Loading

எனதழகா-18❤️

“ஆருஷி” என்று பாமா கத்த பின்னால் இருந்து  மீராவும் கத்தினார். அதற்குள் லட்சுமி அம்மா கீழே விழுந்து விட்டார். பக்கத்தில் ஷோபாவை துடைத்து கொண்டிருந்தவன் சரியான நேரத்தில் தலையை பிடித்து விட்டார். வயதானவர் என்பதால் அதிர்ச்சியில் மயங்கி விட்டார்.

எங்கு தன்னை மீரா திட்டி விடுவாரோ என்று பயந்து அவன் தலையை மெதுவாக கீழே வைத்து சடாரென்று எழுந்து விட்டான். பதற்றத்தில் பாமாவும், மீராவும் துடித்துக் கொண்டு ஒடி வந்தனர்.

மீராவை அனைவரும்  வித்தயாசமாக பார்க்க  பக்கத்தில் இருந்தவனைப் பார்த்து “ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி ஆம்புலன்ஸ் வர சொல்லு, இல்லை டாக்டரைக் கூப்பிடு ” என்று கண்கள் கலங்க வார்த்தைகள் குளறக் கூறினார்.

அதிர்ச்சியில்  நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து மீரா கத்த,பாமாவே எழுந்து டாக்டருக்கு அழைத்தார். அதற்குள் வேலையாள் ஒருவன் தண்ணீர் கொண்டு வந்தான். முகத்தில் தண்ணீரை தெளித்தவுடன் கண் விழித்த லட்சுமி அம்மா கைகள் நடுங்கியது.

பின்பு , மீரா வேகமாக கை, கால்களை தேய்த்து விட்டார். ஒரு சில நிமிடத்தில் நிதானத்திற்கு வந்தவரை எழுப்பி அவரின் அறைக்கு அழைத்து சென்றனர் இருவரும்.
ஆனால், லட்சுமி அம்மா அவர்களின் கையை விடுத்து ஷோபாவில் அமர்ந்து விட்டார்.

பின்பு , ” அர்ஜூன் வா ,தாத்தாவையும் அப்பாவையும் போலீஸ் கூட்டிட்டு போய்ட்டாங்களாம். அவங்க தப்பு பண்ண மாட்டாங்க, பண்ணவே மாட்டாங்க. உனக்கே தெரியும்ல. நீயாச்சும் நம்பு. ஏன் என்னை இன்னும் பார்க்க வரல .அப்போ உனக்கும் கோபமா? இவ்வளவு பாசம் காண்பித்தும் இந்த ஆருஷி இவ்வளவு கேள்வி கேட்கிறாள். முடியலப்பா. ஏங்க நீங்க வாங்க, நம்ம போய்டுவோம். நமக்கு வயசாகிடுச்சு இனிமே இருந்தால் எல்லாரும் இன்னும் பேசுவாங்க. கடவுளே அழைச்சிடு என்னை ” என்று தனக்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தார் .

பாமா தான் அவரை உலுக்கி சமநிலைக்கு கொண்டு வந்தார். கண்கள் கலங்க பாமாவை கட்டியணைத்தார். இதைக் கண்டு மீராவிற்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. தன் அம்மா தன்னிடம் ஆறுதல் தேடாமல் அவளை அண்டுகிறார்களே என்று அதிர்ச்சி ஆகி விட்டார்.

அந்நேரம் ஆருஷி துள்ளிக் குதித்து கொண்டிருந்தாள். ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தவள் இறுதியாக  மீராவை உலுக்கி “அம்மா எதுக்கு துடிக்கிறீங்க ? அவங்க நடிக்கிறாங்க ? ஊர் உலகத்துல எங்கையாச்சும் பார்த்திருக்கிங்களா  மகளை விட மருமகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அம்மாவை? ” என்று அவள் அடுத்து பேச பேச பாமா தாங்க மாட்டாமல் ஆருஷியிடம் பேச தொடங்கும் பொழுது “ஆருஷி , என்னது இது? ஏன் இப்படி பேசுகிறாய்? ” உள்ளே நுழைந்த வக்கில் லெனின்  கேட்டார்.

“வாங்க அங்கிள்! நீங்க தான் கண்டுபிடிக்கனும் எங்க அம்மா இந்த வீட்டில் தான் பிறந்தாங்களானு ? எப்பவுமே அவங்களை ஏன் ஒதுக்கி வைக்கிறாங்கனு தெரியலை ? “ஆருஷி கோபத்தில் கொந்தளித்து கேட்டாள்.

“என்னம்மா மீரா ஆருஷி கேள்விக்கு பதில் சொல்லவா? ஆருஷியை பார்க்கும் போது சின்ன வயசில் உன்னை பார்த்த மாறியே இருக்கு… நீ ” என்று அடுத்து கூற வருவதற்குள் ஆருஷியை  கன்னத்தில்  அறைந்தார் மீரா.

கன்னத்தில் கைகளை தாங்கி நின்று கொண்டிருந்த சமயம் வெங்கடேஷன் “மீரா என்ன செய்கிறாய்? பிள்ளையை ஏன் அடிக்கிறாய்? “. கோபத்துடன திரும்பிய மீரா ” என் பிள்ளையை நான் அடிக்கிறேன். உனக்கு என்ன? உன் வேலையைப் பாரு? “.

அனைவர் முன்பும் தரக்குறைவாக பேசியதும்  அவமானமாக எண்ணினார். யாரும் ஏன் பேசினாய் என்று கேட்காமல் இருப்பதே இன்னும் சங்கடமாக இருந்தது. கோபம் வந்து மீராவிடம் கை ஓங்கியவரை  “மாப்பிளை ” என்று லட்சுமி அம்மாவேத் தடுத்தார்.

ஒங்கியவர் கையை இறக்கி விட்டு  திரும்பி தன் மனைவியைப் பார்த்து  ” அமைதியா இருக்கேனு ரொம்ப பேசாதே ! என் மகளுக்கு நான் தான் முதல். எனக்கும் என் மகள் தான் முதல் . அப்புறம் தான் மற்ற எல்லாம். இன்னொரு முறை அடிச்ச நான் மனுசனா இருக்க மாட்டேன் ” என்று கையை நீட்டி எச்சரித்து விட்டு  லட்சுமி அம்மாவிடம் “உங்கள் மகளுக்கு புத்தி சொல்லி வைங்க. மனைவியாவும் ஒழுங்கா இல்லை, மருமகளாகவும் இருக்க தெரியலை. குறைந்த பட்சம் அம்மாவாவது ஒழுங்கா இருக்க சொல்லுங்க ” என்று கூறி தன் மகளை கையோடு இழுத்து சென்று விட்டார்.

வீடே அமைதியாகி இருந்தது. இச்சுழலில் தான் இங்கு இருப்பது சரியல்ல என்று சொல்லாமலே கிளம்பி விட்டார் லெனின்.

மீரா தன் அம்மாவை அழைக்க ” தயவு செய்து மேலே போ. இப்பையாவது என் பேச்சைக் கேளு “என்று கூற ஒன்றும் சொல்ல முடியாமல் மீரா மேலே சென்று விட்டார் .

பாமாவிடம் திரும்பி “என்னை கொஞ்சம் நேரம் தனியா விடு. என்னை தொந்தரவு செய்யாதே !” என்று கூற அவரும் சமையலறைக்கு சென்று விட்டார்.

ஆகாஷிடமும் ,தாஸிடமும் அனைத்தையும் கூறிய பின்  லட்சுமி அம்மா குலுங்கி குலுங்கி அழுதார். ஆகாஷ் எவ்வளவு சமாதானம் செய்தும் புலம்பி கொண்டே இருந்தவரை வேறு வழி இல்லாமல் தூக்க மாத்திரைக் கொடுத்து தூங்க வைத்தனர்.

தலையில் கை வைத்து அமர்ந்திருந்த பாமாவிடம் “போய் ரெஸ்ட் எடுங்க. நாங்க போய் தாத்தாவையும், அப்பாவையும் பார்த்துட்டு வர்றோம் ” ஆகாஷ் கூற “நானும் வரவா? ” என்று பாமா கேட்டார்.

ஆகாஷ்”அம்மா  அர்ஜுனே வரேனு தான் சொன்னான். அவன் வந்தா டென்ஷன் ஆகுவான் என்று தான் நாங்க அவனுக்கு வேற வேலை கொடுத்துட்டு இங்க வந்திருக்கோம். “

“சரிப்பா, எதுனாலும்  கால் பண்ணி சொல்லுப்பா.லெனின் சார் வேற வந்தாரு. எதுக்கு வந்தாருனு தெரியலை ? போன் பண்ணி கேட்டுக்கொள்கிறீர்களா? “என்று பாமா உதவியாக கேட்க ” ஏம்மா இப்படி  , நாங்க பேசுறோம். ” என்று தாஸ் கூறினார்.

பாமா”அண்ணா, ரியா எங்க? அவளை இங்க வர சொல்லுங்களேன் ? ” .

ஆகாஷும் ,தாஸும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆகாஷ் மெதுவாக ரியா மருத்துவமனையில் இருப்பதை கூறினார்.

“அய்யோ, நான் போய் பார்க்கிறேன் ” என்று கூறிய  பாமாவைத் தடுத்து  “இங்கே இருவரும் நல்ல மனநிலையில் இல்லை அதனால் நீ இங்கேயே இரு. தாமரையிடம் கேட்டுக்கோ மா!இப்போ நாங்க கிளம்புறோம் “நாசுக்காக கூறி விட்டு வெளியில் வந்தவுடன் லெனினுக்கு அழைத்தனர்.

அவர் காலை எடுத்தவுடன் “ஆகாஷ், நான் போலிஸ் ஸ்டேஷன்லில் தான் இருக்கேன். நீ இங்க வந்திடு. அர்ஜுனுக்கு கால் பண்ணுறேன். எடுக்கவேயில்லை . வேகமாக வாப்பா நீ ” என்று சொல்ல வந்ததை கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

ஆகாஷ் ” இவர் என்னப்பா இப்படி பேசுறாரு? நான் ஹலோ கூட சொல்லல”

தாஸ்” வக்கில் அப்படி தான் இருப்பாங்க” . ஆகாஷ் “என் மம்மிலாம் அப்படி கிடையாது “.

” அதனால் தான் உங்க அம்மா சம்பாதிக்கல “என்று தாஸ் நக்கல் செய்ய ஆகாஷ் ” அப்பா, அம்மா எவ்வளவு பெரிய வக்கில் . அவங்க …….”

தாஸ்,” தெரியுதுல , வந்த வேலையை பார்ப்போம். உங்க அம்மா பத்தி கேட்க நேரமில்லை. அதனால், அவர் சொன்ன இடத்துக்கு போவோம்” என்று அவர் சொல்லி லெனினைப் பார்க்க சென்று விட்டனர்.

தாமரை மதிய உணவு உண்ண சென்றப் பொழுது ரியாவின் கைகள் பிடித்து கண்கள் சிவக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.

கீர்த்தி☘️

 

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்