Loading

அத்தியாயம்−4

அகிலன், “போதை மருந்து” தயாரிக்கும் கம்பெனியில் இரவு முழுக்க வேலைப்பார்த்தவன். காலையில் தன் அம்மா தமிழரசி சேர்த்திருக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தான்.

மகிழ்விழி, தன் அம்மாவிற்காக காபி வாங்குவதற்காக வெளியே! வந்தவள். தன் அண்ணனைக்கண்டதும். அண்ணா, இப்பதான் வேலையை விட்டு வருகிறியா?.எனக்கேட்க.

அகிலன், ஆமாம் மகிழ். அம்மாவுக்கு நல்லப்படியாக “ஆபரேஷன்” முடிந்ததா?. அம்மாவை “நார்மல் வார்டிற்கு” மாத்திவிட்டாங்களா?. இப்போ! அம்மா எப்படி? இருக்கிறாங்கனு கேள்விகளை தொடர்ந்துக்கொண்டிருந்தான்.

மகிழ், அம்மாவை நார்மல் வார்டிற்கு மாத்திவிட்டார்கள். “கண்விழித்ததும் உன்னைதான் முதலில் கேட்டார்கள்”. அண்ணா வேலைக்கு போயிருக்குதுனு சொன்னதும். அம்மா முகத்தில் பயங்கர “சந்தோஷம்ண்ணா”. அம்மா இப்போ! தூங்கிக்கொண்டிருக்கிறாங்க. நான் போய் உனக்கு சேர்த்தி காபி வாங்கிட்டு வந்துரேன்.

அகிலன், சரிம்மா பார்த்துப்போயிட்டு வா. நான் போய் அம்மாவைப்பார்க்கிறேன். தன் தங்கையை அனுப்பிவிட்டு, தன் அம்மா ரூமிற்குள் போனான்.

தமிரசி, “மாத்திரையின் வீரியத்தால்” தூங்கிக்கொண்டிருந்தாள்.

அகிலன், தன் அம்மாவின் அருகிலிருக்கும் சேரில் அமர்ந்தவன். தன் அம்மாவை பார்த்துக்கொண்டு, “அம்மா உன் புள்ளை இன்னைக்கு சமூகத்துக்கு துரோகம் இளைப்பவனாகிட்டான்மா”. என்னை மன்னிச்சிரும்மா. எனக்கு வேற வழி தெரியலை. உன்னைக்காப்பாத்த, எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான் என்று. “கண்கள்” கலங்கியப்படியே! தனக்குள் நினைத்துக்கொண்டிருந்தான்.

அகிலனின், “விழி நீர் பட்டதும் தமிழரசி கண்விழித்துப்பார்த்தாள்”. தன் மகன் தன்னருகில் இருப்பதைப்பார்த்தவள். அகிலா வந்துட்டியாப்பா. நைட்டெல்லாம் கண் முழிச்சு வேலைப்பார்த்தியாப்பா. “உன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு”. ஏன்பா! கண்கள் கலங்கி கண்ணீர் வடிக்கிற. எனக்கு ஒன்னுமில்லைடா. அதுதான் நீயும், உன் நண்பர்களும் சேர்ந்து என்னைக்காப்பாத்திட்டிங்களே!. மகிழ் சொன்னாள், நீ வேலைக்குப்போயிருக்கிறதா. நீ செய்ற வேலை கஷ்டமா இருக்குதாப்பா. கொஞ்ச நாள் போய் செய்பா. நான் குணமாகி வந்ததும். பழையமாதிரி காய்கறி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் உனக்குப்புடிச்ச வேலைக்கு போய்யா.பாச உணர்வுகளை தன் மகனிடம் கொட்டிக்கொண்டிருந்தாள்.

அகிலன், கஷ்டமெல்லாம் இல்லைமா. இனி நீ காய்கறி விற்கப்போகக்கூடாது. உன்னை “மகாராணிமாதிரி” வச்சுப்பார்த்துக்குவேன்.

அதெல்லாம் கல்யாணம் ஆகிறவரைக்கும்தான் சொல்விங்க. கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்டாட்டியே! கதி என்று இருப்பிங்க.சொல்லிக்கொண்டே, “மகிழ்விழி காபி பிளாஸ்க்கோடு” வந்து நின்றாள்.

 

என் பையன் ஒன்னும் மத்த பசங்கமாதிரி இல்லைடி. இவனுக்கு பொண்டாட்டி வந்தாலும். என்னை மகாராணியாகதான் வச்சிருப்பான். “தமிழரசி தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டிருந்தாள்”.

அகிலன், சிறு “புன்னகை” உதிர்த்துவிட்டு, மகிழ் உனக்கு காலேஜ்க்கு டைம் ஆகலை. வீட்டுக்குப்போய் ரெடியாகி கிளம்பு. அம்மாவை நான் பக்கத்திலிருந்துப் பார்த்துக்கொள்கிறேன்.

மகிழ், அண்ணா, உனக்கு நைட் சிப்டானா?.

அகிலன், ஆமாம்.

“மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்க. டாக்டரும், நர்சும் இவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.”

எப்படி? இருக்கிங்கம்மா. உங்களுக்கு தலைவலி எதாவது இருக்கா. டாக்டர் கேட்க.

நல்லாருக்கேன் டாக்டர். “தலைவலி” எதுவும் இல்லை. சீக்கிரம் இந்த ஆஸ்பத்திரியைவிட்டு மட்டும் வெளியே அனுப்புங்க. ஆஸ்பத்திரி “நாத்தம்” குமட்டுகிறது.தழிரசி டாக்டரிடம் தன் மனக்குமுறலைக்கூறினாள்.

ஆஸ்பத்திரினா, இப்படிதான்மா! இருக்கும். இன்னும் மூன்று நாளைக்கு ரெஸ்ட் எடுங்கள் வீட்டிற்குப்போயிடலாம். “நர்ஸ் இவங்களுக்கு பீபி செக்கப் பண்ணிட்டு”, நான் எழுதித்தரும் ஊசியை போட்டுவிடுங்கள்.என பிரிஸ்கிரிப்சனில் எழுதி நர்ஸிடம் நீட்டினார் டாக்டர்.

சரிங்க சார். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு, “பீபி செக் பண்ணிட்டு, நோயாளி நாட்குறிப்பில் குறித்து” வைத்துவிட்டு, மிஸ்டர், இந்த சீட்டில் இருக்கும் மருந்தை வாங்கிட்டு வாங்கள் என்று. அகிலனிடம் கொடுத்தாள்.

சரிங்க! சிஸ்டர்னு அந்த பிரிஸ்கிரிப்சனை வாங்கிக்கொண்டு மருந்துக்கடையில் கொடுத்து மருந்தை வாங்கி வந்துக்கொடுக்க அகிலன்.

நர்ஸ், “தமிழரசிக்கு இடுப்பில் போட்டுவிட்டு, மாத்திரையை விழுங்குவதற்கு” கொடுத்து சென்றாள்.

 

அகிலன், போனிலிருந்து

உன்னை நினைத்து நினைத்து

உருகிப்போனேன் நானேனு

ரிங்டோன் அடித்துக்கொண்டிருந்தது.

ஆன் செய்து காதில் வைத்தான்.

எதிர்முனையில், துமிதான் கால் பண்ணியிருந்தாள்.

அம்மா, நான் கொஞ்சநேரம் வெளியில் போய்விட்டு வந்திரேன். மகிழ் நீ அம்மாவை பார்த்துக்கொள். நான் வரும் வரைக்கும்.

மகிழ், சரிண்ணா.

அகிலன்,கையில் போனை எடுத்துக்கொண்டு, “ஆஸ்பத்திரி வரவேற்பரையில்” நின்றுக்கொண்டு துமியிடம் பேசினான்.

துமி, அகிலா ஏன்டா நேத்து முழுக்க போன் பண்ணேன் போன் எடுக்கவேயில்லை. உனக்கு என்னடா? ஆச்சு. நான் எதாவது “தப்பாக” சொல்லியிருந்தால் என்னை மன்னிச்சிருடா. நீ நேத்து போன் எடுக்காததால் “என் மனம்” என்னிடம் இல்லைடா அவள் பேசிக்கொண்டேயிருந்தாள்.

துமி, என் அம்மாவிற்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டது. அதுதான் “கவலையில்” போனை எடுக்கலை சாரி துமி.அகிலன் வருத்தப்பட்டேக்கூறினான்.

அய்யய்யோ! “பதறியவள்.” எந்த? ஆஸ்பத்திரினு சொல்லுடா. நான் உடனே கிளம்பி வர்றேன்.துமி.

அம்மாவுக்கு, ஆக்சிடண்ட் ஆகிவிட்டது. நேத்துதான் ஆபரேஷன் பண்ணாங்க. இப்போ! கொஞ்சம் நார்மலா இருக்காங்க. நீ இங்கெல்லாம் வரவேண்டாம் துமி. “உன்னை நானே! வந்து சந்திக்கிறேன். ஆனால் தினமும் நாம் சந்திக்கமுடியாது, போனில்கூட பேசமுடியாது”ங. என் வேலை அப்படி.அகிலன்.

என்னடா, அப்படி வேலை. வேலையில்லாமல் வெட்டியாதானே! இருக்கிற.துமி.

இல்லை, துமி அது நேத்துவரைக்கும். இன்று நான் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டேன். உன் படிப்பில் கவனமாக இரு. “வார இறுதியில்” வந்து உன்னை சந்திக்கிறேன். பாய் துமினு போனைக்கட்பண்ணினான் அகிலன்.

துமி, பலமாக யோசித்துக்கொண்டிருந்தாள். நம்மக்கூட பேசக்கூட டைம் இல்லாத வேலை அப்படி! என்ன? வேலைனு யோசித்துக்கொண்டிருந்தாள்.

மனோஜ் குமார் வந்து, அப்படி! என்ன? பலமா யோசிக்கிறம்மா.

ஒன்னுமில்லைபா துமி சமாளித்தாள்.

இந்தாம்மா, “இந்தப்போட்டாவில் எந்தப்போட்டா” புடிக்குதுனு சொல்லு. உனக்குப்புடித்த போட்டாவில் இருப்பவனை கல்யாணம் செய்துத்தரேன் மனோஜ்குமார்.

துமி, சாக்காகி நின்றாள்.

 

தொடரும்…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்