்ணத்தில் தன்னுடைய காதல் முத்தத்தை பதித்தார்…… கண்ணம்மா ,அதிர்ச்சியில் அப்படியே நிற்க ….. வேலப்பரின் போன் ஒலித்து , அவரை அதிர்ச்சியில் இருந்து வெளியே கொண்டு வந்தது…… கையில் கரண்டி எடுத்து , தன் கணவரை முறைத்து பார்க்க…… வேலப்பரோ யாருடனோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார்….. போன் பேசி முடித்தவர் நேராக தன் மனைவியிடம் வந்து அவரை அணைத்துக்கொண்டு, அவரின் காதில் மெதுவாக சம்மந்தி வீட்டில் எப்போ நிச்சதார்த்தம்னு கேட்குறாங்க….. கண்ணம்மா, அவரை விலக்கி ,அவரின் முகத்தைப் பார்க்க….. முகம் முழுவதும் புன்னகையில் இருக்க…..

 

 

வேலப்பர், நேத்து நம்ம பொண்ணை…..! மாப்பிள்ளை பார்த்து இருக்காரு… நம்ம பொண்ணோட கேரக்டர் ரொம்ப பிடிச்சு போச்சாம்…… இப்ப உனக்கு சந்தோசம் தானே…!!….

 

 

கண்ணம்மா, … சந்தோசம் இல்லாம இருக்குமா….?…. நான் காலையில் மாப்பிள்ளை வீட்டில் சொல்லலாம்னு இருந்தேன்…. நம்ம பொண்ணுக்கு கல்யாணத்திற்கு சம்மதம் னு :….. ஆனா, நான் இன்னும் சொல்லவே இல்லையே….?…. அவங்க எப்படி நிச்சயம் வரைக்கும் போயிட்டாங்க…..?…..

 

வேலப்பர், நேத்து நைட் நம்ப பொண்ணு சரியினு சொன்னதும், எதற்கு டைம் வேஸ்ட் பண்ணனும்னு , நைட்டே சம்பந்தியிடம் பேசிட்டேன்….. நம்ம டிலே பண்ண …. பண்ண நம்ம பொண்ணோட மனசு மாறிடும்…..அதற்கு தான் நான் நைட்டே சொல்லிட்டேன் என் மனைவியே…. இப்ப இதை நம்ப பொண்ணு கிட்ட நீங்கதான் சொல்லனும்….. நான் இப்படியே வெளியே போறேன்….. இல்லைனா கயல் என்னை திட்டியே ஒருவழியாக்கிவிடுவா……என்று வெளியே சென்றுவிட்டார்….. கயல்…, குளித்து ரெடியாகி சாப்பிட ஹாலுக்கு வர….. அங்கே தன் அன்னை தனக்கு ரெடியாக சாப்பாடு ரெடியாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்….. மதியம் சாப்பாட்டை எடுத்து பையில் வைத்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு…… எழுந்து சென்று, கைகளை சுத்தம் செய்து விட்டு பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாக…..

 

கண்ணம்மா….. கயல் நான் உங்கிட்ட ஒரு விசயம் பேசனும்…. 

 

ம்….. சொல்லுங்க அம்மா”….

 

காலையில மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணாங்கமா, எப்ப நிச்சயதார்த்தம்னு கேட்குறாங்க மா…..

 

கயல், ஒரு முறை பூஜையறை திரும்பி பார்த்து விட்டு” காலையில்தானே அவ்வளவு சொன்னேன்”….. ஆனால், உங்களால் என்ன பண்ணமுடியுமோ “, அதை வெற்றிகரமாக பண்ணிவிட்டீங்க, ” என்று மனதிற்குள் நினைத்தவள்….

 

 

என்னமா நினைக்கிற….. ஏதாவது பதில் சொல்லுடா மா….. அவங்களுக்கு என்ன பதில் சொல்லமா….!! தன்னுடைய தாயின் புன்னகை மலர்ந்த முகத்தை பார்க்க அவ்வளவு சந்தோசம் வந்தது இவளுக்கு…. தன்னுடைய மகள் நல்ல பதில் கூறமாட்டாளா…!! என்ற எதிர்ப்பார்ப்பு அவரின் முகத்தில் தெரிந்தது…… தன் தாயின் புன்னகைக்காக , சரி அம்மா….. நீங்க எப்ப நிச்சயம் வைத்தாலும் எனக்கு சரிதான் மா….. ஆமாம் நீங்க காலையில தானே மாப்பிள்ளை வீட்டில் பேசுறதா சொன்னீங்க….! ஆனா, அதற்குள்ள எப்படி மாப்பிள்ளை வீட்டில் இருந்து கால் பண்ணி நிச்சயம் வரைக்கும் போயிட்டாங்க…..?…… 

 

கண்ணம்மா, அதுவா மா ….. உங்க அப்பாதான் நல்ல விசயத்தை ஏன் ஆறபோடனம்னு , நேத்து நைட்டே மாப்பிள்ளை வீட்டுக்கு கால் பண்ணி பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிட்டாரு…… உங்க அப்பா கால் பண்ணி பேசுன விசயத்தை இப்பதான் எனக்கே சொன்னாரு மா ……

 

கயல், அப்பா எங்க மா……

 

இப்பதான் வெளியே போனாரு மா …

 

கயல், சரிமா , நான் வேலைக்கு கிளம்புறேன்……” டேய் அப்பா , என்னை இப்படி பேய்கள்கிட்ட கோர்த்துவிட்டுட்டு, நீ எங்க போன”…… உன்கிட்ட நைட் வந்து பேசுறேன் …. என்று மனதிற்குள் நினைத்தவள் தன் தாயிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு , தன்னுடைய வண்டியை எடுத்தவள்…, தன்னுடைய தாயை ஒருமுறை திரும்பி பார்க்க….. அவர் புன்னகையுடன் பத்திரமாக போயிட்டடு வா மா என்று கையசைத்துக்கொண்டிருந்தார்….. வண்டியில் சிட்டாக பறந்துவிட்டாள்….. 

 

கண்ணம்மாவோ,… தன்னுடைய மகளின் நிச்சயத்தை எப்படி சந்தோசமாக செய்வது என்ற சிந்தனையில் இருந்தார்…. தன்னுடைய ஆலோசனையில் தன்னுடைய கணவரும், மாமியாரும் இணைய …..வீடே மகிழ்ச்சியாக இருந்தது…..

 

கயல், பள்ளிக்கு வந்த கயலுக்கு மனது சோகத்தில் வெளியே குதித்துவிடுவேன் என்றது….. தன்னுடைய மனதை அடக்கியவள், மாப்பிள்ளையைப் பார்த்து, இந்த கல்யாணத்தை நிறுத்திவிட சொல்லனும் என்று நினைத்தாள்…. அன்றைய தன்னுடைய காலை வகுப்புகளை ஒர் உயிர்ப்பே இல்லாமல் நடத்திவிட்டு , வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்…. கயலின் முகவாட்டத்தை காலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கவிதா , இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று நினைத்தவள், அவளிடமே சென்று கத்த ஆரம்பித்தாள்…….

 

 

கவிதா, என்னடி ஆச்சு கயல்…!! ஏன் காலையில இருந்து ஒரு மாதிரி இருக்க….. கயல் அமைதியாகவே இருக்க … இப்படி அமைதியாகவே இருந்தா எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது….. என்னனு சொல்லி தொலடி..என்று கத்த …. 

 

 

கயல், மாப்பிள்ளை வீட்ல நிச்சயம் எப்போ வைக்கலானு கேக்குறாங்க டி…

 

கவிதா, அட பைத்தியமே இதற்காக இப்படி அலம்பல் பண்ற காலையில் இருந்து….. அன்பு அண்ணா ரொம்ப நல்லவருடி….. எனக்கு தெரிந்த வரைக்கும் நல்ல மனுசன் டி…. ராமு கூட எப்பபாரு அண்ணா பத்தியேதான் பேசுவான்….. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லடி அவருக்கு….. நீ எதற்கு தான் இப்படி பயப்பிடுறனு எனக்கு இன்னும் தெரியல….. 

 

   அந்த நேரம் பள்ளிகூடத்தினுள் ஓர் கார் வந்து நிற்க….. சிறிது நேரத்தில் ஓர் மாணவன் ஓடி வந்து கயல் டீச்சர் உங்கள பார்க்க ஒரு சார் வந்திருக்காங்க என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்…..

 

தோழிகள் இருவரும் யார் அந்த சார் என்று நினைத்து அறையை விட்டுவெளியே வந்தனர்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்