Loading

.

                 பகுதி -15

நர்த்தனா சாமியாரிடம் பணம் கொடுப்பதற்காகக் கதிர்வேலனின் தந்தையின் அறையில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைச் சத்தமில்லாமல் களவாடி இருந்தாள்.

இங்கே ஜீவனும் மந்திரவாதியிடம் பணப்பெட்டியை கொடுத்து விட்டு தேவான்ஷி தன்னுடன் வந்தது பற்றிக் கூறி அடுத்த முறை அவளை இங்கே அழைத்து வருவதாகக் கூறி விட்டுக் கிளம்பினான்.

நாட்கள் கழிந்தது அவசரகதியில்…  கதிர்வேலன் மணிமேகலை இருவரும் தேனிலவு முடிந்து வந்திருந்தனர்.

“வாப்பா  வாம்மா…  கேரளா எப்படி இருந்தது…??”  கதிர்வேலனின் தந்தை ஆர்வமாகக் கேட்டபடி மகனையும், மருமகளையும், உள்ளே அழைத்துச் சென்றார்.

“ரொம்ப நல்லா இருந்தது மாமா .எங்கே பார்த்தாலும் தண்ணீர் தான் இயற்கையே அங்க தான் இருக்கு போங்க…!!” சிலாகித்தபடி வந்தார் மணிமேகலை.

“சரி மா ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு தயார் பண்ண சொல்லிட்டு வரேன். ம்ம்ம் ரெஸ்ட் எடுங்க” என்று கிளம்பினார் மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மனதில் நிரப்பிக் கொண்டு.

“ஸ்ஸ்ஸப்பா…!!” எனக் கட்டிலில் சரிந்து விட்டார் மேகா.

“மேகா எழுந்து குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு…” 

“ப்ளீஸ் ! கதிர்… ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கி எழுந்திடுறேன் “அசதியாகப் படுத்துக் கொண்ட மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டார் கதிர்.

“ரொம்பத் தொல்லை பண்ணிட்டேனோ… ??” பாவமாகக் கேட்டிட,  மணிமேகலை கோபத்தை இழுத்து பிடித்து முறைத்தார்.

“உங்க தலை. தூக்கம் வருது கதிர், எவ்வளவு தூரம் ட்ராவலிங் பண்ணி வந்திருக்கோம் டயர்டா இருக்கு ப்ளீஸ்” எனக் கண்களை மூடிக் கொண்டு புரண்டு படுத்தார். 

“எனக்கும் டயர்ட் தான் பட் ஆபிஸ் ல ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சதும் வரேன்” என்றவர் குளியலறைக்குள் புகுந்து விட்டார்.

சற்று நேரத்தில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு , தன் தந்தையிடம் வந்து கொடுத்த பணத்தை எடுத்து வரும்படி சொல்ல ,அங்கே பணப்பெட்டி இல்லாமல் காலியாக இருந்தது.

கதிரின் தந்தை நாராயணன் திடுக்கிட்டு பதட்டத்துடன் வெளியே வந்து .,”தம்பி பணத்தைக் காணலை டா…!!” என்றார்.

“என்ன…?? அப்பா நம்ம வீட்டில் இருப்பது எங்கே போய் விடும், நல்லா தேடுங்க .வாங்க வேற இடத்தில் எதுவும் மாற்றி வச்சிருப்பீங்க” என்று வேகமாக அறைக்குள் நுழைந்து சோதனையிட அங்கே பணப்பெட்டியை வைத்ததற்கான சுவடே இல்லை இருவருக்கும் திக்கென்று இருந்தது.

“அப்பா மொத்தமா ஐந்து லட்சம் பா, நான் ஆபிஸ் ல சம்பளம் கொடுக்க வச்சிருந்த பணம் வீட்டிற்கு வேறு யாரும் வந்தாங்களா…??”  தவிப்பாய் கேட்டார் கதிர்.

“இல்லைப்பா அதுவுமில்லாமல் என் அறைக்குள் நான் யாரையும் விடுவதில்லையே… !!” என்றவர் மற்றவர்களை அழைத்தார்.

எல்லோரிடமும் விஷயத்தைக் கூறி விட்டு , “அவர்களுக்கு எதுவும் தெரியுமா?” என்று கேட்க நர்த்தனா தாம் தூம் எனக் குதித்தாள்.

 

உங்க வீட்டில் இருந்தா என்ன வேணும் னாலும் பேசுவீங்களா … ??எங்களைப் பார்த்தா திருடுற மாதிரி உங்களுக்குத் தெரியுதா இல்லை இந்த வீட்டில் இத்தனை நாளில் ஒரு தூசி துரும்பு காணாமல் தான் போயிருக்கா…??”  என்று கதிரின் அறையைப் பார்த்து விட்டு கூறினாள்.

சத்தம் கேட்டு எழுந்த மணிமேகலை வெளியே வர,  அதனைக் கண்டு கொண்டவள்.,” யாருக்கு தெரியும்  ? புதுசா எங்கே இருந்தோ தேடி மருமகளைக் கொண்டு வந்திருக்கீங்க, அவங்க பண்ண வேலையா கூட இருக்கலாம் “எனும் போதே  கதிர்வேலன் நர்த்தனாவை அடிக்கக் கை ஓங்கி விட்டார்.

“அடிங்க அது ஒண்ணு தான் இந்த வீட்டில் நடக்கவில்லை அதையும் நடத்திடுங்க, அந்த அம்மணி எல்லாம் சொல்லி தானே நடக்குது” என்றதும் கதிர் மீண்டும் அடிக்கப் பாய  மணிமேகலை கையைப் பிடித்துத் தடுத்து.,” அமைதியா இருங்க இதை நான் டீல் பண்ணிக்கிறேன் “என்றார்.

“என்ன என்ன டீல் பண்ணுவ… நல்லா இருந்த குடும்பத்தைப் பிரிச்சுட்டு” என்றதும் மணிமேகலையின் கோபம் உச்சத்திற்குச் சென்று விட்டது.

“ரமேஷ்…  உங்க பொண்டாட்டி இப்போ இந்தச் செகண்ட் வாயை மூடலை உன் பல்லு தெறிச்சிடும்…  நான் உன்னை விடப் பெரியவ அடிக்க எல்லா ரைட்ஸும் இருக்கு…  ஸோ ஸ்டாப் ஹர்… இல்லை என்றால் “என்று கையை முறுக்கி காட்ட அவனோ “அண்ணா இவங்க என்ன இப்படிப் பேசுறாங்க?” என்று எகிறினான்.

“ஏன் அவ என்னைப் பத்தி பேசும் போது பேசாதே னு சொல்ல வேண்டியது தானே !அப்போ மட்டும் வேடிக்கைப் பார்த்த… !!” சரேலன வார்த்தை அம்புகள் பாய்ந்தது ரமேஷிடத்தில். நிலைகுலைந்து போனான் அவன்.

“பாருங்க ! பாருங்க ஒரு ஆம்பளைனு மரியாதை இல்லாமல் எப்படிப் பேசுறான்னு, இது குடும்பத்திற்கு ஆகறதா, வெளங்காதவ… இவ வந்தா , என் குடும்பம் குட்டி சுவராகிடுச்சு”  வார்த்தையை முடிக்கவில்லை நர்த்தனாவிற்கு விழுந்திருந்தது அறை.

மணிமேகலை தான் அடித்திருந்தார்.

“அடுத்த வார்த்தை பேசின  காது செவிடாகிடும்… பணத்தை எடுக்கவில்லை என்றால் எடுக்கலைனு சொல்லிட்டு போ… அவங்க எப்படிக் கண்டு பிடிக்கனுமோ அப்படிக் கண்டு பிடிப்பாங்க…  போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்க வந்து விசாரிச்சு கண்டு பிடிக்கட்டும்” என்றதும் நர்த்தனாவிற்கு நா உலர்ந்து போனது.

“அண்ணி நீங்க செய்றது சரி இல்லை அவ ஏதோ வேகத்தில் பேசினா அடிப்பிங்களா…??” எகிறிக் கொண்டு வந்தான் ரமேஷ்.

மேகா அவனை முறைக்க ,”மணிமேகலை அமைதியாக இரு” என்று அமைதிப் படுத்தினார் கதிர்.

“தப்பா பேசினது என்னைப் பத்தி,    ஸோ என்னைப் பத்தி பேசினா நான் தான் அடிக்க வேண்டும், உங்களை மாதிரி சப்போர்ட் பண்ணி என் புருஷன் வரலையே…!!”  கதிருக்கும் பேச்சிலேயே ஒரு குட்டு விழுந்தது. 

“மேகா பிரச்சினை வேண்டாம் மா பணத்தைக் கண்டு பிடிச்சிடலாம்… ” என்று பிரச்சினையைச் சரி செய்யும் வழியைக் கண்டறிய மேகா நிதானமாகக் கதிரிடம் திரும்பினார்.

“பிரச்சினை பணம் தான் என்றால் சொல்லுங்க எவ்வளவு வேண்டுமானாலும் தரேன். ஆனால் பிரச்சினை இங்கே நானா நிற்கிறேன்…  நானும் இங்கே வந்ததில் இருந்து பார்க்கிறேன் அவ ஏதாவது வம்பு பண்ணிட்டே இருக்கா நீங்களும் சைலண்டா இருக்கீங்க…  சரி நம்மால எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று ஒதுங்கி போனா அவள் செய்வது சரி என்பது போலவே நடந்துக்கிறிங்க என்ன தான் உங்க விஷயம்…?  இதோ பாருங்க மாமா…!  என் செயல்கள் உங்களுக்குப் பிடிக்கலையா சொல்லுங்க மாத்திக்கிறேன் என் புருஷனுக்குப் பிடிக்கலையா ஒண்ணு நான் மாறிப்பேன் இல்லை அவரை மாத்திக்க வைப்பேன்…  அது எங்களுக்குள்ள பட் இவளுக்குப் பிடிக்கலைனு என்னால் சேஞ்ச் பண்ணிக்க முடியாது… அப்படி மாற்றிக் கொள்ளும் அளவிற்கு இங்கே நான் நடக்கவும் இல்லை என்று நினைக்கிறேன்…  இதோ வீட்டு மாப்பிள்ளையா இருக்காரே  ஸ்ரீ  அவர் கிட்ட கேளுங்க, அவருக்கு விருந்தோம்பல் பண்றதில் ஏதாவது குறை வச்சேனான்னு,  இல்லை உங்க மகள் ப்ரீத்தி கிட்ட கேளுங்க…  அது போலப் பணம் காணாமல் போனது எல்லோருக்கும் அதிர்வான விஷயம் தான்…  இதோ நம்ம வீட்டு மாப்பிள்ளையையும் சேர்த்து தானே கேட்டு இருக்கீங்க நியாயப்படி பார்த்தா அவர் தான் கோவிக்க வேணும்…  பட் அவர் கரெக்டா தன் நிலையில் இருக்கார்…  பணம் திருடு போனது அவங்களுக்கும் பதட்டமாகத் தான் இருக்கும்… ஆனா இவளை மாதிரி குதிக்கலையே… “என்றார் தெளிவாக.

“அப்போ என் பொண்டாட்டி தான் எடுத்தானு சொல்றீங்களா…??”

“நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலை. நீங்களே நினைச்சா நான் பொறுப்பு இல்லை என்று தான் சொல்றேன்…  இங்கே நடக்கிறது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மணிமேகலை சம்மந்தப்பட்ட விஷயம் கிடையாது டூ யூ அன்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் ரமேஷ் “என்றவரோ கதிரிடம் திரும்பி,” உங்களுக்குச் சந்தேகம் யார் மீது இருந்தாலும் சரி அவங்களை விசாரிக்கச் சொல்லி கம்ப்ளைன்ட் தரலாம்” என்று விட்டு அமைதியாக உள்ளே சென்றார்.

“பெரிய மச்சான் போலீஸ் எப்போ வர்றாங்க னு சொல்லுங்க நான் என் தரப்பு நியாயத்தைச் சொல்லிடுறேன்…  எனக்கு இதில் எந்தத் தயக்கமும் இல்லை… “என ஸ்ரீதரன் முடித்துக் கொண்டான்.

“அண்ணா நானும் தான்… ” பிரீத்தியும் உத்தரவாதம் கொடுத்தாள்.

“எனக்கு மட்டும் பயமா என்ன ?நீங்க ராணுவத்தையே வரச் சொல்லுங்க “என்றாள் நர்த்தனா.

ரமேஷோ.,” இனிமேல் இந்த வீட்டில் என்னால இருக்க முடியாது… என் பொண்டாட்டியை அவமானப்படுத்துறாங்க,  என்னை அவமானப்படுத்தி இருக்காங்க இத்தனை நாளும் அண்ணன் னு உரிமையா கேட்டோம் இதுக்கு மேல அவங்க காலுக்குக் கீழே நிற்க எனக்கு எந்த அவசியமும் கிடையாது…  நான் என் குடும்பத்துடன் தனியா போயிக்கிறேன் இந்தப் பணத்தை நானோ என் பொண்டாட்டியோ எடுக்கவில்லை அவ்வளவு தான் “என்று பேசி விட்டு நகர்ந்தான் ரமேஷ்.

“அப்பா என்ன ப்பா இவன் இப்படிப் பேசிட்டுப் போறான்…” கதிர் சலித்துக் கொள்ள ,நாராயணனோ “அவன் சரியா தான் இருக்கான். நீ தான் சரி இல்லை கதிர்…  அவன் பொண்டாட்டியை சொன்னதும் எவ்வளவு எகிறி குதித்தான், ஆனா நீ…  மேகா பேசினதில் என்ன தப்பு இருக்கு…  ?நர்த்தனா பத்தி உனக்குத் தெரியாது… அவள் அப்படிப் பேசுறா மேகாவை அமைதியாகப் போகச் சொல்றியா…  இது தப்பு… ” என்றார். 

 

“அப்பா எனக்குக் கோபம் வரலைனு நீங்க நினைக்கிறிங்களா …??”

“ஏன் காட்டலைனு நினைக்கிறேன். இந்த வீட்டில் பெரியவன் நீ தான் டா,  அவங்க கிடையாது… சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல நடந்துக்கப் பழகு…கூட்டுக் குடும்பத்தில் சண்டை வர வேண்டாம் என்று நினைப்பது எல்லாம் சரி தான் ஆனா அப்பா அம்மா அவங்களுக்குப் பிறகு பொண்டாட்டி தான் முக்கியம் புரியுதா…. !! போ ! போய்ச் சமாதானம் செய்து அழைத்து வா இந்தப் பணம் எப்படிக் காணாமல் போனது என்று நான் கண்டுபிடிக்கிறேன்” என்றார் நாராயணன்.

கதிர் மீண்டும் தனதறைக்குச் செல்ல மேகா ஆடை மாற்றிக் கிளம்பி இருந்தார் கூடவே அவரது லக்கேஜும் இருந்தது.

கதிருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

“மே.. மேகா… இப்போ எங்கே கிளம்புற… ?ஏன் லக்கேஜ் பேக் பண்ணி இருக்க…?”  என்றதும் கோபத்துடன் முறைக்கக் கதிரோ தலை குனிந்து கொண்டார்.

“நான் என் வீட்டிற்குப் போகிறேன்…  லக்கேஜ் வெறும் துணி தான் செக் பண்ணி அனுப்புறிங்களா…?? பணத்தை நான் எதுவும் இதில் வைத்துக் கொண்டு போகவில்லை சந்தேகமாக இருந்தால் செக் பண்ணிக்கலாம் “என்று சொல்ல முகம் விழுந்து விட்டது கதிருக்கு.

“ஏன் இப்படிப் பேசுறீங்க மேகா…??”

“வேறெப்படி பேசணும்… ? இது தான் நீங்க என்னைப் பார்த்துக்கிற லட்சணம்… நான் கிளம்புகிறேன் குட்பாய் “என்று நகர அவரது கையை விடாது பிடித்துக் கொண்டார் கதிர்வேலன்.

“கையை விடுங்க…!!”

“சாரி…  அங்கே பேசாதது தப்பு தான்…  வீண் விவாதம் வேண்டாம் என்று நினைத்து” எனும் போதே .,”உங்க தம்பி அப்படி நினைச்சாரா சட்டுனு பேசலை…” எதிர் கேள்வி கேட்க திகைத்து நின்றார் கதிர்.

மேகா அமைதியாக அவரைக் கடந்து செல்ல அப்படியே உறைந்து நின்றார் கதிர்.

“மிஸ்டர் கதிர்வேலன் ! இப்படி ஆணி அடிச்சா மாதிரி நிற்க கூடாது. வொஃய்ப் இப்படிப் பேசும் போது உங்க தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லணும்… எங்கே சொல்லுங்க பார்ப்போம் “என நமட்டுச் சிரிப்புடன் சொல்ல கதிரின் உறைநிலை இப்போது தான் திரவ நிலைக்கு வந்தது.

“மேகா நீங்க இருக்கீங்களே … !!”அலுத்துக் கொண்டவரோ,”  போடி பயந்து விட்டேன்” என்று அணைத்துக் கொண்டார்.

“நீங்களா பயந்தீங்க…!  சரி எனக்கு ஒரு பர்மிஸன் வேணுமே…??”

“எதுக்கு…  இப்படித் திட்டவா…??”

“ம்ம்ம்ஹ்ம் ,அதற்கும் தான் ,நான் சொல்ற வரை திறக்காம   இருக்கணும் …  உங்க தம்பி தங்கை நல்லபடியாக இருக்கணும் தானே அப்போ அமைதியா இருங்க…  பணத்தை எடுத்தது நர்த்தனா தான் பட் அவ எதுக்கு எடுத்தானு நாம தெரிஞ்சுப்போம்… “

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்கிறாய்…??”

“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது…  அவ ஏதோ பெருசா பண்றா…! பட் என்னனு  தான் தெரியலை.  தவறான வழியில் போயிட்டா உங்க தம்பி தான் பாதிக்கப்படுவார் ஸோ இந்த விஷயத்தை நாம தான் சரி செய்யணும்… சரி கிளம்புங்க ஆபிஸ் போகலாம்… எவ்வளவு நேரம் ரெடி ஆகிட்டு நிற்கிறது… ” என்றார் அணைப்பிலிருந்து விலகியபடி.

“அப்போ அலுவலகம் தான் கிளம்பினாயா பிறகு இந்தப் பெட்டி…பழைய துணி துவைக்கப்போடணும் ஏன்   எடுத்துப் போடுறீங்களா… ??” கிண்டலாகக் கேட்க ,கதிர்வேலன் சிரித்து விட்டார்.

“அடிப்பாவி! கொஞ்ச நேரத்தில் பயமுறுத்தி விட்டுட்டியே …  ஹனிமூன் முடிந்ததும் இப்படி ஒரு பிரிவா னு பயந்து விட்டேன்” என்று பெருமூச்செறிந்தவரை  கன்னத்தில் முத்தமிட்டு,” நீ இன்னும் வளரணும் தம்பி “என்று கிண்டல் செய்து விட்டு வெளியேறினார் மேகா.

இருவரும் தனித்தனியாக அலுவலகம் கிளம்பிட நர்த்தனாவோ இருவரையும் பிரித்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

ரமேஷ் தன் நண்பனிடம் வாடகைக்கு வேறு வீடு பார்க்கும்படி பேசிக் கொண்டிருந்தான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே ஜீவன் மந்திரவாதியிடம் பணப்பெட்டியை கொடுத்து விட்டு வீடு திரும்பத் தேவான்ஷி அவனது அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

ஜீவன் ஒரு முடிவோடு வந்திருந்தான்.

“தேவ்!  அனு, வேதா, எங்கே ??”

“அவங்க ஷோரூம் போயிருக்காங்க வேதா அண்ணா… இனி அனுவை வேலைக்கு வரச் சொல்லி சொன்னாங்க…”

“ஓஓஓ சாப்டியா… !!”

“ம்ம்ம்… நீங்க”

“ஆச்சு ஒரு நிமிஷம் டோர் லாக் பண்ணிட்டு வா….  ” என்றான் அழுத்தமாக.

“எ.. எது.. எதுக்கு…??” நா வறண்டது அவளுக்கு.

“சொல்கிறேன் லாக் பண்ணிட்டு வா… !”

கதவை சாத்தியவளின் இதயம் உள்ளிருந்து வெளியே வர எகிறி குதித்துக் கொண்டிருந்ததது.

“தேவ் அன்றைக்கு ஒரு கேள்வி கேட்டியே நினைவில் இருக்கா… ??”

“என்ன கேள்வி…??”

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா ஜீவன் . கேட்டியே … !!” நினைவுபடுத்தினான் அவளுக்கு.

“அது சும்மா விளையாட்டுக்கு… அது வந்து ஐ ம் சாரி..  நான்… நான் “என்று தடுமாறினாள்.

“ஆனால் நான் சீரியஸா கேட்கிறேன் இப்போது என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா தேவ்… ” என்றதும் அதிர்ந்தவளின் விழிகள் குளமென நிரம்பியது.

“பதில் சொல்லு தேவ்…!!”

“நான் ஒரு ஆவி… நான் இறந்து போய் விட்டேன் உங்களுக்குப் புரியுதா… ??நான் எப்படி…??”

“அது பரவாயில்லை இப்போ நீ சொல்லு என்னை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதமா…??”

“என்ன உளர்றீங்க? நான் தான் சொல்றேன் இல்ல…  யாராவது இறந்தவளை கல்யாணம் பண்ணுவாங்களா…” என்று கத்தினாள்.

ஜீவன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“தயவு செய்து இந்த எண்ணத்தைக் கை விடுங்க  இது என்ன சினிமாவா அதில் கூட ஒரு லாஜிக் இருக்கும் பேயை யாரும் விரும்ப மாட்டார்கள் ” என்று சொல்ல அவனோ இன்னும் அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் இதைச் சினிமா என்று சொல்லவில்லை தேவ்…  வாழ்க்கை தான்,  நிஜமான வாழ்க்கை தான்… பட் ஐ லவ் யூ தேவான்ஷி ஐலவ்யூ சோ மச்” என்றவன் அவளை நெருங்கி ஹஸ்கி வாய்சில் .,”வித் யுவர் பர்மிஸன்…!!” என்றவன் அவளது இதழ்களைக் கொய்திருந்தான்.

திமிறியவளை நகர விடாமல் பிடித்தவனோ சிறை செய்த இதழ்களை விடுதலை செய்ய மறுத்து தனக்குள் பூட்டிக் கொண்டான்.

தன்னை மறந்து இதழொற்றலில் லயித்தவளை, முகம் விகசிக்கப் பார்த்தபடி , முத்தமிட்டுக் கொண்டிருந்த ஜீவனுக்கு விலகிட மனமில்லை என்றாலும் விலகினான்.

தேவான்ஷி தன்னிலை அடைந்தவள் அவனை அடித்திட, நெஞ்சோடு இறுக்கி அணைத்தபடியே .,”இப்போ சொல்லு மேரேஜ் பண்ணிக்கிறியா…??”

“உங்களுக்குப் புரியுதா, இல்லையா , நான் ஆவி ” மீண்டும் பாடம் எடுத்தவளின் செங்காந்தள் இதழ் மீது விரல் வைத்து.,” ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதே…  நான் முத்தமிடும் போது குலைந்து போனாயே இது தான் ஆவியா…  இப்போது கூட உண்மையைச் சொல்ல மாட்ட அப்படித் தானே…!!  நீ ஆவியும் இல்லை இறக்கவும் இல்லை நான் சொல்வது சரி தானே…!!  ஏன் இந்த ஆக்டிங் …? எதுக்காக இத்தனை நாளும் ஏமாத்தின  …?”என்று கேட்க அவளோ கொஞ்சம் பயந்து தான் போனாள்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்…? எப்படிக் கண்டுபிடிச்சீங்க…?”  ஆர்வம் தாளாமல் கேட்க

“அதை நான் . அப்புறம் சொல்றேன் உன்னோடு யார் கூட்டு…? இன்னொரு  ஆள் துணை இல்லாமல் நீ இதைச் செய்திருக்க முடியாது சொல்லு…? நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியும், பட் எல்லாம் உன் வாயில் இருந்து வரவழைக்க விரும்புகிறேன் நான்”  என்றதும் உண்மையைக் கூறி விட்டாள்.

ஜீவனின் முகத்தில் பல உணர்வுகள் வந்து போக அவளால் எதையும் கண்டு பிடிக்க இயலவில்லை .

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அப்பாடா கடைசிலே உண்மையே ஒத்துகிட்டா🤣🤣🤣🤣 அடுத்து ஜேபி ரைட்டு ஸ்டார்ட் தான்🤪🤪🤪🤪

    2. இந்தாப்பா ஜேபி…ஆரம்பத்துல இராந்தே அவள் ஆவி இல்லை…ஆவி இல்லனு தான் நாங்க சொல்றோம்…உனக்கு இன்னைக்கு தான் பல்ப்பு எரிஞ்சிருக்கு…
      இருந்தாலும் ஆவியா இல்லையானு தெரிஞ்சுக்க கிஸ் அடிச்சதெல்லாம் கொஞ்சம் ஓவர்.தான்பா…
      இதால என்ன சந்தேகம் இவளோட அந்த கூட்டுக்களவானி வேதாவா தான் இருக்கும்…
      ஏய் நர்த்தனா தப்பும் பண்ணிட்டு என்ன இந்த குதி குதிக்குற…ஆளும் மூஞ்சியும்…அதென்ன ரமேஷ்…இவ்வளவு நாள் அண்ணன் உழைபீபுல நல்லா சொகுசா வாழ்ந்திட்டு உன் பொண்டாட்டி பேச்ச எல்லாம் கேட்டுட்டு தானே இருந்த…உன் அண்ணன் உன் பொண்டாட்டி பண்ற ரகளைய எல்லாம் தாங்கினான்னா அவனுக்கு வார பொண்டாட்டியும்.உங்கள பொறுத்துக்கிட்டு உன் பொண்டாட்டிய சகிச்சுக்கிட்டு வாழனுமா…வெக்கமா இல்ல…முதல்ல உன் பொண்டாட்டிய திருத்த பாரு…அப்புறம் வந்து நியாயம் கேளு….