Loading

அத்தியாயம்−4

அகிலன்,”போதை மருந்து தயாரிக்கும் கம்பெனியில் இரவு முழுவதும் வேலைப்பார்த்தவன்” மறுநாள் காலையில்தான் தன் அம்மாவை சேர்த்திருக்கும் காஞ்சனாதேவி ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

 

மகிழ், தன் அம்மா படுக்கைக்கு அருகில் படுத்திருந்தவள் “கொட்டாவி” விட்டுக்கொண்டே எந்திரிச்சு. செல்போனைப்பார்த்தாள். காலை, மணி ஆறாகியிருந்தது. தன் அம்மாவைப்பார்க்க நன்றாக தூங்கிக்கொண்டிருக்க. “காபி வாங்கிட்டு” வருவோம்னு கையில் காபி பிளாஸ்ஸீடன் வெளியே செல்ல.”அகிலன்” வந்து நின்றான் அவள் முன்னாடி.

அண்ணா, கம்பெனியில் நைட்டு முழுக்க வேலை செஞ்சியாண்ணா.மகிழ்.

ஆமாம், மகிழ். அம்மாவுக்கு நல்லப்படியாக ஆபரேஷன் முடிந்ததா?. அம்மாவை “நார்மல் வார்டிற்கு” மாத்திட்டாங்களா?. கேள்விகளை தொடர்ந்துக்கொண்டிருந்தான்.அகிலன்.

ஆம், மாத்திவிட்டாங்க. “மேல்மாடி 118ம் நம்பர் ரூமில் அம்மாவை அட்மிட் பண்ணியிருக்காங்க”. நீ போய் அம்மாவைப்பாரு. நான் போய் காபி வாங்கிக்கொண்டு வருகிறேன்.மகிழ்.

சரி! பார்த்துப்போ “தூக்க கலக்கத்தில்” வேற எங்கேயாவது போயிடாத. அப்புறம் உன்னைத்தேட முடியாதுனு. அறிவுரைகூறுகிறமாதிரி தன் தங்கையை கிண்டல் செய்தான்.அகிலன்.

அண்ணா, போனா நீ வேலைக்குப்போனதும் போன என்னை ரம்போ கிண்டல் பண்றனு. “காபி பிளாஸ்க்கை ஆட்டிக்கொண்டு” வெளியில் இருக்கும் கடைக்குப்போனாள். மகிழ்.

தன் அம்மாவை சேர்த்திருக்கும் அறைக்குப்போனவன், தூங்கிக்கொண்டிருந்த “தன் அம்மாப்பக்கத்தில் உட்கார்ந்து, அம்மா, உன் ஆபரேஷன்போது உன் பக்கத்தில் இல்லாமல் போய்விட்டேன்மா.” என்னை மன்னிச்சிரும்மா. நான் சமூக குற்றமுள்ள வேலையை பார்ப்பது உனக்குத்தெரிந்தால் நீ தாங்கிக்கொள்வியானு எனக்குத்தெரியாது. என் “விதி” இந்த வேலையில் சேர வேண்டும்னு எழுதியிருக்குமா?. கண்கள் கலங்கியப்படியே! மன வருத்தத்துடன் கூறிக்கொண்டிருந்தான். அகிலன்.

“அகிலனின் விழி நீர்”, தமிழரசிமேல் பட்டவுடன். கண்விழித்துப்பார்த்தாள். தன்னருகில் தன் மகன் உட்கார்ந்திருப்பதைக்கண்டவள். கண்ணா அகிலா, வந்துட்டியாய்யா. மகிழ் சொன்னாள், நீ வேலைக்குப்போயிருப்பதாக நெசம்தானய்யா. 

ஆமாம்மா, எனக்கு என் நண்பர்கள் மூலயமாக ஒரு பெரிய வேலைக்கிடைத்தது.  “நைட் சிப்ட்டும்” சேர்த்தி பார்க்க சொல்லிட்டாங்கம்மா. அதுதான் உன்னை ஆபரேஷன் பண்ணும்போது கூட இல்லாமல் போய்விட்டேன். எனக்கு வேலை செய்யவே தோனலைம்மா. “உன்னையும், மகிழையும்” தனியாக விட்டுட்டு வந்துட்டோமே! என்று. வருத்தமாக கூறினான். அகிலன்.

அதுதான்யா, ஆபரேஷன் நல்லப்படியாக முடிந்துவிட்டது. இனி என்னய்யா? கவலை. இந்த ,”ஆஸ்பத்திரியை விட்டு, சீக்கீரம் போனால் சரி”!. இத்தனைநாள் வேலைக்கிடைக்கலைனு இருந்தேல்ல. இப்போதான் வேலைக்கிடைத்துவிட்டதே. உன்னை, “மட்டம் தட்டியவர்கள் முன்னாடி”, நீ நல்லா வந்துக்காட்டியா?. இதைப்பார்த்து, நான் சந்தோஷப்படனும்.தமிழரசி.

சரிம்மா, இனி நீ குணமாகினாலும், காய்கறி விற்கப்போகக்கூடாது. உன்னை மகாராணிமாதிரி வைத்துப்பார்த்துக்கொள்வேன். அகிலன்.

அம்மாவை “மகாராணியாக்கிட்டா”. உங்களுக்கு வரப்போகிற மனைவி என்ன? இளவரசியா?. மகிழ் கையில் காபி பிளாஸ்க்குடன் வந்து நின்றுக்கூறிக்கொண்டிருந்தாள்.

ஆமாம், அம்மாதான் நம் வீட்டுக்கு மகாராணி, அதற்கப்புறம்தான் என் மனைவி. அகிலன்.

இதெல்லாம் கல்யாணம் ஆகிறவரைக்கும்தான். கல்யாணம் ஆனதுக்கப்புறம் “பொண்டாட்டி முந்தானையை” பிடித்து சுத்த ஆரம்பிச்சிடுவிங்க. மகிழ் எதிர்கேள்விக்கேட்க.

என் பையனைப்பார்த்தால் பொண்டாட்டி பின்னாடி சுத்துறவன்மாதிரியா இருக்கு. அவன், என்னைக்கும் “அம்மா பிள்ளைடி”. தன் மகனைப்பத்தி பெருமைக்கூறினாள். தமிழரசி.

உங்கம்மா, மகன் பாசத்தை அப்புறம் வைத்துக்கொள்ளுங்கள். “அண்ணா, முகம், கைகால் கழுவிட்டு வாண்ணா, காபிக்குடிப்ப”.தன் அண்ணனை அன்போடு அழைத்தாள். மகிழ்.

அகிலன், முகம், கைகால் கழுவி வந்தவன். “தன் அம்மாவை கைத்தாங்கலாக தூக்கி பெட்டில் சாய்த்துவிட்டு”, அவளுக்கு சூடாக காபி தம்ளரில் ஊத்தி குடிக்க வைத்தான். பிறகு, அண்ணனும், தங்கையும் தம்ளரில் ஊத்திக்குடித்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர், தமிழரசி ரூமிற்குள் நுழைந்தார் செக் பண்ணுவதற்காக. எப்படிம்மா? இருக்கு, வலிக்குதுங்களா?, நைட் நல்லா தூங்கனிங்களா?, என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டேப்போனார். 

ஆமாம், டாக்டர், வலி இருந்துக்கொண்டுதான் இருக்கு. நைட் நல்லா தூங்கினேன். தமிழரசி மறுமொழிக்கூற.

தையல் பிரிக்கிற வரைக்கும் அப்படிதான் வலிக்கும். நீங்கதானே! அவங்கப்பையன்.டாக்டர்.

ஆமாம், டாக்டர் நான்தான் அவங்கப்பையன். அகிலன்.

“உங்கம்மாவுக்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் சொல்லக்கூடாது. அதிகம் பேசக்கூடாது”. மண்டையில் போட்டிருக்கும் கட்டுப்பிரிக்கிற வரைக்கும். இந்த சீட்டில் உள்ள “மருந்தை” வாங்கி நர்சிடம் கொடுங்கள். அவர்கள் உங்கம்மாவிற்கு இன்ஜக்ஷன் போட்டுவிடுவார்கள்.டாக்டர்.

சரிங்க! டாக்டர்னு பிரிஸ்கிரிப்ஷனை கையில் வாங்கினான். அகிலன்.

டாக்டர், அடுத்த ரூமிற்குள் போனவுடன்.

மகிழ், இங்கே! அம்மாவைப்பார்த்துக்கொள். நான் போய் மருந்தை வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். “அகிலன் தன் தங்கையிடம்  கூறிவிட்டு, மருந்துக்கடையை நோக்கிப்போனான்”.

 

மருந்து வாங்கிக்கொண்டிருக்கும்போது, துமியிடமிருந்து போன் வந்தது அகிலனுக்கு.

என்னாச்சு, அகிலா ஏன்? போன் பண்ணால் எடுக்கவே மாட்டேங்கிற. உனக்கு என்னாச்சு? என்று கேள்விகளை துருவி துருவிக்கேட்க. துமி.

 “அகிலன்,மருந்தை கையில் வாங்கிக்கொண்டே பேசும்போது.”

சார், ஐயாயிரம் ரூபா மருந்து விலை. “காசுக்கொடுத்துவிட்டு”, மருந்தை வாங்கி செல்லுங்கள் என்று, மருந்தாளுனர் கூறினார்.

என்னது, ஐயாயிரம் ரூபாயை. என்னிடம் ஆயிரம் ரூபாதான் இருக்கிறதேனு. தனக்குள் பேசிக்கொண்டிருந்தவன். துமி லைனில் இருப்பதை மறந்துப்போனான்.

ஹலோ!ஹலோ! அகிலா நான் பேசுவது உனக்கு கேட்குதா?என்று போனைப்பார்த்து, “சத்தமாக பேசியதும்”. 

யாரிடம் இப்படி! சத்தமாக பேசுகிறனு துமியோடு அப்பா வந்து நிற்க.

அப்பா, அது வந்து, என் பிரண்ட்க்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன் சமாளித்தாள். துமி.

சரி! சரி!, “இந்தப்போட்டாவில்” இருப்பவனை உனக்குப்பிடித்திருக்கிறதா பார்த்து சொல்லு. உன்னைப்பொண்ணுப்பார்க்க வர சொல்றேன். ஒரு நல்லநாளாப்பார்த்து.

துமி, அந்தப்போட்டாவை கையில் வாங்கியதும் “உறைந்துப்போனாள்”. கையில் இருக்கும் போட்டாவைப்பார்க்காமலே!.

“துமியின் கையிலிருந்த போட்டாவில் துகிலன் சிரித்துக்கொண்டிருந்தான்.”

துகிலனுக்கு கொடுத்த போட்டாக்களில் துமி அழகாய் புன் சிரிப்பினை சிந்திக்கொண்டிருந்தாள்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  6 Comments

  1. Sangusakkara vedi

   1. ஒரு எரர் கூட இல்லாதது தான் கதையோட சிறப்பு.

   2. முக்கோண காதல் கதை அவங்க அவங்க காதல காட்டிய விதம் அருமை.

   3.அகிலனோட சூழ்நிலையை காட்டின் விதம் அவன் மேல் கோபப்பட வைக்கல. பல பேரோட சூழ்நிலை தான் பல பேர குற்றவாளி ஆக்கியிருக்கு. அதை சொன்ன உங்க கதையும், எழுத்து நடையும் அருமை.

   குறைகள்

   1.உங்க கதையை தான் நான் போட்டி கதைகள்ல படிச்ச கடைசி கதை.. ஒன்னு ஒன்னயும் தேடி கண்டுபிடிச்சு படிக்கிறதுக்குள்ள மண்டை காய்ஞ்ச்சுருச்சு. உங்க கதையை தொடர்கதையில சேர்த்தா வாசகர்களுக்கு வசதியா இருக்கும். உங்க கதைக்குன்னு தனி லிங்க் வந்துரும்.

   2. உங்க தலைப்பு போடும் போது அத்தியாயம் எத்தனைங்குறதயும் போட்டா இன்னும் வசதியா இருக்கும்.

   3. யூடி ரெகுலர் ரா குடுத்தா நல்லா இருக்கும்.

   1. நீங்கள் என் கதையின் நிறை குறைகளை சொன்னதை நான் வரவேற்கிறேன். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்கிறேன். நிறை குறைகளை எடுத்துக்கூறி என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி. இனி சரியாக யூடி போடுகிறேன். கொஞ்சம் வேலை பளு அதிகம்

  2. Oosi Pattaasu

   ‘உன்னுள் தொலைந்திடவா’ யதார்த்தமாக, சமூகக் கருத்த உணர்ச்சிப்பூர்வமா சொல்ற ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1. எல்லாரோட உணர்வுகளையும் காட்டுன விதம் அழகா இருக்கு.
   2. துகிலன், அகிலன், துமி இவங்களோட லவ் எப்டி போகும்குற எதிர்பார்ப்ப ஏற்படுத்துற எழுத்து நடை சூப்பர்.
   3. ஒரு சமூகக் குற்றத்த செய்யப் போற, அத விரும்பாத ஒருத்தரோட மனநிலையை, செம ரியலா காட்டிருக்கீங்க.
   நெகட்டிவ்ஸ்னா,
   1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் சில இடங்கள்ல இருக்கு.
   2. அங்கங்க பன்க்சுவேட் பண்ணாம விட்ருக்கீங்கப்பா.
   3. ஒரு சில இடத்துல, டையலாக்ஸ்லாம், எழுத்து வழக்குல வருது. அதக் கொஞ்சம் சேஞ்ச் பண்ணீங்கன்னா நல்லாருக்கும்.
   மொத்தத்துல ஒரு உணர்வுப்பூர்வமான கதை, சூப்பரா இருக்கு.

   1. என் கதையின் நிறைகுறைகளை சொல்லி என்னை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி ஊசி பட்டாசு

  3. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

  4. hani hani

   ரொம்ப அழகான சமூக கருத்து உள்ள கான்செப்ட் எடுத்து இருக்கீங்க. யாரு யாரோட சேருவாங்குற காதலும் இருக்கு அருமை. ஆனா கதையில கொட்டேஷன் போட வேண்டிய இடத்த விட்டுட்டு வேற வேற இடங்கள்ல போட்ருக்கீங்க. படிக்கும் போது கதாபாத்திரம் பேசுறதும் நீங்க பேசுறதும் அதுல ரொம்ப குழப்புது. சோ அத பார்த்து போடுங்க. நீங்க பேசுற பகுதிய இன்னும் தூய நடையில எழுதுங்க. ரொம்ப நல்ல கதைய இது போல சின்ன மிஸ்டேக்ல போட்டில ஜெயிக்காம போயிடக்கூடாது. அதான் சொன்னேன். கதையில எந்த ஓட்டையும் இல்ல. சிறப்பு வாழ்த்துக்கள் ❤️