அத்தியாயம்-11
குன்னூருக்கு வந்து சேர்ந்தவர்கள்… கேசவனுக்கு அழைக்க.. அவரே வந்து அவர்களை அழைத்து கொண்டு, அங்கு ஏற்கனவே ஹோட்டலில் முன்பதிவு செய்திருந்த அறைக்கு அவர்களை அழைத்துச்சென்றார். அவர்களை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு… ”சாயந்திரம் ஆறு மணிக்கு ரிசப்ஷன்… இங்க கீழ ஹால்ல தான் வச்சுருக்கோம். நீங்க வந்திருங்க” என கூறிவிட்டு.. சென்றார். அவர் சென்றவுடன் சாதனா “அப்பா… கீழ சூப்பரா இருக்குப்பா… இங்க ஜன்னல்கிட்ட வந்து பாருங்களேன் எவ்வளவு ரோஸ் இருக்கு..
நம்ம கீழ போய் பார்க்கலாம்பா…” என உற்சாகத்தோடு கேட்க கருணாகரன், மங்கையை பர்த்தார் அவர் “ இப்பதான வந்தோம் அப்பவை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுடி…” என ஒரு அதட்டல் போட… சாதனா உதட்டைப்பிதுக்கி முகத்த பாவமாக் வைத்து கொள்ள…அதை பொறுக்க முடியாத கருணாகரன்… மங்கையை பொருட்படுத்தாமல், சாதனாவை அந்த ஹோட்டலின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றார். மங்கை எப்பவும்போல பெருமூச்சுடன் ”எப்படியோ போங்க…” என சலிப்புடன் கூறி மாலை ரிசப்ஷனுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்து விட்டு… சிறிது ஓய்வெடுத்துக் கொண்டார்.
இங்கே கீழே தோட்டத்திற்கு வந்த சாதனாவிற்கு சாந்தோசம் தாங்கவில்லை.. அங்கே இருந்த வித விதமான மலர்கள் அவளை வா…! என்று அழைப்பதுபோல் இருக்க… ஒவ்வொரு பூக்களையும்..வருடிக்கொண்டு…சென்றாள். பூக்களோடு சேர்ந்து இன்னொரு பூவாக இருந்த தன் மகளை ரசித்துகொண்டிருந்தார் கருணாகரன்… அவரின் ரசனையோடு சேர்த்து… இன்னொரு விழிகள் சாதனாவை ரசித்து கொண்டிருந்தது… தந்தையின் ரசனையில் அன்பும், கனிவும் இருந்ததென்றால்… இன்னொரு விழிகளிலோ.. காமம் இருந்தது… அந்த விழிகள் சாதனாவின் மேனியை அங்கம் அங்கமாக…ரசித்து கொண்டிருந்தது..
சிறிது நேரத்தில் பெண்களுக்கே உரிய ஏதோ உள்ளுணர்வு தோன்ற… சாதனா பார்வையை சுற்றும் முற்றும் பார்த்தாள்… வித்தியாசமாக எதும் தோன்றாததால்… மீண்டும் பூக்களிடம் தஞ்சம் புக… கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே உணர்வு தோன்றவும்… எழுந்துவிட்டாள். என்னவென்று கேட்ட தந்தையிடம், உண்மையை கூறாமல் “கொஞ்சம் அசதியா இருக்குப்பா… நாளைக்கு வரைக்கும் இங்கதான இருப்போம்… அப்ப பார்த்துக்கலாம்…” என கூறி தந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் சென்றவுடன் அந்த உருவமும் தன் அறைக்கு சென்றது… மாலை சாதனாவின் குசும்பம், ரிசப்ஷனிற்கு கிளம்பி வெளியே வந்தவர்கள்… கீழே விழா நடக்கும் ஹாலுக்கு செல்ல.. எதிரே வந்த ஒரு இளைஞன் “ஹல்லோ சார், என் பெயர் பிரகாஷ்… உங்களுக்கு இந்த ஹோட்டலோட சர்வீஸ் பிடிச்சிருக்கா…? இல்ல வேற ஏதாவது குறை இருக்கா…?” என்று அக்கறையோடு கேட்க…”இதெல்லாம் நீங்க ஏன் கேக்கறிங்க…? நீங்க யாரு.. கேசவனோட சொந்தகாரங்களா? என கருணாகரன் கேட்க… அவன் பதில் கூறும் முன் அவசரமாக அவர்களிடம் வந்த மேனேஜர்.
பிரகாஷிடம் பவ்யமாக வணக்கம் வைத்தான்… “சார் நீங்க சொன்னமாதிரி எல்லாமே சரியா செஞ்சிட்டோம்…” என மரியாதையுடன் கூற… சரி நீங்க போங்க நான் இதோவர்றேன்” அவரை அனுப்பி வைத்தவன்…. “சாரி சார் நான் பேர மட்டும் சொல்லிட்டு நான் யார்ன்னு சொல்லாம விட்டது என் தப்புதான்…. என் பேர் பிரகாஷ்.. இந்த ஹோட்டலோட எம் டி…. பாதி நாள் நான் இங்க இருக்க மாட்டேன்… தொழில் விசயமா வெளிநாடு போயிருவேன்… நான் இங்க இருக்கிறப்போ… வாடிக்கையாளர்கள்கிட்ட எங்க சர்வீஸ பத்தி… அவங்களோட கருத்தை கேட்பது என்னோட வழக்கம். அதான் நான் உங்ககிட்ட கேட்டேன்” என கூறியவனின் பார்வை அவ்வப்போது சாதனாவிடம் சென்று வந்தது. பிங்க் மற்றும் சில்வர் கலந்த காக்ராசோளியில், தேவதை போல் மின்னியவளை… அவனது விழிகள் விழுங்கிவிடுவது போல் பார்த்து கொண்டிருந்தது.
அவனின் கேள்விக்கு, கருணாகரன் ”ரொம்பவே நல்லா இருக்கு சார்…எங்களுக்கு திருப்தி… இனிமேல் நாங்க எப்ப குன்னூர் வந்தாலும் இங்கதான் தங்கணும்… அப்படின்னு நாங்க நினைக்கிற அளவுக்கு உங்க ஹோட்டல்ல நல்லா கவனிச்சுக்கிட்டாங்க…” என கூற சாதனா “அப்பா அந்த தோட்டம் சூப்பரா இருந்துச்சுல்ல… அதையும் சொல்லுங்கப்பா…” “ம்ம்.. ஆமா சார் ஹோட்டலுக்கு பின்னாடி உள்ள தோட்டம் ரொம்பவே நல்லா இருந்தது… என் அம்முவுக்கு ரொம்ப புடிச்சிருந்தது….”
புன்னகையுடன் கூறியவர்… சாதனாவிடம் திரும்பி… என்ன அம்மு இப்ப ஓ.கே யா…? என கேட்க ”ம்ம்” வேகமாக புன்னகையுடன் தலையாட்டினாள்.
பிரகாஷ், “சார் என்னை சார்ன்னு கூப்பிட வேண்டாம்… சும்மா பிரகாஷ்னே கூப்பிடுங்க…? என்றுவிட்டு, சாதனாவை பார்த்து “இவங்களை எங்கயோ பார்த்திருக்கேன்.. எங்கன்னு ஞாபகம் வர மாட்டிங்குது…” யோசிப்பது போல் கூறியவனிடம், “டி.வில பார்த்து இருப்பிங்க தம்பி… என் பொண்ணு பிளஸ்டூல தமிழ்நாட்டிலேயே ரெண்டாவதா வந்திருக்கா…” என பெருமையுடன் கருணாகரன் கூற…”ஓ ரியல்லி வாழ்த்துக்கள்..” என கூறி சாதனாவிடம் கை குலுக்க வர, மங்கை அதை நாசுக்காக தடுத்துவிட்டார்.
”என்னங்க நேரமாச்சு போகலாமா…?” என கணவரிடம், கேட்க… அவர் ” ம்.. போகலாம்மா..” என கூறி சாதனாவையும், மங்கையையும், விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துகொண்டு சென்றார். சாதனா தன் தந்தையின் கை அடியில் தன் கையை கோர்த்து கொண்டு சென்றாள். இவர்கள் செல்வதை குரோதத்துடன் பார்த்து கொண்டிருந்தவன்… சாதனாவின் கையை கூட தொடவிடாத மங்கையின் செயலில் கோபம் கொண்டவன்….” உன் பொண்ணோட கையை தொட வந்ததற்கே.. நீ தடுத்துட்டியா… இன்னும் ஒரே வாரத்துல உன் பொண்ண கல்யாணம் பண்ணி அவளை எங்கெங்க தொட்றேன்னு பாரு… இது நடக்கும்… அப்படி நடத்தி காட்டல என் பேர் பிரகாஷ் இல்ல…” மனதில் வக்கிரமாக சவால் விட்டான்.
ஃபங்ஷனில் அனைவரிடமும் கலகலப்பாகவும், குழந்தைத்தனமாகவும் பழகிய சாதனாவை அனைவருக்கும்.. பிடித்துவிட… மணப்பெண் சாதனாவை தன் அருகிலேயே இருத்தி கொண்டாள். இவை அனைத்தையும் பார்த்திருந்த, மங்கைக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பயத்தையும் கொடுத்தது… ”வீட்டுக்கு போனவுடனே, முதல் வேலையா… என் பொண்ணுக்கு சுத்தி போடணும்…” என்று மனதில் நினைத்து கொண்டார்.சாதனாவை, தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்த பிரகாஷின் விழிகள்..ஆடைக்குள் இருக்கும் அவள் அங்கங்களை.. கற்பனையில் ரசித்து கொண்டிருந்தது…
ஒரு வழியாக ரிசப்ஷன் நல்ல படியாக முடிந்து… மறு நாள் திருமணமும் நல்லபடியாக முடிந்து.. கருணாகரன் குடும்பம் மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பினர்… அவர்கள் அங்கிருந்த அந்த இரண்டு நாட்களும்..எதாவது ஒரு காரணம் சொல்லி பிரகாஷ் அவ்வப்பொழுது அவர்களிடம் பேசிகொண்டிருந்தான்…. அந்த இரண்டு நாட்களிலேயே கருணகரனை ”அங்கிள்” என்று அழைத்து பேசும் அளவிற்கு வந்துவிட்டான். கருணாகரனும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை….
சொல்லப்போனால்… இவ்வளவு பெரிய பணக்காரன் எந்தவித அலட்டலும் இல்லாமல்… எளிமையாக பழகுவது அவருக்கு பிடித்தே இருந்தது…..
அவனே அவர்களை, ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு அழைத்து சென்றான்… கருணாகரன் மறுத்து கூறியும் கூட… “பரவாயில்லை அங்கிள் உங்க குடும்பம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…. எனக்கு அம்மா இல்லை… அப்பா மட்டும் தான்…. சின்ன வயசிலேயே அம்மா இறந்துட்டாங்க…அப்பாவும் வேலை…. வேலைன்னு அழைந்து..என்ன ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க……ரொம்ப தனிமை…. இப்ப உங்க குடும்பத்தை பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு… இதுல நானும் ஒரு ஆளா இருக்க முடியலைன்னாலும்… அட்லீஸ்ட் ரெண்டு நாள் உங்க கூடையாவது இருக்கேனே…” என உருக்கமாக கூற மங்கையே உருகிவிட்டார்… என்றால்.. கருணாகரனை கேட்கவும் வேண்டுமா…
இப்படியாக குன்னூரில் இருந்த இரண்டு நாட்களும்… பிரகாஷ் கருணாகரன் மனதிலும், மங்கையின் மனதிலும் இடத்தை பிடித்தான். மறந்தும் அவன் பார்வை சாதனாவிடம் போகவில்லை… அவளிடம் பேசவும் இல்லை…. அவளாக அவனிடம் பேச வந்தாலும்… (அம்மணிக்குத்தான் பூக்கள் என்றாலே உயிராச்சே… அதை பத்தி சந்தேகம் கேட்கத்தான்) ஒரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு விலகிவிடுவான்.. இந்த செயல் ஒன்றே பிரகாஷை நம்புவதற்கு போதுமானதாக இருக்க… அவனே தன்னுடைய காரில் அவர்களை, அவரகள் ஊருக்கு அழைத்து சென்றான்….
சரியாக மூன்று நாள் சென்று… பிரகாஷ், அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கருணாகரனை செல்போனில், அழைத்து…”அங்கிள் எங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை ரொம்ப சீரியஸ்ஸா இருக்கு… எங்கப்பா உங்களை பார்ர்கணும்னு சொல்றார்…உங்களால வரமுடியுமா..? என குரலில் பதட்டத்தை காட்டினான். ” என்ன தம்பி ஆச்சு” என பதட்டத்துடன் கேட்க… லேசா ஹார்ட் அட்டாக் அங்கிள்… என்னன்னு தெரியலை அப்பா உங்களை நேர்ல பார்த்து பேசணும்ன்னு நினைக்கிறார்.” கருணாகரன் குழப்பமடைந்தார்… ”என்ன எதுக்கு பார்க்கணும்னு நினக்கிறார்…பிரகாஷ்?” தன் சந்தேகத்தை கேட்க… “நான் உங்க குடும்பத்தை பத்தியும், நீங்க சாதனா மேல காட்டுற பாசத்தை பத்தியும் சொன்னேன்… “ அதான் அவருக்கு உங்களை பார்க்கணும்போல தோன்றியிருக்கு…“ என கூற..
கருணாகரன் அப்பொழுதும் மௌனமாக இருக்க… பிரகாஷ் ”சரியான அழுத்தக்காரன் என்னை இப்படி கெஞ்ச வச்சதுக்கு உன் அம்மு மூலமாவே கதற வைக்கிறேன்.…” என மனதில் திட்டியவன், வெளியே…. ”உங்களுக்கு வர விருப்பம் இல்லைன்னா பராவாயில்லை அங்கிள் நான் அப்பாவ சமாதானம் செஞ்சிக்கிறேன்.” என கூறிக் கொண்டிருக்கும்பொழுதே ”என்ன பிரகாஷ் நீங்க சொன்னவங்க வராங்களா…? இல்லையா…? உங்க அப்பாவோட நிலைமைய சொன்னிங்கதானே…” என கேள்வி எதிர்முனையில் கேட்க… பிரகாஷ் “அதுவந்து… டாக்டர்…” என தயங்குவதும் கேட்க
கருணாகரன் தான் வருவதாக கூறினார்.
“அங்கிள் அப்படியே ஆண்ட்டியையும், சாதனாவையும் கூட்டிட்டு வந்திங்கன்னா…. அப்பா ரொம்ப சந்தோசப்படுவார்…” என கூற… ”சரி பிரகாஷ்…” என கூரிவிட்டு போனை வைத்தார். வீட்டிற்கு வந்து மங்கையிடம் விசயத்தை கூற… அவரும் ஒரு தாய்தானே பிரகாஷின் நிலைமையை உணர்ந்து கொண்டு…போகாலாங்க…ஆனா, சாதனாவை வீட்டுலயே விட்டுட்டு போகலாங்க… துணைக்கு நம்ம வீட்டுல வேலை செய்யற முத்துமணிய இருக்கசொல்ல்லாம்..? என கூற இல்ல மங்கை அது சரி வராது… அவர் சாதனாவையும் பார்க்கனும்ணு ஆசைபட்றாராம்…நம்ம அம்முவையும் கூட்டிட்டு போகலாம்..அதுவுமில்லாம அம்முவ இங்க தனியா விட்டுட்டு போனால் எனக்கு மனசு கேட்காது… எனக்கு அவ நினைப்பாவே இருக்கும்.
அதனால அம்முவையும் கூட்டிட்டு போகலாம்” என முடித்துவிட்டார்.
அவர்களை அழைத்து செல்ல பிரகாஷ் காரை அனுப்பி இருந்தான்…. தன் தந்தை உடல் நிலை சரியில்லாத இந்த நேரத்திலும் தங்களுக்காக கார் அனுப்பியவனின் செயலில் நெகிழ்ந்திருந்தனர்…. மங்கையும், கருணாகரனும்.. ஆனால் பிரகாஷின் மனதோ… இருமனதாய் இருந்த அவர்களை உறுதியாக வரவழைக்கவே…. காரை அனுப்பினான். மீண்டும் கருணாகரன் குடும்பம் குன்னூர் பயணம் ஆனது…
அவர்கள் வந்த கார் நேராக பிரகாஷின் வீட்டில் நிற்கவே அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்தவர்கள் வியப்பில் விழி விரித்தனர்…அந்த வியப்பினூடே காரிலிருந்து இறங்கியவர்களை… பிரகாஷ் வெளியே வந்து வரவேற்றான். வாங்க அங்கிள்……. வாங்க ஆண்ட்டி…. வா சாதனா…? என்று அவளை உரிமையாக அழைத்தான்….. வீட்டிற்குள் வந்தவர்களை ஓய்வெடுக்கும்படி ஒரு அறையை காட்டி விட்டு சிறிது நேரத்தில் வருவதாக சென்றவனை…:” பிரகாஷ்.. ஒரு நிமிஷம்பா நாங்க இங்க தங்க வரலை…உஙப்பா எங்கள பார்க்கணும் சொன்னவுடனே நாங்க வந்துட்டதால… வேலை யெல்லாம் அப்படியே விட்டுட்டு வந்திருக்கோம்… அதனால நாங்க அப்பாவை பார்த்துட்டு இன்னைக்கே கிளம்புறோம்…” என கூறியவர்களை
” சாரி அங்கிள் அப்பா இவ்வளவு நேரம் முழிச்சு இருந்து இப்பதான் மாத்திரை போட்டு தூங்கினாரு. எப்படியும் அவர் முழிக்க ஒருமணி நேரமாவது ஆகும்…. அதான் நீங்க சாப்பிட்டு ரெடியாகிறதுக்கும் டைம் சரியா இருக்கும் அதான் சொன்னேன்…” பணிவாக கூற… அவர்களும் சம்மத்திதனர். சாதனா மனதில் “இந்த அண்ணா (அண்ணா…!) ஏன் நார்மலாவே பேசமாட்டிங்குறாரு…என்னமோ ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து…. இழுத்து…. கேட்கவே எரிச்சலா இருக்கு…?” முணுமுணுத்து கொண்டாள். நம் நாயகி.. அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, உணவருந்திவிட்டு வெளியே வருவதற்கும்… பிரகாஷ் வந்து அவர்களை அழைப்பதற்கு சரியாக இருக்க அவர்கள் பிரகாஷின் தந்தையை பார்க்க சென்றனர்.
பிரகாஷின் தந்தை தயாளன், பெட்டில் சாய்ந்து ஓய்வாக அமர்ந்திருந்தவர்… இவர்களை பார்த்ததும்.. புன்னகையுடன் கை கூப்பி எழுந்திருக்க முயன்றார். அவரை அவசரமாக தடுத்த கருணாகரன் ”பரவாயில்ல சார் இருக்கட்டும்… இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு…” கருணாகரன் விசாரிக்க.… “ம்.. இருக்கேன் சார்…உடம்புல சக்தி இருக்கிற வரைக்கும் வேலை… வேலைன்னு அலைஞ்சு…. குடும்பத்தை கவனிக்காம…. இருந்திட்டேன். அதோட விளைவு சொத்து நிறையா இருக்கு….ஆனா, என் பையன் தனியா ஆகிட்டானே… எனக்கு பிறகு யார் அவனை பார்த்துக்குவா…? அப்படிங்கிற கவலைதான் என்னை ரொம்ப வாட்டுது….” என கவலையுடன் பேச… “ஏன் சார் இப்படி எல்லாம் பேசறிங்க… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது… பிரகாஷ்க்கு ஒரு கல்யாணம் பண்ணி வைங்க… ஒரு பேரனோ பேத்தியோ.. வந்துட்டா உங்களுக்கு இந்த தனிமை உணர்வு போய்டும் சார்…” கருணாகரன் ஆறுதலாக கூறினார்.
” அதே தான் சார் நானும் நினச்சேன்… ஆனா இதுக்கு பொண்ணு வீட்டுல சம்மதிப்பாங்களா…?ன்னு தெரியலை…” என கூற… கருணாகரன் “ என்ன சார் பிரகாஷ்க்கு என்ன குறை…? பார்க்க கண்ணுக்கு லட்சணமா இருக்கார்… நல்லா சம்பாதிக்கிறார். நல்ல ஹெல்ப்பிங்க் மைண்ட் வேற…இப்படிபட்டவர வேண்டாம்னு சொல்ல யாருக்கு மனசுவரும்…?என கருணாகரன் கூற… அதுக்காகத்தான் நான் உங்களை பார்க்கணும்னு நினச்சேன்…”என தயாளன் கூறினார்… அவர்கள் குழப்பத்துடன் தயாளனின் முகத்தை பார்த்தனர்… அவர்களின் முகத்திலிருந்தே மனதில் இருப்பதை அறிந்தவர் “ நான் சொல்ல வர்றதை நீங்க கொஞ்சம் பொறுமையா கேட்கணும்… என் பையன் பிரகாஷ பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க..?” என கேட்க… ”எதற்கு இந்த கேள்வி..” மனம் கேட்டாலும்.. ”எங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் பிரகாஷ் ரொம்ப நல்ல பையன், மரியாதை தெரிஞ்ச பையன்…பழகுவதற்கும் எளிமையானவர்….” என கூற..
அப்ப உங்களுக்கு பிரகாஷ புடிச்சிருக்கா…? நீங்க என்ன சொல்லவர்றிங்க எங்களுக்கு புரியவில்லை…” கருணாகரன் கூற… தயாளன், “பொதுவா பிரகாஷ் மாசத்துல பத்து நாள் இங்க தங்கறதே பெருசு… ஆனா அவன் இந்தியா வந்து,,, கிட்டத்தட்ட 15 நாள் ஆகப்போகுது.. நீங்க ஒரு நான்கு நாட்களுக்கு முன்னாடி குன்னூர் வந்திருந்திங்களாமே…? என் கேட்க “ஆமா” என்றார்கள்… உங்கள பார்க்கிறதுக்கு… ஒருமணி நேரம் முன்னாடிதான்… வெளி நாடு போக டிக்கெட் எடுத்து வச்சிருந்தான்.. உங்க கிட்ட பேசிட்டு… அவன் ரூமுக்கு போய் எல்லாம் எடுத்து வச்சிட்டு… ஃப்ளைட்டுக்கு இன்னும் டைம் இருக்க கொஞ்ச நேரம் கீழ வந்து உட்காந்திருக்கான் அப்பதான் உங்க குடும்பத்தை நல்லா பார்த்திருக்கான். நீங்க உங்க மனைவி மக மேல காட்ற, அக்கரையும் பாசமும்.. அவனுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு…
அதனால தான் போக இருந்த வெளிநாட்டு பயணத்தை கேன்சல் பண்ணிட்டு ரெண்டு நாளும் உங்க கூடயே இருந்திருக்கான். அவனுக்கு ரொம்ப ஆசை… உங்க குடும்பம் மாதிரியே அவனுக்கு ஒரு குடும்பம் வேணும்னு…” தன் பேச்சை நிறுத்தியவர்… தொடர்ந்து “ நான் என்ன சொல்ல வர்றேன்னா… அது என்ன உங்க குடும்பம் மாதிரியே… பேசாம உங்க குடும்பமே சொந்தமா வந்தா நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம்…” என கூற… கருணாகரன், நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு புரியலை கொஞ்சம் தெளிவா சொல்றிங்களா…? என குழப்பத்தோடு கேட்க.. தயாளன் “சரிங்க நான் நேரடியாவே விசயத்துகு வாரேன்… “ என்று லேசாக இருமிவிட்டு.. ”என் பையனுக்கு உங்க பொண்ணு சாதனாவ கட்டி கொடுப்பிங்களா? என ஒரு குண்டை தூக்கி போட..
அங்கே குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு… அமைதி நிலவியது… சிறிது நேரம் கழித்து அந்த அமைதியை தயாளனே கலைத்தார்..”என்னங்க நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம அமைதியா இருக்கிங்களே…? என கேட்க”இல்ல சார் தப்பா எடுத்துக்காதிங்க இது சரிவராது…” என கருணாகரன் கூற “ஏன் சரிவராது..? என் பையன உங்களுக்கு புடிக்கலையா…? இல்ல… எங்க குடும்பத்தை புடிக்கலையா…? அதுவும் இல்லைன்னா… எங்ககிட்ட எதாவது தப்பிருக்கா..? இருந்தா சொல்லுங்க அதையும் நாங்க திருத்திக்கறோம்… ஆனா, என்ன காரணத்தினால நீங்க வேண்டாம்னு சொல்றிங்கன்னு…. நான் தெரிஞ்சுக்கலாமா..?” என கேட்க..
கருணாகரன் ஏதோ சொல்ல போகும்முன் ஒரு நிமிஷம் இருங்க…” என கூறிவிட்டு… தன் அருகில் உள்ள போனை எடுத்து, வேலை செய்பவரை அழைத்து இரண்டு காஃபி எடுத்து வர சொன்னவர்.. கருணாகரனிடம் திரும்பி… ”இப்ப சொல்லுங்க ஏன் ஒத்துவராதுன்னு சொன்னிங்க…? அப்படி என்ன ஒத்துவராது…?”சார் முதல் காரணம் எங்க அம்முவோட வயசு… அவ சின்ன பொண்ணு இப்பதான் சார் பன்னிரெண்டாம் வகுப்பே முடிச்சிருக்கா… அவளுக்கு போய் கல்யாணம்…. என் அம்மு படிக்கணும் சார்…” என்று கருணாகரன் முடிக்க.. தயாளன், ஆசுவாசமாக… “அப்பாடா இவ்வளவுதானா… நான் என்னமோ பெருசா எதோ சொல்ல போறிங்கன்னு நினச்சு பயந்துட்டேன்.
நான் சாதனாவ கல்யாணம் பண்ணி கொடுங்கனுதான் கேட்டேன்.. ஆனா இப்பயே கட்டி கொடுங்கன்னு கேட்கலை…” என புதிர் போட்டார் தயாளன்…மங்கையின் முகத்திலு, கருணாகரனின் முகத்திலும் நிம்மதி பரவியது… “என்ன கருணாகரன் சார் எனக்கு தெரியாதா…? என் பையனுக்கும் இப்பதான் இருபத்தி ரெண்டு வயசாகுது… நம்ம சாதனா குட்டிக்கும் இப்பதான் பிளஸ்டூ வே முடிச்சிருக்கா… அதுக்குள்ளவா கல்யாணம் பண்ண கேட்பேன்…?ம்..ம்.. சாதனா படிப்ப முடிச்சிட்டு அவளுக்கு கல்யாண பேச்சு எடுப்பிங்கல்ல…
அப்ப பிரகாஷ்க்கு கட்டி கொடுக்க சம்மதமா..?ன்னு கேட்டேன். ஏன்னா நான் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கு தெரியாது. நான் இருக்கும்போதே… என் பையனுக்கு புடிச்ச, உங்க குடும்பத்துல அவனும் ஒருத்தனா…இருப்பான் அப்படிங்கற உறுதி இருந்தாலே போதும் நான் நிம்மதியா போயிருவேன்..” மீண்டும் இருமியபடி தன் நெஞ்சை நீவிக்கொண்டே தன் செல்லை எடுத்து ஏதோ செய்தி அனுப்பினார்..
“ சே.. மனுசனை ஒருநிமிஷம் தப்பா எடுத்துட்டோமே..!” என மங்கையும், கருணாகரனும் குற்றவுணர்ச்சியில் இருக்க…
அவரின் இருமல் சத்தம் கேட்டு… சுய நினைவுக்கு வந்தனர்..கருணாகரன் அவசரமாக… தண்ணீர் எடுத்து கொடுக்க, அதை குடித்து, சிறிது ஆசுவாசம் அடைந்தார்.. மீண்டும் அங்கு அமைதி நிலவ.. நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லலையே…” மங்கை ஏதோ கூறும் முன் கருணாகரன்..” பிரகாஷ் மாதிரி ஒரு நல்ல பையனை வேண்டாம் என்று யாராவது சொல்வாங்களா.. நிச்சயமா எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்” என கூற… மங்கை அதிர்ச்சியுடன் கணவரை பார்த்தார். பின்பு இதை பற்றி பிறகு அவரிடம் பேசவேண்டும்” என்று நினைத்துகொண்டார். பாவம் இதை பற்றி பேசுவதற்குள் காலம் கடந்திருக்கும் என்பதை.. அறியாமல் போனார் மங்கை…
தொடரும்..
அதியாயம் 12
தயாளன் “ நீங்க சம்மதம் சொன்னது என் மனசுக்கு புது தெம்பு வந்த மாதிரி இருக்கு.. இது போதும்..எனக்கு” என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே வேலையாள், கதவை தட்டிவிட்டு காஃபி ட்ரேயோடு உள்ளே வந்தார். அவர்களுக்கு காஃபி கொடுத்துவிட்டு, சென்றார். மங்கை ”நீங்க பேசிட்டு இருங்க நான் சாதனா என்ன செய்றான்னு பார்த்துட்டு வர்றேன்..” கணவரிடம் கூறிவிட்டு சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் பிரகாஷ் தன் தந்தையின் அறைக்கு வந்து.. “அப்பா உங்களை பார்க்க குருஜி வந்திருக்கார்…” என கூற “என்ன சொல்ற பிரகாஷ்..? குருஜி நம்ம வீட்டுக்கு வந்திருக்காரா,,,? என ஆச்சரியமாக கேட்டு, அவசரமாக எழ போனவரை… ”உட்காரு தயா…” என கட்டளையோடு ஒரு குரல் வாசலில் கேட்க.. “அங்கே தும்பை பூ வெள்ளை தாடியுடன்.. வயதான மனிதர் நின்றிருந்தார்.. ”என்ன குருஜி நீங்க இங்க வந்து இருக்கிங்க… சொல்லி யிருந்தால் நாங்களே வந்திருப்போமே…” பணிவோடு கேட்க.. “நான் ஒரு முக்கியமான விசயமாதான் உன்ன பார்க்க வந்தேன்..
”உன்னை வர சொல்லி ஆர அமர பேசுற விசயமில்ல தயாளா… இது உன் பையன் பிரகாஷ் உயிர் சம்பந்தப்பட்டது…. அதனால் தான் நானே நேரடியாக வந்தேன்..” என கூற.. “என்ன குருஜி சொல்றிங்க..?” என் பையன் உயிருக்கு ஆபத்தா…? என அதிர்ச்சியாக கேட்ட தயாளன் “குருஜி என் உயிர வேண்டுமானலும் தருகிறேன். என் பையன் உயிர காப்பத்தி கொடுத்திடுங்க குருஜி…” என் கண்ணீரோடு வேண்ட… அதை பார்த்திருந்த கருணாகரனுக்கு சங்கடமாக இருந்தது… அவர் எழுந்து செல்ல போக பிரகாஷும், தயாளனும் அவரை தடுத்தனர் “உங்க குடும்ப விசயம் பேசுறிங்க.. நான் எதுக்கு…? நீங்க பேசிட்டு இருங்க… நான் அம்முவும்… என் மனைவியும் என்ன செய்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.” என்று எழப்போக…”பரவாயில்லை கருணாகரன் … இனிமேல் நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர்… உங்களுக்கு தெரியாம இனிமேல் எதுவும் நடக்காது…” என கூறிவிட்டு, ”அப்பறம் இவங்க எங்க குருஜி… நாங்க எந்த ஒரு விசயம் செய்யறதுக்கு முன்னாடி இவர்கிட்ட அனுமதி கேட்டுதான் செய்வோம்…” என்று குருஜியை அறிமுகப்படுத்தினார்
தயாளன்… ”குருஜி இவர் பெயர் கருணாகரன்… நம்ம பிரகாஷோட வருங்கால மாமனார்…” என்று கருணாகரனையும் அறிமுகப்படுத்தினார்… கருணாகரன் குருஜியை பார்த்து வணக்கம் வைக்க… அவர் ஆசிர்வதிப்பதுபோல் கையை கருணாகரனின் தலையில் வைத்தார். இருவரின் அறிமுகமும் முடிந்தவுடன்… குருஜி… ”தயா, நானே பிரகாஷ் கல்யாணத்தை பத்தி பேச தான் வந்தேன்… ஆனால் பொண்ணு இவர் மகள் அல்ல… ” என கூற…. என்ன சாமி சொல்றிங்க…? என தயாளன் அதிர்ச்சியாக கேட்க… ”அவனுக்கு 22வது வயதில் ஒரு கண்டம் இருக்குன்னு அவன் பிறந்தபொழுதே… அவன் ஜாதகத்தை கணித்து சொன்னேன் அல்லவா…? நீயும் உன் மனைவியும் இதற்கு பரிகாரம் இருக்கிறதா…? என கேட்டீர்களே… ஞாபகம் இருக்கா…?” என நினைவுபடுத்த…. ”ஆமா குருஜி இது விதி விட்ட வழி… பரிகாரம் ஏதும் இல்லை… ஒருவேளை கடவுளோட ஆசிர்வாதம் இருந்தால்… அதற்கான பரிகாரம் அவனுடைய 22வது வயதில் தெரியும்ன்னு சொன்னிங்க… இப்ப அதற்கான பரிகாரம் ஏது இருக்கா குருஜி…?” என ஆர்வமாக தயாளன் கேட்க…” ஆமாம் தயா…பிரகாஷ் இந்த கண்டத்துல இருந்து தப்பிக்க வேண்டுமென்றால்…. அவனுக்கு இன்னும் இரண்டு நாட்களில் இந்த ஜாதகம் அமைந்துள்ள பொண்ணுதான்.. மனைவியாக வரணும்..” என்று கூறி அவர் கொண்டுவந்த, ஒரு ஓலையை காட்டினார்… பின்னர் அவரே ”ஏனென்றால் இந்த பெண்ணிற்குத்தான்… மாங்கல்ய பலம் அமைந்துள்ளது… அதாவது இறந்த கணவனை எமனிடமிருந்து மீட்ட சத்தியவானின் மனைவி சாவித்திரியின் அம்சம் நிறைந்தவள் இந்த பெண்….
அதனால் இந்த பெண்ணையே பிரகாஷிற்கு மணம் முடித்துவை…” என கூற பிரகாஷ் ”உங்க பேச்சை எதிர்த்து பேசறேன்னு தப்பா நினைக்காதிங்க குருஜி… நான் ஒரு உண்மையை இப்ப உங்க எல்லார்கிட்டையும் சொல்றேன்…” என்று ஒரு கணம் தயங்கியவன்… என்னை மன்னிச்சிருங்க அங்கிள்… என்று கருணகரனிடம் மன்னிப்பை வேண்டியவன்… “நான் சாதனாவை விரும்பறேன். அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னதே நான்தான்.. ஆனா, அங்கிள் எனக்கு ஜாதகத்துல கண்டம் இருக்குன்னு சத்தியமா தெரியாது…. அப்படி தெரிஞ்சிருந்தா… சத்தியமா எங்கப்பாவ விட்டு உங்கக்கிட்ட பேச சொல்லியிருக்க மாட்டேன்… என்னைய மன்னிச்சிருங்க அங்கிள்…” என்று வேதனையான குறலில் மன்னிப்பை வேண்ட
கருணாகரன் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தார். ”நான் உங்களை இங்க அழைத்திருக்கவே கூடாது… பெரியவங்க சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டு… உங்களுக்கு சங்கடத்தை கொடுத்திட்டேன்… தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க அங்கிள்… இன்னும் நீங்க இங்க இருந்து சங்கடப்பட வேண்டாம்… வாங்க நானே உங்களை வீட்டுல விட்டர்றேன்…” என்று கூறி கிளம்ப போனவனை… “ஒரு நிமிசம் பிரகாஷ்” என்று தடுத்த கருணாகரன் அங்கு தலை குனிந்து வேதனையில் கண்கள் கலங்கி அமர்ந்திருந்த தயாளனை பார்த்தார்… “உங்க அப்பாவுக்காகவாவது நீங்க இந்த ஜாதகத்துல இருக்கிற பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க கூடாதா…?” என கேட்க…
“என்னை மன்னிச்சிருங்க அங்கிள்… ரெண்டு நாளானாலும்… இல்லை ரெண்டு வருஷமானாலும், நான் சாதனா கூட வாழ்ந்தாதான்.. எனக்கு வாழ்க்கை… என் உயிருக்கு பயந்து யாரோ ஒருத்திய கட்டிக்கிட்டு… காலம் முழுவதும்… கஷ்டப்பட முடியாது அங்கிள்…. அதுக்காக இப்பவே சாதனாவ கல்யாணம் பண்ணனும் அப்படின்னு சொல்லலை… என்னுடைய காதல் உண்மயா இருந்தா…. கடவுளோட ஆசிர்வாதமும் எனக்கு இருந்தால்… நாம முதல்ல முடிவு பண்ண மாதிரியே சாதனாவோட படிப்பு முடிஞ்சு… எங்க கல்யாணம் நடக்கட்டும்… அப்படி இல்லைன்னா…ஒரு பெருமூச்சு விட்டவன்… தயவு செய்து எனக்கு பிறகு எங்க அப்பாவ மட்டும் அப்ப அப்ப வந்து பார்த்க்கோங்க…” என முகம் கசங்க கூற, தயாளன் கண்ணீர் விட… கருணாகரன் அவனின் தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்து, குருஜியிடம் திரும்பி… “சாமி நான் அந்த ஜாதகத்தை பார்க்காலாமா…? என கேட்க.. அவர் அதை கருணாகரனிடம் கொடுத்தார். அந்த ஜாதகத்தை பார்த்தவரின் முகம்…ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும்… இருந்தது அவரின் முக மாற்றத்தை பார்த்து மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்…….
குருஜி கொடுத்த ஜாதகத்தை பார்த்து… திகைத்து இருந்த, கருணாகரனின் முகத்தை பார்த்திருந்த… மூன்று கயவர்களின் முகத்தில், புன்னகை இருந்தது…. காரணம் அது சாதனாவின் ஜாதகம்… கருணாகரன் “ சாமி இந்த ஜாதகம் என் மகளுடையது… உங்களுக்கு எப்படி இது கிடைத்தது…? குழப்பத்துடன் கேட்க…. “என்ன இது உன் மகளுடையதா…?என்று ஆச்சரியமாக கேட்டு… தயாளன் புறம் திரும்பி “தயா கடவுளோட ஆசிர்வாதம் உன் பையனுக்கு பரிபூரணமா இருக்கு…. இல்லைன்னா… கடவுள் எதுக்காக… என்னை இங்க வரவழைக்கணும்…? எதுக்காக இவங்க குடும்பத்தை கண்ணில் காட்டணும்…? நான் கொண்டுவந்த ஜாதகமும், இவர் பொண்ணோட ஜாதகமும் ஒத்துப்போகணும்…? எல்லாமே கடவுளோட ஆசிர்வாதம் தான் வேற என்ன சொல்ல…?
”ம் நாளைக்கே இவங்க திருமணத்திற்கு ஏற்பாடு செய்ங்க… நேரம் ரொம்ப குறைவா இருக்கு…” என அவசரமாக கூறினார் அந்த குருஜி… “ பிரகாஷ் இல்லை குருஜி… எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம்… சாதனா இன்னும் குழந்தை மாதிரிதான்.. அதனால, ஏற்கனவே சொன்னமாதிரி… சாதனாவோட படிப்பு முடியட்டும்… அதுவரைக்கும் நான் உயிரோடு இருந்தால், சாதனாவை கல்யாணம் செஞ்சிக்கிறேன்…அதுவரைக்கும் தயவு செய்து இந்த பேச்சை எடுக்காதிங்க…” என்று பேச்சை முடித்துவிட்டு…”அங்கிள் வாங்க நம்ம போகலாம்…” என கூற.. கருணாகரன் “ஏன் பிரகாஷ்! என் சம்மதத்தோட உங்க கல்யாணம் நாளைக்கு நடந்தால், உனக்கு சம்மதமா…? என கேட்க…
பிரகாஷ் உள்ளுக்குள் குதூகலித்தவன், வெளியே..” அதுவந்து… அங்கிள் ஆண்ட்டி இதுக்கு சம்மதிக்கணுமே… அதுவுமில்லாம நீங்களும் இதுக்கு முழு மனதோட சம்மதிக்கிறிங்களான்னு தெரியாமல்… என்னால சம்மதம் சொல்ல முடியாது அங்கிள்…” என்றவனை பெருமையுடன் பார்த்தார் கருணாகரன்… “எப்ப… உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும்… என் பொண்ணு கழுத்துல கட்ற தாலிதான் உன் உயிர காப்பாத்தும் என்று தெரிஞ்சும், சாதனாவுக்காக உன் கல்யாணத்தை தள்ளி வைத்தாயோ…. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்… உனக்கும் சாதனாவிற்கும் நாளை கல்யாணம் நடத்தி வைக்க வேண்டும் என்று… எனக்கு என் அம்மு வாழ்க்கையும் முக்கியம்தான்… இதே! இந்த இடத்துல நீ இல்லாம வேற யாராவது இருந்திருந்தால்… நிச்சயமா நான் இந்த கல்யாணத்திற்கு, சம்மதித்திருக்க மாட்டேன்… உன்னை விட என் பொண்ண யாரு நல்லா பார்த்துக்குவாங்க….? என்ன ஒண்ணு நாளு வருஷத்துக்கு பிறகு நடக்க வேண்டிய கல்யாணத்தை இப்பவே நடத்த வேண்டிய சூழ்நிலை வந்ததால…. என் பொண்ணு படிப்ப நிறுத்திட கூடாது… அதேமாதிரி அம்மு படிப்பு முடியறவரைக்கும்… கணவன் அப்படிங்கிற உரிமை நீங்க எடுத்துக்க கூடாது…இதற்கு சம்மதமென்றால், எனக்கும் இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்” என்று சாதனாவின் வாழ்க்கையை.. தன்னை அறியாமலயே புதை குழியில் தள்ளினார் அந்த பாசமிகு தந்தை…
கருணாகரன் கூறியதை கேட்ட பிரகாஷ், மனதில் வஞ்சமுடன், வெளியே “ என்ன அங்கிள் என்னைய பார்த்து இப்படி சொல்லிட்டிங்க…? என்று வருத்தப்பட்டவன்… சாதனா உங்களுக்கு எப்படியோ அதேமாதிரிதான்.. எனக்கும் அவள் ஒரு குழந்தை…” அந்த குழந்தை என்ற வார்த்தையை அழுத்தி கூறினான். அதைக் கேட்டு கருணாகரன் சந்தோசமடைந்தார்…
உள்ளே சாதனாவின் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க…. வெளியே தோட்டத்தில் சாதனா… “அம்மா எனக்கு ரொம்ப போரடிக்குது எப்பம்மா நம்ம வீட்டுக்கு போவோம்..? என அலுத்துக்கொள்ள….மங்கை ஆச்சரியமாக சாதனாவை பார்த்தார்… பூக்களென்றாலே உயிராய் இருக்கும் மகள், இங்கு விதம் விதமாக அழகாக இருந்த பூக்களை பார்த்தும் போரடிக்குது என்றால்… “என்ன அம்மு .. என்ன ஆச்சு…? உனக்குத்தான் பூக்கள்னாலே புடிக்குமே… இங்க இவ்வளவு பூவை பார்த்தும் போரடிக்குதுங்கற…என்னடா…? என பரிவோடு கேட்க “ஒண்ணுமில்லமா இங்க இருக்கவே புடிக்கலை ஏன்னு தெரியலை… எப்படா நம்ம வீட்டுக்கு போவோம்னு இருக்கு…” அன்னையின் தோள் சாய்ந்து கூறினாள் சாதனா
”சரி வா உள்ள போகலாம்… அப்பா பேசி முடிச்சிட்டாங்கன்னா நம்மள கூட்டிட்டு போக சொல்லலாம்…” சாதனாவை சமாதானம் செய்தவாறே… அவளை உள்ளே அழைத்து சென்றார். மகளை பார்த்த கருணாகரன் மனதில் லேசாக குற்றவுணர்ச்சி எழ… “அவசரப்பட்டுவிட்டோமோ…?” என சிந்திக்க தொடங்கினார்… தந்தையின் தலை குனிவை சாதனா பார்த்துவிட…”ஏன் அப்பா என்னை பார்த்துட்டு தலை குனிஞ்சிட்டாங்க..?” என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள்… இது எதையும் கவனிக்காத மங்கை, கணவரிடம்… ”என்ன்ங்க வந்து ரொம்ப நேரமாச்சு… நாம வீட்டுக்கு போகலாமா..?” என்று கேட்டு விட்டு தயாளனிடம் திரும்பி… “உங்க உடம்பு சீக்கிரமா குணமாக நான் கடவுள்க்கிட்ட வேண்டிக்கிறேன்…” என்று கை கூப்பி வணங்கியவர்… பிரகாஷிடம் திரும்பி..”அப்பாவ நல்லா பார்த்துக்கோங்க தம்பி… என்னாலையும், சாதனாவாலையும் அடிக்கடி வர முடியாது…ஆனால் என் கணவரை வந்து அடிக்கடி பார்க்க சொல்றேன்..” என்று அவனிடமும் விடைபெற்றார்… அவர் பேசுவதை கேட்டு மனதில் சிரித்து கொண்டிருந்தான் பிரகாஷ்…
”உன்னால் அடிக்கடி வர முடியாதா…? நாளை ஒரு நாள் மட்டும் பொறுத்துக்க… அப்பறம் அடிக்கடி… என் பொண்ண பார்க்கணும்னு எங்கிட்ட வந்து கதறப்போற…” என கூறிக்கொண்டான்… அனைவரிடமும் கூறிவிட்டு தன் கணவரை பார்க்க அவர் அதே இடத்தில் இருப்பதை பார்த்து… “அவரிடம் குனிந்து என்னங்க நம்ம வீட்டுக்கு போக வேண்டாமா..? சாதனாவுக்கு இங்க போரடிக்குதாம்…சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்னு என்ன நச்சரிச்சுட்டு இருக்கா… எல்ல்லார்க்கிட்டையும் சொல்லிட்டு வாங்க” என கூற ”மங்கை ஒரு நிமுஷம் நான் சொல்றத பொருமையா கேளு…” என்று தடுமாற்றத்துடன் பேச… கணவரின் தடுமாற்றம்.. அவருக்கு ஏதோ விபரீதத்தை உணர்த்தியது… ”என்ன சொல்ல போறிங்க..?” மங்கை லேசான பதட்டத்துடன் கேட்க… நம்ம அம்முவுக்கும், பிராகாஷுக்கும் நாளைக்கு கோவில்ல வச்சு கல்யாணம்…. ” என மங்கையின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டார்… மங்கை தன் காதுகளையே நம்பாமல்…மீண்டும் கணவரிடம் கேட்க… அவர் “உன் காது ஒன்றும் பழுது இல்லை மங்கை… நீ கேட்டது உண்மைதான்… அம்முவுக்கும், பிராகாஷுக்கும் நாளைக்கு கோவில்ல வச்சு கல்யாணம் நடக்க போகுது அதுவும் என் முழு சம்மதத்தோட….” என கூற மங்கை அதிர்ச்சியாக கருணாகரனிடம் “ என்ன சொல்றிங்க நீங்க … கலயாணம் பண்ற வயசா..? நம்ம அம்முவுக்கு..? உங்களுக்கு இப்படி சொல்ல எப்படிங்க மனசு வந்தது…? அவளுக்கு அம்மங்கிற முறையில எங்கிட்ட கலந்து பேசணும்னு கூட தோணலையா..? என்று ஆதங்கத்துடன் கேட்டவர்… “நாளைக்கே அம்முவுக்கு கல்யாணம் செய்யணும்னு அப்படி என்னங்க அவசியம்… இல்ல என்ன அவசரம்..? என்று ஆத்திரத்துடன் கேட்க… சாதனா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
கருணாகரன் சற்று முன்பு அறையில் நடந்தவற்றையும் பிரகாஷ் மறுத்ததையும், பிறகு தான் சமாதானம் செய்ததையும் கூறினார்… அவர் கூறியதை கேட்டும் மங்கையின் மனம் சமாதானமாகவில்லை… ஏதோ தப்பு நடக்க போவதாக அவரது உள்ளுணர்வு சொல்லிகொண்டே இருந்தது… அவர் கணவரிடம் “நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது…” என்று உறுதியாக கூற என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றிருந்தார் கருணாகரன்..உள்ளுக்குள் பிராகஷ் பெரும் வஞ்சினத்துடன் மங்கையை சபித்து கொண்டிருந்தான்… ”மங்கை நான் வாக்கு கொடுத்திட்டேன் மங்கை…? கருணாகரன் கூற…”உங்க வாக்கோட என் பொண்ணு வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்…“ என்று கூறியவரை “அப்ப அம்மு எனக்கு பொணு இல்லையா..? லேசான கோபத்தோடு கேட்க…
”அப்படி நினச்சு இருந்திங்கன்னா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டிங்க… நீங்க இவங்களோட பேசிட்டு, வாங்க நான் அம்முவ கூட்டிட்டு போறேன்.” என சாதனாவை கை பிடித்து அழைத்து செல்ல… சாதனா “எனக்கு சம்மதம்” சம்பந்தமில்லாமல் திடீரென்று கூற.. அனைவரும் அவளை ப்ர்ர்த்தனர்…” என்ன சொல்றமா..? எதுக்கு சம்மதம்…?” மங்கை கேட்க… ”எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்…” என தன் தந்தையை பார்த்துக்கொண்டே கூற, அவரின் முகத்தில் நிம்மதி பரவுவதை பார்த்திருந்தாள்.
மங்கை கோபமாக “ அப்பாவும் மகளும் என்ன நினச்சிட்டு இருக்கிங்க…? கல்யாணம்னா… உங்களுக்கு என்ன விளையாட்டா போச்சா…? வேண்டாம்டா அம்மு.. இந்த அம்மா சொல்றதை கேளு… உனக்கு இன்னும் வெளி உலக வாழ்க்கையே தெரியலைடா… இதுல கல்யாண வாழ்க்கை… அய்யோ… நினச்சு பார்க்கவே பயம்மா இருக்கே…” என கூறி அழ… சாதனா “ அம்மா அழாதம்மா அப்பா எனக்கு என்ன கெடுதலா செய்ய போறாங்க…? அவருக்கு அந்த அண்ணா மேல நம்பிக்கை இல்லாமல்… இப்படி செய்யமாட்டாங்க…” என உறுதியாக கூற.. அவளின் “அண்ணா” என்ற அழைப்பில் அனைவரும் ஒரு நொடி திகைக்க… மங்கை கோபமாக கணவரை முறைத்தார்..
கருணாகரன் மீண்டும் அவசரபட்டு விட்டோமோ..? என யோசிக்க.. அவர் யோசிப்பதை பார்த்த பிரகாஷ், குருஜியிடம் கண்ணை காண்பித்தான்.. அவர் மங்கையிடம் திரும்பி… இங்க பாரும்மா… எந்தெந்த நேரத்துல எது எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்… நீங்க வந்த அதே நேரத்துல நான் ஏன் வரணும்…? நான் கொண்டு வந்த ஜாதகமும்.. உன் பொண்ணு ஜாதகமும் சரியா ஏன் பொருந்தணும்…? இதுக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரியுமா…? தெரிஞ்சா சொல்லிட்டு நீங்க தாராளமா போகலாம்…” என கூற… மங்கை பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக இருந்தார்…இதுதான்மா கடவுளோட திருவிளையாடல். இது கடவுள் போட்ட முடிச்சும்மா… அத நீங்களோ நானோ நினச்சா தடுக்க முடியாது…” என்று வேதாந்தம் பேசினார்.
பிரகாஷ் மங்கையிடம் வந்து… “ஆண்ட்டி என்னை உங்களுக்கு புடிக்கலையா…? என பாவமாக கேட்க… அச்சோ அப்படி இல்லப்பா…நீ நல்ல பையந்தான்.. ஆனா சாதனாவுக்கு இன்னும் கால்யாணம் பண்ற வயசு வரலைன்னுதான் சொல்றேன்.” என கூற… ”நீங்க ஏன் ஆண்ட்டி சாதனாவை இன்னொரு வீட்டுக்கு மருமகளா ஆக போறான்னு பார்க்கிறிங்க…?இந்த கல்யாணம் மூலமா, உங்களுக்கு ஒரு பையன் கிடைப்பான்னு நம்புங்க ஆண்ட்டி… சாதனா கழுத்துல நான் தாலி கட்டினவுடனே அவளோட குடுமபம் நடத்துவேன்னு… நினச்சிங்களா..? அங்கிள்கிட்ட சொன்னதுதான் உங்க கிட்டேயும் சொல்றேன், உங்களுக்கு சாதனா எப்படியோ அதேமாதிரிதான் எனக்கும்” என உருக்கமாக கூறியவன்… “இதுக்குமேல உங்களுக்கு தயக்கம் இருந்துச்சுன்னா… இந்த கல்யாணம் வேணாம் ஆண்ட்டி..” என கூற
மங்கை சாதனாவை பார்த்து இதுதான் கடவுளோட சித்தம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்…? என்று கூறி அரை மனதாக சம்மதித்தார்… கணவரும் மகளுமே இதில் சம்மதிக்க… தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல்.. இருந்தார். அவர் சம்மதம் கிடைத்தவுடன்… வேலைகள் மடமடவென்று நடந்து…. இதோ சாதனா கோவிலில் பிரகாஷின் அருகில்…. கழுத்தில் மாலையோடு மணப்பெண்ணாக இருந்தாள்… அவளுக்கு அவன் அருகில் இருப்பது… பிடிக்காத உணர்வை தோற்றுவிக்க.. அருகில் நின்றிருந்த மங்கையை ஒட்டி நின்றிருந்தாள். அதை பார்த்த மங்கை… சாதும்மா இப்பவும் ஒண்ணும் இல்லை…உனக்கு வேண்டாம்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்டா…” என கெஞ்ச.. சாதனா ஒன்றும் கூறாமல்… “அப்பாவ பாருங்கம்மா… அவர் எவ்வளவு அவர் கொடுத்த வாக்கு நல்லபடியா நடக்கணும்ன்னு எவ்வளவு டென்சனா இருக்காரு… அப்பா முகத்துல நிம்மதிய பார்க்கணும்மா… அதனாலதான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்….” என தந்தைக்கு குறையாத பாசத்தை காட்டினாள்…
ஐயர் தாலி எடுத்து கொடுக்க வர… அதை தடுத்த பிரகாஷ், “எனக்கு என் அத்தையோட ஆசிர்வாதம் முழுமையா வேணும்… அதனால அவங்களே… அவங்க கையால தாலி எடுத்து கொடுக்காட்டும்” என்று மனதில் குரூரத்துடனும்…. வெளியில் புன்னகையுடனும் சொன்னான்….. கருணாகரன் பெருமையாக மங்கையை பார்க்க….. மங்கை ”கடவுளே… பையனும் நல்ல பையனாகத்தான் இருக்கிறான்… எங்க ரெண்டு பசங்களும் எந்த குறையும் இல்லாம… நீண்ட ஆயுளோட…… நன்றாக வாழவேண்டும்…!” என்று மனதார வேண்டி தாலியை பிரகாஷ் கையில் கொடுத்தார்…. அங்கிருந்த அனைவரும் அட்ஷதை தூவ… பிரகாஷ் சாதனாவின் கழுத்தில் தாலியை அணிவித்தான். சாதனா அப்பொழும் தந்தையைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்….. அவர் முகத்தில் அவர் முகம் சந்தோசமாக இருப்பதை பார்த்து தானும் சந்தோசமடைந்தாள்.
திருமணம் முடிந்தவுடன் குருஜி… மணமக்கள் அருகில் வந்து…ஆசிர்வதித்துவிட்டு, ”பிரகாஷ் இன்னும் ஒரே ஒரு பரிகாரம் மட்டும் உள்ளது… அதுவும் முடிந்துவிட்டால்…. உனக்கு இருக்கும் கண்டம் முழுமையாக விலகிவிடும்….” என கூற… கருணாகரன் என்னவென்று கேட்க, அது ஒண்ணுமில்ல… அவங்க குல தெய்வ கோவிலுக்கு… மணமக்கள் மட்டும் சென்று… விளக்கேற்றி வைத்து விட்டு…. இரவு ஒருநாள் மட்டும் அங்கு தங்கவேண்டும்….” என கூற மங்கையும், கருணாகரனும் திகைத்தனர்…
கருணாகரன் “நேற்று நீங்க இதப்பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே சாமி…. இதுவரைக்கும் அம்மு அதுமாதரி தனியா எங்கயும் தங்கினதே இல்லையே…. என் மனைவியாவது அவங்க கூட போகலாமா சாமி… அம்மு இன்னும் சாப்பிட கூட இல்லையே..” என பதட்டத்தோடு கேட்க… “ இல்லைப்பா… இது பரிகாரம் பூஜை… இது யாரு செய்யணுமோ அவங்க மட்டும்தான் போக வேண்டும்… அவன் மனைவி மட்டும் இதில் விதிவிலக்கு… ஏனென்றால், அவனுடைய உயிரை காப்பாற்றும் சக்தி அவளுடை மாங்கல்யத்தில்தான் இருக்கு…
அதனால் தான் சாதனா.. பிரகாஷுடன் இருப்பது அவசியம்… அது மட்டும் இல்லாம.. இது ஒரு நேரம் மட்டும் விரதம் இருந்து… செய்யவேண்டிய பரிகாரம். அதனால் காலையில் ஆகாரம் எதும் எடுக்க கூடாது…” என உறுதியாக கூறினார்… மங்கை “சாமி அவ பசி தாங்கமாட்டா…? மகளை அறிந்தவராக பேச… “வேறு வழி இல்லையம்மா…” முடித்துவிட்டார் குருஜி…
தயாளன் அவர்கள் அருகில் வந்து… ”பயப்படாதிங்க சம்பந்தி… அங்க கோவிலுக்கு கொஞ்சம் பக்கத்திலேயே நம்மளோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு… அங்க வேலை செய்ய ஆட்களும் இருக்காங்க… இது எல்லாத்தையும் விட பிரகாஷ் சாதனாவ நல்லா பார்த்துக்குவான்….” என்று சமாதானம் செய்தார்… பிரகாஷ் கருணாகரனிடம் ”அங்கிள், ஆண்ட்டி..நான் அப்ப சொன்னதுதான் இப்பவும் சொல்றேன்… நீங்க சாதனாவ குழந்தை மாதிரி பார்க்குறிங்க… நானும் அப்படித்தான் பார்க்கிறேன்… என்னை நம்புங்க…” எறுவிட்டு சாதனாவை அழைத்து கொண்டு காரில் ஏறப்போனான்.. அவள் அவன் கையை உதறிவிட்டு… “அப்பா என்ன எங்க கூட்டிட்டு போறாங்க…? நீங்களும் அம்மாவும் என் கூட வரலையா…? நீங்க இல்லாம நான் எப்படி இந்த அண்ணாகூட போவேன்… ம்…ம்.. நீங்களும் வாங்க..” என உதட்டை பிதுக்கி அழுக.. பிரகாஷின் விழிகள் யாரும் அறியாமல் மோகத்தோடு அவளின் இதழ்களை பார்த்தது… கருணாகரன் தவிப்புடன் மகளை பார்த்தார்….
”அம்மு, அப்பா சொன்னா கேட்ப்பிங்கதானே..? நீங்க இவங்க கூட முன்னாடி போவிங்களாம்… அம்மாவும், நானும் உன் பின்னாடியே வந்திருவோமாம்….” சமாதானம் செய்ய.. “நிஜமா வந்துருவிங்களா…?”
”கண்டிப்பா வந்திருவோம்டா…”
”அப்ப சரி நான் இந்த அண்ணாகூட போறேன் நீங்க சீக்கிரமா வந்திருங்க..? என்று காரில் ஏறப்போனவளை தடுத்த மங்கை……
”சாதும்மா இனிமேல் பிரகாஷ அண்ணான்னு கூப்பிட கூடாது…”
“ அவங்க வயசுல பெரியவங்கதானே.. அப்பறம் ஏன்மா அப்படி கூப்பிட கூடாது…?என அப்பவியாய் கேட்க
மங்கை கணவரிடம் திரும்பி… “நீங்க சொன்னாதான் கேள்வியே கேட்காம சம்மதிப்பா… அதனால நீங்களே அவக்கிட்ட சொல்லுங்க…” கணவரிடம் கோபத்தோடு கூறினார்… அவரும் மனைவியின் மனம் புரிந்து… சாதனாவிடம் பேச வர… பிரகாஷ் தடுத்து விட்டான்…. “ வேண்டாம் அங்கிள் அவளுக்கு எப்படி கூப்பிட தோணுதோ… அப்படியே கூப்பிடட்டும்… பிராமின் எல்லாம் அவங்க கணவனை இப்படித்தான் கூப்பிடுவாங்க நான் அப்படியே நினச்சிக்குறேன்..” இப்பதானே அவளுக்கு நான் பழக்கம்… போக போக சரியாயிரும்…” என சமாதானம் செய்தான்…அவனின் பேச்சில்..மங்கையும், கருணாகரனும், மனம் குளிர்ந்தனர்…. சாதனா பிரகாஷோடு… தனியே பயணமானாள்…
அத்தியாயம் 14
பிரகாஷ் காரை ஓட்ட… சாதனா… காரின் கதவருகில் ஒட்டி உட்கார்ந்திருந்தாள்…அதை அவன் கவனித்தாலும்…. ”இன்னும் கொஞ்ச நேரம் தாண்டி… அப்பறம் எப்படி தள்ளி போகிறாய்.. என்று நானும் பார்க்கிறேன்….” மனதில் வன்மத்துடன் கூறிக்கொண்டான்…. அதிகாலையில் விழித்ததாலோ… இவ்வளவு நேரம் கோவிலில் நின்றிருந்ததாலோ… இல்லை காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததாலோ… சாதனாவிற்கு லேசாக கண்ணை சுழற்ற… கதவில் சாய்ந்தபடியே உறங்கி விட்டாள்…. அவள் உறங்குவதை பார்த்திருந்தவன்… வழியில் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தி….. அவன் மட்டும் உணவருந்திவிட்டு வந்தான்…
ஒருவழியாக அவர்கள் வரவேண்டிய இடம் வந்ததும்… வண்டியை நிறுத்தி… சாதனாவை கன்னத்தில் அழுத்தமாக தட்டி எழுப்பினான்….நல்ல உறக்கத்தில் இருந்தவள் தன்னை யாரோ வேகமாக தட்டி எழுப்பவும்… அந்த வலியில் பதறிக்கொண்டு எழுந்தாள்… அவள் முகத்துக்கு வெகு அருகில் பிரகாஷின் முகம் இருக்கவும்…பயத்தினில் பின்னடைந்தாள்… அவள் பயத்தை ரசித்தவனாக… ”நம்ம வர வேண்டிய இடம் வந்திருச்சு… இறங்கு…” என கட்டளையிட்டான்… அவள் சிறிது பயத்தோடு காரைவிட்டு இறங்கியவள்… மேலும் பயந்தாள்… அது சுற்றிலும் காடாக இருக்க நடுவில் அந்த வீடு இருந்தது… அவள் பயத்துடனே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு….நம்ம கோவிலுக்குத்தான வந்திருக்கோம்… ஆனா இங்க கோவில் ஏதும் இல்லையே…? என கேட்க…
”ஆமா நம்ம கோவிலுக்குத்தான் வந்திருக்கோம்… கோவிலுக்கு போக இன்னும் கொஞ்சம் நடந்து போகணும்.. இது நம்ம வீடுதான்…வீட்டுக்குள்ள போய் கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு அப்பறம் நம்ம கோவிலுக்கு நடந்தே போகலாம்…” என கூறி அவளை உள்ளே அழைத்து சென்றான்.. உள்ளே வந்தவுடன்..தன்னிடம் உள்ள ரிமோட்டின் மூலம்… கதவை சாத்தியவன்…அங்கு தன் போனில் ஏதோ செய்துகொண்டிருந்த சாதனாவிடம், வந்தவன் அவள் கன்னத்தை வலிக்க நிமிர்த்தி “அப்பா…! உன்ன இந்த இடத்துக்கு வரவழைக்க எவ்வளவு பாடுபட்டேன்…” முகத்தில் குரூரமாக வைத்துக்கொண்டு கூற…சாதனா அவன் பேச்சை கவனிக்காமல்… “அண்ணா இங்க டவரே கிடைக்க மாட்டிங்குது… அப்பறம் எப்படி… நான் அம்மாக்கிட்டையும்… அப்பாக்கிட்டயும் பேசறது….? நம்ம இருக்கிற இடத்தை சொல்லி வரசொல்வது…? உங்க போன்ல டவர் இருக்கா…? என பெற்றோரை தேடும் குழந்தையாக கேட்க
பிரகாஷ் அவளை பார்த்துகொண்டே நிதானமாக வந்தவன் அவள் கையிலிருந்த போனை வாங்கி அதை ஓங்கி தரையில் அடித்தான்…சாதனா விக்கித்து நின்றிருக்க… மீண்டும் அவள் கண்ணங்களை வலிக்கும்படி பிடித்தவன்… இன்னொரு தடவை என்னை அண்ணான்னு சொன்ன.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” என்று ஆங்காரமாக கத்தியவன் அப்படியே அவளை தள்ளிவிட அங்கிருந்த சோபாவில் விழுந்தாள்… அவன் பேச்சிலும், அவன் செயலிலும் அதிர்ந்திருந்தவள்…பயத்தில் உடல் நடுங்கினாள்… அவளின் நடுக்கத்தை ரசித்து கொண்டே “ம்ம்ம் பரவாயில்ல நான்.. என்ற்று ஆரம்பித்து ”சாரி நாங்க நடிச்சது வீண் போகலை… எங்க நடிப்புக்கு ஏத்தவதான் நீ..” எகத்தாளமாக கூற… சாதனா ஏதோ சரியில்லை என்று உணர்ந்து, நடுக்கத்தோடு அவனை பார்த்தாள்
”என்ன பார்க்கிற…? என்னடா என்னமோ நடிப்புன்னு சொல்றாங்கன்னு பார்க்கிறாயா…? என கேட்டவன்… “ஆமாடி எல்லாமே நடிப்புதான்… என் அப்பனா ஒருத்தன் இருந்தானே அவனும் நடிப்புதான்…..வெள்ளை தாடியோட குருஜின்னு ஒருத்தன் வந்தான்னே அவனும் நடிப்புத்தான்….. இதெல்லாம் எதுக்குன்னு பார்க்கிறியா… உனக்காகத்தான்…..எப்ப உன்ன முதல் முதலா எங்க ஹோட்டல் தோட்டத்துல பார்த்தேனோ அப்பவே உன்ன முழுசா பார்க்கணும்னு தோணிருச்சுடி… நான் இதுவரைக்கும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கேன்..தொட்டிருக்கேன்… ஆனா உன்னோட குழந்தைத்தனமான அழகு… அப்படியே என்னை போதை ஏத்திருச்சுடி…..” என்று கண்ணி மூடிக்கொண்டு ஒரு வித மயக்கத்துடன் கூற… அதை பார்த்திருந்த சாதனாவின் இதயம் பயத்தில் டம் டம் என்று அடித்திருந்தது…..
மீண்டும் அவனே “என்னமோ தெரியல உன்னோட குழந்தைத்தனமான முகத்துல பயத்தையும்… அழுகையும் பார்க்கணும்னு ஆசை… உன்னைய கடத்திட்டு வந்து கூட என்னொட ஆசையை நிறைவேத்தி இருக்கலாம்…. ஆனா உங்க அம்மதான் எனக்கு இப்படி ஒரு யோசனையே கொடுத்தா…” என சிரிப்புடன் கூற… சாதனா அதிர்ச்சியுடன் பார்த்தாள் “ஆமாடி நான் உண்மையதான் சொல்றேன்… என்னமோ அன்னைக்கு ப்ளஸ்டூல நல்ல மார்க் வாங்கினதுக்கு, உனக்கு கை கொடுக்க வந்தப்போ.. உன் கற்பே போன மாதிரி ரொம்ப சீன் போட்டு தடுத்தாள்ல… அதான் அவ சம்மதத்தோட…, அவ மகள் வாழ்க்கைய நாசமாக்க…, அவ கையால் தாலி எடுத்து கொடுக்க சொன்னேன்… எப்படி என் திட்டம்..?” என்று தன்னையே சிலாகித்து கொண்டான்…..
”நீ இந்த வீட்ட விட்டு போறப்ப சக்கையாகி, வாழ்க்கையே வெறுத்து, ஏண்டா இந்த பூமில வாழறோம்…” அபடிங்கற மனதோடதான் போகப்போற… உன்ன பார்த்து.. உங்க அம்மாவும்… அப்பாவும்… கதறணும்… அதுதாண்டி எனக்கு வேணும்…” என்று நீளமாக பேசியவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து…”உன்னை இந்த அதிர்ச்சில இருந்து கொஞ்சம் வெளிய கொண்டுவரணுமே…” என்று யோசித்தவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவள் அருகில் சென்று அவளின் இதழை வன்மையாக சிறை செய்தான்… ஒரு நொடி திகைத்தவள் மறுநொடி அவனை தள்ளிவிட செய்த முயற்சிகள் வீணானது. அவன் அவள் இதழை பிய்த்து விடுவதுபோல் கடிக்க… அவள் ”அய்யோ அண்ணா வலிக்குது விடுங்க…” வலியில் துடித்தாள்…
அவன் உதடுகள் உவர்ப்பு சுவையை அறிந்த பிறகுதான் அவளை விட்டான்… அவள் உதட்டில் வழிந்த ரத்தம், அவன் உதட்டிலும் பரவி இருந்தது.. அதை தன் நாவால் துடைத்தவன்… ” ம்ம்ம் உன் ரத்தமே இவ்வளவு சுவையா இருக்கே…? மத்ததெல்லாம்…” வக்கிரத்துடன் கூறினான். சாதனாவின் உதட்டில் இன்னும் ரத்தம் வந்து கொண்டிருந்தது.. அவளுக்கு பயத்தில் உடல் நடுங்க, “ ஐயோ அம்மா ரொம்ப வலிக்குதே…! அப்பா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரம் வாங்களேன்… சாதனா கதற அதை பார்த்தவன் வாய்விட்டு சிரித்தான்…
”இது சும்மா சாம்பிள்தாண்டி இனிமேல்தான் இருக்கு உனக்கு…” என கூறி அவளை நெருங்க சாதனா அச்சத்துடன் பின்னடைந்தாள்…. அவளை நெருங்கும் வேளை பக்கத்து அறையில் இருந்து இரண்டு பெண்கள் வந்தனர்…அவர்களை பார்த்தவுடன் சாதனா அவர்களிடம் விரைந்து சென்று…” அக்கா என்ன காப்பாத்துங்க இந்த அண்ணா, என்னமோ செய்றாங்க எனக்கு பயமா இருக்கு… என்னைய எங்க அப்பாக்கிட்ட விட்ருங்கக்கா…” என உதட்டில் ரத்தம் வழிய கூறினாள். பிரகாஷ் புன்னகையுடன் பார்த்திருக்க… அவர்களில் ஒருத்தி சாதனாவை ஓங்கி கன்னத்தில் அறைந்தாள்…சாதனா தரையில் விழ..”ஏண்டி எவ்வளவு தைரியம் இருந்தால் என்ன அக்கான்னு சொல்லுவ நான் உனக்கு என்ன அக்காவா..? என ஆங்காரத்துடன் கேட்க
”விடு நேனி அவ ஏதோ தெரியாம கேட்டுடா… அத போய் பெரிசுப்பண்ணிக்கிட்டு… ”அவளை சமாதானம் செய்துவிட்டு…தரையில் அமர்ந்து.. சோபாவில் முகத்தை புதைத்திருந்த சாதனாவை பார்த்தாள்.. “யாரு டார்லிங் இவ..? இது அவளுக்கு புதுசா..?” சாதனாவை ஒருமாதிரி பார்த்து கேட்க… பிரகாஷ் அவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கொண்டே… ”ம்ம் ஃப்ரெஷ்” என்று கூறியவனின் கைகள் அவள் மேனியில் அலை பாய்ந்தது…அவனுக்கு இசைந்தவாறே..நின்றிருந்தவளிடம் “ நீங்க எப்ப இங்க வந்திங்க..? என கேட்க.. ”தெரியாத மாதிரியே கேட்கறிங்களே.. மணிக்கிட்ட சொல்லி நீங்கதான எங்கள வரவச்சது… இந்த வீட்டுக்குள்ள உங்க அனுமதி இல்லாம வர முடியுமா..? இல்ல போக முடியுமா,,?” என்று சலுகையாக கேட்டு கொஞ்சினாள்.. இவர்களின் பேச்சை கேட்ட சாதனாவிற்கு…அய்யோ இதுல இருந்து தப்பிக்க முடியாதா…? பயத்தோடு நினைத்தாள்.
பிரகாஷ் சாதனாவை பார்த்து…அடியே.. என அதட்ட.. சதானா விலுக்கென்று நிமிர்ந்தாள்.. “ என்ன அப்படியே தூங்கிரலாம்னு பார்க்கிறியா…? இங்க பாரு எனக்கு உன் ஒருத்தியோட எல்லாம் இருக்க முடியாது.. எனக்கு எப்பவும் என்ன சுத்தி பொண்ணுங்க இருக்கணும்… உங்க குடும்பத்துல நல்லவனா நடிச்சு, நான் ரொம்ப காஞ்சி போயிருக்கேன்.. அதால இப்ப எனக்கு இன்னைக்கு இவங்க தேவை.. உன்ன நாளைக்கு கவனிச்சுக்கிறேன்..” என அவளை முழுதாக ஒரு பார்வை பார்த்துவிட்டு… அவளின் ரத்தம் காய்ந்திருந்த அவளுடைய உதட்டை மீண்டும் வன்மையாக சிறை செய்து…சதனா மறுக்க.. ம்றுக்க அவளின் புடைவைய உறுவி அதை அவள் கண் முன்னே எரித்து
“நீ என்னவிட்டு எங்கயும் போக கூடாது.. அதுக்குத்தான் இது..” எரிந்த அவள் புடவையை காட்டினான்… பின்பு “ நாங்க என்ன செய்றோம்ங்கிறத பார்த்துட்டு நாளைக்கு நீ அதே மாதிரி எங்கூட இருக்கணும்.. அப்படி நீ பார்க்கலைன்னா உன்னோட அடுத்த ட்ரெஸ் எரியும்… ” என்று மிகவும் வக்கிரமாக கூறிவிட்டு அவர்களுடன் கூத்தடிக்க ஆரம்பித்தான்.. ஒரு கட்டத்திற்கு மேல சாதனாவால் பொறுக்க முடியாமல்… அய்யோ அண்ணா எனக்கு வாந்தி வருது… நான் பாத்ரூம் போகணும் என்னைய விட்ருங்க…” என கதறியபடி கெஞ்ச… அங்கிருந்த இருபெண்களில் ஒருத்தி கிண்டலும், இன்னொருத்தி பரிதாபமுமாக அவளை பார்த்திருந்தன்ர்…
”பிரகாஷ் அவளை விடுங்க நாளைக்கு உங்களுக்க அவ நல்லபடியா வேணும்ம்ன்னா இப்ப அவளை விடுங்க… என பரிந்து பேசினாள்… அவளை பரிதாபமாக பார்த்திருந்தவள்… பிரகாஷ் சாதனாவை அருகே வர சொல்ல அவள் அருவருப்பிலும் பயத்திலும் செல்ல ம்றுத்தவளை வலுக்கட்டாயமாக இழுத்து.. அவன் உடல், அவள் உடல் முழுதும் படுமாறு இறுக அணைத்தவன் அவள் உமட்டவும் “ சரி போ” என அவளை அனுப்பினான்.. சாதனா வாயை பொத்திக்கொண்டு.. சற்றுமுன் அந்த பெண்கள் இருந்த அறைக்குள் நுழைந்து.. குளியலறை சென்று வாந்தி எடுத்தாள்…
”அய்யோ எனக்கு பயமா இருக்கு.. அப்பா வாங்க… சீக்கிரம் வந்து என்ன கூட்டிட்டு போங்க.. இந்த அண்ணா ரொம்ப கெட்டவங்க அப்பா…” என அங்கே இல்லாத கருணாகரனிடம் முறையிட்டாள்… பின்பு ”அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதும்மா… எனக்கு சாப்பாடு ஊட்டிவிட வாங்கமா…” என தாயிடமும் மானசீகமாக கதறினாள். அவள் கண்ணிரெல்லாம் வற்றி போகும் வரை அழுதவள்.. அப்படியே உறங்கி போனாள்.. விடியல் சாதனாவிற்கு என்ன வைத்திருக்கிறது….?
அத்தியாயம் 15
நள்ளிரவைத் தாண்டி ஒரு உருவம் அந்த அறைக்குள் வர… தூக்கத்திலு தேம்பி கொண்டிருந்தவளை, பரிதாபமாக பார்த்தது.. அந்த உருவம்… தன் கரம் கொண்டு அவளை தொட, அந்த தூக்கத்திலும் விழித்தவள் பயத்தில், கத்த போக…. அவள் வாயை அவசரமாக பொத்தினாள்,,, காலையில் பார்த்த அவ்விரு பெண்களில் ஒருத்தி.. அவளை பார்த்த சாதனா… ”அக்… என்று அழைக்க வந்தவள்… காலையில் வாங்கிய அடியை நினைத்து ”உங்களை எப்படி கூப்பிடணும்…” அப்பாவியாக கேட்க..அந்த நிலையிலும் அவளின் குழந்தை தனமான பேச்சையும், அவளின் சந்தேகத்தையும், நினைத்து….சிரித்தாள். காலையில் சாதனாவை கன்னத்தில் அடித்தவள்..
பின்பு இருக்கும் சூழ்நிலை உணர்ந்து… ” இங்க பாருமா… என்னை எப்படி கூப்பிட்றதுங்கிறது… இப்ப முக்கியமில்லை… இந்த பிரகாஷ்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதுதான் முக்கியம்….” என்று மெதுவாக கூறினாள். சாதனா விழி விரித்து… “நான் இங்க இருந்து போயிரலாமா…? என்னைய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறிங்களா….? சந்தோசத்துடன் கேட்டவளை இரக்கத்துடன் பார்த்தாள்.. ”சே இந்த குழந்தைக்கிட்ட போய் எப்படி நடந்திருக்கான்…பரதேசி” என்று பிர்காஷை மனத்துக்குள்.. திட்டினாள்.. சாதனாவின் மகிழ்ச்சி நொடி நேரம்தான் நிலைத்து இருந்தது… மறு நொடி முகம் வாடி “ ஆனா எனக்கு இங்க இருந்து எங்க வீட்டுக்கு பாதை தெரியாதே…“ வருத்தத்துடன் கூற… அந்த பெண் அவளை அணைத்து கொண்டாள்… அவள் கண்களில் லேசாக நீர் திரையிட்டு இருந்தது….
”இங்க பாருடா… இப்ப நான் சொல்றதை நல்லா கேட்டுக்க…. நீ இப்ப உங்க வீட்டுக்கு போறதை விட, இங்க இருந்து தப்பிக்கிறதுதான் முக்கியம்…. இந்த பிரகாஷ், ஒரு சதை வெறி பிடித்த மிருகம்டா….. நீ இப்பதான் பூத்த பூ மாதிரி இருக்க…அவன் கையில் நீ மாட்டினாய் என்றால், உன்னை வெறி நாய் மாதிரி குதறி வச்சுருவாண்டா..” என்று எச்சரித்தவளை நடுக்கத்துடன் பார்த்தவள் ” சதை வெறி பிடித்த மிருகம்”னா என்னக்கா சந்தேகம் கேட்க….” ஐயோ இப்ப அதுவா முக்கியம் நான் சொல்லவர்றதை கொஞ்சம் கேளேன்… உனக்கு நேரம் குறைவா இருக்கு அதுக்குள்ள நீ இங்க இருந்து போயாகணும்… இப்ப அவன் நல்லா தூங்கிட்டு இருக்கான்… அவன் முழிக்கிறதுக்குள்ள… இங்க இருந்து நீ கிளம்பியாகணும்…. நானே பதட்டத்துல இருக்கேன்… நீ என்னடான்னா சந்தேகம் கேட்டுட்டு இருக்க…” சொல்ல வருவதை புரிந்துகொள்ளாமல் நேரத்தை கடத்துகிறாளே.. என்ற ஆதங்கத்தில் சலிப்புடன் பேசினாள்….அந்த பெண்
”இங்க பாரு…. நீ மிருகத்துக்கிட்ட மாட்டினாலும் எப்படியாவது தப்பித்துவிடலாம்… ஆனால் இவன் மிருகத்தைவிட கொடியவன்..அதனாலதான் நான் இவ்வளவு தூரம் சொல்றேன்…” என கெஞ்ச, சாதனா ” ஆனா இந்த வீடு ரிமோட்ல பூட்டியிருக்கே எப்படி போறது…?” என அவநம்பிக்கையோடு கேட்க, ”அவன் அசந்து தூங்குவது இந்த நேரம்தான்… அவனுக்கு தெரியாம நான் ரிமோட்டை எடுத்துட்டு வந்திருக்கேன்…ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள… நீ இங்க இருந்து போயிடணும்…” என கூறிக்கொண்டே சாதனாவின் கையை பற்றி.. இழுத்து வந்தாள்… அறையிலிருந்து வெளியே வந்தவள் ஹாலில் அவர்கள் இருந்த கோலம் கண்டு, மீண்டும் உமட்டி கொண்டு வர….உள்ளே செல்ல போனவளை.. வலுக்கட்டாயமாக… இழுத்து வந்து.. ரிமோட்டால் கதவை திறந்து… சாதனாவை வெளியே இழுத்து விட்டாள்..
”உள்ளே இருந்தது ஒருவித பயமென்றால்… வெளியே இருப்பது இன்னொரு வித பயத்தை அளித்தது.. சாதனாவிற்கு.. “ சாதனா இங்க பாருமா…எங்களுக்குத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை… அதனால இந்த சாக்கடையில விழுந்துட்டோம்…ஆனால் உனக்கு அப்படியில்லை… கண்டிப்பா கடவுளோட ஆசிர்வாதம் உனக்கு இருக்குமா…இல்லைன்னா எப்பவும் ரிமோட்டை இருக்குமிடம் தெரியாமல் வைத்திருப்பவன்… இன்னைக்கு அதைப்பற்றி நினைவில்லாமல் இருப்பானா…?” என கேட்க… சாதனா பதில் சொல்லாமல்… அந்த இருட்டையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளின் நிலைமையை புரிந்த அந்த பெண்” கண்டிப்பா கடவுள் உன்னை காப்பாத்திருவாருடா… அந்த மருதமலை முருகன் உனக்கு துணையா இருப்பார்… உனக்கு கந்தசஷ்டி கவசம் தெரியுமா…? என கேட்க…”ம்.ம்.” வேகமாக தலையாட்டினாள் ”அதை சொல்லிக்கிட்டே எங்கயும் திரும்பி பார்க்காம நேரா போடா…கடவுள் நல்லவர் ஒருத்தரை உன் கண்ணில் காட்டுவார்…” என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தவள்…. கண்டிப்பா நம்ம ஒரு நாள் மறுபடியும் சந்திப்போம்…அப்ப நீ மிகவும் மகிழ்ச்சியோட… நல்லவங்க பாதுகாப்புல இருக்கணும்னு நான் வாழ்த்தறேன்….” என்று அவளை ஒருமுறை இறுக அணைத்து விடைபெற்றாள். அந்த நல்ல பெண்மனி..
அவள் உள்ளே சென்றவுடன் மீண்டும் கதவு மூடிக்கொள்ள… அந்த காடும்… அங்கு சூழ்ந்திருந்த இருட்டும் சாதானாவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்த கந்தசஷ்டி கவசம் சொல்லிக்கொண்டே இடையிடயே தன் அப்பாவையும், அம்மாவையும் நினைத்துகொண்டு வேக வேகமாக நடந்தாள்…. உடல் சோர்வு அவள் வேகத்திற்கு தடை போட… அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தாள்… லேசாக வீசிய காற்று… அவள் உடல் சோர்விற்கு இதமாக இருக்க தன்னை அறியாமல் மரத்தில் சாய்ந்தபடி உறங்கினாள்… அவள் காலுக்கடியில் ஏதோ சர சரவென்று ஊற…பயத்தில் “அம்மா………” என அலறியபடி வேகமாக ஓடியவள்.. இருட்டில் ஒரு மரத்தின் வேர் தடுக்கி கீழே விழுந்தாள்…
தடுக்கியதில் கால் நகம் பிய்ந்து ரத்தம் வர.. அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து ஓடினாள்… “அம்மா இப்படி ஓடுறது எப்பதான் முடியும் என்னால முடியலையே…” அழுதவாறே ஓடிக்கொண்டிருந்தவளின் கண்களில் சாலை தென்பட்டது….. தட்டு தடுமாறி சாலைக்கு வந்துவிட்டாள்… ஆனால், அங்கு போக்குவரத்து எதும் இல்லாமல் அமைதியாக இருக்கவே…சாதனா, மயங்கும் நிலைக்கு வந்துவிட்டாள்… ”ம்கூம் இப்ப நான் மயங்க கூடாது… தனக்குள்ளே சொல்லி கொண்டவள்…. காலில் ஏற்பட்ட காயத்தின் வலியிலும், உதட்டில் இருந்த எரிச்சலும், சாதனாவிற்கு உயிர்போய் உயிர் வந்தது…..சாலை ஓரம் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டாள்.
எவ்வளவு முயன்றாலும் கண்கள் தாமாக மூடுவதை நிறுத்த முடியவில்லை அவளால்.. தூரத்தில் ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சம் அருகே வர வர, அது காரின் வெளிச்சமாக தெரிய… தன் உடம்பில் உள்ள சக்தியெல்லாம் ஒன்று திரட்டி… பெரு முயற்சி செய்து… அந்த காரை நிறுத்த கையை ஆட்டியவள், அப்படியே மயங்கி சரிந்தாள்… அவள் கையை ஆட்டியதும், பிறகு கீழே விழுந்ததையும்… தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டாலும், இது பணம் பறிக்கும் கூட்டத்தின் ஏமாற்று வேலை என்று நினைத்து தன் காரை நிறுத்தாமல் சென்றான்… அந்த காருக்கு சொந்தக்காரன்…
பாதி தூரம் சென்றவன் “ஒருவேளை உண்மையிலேயே அந்த பெண்ணிற்கு உதவி தேவைப்பட்டால்…?” என யோசித்தவன் சற்றும் தாமதிக்காமல்… தன் காரை மீண்டும் வந்த இடம் நோக்கி செலுத்தினான்… அங்கே சாதனா அதே இடத்தில் மயங்கி கிடக்க அவளை சுற்றி இரண்டு செந்நாய்கள் அவளை முகர்ந்து பார்த்து கொண்டிருந்தது…. அந்த காட்சியில்.. அவன் மனம் பதற.. வேகமாக் காரில் உள்ள டேஷ்போர்டில் இருந்த தன் ரிவால்வரை எடுத்தவன்… காரிலிருந்து இறங்கி….வானத்தை நோக்கி இருமுறை சுட்டான்… அந்த சத்தத்தில் அந்த நாய்கள் ஓடிவிட.. அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே.. அவள் அருகில் வந்து… அவளை கைகளில் ஏந்திகொண்டான்,.. தன் காரில் அவளை படுக்க வைத்துவிட்டு நிமிரும்போதுதான் அவளின் உடையை கவனித்தான்…
காரின் முன்பக்கம் தான் போட்டிருந்த கோட்டை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன்… வேகமாக தன் காரை எடுத்தான்,, சிறிது தூரம் சென்றதும் லேசாக அவளிடம் முணகல் வர அவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு…அவள் பேசுவதை கவனித்தான்.. “அப்..பா பயமா… இரு…க்..கு.ப்.பா…. சீ..க்..கி..ர..ம் வா…ங்.. ”என்று முணங்கிவிட்டு அமைதியானாள்.. மீண்டும் “அம்ம்..மா.. ரொ..ம்..ப பசி..க்..கு…து.. அந்த… அண்ணா..சா… ப்ப்..பா..டு.. தர…” மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள். அவள் முணங்குவதை கேட்டு கொண்டிருந்தவனுக்கு தான் என்ன செய்வது என்பதே புரியவில்லை…வேகமாக தன் போனை எடுத்து நம்பரை அழுத்தி விட்டு பேச அந்த பக்கம் என்ன சொல்லியதோ.. சிறு புன்னகையுடன் அதை அணைத்துவிட்டு மீண்டும் அந்த பெண்ணின் அருகே சென்று…
அவளை லேசாக தட்டி எழுப்ப…”அய்யோ அண்ணா கடிக்காதிங்க வழிக்குது..” என துடித்து சீட்டிலிருந்து கீழே விழபோனவளை, விழாமல் தாங்கிப்பிடித்தவனிடம், விடுபட தரையில் விழுந்த மீனாக துள்ளினாள். “ஷ்… இங்க பாருமா ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்ல… பயப்படாத… நீ பாதுகாப்பான, இடத்துலதான் இருக்க… உன்ன யாரும் எதுவும் செய்யலை… எதுவும் செய்ய மாட்டாங்க.. நான் இருக்கேனில்லையா பயப்படாத… கண்ணை திறந்து பாருமா…” என அவளை சமாதான படுத்தி அவளின் தலையை மெதுவாக வருடினான்… அந்த வருடலில் தன் தந்தையை உணர்ந்தவள்… அப்பா வந்துட்டிங்களாப்பா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… சீக்கிரம் இங்க இருந்து போயிரலாம்பா…” என அப்பொழுதும் கண்ணை திறக்காமல்…அவன் மார்பில் முகத்தை அழுத்தி புதைத்து கொண்டாள்.
ஏனோ அவளை பார்க்க மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு தோன்ற… மீண்டும் அவளின் தலையை இதமாக வருடி கொடுத்தவனின் கண்களுக்கு அவள் குழந்தையாக தெரிய… “பேபி” என்று தன்மையாக அழைக்க…”உனக்கு ஒண்ணும் இல்லடா… நீ அங்க இருந்து ரொம்ப தூரம் வந்துட்ட…” என்று அவளுக்கு ஆறுதல் கூற… அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று…அவளை லேசாக விழிக்க செய்தது… அவளிடம் அசைவை உணர்ந்தவன் வேகமாக அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்…அவள் ”தண்ணி” சைகையால் கேட்க..பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுக்க… அத வாங்க முடியாமல் கைகள் நடுங்க இருந்தவளை பார்த்தவன்.. தானே அவளுக்கு நீரை புகட்டினான்… அவன் தண்ணீர் பாட்டிலை அவள் குடிப்பதற்கு ஏதுவாக உதட்டில் வைத்தவன், அவளின் “ஷ்……. அம்மா வலிக்குது…” என்ற முணங்கலில் புரியாமல் அவள் உதட்டை பார்த்தவன் திகைத்தான் அவன் கண்கள் கோபத்தில் ஜொலிக்க…அவளை இப்படி செய்தவனை..கொன்றுபோடும் வெறி வந்தது… தன் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு உதட்டில் படாதவாறு..அவள் வாயை மிக லேசாக திறந்து தண்ணீர் கொடுத்தான்
தண்ணீரை குடித்தவுடன் சிறிது தெம்பு வர அப்பொழுதுதான் தன் அருகில் இருக்கும் ஆடவனை பார்த்தவள், பயத்திலும், பிரகாஷிடம் ஏற்பட்ட அனுபவத்தாலும், அவனும் பிரகாஷின் வயதை ஒட்டி இருப்பதாலும், சற்றும் யோசிக்காமல், ”நீங்களும் இங்க கடிப்பீங்களா…? என்று தன் உதட்டை காட்டி கேட்டவள்.. அந்த அண்ணாகிட்ட வலிக்குதுன்னு சொன்னேன் ஆனா அவங்க விடவே இல்ல… பிளீஸ் நீங்களும் கடிச்சிறாதிங்க… எனக்கு ரொம்ப வலிக்கும்…”என்று தேம்பியவள் “ என்ன எங்க அப்பாக்கிட்ட, ம்கூம் அப்பா வேணாம் மறுபடியும் என்ன இங்க அனுப்பிருவாங்க… என்ன எங்க அம்மாக்கிட்ட கூட்டிட்டு போறிங்களா…? என பாவமாக கேட்க.. அவள் முதல் கேள்வியிலேயே துடித்து போனவன்.. அவள் அடுத்டுத்து கேட்ட கேள்வியில் தன்னை சுதாரித்து கொண்டான்… முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல்..
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன் ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கே…” அவள் மனதை மாற்றும் பொருட்டு அவன் இயல்பாக பேச… அவள் என்ன என்பது போல் பார்க்க, அவனுக்கு இருட்டில் அவள் முகம் தெரியவில்லை என்றாலும்… அவளின் அசைவில் அதை உணர்ந்தவன்… ”எனக்கு உங்க வீடு எங்க இருக்குன்னு தெரியாதே உங்களுக்கு தெரியுமா…..?” என ஒரு குழந்தையிடம் கேட்பது போல் கேட்க.. “அச்சோ உங்களுக்கும் பாதை தெரியாதா..? என அழ தயாரானவளிடம்… “இங்க பாரு பேபி எனக்கு பாதை தெரியும்… ஆனா உங்க வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே… அது உனக்குத்தான தெரியும்…” என கூற ” அச்சோ அம்மால்ல…” தன் நெற்றியில் லேசாக தட்டி கொண்டவள் தன் வீடு இருக்கும் முகவரியை கூறினாள்..
அவன் வண்டியை செலுத்த, சாதனா வயிற்றை லேசாக அழுத்தி பிடித்தாள்… அவளை பார்த்தவன் “ரெஸ்ட்ரூம் எதும் போகணுமா பேபி..? என கேட்க “ம்..கூம்.. என மறுத்தவள்.. புரியாமல் பார்த்தவனிடம் “நான் நேத்து சாப்பிட்டது… கல்யாணம் முடிஞ்சதோட… குலதெய்வ கோவிலுக்கு போகணும்னு என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்க கோவிலுக்கும் போகலை, எனக்கு சாப்பாடும் தரலை… அங்க கோவிலே இல்ல…” என சம்பந்தமில்லாமல் பேசியவள்… எனக்கு ”ரொம்ப பசிக்குது… சாப்பிட எதாவது இருக்கா…?என பசியில் அழும் குழந்தையாய் கேட்க… அவளின் ஒவ்வொரு கேள்வியிலு… அவள் சொல்லும் ஒவ்வொரு செய்தியிலும்… அவன் பரிதவித்து போனான்…
இதற்கெல்லாம் காரணமாக இருந்த அந்த முகம் தெரியாத அயோக்கியனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் பெருகியது…. இந்த சின்ன வயதிலேயே அவளுக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமில்லாமல்,அவளை மட்டும், தனியே அனுப்பிய, அவளின் பெற்றோர் மேல் ஆத்திரம் வந்தது….”தான் இவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருப்பவனை பார்த்தாள் சாதனா… இருட்டில் வரிவடிமாக அவனின், முகம் தெரியாமல், உருவம் மட்டுமே தெரிந்தது…அவன் அமர்ந்திருந்த விதத்திலேயே கோபமாக இருப்பது புரிய… “நான் சாப்பாடு எதுவும் கேட்கலை… நான் பசியோடவே இருக்கேன்… ஆனா, என்னைய எங்க வீட்டுல மட்டும் விட்றுங்க… எனக்கு கால்வேற ரொம்ப வலிக்குது…” என்று வலியில் முகம் சுளிக்க.. அவன் அவசரமாக தன் போனில் உள்ள டார்ச்சை ஆன் செய்துவிட்டு… அவளின் காலை ஆராய்ந்தான்… அவள் பெருவிரல் நகம் மட்டும் தனியே பிய்ந்திருந்தது… “அய்யோ கடவுளே இன்னும் எவ்வளவு கஷ்டத்தை தான் இந்த குழந்தைக்கு கொடுத்திருக்க..? என்று கடவுளை சாடியவன்..”சே இன்னைக்கின்னு பார்த்து காருக்குள்ள இருந்த லைட் ஃப்யூஸ் ஆகிடுச்சே” என்று நொந்து கொண்டவன்… அவளை காரிலிருந்து இறங்க சொல்ல அவள் மறுத்தாள்… ”ஏன்மா கால்ல அடி பட்டிருக்கு பாரு, அதுக்கு மருந்து போட வேண்டாமா…”” .என கேட்க “ம்.கூம்.. எனக்கு வெளிய வர பயமா இருக்கு… அந்த அண்ணா இங்க எங்கயாவது ஒளிஞ்சிருந்து.. நான் வெளிய வந்ததும் என்ன புடிச்சிட்டா…? என்ன பண்றது… எனக்கு மருந்தெல்லாம் வேண்டாம்… நான் காருக்குள்ளேயே இருக்கேனே” என்று கெஞ்ச… ஒரு வேக மூச்சுடன் அவள் அருகில் வந்தவன்..தன் பின்னால் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காட்டி…” என் பேபிய எவன் தொட்டாலும், இல்ல தொட வந்தாலும் அவனை இந்த துப்பாக்கில டப்பு… டப்புன்னு சுட்றுவேன்..” போதுமா.. இப்ப இறங்கி வர்றியா..” என அழுத்ததுடன் கூற…. அவள் எதுவும் பேசாமல் இறங்கினாள்… அவள் இறங்குவதற்கு உதவி செய்தவன்… தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவளின் காலை நன்றாக பார்த்தான்… அவள் பெருவிரலில் ரத்தம் உறைந்து போயிருந்தது.. சாதனாவிற்கு கால் வலியும், பசியும் ஒருங்கே வர அவளால் தாங்க முடியவில்லை…. அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுவதை காண சகிக்காமல்… “பேபி ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோடா… இந்த காலுக்கு மறுந்து போட்டுட்டு பக்கத்துல் எங்கேயாவது ஹோட்டல்ல நிறுத்தி உனக்கு சாப்பிட வாங்கி தாறேன்” என்று சமாதானம் செய்தவன்… “உங்களுக்கு என்ன பிடிக்கும்…? இட்லியா தோசையா…? அவள் காலை பார்த்து கொண்டே கேட்க.. அந்த வலியிலும்.. “எனக்கு நூடில்ஸ்தான் பிடிக்கும்… ஆனா அம்மா அடிக்கடி செஞ்சு தரமாட்டாங்க.. “ அழுகையோடு கூற, அவளின் பாவனையில் லேசாக சிரிப்பு வந்தது… அவனுக்கு.. அவளின் காலில் பாதி பிய்ந்து தொங்கி கொண்டிருந்த நகத்தை.. அப்புறப்படுத்தினான்…
அதுவும் அவளுக்கு வலி தெரியாம்ல்.. பேச்சு கொடுத்துகொண்டே, தன் காரில் உள்ள முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவன் அவளின் காலை சுத்தம் செய்து, மருந்திட்டு கட்டு போட்டு முடித்தான்… தன் கையை கழுவிகொண்டு வந்தவன்…காரின் டிக்கியை திறந்து, அதில் இருந்து ஒரு கூடையை எடுத்து வந்தான்.. அந்த தெரு விளக்கின் வெளிச்சத்திலேயே… அதில் இருந்த டிபன் பாக்ஸை எடுத்தவன், ஒன்றை திறந்து சாதனாவிடம் கொடுத்தான்…அதை ஆவலாக வாங்கியவள்…இட்லியு தக்காளி சட்னியும்…” என்னை எடுத்துக்க” என்பது போல் அழைக்க… ஆவலாக எடுத்து ஒருவாய் வைத்தவள்…. ”ஷ்… அம்மா எரியுதே…” வலியில் அலறினாள்… அப்பொழுதுதான் அவள் உதட்டில் இருக்கும் காயம் நினைவு வந்தது… அவளுக்கு டிபன் பாக்ஸை அவனிடமே கொடுத்துவிட்டாள்.. தன் உதட்டை தன் நாவால் தொடுவது கூட அருவருப்பாக இருந்தது… அவளுக்கு……” என்னாச்சுமா கேட்டவனிடம்… தலை குணிந்து கொண்டே உதடு ரொம்ப எரியுது சாப்பிட முடியலை” சொல்லும்போதே அவள் குரல் அழுகைக்கு மாறியிருந்தது…
“ ஷ்… அழக்கூடாது… கொஞ்சம் பொறு. அந்த இட்லியில், ஃப்ளாஸ்க்கில் இருந்த பாலை கொஞ்சம் ஊற்றி.. சிறிது சர்க்கரை போட்டு கொடுத்து… “ம்.ம். இப்ப சாப்பிடு உதடு எரியாது…” என கொடுக்க அவளுக்கு இருந்த பசியில் ஆறு இட்லிகளை உண்டுவிட்டாள்… அவன் அவள் சாப்பிடுவதையே ஒரு தாயின் வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தான்…” நீங்க சாப்பிடலையா…?” என கேட்க.. எனக்கு பசியில்லமா நீ சாப்பிடு” என்று மறுத்துவிட்டான்.. அவள் உண்டு முடித்ததும்… பாத்திரங்களை கூடையில் எடுத்து வைத்தவன்.. அவளிடம் ”போகலாமா…? என கேட்க..தலையாட்டினாள்…
இருவரும் காரில் ஏற ” அவன் அவளிடம் ஆமா உன்னோட பேர் என்ன..? நீ சொல்லவே இல்லை” அவளிடம் பேச்சு கொடுக்க “ என் பேர் அம்மு.. அவள் தந்தை அழைக்கும் பெயரை கூறினாள். ”அம்மு நல்லாதான் இருக்கு… சரி அம்மு நீ எப்படி இங்க வந்த…? யாரு உன்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க…? என்ன்மோ கல்யாணம்னு சொன்ன… கோவில்ன்னு சொன்ன… என்ன நடநுதுச்சு உனக்கு…? என கேள்வியாக அடுக்க.. அவளிடம் ஒரு பதிலும் இல்லை…அவன் திரும்பி பார்க்க… சாதனா, காரின் சீட்டில் காலை மடக்கி. இவன் புறமாக திரும்பி அமர்ந்தவாறே… உறங்கியிருந்தாள்…அவன் சிரிப்புடன்.. அவள் உறங்குவதற்கு ஏதுவாக, காரின் சீட்டை நன்றாக சாய்த்து, அவள் தலைக்கு ஒரு தலையணையும் வைத்து, சீட் பெல்ட்டை மாட்டிவிட்டான்… அந்த கார்க்காரன்…. சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குபின் சாதனா சொன்ன, இடத்திற்கு வந்தவன் அவளின் வீடு எது என்று தெரியாமல்.. தூங்கும் அவளை “அம்மு” என்று மென்மையாக அழைக்க… அப்பா இன்னும் கொஞ்ச நேரம்பா…? சிணுங்க அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை….மீண்டும் ”அம்மு” என்று அழைக்க ”என்னப்பா நீங்களும், மங்கை மாதிரி தூங்கவே விடமாட்டிங்கிறிங்க…” தூக்கத்தில் புலம்பியவளை இம்முறை சத்தமாக அழைத்தான்… அதில் திடுக்கிட்டு விழித்தவள், முதலில் தான் எங்கிருக்கிறோம்… என்பது புரியாமல் குழம்பினாள்…. பின்பு மெதுவாக நேற்று நடந்தவைகள் அனைத்தும் நினைவு வர…. பயத்தில் முகம் வெளிறி இருந்தவளை பார்த்தவன்… “அம்மு… நீ சேஃபா வீடு வந்துட்டடா.. இனி பயமில்லை… உங்க வீட்டுப்பக்கம் வந்தாச்சு… இங்க உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லு நான் கொண்டுபோய் விடறேன்…”என்றான் அவள் “நேரா போய் இடது பக்கம் திரும்பினால், ரெண்டாவது வீடு” என்றுவிட்டு காரில் இருந்து இறங்க போனாள்…”ஏன் அம்மு இறங்கற..? உன்ன, உங்க வீட்டுலேயே உங்க வீட்டுலயே விடறேன்,, ”இல்லை வேண்டாம்” என்றவளை, ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவன்… அந்த விடிகாலை வேளையில் கலைந்த ஓவியமாய்… இருந்தவளின் முகம் அவனுக்கு அவ்வளவாக தெரியவில்லை… பின்பு ஒரு பெருமூச்சுடன்… “அம்மு நான் ஒண்ணு சொன்னா கேட்பியா…? என கேட்க அவள் ”ம்” தலையாட்டினாள் ஒரு பொண்ணுக்கு தன்னம்பிக்கையும், தைருயமும் ரொம்ப முக்கியம்… இந்த வசுல கல்யாணம் செய்யறது சட்டப்படி தப்பு… எப்படி இதுக்கு உன்ன பெத்தவங்க ஒத்துக்கிட்டாங்கன்னு தெரியலை… கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”னு சொல்லி மறுபடியும் அவன்கூட உன் அம்மா, அப்பா சேத்து வைக்கணும்னு நினச்சா… நீ தைரியமா எதிர்த்து நிக்கணும்… நீ நல்லா படி… படிச்சு நல்ல ஒரு வேலையில இருந்துட்டு… அப்புறமா உன் கல்யாணத்த பத்தி யோசி… என்ன நான் சொன்னது புரிஞ்சதா…? என்று அக்கறையுடன் கேட்க..” ம்” என்றாள்… எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கு நான் கண்டிப்பா இருந்தாகனும்… இல்லன்னா உன்ன உங்க வீட்டுலேயே விட்டிருப்பேன்…. ”சரி பத்திரமா பாத்து போ…” என்று கூறிவிட்டு தன் காரை கிளப்ப்பிக்கொண்டு சென்றுவிட்டான்… அவனுக்கு தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது… தனக்கு எப்படி இவ்வளவு பொறுமையும், நிதானமும் வந்ததென்று…! அதுவும் ஒரு பெண்ணிடம்… என்று வியக்க.. “ டேய் அவ பெண்ணாடா…? குழந்தைடா…” என்றது அவனின் மனசாட்சி.. அதுவும் சரிதான் என்று ஒத்து கொண்டு காரை செலுத்தினான் அவன்….
அவர் எப்படி சரியான நேரத்துக்கு அங்க வந்தாருன்னுதான கேட்கிறிங்க…?
நானும் இதே கேள்வியத்தான் அவர்கிட்ட கேட்டேன்…ஆனா அவர் சாதனா கேட்டாதான் சொல்வாராம்… அதுவும் எப்படி தெரியுமா..? அவனின் மனைவியாகி உரிமையோடு கேட்கணுமாம்… இந்த சாதனா பிள்ளைக்கு… எப்ப காதல் வந்து அவனோட மனைவியாகி…….
அத்தியாயம் 16
இங்கே சாதனாவின் வீட்டில் மங்கை, “அச்சோ அங்க நம்ம பொண்ணு என்ன பண்றாளோ..? சாப்பிட்டாளா…? இல்லையான்னு தெரியலையே…. போனும் போகமாட்டிங்குது…” என்று மகளை நினைத்து, இரவு முழுதும் தூங்காமல், தவித்து கொண்டிருந்தார்… கருணாகரனுக்கும் அந்த தவிப்பு இருந்தாலும்…. பிரகாஷின் மேல் உள்ள நம்பிக்கையில் “ஒண்ணும் ஆகாது மங்கை… அம்மு இந்நேரம், சாப்பிட்டு நல்லா தூங்கிட்டு இருப்பா. அது காடு அங்க போன் ரீச் ஆகாதுன்னு சம்பந்தி சொன்னருல்ல… அப்பறம் என்ன…?” அதான் பிரகாஷ் இருக்காருல்ல அவர் பார்த்துப்பார் நம்ம அம்முவை…நீ டென்சன் ஆகாம கொஞ்ச நேரமாவது தூங்கு மங்கை….நைட்ல இருந்து தூங்காம இருக்க…” மனைவியை சமாதானம் செய்துகொண்டிருக்கும்போதே
வீட்டின் அழைப்புமணி ஒலிக்க…”இந்த நேரத்தில் யார் வருவது” குழம்பியவாறே கருணாகரன் கதவை திறக்கப்போனார்.. அவர் உள்ளிருந்து வாசல் வரை போகும் நேரத்துக்குள் ஒரு பத்து முறையாவது அழைப்பு மணியை அழுத்தியிருக்க… அறையிலிருந்த மங்கையும் வெளியேவந்தார்…..கதவை திறந்த கருணாகரன்.. அங்கே நின்றிருந்த சாதனாவை எதிர்பார்க்கவில்லை…. அதுவும் இந்த நேரத்தில், இப்படி ஒரு கோலத்தில் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை…. “ அம்மு….” அதிர்ச்சியாக அவர் அழைக்க…. அவள் தந்தையை கண்டுகொள்ளாமல், அவரின் பின்னால் நின்றிருந்த மங்கையிடம்….” அம்மா…” என கதறி கொண்டு, அவரை இறுக அணைத்துக்கொண்டாள்.
மகளின் அழுகையும், அவள் இருந்த கோலமும், பெற்றோரின் நெஞ்சை பதற வைக்க… சாதனாவை தன்னிடம் இருந்து பிரித்த மங்கை “ சாதும்மா.. என்னடா ஆச்சு…? ஏன் அழற..? ஏன் தலையெல்லாம் கலைஞ்சிருக்கு, மாப்பிள்ளை எங்க…?, வெளியே இருக்காரா..? கேள்விகளை அடுக்க… சாதனா ஒன்றும் கூறாமல்… அழுதுகொண்டே இருக்க.. அவர்கள் இருவருக்கும் பதட்டம் அதிகரித்தது.. ”சாதனா மாப்பிள்ளைக்கு எதுவும்…” என்று கேட்டுவிட்டு கருணாகர பாதியில் நிறுத்த “நீங்க எதுவும் பேசாதிங்கப்பா நான் உங்க மேல கோபமா இருக்கேன்…” கோபத்துடன் பேச, கருணாகரனும் மங்கையும் திகைத்தனர்..
அவளுக்கு மங்கையை விட, கருணாகரன்தான் உயிர் அப்படி இருக்கும்பொழுது… இப்படி சொல்வதென்றால்… மங்கை, “ சாதும்மா அப்பா என்ன செஞ்சாங்க? அப்பாமேல எதுக்குடா கோபம்..? பரிவோடு கேட்க, “அப்பாதான அந்த பிரகாஷ் அண்ணாவோட என்ன அனுப்பி வச்சாங்க…” அந்த அண்ணா ரொம்ப கெட்டவங்க… இங்க பாருங்க, நான் வேணாம், வேணாம்னு சொல்ல, சொல்ல அவங்க என் உதட்ட கடிச்சிட்டாங்க….என அழுகையுடன் கூறியவள்… இன்று காலையில் நடந்த அனைத்தையும், பிரகாஷ் பற்றியும் கூறினாள்……
அதை கேட்டவர்களுக்கு, அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை…” அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா… மறுபடியும் அவங்க வந்து கூப்பிட்டா என்னை அனுப்பி விட்றுவிங்களா…?” பரிதாபமாக கேட்க…மங்கை கணவரிடம் “ஐயோ இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் அவ குழந்தை இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு… கேட்டிங்களா.. இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு..? அவ பிறந்ததுல இருந்து இதுவரைக்கும்… சுண்டுவிரல் நகம் கூட படாம, திட்டாம சீராட்டி வளர்த்ததெல்லாம்… இப்படிபட்ட பாவி, ஒருத்தனிடம் கொடுக்கவா..? இவள இப்படி பார்க்கவே என் பெத்தவயிறு பத்தி எரியுதே…” கணவரிடம் கதறினார்…
கருணாகரன், ”அம்மு இங்க அப்பாட்ட வாங்கடா…” சாதனாவிடம் கெஞ்ச… ம்..கூம்” என மறுத்து தாயிடமே தஞ்சம் அடைந்திருந்தாள். சாதனா திருமணம் முடித்ததிலிருந்தே, ஒருவித குற்ற உணர்ச்சியில் இருந்தவர்… இப்பொழுது… மகளின் ஒதுக்கமும், அவள் இருந்த கோலமும் கண்டு, அவரின் நெஞ்சு லேசாக வலித்தது.. மங்கையும் சாதனாவும் இன்னும் அழுது கொண்டிருக்க… தன் நெஞ்சை லேசாக நீவிவிட்டவர்…” ”மங்கை அம்மு ரொம்ப பயந்திருக்கா… இது அழற நேரம் இல்ல… அவக்கிட்ட அழுகாம இயல்பா இருக்கிறமாதிரியே பேசு… நீயும் கூட சேர்ந்து அழுதின்னா.. அவ இன்னும் பயப்படுவா…? அவ அங்க இருந்து எப்படி வந்தான்னு கேளு மங்கை…” என அவ்ர் காதில் முணுமுணுக்க…
இதில் எல்லாம் மகளை பத்தி தெரிஞ்சு வச்சு இருக்கிங்க.. அவள் வாழ்க்கை விசயத்துல தப்பு பண்ணிட்டிங்களே? பார்வையால் குற்றம் சாட்ட… அதை உணர்ந்த கருணாகரன், ”என்னை கொல்லாத மங்கை…….ஏற்கனவே நான் செத்துட்டு இருக்கேன்..” என்று குற்ற உணர்ச்சியில் கூறினார்… கணவரின் பேச்சில் திடுக்கிட்ட மங்கை… அவரின் முகத்தை பார்க்க, கருணாகரனின் முகம் வேதனையில் கசங்கி இருந்தது… தன்னை விட மகளின் மேல் உயிராய் இருப்பவர்… அவளின் நிலை கண்டு, தன்னைவிட தன் கணவர்தான் அதிகமாக துடித்துகொண்டிருப்பவரை தானும் வார்த்தையால் சாடிவிட்ட்தை அறிந்தவராக..
ஆறுதலாக அவரின் கையை அழுத்திவிட்டு… சாதனாவிடம், இயல்பாக பேச முயற்சி செய்தார். “ சாதும்மா அப்பறம் எப்படிடா அங்க இருந்து வெளிய வந்த…? மேலும் விபரம் அறிய கேட்க… “ நான் சொன்னேன்ல அங்க ரெண்டு அக்கா இருந்தாங்கன்னு அவங்கள்ள ஒருத்தவங்கதான், என்னைய தப்பிக்க வச்சாங்க… வெளிய ஒரே இருட்டு… எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சும்மா… அந்த அக்காதான் கந்தசஷ்டி கவசம் சொல்லிட்டே போ…யாராவது நல்லவங்க உன்ன காப்பாத்திருவாங்கன்னு சொன்னாங்கம்மா…? என கூறியவள் தான் எவ்வாறு, அங்கிருந்து தப்பித்தோம் என்பதையும்… கூறினாள்ள்…
” அங்க இருந்து ஓடி வர்றப்போ எனக்கு கால்ல அடி பட்டுச்சா… என்னால நிக்கவே முடியலை.. அப்படியே கீழ விழப்போறப்ப ஒரு கார் வந்துச்சா…? அந்த காரை பார்த்து கை ஆட்டும்போதே கீழ விழுந்துட்டேன்..
அப்பறம் முழிச்சு பார்த்தா யாரோ ஒருத்தரோட கார்ல இருக்கேன்… அவங்கதான் எனக்கு இந்த கோட் கொடுத்தாங்க….” என்று அவள் அணிந்திருந்த கோட்டை காட்டியவள்… “அவங்கதான் என் காலுக்கு மருந்து போட்டுவிட்டாங்க” என்று தன் பெரு விரலை காட்டினாள், “அப்பறம் அவங்கதான் சாப்பிட எனக்கு இட்லி கொடுத்தாங்க… நான் சட்னி காரமா இருக்கு எனக்கு வேண்டாம்னு சொன்னேனா… உடனே அவங்க இட்லில பால ஊத்தி சக்கரை போட்டு கொடுத்தாங்க… அவங்க துப்பாக்கி வச்சிருக்காங்கம்மா… அந்த பிரகாஷ் அண்ணா வந்தா டப்பு, டப்புன்னு சுட்ருவேன்னு சொன்னாங்க… நான் இருக்கிறவரைக்கும் என் பேபிய யாரும் நெருங்கவிடமாட்டேன்னு சொன்னாங்கம்மா… அவங்க கூட இருக்கிறப்போ…. உங்க ரெண்டுபேர்கூடவும் இருக்கிற மாதிரியே இருந்துச்சா…அதனால பயமே இல்லாம… நான் கார்லயே தூங்கிட்டேன்… திரும்பவும் நான் முழிச்சு பார்த்தப்ப நம்ம வீட்டுக்கிட்ட இருக்கேன்..” என நீண்ட விளக்கமளித்தவள்.. “அம்மா எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் தூங்கறேன்மா.. “ என சிணுங்கியவளை “முதல்ல குளிச்சிட்டு வாடா அம்மா சூடா பால் தர்றேன்… குடிச்சுட்டு தூங்குடாம்மா…? என பரிவோடு கூறினார்..
சாதனா, குளிக்க சென்றவுடன்…அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை, கதறலாக வெளியிட்டனர்…. அந்த பாச்மிகு பெற்றோர்.. மானசீகமாக அந்த கார்காரனுக்கு, பெரும் நன்றியை செலுத்தினர்…மிஞ்சிப்போனால் ஒரு நாள், ஒரே ஒர்நாளில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதையும், இனி தன் மகளின் வாழ்வையும் நினத்து, வேதனையில் உழன்றனர், சாதனாவின் பெற்றோர்…
சிறிது நேரத்தில், கருணாகரன் திடம் பெற்றவராக, மங்கையின் தோளில் தட்டிவிட்டு, ”நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றேன் மங்கை, அம்மு குளிச்சுட்டு வந்தவுடனே சாப்பாடு கொடு.. நான் இதோ வந்தர்றேன்..” சொல்லி சென்றவரை, இந்நேரத்தில் எங்க போறிங்க எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம்” என்று தடுத்தவரை… “ரொம்ப முக்கியமான விசயம்.. போய்ட்டு சீக்கிரமா வந்துடுவேன்” மங்கையை சமாதானம் செய்துவிட்டு, வெளியே சென்றார். குளித்துவிட்டு வெளியே வந்த சாதனா, ”அப்பா எங்கம்மா காணோம்” தந்தையை தேட…”இப்ப வந்துருவாங்கடா நீ சாப்பிடு,” சாதத்தில் கொஞ்சம் தயிரை ஊற்றி பிசைந்து சாதனாவிற்கு ஊட்டினார்… அவள் சாப்பிட்டு முடிக்க கருணாகரனும் உள்ளே நுழைந்தார்…
சாதனா, தன் தந்தையிடம் கொண்ட கோபத்தை மறந்து, “அப்பா எனக்கு தூக்கம் வருது… நீங்க எப்பவும் எனக்கு தலை கோதி விடுவிங்கள்ள… அதேமாதிரி செய்ங்கப்பா…” என கூறி அவரின் மடியில் சலுகையாக படுத்துகொண்டாள்…
கருணாகரன் அவளின் தலையை கோதிகொண்டே ”அம்மு இந்த அப்பாவ மன்னிச்சிருடா..“ என சாதனாவிடம் மன்னிப்பை வேண்டியவர்…..”ஒரு உயிருக்கு ஆபத்து, அதை நம்மனால போக்கமுடியும் அப்படிங்கறப்ப.. நம்ம அந்த உயிர காப்பாத்ததான பார்ப்போம்… அப்பாவும் அதேமாதிரிதாண்டா நினச்சேன்.. ஆனால், அவன் ரொம்ப நல்லவனா நடிச்சு அப்பாவ ஏமாத்திட்டாண்டா… அவன் என்ன சொல்லிருந்தாலும் நான் நம்பியிருக்க கூடாது.. அப்பா ஒண்ணு சொல்றேன் கேட்பியா..? என இதுவரை எங்கோ பார்த்துகொண்டு பேசியவர் கடைசிகேள்வி மட்டும் சாதனாவின் முகத்தை பார்த்து, கூற, ”வாழ்க்கையில யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிறாதடா… உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்… நீ நல்லா படிக்கனும் அம்மு.. நல்ல தைரியசாலியா வரணும்.. அப்பா உன்ன, என் கைக்குள்ளயே வச்சு… உலகம் தெரியாதவளா ஆக்கிட்டேன்.. இதுக்காகவும் என்னைய மன்னிச்சிரு அம்மு…” சாதனாவிடம் மன்னிப்பை வேண்டினார்..
மங்கைக்கு கணவரின் பேச்சு, மனதில் கலவரத்தை உண்டாக்க…” என்னங்க ஏன் இப்படி பேசுறிங்க..? நீங்க இப்படி பேசுறத பார்த்தா.. எனக்கு பயமா இருக்குங்க…” என பதற… “பயப்படாத மங்கை நீ எப்பவும் தைரியமா இருக்கணும்… அம்முவ நல்லா பார்த்துக்க….இந்த பிரச்சனை இதோட முடியும்ன்னு எனக்கு தோணலை…நம்மக்கிட்ட அவ்வளவு நல்லவனா நடிச்சு, அம்முவ கல்யாணம் செஞ்சவன்.. அம்முவ சும்மா விடமாட்டான்… நிச்சயம் தேடி வருவான்… அவன்
இங்க வர்றதுக்குள்ள நம்ம இங்க இருந்து கிளம்பியாகணும்… நான் அதுக்கான ஏற்பாடத்தான் செஞ்சிட்டு வந்திருக்கேன்… நம்ம அம்மு தூங்கி எந்திருச்சதும் நாம இங்க இருந்து போய்டலாம்..” என கூறிகொண்டிருக்கும்பொழுதே அவருக்கு மீண்டும் நெஞ்சில் வலிவர…நெஞ்சை நீவிவிட்டு கொண்டார்.. நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்… நீயும் தூங்குமா…” என கூறிவிட்டு சாதனாவை தட்டி கொடுத்தவாறே.. மெத்தையில் காலை நீட்டி நன்றாக சாய்ந்து அமர்ந்து அப்படியே கண்ணயர்ந்தார்.. மங்கைக்கும் தூக்கம் வருவதுபோல் இருக்க… அவரும் சாதனாவின் மீது கையை போட்டவாறே உறங்கினார்..
ஏதோ சத்தம் கேட்டு மங்கைக்கு விழிப்பு வர…கருணாகரன் தன் நெஞ்சை நீவிகொண்டிருந்தார்…”என்னாச்சுங்க…? மங்கை கேட்க… அவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்பதை சைகையால் கேட்டார்.. கணவரின் செயல் பதட்டத்தை வர செய்தாலும்… தண்ணீர் எடுத்துவர வேகமாக கிச்சன் சென்றார். அவர் தாண்ணீர் கொண்டு வரவும் அதை குடித்துவிட்டு… ”மங்கை எனக்கு நெஞ்சு வலிக்குது…”நெஞ்சை பிடித்தபடி கூற… “என்னங்க சொல்றிங்க..? எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…” என தவிப்புடன் அழைத்தவரை கையமர்த்தி தடுத்தவர்… ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள எனக்கு எதாவது ஆகி..ருச்சு…ன்னா.. என்ன பண்..றது..?உன்…கிட்…ட முக்கி…யமா..ன விச.. பேச…ணும்” என்று தடுமாறி பேசியவரிடம்…
“ஐயோ எதுவா இருந்தாலும், ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து பேசலாம்..” என கெஞ்சினார் இல்ல மங்கை நான் பிழைக்க மாட்டேன்… எனக்கு உன்னையும், அம்முவையும் இந்த நிலைமைல விட்டு போறேனேன்னு ரொம்ப கவலையா இருக்கு மங்கை… என்றவரின் கண்களில் கணீர் வழிய… “என்னங்க இப்படி பேசாதிங்க எங்களுக்கு உங்கள விட்டா யாரும் இல்லங்க.. உங்களுக்கு எதுவும் ஆகாது,,,” என்று நடுக்கத்துடன் கூறினார்…
”மங்கை இந்தா இத வச்சுக்க” தன் பக்கத்தில் இருந்த கவரை கொடுத்தார் இந்த வீட விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.. சென்னைல என் ஃப்ரெண்டு வீடு, விலை பேசியிருக்கேன்… இந்த வீட்ட வித்து வர பணத்துல அந்த வீட வாங்கிரு… இது பேங்க் பாஸ்புக்… உன் பேர்லயும் அம்மு பேர்லயும் டெபாஸிட் பண்ணிருக்கேன்.. இதெல்லாம் இன்னும் ரெண்டு நாள்ள முடிச்சு கொடுக்க… கேசவன்கிட்ட சொல்லிருக்கேன் அவன் பார்த்துப்பான் இதெல்லாம்… ஆனா எக்காராணத்தை கொண்டும் அம்மு, பிரகாஷ் கண்ணுல பட கூடாது… அவன் இங்க வந்து கேட்டால்… அம்மு இங்க வரலைன்னு தைரியமா சொல்லு…,,, என்று கூறியவருக்கு விக்கல் வர…” இங்க இருக்கா…… நான் போ….றே… மங்… அம்முவ.. பத்தி……” (இங்க இருக்காதிங்க… நான் போறேன்.. மங்கை, அம்முவ பத்திரமா பார்த்துக்க…) சாதனாவின் தலையில் கைவைத்தவரின் உயிர் அவரை விட்டு பிரிந்திருந்தது…..
”என்னங்க…..” மங்கை கதறியதில்…சாதனாவிற்கு விழிப்பு வர….” என்னம்மா என்ன ஆச்சு…? என்று கேட்டுக்கொண்டே தந்தையிடம் திரும்ப, அவர் கண்மூடியிருப்பதை பார்த்துவிட்டு… “ஷ்… ஏன்மா கத்துறிங்க அப்பா தூங்குறாங்க பாருங்க…..” தந்தை தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து கூற… அவர் மீள முடியாத உறக்கத்தில் இருப்பதை அறியவில்லை… குமரியின் உருவில் இருந்த அந்த குழந்தை….
”அய்யோ… அம்மா.. இங்க பாருங்களேன் நம்ம பொண்ணு, நீங்க தூங்கிக்கிட்டு இருக்கிங்கன்னு நினச்சு பேசறா… நீங்க இனிமேல் வரவேமாட்டிங்கன்னு எப்படி சொல்லுவேன்… நம்ம பொண்ணுக்காகவாவது எழிந்திருச்சு வாங்களேன்…” என்ற மங்கையின் கதறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது… அன்னையின் கதறலில் திகைத்த சாதனாவிற்கு, அப்பொழுதுதான் தனது தந்தை இவ்வுலகில் இல்லை என்பது புரிந்தது….அவளுக்கு, அதிர்ச்சியில் அழுகை வரவில்லை… தந்தையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்…
சாதனாவின் அமைதியை பார்த்த மங்கை… கலவரமாக “சாதும்மா அழுதுருடா….அமைதியா இருக்காதடா… உங்க அப்பாதான் நம்மளை ஏமாத்திட்டு போய்ட்டாரு… நீயும் என்ன நோகடிச்சுராதடி.. அழுதுருடி…” என கெஞ்ச… “ அப்பா ஏன்மா நம்மள விட்டு போனாரு… இனி எனக்கு யாரு தலை கோதிவிடுவாங்க…..? யாரு என்ன அம்முன்னு கூப்பிடுவாங்க….? எனக்கு அப்பா வேணும்… அப்பாவ வரச்சொல்லுங்கம்மா… இல்லன்னா நம்மளும் அப்பாகூட போயிடலாம்…” என்று கதறி அழுதாள்… அவளின் பேச்சில் திடுக்கிட்ட மங்கை… அவளை அணைத்து கொண்டு “என்ன வார்த்தைடி பேசுற… இதுக்காகவா உன்னை வளர்த்து, ஆளாக்கினோம்… அம்மா இருக்கேன்ல… அம்மா எல்லாம் பார்த்துக்கிறேண்டா அம்மு அழாதடா…” தன் சோகத்தை மறைத்துகொண்டு சாதனாவை ஆறுதல் படுத்தினார்…… தானும் துக்கத்தில் முடங்கியிருந்தால்..ஒன்றும் நடவாது என்று அறிந்து… அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு,
போனை எடுத்து கொண்டு.. கேசவனுக்கு தகவல் சொல்ல, அவரும்,உடனே வந்துவிட்டார்… நண்பனுக்காகவும் நண்பனின் குடும்பத்திற்காகவும் வருந்தியவர்… தானே, செய்ய வேண்டிய காரியங்களை செய்தார்.. கருணாகரனின் இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கும்போதே… பிரகாஷ் அங்கு கோபத்தோடு வந்தான்… அவன் எப்பொழுதும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இங்கு வந்துவிடுவான் என்பதை அறிந்த மங்கை… எச்சரிக்கையுடனே எப்பொழுதும் இருந்தார்… அவர் நினைத்ததுபோல் வந்தவனை…. தூரத்தில் இருந்தே பார்த்து விட்டவர்… வேகமாக சாதனாவை அழைத்து.. அங்கிருந்த ஸ்டோர் ரூமில் ஒழித்து வைத்தார்… அவர் கணவர் அருகில் வரவும், பிரகாஷும் கோபத்துடன் அவரிடம் ஏதோ கேட்க போக….”ஐயோ மாப்பிள்ளை… இங்க பாத்திங்களா.. உங்க மாமாவ… எங்களை எல்லாம் இந்த பொல்லாத உலகத்துல, தனியா விட்டு போயிட்டாரே… நேத்து நைட் லேசா நெஞ்சு வலிக்குது, தண்ணீர் வேணும்ன்னு கேட்டார்.. எடுத்துட்டு வர்றதுக்குள்ள அவருக்கு இப்படி ஆயிருச்சே.. நேத்து நைட்ல இருந்து நானும் உங்களுக்கும், அம்முவிற்கும் போன் பண்ணி பார்த்துட்டு இருக்கேன்… போனே போகலையே.. கடைசிவரைக்கும் அம்முவ பார்க்காம போய்ட்டாரே… இந்த விசயம் அம்முவுக்கு தெரிஞ்சா துடிச்சு போய்டுவாளே…
ஒரு நாள்கூட, அவங்க அப்பாவ…பார்க்காம பேசாம இருக்க மாட்டாளே… எங்க மாப்பிள்ளை அவ…?” அழுதுகொண்டே கேட்க… “என்ன அவ இங்க வரலையா…? என குழப்பத்துடன் கேட்டான்.. “என்ன மாப்பிள்ளை சொல்றிங்க … அவ எப்படி இங்க வருவா..? அவ உங்க கூடதான கோவிலுக்கு வந்தா…? என தெரியாதவர் போல் கேட்க… அங்கிருந்தவர்களுக்கு, மங்கை பிரகாஷை பற்றி கூறிவிட்டதால், யாரும் அவர்களை, காப்பாற்ற முன் வரவில்லை என்றாலும், காட்டியும் கொடுக்கவில்லை,
எனவே அவர்களும் சாதனாவை பற்றி எதுவும் கூறவில்லை …”மங்கை முதல்ல உன் கணவரோட இறுதி சடங்கை முடிப்போம்… அப்பறமா சாதனாவ பத்தி கேட்கலாம்…இது ரொம்ப முக்கியம்மா” என கூட்டத்தில் ஒருவர் கூற.. அவர் அழுதுகொண்டே, சம்மதித்தார் பிரகாஷிற்கு குழப்பமாக இருந்தது…….. அப்ப இந்த சாதனா எங்க போய்ட்டா..? ஒருவேளை தப்பிச்சு போறேன்னு சொல்லி, எதாவது மிருகத்துக்கிட்ட மாட்டியிருப்பாளோ…? சே… எங்கிட்ட இருந்து தப்பிச்சிட்டாளே… இவளுக்காக நான் நடிச்சதெல்லாம் வேஸ்ட்டா போச்சே..? என்று அந்த நிலையிலும் வக்கிரமாக நினைத்து, தான் மிருகத்தை விட கொடியவன் என்பதை நிரூபித்தான்… உள்ளே இருந்த சாதனாவோ, இந்த இரண்டு நாட்களில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால், தனக்குள்ளே இறுகி போய் அமர்ந்திருந்தாள்… அவள் கண்களில் கண்ணீர் இல்லை. பிரகாஷ் வந்தது, மங்கை பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை… விழுந்தாலும்.. அதை உணரும் நிலையில் அவள் இல்லை… கருணாகரனின் இறுதி சடங்கு முடிந்து அவரை எடுத்து செல்வது தெரிந்தும், அவள் கலங்க வில்லை..
அவரை எடுத்து செல்லும்போது, அழுத மங்கையின் கதறல்… பூட்டியிருந்த கதவையும் தாண்டி, அவள் காதில் கேட்க…தன் காதை இறுக மூடிக்கொண்டாள். அனைத்தும் முடிந்தது. ஒரு உயிரை காப்பாற்ற தன் உயிராய் வளர்த்த மகளின் வாழ்வை பணையம் வைத்த, கருணாகரன் என்னும் நல்ல மனிதரின் ஆன்மா கடவுளின் பாதத்தில் சரணடைந்தது….
மங்கையோ மீண்டும் பிரகாஷிடம்…”தம்பி சாதனா எங்கப்பா.. கடைசியா அவங்க அப்பாவோட முகத்த கூட பார்க்கவிடாம பண்ணிட்டிங்களே….. தயவு செய்து சாதனா எங்க இருக்கான்னு சொல்லுப்பா..” என கெஞ்ச… பிரகாஷ் முகத்தை சோகமாக மாற்றி கொண்டு “அத்தை இப்ப நீங்க இருக்கிற நிலைமைல நான் எது சொன்னாலும் நம்ப மாட்டிங்க…ஆனா அதுதான் உண்மை… சாதனா யார்கூடவோ ஓடி போய்ட்டா…” என நாகூசாமல் ஒரு குண்டை தூக்கிப்போட… இவ்வளவு நேரம் இருந்த கட்டுப்பாடு மறைய..”என்னடா சொன்ன என் பொண்ணு ஓடிபோய்ட்டாளா…?தெரு பொறுக்கி நாயே.. அவ குழந்தைடா… அவளப்போய் இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்தது…. உண்மைய சொல்லு என் பொண்ணு எங்க…? அவளை என்ன செஞ்சிங்க…? ஆத்திரத்துடன் அவனின் சட்டையை பிடித்து உலுக்க..
பிரகாஷ் அவரின் கையை பிடித்து தள்ளிவிட்டான்.. அவன் தள்ளிவிட்டதில் அங்கிருந்த சுவரில் மோத போனவர், கடைசி நொடியில் தன்னை சுதாரித்துகொண்டு விலகி.. அவனை முறைத்துப் பார்த்தார்.. அவரின் முறைப்பை அலட்சியம் செய்தவன்..” என்ன பார்க்கிற… நான் சொன்னது பொய்தான்… அதுக்கு இப்ப என்னாங்கிற…?” அவரை ஒருமையில் அழைத்து பேசியவன்..
” நான் சொன்னது பொய்தான்னு உன்னால நிரூபிக்க முடியுமா…? ஆனால் அந்த பொய்ய உண்மையா நிரூபிக்க என்னால முடியும்…” எகத்தாளமாக பேசியவன்.. ”என்ன போலீஸ்க்கு போவியா.. வா போகலாம்.. ஆனா, நீயும் உன் பொண்ணும்தான் அசிங்கப்படுவிங்க… இங்கயாவது, நாலு சுவத்துக்குள்ள நடந்துச்சு… ஆனா அங்க போனா.. அவங்க கேட்கிற கேள்வியில நீ அங்கயே செத்து போய்ருவ…? என்று மிரட்டியவன்..
”நானே அவளை தப்ப விட்டுட்டேனேன்னு, எரிச்சல்ல வந்து இருக்கேன்” சலித்து கொண்டவன் “எனிவே உன்னுடைய புருசன், அதாவது என்னுடைய, மாமனார் இறந்ததுக்கு, என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்…” இரக்கமில்லாமல் நக்கலடித்துவிட்டு வெளியே சென்றவனை தடுத்தார் மங்கை… அவன் திரும்பி பார்க்கவும் “ நீ இதுக்கு நிச்சயம் தண்டனை அனுபவிப்படா…நானும் என் பொண்ணும் எப்படி துடிக்கிறோமோ… அதவிட பலமடங்கு நீ அனுபவிப்படா…”ஆத்திரத்துடன் அவனுக்கு சாபமிட்டார்.. அதை ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டுவிட்டு வெளியே சென்று விட்டான்
அவன் சென்றவுடன் வேகமாக கதவை தாழிட்ட மங்கை… சாதனா இருந்த அறைக்கதவை திறந்தார்.. அங்கு அவள் சுவற்றை வெறித்தபடி இருந்தவளை…”அம்மு” என்று அழைக்க.. “என்னம்மா…?” அமைதியாக கேட்டாள், மகளின் அமைதி புரிந்தாலும்.. இப்பொழுது அதை ஆராய நேரமில்லாததால்.. “சாதும்மா இனிமேல் நாம இங்க இருக்க வேண்டாம்மா..உடனே நம்ம வேற ஊருக்கு போயாகணும்… இல்லன்னா, அவன் மறுபடியும் வந்திருவாண்டா..”
”சீக்கிரம் உன்னோட சர்டிஃபிகேட் எல்லாம் எடுத்து ஒரு கவர்ல போடு, நான் நம்ம ட்ரெஸ்ஸ எடுத்து வைக்கிறேன்..” என்று வேகமாக திட்டமிட்டவரை… நிதானமாக பார்த்து “நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. இந்த ஊரை விட்டு போக..? என கேட்க.. ”பொண்ணா பிறந்துவிட்டாயே.. அதுவும் ஒரு அயோக்கியன் கண்ணுல விழுந்துட்டியேம்மா…” என ஆதங்கப்பட்டவர்.. ”எனக்கு நீ முக்கியம், உன்னோட வாழ்க்கை முக்கியம்டா சாதும்மா.. நம்ம இங்க இருக்க கூடாதுங்கிறது, உங்க அப்பாவுடய கடைசி வேண்டுகோள்… அதை நம்ம நிறவேத்தணும்” என்றுவிட்டு.. அனைத்தையும் பேக் செய்தவர்.. கேசவனுக்கு அழைத்து தாங்கள் கிளம்பி ரெடியாக இருப்பதாக கூறினார். ஒரு அயோக்கியன் பேச்சை நம்பியதன் விளைவாக, அழகிய குருவி கூடாக இருந்த குடும்பம்… சிதைந்து போனது…
சாதனாவின் கடந்தகாலத்தை, கேட்ட வாசுகி, ”கடவுளே…! இவ்வளவு கஷ்டத்த அந்த குழந்தைக்கு கொடுத்திருக்கிறாயே… எப்படித்தான்.. தாங்கினாளோ.. “ கண்ண்ணீருடன் கடவுளை சாடினார்.. அபியோ… அவன் கண்களில் ரத்தம் தான் வருகிறதோ..? என சந்தேகம் கொள்ளும்படி… கண்கள் இரண்டும் தீ கங்குகளாக ஜொலித்தன.. அது கோபத்தினாலா, இல்லை துக்கத்தின்னாலா… இல்லை இரண்டுமேவா… என்பதை அவன் மட்டுமே அறிவான்
அத்தியாயம் 19
மங்கை தங்களுடைய கடந்த காலத்தை கூறிவிட்டு…”நாங்க இங்க ஊருக்கு வந்த புதுசுல… சாதனாவோட மாற்றத்தை நான் கவனிக்கவில்லை… அவங்க அப்பாவ நினைத்து, வேதனை பட்டிட்டு இருக்கான்னு நினச்சேன்… ஆனால் போக போக அவளோட குறும்பும், வெகுளித்தனமும் சுத்தமா போயிருச்சு… நான் என்ன முயற்சி செஞ்சும் அவளோட மனச மாத்த முடியல… சரி வேலைக்கு போனாலாவது… வெளியாட்களை பார்த்து மனசு மாறும்னு நினச்சு அவளை வேலைக்கு அனுப்பினேன்…ஆனா, அவளறிந்த வெளிஉலகம் அவளை மேலும் இறுக வச்சுருச்சு….” இந்த ஒருவாரமாகத்தான், அவ முகத்துல சிரிப்ப பார்க்கிறேன்…” தன் உள்ளத்து வேதனை எல்லாம், இருவரிடமும் கொட்டி தீர்த்தார்…அந்த தைரியமான பெண்மனி…
வாசுகி எழுந்து வந்து அவரை அணைத்து கொண்டார்… “உங்க இடத்துல நான் இருந்திருந்தேன்னா… இந்த அளவுக்கு தைரியமா இருப்பேனான்னு… தெரியலை… ஆனா நீங்க, ஒரு பெண்ணா இருந்து, எல்லாத்தையும் எவ்வளவு! தைரியமா, நிதானமா சமாளிச்சு இருக்கிங்க… அதுவும் அண்ணன் இறந்த அந்த நேரத்துல… உங்களை நினச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு… அண்ணி… என்று வியந்தவாறே, மங்கையை பாராட்டினார் வாசுகி…
”இனிமேல் நீங்க சாதனாவ பத்தி கவலைப் படாதிங்க அண்ணி… அவ எங்க பொறுப்பு.. அவளுக்கு இனிமேல் ரெண்டு அம்மா… சாதனாவ எங்க கிட்ட கொடுத்துருங்க அண்ணி… நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்…” மங்கையிடம் கேட்க… மங்கை, ”உங்க மருமக சம்மதிச்சா.. தாராளமா கூட்டிட்டு போங்க…” என்று தன் சம்மதத்தை… மறைமுகமாக தெரிவித்தார்.. அதில் மகிழ்ந்த வாசுகி அப்பொழுது தான் அபியை கவனித்தார்.. அவன் முகம் கசங்கி இருப்பதை அறிந்தவர்… திகைத்தார்..
”அபி கண்ணா..” மென்மையாக அவனின் கன்னத்தில் கைவைத்து அழைக்க, “ அவன் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது…. ஆண்பிள்ளை அழுதால், அவமானம் என்று நினைப்பவன்.. இன்று ஒரு பெண்ணுக்காக கண்ணீர் சிந்தினான்… ”நான் தப்பு பண்ணிட்டேன் மா… அன்னைக்கே நான் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தேன்னா… என் பேபிக்கு இந்த நிலைமை வந்திருக்காது…..” என்று கூறியவாறு தன் நெற்றியில் அறைந்து கொண்டவனை, வாசுகியும், மங்கையும் திகைத்து பார்த்தனர்..
” அபி நீ என்ன சொல்ற..? வாசுகி கேட்க.. அம்மா இப்ப எதையும் என்கிட்ட கேட்காதிங்க… என் சாதனா பட்ட கஷ்டத்துக்கெல்லாம் முடிவுகட்டிட்டு… உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்.. (பார்த்திங்களா ஃப்ரெண்ட்ஸ்..? அவங்க அம்மா கேட்டதுக்கே பயபுள்ள எப்படி எஸ்கேப் ஆகுது..) தன் முகத்தை அழுந்த துடைத்தவன் மங்கையிடம் “ஆண்ட்டி… இனி யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படாதிங்க,,, நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்…. இனி அம்மு! என்னோட அம்மு… அவளோட சுண்டு விரல கூட யாரையும் தொட விடமாட்டேன்…” என்று உறுதியுடன் கூறினான்…
பின்பு இருவரிடமும், ”இப்ப முதல் வேலையா நான் சாதனாவை பார்த்துட்டு வர்றேன்… காலையில் இருந்து பார்க்கவே இல்ல..” என்று சொல்லிகொண்டு கிளம்பினான். அவன் செல்வதை, புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த வாசுகி மங்கையின் புறம் திரும்பி.. வெளியதான் பெரிய தொழிலதிபன்னு பேரு…ஆனா குடும்பத்துல யாருக்காவது எதாவது ஒன்னுன்னா துடிச்சு போயிருவான்….” என்று மகனை பற்றி பெருமை பேசினார்…
மங்கையும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டார்… ஏனோ அவருக்கு, பிரகாஷின் மேல் வந்த உறுத்தல், அபியின் மேல் வரமறுத்தது….. அபியை முழுதாக நம்பினார்… இனி தன் மகளின் வாழ்வு மலர்ந்துவிடும்… என்று மகிழ்ச்சியுடன் நினைத்து கொண்டார்…. “அண்ணி நீங்க வந்ததுல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கிங்க… உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவர்றேன்…” என்று மங்கயும், வாசுகியை அண்ணி என்று அழைத்தார்… அடுப்படிக்குள் சென்றவருடன், வாசுகியும் பின் தொடர்ந்தார்…
மங்கை நினைவு வந்தவராக ”ஆமா உங்க கிட்ட ஒருவிசயம் கேட்கணும்… அன்னைக்கு சாதனா உங்களையும், அபி தம்பியும் கோவில்ல பார்த்தேன்னு சொன்னா… ஆனா நீங்க ரெண்டுபேரும்… அம்மாவும், மகனும் என்று சொல்லவே இல்லை…? என்று தன் சந்தேகத்தை கேட்டார்…. வாசுகி புன்னகையுடன் “அது அபியோட குறும்புல இதுவும் ஒண்ணு…” என்று கூறியவர்… கோவிலில் நடந்த அபிக்கும், தனக்கும் நடந்த வாக்குவாதத்தயும், அதில் சாதனா, இருவருக்குமிடயில்… இருந்து முழித்து கொண்டிருந்ததையும்…. நகைச்சுவையுடன் கூறினார்… அதை கேட்ட மங்கை நெடு நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தார்…..
வாசுகி மங்கையிடம் “அண்ணி நீங்களும் இந்த உண்மைய சாதனாக்கிட்ட சொல்லாதிங்க…. ஏன்னா..நான் சாதனாவோட மனசுல, அபியோட அம்மாவா.. இல்லாம.. ஒரு நல்ல ஃப்ரெண்டா பழகணும்… அங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்… அங்க வீட்டுல சாதனாவ நல்லா..பழக விடணும்.. அப்பதான் அபிய கல்யாணம் பண்ணிட்டு வர்றப்போ… சாதனாவுக்கு… இது வேற வீடுங்கிற எண்ணமே வராது…” என்று தன் வருங்கால மருமகளின், நலனுக்காக இப்பொழுதே செயல் படதொடங்கினார் அந்த நல்ல மாமியார்…..
”அபி,தம்பி வண்டிய எடுத்துட்டு போய்ட்டாரே… இப்ப நீங்க எப்படி போவிங்க…? நான் வேணும்ன்னா, ஒரு ஆட்டோவ வர சொல்லவா… எங்களுக்கு ரெகுலரா ஓட்ற பையந்தான்… நாங்க எங்க வெளிய போனாலும் அவனைத்தான் கூப்பிடுவோம்… ஒண்ணும் பயமிருக்காது…” என கூற.. வாசுகி “ அதெல்லாம் வேண்டாம் அண்ணி, இன்னும் பத்து நிமிசத்துல அவனே வேற வண்டிய அனுப்பிருவான்… அதுவரைக்கும் நாம ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்….” என கூற, மங்கையும். வாசுகியின் இயல்பான பேச்சிலும், செயலிலும் தன் தயக்கங்களை விட்டு வாசுகியிடம் பேசலானார்… சொன்னது போலவே பத்து நிமிடங்களில், அபி காரை அனுப்பினான்… வாசுகி “சரி அண்ணி நான் கிளம்பறேன் கண்டிப்பா ஒரு நாள் நீங்க நம்ம வீட்டுக்கு வரணும்… நானே வந்து உங்கள கூட்டிட்டு போறேன்” அழைப்பையும் விடுத்து சென்றார்…
வாசுகி சென்றவுடன், மங்கை பூஜை அறையில் இருந்த தன் கணவரின் படத்தின் முன் நின்று…”என்னங்க நம்ம அம்முவிற்கு நல்ல வாழ்க்கை அமைய போகுதுங்க….அவ இவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் தீர போகுதுங்க… அவளை உயிரா பாத்துக்க கடவுள், ஒருத்தர அனுப்பியிருக்கருங்க…. நம்ம, ரெண்டு குழந்தைகளும் எந்த கஷ்டமும் இல்லாம சந்தோசமா வாழணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க…” மனமுருக வேண்டினார்…
இங்கே அலுவலகத்தில், சாதனாவிற்கு வெறுமையாக தோன்றியது… அதன் காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை….? அதே அலுவலகம், அதே வேலைதான், இருந்தும், அந்த வெறுமை மட்டும் விலகவில்லை……வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை….. பொறுத்துப்பார்த்தவள்… மற்ற வேலைகளை மதுவிடம் கொடுத்துவிட்டு, பிரபுவிடம் சென்று… “ எனக்கு தலைவலி… அதனால எனக்கு மதியம் லீவு வேணும்…” என்று கேட்டாள்..
அவள் விடுமுறை கேட்டதை…ஏதோ எட்டாவது அதிசயம் போல் பார்த்தனர்… பிரபுவும், மதுவும்,,, இருக்காதா பின்ன.. எவ்வளவுதான் உடம்பு சரியில்லை என்றாலும், லீவே போடாதவள்… இன்று லேசான தலைவலிக்காக… லீவு கேட்கிறாள் என்றால்… அதுவும் முக்கியமான ஒரு வேலையை பாதியிலேயே விட்டு செல்லும் அளவிற்கு, பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்…
தன் திகைப்பில் இருந்த, பிரபு மீண்டு “ஒரு நிமிஷம் இருங்க சாதனா, இது முக்கியமான வேலை… பாதியிலேயே விட்டுட்டு போனா பாஸ் திட்டுவாரு… அவருக்கு ஒரு கால் பண்ணி கேட்டுக்கிறேன்…” என்றபடி செல்லை எடுத்து அபிக்கு கால் செய்ய….. சாதனாவிற்கு கோபம் வந்தது…
” இது, அவ்வளவு முக்கியமான வேலைன்னா எதுக்கு உங்க பாஸ் காலையிலிருந்து… ஆஃப்கீஸ்க்கே வராம ஊர் சுத்திட்டு இருக்காரு…? என்று புருவம் உயர்த்தி கேட்டவள், நேத்துதான்.. ஒரு முக்கியமான ஒப்பந்தம் நடந்துச்சே… அதுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யணும்…” வேலைய எப்ப ஆரம்பிக்கணும்… இதப்பத்தி எதுவும் யோசிக்காம…அவரு பேசாம எங்கயோ இருப்பாரு… நாங்க மட்டும், உடம்பு சரியில்லன்னாலும், கஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்… இல்ல…? என பட படவென பொரிந்தவளை… மறுபடியும் ஒன்பதாவது அதிசயமாக பார்த்தார்கள்…பிரபுவும் மதுவும்…
மது மனதில், ”அடிப்பாவி சாதனா நீ இவ்வளவு வாயாடியா…? இத்தனை நாளா இது எனக்கு தெரியாமா போச்சே….” ஆச்சரியமாக கேட்டுக்கொண்டாள்.. பிரபுவோ…அபிக்கு கால் செய்ததையே மறந்து.. என்ன சொல்வதென்று தெரியாமல், சாதனாவை பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தான்… அவனின் பாவனையை பார்த்த மதுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…. தன் கையால் வாயை இறுக மூடிக்கொண்டாள்… மதுவோடு சேர்ந்து இன்னொரு ஜீவனும், வாய்விட்டு சிரித்தது…வேற யாரு எல்லாம் நம்ம ஹீரோ சார்தான்…..
பிரபு கால் செய்தவுடனே எடுத்த அபி… மறு முனையில், சாதனா பேசியதை அனைத்தையும் கேட்டுவிட்டு, வாய்விட்டு சிரித்தான்…. ”பேபி என்ன பார்க்காம அவ்வள்வு கஷ்டமா இருக்கா…? சந்தோசமாக மனதில் சாதனாவோடு, கேட்டுக்கொண்டான்…பின்பு, தன் செல்லை கட் செய்துவிட்டு… மீண்டும் அவனே பிரபுவிற்கு அழைத்தான்…
மறு முனையில் பிரபு எடுத்தவுடன், “நான் சொல்றத மட்டும் கேளு.. பிரபு. சாதனாவிற்கு ஒரு பத்து நிமிஷம், பார்க்கிற மாதிரி வேலை கொடு…. ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் வந்துருவேன்…அதுக்கு பிறகு அவங்க லீவு கேட்க மாட்டாங்க….” என்று உறுதியாக கூறினான்…இங்கே பிரபுவிற்கு ஏதோ புரிவதுபோல் இருக்க…..” பாஸ்” என சந்தேகமாக இழுத்தான்…” சொன்னதை செய்டா அதிகபிரசங்கி…” அவனை செல்லமாக வைதுவிட்டு, புன்னகையுடன் தன் செல்லை அணைத்தான்…..
பிரபு, சாதனாவிற்கு அபி சொன்னது போலவே வேலையை கொடுக்க, அதை வேண்டா வெறுப்பாக செய்துகொண்டிருந்தாள்…..”அச்சோ எனக்கு என்ன ஆச்சு…? ஏன் வேலையில என்னால கவனம் செலுத்த முடியல…? இதுக்கு முன்னால எனக்கு இப்படி ஆனதே இல்லையே…என்று தனக்குள் புலம்பியவாறே… வேலை பார்த்துகொண்டிருந்தாள்.. சரியாக ஐந்து நிமிடத்தில் அலுவலகம், வந்து சேர்ந்தான் அபி… அவன் வந்ததை சாதனா கவனிக்கவில்லை….அபி சாதனா அருகே வந்ததும்…. ”ஹலோ இங்க சிக்னல் சரியா கிடைக்கல… கொஞ்சம் பொறுங்க… என் ரூமுக்குள்ள கிடைக்குதான்னு பார்க்கிறேன்…” வேண்டுமென்றே சத்தமாக பேசிவிட்டு போனான்… “காலயில் இருந்து ஊர சுத்திக்கிட்டு இப்ப வந்து, டவர் கிடைக்கல… டவல் கிடைக்கவில்லைன்னு புலம்பறது….” மனதில் அபியை வறுத்தெடுத்தாள்…
பிரபு கொடுத்த வேலையை முடித்து கொடுத்தவள், அதை பிரபுவிடம் கொடுக்க, அவனோ… “சாதனா மேடம் இத சார்தான் உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க… சோ, நீங்க இதை அவர்க்கிட்டயே கொடுத்துட்டு… நீங்க வீட்டுக்கு போகலாம்…” என அனுப்பி வைத்தான்…சாதனா, அபியின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்..அவள் மனதில் காலையில் இருந்த வெறுமை போய்… இப்பொழுது அங்கு கோபம் ஆட்சி செய்து கொண்டிருந்தது… அபி அவள் வந்ததை உணர்ந்தும்..வெகு தீவிரமாக யாருடனோ போனில் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்…
”அம்மா எனக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு… அத்தைக்கிட்ட சொல்லிருங்க…” என்று சாதனாவை ஓரக்கண்ணில் பார்த்து கொண்டே கூறினான்…
“…………”
“எனக்கு புடிச்சதனால தான, இங்க அவ்வளவு முக்கியமான வேலையெல்லாம் விட்டுட்டு அத்தை வீட்டுக்கு உங்க கூட வந்தேன்…
“……….”
”என்ன கிஃப்ட் வாங்கி கொடுக்கிறது….?
“………….”
“சரி… சரி அதை நான் பாத்துக்கிறேன்… முக்கியமான வேலை இருக்கு நான் அப்பறமா கூப்பிட்றேன்” என்று போனை அணைத்துவிட்டு… சாதனாவை அழைத்தான்….. அவள், அவனின் “எனக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு” என்ற வார்த்தையிலேயே…. ….” என்ன…! இன்னைக்கு காலையில பொண்ணு பார்க்க போனாரா…? அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்… அவன் மறுபடியும் அழுத்தி அழைக்க…தன் நினைவில் இருந்து மீண்டவள்…”சாரி சார்…நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டேன் சார்…”என்று அவனிடம் மனிப்பு கேட்டுவிட்டு, அவள் பிரிண்ட் எடுத்ததை கொடுத்தாள்…அவன் அதை சரிபார்த்துவிட்டு….
”எல்லாம் சரியா இருக்கு சாதனா… நீங்க வீட்டுக்கு போகலாம்..” என கூறிவிட்டு வேறொரு ஃபைலை எடுத்து அதில் ஆழ்ந்து போனான்…” நான் எதுக்கு வீட்டுக்கு போகணும்..? தான் தலைவலிக்காக அரை நாள் விடுமுறை கேட்டதையே மறந்து, அவனிடம் கேட்க… அவன் தெரியாதவன் போல் “உங்களுக்கு தலைவலி, அரை நாள் விடுமுறை வேணும்ன்னு நீங்கதான பிரபுக்கிட்ட கேட்டிங்க..?, அதுமட்டும் இல்லாம, நீங்க அவ்வளவா லீவு எடுத்ததில்ல… அதனால அரை நாள் இல்ல நாளைக்கு சேர்த்து ஒருநாள் எடுத்துக்குங்க…” என தாராளமாக கூற…அவள் முகத்தில் அசடு வழிந்தது… அதை பார்க்கவே அவ்வளவு அழகா… இருந்தது அபிக்கு….” என் செல்ல பேபி… நீ நிஜமாவே பேபிதான் இப்ப உன் முகத்தை பார்த்தா அப்படிதான் தோணுது” செல்லமாக கொஞ்சி கொண்டான்…
சாதனா “இல்ல பராவாயில்ல எனக்கு இப்ப தலை வலி சரியாகிடுச்ச்சு… நான் வேலைய பார்த்துட்டு எப்பவும் போல சாயந்திரமே போறேன்… அவசரமாக கூறிவிட்டு… வேறு எதுவும் கேட்டுவிடுவானோ என பயந்து… வேகமாக வெளியே சென்றவள்….கதவருகில் வந்ததும்…
”உங்களுக்கு பொண்ணு பார்த்திருக்காங்களா….?
“ம்.. ஆமா…”
“பொண்ண ரொம்ப புடிச்சிருக்கா….”
“ம்… ரொம்ம்ம்ம்ப….”
”அவங்களதான் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா…?
“ ம்… நிச்சயமா….”
சிறிது அமைதியாக இருந்தவள் ”அவங்களை கல்யாணம் பணிட்டு கொடுமை படுத்துவிங்களா…?” என அமைதியாக கேட்டாள்….
அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் புன்னகையுடன் பதில் சொல்லி கொண்டிருந்தவன்… அவளின் கடைசி கேள்வியில்…“என்ன…” அதிர்ச்சியாக கேட்டான்… அவள் அதே கேள்வியை மீண்டும் கேட்க…. அந்த நேரத்தில், பிரகாஷ் மட்டும் அபியின் கண்முன்னே இருந்தால், உலகத்தில் யாரும் அனுபவித்திராத மிகவும் கொடூரமான தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பான்….. அவ்வளவு வெறி வந்தது பிரகாஷின் மீது…
சாதனா அவனின் பதிலுக்காக… அவன் முகத்தை பார்த்திருந்தாள் “ஏனோ அவளுக்கு, அபி இதற்கு பதில் என்ன சொல்ல போகிறான் என்பதை தெரிந்தே ஆக வேண்டும் போல் இருந்தது, தனக்கு ஏன் இந்த எண்ணம் தோன்றுகிறது…? என்று மனது கேட்டாலும்.. அதை ஒதுக்கி வைத்துவிட்டு அபியின் முகம் பார்த்தாள்….
சாதனா தன் முகத்தையே பார்த்திருப்பதை அறிந்தவன்…..நிதனமாக..”யாராவது தன்னை தானே கொடுமை படுத்திக்குவாங்களா…? என அவளையே திருப்பி கேட்க… ”என்ன சொல்றிங்க..?”
” நான் தான் அவள், அவள் தான் நான்…. அதாவது என் மனைவி…. அதனால என்னைய நானே வருத்திக்கமாட்டேன்,” என்றவன் தொடர்ந்து கனவில் மிதப்பவன் போல் ”அவ சிரிச்சா, நானும் சிரிப்பேன்… அவ அழுதா, நான் துடிப்பேன்…அவ கண்ணீருக்கு காரணமானவங்களை அதை விட பலமடங்கு அழ வைப்பேன்…. அவளை என் கண்ணுக்குள்ள வச்சு……. உயிரா பார்த்துப்பேன்…. இத்தனை வருஷம் பெத்து வளர்த்த அப்பா, அம்மாவ விட்டுட்டு, எல்லாமே நீதான்னு நம்ம மேல நம்பிக்கை வச்சு வர்ற பெண்ணை அழ வைப்பவன், புழுவை விட கேவலமானவன்… அப்படிங்கிறது என் எண்ணம் ”
என்று உணர்ச்சி மேலிட கூறியனை பார்த்த சாதனாவிற்கு…தான் ஏதோ பெரியதாக இழந்ததைப்போல் இருந்தது…. தனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி வாழ்க்கை அமையலை….? ஏனோ அழுகை வரும்போல் இருக்க… முயன்று கட்டுப்படுத்தி கொண்டு…”உங்களுக்கு வரப்போற மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க” என்றவளின் குரலில் பொறாமை இல்லை… ஏக்கமே இருந்தது…. இதுக்கும் மேல் இங்கே இருந்தால் அழுதுவிடுவோம் என்று எண்ணி, அறையை விட்டு வெளியேறினாள் அந்த கொடுத்து வைத்தவள்… (அதான்பா சாதனா சொன்னாளே, உங்களுக்கு வரப்போற மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க”ன்னு அதான் இப்படி போட்டுடேன்” ஹி… ஹி…) சாதனா அறையை விட்டு வெளியேறியவுடன்… அதுவரை இருந்த இலகுநிலை மாறி, அபியின் மனதில், சாதனா பட்ட துன்பங்கள்… கண்முன் தோன்றி அவனை இம்சை படுத்தியது… ”பேபி இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கடா…. உன் கண்ணீருக்கு காரணமானவனை நான் சும்மா விடமாட்டேன்…. ஆனா, அதுக்கு முன்னாடி நீ எங்கிட்ட இருக்கணும்… உரிமையாக… என் மனைவியாக… அப்பதான் உன்ன நம்ம குடும்பத்துல, பாதுகாப்பா விட்டுட்டு என்னால அந்த பிரகாஷை நிம்மதியா கவனிக்க முடியும்…..
”அதனால சீக்கிரமே உன் மனசை புரிஞ்சுக்கிட்டு இந்த மாமாக்கிட்ட வந்திருங்கடி செல்லம்…. நீ என்கிட்ட உன் காதலை சொல்ல வேண்டாம் பேபி… நான் உன் மனசுல இருக்கேன்கிறத நீ உணர்ந்தாலே போதும்… நான் எங்க இருந்தாலும் உன் கண்முன்னாடி நிப்பேன்…” என்று மனதில் அவளோடு உரையாடியவன், ஒரு பெரு மூச்சுவிட்டு, தன் அன்னைக்கு அழைத்து இங்கு நடந்ததை சொல்லி…”அவ ரொம்ப அப்செட்டா இருக்காம்மா… இப்ப உடனே அவ மனச மாத்த என்னாம்மா செய்றது…? வாசுகியிடம் கவலையுடன் கேட்டான்…..
“டேய் அபி கண்ணா நீயும் ஏண்டா சோக கீதம் வாசிக்கிற..” என்று அவனை கலாய்த்தவர்…
”அம்ம்ம்மா ” என்ற அவனுடய அழைப்பில்
“சரி… சரி.. கோபப்படாத…. எனக்கென்னவோ சாதனா உன் பக்கத்தில் இருந்தா அழமாட்டான்னு தோணுது….. நி என்ன பண்ற… எதாவது ஒரு வேலை கொடுத்து அவளை உன் பக்கத்திலேயே வச்சுக்க….வேற எதுவும் சிந்திக்க விடாம வேலை கொடு…. அப்ப அவ கவனம் அதுல போய்விடும்” என்றவர்…அவன் சென்ற பிறகு, மங்கை வீட்டில் நடந்ததை கூறினார்…. அன்னை கூறியதை கேட்டவன்…அன்னையை நினைத்து மிகவும் பெருமை அடைந்தான்…. “ஐ லவ் யூ ம்மா…”அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாதனா உள்ளே வந்தாள்… அவனின் “ஐ லவ் யூ ம்மா…” என்பது…. அவளுக்கு ஐ லவ் யூ, உம்மா…” என்பது போல் கேட்க…குறைந்திருந்த அழுகை மீண்டும் வருவது போல் இருந்தது…
அவளின் முகத்தை பார்த்திருந்த அபி…. அதை கண்டு கொண்டு….
” போன்ல அம்மா…”
”ஓ அம்மாவா…” ஆசுவாசமாக கேட்டாள்…
“ஆமா நீங்க என்ன நினச்சீங்க…?”
“ஒண்ணும் நினக்கலை சார்.. நீங்க வர சொன்னிங்கன்னு பிரபு சொன்னார்…”
“ம்.. ஆமா..எனகு இந்த அக்கவுண்ட்ஸ்ல டவுட்ஸ் இருக்கு, அது மட்டுமில்லாம, இந்த ஒப்பந்தத்துல வந்த லாபத்துல தொழிலாளர்களுக்கு பத்து சதவீதம், தருவோம் நு சொன்னோம்… அதை பத்தியும் பேசணும்.. அதான், உங்கள கூப்பிட சொன்னேன்….” என்றவன் பிரபுவை அழைத்து “ பிரபு இன்னக்கு ஐந்து மணிக்கு மீட்டிங் அரேஞ் பண்ணிரு.. அது வரைக்கும் யாரும் என்னை பார்க்க அனுமதி தர வேண்டாம்… யாரா இருந்தாலும் நாளை காலையில வர சொல்லு..” என்று கட்டளையிட்டான்
தன் அன்னை சொன்னதுபோலவே… சாதனாவை வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல்…வேலை வாங்கினான்….அவளும் தன் துக்கங்களை மறந்துவிட்டு, வேலையில் மூழ்கிப்போனாள்.. சரியாக நான்கு நாற்பத்தி ஐந்துக்கு பிரபு வந்து, மீட்டிங் பற்றி நினைவுபடுத்தி சென்ற பிறகுதான், இருவருக்குமே சுற்றுபுறம் உரைத்தது… அபி, சாதனாவை அனுப்பிவிட்டு…ஓய்வறைக்கு சென்று முகம் கழுவி வந்தவன் மீட்டிங் ஹாலுக்கு சென்றான்….. “ஹாய் ஃப்ரெண்ட்ஸ் முதல்ல உங்க அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சுக்கிறேன்…” என்று பேச்சை ஆரம்பித்தான்.. “என்னடா எதுக்கு நன்றின்னு பார்க்கிறிங்களா…? நம்ம ஒரு வெளிநாட்டு ஒப்பந்தம் முடிச்சு கொடுத்த்தோமல்லவா… அந்த வேலை அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்காம்…
அதுவும் சொன்ன நாட்களுக்குள்ள முடிச்சு கொடுத்தனால…நம்ம மேல நம்பிக்க வச்சு அடுத்தடுத்த வேலையும் நமக்கே கொடுக்க போறாங்க… அதுக்கான ஒப்பந்தமும் நேத்து நடந்த மீட்டிங்ல, ரெண்டு கம்பெனியும் கையெழுத்து போட்டோம்…” என்று அபி கூறி முடிப்பதற்குள்…அங்கிருந்தவர்களின் கை தட்டல் அந்த அரங்கத்தையே அதிர செய்தது….. அந்த சத்தம் ஓயும் வரை புன்னகையுடன் பார்த்திருந்தான்…”நீங்க சொன்ன சொல்ல நிறைவேத்திட்டிங்க…
அதேமாதிரி நானும் கொடுத்த வாக்க நிறைவேத்தறது தானே முறை…அதனால, ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த ஒப்பந்ததுல வந்த லாபத்துல பத்து சதவீதம்…தருகிறேன் என்று சொன்னேன்… ஆனால் உங்களின் உழைப்பை மதிக்கும் விதமாக பதினைந்து சதவீதமாக தரப்படும்” என அபி அறிவிக்கவும், அனைவரும் சந்தோசத்தில் “ஹே” என்று கூச்சலிட்டனர்….. “அமைதி.. அமைதி.. இந்த மூன்று மாதமாக வேலை வேலை என்று அதிலேயே கவனம் செலுத்தி… மனசும், உடலும் சோர்ந்து போயிருக்கும் இல்லையா..? உங்களுக்கு எல்லம் மகிழ்ச்சியான் செய்தி… ஒண்ணு சொல்ல போறேன்…அது என்ன வென்றால்…..” நிறுத்தியவனை
”சார் அது என்னனு சொல்லுங்க சஸ்பென்ஸ் தாங்க முடியலை” என கத்த… “அது அடுத்தவாரம் நாம அனைவரும்…. இரண்டு நாட்கள், குன்னூருக்கு சுற்றுலா செல்லபோகிறோம்…” இதை பத்தி மேலும் தகவல்கள் உங்க மெயில் ஐடிக்கு அனுப்ப்படும்…” என்றவன் அவ்வப்போது, யாரும் அறியாமல், சாதனாவை பார்த்தபடி பேசிக்கொடிருந்தான்… இப்பொழுதும் அவளின் முகம் பார்க்க…அவ்வளவு நேரமும் புன்னகையுடன் இருந்த அவளின் முகம்… அவன் கடைசியில் சொன்னதை கேட்டவுடன் பயத்தில் வெளுத்திருந்தது…..
அவளின் முகத்தை பார்த்திருந்தவன்….” சாரி பேபி… எங்க காயம் பட்டதோ… அங்கதான மருந்து போட முடியும்….அதே மாதிரிதான்…குன்னூரென்றாலே…பயப்படும் உன்னை அங்கே அழைத்து போய் அந்த பயத்தை போக்கணும்… அதுக்காகத்தான் இந்த சுற்றுலா திட்டமே…….” என மனதில் நினைத்துகொண்டான்…..
பாவம் அவனுக்கே அது மறக்க முடியாத பயணமாக அமையபோவது தெரியாமல்… அதுவும் மிகவும் இனிமையாக….. அமையபோவது தெரியாமல் பயணத்திற்கு தயாராகினான்… நம்ம ஹீரோ…
Very nice sis.pavam Sana baby .romba pavam.innum inthamathuri pasanaga irukanga Cha .3ppa mastum nu thrla romba pavam ….