Loading

பகுதி -14

மந்திரவாதியின் அறையில், எலும்புக்கூடுகள்  மின் விசிறியில் தொங்குவது போல தோற்றமளிக்க, பயந்த மந்திரவாதி யார் என்னவென்று கத்தவும், அவர் மீது ரத்தம் பீச்சி அடித்தது.  மந்திரவாதி மயங்கி விழுந்து விட்டார்.

“என்ன முத்தரசா பயந்துட்டியா… நான் தானே பயப்படாத…!!  நீ தானே சொன்ன, உடம்பில் ஒட்டுத்துணி இல்லாம என்னைப் பார்க்க ஆசை என்று, இதோப்பாரு ! உடம்பு ல ஒண்ணுமே இல்லை , வெறும் எலும்பு மட்டும் தான் இருக்கு… ரசி,  என்னைப் பார்த்து ரசி, நான் பாரு அன்னைக்கு மாதிரி அழாமல் சிரிக்கிறேன்,  என் பற்கள் எல்லாம் வெளியே தெரியுது ” என்று அந்த மந்திரவாதியின் முன்பு ஒரு எலும்புக் கூடு வட்டமிட்டபடியே ஆடியது ,மந்திரவாதியை சுரண்டி எழுப்பியது. 

கண் விழித்த மந்திரவாதி,  எலும்புக்கூட்டை பார்த்து “ஆஆஆ…!!” என்று கத்த

“பயப்படாத நான் தான் தேவான்ஷி,   ப்ப்ச் நீ நரபலி கொடுக்க நினைச்ச தேவான்ஷி,  என்னை முழுசா வேணும் னு கேட்டியே…!! அதான் தர வந்திருக்கேன்… ரொம்ப நாள் கழிச்சு சமாதியில் இருந்து எழுந்தேனா அதான் சதை எல்லாம் காணாமல் போச்சு, நீ தான் மந்திரவாதி ஆச்சே மறுபடியும் முழு உடம்பா மாத்திடு” என்று சொல்ல

“ஏய்…! நீ யாரு..? தேவான்ஷி இல்ல நீ .,எனக்கு நல்லாத் தெரியும். நீ யாரு… ?” முத்தரசன் பயத்தில் அரற்றினார்.

“அட எலும்பு கூடா இருக்கிறதால உனக்கு அடையாளம் தெரியலை பா,  நீ மட்டும் மந்திரம் போட்டு என் உடம்பை பழையபடி மாத்தேன் நான் யார் என்னனு தெரிஞ்சுடும்…  நீ தான் மந்திரம் போட்டு விபூதி அப்புறம் எலுமிச்சை பழம் எல்லாம் வரவழைப்பியே, லேட்டஸ்டா ஏதோ பிள்ளையார் சிலை எல்லாம் எடுக்கப் போறேனு கேள்வி பட்டேன் , ஆமா வாயில் இருந்து வாந்தி தானே வரும் , நீ எப்படி சாமியை வரவழைக்கிற… ?? அப்போ பொய் சொல்லி ஏமாத்துறியா…!!”  என்று சொல்லும் போதே சுவரில் இரண்டு கண்கள் ரத்த சிவப்பில் உருண்டு மிரட்டியது.

“ஏய் எனக்கு நல்லாத் தெரியும் நீ அவ இல்ல இது ஏதோ ஏமாத்து வேலை நான் நம்ப மாட்டேன் “என்று கத்தினார்.

“நீ நம்ப மாட்டியா…!! அப்போ நான் உன்னைக் கொலை பண்ணிடுறேன் , அப்புறமா ஆவியா வந்து நம்பு சரியா …!!”என்று சொன்னதும் மந்திரவாதியின் கழுத்தை ஏதோ நெரிப்பது போல இருந்தது , சுவற்றில் உள்ள விழிகள் இரண்டும் மேலும் சிவந்து போனது.

கண்கள் மேலே நிலை குத்தி மயங்கியிருந்தார் அவர்.

மீண்டும் அவர் கண் விழிக்கையில் தனது படுக்கையில் கிடந்தார். எதிரே அவரது சீடன் நின்றிருந்தான் பரிதாபமாக பார்த்தபடி.

“டேய் என் மேல ரத்தம்,  எலும்பு கூடு..!!” என்று அரற்றிட, அவனோ இலகுவாக,” சாமி உங்களுக்கு ஏதோ பேய் பிடிச்சிடுச்சுனு நினைக்கிறேன் , திடீர் திடீர் னு மயக்கம் போட்டு கீழே கிடக்குறீங்க…  இப்ப இப்படி உளருறீங்க என்ன ஆச்சு உங்களுக்கு ஏதாவது நல்ல சாமியார் கிட்ட போய் மந்திரிக்கலாமா …??”என்று கேட்டதும் பயங்கர கோபம் ஏறியது அவருக்கு .

“வாயை மூடிட்டு வெளியே போடா…!!  எவனோ என் கிட்ட விளையாடுறான் அவன் மட்டும் கையில் கிடைச்சான் அடுத்த நரபலி அவன் தான்… இந்த முத்தரசன் யார் னு அவனுகளுக்கு தெரியலை” என்று கூறியபடியே பல்லைக் கடித்தார்.

சீடன் வந்த சுவடு தெரியாமல் நடையைக் கட்டினான்.

“யாரு யாரு…?? என்னையே ஏமாத்திட்டு இருக்கிறது…!!  கையில கிடைச்சான் செத்தான் அவன்… இல்ல இது சரி வராது…  நாம இதுல கவனம் சிதற விடக் கூடாது” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே அடுத்த திட்டத்தை செயல்படுத்த துவங்கினார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 கதிர்வேலன் மணிமேகலை தம்பதியர்,   ஜீவனின் வீட்டிற்கு மறு வீட்டிற்கு வந்த கையோடு கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு கிளம்பினர். 

கதிர்வேலனின் நண்பன் , படகு வீட்டிற்கு  சென்று அவர்களை தங்க வைத்து விட்டான்.

“ஹாப்பி மேரிட் லைஃப் மச்சான்  உங்களுக்கும் சிஸ்டர்,  ஏதாவது தேவை என்றால் ஒரு  ஃபோன் பண்ணுங்க, வந்திடுறேன் அதுவரை உங்களை ஒரு ஈ குருவி கூட தொந்தரவு செய்யாது… ” என்க

“தாங்க்ஸ் டா…!!” என்ற கதிரோ அவனை அணைத்து விடுவித்து விடை கொடுத்தார்.

மணிமேகலை படகு வீட்டை சுற்றி பார்த்து விட்டு,” நைஸ் கதிர் அழகா இருக்கு இல்ல…  சென்னையில் இருந்த சூடு எல்லாம் போன மாதிரி இருக்கு” என்றார் சிலாகிப்பாக.

“பட் எனக்கு சூடு குறையவே இல்லை மேகா …!!”என்று கண்ணடித்துக் கூறிய  கதிர்வேலனை, பொய்க் கோபம் கொண்டு முறைத்தார் மணிமேகலை.

“ஹேய் சும்மா …!!”என்றவரோ தன்னவளை தன் இரும்புகரம் கொண்டு அணைத்திருக்க  தேனிலவிற்கான அச்சாரம் அங்கே போடப்பட்டு விட்டது. 

இங்கே கதிர்வேலனின் வீட்டில் நர்த்தனா,  தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்து இருந்தாள். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அனுகீர்த்திகா பக்கத்து வீட்டு பெண்மணி பேசியதிலிருந்து அறையை விட்டு வெளியே வரவில்லை. 

ஜீவனிடம் கூறி விட்டு இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

“அனு… ஏன் உள்ளேயே இருக்க …??”சட்டென்று கேட்ட தேவாவின் குரலில் அதிர்ந்து போனவள்,” அக்கா “என்று அவளை இடையோடு கட்டிக் கொண்டு விம்மினாள்.

“ப்ப்ச் விடு டா இவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காத…!!” சமாதானம் செய்தாள் தேவா.

“இல்ல அக்கா இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியலை,  ஆனால் இப்படி இவங்க எல்லாம் பேசக் காரணம் நம்ம அப்பா அம்மா னு நினைக்கும் போது தான் வேதனையா இருக்குக்கா , பெத்தப் பொண்ணுகளை கொல்ற அளவுக்கு அப்படி என்னக்கா வன்மம் நம்ம மேல… ? நாம அப்படி என்ன செய்தோம் அவங்களுக்கு…  என்னைக்காவது அவங்களை எதிர்த்து பேசி இருக்கோமா…?, இல்லை இது தான் வேணும்னு அடம் பிடிச்சு இருக்கோமா…  ? அவங்களும் சராசரி அப்பா அம்மா போலவா இருந்தாங்க எவ்வளவு பாசம் காட்டினாங்க எவ்வளவு அன்பு இருந்தது…”  என்று ஆற்றாமையுடன் கேட்டாள் அனு.

“அவங்க அன்பு ,பாசம் எல்லாம் பணம் என்ற மாயையில் மறைந்து போயிடுச்சுடா,  நாமளே போன பிறகு அந்த பணத்தை வைத்து என்ன செய்ய போறாங்கனு தான் எனக்குத் தெரியலை…  பணம் தான் முக்கியம் அவங்களுக்கு அது தான் தேவை சுகபோக வாழ்க்கை வாழனும் என்றால் நம்மளை பெத்துக்காமலேயே இந்த வேலையை செய்திருக்கலாமே !!கடவுளோட விளையாட்டு பார்த்தியா  ஒரு குழந்தை நம்ம வீட்டில் தவழாதானு ஏங்குகிறவங்களுக்கு அந்த பாக்கியத்தை அவர் தர்றதே இல்லை,  ஆனா இது போல கொலை பண்றவங்களுக்கும் , இதுவே போதும் னு சொல்றவங்களுக்கும் தான் அள்ளி அள்ளி கொடுக்கிறார் … விடு இதை பேசி எதுவும் ஆகப் போறதில்லை “என்றபடி அனுவின் தலையை வருடி விட்டாள்.

வேதா அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன், உள்ளே நுழைந்தான்.

“அனு நீ நாளையில் இருந்து ஷோரூம் வந்திடு , மறுத்து பேச எதுவும் இல்லை,  மறுத்து பேசவும் கூடாது.. புரியுதா…!!,  தேவ் ஒரு நிமிஷம் ..”என்றவன் தேவான்ஷியை மட்டும் வெளியே அழைத்துச் சென்றான். 

அனு இங்கே முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த சைனா பீஸ் சொன்னா நான் கேட்கனுமா…?? முடியாது நெவர் நான் இங்கிருந்து கிளம்புறேன் அவ்வளவு தான்” என தன்னுடனேயே பேசியவளை தலையில் தட்டினான் .

“டேய் சைனா பீஸ்…!!”என்று முறைக்க அவனோ .,”உனக்குள்ளேயே மென்டல் மாதிரி பேசிட்டு இருக்காம அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாரு இங்கிருந்து கிளம்புறேன் னு சொல்லி லூசுத்தனமா ஏதாவது யோசிக்காதே வீண் விபரீதமாக ஏதாவது ஆகிட்டா அவ்வளவு தான்… !!” என்றவன் பேச்சை அவள் கவனமாக கேட்டு இருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது… வெகு விரைவில்  அவளது வாழ்வில் விளையாட ஆவல் கொண்டிருந்தது. 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இளங்கோவன்,  விஜயா இருவரும் மந்திரவாதி முன்பாக பயபக்தியுடன் அமர்ந்திருந்தனர்.

“சாமி எங்களை மன்னிச்சிடுங்க… எங்களுக்கே தெரியாமல் தப்பு நடந்திடுச்சு அனு இப்படி பண்ணுவான்னு நாங்க எதிர்பார்க்கலை  …”என்று மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டார் இளங்கோவன்..

“அவளுக்கு உண்மை தெரியும்படி நீங்க நடந்துகிட்டிங்களா…? இல்லை வேறு யார் மூலமாகவாவது தெரிய வந்ததா…?” என்று மந்திரவாதி கேட்டதும்.,” இரண்டுமே இல்லை” என்று மறுத்தனர்.

“அப்புறம் என்ன காரணம்…? திடீரென அவ ஓடிப் போக வாய்ப்பே இல்லை ஏதாவது நடந்திருக்கனும் ஒரு வேளை காதல் கீதல் னு எதாவது…”என்று நிறுத்தினார் மந்திரவாதி.

இளங்கோவனின் நினைவில் அனு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது வந்து போனது.

“ஒரு வேளை இருக்கலாம் சாமி , தேவான்ஷி மாதிரி இவ உங்க விருப்பம் னு  சொல்லலை கல்யாணம் வேண்டாம் னு சொன்னா…!!  நான் விஷம் குடிச்சிடுவேன் னு மிரட்டி தான் ஒத்துக்க வச்சேன்…  அதனால் தான் சம்மதிச்சா… நான் கூட அக்கா இறந்து போனதால தான் மறுக்கிறானு நினைச்சேன்” என்றார்.

“இருக்கலாம்…  சரி விடுங்க பார்த்துக்கலாம், போலீஸ் ஒரு பக்கம் தேடட்டும் ,நாம ஒரு பக்கம் தேடுவோம்…”  என்றவரோ.,” நான் அடுத்து ஒரு யாகம் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். அது முடிஞ்சு அடுத்து உங்க காரியம் தான் நடக்கப் போகுது… அதுக்குள்ள அனு கிடைக்கணும் நீ என்ன பண்ற..? உங்க பேங்க்கில் இப்போதைக்கு ஒரு ஐம்பது கோடி மட்டும் ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டை மாத்தி தர்ற …”என்றதும் இளங்கோவன் திடுக்கிட்டார்.

“சாமி ஒரே தவணையில் மாற்ற முடியாது , கவர்மென்ட் ல கண்டு பிடிச்சுடுவாங்க இந்த பணத்தை எல்லாம் நாங்க முதல்லயே அக்கவுண்ட்ல போட்டதா கணக்கு காட்ட வேண்டும் , மார்ச் என்ட் செக்கிங் போது இதை ஈசியா உள்ளே கொண்டு போயிடுவேன் , என் டேபிள் வந்து தான் மூவ் ஆகும் அதனால நானே கொஞ்ச கொஞ்சமா மாத்தி தரேன்,  ஒரே நேரத்தில் இல்லாமல் ஒவ்வொரு முறையும் மாற்றி தருவோம் இப்போதைக்கு உங்களுக்கு அஞ்சு கோடி ரெடி பண்ணி தரேன்” என்றார் இளங்கோவன்.

‘இது அவ்வளவு எளிதில் முடியும் காரியம் அல்ல ‘என்பதை உணர்ந்தாலும் ரிஸ்க் எடுக்கத் துணிந்திருந்தார் இளங்கோவன்.

மந்திரவாதியோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான்.

‘இவங்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் காரியமே கெட்டுடும் இப்போது அவசரமாக தேவைப் படுவதற்கு யாரைப் பிடிப்பது’ என்று யோசிக்க பளிச்சென்று மனதில் வந்து நின்றனர் ஜேபியும் நர்த்தனாவும்.

‘நர்த்தனாவிடம் அதிகம் எதிர்பார்க்க இயலாது என்றாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடுங்கிடலாம்’ என தனக்கு தானே ஒரு கணக்கு போட்டுக் கொண்டார்.

நர்த்தனாவிடம் ஐந்து லட்சம் ரூபாய் உடனே ஏற்பாடு செய்தால் மணிமேகலை கதிர்வேலனை பிரிக்க உதவி செய்வதாக கூறினார்.

நர்த்தனாவிற்கு விழிகள் சாசர் போல விரிந்தாலும் , மனதில் ஐந்து லட்சம் எப்படி ஏற்பாடு செய்வது என்று குழம்பி இருந்தாள்.

“சாமி ஒரு  ஒரு வாரம் டைம் குடுத்திங்கனா நான் பணத்திற்கு ஏற்பாடு செய்து விடுவேன்” என்று பணிவாக கூற அவரோ,” இல்லை மா உடனே நான் யாகத்தை துவங்கினால் தான் கை மேல் பலன் கிடைக்கும்” என்று சொல்ல,  நர்த்தனா ‘என்ன செய்வது…?’ என்று யோசித்தவள் ,”சரிங்க சாமி நான் ஏற்பாடு பண்றேன் “என்றாள்.

சாமியாரின் முகம் மலர்ந்தது.

அடுத்து ஜீவனுக்கு அழைத்தார்.

“ஹலோ சொல்லுங்க சாமி நானே உங்க கிட்ட பேசணும் னு நினைத்தேன் பணம் எல்லாம் தயாராக இருக்கிறது சாமி நீங்க யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்க “என்று சொல்ல ‘தானாக வரும் பணத்தை ஏன் விடுவானேன் …!!’என்றெண்ணி பணத்தை எடுத்து வரும்படி பணித்தார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜீவன் சாமியாரிடம் கூறியபடியே பணத்தை எல்லாம் எடுத்து பெட்டியில் வைத்தான்.

“ஜீவ் என்ன பண்ற…?  எதுக்கு இப்போ இவ்வளவு பணம்…? எங்கே எடுத்துட்டுப் போற…? நம்ம ஷோரூம் ல இருக்கிறவங்களுக்கு சம்பளம் போட்டுட்டோமே …!!அப்புறம் என்ன ஏதாவது புது டீலிங் கிடைச்சிருக்கா…? ” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியவனை திரும்பி பார்த்தவன் .,”இது என் பர்ஸனல் யூஸ்க்கு “என்றான் விட்டேறியாக.

“ஓஓஓ சரி டா…  என்னைத் தாண்டி ஐ மீன் எனக்குத் தெரியாமல் உனக்கு சில சொந்த விஷயம் இருக்கும் என்பதை மறந்து போயிட்டேன் ஒரு வேளை இத்தனை நாளா அது மாதிரி எதுவும் இருந்தது இல்லையோ  இப்ப தான் ஸ்டார்ட் ஆகி இருக்கும் போல புதுசா பர்ஸனல் னு ஒண்ணு” என்று பர்ஸனல் என்ற வார்த்தையில் சற்று அதிகமாகவே அழுத்தம் கொடுத்தான் வேதாந்த்.

“வேதா ப்ளீஸ் நமக்குள்ள அப்படி எதுவும் கிடையாது, பட் இது வேற, கூடிய விரைவில் அதுவும் உனக்குத் தெரிய வரும் , சரியா இப்போதைக்கு எதுவும் சொல்லாதே ப்ளீஸ்… ” என்றவன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் .

“இவனை எப்படியாவது அந்த மந்திரவாதியை சந்திக்க விடாம பண்ணனுமே…! இப்படியே மொத்த சொத்தும் அந்த ஃப்ராடுகாரனிடம் போயிடுமே,  ம்ம்ம்ஹ்ம்… என்ன செய்யலாம்… ஓ மை காட் ஏதாவது வழி காட்டு …”என்று வாய் விட்டு கத்திட  அனு அங்கே வந்தாள்.

“நான் வேணுன்னா வழி காட்டவா…??” பதவிசாக கேட்டு வைத்தாள். 

“நீயா…?” வேதா சந்தேகமாக கேட்டான்.

“ம்ம்ம்ஹ்ம்…!!”

“நீ அவ்வளவு நல்லவளா…!!”

“அட நம்புங்க சார்… வாங்க வழி காட்டுறேன் ” பொறுப்பாக அவனது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றாள் அனு.

‘எங்கே அழைச்சுட்டுப் போறா…??’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே  மொட்டை மாடிக்கு அழைத்து சென்றாள்.

“இங்க என்ன அனு…??”

“ம்ம்ம் இப்படியே இங்கேயே குதிச்சிடு அதான் உனக்கான வழி…” என்றாள் சிரிப்புடன்.

“அடியேய் என்னை சாகவா சொல்ற…உன்னை “என்று துரத்த, அவளோ” நீ தானே வழி கேட்ட அதான் காட்டினேன்…” என்றாள்.

“லூசு அனு இங்கே வா , விஷயம் என்னனு தெரியாம ஏதாவது பேசிட்டு” என்றவன் ஜீவனைப் பற்றி சுருக்கமாக கூறி முடித்தான்.

மொட்டை மாடியின் சுவற்றில் சாய்ந்த வண்ணம் நின்றவள் “இவ்வளவு நடந்து இருக்கா …??”

“ஆமா… இந்த ஜீவனால் தான் உங்க அக்கா இப்படி இங்க வந்தா … நல்லா தான் இருந்தான்,  இப்போ என்ன டான்னா முழுசா அந்த மந்திரவாதியை நம்பி இப்படி ஒரு வேலை பண்ணிட்டு இருக்கான் என்னாலே எதுவும் செய்ய முடியலை …”என்று சொல்ல

“ப்ரெண்டு னா அவ்வளவு பிடிக்குமோ…??”அனு கேட்டதும் மெலிதாக புன்னகைத்தான் வேதா.

“ஃப்ரெண்டா,  இவனை மாதிரி  ஃப்ரெண்ட் எல்லாம் தவம் செய்தாலும் கிடைக்க மாட்டாங்க,  ஜீவன் சின்ன வயசா இருக்கும் போது ஹாஸ்டலில் தான் படிச்சான் அவன் பக்கத்து ப்ளேஸ் நான்.. அப்போ ஸ்கூல் ல எல்லாம் ஒவ்வொரு ஆளுக்கு ஒரு ரூம் எல்லாம் தர மாட்டாங்க, ஒரு  ஹால் மாதிரி இருக்கும் அதுல பத்து பதினைந்து பெட் இருக்கும்,  அது பக்கத்திலேயே எங்க திங்க்ஸ் வைக்க ஒரு இரும்பு டேபிள் இருக்கும் ,அவ்வளவு தான் எங்க ஹாஸ்டல்,  நானும், ஜீவனும் பக்கத்தில் இருப்போம். அவன் அப்பா நிறைய ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்து தருவார். அவனோட டேபிளில் இடமே பத்தாது அவ்வளவு இருக்கும் எல்லாத்திலையும் பாதி என் கிட்ட தந்திடுவான் நான் இடமில்லாமல் தருவதாக நினைச்சிருந்தேன் ஆனா அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது எனக்காகவும் சேர்த்து வாங்கிட்டு வர சொல்லி இருக்கான்னு…” என்றான்.

“ஏன் உன் வீட்டில் வாங்கித் தர மாட்டாங்களா…??”

“அப்படி யாராவது இருந்தால் தானே வாங்கித் தர்றதுக்கு…?, எனக்கு யாரும் கிடையாது. பாட்டி இருந்தாங்க,  அவங்களும் போன பிறகு நான்  ஹாஸ்டல் தான் பெரியப்பா என் கிட்ட பிடுங்கின சொத்துக்கு ஈடா படிப்பு கொடுத்தார் அது தான்  ஹாஸ்டல் வாழ்க்கை” என்றதும் அனு அவனை பரிதாபமாக பார்த்தாள்.

“அய்யே! இப்படி பார்க்காதே,  இந்த மாதிரி பார்வை எல்லாம் பார்க்கிறாங்கனு தான் சொந்த ஊருக்கே போறதில்லை “என்றபடி மேலும் பேசினான்.

“அப்படி எல்லாம் என்னைப் பார்த்துக்கிட்டு எனக்கு ஒரு அண்ணனா, ஃப்ரெண்டா ,அப்பாவா, அம்மாவா ,ஏன் எனக்கு எல்லாமுமா ,இருக்கிறவனை இப்படி படுகுழியில் விழ அனுமதிக்க முடியுமா அதனால் தான் இவ்வளவு போராட்டமும் “என்று சுருக்கமாக முடித்தான்.

“ம்ம்ம்ஹ்ம் நல்ல தோழமை தான். இந்த தோழமைக்காக எதாவது செய்யணுமே…!! சரி ஓகே உனக்கு எப்போ எந்த ஹெல்ப் தேவைப் பட்டாலும் என் கிட்ட தயங்காம கேளு நான் செய்றேன் “என்க

வேதாந்த் சிரித்தபடியே அங்கிருந்து சென்றான்.

“டேய் சைனா பீஸ் என்ன ஒண்ணுமே சொல்லாமல் போற… !!”கத்தியபடி கீழே இறங்கி வந்தாள்.

“உன் கிட்ட பேசிட்டு இருந்தேன் அவன் மொத்த பணத்தையும் அந்த சாமியார் கிட்ட தந்திடுவான்” என்று கிளம்பினான்.

இங்கே ஜீவன் மந்திரவாதியிடம் பணப்பெட்டியை கொடுத்து விட்டு தேவான்ஷி தன்னுடன் வந்ததுப் பற்றி கூறி அடுத்த முறை அவளை இங்கே கொண்டு வருவதாக கூறினான்.

அதே சமயத்தில் கதிர்வேலனின் தந்தையிடம் கதிர்வேலன் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை சத்தமில்லாமல் களவாடி இருந்தாள் நர்த்தனா.

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Janu Croos

   ஜேபி….ஏன்டா இபீபடி பண்ற…அந்த சாமியார் நாய நம்பி இவ்வளவு பணத்தை குடுக்குறியே…அவனே ஒரு மொள்ளமாறி….இவ்வளவு பெரிய பிஸ்னஸ் பண்ற உனக்கு அந்த மொள்ளமாறிய பாத்தாலே பொய் சொல்றான்னு தெரியலயா…

   கந்த நர்த்தனா வேறபணத்தௌ எடுத்து குடுக்க போகுது….இந்த சாமியார் இவ்வளவு பணத்தையும் வச்சிட்டு என்ன பண்ண போறான்….பெருச்சாளிப்பய….

  2. Archana

   இந்த மந்திரவாதியே ஒன்னும் பண்ண முடியாதா மக்களோட இயலாமை, பொறாமையே பயண்படுத்திட்டு இப்படி பாடுபடுத்துறான்😏😏😏 தேவா வழிலே தான் நல்லா இந்த ஆளே பயமுறுத்தனும்.