Loading

உடையாதே என் உயிர்க்குமிழியே 

அத்தியாயம் – 1 

   அமாவாசை இரவிற்கு அலங்கரித்திருந்த விண்மீன்களுக்கு நிகராக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த வீடு. வீட்டின் வெளிப்பகுதி சீரியல் பல்புகளாலும் மலர் அலங்காரங்களாலும் நிறைந்திருந்திட, சொந்தபந்தம் மற்றும் உற்றாரால் மேலும் அழகுசேர்ந்திட, அந்த வீடு கம்பீரமாய் வீற்றிருந்தது. வாசல்றம் இருந்த பேனர் அது ஒரு கல்யாண வீடு என்பதைப் பளிச்சென பறைசாற்றியது‌. அதுவரை பல மீட்டர் தொலைவிற்கு இசையைப் பரப்பிக் கொண்டிருந்த ஹோம் தியேட்டர் தன் பணியினைத் திடீரென நிறுத்தி வைத்திருந்தது‌. அதுவரை இருந்த ஆர்ப்பாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திட , ஆங்காங்கே கிசுகிசுப்புகள் முளைக்க ஆரம்பித்தன . 

    ‘ பொண்ணு என்ன இப்படி பண்ணிருச்சு ‘ 

    ‘ பையனுக்குக் கல்யாணத்துல ராசியே இல்ல போலயே ‘ 

    ‘ பொண்ணெடுக்கும்போது விசாரிக்குறது இல்லையா என்ன ‘ 

   ‘ எவன இழுத்துண்டு ஓடினாளோ ‘ 

   ஒன்றிரண்டாய் தொடங்கியப் பேச்சுகள் நேரமாக நேரமாக அதிகரித்து கொண்டே போய் பின்னர் அதுமட்டுமே நிலைக்கும் என்ற எண்ணத்திற்கு வந்து நின்றது . 

    ” இப்ப என்ன ப்பா பண்ணுறது… ” என்று மாப்பிள்ளையின் தாய்மாமன் தந்தையிடம் பேச்சை ஆரம்பித்து வைத்திட , ” அவங்க வீட்டிலேயே இன்னொரு பொண்ணு பாத்து கட்டிவச்சுட வேண்டியதுதான். ஏன் அந்த வீட்டில ஒரு போலீசு இருக்கத்தானே செய்யுறாங்க… அவரு தங்கச்சிய கட்டிவச்சு இன்னொரு போலீசு மானத்தைக் காப்பாத்துறது. ” 

  ” எதுக்கு அவ கல்யாணம் முடிஞ்சதும் தப்பிப் போகவா… அக்காக்காரியே ஒழுக்கம் இல்ல. இவ மட்டும் என்னத்த ஒழுக்கமா இருந்து கிழிச்சிட போறாளாக்கும் ” என்று வழக்கம் போல சபையில் பேச்சு எழ ஆரம்பித்தது. 

   ” கொஞ்சம் நிறுத்துறீங்களா ” என்று வந்த அந்த சினம் மிகுந்த கர்ஜனைக்குரலில் திரும்பிப் பார்த்தனர் அனைவரும்‌. பார்த்தோர் அனைவரும் ‘ ஐயோ இவனா ‘ என்ற ரீதியில் முழிக்க , ஒரு சிலரோ ‘ அப்பாடா இப்பயாவது வந்தியே , அன்னநடை போடாம சீக்கிரம் வந்துத் தொலைடா ‘ என்ற ரீதியில் ஆங்காங்கே நின்றிருந்தனர். அவர்களின் நெஞ்சமதில் பயத்தைக் குடிவைத்து விட்டு வந்திருந்தான் உதிரன் எனும் உதிர வேந்தன். 

    ” ஆமா என்ன சொன்னீங்க… அக்கா ஒழுக்கம் இல்ல; தங்கச்சி பெருசா ஒழுக்கமாவா… ஒழுக்கம் னா உங்க வரைமுறை ல எதுங்க… 60 வயது கிழவனானாலும் 23 வயசு பொண்ணுக்கு நீங்க கட்டி வச்சா சரிங்க சாமி னு ஆடு மாதிரி தலையாட்டிட்டு அவனையே கட்டிகிட்டு விருப்பமே இல்லாம ஒரு வாழ்க்கை வாழ்றதா … ஹான்… ஹலோ அந்த மஞ்ச சட்டை நீதானே… உங்களுக்கும் ஒரு மகள் இருக்குறா தானே… வாழப்போறது நாங்க தான். எங்க லைஃப் அ நீங்க இல்ல வாழுறது. அந்தப் பொண்ணு அவளோட வாழ்க்கையைத்தேடி போய்ட்டா… இட்ஸ் இனஃப். வாழ்க்கை முழுக்க வலியோட வாழுறதுக்கு இது எவ்வளவோ மேல் ” என்று தன் சிம்மக்குரலில் அனைவரிடமும் பேசியவன் கண்கள் பெண்ணைப் பெற்றவரிடம் சென்று முடிந்தது. 

     கையைப் பிசைந்தவண்ணம் என்ன செய்ய என்று தெரியாது பார்த்துக்கொண்டு நின்றவரைக் காண, எவருக்கும் மனது வலிக்கும். அவர்களின் அருகில் சென்றவன், ” போலீஸ்னா கொம்புலாம் தனியா முளைக்காது. உங்க பொண்ணோட விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது. பயம் விட்டு எப்பவும்போல சிரிச்சிட்டுச் சந்தோஷமா இருந்து என்னோட நண்பன் திருமணத்தை நல்லபடியா நடத்திக்கொடுங்க ” என்றவன், தனது அறையில் நுழைந்துகொண்டான். அதுவரை இருந்த சலசலப்பு மறைந்து கூட்டம் கலைந்தது. 

   கொஞ்சம் நேரத்தில் பெண்ணை ஈன்றவர் , மணமகள் அறையில் நுழைந்திருந்தார். ” ப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ப்பா ” என்று ஈனக்குரலில் பத்தாவது முறையாகக் கூறினாள் சாஹித்யா  . 

 ” ஏன் நீயும் யாரையாவது விரும்புறியா” என்று நைந்துபோன குரலில் கேட்டார் விஸ்வானந்தம்

   ” ஐயோ இல்ல ப்பா . நான் எந்த நிலை ல இருக்குறேன் உங்களுக்குத் தெரியாதா ப்பா… ஐ கான்ட் . வேண்டாம் ப்பா… “

    

   ” நீ அடிக்கடி சொல்லுவியே உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்ய போறேனே தெரியல இப்படி ஒரு அன்பான குடும்பம் கிடைச்சதுக்கு னு … இதைப் பண்ணி எங்களுக்கு நன்றிக்கடனைத் தீத்துக்க ” என்று எப்படியாவது அந்த திருமணத்தை நடத்துவதை முழு முனைப்பில் கூறினார் சாரதா

    ” ம்மா … சொன்னா புரிஞ்சுக்க ம்மா…” 

    ” என்ன புரிஞ்சுக்கணும் … ஒருத்தி முகத்துல கரிய பூசிட்டா… நீயுமா முடியாது … ஒன்றில் இந்த கல்யாணம் நடக்கணும்… இல்லையா அதோட என்னை விட்டுப் போயிடணும் நீ… அதாவது என் குடும்பத்தை விட்டு… ” 

  ” ப்பா… ” என்று கதற, ” அப்படி கூப்பிட கூட உனக்கு உரிமை இல்ல ” என்றவர் அந்த அறையை விட்டு நகர, பின்னாலே தாயவளும் கடந்திருந்தாள். அந்த அறையினுள்ளே விம்மி விம்மி அழுதிருந்தாள்; கதறி அழுதால்தான் வெளியிலிருப்போருக்குத் தெரிந்துவிடுமே… 

    ஒரு கட்டத்திற்குமேல் தன்னை நிதானித்தவள் ஒருமுறை யோசிக்கலானாள். ‘ தான் யாரையும் விரும்பவில்லை ; என்றோ ஒரு நாள் புகுந்தவீடு சென்றுதான் ஆகவேண்டும் , ஆனால் இந்த மிரட்டல்கள் சற்று பயமுறுத்தியது ‘ மட்டுமே மீதம். 

   கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்தவள் எழுந்து மணமகன் அறையை நோக்கிச் சென்றிருந்தாள். அறையின் வெளியில் நின்றபடி , ” மே ஐ கம் இன் சார் ” என்று வார்த்தைகளுக்கும் வலிக்குமோ என்பது போல் மெல்லமாய் அழைத்தாள் அவள். 

இதற்குத் தான் காத்திருந்தானா இல்லை அவள் அழைத்தது அவன் காதினை அடைந்ததோ எழுந்து வந்து கதவினைத் திறந்திருந்தான் உதிரன். 

   ” எஸ்… வாட் டூ யூ வான்ட் ” என்று கேட்க , அதுவரை இருந்த தைரியமனைத்தும் வடிந்து , ” அது அதுது வந்து ” என்று தந்தியடிக்க , ” ப்ச் இங்க பாருங்க… என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லுங்க. ஐ ஹேவ் சம் ஒர்க்ஸ் ” என்று கூறிட , ” அது வந்து நா…நாளைக்குத் கல்யாணத்துக்கு நான் ரெ…ரெடி… நீங்க ஆ… ஆக வே…வேண்டிய காரியத்தைப் பாருங்க ” என்று ஒருவாறாய்க் கூறி முடித்திருந்தாள். 

   ” ஹ்ம்ம்… இதுல உங்களுக்கு சம்மதம் தானே ” 

   ” ஆ…ஆமா சார் ” 

  ” ஏன் உங்க வாய் டைப் அடிக்குது… நான் பூச்சாண்டி எல்லாம் இல்ல மிஸ்.ரதி ‌… மனுஷன் தான்” 

  ” என் பெ..பெயர் ரதி இல்ல… ” 

  ” ஐ நோ… என் பொண்டாட்டி அ நான் எப்படி வேணா கூப்பிடுவேன் பப்ளு… மை பொண்டாட்டி மை உரிமை ” என்றவன் கண்ணடித்து , அறையை விட்டு வெளியேற , அவனின் செயலில் உறைந்து நின்றதென்னவோ அவள் தான். 

   சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த ருத்ரன், ” என்னமா தங்கச்சி இப்படி நிக்குற… ” என்று கேட்க , அதில் நினைவுவந்தவள் , ” ஹான் அதுலாம் ஒண்ணும் இல்ல னா… அ…அவரு… ” என்று முற்றுபெறாதிருந்த வாக்கியத்தை முடித்து வைத்தான் ருத்ரன்

    ” இங்க பாருமா தங்கச்சி… அவன் அவனை புரிஞ்சுகிட்ட உண்மையான சொந்தங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நல்லவன் தான். உன்னைய கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துப்பான். யாரையும் பத்தியும் பயப்படாம உன்னோட ரூமுக்குப் போய்த் தூங்கி ஃப்ரெஷ்ஷாகக் காலை ல எழுந்துரு… ” என்றவன் ஆதுரமாய்த் தலையை வருடி அறைக்கு அனுப்பி வைக்க , சமத்தாய் அவளும் அறைக்குச் சென்றிருந்தாள். 

        சிறிதுநேரம் கடந்திருக்க அறைக்குத் திரும்பினான் உதிரன். அறையிலிருந்த ருத்ரனைப் பார்த்து மென்னகை புரிந்தவன் , காலணிகளைக் கழற்றிவிட்டு உடைமாற்றி வந்தமர்ந்திட , அவனையே அதிர்வோடு நோக்கியிருந்தான் அவன்.  

   ” எப்படி மச்சான்…   “

   ” அதுலாம் அப்படித்தான் ” 

   ” சரி நம்ம ஆரா எங்கடா ” 

   ” அவளா சமையல் பண்ணுற இடத்தில் இருந்து சிக்கன் சாப்பிட்டு உக்கார்ந்து இருக்கா … ” 

   ” நாம ஃப்ராடுதனம் தானேடா பண்ணுறோம்… அந்தத் தின்னிப்பண்டாராம் ப்ளானை மட்டும் சொதப்பட்டும் அப்புறம் இருக்கு… ” என்றவன் நடந்தவை எண்ணிட, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தான். 

   ” இப்ப எதுக்கு சிரிக்குறடா ” 

    ” இல்ல நடந்ததை நினைச்சேன் சிரிச்சேன் ” என்றிட , உதிரனுக்கும் புன்னகை அரும்பியது. 

   ” சரி தூங்கு… நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ல ” என்றவன் சுவிட்சுகளை அணைத்துவிட்டுப் படுத்திட , நடந்தவை நினைவினில் வந்தது . 

    உதிரன் விரும்பியது என்னவோ சாஹித்யாவைத்தான். அவளோ அவனுக்கு மட்டுமன்றி யாருக்கும் பிடிகொடாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் திரியவே இரு குடும்ப ஒத்துழைப்புடன் சாஹித்யாவின் தங்கை ஆரத்யாவினை மணமகள் என்பதுபோல் பாவித்து, நிச்சயம் செய்யும் நேரம் ஒளித்து வைத்து விட்டு கடைசி நேரம் பெண் மாற்றிப் பித்தலாட்டத்தினை நடத்தி இதோ தன்னவளாய் அவன் விரும்பியவளையே கைகோர்க்கச் செல்கின்றான். எத்தனை அழகியோ எத்தனை பணக்காரியோ மனைவியாய் அமைந்து தராத மகிழ்வும் தித்தித்திப்பும் தன் மனம் கவர்ந்தவளே மனைவியாய் வரும்போது கிடைத்துவிடும் என்பதில் ஐயமில்லை‌. நடந்தவற்றை மனதில் ஓட்டியவன், அப்படியே தூங்கவும் செய்துவிட்டான். 

வலிகளை நான் மென்று 

மகிழ்வினை தரவே  எண்ணிட

விதியும் சதி செய்யுதம்மா 

உன் மனதின் காயங்களை 

அறியாதிருக்க நீ எண்ணிட – நானோ 

அதையே சுகமாய் சுமக்கிறேன் 

ஆருயிர் கண்ணம்மா… 

     இங்கு சாஹித்யாவோ உதிரனின் அறைக்குச் சென்று வந்ததிலிருந்து அவளது நினைவை அவனே ஆக்கிரமித்திருந்தான்‌ . 

  ‘ இந்த போலீஸ்சார் உண்மையிலே கண்ணடிச்சாரா இல்ல நாம தான் அப்படி நினைக்குறோமா… நம்மளைய பப்ளூ ங்குறாரு. கேட்டா என் பொண்டாட்டி என் உரிமைங்குறாரு… ஐயோ ‘ என்று மனதினுள்ளே புலம்பியவள் அவன் நினைவிலே தூக்கத்தினைத் தழுவியிருந்தாள் சாஹித்யா. 

   வீட்டின் நடுஹாலில் அமர்ந்திருந்தனர் உதிரனின் பெற்றோர் , சாஹித்யாவின் பெற்றோர் மற்றும் தமையன் அகராதித்யன் . அகரன் இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை . அதனால் உண்டான மனவருத்தம் முகத்தினில் அப்பட்டமாய்த் தெரிய, வருத்தம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான் அவன்.  

   ” என்ன அக்கா… ஏன் ப்பா இப்படி இருக்குற . நமக்கு என்ன இப்படி பண்ணணும் னு ஆசையா… நமக்கு வேற வழி இல்லடா… ஒண்ணு இல்ல இரண்டு இல்ல முழுசா மூணு முறைடா… ஒவ்வொரு முறையும் செத்துச் செத்துப் பிழைக்குறாப்புல இருக்கு. நான் ஒத்துக்குறேன் அவ இப்ப நார்மலா இல்ல… அந்த சிட்டுவேஷன் ல இருந்து வெளியே வரவே அவளால் முடியல… ஆனா இப்படியே வச்சுட்டு இருக்க முடியாதய்யா… ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உண்மை நினைவு வந்துதான் ஆகும். அப்ப அவளை உதிரனால மட்டும் தான் சமாளிக்க முடியும்… ஒரு பெரிய கண்டத்துல இருந்து தப்பி பிழைச்சுருக்கா… அப்பவோ இப்பவோ னு அவ இருக்குறதை என்னால தாங்கிக்க முடியாதய்யா… என் செல்ல இளவரசியா சீக்கிரம் எம் பொண்ணு திரும்ப வந்துடுவா… அதுவரை பொறுத்துக்க ” என்று தன்னால் கூடியமட்டும் அறிவுறுத்தினார் சாதியின் தந்தை விஸ்வானந்தம். சில நிமிடங்கள் பேசிக்காரியங்களைச் சரிபார்த்தவர்கள் கலைந்து தூங்கச் சென்றனர். 

   மறுநாள் பகலவன் வானில் தன் பொற்கதிர்களைப் தூரிகையாய்க் கொண்டு  அழகியதொரு ஓவியத்தைத் தீட்டிட, அதற்கு முன்னரே அந்த வீடு பரபரப்பாய் இருந்தது. இன்று அந்த வீட்டினில் திருமணம் அல்லவா… வெறும் ஒரு திருமணமா என்ன…தோழர்களாய் இருக்கும் இருவருக்கும் அல்லவா திருமணம். 

    அனைவரும் வேகவேகமாய் வேலையில் ஈடுபட்டிருக்க, மணமகன்களும் மணமகள்களும் கூட காலையிலே எழுந்து தங்கள் தனிப்பட்ட வேலைகளை முடித்தவண்ணம் வந்து அமர்ந்திருந்தனர். அதில் சாஹித்யா மட்டும் எட்டுமணிவரை தூங்க விடாத காரணத்தினால் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தாள். அவள் தன் கடன்களை முடித்தாலும்  இயல்பாய் இருக்க முடியவில்லை. வீட்டிலிருந்த உறவினரின் பார்வைகள் அவளை உயிரோடு கூறிடுவதுபோல உணர்ந்தாள். மற்ற நேரங்களில் அவளது தமையனோ அல்லது ருத்ரனோ  அவளைத் தேற்றிடுவர் ‌‌. ஆனால் இப்பொழுது தமையன் ஏனோ பேசவில்லை ; ருத்ரன் மணமகனாய் உற்சாகத்துடன் அமர்ந்திருக்கிறான்.  

    தோள்சாய இடம் வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவள் மனம் அறிந்தானோ என்னவோ உதிரன் பக்கவாட்டாகக் கைகொடுத்து ஆதுரமாய்த் தட்டிக் கொடுக்க, ஒரு பாதுகாப்பினை உணர்ந்து நிம்மதியுற்றாள் . 

   

   சிறிதுநேரத்தினில் அனைவரும் மண்டபம் சென்றிருந்தனர்‌.     ஊரின் மையமாக அமைந்திருந்த அந்த மண்டபமானது அலங்காரங்களாலும் மனித ஆரவாரங்களாலும் நிறைந்திருக்க, அதற்கு நானும் நிகரே என்பது போல, பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. மண்டபத்தின் தலைவாயிலில் வலப்பக்கம்  ” உதிர வேந்தன் 💝 சாஹித்யா ” என்று மணமக்கள் பெயர் குறிப்பிட்டிருக்க, இடதுபுறம் அதேபோல் ” ருத்ர தேவன் 💝 தாரிகாஶ்ரீ  ” என்று குறிப்பிட்டப்படிருந்தது. மணமகன்கள் இருவரும் தங்களின் காவலர் சீருடையில் மண்டபத்தின் வெளியில் இன்னொரு பேனரில் வருவோர் அனைவரிடமும் கெத்து காட்டியபடி இருந்தது. 

மணமகன் மணமகள் அறையில் தனித்தனியே அமர்ந்திருந்திட , அழகுக்கலை நிபுணர்கள் உதவியால் இன்னும் அழகாகக்கப்பெற்று இருந்தாள். ஏனோ மனம் எதிலும் லயிக்கவில்லை ‌. ஒரே ஒரு வாழ்வு தான் என்றபோதும் அந்த வாழ்வு தான் தந்துச் செல்லும் படிப்பினைகள் என்ன… காயங்கள் என்ன… வலிகள் என்ன… 

   அறையில் இருப்பது மூச்சுமுட்டுவது போல் தேன்றவே, எழுந்து அறைக்கு வெளியே வந்தவள் யாரைக் கண்டாளோ, மனதில் பலப்பல பிம்பங்கள் தோன்றி மறைந்திட , தலைவலியும் கூடி மயங்கி சரிந்திருந்தாள் ‌. 

   மண்டபம் உறவினராலும் நண்பர் குழுவாலும் நிறைந்திருக்க, ஒருவன் உதிரனிடம் ஓடிவந்து , ” எண்ணே… பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துருச்சு ணே ” என்றிட , அவர்களும் , ” ஓ… ” என்று கோரசாகக் கூறிவிட்டு  கைபேசியில் புகைப்படங்களை மேலும் எடுத்துத் தள்ள, வந்தவனும் தன் வேலை முடிந்தது என்பதுபோல கிளம்பியிருந்தனர். 

   அடுத்த சில நிமிடத்தில் இன்னொரு நபர் வந்து நின்றிருந்தார். 

   ” என்ன மாமா இப்படி நிக்குறீங்க ” 

  ” அது ஒண்ணும் இல்ல மாப்ள. உன் அத்தைகாரி நேரம் காலம் தெரியாம சின்னபுள்ளத்தனமாட்டும் கையக்கீறி வச்சுருக்குறா… அவ வீட்டுலயே ஒரு மிளகாய ஒழுங்கா நறுக்க மாட்டா… இங்ஙன வந்து சமையலுக்குக் காய் நறுக்கப்போயிருக்கா… அதான் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுக்க வந்தேன் ” என்று கூறி முடிக்க , ” ஐயோ அத்தே ” இருவரும் அரக்கப்பரக்க ஓடிட , அறையிலே இருந்த நண்பர்களுக்குத்தான் மூளை குழம்பியதுபோன்று இருந்தது. அதில் ஒருவன் வந்திருந்த உதிரனின் மாமனிடம் கேட்டே விட்டான். 

 

   ” ஐயா ” 

   ” சொல்லுங்க தம்பி “

   ” நான் உதிரனோட ஸ்கூல்மேட். நாங்களும் வந்ததில் இருந்து பாக்குறோம்.  இதோட மூணு முறை யாருலாமோ மயங்கி விழுந்ததா தகவல் வந்துடுச்சு. ஆனா கல்யாண பையன் இரண்டு பேரும் எதுவுமே பேசல… ஆனா சின்னதா கை கீறியதுக்கு இப்படி ஓடுறாவ… ” என்று தன் சந்தேகத்தை முன்வைத்திருந்தான். 

    ” அது ஒண்ணும் இல்ல ப்பா … மயக்கம் எங்க ஃப்ரெண்ட்ஸ் மாதிரி… அந்த கல்யாண பொண்ணு இதோட 50 முறை கல்யாண பேச்சு தொடங்கியதுல இருந்து மயக்கம் போட்டிருச்சு. அந்த பொண்ணால மயக்கத்துக்கு உண்டான மரியாதையே போயிடுச்சு… என்னத்த சொல்ல ” என்று சோககீதம் வாசித்தபடி வெளியே இல்ல இங்கிருந்தவர்கள் தான் ‘ ஙே… ‘ என்று பார்த்திருந்தனர். 

    

உடைந்திடாமல் … 

  கதை எப்படி  இருக்கிறதென  உங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டுச் செல்லத் தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறேன் . கதையின் நிறைகள் மட்டும் அல்லாது குறைகளும் வரவேற்கப்படுகின்றன . தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக் கொள்கிறேன் . 

– என்றும் அன்புடன் 

குட்டி சரன் வெடி 🙈 💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  16 Comments

    1. Janu Croos

     அடேய் ஒரு கல்யாணத்தை நடத்தை எம்புட்டு வேலை பாக்குறீங்கடா நீங்க😲😲😲😲…
     ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்னு சொன்னாலும் சொன்னாங்க….வாய்க்கு வந்தபடி பொய்யி….பிராடுதனம் கேடித்தனம் எல்லாம் சரளமா பண்றீங்களே டா😱😱😱….
     இதுல ஹைலைட்டே அம்புட்டையும் பண்றவைங்களே போலீஸ்னது தான்👮👮👮🤦🤦🤦….
     இன்னும் என்னெல்லாம் பண்ண போறானுகளோ🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️….

     1. kutti sairan
      Author

      😂😂🤭🤭
      அவனுங்க அப்படித்தான்… பேட் பாய்ஸ் 🤭🤭
      அவனுங்க சர்விஸ் ல நிறைய ப்ராடுத்தனம் பாத்துருப்பானுங்க ல 😂… அதை ட்ரைப் பண்ணிப் பாக்குறானுங்களோ 😂😂🤣🤣😜😜… பாக்கலாம் பயபுள்ளைங்க என்ன எல்லாம் திருட்டு வேலை பாக்குறானுங்க னு 😜😜

      தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்…

   1. Archana

    Aduthu epi potu aara enna panranu detail ah sollunga pa 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். பேண்டஸி உலகில் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய தங்களின் எழுத்து நடையும் வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. அடேய் உதி,ருத்ரா,ஆரா கூட்டுக் களவாணிங்க எப்படி பிராடு பண்ணி சாஹியை மணமகளா ரெடி பண்ணிருக்குதுங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣…..உதியை பிடிக்குது..சாஹிக்கு ஏதோ பிராப்ளம் இருக்கும்போல..நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆ🤔🤔😉

  3. Sangusakkara vedi

   1. ஸ்டோரி ஃபின்னிஷ் ஆன பிறகும் கூட முகத்துல கொஞ்சம் நேரம் புன்னகை இருந்தது இவங்க கலக்கலான காமெடியால.

   2. உதிரனோட நடவடிக்கையால் அவனோட காதல் கதையை எப்போ ஓபன் பண்ணுவாங்குற எதிர்பார்ப்ப அதிகபடுத்துன விதம் சூப்பர்..

   3. போலீஸே பண்ணுற தில்லாலங்கடி வேல யூ டு ப்ரூட்டஸ்ன்னு கேட்க வக்குது. மொத்தத்துல கதை ஆரம்பம் அமர்க்களம்….

   குறைகள்

   1.கொஞ்சம் ஸ்பெல்லிங் எரர்ஸ்

   2. யூடி வருமா வராதான்னு ஏங்க வைக்குறது சரியில்ல ரைட்டர் ஜி.

   3. போட்டி ஸ்டார்ட் ஆனதும் ஃபர்ஸ்ட் யூடி போட்டதே நீங்கதான். ஆனா அதுக்கப்புறம் ஆளையே காணோம்.

   1. kutti sairan
    Author

    ரொம்ப நன்றி சகி(கோ) …

    என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையில் எபி தர இயலவில்லை. கண்டிப்பாக விரைந்து தருகிறேன்.

  4. Oosi Pattaasu

   ‘உடையாதே என் உயிர்க்குமிழியே’ செம ஜாலியான, ஒரு லவ் ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1. ஹீரோ அண்ட் கோ பண்ற காமெடியெல்லாம், அல்டிமேட்டா இருக்கு. செமையா சிரிப்பு வருது.
   2. இவங்க லவ் ஸ்டோரி முன்னாடி எப்டி ஸ்டார்ட் ஆச்சு, பின்னாடி எப்டி போகும்னு தெரிஞ்சுக்குறதுக்கு ஒரே ஆர்வமா இருக்கு.
   3. போறபோக்குல ஹீரோயின் கிட்ட, லவ்வ சொல்லாம சொல்லிட்டுப் போற சீன்ஸ் எல்லாம், செம கியூட்.
   நெகட்டிவ்ஸ்னு பாத்தோம்னா,
   1. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் அங்கங்க இருக்கு.
   2. ஹீரோ ஒரு அடாவடியா இருக்கும்போது, ஹீரோயின் ரொம்ப சாஃப்ட்டா இருக்கா. பாவம் பிள்ள, இவன வச்சு என்ன பாடுபடப் போகுதோ…
   3. சென்டன்ஸ் எல்லாம் ரொம்ப லென்த்தா போகுது. கொஞ்சம் கமா போட்டு பிரிச்சா நல்லாருக்கும்.
   ஓவர் ஆலா, ஸ்டோரி அடுத்து என்னனு யோசிக்க வைக்குது.

   1. kutti sairan
    Author

    ரொம்ப நன்றி சகி(கோ) …

    உங்க கமெண்ட் ரொம்ப உற்சாகம் தந்தது. நீங்க சொன்ன குறைகளுக்கு நன்றி. என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

  5. kanmani raj

   சதி செய்து விதிப்படி நடக்கும் இந்த திருமணத்தால் மனம் உடைவாளா இல்லை உயிர்க்குமிழி உருகி காதலில் கசிந்துருகுமா எதிர்பார்ப்புடன்…

  6. Oosi Pattaasu

   உதிரனுக்கு சாஹி ஜோடி, ஹீரோ கேங்க் மொத்தமும் கேடி…