இல்ல இந்த காதலுக்கு கண் இல்ல மூளை இல்லனு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனால் காதலுக்கு உயிரே இல்ல ச்சை..என்றாள் துளசி..
ஏண்டி அப்படி சொல்ற அப்படி எல்லாம் சொல்லாதடி எனக்கு கோவம் வருது
பின்ன இப்படி சொல்லாம வேற எப்படி சொல்றது கூறு கேட்டவளே கூறு கெட்ட சிறுக்கி.. கிடச்சவாழ்க்கையை தொலைச்சிட்டு வந்து நிற்கிறா பாரு…
ரொம்ப ஓவரா பேசுற வாய ஒடச்சிடுவேன் துளசி..
நீ என்னடி உடைக்கிறது நான் உன் வாயை உடைப்பேன்டி…
ஏ லூசு அவன் உன்னை தான் லவ் பண்ணான் லூசு…எனக்கு தெரியும்
என்னோட சித்தி பொண்ண தான் ரூட் விட்டுட்டு அலைஞ்சாரு அவளும் எங்க ஸ்கூல் தானே காலேஜ் தான் ஒன்னா படிக்கல எங்க கூட..
இதுக்கான விளக்கத்தை எல்லாம் நல்லா கொடுப்பேன் ஆனா உன் லைப் என்று வந்தா விட்டுட்டு வந்து நிப்ப
என்னதான் பண்ண சொல்ற இப்ப என் மானத்தை விட்டுட்டு அவங்க வீட்டுக்கு போக சொல்றியா
ஆமா பெரிய மானம்.. ஏதாவது சொல்லிட போறேன் பாத்துக்க கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல..
நீ உங்க அம்மா வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆகுது?
மூனு மாசம் மேல ஆகுது…
ஹலோ உன் மானத்தை விட என்ன இருக்கு சொல்லு நீ தானே விவாகரத்து கேட்ட அப்புறம் என்ன அவரா உனக்கு கொடுத்தாரு
இல்லை எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அவர் கிட்ட திருப்பியும் போய் நிற்க எனக்கு தோணல
அப்ப இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறியா சொல்லு நானே வந்து பண்ணி வைக்கிறேன் என்று கோபபபட்டாள் துளசி
ஏய் லூசு மாதிரி பேசாத இன்னும் நான் வாழவே இல்ல அதுக்குள்ள இன்னொரு கல்யாணம்னு பேசுற…
அப்பறம் என்னடி நீ மறுபடியும் போ தப்பில்ல டி.. உனக்கு பிடிச்சிருக்கு தானே அவர்ர??
பிடிக்காதுனு சொல்ல மாட்டேன் ஆனா எதோ தடுக்குது டி..
அடச்சீ வா போலாம்..இப்பவே.. நம்ம சும்மா பாத்துட்டு வருவோம் அங்க என்ன நிலவரம்னு..
சரி டி..இரு அம்மாட்ட சொல்லிடறேன் என்றாள் தாரூ..
அதெல்லாம் வேணா..இப்போதிக்கு..வா முதல்ல..
என்று இருவரும் நடையை கட்டினர்..
மாலை மூன்று ஆனது..அருவியிலிருந்து தருண் வீட்டுக்கு போக மணி நான்கரை ஆனது…
கதவைத் தட்டினாள்…
ஆத்விகா தான் திறந்தாள்..ஏய் வா தாரூ துளசி நீ எப்படி இங்க..சரி சரி வாங்க என்று அவள் தோழிகளை வரவேற்றாள் ஆத்விகா…
இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர்..தாரூவுக்கு பதட்டமாக இருந்தது..துளசியோ வீட்டை நோட்டமிட்டாள்..எங்க ஆத்வி யாரையும் காணல என்று தொடங்கினாள் துளசி..
அம்மாக்கு மூட்டு வலி அதிகமாகிருச்சு அதான் சென்னைக்கு அப்பாவோடு டிரிட்மென்ட்க்கு போயிருக்காங்க..நைட்டு வந்துடுவாங்க..
தாரூவிற்கு சங்கடமாக இருந்தது.. தான் இருந்திருந்தால் தன் செல்ல அத்தையை நன்றாக பார்த்துக் கொள்வோமே என்று..
துளசி அடுத்த பேச்சை போட்டாள் சரி சரி நீ மட்டும் தனியாவா இருக்க?? தருண் அண்ணா எங்க என்று அறிவதற்காக..இப்போது தாரூவின் காது கூர்மையானது..
அய்யோ துளசி உனக்கு விஷயம் தெரியாதா அண்ணிக்கு தெரியுமே..தாரூ உனக்கும் தெரியாதா??
அட சொல்லுடி…என்றாள துளசி..
அண்ணா வேலை விஷயம்மா லண்டன் ஆம்ஸ்டர்டம் போயிட்டாங்க..போயி இரண்டு மாசம் ஆகுது..அங்க நிவேதானு ஒரு தமிழ் பொண்ணு கூட நிச்சயமும் ஆகிடுச்சு.. நாளைக்கு இங்க இந்தியா வராங்க..சென்னைல கல்யாணம் அடுத்த மாசம் என்று அடுக்கடுக்காக தகவல் கூற…
தாரூ கண்களில் தாரையாக கண்ணீர் வர காத்திருந்தது..துளசி சூழலை அறிந்து சரி ஆத்வி நாங்க வரோம்..ஒரே ஒரு ஹெல்ப் நாங்க வந்தோம்னு யார்ட்டையும் சொல்லிடாத ஃப்ளீஸ்டி…
அட நான் ஏன் சொல்ல போறேன்…தாரூ அண்ணா அவர் லைஃப்ப பாத்துட்டாங்க..நீயும் உன் லைஃப்ப பாருடடி..பை.. கல்யாணத்துக்கு கண்டிப்பா நீ வரனும் சரியா.
பதில் இல்லை…தலை அசைவோடு சென்றாள் தாரூ..
ஆட்டோவில் ஏறியது தான் தாமதம் ஓவென அழத்தொடங்க..துளசிக்கும் அழுகை வந்தது..
பிறகு துளசியே தொடர்ந்தாள்..இது உண்மையா இல்ல ஆத்விகா டிராமா பண்றாளானு தெரியாது… முதல்ல நான் இது உண்மையானு கண்டுபிடிச்சுட்டு சொல்றேன் சரியா…
பிறகு முடிவெடுக்கலாம்..அழுகையை வேஸ்ட் பண்ணாத சேத்து வச்சுக்க..உண்மைனு தெரிஞ்சதுக்கப்பறம் நிறையா அழுகனும் என்று சூழ்நிலையை மாற்ற இவளோ முறைத்தாள்..
துளசி: என்ன முறைக்கிற அவன் அவன் த்ரிஷா இல்லனா நயன்தாரானு போறான்..நம்மளும் விஜய் இல்லனா அஜித்னு போக வேண்டி தான்ன…
தாரூ: இல்ல இல்லடி விஜய்சேதுபதி வச்சிக்கலாம்..
துளசி: தட்ஸ் மை கேர்ள் …சரி நைட்டுனா உங்க வீட்டுக்கு தூங்க வரேன் சரியா??
நைட்டு முடிவு பண்ணலாம்..தாரூ: கண்டிப்பா வாடி… என்று துளசி விடைப்பெற்றாள்