Loading

ஆர்யான், சிதாரா இருவரின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் யுனிவர்சிட்டி பஸ்ஸில் தான் சிதாரா வீடு திரும்புவாள்.

ஆர்யான் தான் அவளின் பாதுகாப்புக்கு அதனை ஏற்பாடு செய்திருந்தான்.

அன்று சிதாரா யுனிவர்சிட்டியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஆர்யானிடமிருந்து கால் வந்தது.

ஆர்யான், “மினி… இன்னைக்கு வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகிடும்… எனக்காக வைட் பண்ணிட்டு இருக்காதே… நீ சாப்டுட்டு டார் லாக் பண்ணிட்டு தூங்கு… என் கிட்ட இன்னொரு கீ இருக்கு… பாய் மினி…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

சிதாரா குளித்து உடை மாற்றி வந்தவள் சமையலறை சென்று காஃபி கலந்து எடுத்து வந்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஆர்யானின் டயரியை இன்னும் படிக்காதது நினைவு வரவும் அதனை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“சேம்ப்….. என்ன பொண்ணுடா அவ… நானும் இங்க படிக்க வந்ததுல இருந்து மாடர்ன் ட்ரஸ்ன பேருல கண்ட கருமத்தையும் போடுற பொண்ணுங்கள தான் பாத்திருக்கேன்… பட் இவ வேற சேம்ப்…” 

என்றிருக்க சிதாரா, “பார்ரா…. சார் ரொம்ப பீஃல் பண்ணி எழுதி இருக்காரு… பாக்கலாம் யாருன்னு..” என்றவள் மறுபக்கத்தைப் படித்தாள்.

“ஃபர்ஸ்ட் யேர் ஸ்டுடன்ட்ஸ் ஜாய்னிங் டே… சுத்தி இருந்த அவ்வளவு பொண்ணுங்களுக்கு மத்தியில அவ மட்டும் என் கண்ணுக்கு தனியா தெரிஞ்சா… ஐ ஸ்டாப்ட் ப்ரீத்திங் ஃபார் அ செக்கன்…” 

சிதாரா, “ஓஹ்… அவ்வளவு அழகா என்ன…” என நினைத்தவளுக்கு அவளையே அறியாது சற்று பொறாமையாகவும் இருந்தது.

“லாங் சுடிதார் போட்டு, ஷால அப்படியே முன்னால மறைச்ச மாதிரி விரிச்சி போட்டு, நெத்தில குட்டியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு… புக்ஸ நெஞ்சோட அணைச்சிக்கிட்டு மெதுவா நடந்து வந்தா… அவ போட்டிருந்த அந்த ஸ்பெக்ஸயும் தாண்டி அவ கண்ணுல ஒரு பதட்டம்…” 

என்றிருக்க சிதாராவின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

அவசரமாக மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்த்தாள்.

“அவ நான் உக்காந்துட்டு இருந்த இடத்த நெருங்க நெருங்க என் ஹார்ட் பீட் அப்படியே எகிரிடுச்சு… “

என்று நிறுத்தி இருந்தான்.

“சிதாரா… அவ பேரு அது தான்… பேரைப் போலவே அவ ஒரு நட்சத்திரம்… ராத்திரி நேரத்துல கருமைல மூழ்கி போற வானத்துல எப்படி சின்ன தீப்பொறி போல எரியிர நட்சத்திரம் வெளிச்சத்த கொடுக்குமோ.. அது போல தான் என் சிதாரா… என் வாழ்க்கைல சின்ன வெளிச்சம்குற சின்ன சின்ன சந்தோஷங்கள கொண்டு வர வந்தவ… மை ஏஞ்சல்…”

என்றிருந்ததை வாசிக்கவும் சிதாராவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

“ஹ்ம்ம்ம்ம்….. சரியா நேரம் பார்த்து பாழாப் போன என் வாய் அதோட வேலைய காட்டிடுச்சு… வந்ததும் வராததுமா அவ கிட்ட போய் பேசினா எங்க அவ என்ன தப்பா நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு ரேக்கிங் பண்ணுறது போல அவள கலாய்ச்சேன்… அப்ப கூட பயந்துட்டு கீழ பாத்துட்டே இருந்தா… ஒரு வார்த்த கூட பேசல… எனக்கே பார்க்க பாவமா இருந்துச்சு… அப்போ திடீர்னு அவ வலிப்பு வந்து என் கால் கிட்டே விழவும் என் இதயமே நின்னு போச்சு சேம்ப்…”

என்றிருக்க சிதாராவின் கண்கள் கலங்கின.

“அதுக்கப்புறம் அவ கண்ணு முழிக்கிற வரைக்கும் நான் நானாவே இல்ல… அவ கண்ண தெறந்து என்ன பாத்ததும் தான் போன உசுரு திரும்ப என் கிட்ட வந்துச்சு…”

அதன் பின் இருவரும் நட்புக் கரம் நீட்டியது, மாறி மாறி பெயர் சூட்டிக் கொண்டதில் இருந்து அவளுடனான ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து  எழுதி இருந்தான்.

“சடன்னா மினி அவளோட ட்ரஸிங் ஸ்டைல்ல இருந்து எல்லாம் மாத்திக்கிட்டதும் எனக்கு அப்படி ஒரு கோவம்… அப்போ தான் அவளோட பாஸ்ட் பத்தி என் கிட்ட சொன்னா…. அந்த பிரணவ்வ கொல்லனும் போல ஒரு வெறி…. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னோட மினி கிட்ட அப்படி எல்லாம் சொல்லி இருப்பான்… அவன் மட்டும் என் முன்னாடி இருந்தான்னா அது தான் அவனோட கடைசி நிமிஷம்…” 

சிதாராவின் முகத்தில் அவளையும் மீறி புன்னகை வெளிப்பட்டது.

“பட் சேம்ப்… அவன் அப்படி பேச போய் தானே மினி நியுயார்க் வந்தா… அதனால தானே எனக்கு அவள பார்க்க முடிஞ்சது… அதுக்காக அவன் பண்ணத நான் மன்னிக்க எல்லாம் இல்ல… திரும்பவும் என் மினிய அவன் கஷ்டப்படுத்த நெனச்சா அதுக்கப்புறம் அவன என்ன பண்ணுவேண்ணு எனக்கே தெரியாது…”

சிதாராவின் மனநிலை என்னவென்று அவளாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஆர்யானின் வார்த்தைகளால் மனதில் ஒரு இதம் பரவுவதையும் மறுக்க முடியவில்லை‌.

“சேம்ப்‌…… நான் இன்னைக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கேன்… ஏன் தெரியுமா… ஏன்னா….. நான்…. மினிய…… இல்ல… சொல்ல மாட்டேன்… என் மினியோட கண்ண பாத்து அவ கிட்ட தான் இதை முதல்ல சொல்லனும்… அதுக்கு அவளோட ரியாக்ஷன பார்க்கனும் நான்…” 

என முடித்திருந்தான்.

சிதாரா அவசரமாக அடுத்த பக்கங்களைப் பிரட்டினாள்.

ஆனால் அதன் பின் அவன் எதுவுமே எழுதி இருக்கவில்லை.

டயரியை இருந்த இடத்திலேயே வைத்தவள்,

“அப்படின்னா ஜிராஃபி மனசுல இருக்குற அந்த பொண்ணு நானா…” என நினைக்கும் போதே சிதாராவின் முகத்தில் புன்னகை.

சிதாரா, “பட் ஏன் இன்னும் ஜிராஃபி என் கிட்ட இதை பத்தி சொல்லல… கல்யாணத்தப்போ கூட ஏதோ என் நல்லதுக்குன்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணான்..” என்றவளை,

“அவன் சொல்லி இருந்தா மட்டும் நீ உடனே எக்சப்ட் பண்ணி இருக்கவா போற… ” என அவளின் மனசாட்சி திட்டியது.

“பாக்கலாம்.. சார் இதை என் கிட்ட எப்போ சொல்ல போறாருன்னு… போய் முதல்ல டின்னர் பண்ணி வைக்கலாம்..” என்றவள் சமைக்கச் சென்றாள்.

சமைக்க ஆரம்பிக்கும் போதே அவளுள் ஏதோ செய்ய ஆரம்பிக்க அதனைப் புறக்கணித்து விட்டு சமையலை முடித்தவள் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

அப்போது தான் சிதாராவின் கண்களில் நாட்காட்டி பட அன்றைய திகதியைப் பார்த்தவள்,

“ப்ச்… இதை எப்படி மறந்தேன்… ” என வயிற்றைத் தடவியபடி அறைக்குள் நுழைந்து தன் சூட்கேசை இழுத்துத் தேடியவள் தலையில் அடித்தபடி, “நான் தான் இருந்த டென்ஷன்ல வாங்கி வைக்கவே இல்லையே…” என தன்னையே நொந்து கொண்டாள்.

கப்போர்ட்டை திறக்க சிதாராவின் கண்களில் மாட்டியது பேப்பரால் சுற்றி வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று.

அது என்ன என்று எடுத்துப் பார்க்கவும் அதனுள் அவளுக்குத் தேவையானது இருந்தது.

சிதாரா, “இது எப்படி இங்க வந்தது… நான் தான் வாங்கவேயில்லையே…” என நினைத்தவளின் கண் முன் ஆர்யானின் முகம் தோன்றியது.

புன்னகைத்தபடி, “சோ ஸ்வீட் ஜிராஃபி நீ… என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சி வெச்சி இருக்க..” என்றவள் அதனை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சற்று நேரத்தில் வெளி வந்தவள் முகம் வலியில் சுருங்கி இருந்தது.

வலி பொறுக்காது வயிற்றை இறுக்கிப் பிடித்தபடியே சென்று அறை விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

நன்றாக இருட்டிய பின் தான் ஆர்யான் வீட்டுக்கு வந்தான்.

தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்தவன் வீடு அமைதியாக இருக்கவும், “மினி தூங்கிட்டா போல..” என நினைத்தவன் டைனிங் டேபிள் அருகில் வர மேசையில் பாத்திரங்கள் அப்படியே இருந்தன.

திறந்து பார்த்தவன், “என்ன எல்லாம் அப்படியே இருக்கு… நான் தான் எனக்காக வைட் பண்ண வேணாம் சாப்டுன்னு சொன்னனே…” என்ற ஆர்யான் சிதாராவைத் தேடி அறைக்குள் நுழைந்தான்.

அறை இருட்டாக இருக்கவும் “மினி..” என அழைத்தபடி விளக்கைப் போட கட்டிலில் ஒரு ஓரமாக முனங்கியபடி ஒரு கையால் வயிற்றையும் மறு கையால் கால்களையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள் சிதாரா.

பதறிய ஆர்யான், “என்னாச்சு மினி… ஏன் இப்படி படுத்திருக்க…” என சிதாராவை நெருங்கிக் கேட்க,

“ஒன்னுமில்ல ஜிராஃபி… ஜஸ்ட் மந்த்லி த்ரீ டேய்ஸ் எப்பவும் வரது தான்…” என வலியில் கூறி விட்டு கண் மூடவும் ஆர்யானுக்கு புரிந்து போனது.

அவசரமாக அறையிலிருந்து வெளியேறியவன் சில நொடிகளில் கையில் ஒரு க்ளாஸுடன் நுழைந்தான்.

ஆர்யான், “மினி எழுந்து இதை குடி முதல்ல…” என அவளைக் கைப் பிடித்து எழுப்பியவன் அவளை கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

சிதாரா அவன் தந்த க்ளாஸை கையில் வாங்கி, “என்ன ஜிராஃபி இது…” எனக் கேட்க,

“இஞ்சி டீ… இஞ்சிய தண்ணில கொதிக்க வெச்சி அதுல தேன் கலந்து குடிச்சா பெய்ன் குறையும்… அதான் உனக்கு எடுத்துட்டு வந்தேன்…” என்றான் ஆர்யான்.

“ஈ… யக்… எனக்கு வேணா ஜிராஃபி…” என முகத்தை சுருக்கியபடி கூறிய சிதாரா மீண்டும் படுத்துக் கொள்ளப் பார்க்க,

“மினி… சொல்றேன்ல… சாப்பிட கூட இல்ல நீ… ப்ளீஸ் எனக்காக குடி.. பெய்ன் குறையும் உனக்கு..” என ஆர்யான் கூறவும் அவன் கெஞ்சுவதை விரும்பாத சிதாரா கண்ணை மூடிக் கொண்டு ஒரே மிடரில் குடித்தவள்,

“ரொம்ப படுத்துற நீ ஜிராஃபி…” என்றாள் ஆர்யானை முறைத்துக் கொண்டு.

சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான் அவளிடமிருந்து க்ளாஸை வாங்கி வைத்தவன்,

“சரி கால் ரெண்டயும் நேரா நீட்டி வை மினி…” என்கவும்,

அவன் சொல்லியதை செய்தவள், “எதுக்கு..” எனக் கேட்டாள்.

ஆர்யான், “ஆய்ல் மசாஜ் பண்ணி விடத்தான் மினி… கால் வலிக்கு நல்லது…” என்றவன் சிதாராவின் கால்களில் எண்ணையைத் தடவ அமர,

பட்டென கால்களை இழுத்துக் கொண்டவள், “அ.. அதெல்லாம் ஒன்னும் வேணா… இது நார்மல் தானே‌‌… அதுவா சரி ஆகிடும்..” என்றாள் தடுமாறியபடி.

சிதாராவின் கண்களை அழுத்தமாகப் பார்த்த ஆர்யான், “ஏன் மினி.. நான் உன்னத் தொட்டா உனக்கு அருவருப்பா இருக்கா என்ன..” எனக் கேட்க,

அவசரமாக கால்களை நீட்டினாள் சிதாரா.

சிதாராவின் செயலில் புன்னகைத்த ஆர்யான் அவள் காலை எடுத்து தன் மடி மீது வைக்க சிதாராவுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது.

அவளுக்கு அது ஒரு புதுவித உணர்வாக இருந்தது.

என்ன என வரையறுக்க முடியவில்லை அவளால்.

சிதாராவின் நைட்டியை அவள் முழங்கால் வரை உயர்த்தி விட்ட ஆர்யான் அவள் கால்களில் எண்ணையைத் தடவி நன்றாக நீவி விட்டான்.

ஆர்யான் தன் காலைத் தொடவும் முதலில் சங்கடமாக உணர்ந்த சிதாரா அதன் பின் அவன் கண்களையே ஆராய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிதாராவின் கால்களை தன் மடி மீது வைத்து எண்ணையைத் தடவும் போது கொஞ்சம் கூட அவன் கண்களில் சஞ்சலமோ பார்வை மாறுபடவோ இல்லை.

அவளின் வலியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது.

“முடிஞ்சது…”  என ஆர்யான் கூறவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

சிதாரா ஆர்யானின் மடியிலிருந்து கால்களை எடுத்துக் கொள்ளவும் எழுந்தவன், 

“நீ தூங்கு மினி… நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..” என்று விட்டு சென்றான்.

ஆர்யான் குளித்து முடித்து உடை மாற்றி வரும் போது சிதாரா தூங்காமல் கண்களைத் திறந்தபடி கால்களை மடக்கிப் படுத்திருந்தாள்.

ஆர்யான் வந்து சிதாராவின் அருகில் அமர்ந்தவன், “இன்னும் பெய்ன் இருக்கா மினி…” எனக் கவலையாகக் கேட்க,

சிதாரா, “இப்போ கொஞ்சம் குறைஞ்சிடுச்சு…” என்க,

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அறை விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டான்.

ஆர்யான் வந்து கட்டிலில் படுத்துக் கொள்ளவும்,

“தேங்க்ஸ் ரயன்…” என அவன் கண்களைப் பார்த்துக் கூறிய சிதாரா ஆர்யானின் நெஞ்சில் தலை வைத்து அவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

வலி பொறுக்காமல் ஆறுதலுக்காகத் தான் சிதாரா தன்னை அணைத்துப் படுத்திருக்கிறாள் என எண்ணிய ஆர்யான் ஒரு கையால் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

ஆனால் சிதாராவின் மனதில் என்ன இருந்தது என அவளே அறிவாள்.

சிதாரா ஏதோ யோசனையில் இருக்கவும் ஆர்யான், “தூங்கு மினி.. மார்னிங் ஆகும் போது பெய்ன் குறைஞ்சிடும்..” என்று சிதாராவின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து விட்டு கண் மூடினான்.

ஆனால் அம் முத்தத்தில் கொஞ்சம் கூட காமம் இன்றி சிதாராவின் மீதிருந்த அன்பும் அக்கறையும் மட்டுமே இருந்ததை சிதாராவால் உணர முடிந்தது.

சிதாராவும் நிம்மதியாக கண் மூடி உறங்கினாள்.

_______________________________________________

“பாஸ்… ஏன் இன்னும் எதுவும் பண்ணாம அமைதியா இருக்கீங்க… ” என்று அவனிடம் வினவ,

பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தவன், “எதுக்கு இந்த அவசரம்… இதனால தான் நான் உனக்கு பாஸா இருக்கேன்.. நீ எனக்கு கீழ வேலை பார்க்குற…” என்க,

மற்றவன் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான்.

சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தவன் அதை வாயில் வைத்து, “நான் கண்டதும் வேட்டையாடுற நரி இல்ல… பதுங்கி நின்னு வேட்டையாடுற புலி.. ஆர்யான் எதிர்ப்பார்க்காத நேரம் என் பேபிய தூக்குவேன் நான்…” என்று புகையை ஊதி விட்டான்.

_______________________________________________

அடுத்து வந்த இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்க ஆர்யான் சிதாராவை எந்த வேலையும் செய்ய விடவில்லை.

அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்ய சிதாராவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்யானின் பக்கம் சாயத் தொடங்கியது.

ஆர்யான் தனக்கு பணிவிடை செய்வதைப் பொறுக்காத சிதாரா,

“நான் என்ன சின்ன குழந்தையா ஜிராஃபி… இல்லன்னா நோயாளியா… இப்படி ட்ரீட் பண்ற… எனக்கு சும்மா இருக்க போர் அடிக்குது…” என சிரிப்புடன் கேட்க,

“நீ குழந்தையா இருந்தாலும் இல்ல உனக்கே ஒரு குழந்தை வந்தாலும் நான் உன்ன பாத்துக்குறது மாறாது..” என ஆர்யான் பட்டென்று சொல்லி விட,

“என்ன…” என அதிர்ந்தாள் சிதாரா.

அப்போது தான் ஆர்யானுக்கு அவன் கூறியது புத்தியில் உரைக்க சிதாராவிடம் என்ன சொல்லி சமாளிக்க என எண்ணியவன், 

“அ..அது… அது வந்து… மினி எனக்கு இம்பார்டன்னட் கால் ஒன்னு எடுக்கனும்… இதோ வரேன்…” என்று விட்டு ஓடினான்.

ஆர்யானின் தடுமாற்றத்தைப் பார்த்த சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“நீ இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க போறேன்னு நானும் பாக்குறேன் ஜிராஃபி…” என நினைத்து சிரித்தாள்.

_______________________________________________ 

ரஞ்சித், “இது எப்படி நடந்தது… நம்ம டென்டர் அமவுன்ட் எப்படி அவங்களுக்கு தெரிய வந்தது..” எனக் கோவமாகக் கேட்க,

“தெரியல சார்… ஆனா நிச்சயம் நம்ம கூடவே இருந்து யாரோ அவங்களுக்கு இன்ஃபர்மேஷன் குடுத்து இருக்காங்க…” என அவரின் பி.ஏ. கூறினார்.

“சீக்கிரமா அது யாருன்னு கண்டு பிடிங்க…. அந்த எஸ்.எம் கம்பனியோட ஆளு மட்டும் யாருன்னு தெரியட்டும்… அவன சும்மா விடக் கூடாது… உடனே ரவிய கான்டக்ட் பண்ணி என்ன மீட் பண்ண வர சொல்லுங்க…” என ரஞ்சித் ஆணையிடவும் அவருக்கு சரி என தலையசைத்து விட்டு சென்றார் அவரின் பி.ஏ

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.