Loading

அத்தியாயம் -9

அகிலன், தன் முதலாளி சொன்ன இடத்திற்கு “போதை சரக்கு” எடுத்துக்கொண்டு கர்நாடகாவிற்கு புறப்பட்டு சென்றான்.

கர்நாடகவில் இவன் சரக்கு வாங்குவதற்கு ஒருத்ன் கையில் பேக்குடன் காத்துக்கொண்டு இருந்தான்.”ரயிலடியில்” அகிலன் ரயிலில் இருந்து இறங்கியதும். சரக்கு வாங்க வந்தவன் தன் பேக் எடுத்துக்கொண்டு அகிலன் பக்கத்தில் போய் நிற்க.

அகிலன்,”தன் சட்டை பாக்கட்டிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டு எடுத்து காட்டினான்”.

சரி!என் கூட வாங்க.

“எனக்கு விற்க மட்டும்தான் சொல்லி இருக்காங்க உங்க கூட வர முடியாது”. சரக்கு வாங்கிக்கொண்டு பணம் கொடுங்க நான் கிளம்ப வேண்டும். என மெல்லிய குரலில் சொல்ல.

இல்லை, இந்த இடம் பாதுகாப்பு இல்லை, “கர்நாடக போலீஸ் கண்ணில் பட்டால் நாம் ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும்”. இதெல்லாம் உன் முதலாளி சொல்லவில்லையா? சரக்கு கைமாத்துவதற்கு என்று ஒரு நல்ல இடம் உள்ளது. அங்க வந்தால்தான் உன்னிடம் உள்ள சரக்கு வாங்கிகொள்வோம். என்னுடன் வா போகலாம்.

சரி!வாங்க என்று சொல்ல.

சரக்கு வாங்க வந்தவன் கொஞ்சம் பொறு என்று,யாருக்கோ போன் செய்தான். அடுத்த பத்து நிமிஷத்தில் ஒரு மாருதி கார் வந்து நின்றது. அதில் ஏறி அமர்ந்து அங்கிருந்து, சுமார் 100km தொலைவில் “ஒரு பாழடைந்த கட்டிடம் முன் நின்றது கார். காரைவிட்டு இறங்கியவர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள்”.

அகிலன் மனதில் ஒரு வித பயம் உண்டானது அந்த கட்டிடத்தை சுற்றி ஆட்கள் நின்று கொண்டு இருந்தார்கள் ஒரு பூட்டிய அறைக்குள் இருந்து “வினோதமான சத்தம்” வந்து கொண்டிருந்தது. இவன் அந்த அறைக்கு போவதற்காக தன் காலை முன் வைத்தான்.

தம்பி உன் வேலை சரக்கு கொடுத்துவிட்டு பணம் வாங்கி கிளம்புவது, அதை விட்டுவிட்டு தேவை இல்லாத வேலை வெச்சுக்காத.

அண்ணே!உள்ள “வினோதமான சத்தம்” வருகிறது அதுதான் என்னனு… இழுத்தான்.

அந்த சத்தம் என்னனு தெரிந்துக்க வேண்டுமா?. மிரட்டும் தொணியில் கேட்க.

“இல்லை என்பது போல் தலை அசைத்தான்”.

அங்கு நின்று இருந்த சில பேரை கை தட்டி அழைத்தான்.

அவர்களும் வந்து நின்று பாஸ் சொல்லுங்க பாஸ்.

“இவன்கிட்ட இருக்கும் சரக்கை வாங்கி சரி பார்த்து சொல்லுங்க” கட்டளையிட்டான் .

சரிங்க பாஸ்!

“அகிலன் தான் கொண்டு வந்த பேக்கை கொடுத்தான்”.

அவர்கள் பேக் திறந்து சரக்கு பொட்டலத்தை எண்ண தொடங்கினார்கள். எண்ணி முடித்ததும் அண்ணே!எல்லாம் சரியா இருக்குனு சொல்ல.

“ஒரு சூட்கேஸ் எடுத்து அகிலன் கையில் கொடுத்து இந்தா நீ கொண்டு வந்த சரக்குக்கு பணம். இங்கிருந்து இவனை நல் முறையில் வழி அனுப்பிட்டு வாங்க என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட.”

அவர்கள், இவனை துப்பாக்கி முனையில் அழைத்து சென்றார்கள் வெளியே!இப்போ நீ போ.

அகிலன், அந்த குடோனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு போனான். என்னதான் அந்த அறையில் இருக்கிறது என்று. “கொஞ்சம் தூரம் போனவன் திரும்ப இந்த இடத்துக்கு வந்து, குடோனில் இருப்பவர்கள் வெளியில் போனதும் பதுங்கி, பதுங்கி உள்ளே போய் அந்த அறை கதவை திறந்து பார்த்து அதிர்ச்சியாகிப்போனான்”. இளைய சமுதாயம் எல்லாம் போதையில் மூழ்கி இருந்தது ஆண், பெண் பேதம் இல்லாமல். மகிழ் வயது ஒத்த பெண் பிள்ளைகள் தான் அதிகமா இருந்தார்கள். அதுவும் அறை குறை ஆடையுடன். “அகிலன் மனதில் குற்ற உணர்வு” தோன்றியது. இப்படி இளைய சமுதாயம் கெட்டுப்போக நாமும் ஒரு காரணமா இருக்கோம். ஏன் இந்த நிலைமை. இந்த நிலைமை உருவாக்கியவன் யார்? வறுமையா? இல்லை சமூகமா? இல்லை விதியா? ஐயோ!இந்த பிள்ளைகளை பார்க்கும் போது என் தங்கை கண் முன் வராளே !மகிழ்க்கு இந்த நிலைமை வந்தால்… நினைத்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது. இப்படி “மனம் வருந்தி” நினைத்துக்கொண்டு இருக்கும்போது.

காவலாளிகள் வருவதைக் கண்டு. அங்கு அடுக்கி வைத்த பெட்டிக்கு பின் புறம் ஒளிந்து கொண்டான்.

“காவலளிகள், பெங்காலி மொழியில் பேசிக்கொண்டு இருந்தனர்.”

அகிலன் பெங்காலி மொழியை அறை குறையா கத்து வைத்து இருந்தான். அவர்கள் பேசுவது இவனுக்கு ஓரளவு புரிந்தது.

இந்த போதை மாத்திரைகளை வாங்க அந்த “IBM மெடிக்கல் கம்பனியிலிருந்து” ஆட்கள் வருவதாக சொன்னாங்களே எப்போ? வருவாங்க.

தெரியல பாஸ் எதுவும் சொல்லலை. ஆமாம் இந்த “போத மாத்திரை” எதுக்கு இம்புட்டு விலை கொடுத்து வாங்குறாரு நம்ம பாஸ்.

இந்த மாத்திரை வாங்குறவங்க எல்லாம், பெண்கள் சுகத்தை அனுபவிக்கதான் வாங்குறாங்க. பெண்களுக்கே தெரியாமல் அவங்க குடிக்கும் ஜூஸில் கலந்து கொடுத்து விட்டால் அவர்கள் பிளாட். அப்புறம் அவள்கூட இருப்பவன் “ஏகத்துக்கும் மகிழ்ச்சி அடைவான்”. இதுதான் நாட்டில் நிறைய நடக்குது. இப்போ இதுதானே!பேஷன் என்று சொல்கிறார்கள்.

“இதை எல்லாம் கேட்ட அகிலன் பொங்கி எழுந்தான். வேகத்தில் அவர்கள் சட்டையை பிடித்து சண்டை போட்டவன். இவனை அடித்து துவம்சம் பண்ணி ஒரு அறையில் கட்டி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.”

……………………………………………….

அந்தி மாலை ஆனது

செங்குருவிகள் எல்லாம்

தன் கூட்டுக்கு திரும்பியது

துமி, தன் “காதலன்” வருகைகாக காத்துக்கொண்டு இருந்தாள். அவன் கர்நாடகவிற்கு போனதை மறந்து.

துமி அப்பா வேலை முடித்து வந்தவர், துமியிடம் என்ன? உன் அன்பன் வரவில்லையா? அவன் நல்லவனா இருந்தா தானே என்னிடம் வந்து பேசி இருப்பான். இப்போ!தெரியுதா? அவன் உன்கூட பழகியது எல்லாம் டைம் பாஸ்காக. மனோகரன் வார்த்தைகளை விட்டுக்கொண்டு இருந்தார்.

துமி, அப்பா அவன் ஏதோ கம்பெனி விஷயமா வெளியூர் போய் இருக்கான். இரண்டு நாள் கழித்து வந்து விடுவான். அப்போ வந்து உங்களிடம் பேசுவான் அது வரை கொஞ்சம் டைம் கொடுங்க. என்று மருங்கினாள்.

“சரி!பார்க்கலாம் இன்னும் இரண்டு நாளில் வரவில்லை நான் பார்க்கும் பையன் கூட உனக்கு கல்யாணம்.”

துமி, மௌனமாக இருந்தாள்.

மனோகரன் புவனா, புவனா என்று சத்தம் போட்டுக்கொண்டே போய் சோபாவில் அமர்ந்தார்.

புவனா, கையில் காபி கப்புடன் வந்து நின்றாள்.

துமி, அழுதுக்கொண்டே உள்ளே போனவளை பார்த்து விட்டு, என்னங்க!என்ன முடிவு செய்திருகிங்கனு கேட்க.

மனோகரன் பொறு பார்க்கலாம். பேசிக்கொண்டு இருக்கும்போதே!”வெளியே கார் சத்தம் கேட்டது. எழுந்து போய் பார்த்தவர்.”

காரிலிருந்து, இசையும் தாமரை செல்வியும் வந்தார்கள்.

புவனாவும், மனோகரனும் அவர்களை பார்த்தப்படியே!நின்றுக்கொண்டு இருக்க.

இசை, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

“சாரிங்க!நாங்க இந்த நேரத்தில் வந்தது தப்புதான் எங்களை மன்னித்து விடுங்க. தாமரை செல்வி கேட்க”.

அதனால் என்னங்க. புவனா சொல்ல.

என் இளைய மகன் உங்க மகளை கோயிலில் பார்த்து இருக்கான் பார்த்ததும் பிடித்து போய் விட்டது. அன்னையிலிருந்து “உங்க மகள் படிக்கும் காலேஜ்க்கு செல்கிறான் அவளை பார்க்கும் ஆவலில்”.

என் வீட்டுக்காரர் அங்குதான் கேண்டில் நடத்தி வருகிறார். இசை சொல்ல.

மனோகரன், ஓ!அப்படியா? உங்க மகன் வேலைக்கு போறதில்லையா? என்ற கேள்வியை கேட்டு வைத்தார்.

அவன் MBA முடித்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அது மட்டுமில்ல அவன் “சிபிஐ போஸ்டிங் சேருவதற்காக எக்ஸாம் எழுதி உள்ளான். ரிசல்ட் வந்ததும் அந்த வேலைக்கு போய்விடுவான்”. என் வீட்டுக்காரர் சொந்தமா ஒரு எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தன் குடும்ப வரலாறை புட்டு புட்டு வைத்தாள் தாமரை செல்வி.

“இரு குடும்பமும் பரஸ்பரம் பேசிக்கொண்டு இருந்தது”.

புவனாவுக்கும், மனோகரனுக்கும் அவர்கள் பேசியவிதம் பிடித்துபோனது.

புவனா, பையன் போட்டா இருந்தா கொடுங்க.

இசை, தன் கையில் இருந்த போட்டவை காட்டினாள்.

மனோகரன் வாங்கி பார்த்துவிட்டு, “ஆச்சர்யப்பட்டார்”.இந்த போட்டதான் புரோக்கர் இரண்டு நாளைக்கு முன்னாடி கொண்டு வந்து கொடுத்துட்டு போனார்.இப்போ நீங்களே!நேரில் வந்து இருக்கீங்க.

“இதுதாங்க கடவுள் போட்ட முடிச்சு” புவனா சொல்ல.

சுவரில் இருந்த பல்லி சப்தமிட்டது.

“நல்ல சகுனம்”. அப்போ!நாங்க வருகிறோம். உங்களுக்கு எப்போ விருப்பம் என்று சொல்லுங்க அன்னைக்கே நிச்சயம் பண்ணிவிடலாம். இது எங்கள் முகவரி போன் நம்பர் உள்ளது. நீங்க நேரில் வந்து பேசினாலும் எங்களுக்கு ஓகேதான்.சொல்லி விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்று சென்றனர்.

தொடரும்…..

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்