Loading

பகுதி -13

கதிர்வேலனிடம் மறுவீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினான் ஜீவன்.

அதற்குள் சாமியாரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சாமி சொல்லுங்க சாமி…!!”

“பணம் தயார் தானே ?” என்று கேட்டதும், ஜீவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு .,”இல்ல சாமி அத்தையோட கல்யாணத்தில் செலவு ஆகிடுச்சு. உங்களுக்கு சீக்கிரம் நான் ஏற்பாடு செய்றேன் சாமி நீங்க பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ங்க” என்று கேட்டுக் கொண்டான்.

“சரி” என்று அவரும் சம்மதிக்க வண்டியை எடுத்தவன், மனதில் ‘தேவாவையும் தன்னையும் இணைத்து நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டே சென்றான்.

முகத்தில் புன்னகை அரும்பியது. தான் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் படிப்படியாக யோசித்து ஒரு அட்டவணையை தனக்குத் தானே தயாரித்து கொண்டான்.

“த ஜேபி ஆக்ஷன், டிராமா ஸ்டார்ட் “மெலிதாய் புன்னகைத்தான்.

ஷோரூமிற்கு சென்றவன் ,தனது வேலையில் கவனம் செலுத்திட ,கவலை தோய்ந்த முகத்துடன் வந்தமர்ந்தான் வேதா.

“என்ன வேதா டல்லா இருக்க? ஏதாவது பிரச்சினையா…??”

“ஆமா டா அதான் எப்படி சொல்றதுனு தெரியலை…” மோவாயை தட்டியபடி பேசினான் வேதா.

 ஜீவன், “விஷயத்தை சொல்லு ,அப்புறம் அதைப் பற்றி பேசலாம் “என்று சொல்ல, அவனோ மெதுவாக வீட்டில் நடந்த சம்பவத்தை விவரித்தான்.

“பக்கத்து வீட்டு துரை அங்கிள்  வொய்ஃப் அனுவை அசிங்கமா பேசிட்டாங்க டா…!!” என்று வேதா சொல்ல ஜீவனின் முகம் இறுகியது 

அதனை வெளிக்காட்டாமல் “ஏன்… ?” என்றான் அழுத்தமாக

“அது ரெண்டு ஆம்பளைப் பசங்க இருக்க வீட்டில் வந்து இருக்கியே ! , நீ யார்? என்னனு கேட்டு இருக்காங்க. அவ உனக்கு ஃப்ரெண்டு னு சொல்லி வச்சிருக்கா…அந்த அம்மா கோடு போட்டா ரோடே போட்டு திறப்பு விழா பண்ணும் இதை லேசில் விடுமா… ! அவளைக் கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டு வச்சிருக்கு…  அவங்க தான் குடும்பம் நடத்துறாங்களாம், நாம கூத்தடிக்கிறோமாம் ! திமிர் தானே ! அந்த பொம்பளைக்கு ,வந்த கோவத்திற்கு அதை நாலு வாங்கி இருப்பேன்,  நீ அழைச்சுட்டு வந்த அந்த மகாராணி போக வேண்டாம்னு தடுத்துட்டாங்க…  எனக்கு செம கோபம் அவளை நாலு வாங்கு வாங்கிட்டு வந்தேன்” என்றான் ஒரே மூச்சாக.

 

“அடப்பாவி பாவம் டா அந்த பொண்ணு, ஏற்கனவே அப்பா அம்மா அப்படி பண்ணி இருக்காங்க,  இப்போ இவங்க வேற அசிங்கப்படுத்தி இருக்காங்க,  இதுல நீ வேற திட்டி இருக்க ! , ஆமா அந்த நேரத்தில் தேவா எங்கேப் போனா …? “என்று ஜீவன்  கேட்க

 

வேதா யோசித்தபடி,” ஆமா டா காலையில் மட்டும் தான் அவளைப் பார்த்தேன் அதுக்கப்புறம் நான் பார்க்கவே இல்லை டா ! ” என்றான்.

 

“முதல்ல அவ ஆவி தானா னு எனக்கு டவுட். அது மட்டுமில்லாமல் அடிக்கடி காணாமல் போயிடுறா…  அப்புறம் நான் கேள்விப் பட்ட வரை ஆவி, பேய் எல்லாம் இப்படி பிகேவ் பண்ணி நான் பார்க்கலை யாரோ இவளை வச்சு என் கிட்ட விளையாடுறாங்களோன்னு எனக்கு சந்தேகம் இருக்கு” என்றான் வேதாவைப் பார்த்தபடி.

 

“ஏன் டா ? நடு இரவில் அவ சமாதியில் நீ பூஜை பண்ணி எழுப்பி விட்டுட்டு இப்போ யாரோ விளையாடுறாங்கனு சொல்ற… “முறைத்துப் பார்த்தான் வேதாந்த்.

“இல்லடா எனக்கு சந்தேகமா தான் இருக்கு….”  என்று சொல்ல வேதா அமைதியாக அமர்ந்திருந்தான்.

“சரி விடு யார் னு நானே கண்டு பிடிக்கிறேன் ” என்று விட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இளங்கோவன் காவல்துறையில் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார். அது தொடர்பாக விசாரிக்க வந்திருந்தனர் காவல் துறையினர்.

எல்லா தகவல்களையும் கொடுக்க , தனது முதல் மகள் திருமண ஏற்பாட்டின் போது அவள் விபத்தில் மரணம் அடைந்து விட்டது பற்றி கூற, தற்போது தான் இன்ஸ்பெக்டருக்கு சந்தேக விதை மனதில் விழுந்தது .

“உங்க முதல் மகளும்  மேரேஜ் அப்போ தான் இறந்தாங்களா…??” என கேட்டார் இன்ஸ்பெக்டர். 

“சார் நீங்க ஏன் கேட்குறீங்க னு புரியுது ,  பட் என் பொண்ணு தேவான்ஷிக்கு நடந்தது விபத்து…  எங்களை சந்தேகப்படுறதை விட்டுட்டு, ப்ளீஸ் !  என் மகளை கண்டு பிடிக்கிற வழியைப் பாருங்க உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை நாங்க தர்றோம் “என்றார் இளங்கோவன் கோபமாக.

இன்ஸ்பெக்டர் யாரையோ அழைத்தவர், இளங்கோவன் கூறிய தகவல்கள் அனைத்தும் கூறி விட்டு  .,”இப்போ என்ன சார் செய்யலாம்.. .?” என்றார்.

எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ , இன்ஸ்பெக்டர் சரி என்று தலையாட்டினார்.

“ரைட்டர் ! நீங்க அவங்க சொன்னது எல்லாம் வாக்குமூலமா எழுதி அவங்க கையெழுத்து வாங்கிடுங்க…அப்புறம் நான் அனுவோட ரூம் செக் பண்ணனும் காட்டுங்க” என்று சொல்ல இளங்கோவன் காட்டினார்.

அறையை சுற்றி பார்த்தபடியே .,”உங்க முதல் பெண்ணும் இந்த ரூமில் தான் இருந்தாங்களா…??”என்று கேட்க விஜயா ஆம் என்றார்.

அறை பளிச்சென்று இருந்தது.

“உங்கப் பொண்ணு காணாமல் போன பிறகு ரூம் க்ளீன் பண்ணிங்களா ? ஏதாவது பொருள் இடம் மாத்தி வச்சீங்களா…??”

“இல்ல சார் அவ ரூம் எப்போதும் இப்படி சுத்தமாக தான் இருக்கும் காணமல் போகிறதுக்கு முதல் நாள் தான் எல்லாம் சுத்தம் பண்ணினா நான் இங்கிருந்த குப்பையை மட்டும் தான் எடுத்தேன்  …” என்றார் விஜயா.

“ஓகே உங்க மகளோட மொபைல் லேப்டாப் எல்லாம் கொடுங்க… ” கண்களை சுழற்றியபடி கேட்டார். 

“இதோ சார்…!!” என்று ஒரு பட்டன் வைத்த கைபேசியை கொடுத்தார் விஜயா. 

அதை திருப்பி திருப்பி பார்த்து விட்டு .,”இந்த காலத்தில் பட்டன் ஃபோன் வச்சிருந்தாங்களா உங்கப் பொண்ணு ! , யார் கிட்ட கதை விடுறீங்க… ??”என்று கேட்டபடி இன்ஸ்பெக்டர் முறைக்க விஜயாவோ  ,”இல்ல சார் எங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் அவசியத்திற்கு மட்டும் தான்  ஃபோன் வாங்கி கொடுத்தோம் பொழுது போக்கிற்கு அல்ல அது மட்டுமில்லாமல் எங்க வீட்டில் ஸ்டடி ரூமில் கம்ப்யூட்டர் இருக்கு அது படிப்புக்கு யூஸ் பண்ணிப்பாங்க” என்றதும் ஸ்டடி ரூமிற்கு சென்றார் இன்ஸ்பெக்டர்.

அங்கேயும் படிப்பு சம்பந்தமான விவரங்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை . அவர்களது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

“சார் சர்டிபிகேட் எல்லாம் எதுக்காக …?”என்று இளங்கோவன் கேட்க

“தேவைப்படும் சார்,  விசாரணை முடிந்து வாங்கிக்கங்க “என்று கூறி விட இளங்கோவனால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்டர்.

இளங்கோவன் அவசரமாக தனது கைபேசியை எடுத்து கொண்டு தனது அறைக்கு சென்று கதவை அடைத்தார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவரோ .,”விஜி சீக்கிரமா கிளம்பு சாமி நம்மளை வர சொல்லி இருக்கார் சென்னைக்கு போகனும் “என்று சொல்ல.,” ஏங்க போலீஸ் மறுபடியும் வந்து விசாரிக்கும் போது நாம இல்லை என்றால் தலைமறைவாகிட்டதா சொல்ல மாட்டாங்களா… ! நம்ம பிள்ளைகளே இல்லை இதற்கு மேலும் சாமியைப் பார்த்து என்ன செய்ய போகிறோம் ?நான் எங்கும் வர மாட்டேன் “என்றார் விஜயா கோபத்தை மறைத்தபடி.

“விஜயா உனக்கு ஆண் வாரிசு வேண்டுமா…? வேண்டாமா…? நம்ம வம்சம் செழிக்கணும் னா ஆம்பிளை பிள்ளை பிறந்தாக வேண்டும். அது மட்டுமில்லாமல் எனக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம் பற்றி உனக்கு தெரியலை அதான் இப்படி பேசுற இப்ப கூட உன் மகளால் தான் தள்ளிப் போகுது இல்லை என்றால் இந்த நிமிஷமே நாம பணக்காரங்க ஆகி இருக்கலாம் “என்று கண்கள் மின்ன கூறினார் இளங்கோவன்.

விஜயா வாயை மூடிக் கொண்டார். வாயைத் திறந்து பேசினால் நம் வாயில் இருந்து எதையாவது வாங்கி விடுவார் என்ற பயத்தில் எதுவும் பேசவில்லை அவர் .

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

முதல் நாள் கசங்கிய நைட்டியுடன் வெளியே வந்த நர்த்தனா, மறுநாள் பளிச்சென்று பக்தி பழமாக தழைய தழைய புடவை கட்டி வெளியே வந்திருந்தாள்.

அனைவருக்கும் காஃபி கலந்து கொடுத்த மணிமேகலை சிரித்து விட்டு.,” என்ன  இன்னைக்கு மேக்கப் தூக்கலா இருக்கு  குளிச்சியா பேபி..!!” என்று கிண்டல் அடித்தார்.

“ம்ம்க்கும் நாங்க எல்லாம் தினமும் இப்படி தான் இருப்போம் , இன்னைக்கு வெள்ளிக் கிழமை பல்லுல பச்சைத்தண்ணி படாது .அம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்து தான் எல்லாம் “என்றாள் முறுக்கி கொண்டு

“பல்லுல பச்சைத்தண்ணி படலைனா அப்போ எப்படி பல்லு விளக்கின…?, பல்லு விளக்காம போய், அம்மன் வாடை தாங்காமல் ஓடிடப் போறாங்க பேபி …!!” நக்கலடித்தார் மணிமேகலை.

“சாமியையே கிண்டல் பண்றியா ? நீ எல்லாம் …”என்றவளை இடை வெட்டிய மேகா

“பேபி நான் சாமியை கிண்டல் பண்ணலை .சாமி பேர் ல ஏமாத்துற என்று நர்த்தனா முகத்திற்கு நேரே விரலை நீட்டி வட்டம் போட்டு விட்டு ஆசாமிகளை தான் கிண்டல் பண்ணேன்” என்றவர் போய் விட நர்த்தனாவிற்கு கோபம் கோபமாய் வந்தது.

“இருடி உன்னை கவனிச்சுக்கிறேன்…!!” என்று பொருமியபடி சென்றாள்.

கதிர்வேலன்  பூஜை அறையில் இருந்து வெளியே வர, புன்னகை முகத்துடன் காஃபி டம்ளரை நீட்டினார்.

“தாங்க் யூ  மேகா… லஞ்ச் டைம் ரெடியா இருங்க நாம ரெண்டு பேரும் உங்க வீட்டிற்கு போயிட்டு வரலாம் “என்றார்.

“நாம மட்டும் தனியாகவா ?மாமாவையும் அழைச்சுட்டு போகலாமே…!!” மேகா ஆர்வம் மேலிட கேட்க

“போகலாம், பட் அவர் ஈவ்னிங் தான் வருவார் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறார் “என்றார்.

“ஓஓஓ சரி நான் வேதா கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுறேன் சரியா” என்று விட்டு ,”தென் நானும்  ஷோரூம் போகலாம் னு இருக்கேன்… ஜீவ் தனியா கஷ்டப்படுவான்… ” என்றார் மேகா

 

“ஒரு வாரம் கழித்து போகலாம் மேகா ஹனிமூன் ட்ரிப் முடிச்சுட்டு போகலாம் நானும் அதுக்கு பிறகு பிஸி ஆகிடுவேன்” என்றார்.

“ம்ம்ம் சரி… “என்று விட்டு சமையலை கவனிக்க சென்றார் மேகா.  தெளிந்த நீரோடையாய் அவர்களின் வாழ்க்கை பயணம் துவங்கி இருந்தது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே மந்திரவாதி தனது அறைக்குள் ஆங்காங்கே தேவான்ஷியைக் கண்டு அரண்டு போயிருந்தார். ஆனாலும் பயத்தை மறைத்தபடி தன் வேலைகளைத் துவங்கி இருந்தார்.

 

முத்தரசன் “என்ன பரந்தாமன்  எப்போ பெட்டி தரப் போறீங்க…?? எவ்வளவு விரைவில் தர்றீங்களோ அவ்வளவு விரைவாக உங்களுடைய பணம் எல்லாம் நூறு ரூபாய் ஐம்பது ரூபாய்   நோட்டுக்களாக மாற்றி தந்திடுவேன்…  என் கமிஷனையும் அந்த பேங்க் மேனேஜர் கேட்ட கமிஷனையும்,  எடுத்துட்டு மீதி உங்களுக்கு தான்! ,  பணம் எப்போது கிடைக்கும்…  ??” எனக் கேட்க 

 

“சாமி பணம் எல்லாம் ரெடியா தான் இருக்கு, ஆனா அந்த பேங்க் மேனேஜர் இவ்வளவு பணம் கேட்கிறானே அது இல்ல இப்ப தலைவலியா இருக்கு…குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து வச்ச பணம் சாமி லம்பா அவன் கிட்ட தூக்கி கொடுக்க சொல்றீங்களா…?” என்று கேட்க மந்திரவாதி சிரித்தபடியே .,”உண்மையைச் சொல் பரந்தாமா அது இருநூறு கோடி மட்டும் தானா என்ன…?” என்றார் கூர்மையாக பார்த்தபடி..

“சாமி உங்களுக்கு எப்படி தெரியும் .?”எச்சில் கூட்டி  விழுங்கினார் பரந்தாமன். 

“எனக்கு எல்லாம் தெரியும் அவன் நூறு கோடி கேட்கிறான்னா உன் கிட்ட எவ்வளவு இருக்கும் னு தெரியாமலா கேட்கிறான், இப்போ சொல்லு எவ்வளவு பணம்…??” என்றதும் அந்த அரசியல் கட்சி தலைவர் உண்மையைக் கூறி விட்டார்.

“சாமி மொத்தமா ஐநூறு கோடி இருக்கு சாமி… அதை தெரிஞ்சுட்டு தான் அந்த மேனேஜர் கேட்கிறான்” என்று சொன்னதும் மந்திரவாதி புன்னகைத்தபடியே “அவர் கேட்ட பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டு விடு, நீ கொடுத்த பணம் தானாகவே உன் கைக்கு வந்து சேரும் “என்றார்.

“சாமி அது மட்டும் வந்துட்டா உங்களுக்கு பத்து கோடி குடுத்திடுறேன். நீங்க ஆசிரமம் கட்டுறதுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நானே பண்ணி தரேன் “என்றார் முகம் மலர

“நல்லது பரந்தாமன் நீங்கள் போய் பணத்தை அனுப்பி வைங்க இன்னும் ஒரே வாரத்தில் பணம் மீண்டும் உங்க கையில் இருக்கும் “என்று நம்பிக்கை அளித்ததும் கிளம்பி விட்டார் பரந்தாமன்.

அன்றிரவு தன் அறைக்குள் உறங்கியவரின் முகத்தில் ஏதோ குச்சி உரசுவது போல இருக்க திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார் மந்திரவாதி .

மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியில் எலும்புக் கூடுகள் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தன. கண்களை கசக்கி விட்டுப் பார்க்க,  எலும்பு கூடுகள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இன்றி மின்விசிறி  சுழன்று கொண்டிருந்தது . உள்ளூர உதறல் எடுத்தது மந்திரவாதிக்கு

“டேய் எவன்டா அவன் என் கிட்ட விளையாடுறது ? , நானே பெரிய கேடி ,என் கிட்ட உன் விளையாட்டை காட்டுறியா …??”என்று கத்த , அறை முழுவதும் சலங்கை சத்தமும் அகோரமான சிரிப்பு சத்தமும் விடாமல் ஒலித்தது .

சற்று நேரத்தில் அவர் முகத்தில் ரத்தம் பீச்சி அடிக்க அதன் சூட்டில் மயங்கி விழுந்து விட்டார் மந்திரவாதி.

…. தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. தேவா உயிரோட இருக்கால இல்லையா😒😒😒😒 மந்திரவாதிக்கு எஃபெக்ட் கொடுக்கிறதே பார்த்தா ஆவி போல தான் தெரியுது😝😝😝

    2. ஜேபி…உனக்கு இந்த டவுட்டு இப்போ தானா வருது…எனக்கு ஆரம்பத்துல இருந்தே இருக்குப்பா…இவள் பண்ற எதுவுமே ஆவி பண்றது மாதிரி இல்ல…இவள் ஏதோ டகால்ட்டி வேலை பண்றாப்புல இருக்குப்பா…
      யோவ் இளங்கோ…ரெண்டு பொண்ணுங்கள வச்சிக்கிட்டு உனக்கு ஆண்வாரிசு கேக்குதா…
      அந்த ரெண்டு பொண்ணுங்கள நீ தங்கமா வளர்த்திருந்தா ஆம்பிளை புள்ளைய விட உன்ன தாங்கி இருங்கும்யா அந்த ரெண்டு பொண்ணுங்களும்….உன ஆசைக்காக பெத்த பொணீணுங்களயே படுகுழியில தள்ளிவிடப்பாத்தல நீயி…..இதுக்கு நீ அனுபவிப்பயா….