பகுதி-16
ஜீவன் ,”உன்னோடு யார் கூட்டு…??” என்று கேட்டவனோ தானே கண்டு பிடிக்கிறேன் என்று கூறியவனின் முகம் பல உணர்வுகளை வெளிக்காட்ட தேவான்ஷியால் எதையும் கண்டறிய இயலவில்லை.
“ஜீவா அது வந்து… !!” எச்சில் கூட்டி விழுங்கினாள் அவனது முகத்தைப் பார்க்க இயலாமல்.
“நீ எதுவும் பேச வேண்டாம் என்னை ஏமாத்திட்ட இல்ல..” என்று சொல்லும் போதே தேவாவின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்க அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“சொல்லு யார் சொல்லி இப்படிச் செஞ்ச…??, கண்டிப்பாக இந்த வீட்டில் உள்ள யாரோ உனக்கு ஹெல் பண்ணி இருக்கணும் இல்லாட்டி நீ இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்ட…!!” என்று கடுப்பாகப் பேசினான்.
தேவான்ஷி உண்மையை ஒப்புக் கொண்டாள். ஜீவனின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
தேவான்ஷியின் முகம் பார்த்தவனோ .,”நான் என்ன சொன்னாலும் கேட்பியா தேவா…??” என்றான்.
“ம்ம்ம்” மட்டுமே பதிலாக வந்தது அவளிடமிருந்து.
“நிஜமாகவே நான் என்ன சொன்னாலும் கேட்பியா தேவா.. ?? “புதிர் போட்டான் ஜேபி.
“நீங்க எது சொன்னாலும் கேட்கிறேன் ஜீவன் ” உறுதி கொடுத்தாள் தேவான்ஷி.
“சரி அப்படியே என்னோடு கிளம்பு …!!”
“எங்கே…?? “
“நான் என்ன சொன்னாலும் கேட்கிறேன் னு சொல்லி இருக்க, ஸோ கிளம்பு… மறுத்து பேசினா நான் “என்றவனை இடைவெட்டினாள்.
“இல்ல இல்ல நான் கேட்கிறேன் வாங்க போகலாம்…!!”
“ஸோ ஸ்வீட் வா போகலாம்… தென் நான் எது செய்தாலும் அமைதியா . இருக்கணும் புரியுதா… ??”
“ம்ம்ம்ஹ்ம்… !!”
ஜீவன் தேவான்ஷியை அழைத்துக் கொண்டு மந்திரவாதியிடம் சென்றான்.
சற்று நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தான். அங்கே வேதா கோபத்துடன் நடமாடிக் கொண்டிருந்தான்.
“எங்கடா தேவா…? உன்னோடு தானே வந்தா இப்போ நீ மட்டும் தனியாக வர்ற…??” வேதா ஜேபியின் பின்னால் பார்த்தபடியே கேட்டான்.
“அவளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டேன் இன்று இரவு பூஜையில் அவளது ஆத்மா சாந்தியடையப் பரிகாரம் செய்ய சுவாமி அவளை அடைத்து வைத்து இருக்கிறார்…” என்றான் இயல்பாக
வேதா பட்டென்று ஜேபியை அறைந்து விட்டான் .
“உனக்கு ஏதாவது அறிவு இருக்கா இல்லையா டா ,யாரைக் கேட்டு அழைச்சுட்டு போன அவளை… ” கொந்தளித்தான் வேதாந்த்.
“யாரைக் கேட்கணும் டா ,நான் தானே அவளைச் சமாதியில் இருந்து எழுப்பி விட்டேன் அதனால் தான் நான் செஞ்ச தப்புக்கு நானே பரிகாரம் தேடிட்டேன் அவள் ஆத்மா இனிமேலாவது சாந்தி அடையட்டும்…” என்றதும் வேதா உண்மையை உளறி விட்டான்.
“அவ இறந்து போனால் தானே டா!! ஆன்மாவா இருக்க முடியும். உயிரோடிருக்கவளை எதுக்குடா அந்த ப்ராடுகாரன் கிட்ட விட்டுட்டு வந்த உன் கிட்ட பேச நேரம் இல்ல நான் போய் அவளைக் காப்பாத்துறேன் “என்று கத்தி விட்டு ஓட முயன்றவனை, இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.
“விடுடா நான் அவளைக் காப்பாத்தணும் “என்று சொல்ல, தீர்க்கமாகப் பார்த்த ஜீவனோ,” அப்போ அவ ஆவி இல்லை . அவ ஏமாத்தி இருக்கா னு உனக்கும் தெரியும் , அப்படித் தானே !இல்ல நீ தான் அவளை ஆவியா நடிக்க வச்சியா ??” எனக் கேட்க அப்போது தான் வேதா உணர்ந்தான் உண்மையை உளறி விட்டோம் என்பதை.
தளர்ந்து போய் ஜீவனின் கைகளை வலுக் கட்டாயமாக விடுவித்தவன்,” அவளை நான் தான் நடிக்க வச்சேன் போதுமா…!! அவ எங்கே இருக்கிறான்னு சொல்லு ப்ளீஸ்” என மொத்தமாகச் சரண் அடைந்து விட்டான்.
ஜீவன் புன்னகைத்தான்.
வேதாவோ மணிமேகலைக்கு அழைத்தவன் உடனே வீட்டிற்கு வரும்படி கூறி விட்டு இணைப்பை துண்டித்தான்.
“ஏன் டா இப்படிச் செஞ்ச… ??” ஜீவன் அமைதியாகக் கேட்டிட
“உன்னால் தான் டா , ஒரு போலி சாமியாரை நம்பி என் நண்பன் ஏமாந்து போயிடக் கூடாதுனு தான் டா . உனக்கு எவ்வளவு சொல்லி புரிய வச்சாலும் ஏத்துக்கிற நிலையில் நீ இல்ல, அதனால் தான் டா அது மட்டுமில்லாமல் தேவாக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்பட்டது அவளை வெளியே தங்க வைக்கவும் மனமில்லை” என்றான்.
“ஏன் தேவா யார் உனக்கு..? அவளைக் காப்பாத்த நீ ஏன் மெனக்கெட்ட அவளை விரும்புறியா என்ன…??” என்று கேட்டு விட்டான் மனமோ ‘இல்லை என்று சொல் ‘ எனப் பிதற்றிக் கொண்டிருந்தது ஜீவனுக்கு.
“டேய் அசிங்கமா வந்திடும் வாயில, ஒரு பொண்ணு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வரும் போது அவளை விட்டு வரச் சொல்றியா… ! நீ இப்போ தேவா எங்கே இருக்கிறானு சொல்லப் போறியா இல்லையா னு சொல்லு …?”
“காப்பாத்தின பிறகு அவ பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைக்க வேண்டியது தானே…??”
“டேய் அவளைக் கொலை பண்ண நினைச்சதே அவங்க பேரண்ட்ஸ் தான் . அதுகளும் உன்னை மாதிரி முத்தின கேஸுங்க தான், போலிச்சாமியாரை நம்பி நரபலி கொடுக்கப் போயிருக்காங்க, அந்தச் சாமியார் அவங்களை ஏமாத்திட்டு தேவாவை யூஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் , அந்த லூசுப்பய வரங்காட்டியும் இவ தப்பிச்சு ஓடி வந்துட்டா .அடியாளை விட்டு தேடும் போது தான் என் கிட்ட கிடைச்சா” என்று கூறி முடித்தான் வேதாந்த்.
“அது சரி டா அவ கிடைச்சா ஓகே இப்போ அனுவை நான் அழைச்சுட்டு வரலையா அது போலச் சொல்லி இருந்திருக்கலாமே நீ எதுக்கு இந்த ஆவி பூதம் வேஷம் எல்லாம் போட வச்ச …?”
“அதான் சொன்னேனே உன்னால் தான் டா னு தேவா வரலைனா வேற யாராவது டிராமா ஆர்டிஸ்ட்டை அழைச்சுட்டு வந்து நடிக்க வச்சு இருப்பேன்… “என்றான் வேகமாக.
“அட முட்டாப்பயலே அது தான் எதுக்கு டா…?”
“போலிச் சாமியாரை நம்பி நீ ஏமாந்திட கூடாதுனு தான் டா…!!” சலித்துக் கொண்டான் வேதா.
“என்ன அறிவு !என்ன அறிவு… !! ஏன் டா இப்படிச் சமாதியில் இருந்து தேவா வரும் போது என் அப்பா வர மாட்டாரா நான் அப்படித் தானே டா யோசிப்பேன் அவர் வருவார் னு மேல மேல காசு செலவு பண்ண தானே பார்ப்பேன்… இதை யோசிக்கவே மாட்டியா நீ …??” என்றான்.
வேதா மெதுவாக,” அதை நான் அப்போ யோசிக்கலைடா ஆனா அதுக்கப்புறம் நீ ஒரு நாள் சொல்லும் போது யோசித்தேன். ஆனால் தேவாவை வச்சு அந்த மந்திரவாதியை பழி வாங்க நினைச்சேன் அங்கே உள்ள போக ஒரே துருப்பு சீட்டு நீ தான், அதனால் தான் கன்டினியூ பண்ணிட்டோம் டா அதை எல்லாம் விடு டா இப்போ தேவா எங்கே இருக்கிறானு சொல்லு ப்ளீஸ் அவளைப் பார்த்தா தான் எனக்கு நிம்மதி” என்றான்.
“தேவா” என்று சத்தமிட ஜீவனின் அறைக்குள் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் தேவான்ஷி.
“அடிப்பாவி ! நீ இங்கே தான் இருந்தியா, ஒரு சிக்னல் ஆச்சும் காட்டி இருக்கலாம் இல்ல நான் பதறிப் போயிட்டேன்” என்று கடிந்து கொண்டான்.
“இவர் தான் மிரட்டி வச்சுட்டாரு வேதா. அவரு நம்ம டிராமாவை வந்த அன்னைக்கே கண்டு பிடித்து விட்டாராம்…” என்றாள் மெதுவாக.
அதற்குள் மணிமேகலை கதிர்வேலனுடன் வந்து விட்டார்.
“தேவ் நீ நல்லா இருக்கத் தானே…? எங்கேடாப் போனீங்க…?? ” என்று அவளை அணைத்துக் கொள்ள ஜீவன் கூர்மையாக அவரைப் பார்த்தான்.
அவரோ நிமிர்ந்து ,”என்ன..?” என்று கேட்க ,”அப்போ உங்களுக்கும் இவ மனுசி தான் னு தெரியும் அப்படித் தானே அப்புறம் ஏன் தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டிங்க…?” என்றான் சற்று சினத்துடன்.
“நான் எங்கே அவளைத் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டேன் நீ தான் எதையும் யோசித்திடாமல் இருந்த…!!”
“அப்போ ப்ளான் பண்ணி என்னை ஏமாத்தி இருக்கீங்க …!!”
“ஒரு திருத்தம். உன்னை ஏமாற விடாம பார்த்துக்கிட்டோம்” என்றார் மணிமேகலை.
கதிர்வேலன் பார்வையாளராக நின்றிருக்க ,ஜீவன் அவரைப் பார்த்தான்.
“ஏன் மாமா நீங்க எப்படி…? இந்த ப்ளானிங் எல்லாம் தெரியுமா இல்லை.. !!”
“அச்சோ…!! ஜீவ் எனக்கு இது எதுவும் தெரியாது பா , ஈவன் தேவான்ஷி உன் கிட்ட ஆவியா நடிக்கிறானு கூட எனக்குத் தெரியாது…”என்றார் கதிர்வேலன்.
“ஜீவ் ஐம் சாரி வேதா என்னைக் காப்பாற்ற தான் அப்படி ப்ளான் போட்டாரு, அது மட்டுமில்லாமல் அந்தச் சாமியாரைப் பழி வாங்க எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் தவற விடத் தயாராக இல்லை அதனால் தான் கொஞ்சம் டிராமா போட்டோம்… ஆனா அந்த ஆள் அசரவே இல்லை அதான் இன்னைக்கு அந்த ஆளை கொலை பண்ணலாம் னு” என்றாள்.
“ஏதேய்…?” என்று அதிர்ந்து விட்டார் மணிமேகலை.
தேவான்ஷியின் முகம் இறுகியது.. பல்லைக் கடித்துக் கொண்டு,” ஆமா கொலை தான் பண்ணப் போறேன் அவனைக் கொன்னா தான் என் மனசு ஆறும்” என்றாள்.
“தேவ் நீ வா என்னோடு …”என்று அழைத்துச் சென்றான் ஜீவன்.
“டேய் இப்ப எங்கடா கூட்டிட்டு போற..?”
“ஹான் ரொமான்ஸ் பண்ண போறேன் .அதை எல்லாம் உங்க முன்னாடியாப் பண்றது , இல்ல பண்ணவா…?”என்று தேவாவை தோளோடு அணைக்க
வேதா இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டவன்,” டேய் !யப்பா பாவம் டா நானு, ஏற்கனவே ஒரு 90′ ஸ் கிட்ஸ் ரொமான்ஸையே தாங்க முடியலை, இதுல நீ வேறயா …? நான் மொரட்டு சிங்கிள் டா என்னை விட்டுடுங்க நான் பாவம் “என்றான்.
“அடிங்க! வேதாந்தம் நாங்க எங்க டா ரொமான்ஸ் பண்ணோம்…? நீ பார்த்த” என்று அடிக்கப் பாய்ந்த மணிமேகலையைக் கதிர்வேலன் பிடித்துக் கொள்ள,
வேதா வேகமாக ஓடியவன் ,”இதோ! இது எல்லாம் ரொமான்டிக் சீன் இல்லையா இதை எல்லாம் பார்த்தா பச்சை மண்ணு நான் பயந்துக்க மாட்டேன் “என்று சொல்ல, கதிர் விழுந்து விழுந்து சிரித்தார்.
“உங்களுக்கு என்ன கெக்கெ பிக்கேனு சிரிப்பு . டேய் !வேதா செண்பா அக்கா எங்கடா…??” என்றபடி ஷோபாவில் அமர செண்பா காஃபி கோப்பையுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் .
“மணி உன் சத்தம் கேட்டதும் காபி போட போயிட்டேன்… வாங்க தம்பி” என்றவாறு காஃபியை கொடுத்து விட்டு நிமிர அங்கே ஜேபி முறைத்துக் கொண்டு நின்றான்.
“அக்கா நீங்களும் சேர்ந்து நடிச்சீங்க இல்ல…!!”
“தம்பி உங்க நல்லதுக்கு னு மணி சொல்லும் போது எப்படி மறுக்க முடியும்…அதுவுமில்லாமல் அந்த ஆளு ஒரு டுபாக்கூர் எங்க ஊர் பக்கம் தான் பொறுக்கிட்டு திரிஞ்சான், பேரு முத்தரசன், சரியான கேப்மாரி , நல்லா குடிப்பான் , பொம்பளை சகவாசம் வேற ஒருத்தனை நாள் அவன் பொண்டாட்டி குடிச்சுக்கிட்டே கெடக்கான்னு மாரியாத்தாளுக்கு மாலை போட்டு விட்டா, எங்கிருந்தோ வந்த வெளியூர்காரங்க அவனைச் சாமினு கால்ல விழுந்து குறி கேட்க ஆரம்பிக்க, அதுல இருந்து சாமினு சொல்லிட்டு திரிஞ்சான் அப்படியே ஊரை விட்டு வந்து இங்க இந்த ஃப்ராடுதனம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டான் உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் அவனை நம்பி பணத்தைக் கொடுத்து பெரிய ஆளா ஆக்கிட்டிங்க. இப்போ ஆசிரமம் கட்டுற அளவுக்கு வந்துட்டான் இந்தச் சனங்களுக்கு (மக்களுக்கு ) எவ்வளவு பட்டாலும் புத்தி வர மாட்டேங்கிது சாமி இந்த மாதிரி ஆசாமிகக் கிட்ட இருக்காது னு புரிய இன்னும் நூறு வருஷம் ஆகும்” என்று இயல்பாய் கூறி விட்டு சென்றார் அந்தப் படிக்காத மேதை செண்பாக்கா.
“ஜீவ், இந்த அட்வைஸ் உனக்குத் தான் இனிமேலாவது அந்த மந்திரவாதியை பார்க்கறதை நிறுத்திட்டு வேலையைப் பாரு… “என்றார் மணிமேகலை.
“இல்ல அத்தை இனிமேல் தான் எனக்கு அங்கு வேலையே இருக்கிறது …”என்றான் அழுத்தமாக
“ஏன் டா சாமியாரை நீ திருத்த போறியா…?, அந்த வேலைக்கு எல்லாம் நீ போகாத டா இந்த அளவில் தப்பித்தோம் என்று நினைத்துக் கொள் “என்று உற்ற நண்பனாக அறிவுரை வழங்கினான் வேதாந்த்.
ஜீவன் வேகமாக .,”என் நம்பிக்கையைக் கெடுக்காதீங்க ப்ளீஸ் “என்றபடி எழுந்து சென்றான். தேவான்ஷி அவன் பின்னோடே ஓடினாள்.
“இவன் திருந்த மாட்டான் அத்ஸ்… அந்தச் சாமியார் இவனைச் சாமியார் ஆக்காம விட மாட்டான்… பணத்தை எல்லாம் அந்த ஆள் கிட்ட கொட்டி கொடுத்துட்டு ஆண்டியா நிக்கப் போறான்… இவனை என்ன தான் பண்றதோ தெரியலை அத்ஸ் “என்று சலித்துக் கொண்டான் வேதாந்த்.
“விடு டா, இப்போ தானே இந்த லெவலுக்கு வந்திருக்கான். செண்பா சொன்ன விஷயத்தை யோசிப்பான் அவனுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்… நீ தேவாவைப் பார்த்துக்க அது போதும் கொலை கொள்ளை னு பேசிட்டு இருக்கா ஏதாவது ஏடாகூடமாகச் செய்துடப் போறா “என்று மணிமேகலை சொல்ல வேதாந்த் பழைய நினைவுகளில் அமிழ்ந்தான்.
“டேய் என்னடா சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு சாண்டிலியரைப் பார்க்கிற…??” உலுக்கிய மணிமேகலையிடம் தேவான்ஷி பற்றிய விபரங்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டான்.
“அத்ஸ் அவளை நடிக்க வச்சிருக்கேன் னு தானே உங்க கிட்ட சொல்லி இருக்கேன் பட் அவ எப்படி என்னிடம் வந்தாள் னு தெரியுமா…??” என்று புதிர் போட்டான் வேதா.
“எப்படி டா… ஏதாவது” எனும் போதே இல்ல அத்தை என்று இடை வெட்டினான்.
“அப்புறம் …!!”
“ஜீவன் அந்தச் சாமியாரைப் பார்க்க போறேன் னு போகும் போது அவனை ஃபாலோ பண்ணி அங்கே போயிருந்தேன். ஜீவன் சாமியாரிடம் பேசிட்டு ஒரு ஹோமகுண்டம் முன்னாடி கண் மூடி உட்கார்ந்து இருந்தான். நானும் அவன் முடிச்சுட்டு வரட்டும் என்று பக்கத்தில் என் இயற்கை உபாதை கழிக்கப் போனேன் அப்போ தான் அந்த வீட்டுப் பின்னாடியில் இருந்து தேவா ஓடி வந்து என் மேல மோதிட்டா… ” என்று அன்றைய நாளை விவரித்தான்.
….. தொடரும்
ஜேபி… செண்பா அக்காவுக்கு புரியுறது கூட உனக்கு புரியலயா? லூசாடா நீ..இன்னும் அந்த சாமியார் கிட்ட போறேன்னு சொல்லுற. அவனுக்கு தண்டனை வாங்கி குடுக்க நினைச்சா நல்லது தான் பண்ற. ஆனா அவன் சாதாரணமான ஆள் இல்லையே. சரியான மொள்ளமாறில அவன்.
அப்போ தேவா அந்த பிராடு சாமியார் வீட்டுல இருந்து தப்பிக்கும் போது தான் வேதா கிட்ட மாட்டினாளா. இன்னும் அந்த சாமியார் என்னெல்லாம் பண்றான்னு தெரியலயே.
இன்னும் இவன் திருந்தலையா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ இல்ல இதுவும் நடிப்பா🤔🤔🤔🤔 அத்ஸ் ரெண்டு ஜேபி மண்டையில்லே தட்டினா புரியும்.