Loading

பகுதி -08

தேவான்ஷி ஜீவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்கவும், ஜீவன் அதிர்ந்து நின்றான்.

சற்று நேரத்தில் வாய் விட்டு பயந்துட்டிங்களா…!! சும்மா கிண்டல் பண்ணேன் அது சரி நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்காம இருக்கீங்க” என்று பேச்சை மாற்றினாள் . இவர்களை ஒரு உருவம் கண்காணித்துக் கொண்டிருந்தது.

“அடிப்பாவி கிண்டல் பண்ணியா நீ… நான் பயந்து போயிட்டேன் ஆனாலும் அஞ்சு நிமிஷத்தில் ஆவிக்கு ஆத்துக்காரனா ஆக்க பார்த்தியே  நீ நல்லா வருவ மா… !! ஏன் கல்யாணம் பண்ணிக்கலைனா  ப்ப்ச் அதெல்லாம் பெரிய கதை கொஞ்சம் சோகக்கதை வேற அது வேணாம் விடு “என்று இயல்பாய் பேசினான் ஜீவா.

“ஏன் லவ் ஃபெயிலியரா… ?”

“லவ் ஃபெயிலியரா நீ வேற ஏன் மா…!!, ஹான் அதுவும் தான் ஆனால் அந்த லவ் ஃபெயிலியர் பிறகு   நான் கல்யாணமே பண்ணக் கூடாது ன்னு இருந்தேன் அப்புறம் எப்படி  மறுபடியும் லவ் பண்ணுவேன்… ?  இது வேற விஷயம் சம்திங் பர்சனல் விட்டுடேன்” என்றான் இறைஞ்சும் தொனியில்.

“ஓகே விட்டுடலாம்… ” என்று விட்டு அங்கிருந்த கட்டிலில் படுத்து விட்டாள்.

“ம்ம்ம் தூக்கம் வந்திடுச்சு போல, சரி ரெஸ்ட் எடு நான் நைட் எழுப்பி விடுறேன் ” என தான் ஒரு ஆவியிடம் பழகிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேசிக் கொண்டே அவனும் ஒரு கட்டிலை எடுத்து வந்து போட்டு படுத்து விட்டான்.

இரவு பதினோரு மணிக்கு எழுந்தவன், தேவான்ஷியை எழுப்பி விட்டு.,” இந்த நேரத்தில் உங்க வீட்டிற்கு போனால் உன் சிஸ்டர் பயந்துக்க மாட்டாளா…?” என கேட்டான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க வாங்க போகலாம்” என்று அழைத்து செல்ல ஜீவனோ மீண்டும் தன் சந்தேகத்தை கேட்டான்.

ஜீவன் “ஆமா நீ ஆவி பறந்து போயிடுவ நான் எப்படி என்டர் ஆகறது…??” சிரிப்புடன் கேட்க

தேவா இயல்பாக “பேசாம ஜன்னல் வழியாக குதிச்சிடுங்க…!!” என்றாள். 

“குதிச்சு…!!”

“குதிங்க அப்புறம் பார்க்கலாம்..” என்றாள். 

“அப்புறம் எங்கே பார்க்கிறது  உன் அப்பா என்னை டின்னு கட்டுறதுக்கா நீ போய் உன் சிஸ்டரை பார்த்து விட்டு வா நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான்.

“சார் இங்கே இருந்தா கூர்க்கா டின் கட்டுவார் பரவாயில்லையா …!! “என்றாள் நக்கலாக.

“அப்போ இன்னைக்கு எனக்கு எப்படி பார்த்தாலும் அடி கன்ஃபார்ம் னு சொல்ற…  ஆவி கூட வந்தது கடைசியில் அடி வாங்குறதுக்கா மா “என்று சலித்துக் கொண்டான்.

“உங்களை பத்திரமாக கூட்டிட்டு போக வேண்டிய பொறுப்பு என்னுடையது சரியா…!! வாங்க போகலாம்” என்று சொல்ல அவன் கார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

தேவான்ஷி சுற்றி முற்றி பார்த்து விட்டு சரசரவென்று காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தாள். ஜீவனும் அங்குமிங்கும் பார்வையை அலைய விட்டபடி ஏறியவன்  குதிப்பதற்குள்  தேவான்ஷி அங்கிருந்த ஒரு ஜன்னல் வழியே அறைக்குள் சென்றாள் .

“இவ குதிச்சு ஏறிப் போனாளே நமக்கு ஏறத் தெரியுமானு கேட்டாளா…?? பாவி ச்சே சரியான ஆவி…!!  இப்போ எப்படி ஏறுறது யாராவது வந்துட்டா என்னப் பண்றது …??”என்று திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றான்.

ஜன்னல் வழியே சென்றவளோ ஒரு பொருளை அவன் மீது தூக்கி போட்டாள்.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ..!!” என்று நிமிர்ந்து பார்த்தவன் தேவான்ஷியை கண்டதும்.,” நான் எப்படி வர்றது …?”என்று சைகையில் கேட்டான்.

அவளோ பைப்பை கண் காட்டினாள்.

“ஆன்டவா ஏன் என்னை சோதிக்கிற…??” என முனகியபடி பைப் மீது ஏறி சென்றான்.

மேலே ஏறிச் செல்ல, அங்கே அனுகீர்த்திகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

“ஏய் எழுப்பி விடு உன் சிஸ்டரை… !!” மெலிதான குரலில் பேசினான் ஜீவன். 

“இருங்க, அனு  பயந்து கத்திட்டா என்னப் பண்றதுனு தெரியலை.., அதான் யோசிக்கிறேன் “என்றாள்.

“அதுக்காக இப்படியே நிற்க முடியுமா அந்தப் பொண்ணு வாயை முதலில் பொத்திட்டு அப்புறம் சொல்லு அவ கத்த மாட்டாள் “என்று யோசனை கூறினான்.

“சூப்பர் ஐடியா ஒரு நிமிஷம்…” என்றவள் வேகமாக .,”அனு… ஏய் அனு…  தூங்கு மூஞ்சி எழுந்திருடி… அனுனுனு “என காதில் மெதுவாக கத்த அவளோ காதைக் குடைந்து விட்டு திரும்பி படுத்தாள்.

“சுத்தம்…”என்று வேகமாக உலுக்க திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் அனுகீர்த்திகா.

விழுக்கென ஓரடி தள்ளிப் போய் அமர்ந்தவள் .,” அக்கா நீ நீ எப்படி.. ?வந்த..? ஆவியா..  ?இல்ல உயிரோட இருக்கியா… இது இது யார்… அம்…” எனும் போதே வாயைப் பொத்தி விட்டாள் தேவான்ஷி.

“ஹேய்… ஹேய் சத்தம் போட்டுடாதே… ஒரு நிமிஷம் நான் சொல்றதை அமைதியாக் கேளு” என்க ஜீவன் சுவாரஸ்யமாக அவர்களைப் பார்த்து கொண்டிருந்தான்.

அனுவின் காதில் ஐந்து நிமிடம் ஏதோ கூறியவள் .,” இப்போ புரியுதா…!!” என்றாள்.

“புரியுது..!!” என்றவள் ஜீவனை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு மீண்டும் தன் தமக்கையிடம் திரும்பினாள்.

“அக்கா அப்பா எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்கார் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்” என்றாள் அனு சுரத்தேயின்றி.

“என்ன ..??”என்று அதிர்ந்த தேவா  .,”மேரேஜ் எப்போனு சொன்னாரு அமாவாசை தினத்திலா..??” என்று சம்பந்தமில்லாமல் கேட்க, அனுவும் .,”தெரியலை ஆனால் ஒரு நிமிஷம் இரு நான் காலண்டரைப் பார்க்கிறேன்” என்று பார்த்தவள் திகைத்து விட்டு .,”ஆமாக்கா…” என்றாள் அதிர்வாக.

தேவான்ஷி படபடப்புடன்,” ஜேபி சார் நாம உடனே இங்கிருந்து அனுவை அழைச்சுட்டு கிளம்பிடலாம் ..,எதுவா இருந்தாலும் நான் பிறகு சொல்கிறேன்… அனு கிளம்பு ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்க கூடாது” என்று எழுந்தாள்.

“அக்கா ஆனா ஏன்… ??”

“சரி நீ மாப்பிள்ளையை பார்த்தியா… ??”

“உனக்காவது ஃபோட்டோ காட்டினார் ஆனா எனக்கு காட்டலை” என்று மீண்டும் ஜீவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறினாள்.

“அதான் சொல்றேன் நீ கிளம்பு ப்ளீஸ் …”என்றிட ,” அக்கா அப்பாவுக்கு அவமானம் தேடித் தர சொல்றியா என்னால் முடியாது “என்றாள் அழுத்தமாக

“ஆமா தேவா, நீ ஏன் அவங்களை கூப்பிடுற உங்க அப்பா அவமானப்பட்டா பரவாயில்லையா உனக்கு” என்று ஜீவனும்   கோபத்துடன் கேட்க

“ப்ளீஸ் ஜீவா இங்கிருந்து இவளை அழைச்சுட்டு போயிடலாம் . அனுமா அக்கா சொன்னா கேளுடா இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம் டா ..”என்று கெஞ்ச அனுவோ புரியாமல் விழித்தாள்.

“தேவா நீ விளக்கமாக சொல்லாம அவங்க எப்படி வருவாங்க…?” என்று சினத்துடன் கேட்டான்.

“முதல்ல ஒரு விஷயம் யோசிங்க அமாவாசையில் யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா…!!” 

“பண்ணமாட்டாங்க தான் பட் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்… ??” குழப்பமாக கேட்டான் ஜீவன். 

“சம்பந்தம் இருக்கு… அனுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகலை அவளை நரபலி கொடுக்கப் போறாங்க புரியுதா உங்களுக்கு ” என்றதும் இருவரும் அதிர்வாய் அவளைப் பார்த்தனர்.

“அக்கா …!!”

“தேவா..!!” என்று இருவரின் குரலும் ஒரே நேரத்தில் ஒலித்தது.

“ஆமா நரபலி கொடுக்க தான் அப்பா கல்யாணம் னு சொல்லி ஏற்பாடு பண்ணி இருக்கார் புரிஞ்சுதா… !!”

“அப்போ உன்னையும் நரபலி..!!” என்று ஜீவனின் குரல் பிசிறடித்தது.

“ஆமாம்…!!” என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

“அக்கா …!!”என்று அணைத்துக் கொண்ட அனு தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“அனு அழ நேரம் இல்லை. நீ ஜீவா கூட கிளம்பு , ப்ளீஸ் வா “என்று சொல்ல அனுகீர்த்திகா ஆவேசமாக எழுந்து .,”நான் அப்பாவை எதிர்த்து கேட்கிறேன்…!!” என்று சொல்ல  ஜீவன் வேண்டாம் என்றான்.

“வேண்டாம் மா அவங்க திட்டம் உனக்கு தெரிஞ்சதால உன்னை ஏதாவது செஞ்சிடுவாங்க நீ முதல்ல கிளம்பி வா அப்புறம் பேசிக்கலாம்” என அவசரப்படுத்த கதவு தடதடவென்று தட்டப்பட்டது.

“அக்கா அம்மானு நினைக்கிறேன்..!!” என்று சொல்ல ஜீவன் தேவா இருவரும் ஒளிந்து கொண்டனர்.

அனு கதவைத் திறந்ததும் அவளது தந்தை நின்று கொண்டிருந்தார்.

“என்னம்மா தூங்கலையா ..?, ஏதோ பேச்சு சத்தம் கேட்டது போல இருந்தது யார் உள்ள இருக்கா..??” என்று தெளிவாக இளங்கோவன் கேட்க .,அனு ஒரு நிமிடம் பதறிப் போனாள். முத்து முத்தாக வியர்த்து கொட்டியது அவளுக்கு.

“யார் ப்பா இந்த நேரத்தில் வருவாங்க..? , நான் தூக்கம் வரலைனு டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன் கதவு தட்டவும் அம்மாவா இருந்தா திட்டுவாங்களேனு டிவியை ஆஃப் பண்ணிட்டு கதவைத் திறந்தேன் “என்றாள் படபடவென்று.

“ஓஓஓ சரி மா ரொம்ப நேரம் பார்க்காத நல்லா தூங்கி ரெஸ்ட் எடு மா நாளைக்கு காலையில் ஒரு பரிகார பூஜை செய்ய போகனும்” என்று விட்டு அங்கிருந்து அகன்றார் இளங்கோவன். கதவை படக்கென்று சாத்தி விட்டு வந்தமர்ந்தாள்.

“ஸ்ஸ்ஸப்பா…!!” என ஆசுவாசமாக மூச்சை விட்டவள்  தேவா வெளியே வரவும்,” அக்கா” என்று கட்டிக் கொண்டு அழுதாள் அனு.

“ப்ப்ச் அழ நேரம் இல்லை சீக்கிரம் வாங்க போகலாம் “என்று ஜீவன் அவசரம் காட்டினான்.

“ஸ்ஸ்ஸ் ஒரு நிமிஷம் இருங்க ஒரு அரைமணி நேரம் கழித்து கிளம்புவோம் என் அப்பா வெளியே வந்து பார்த்தாலும் பார்ப்பார் “என்று தேவான்ஷி சொல்ல அமைதியாக அமர்ந்து கொண்டான் ஜீவன்.

தேவான்ஷி கூறியது போலவே , இளங்கோவன் அனுவின் அறைக்கு வெளியே நின்று சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தார்.

அரைமணி நேரம் கழித்து மூவரும் கிளம்பி விட்டனர். போகும் வழியில் ஜீவன் தேவான்ஷியை அவ்வபோது பார்த்தபடியே வண்டி ஓட்டினான். அவர்களை கண்காணித்த உருவமும் பின்தொடர்ந்து வந்தது.

ஜீவனின் மனம் ஆறவேயில்லை …’இவ்வளவு அழகானப் பெண்ணை நரபலி கொடுத்தார்களா…  ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் அதுவும் பெற்ற பிள்ளையையே’ என்று குமுறிக் கொண்டிருந்தான்.

தேவான்ஷி மனம் வேதனையில் உழல, அனுகீர்த்திகா பயந்து நடுங்கிக் கொண்டு வந்தாள்.

‘உண்மையிலேயே தன் பெற்றோரா தங்களை நரபலி கொடுக்க நினைத்தார்கள்’ என யோசிக்கும் போதே வேதனையாக இருந்தது. 

அவ்விஷயத்தை வேறு யாரும் கூறி இருந்தால் கூட நம்பி இருக்க மாட்டாள் கூறியது தன் உயிரான அக்காவாயிற்றே …நம்பாமலும் இருக்க இயலவில்லை அவளால்.

‘எத்தனை பாசமாக வளர்த்தார்கள் நாங்கள் கேட்டு ஒரு விஷயத்தைக் கூட மறுத்தது இல்லையே நாங்களும் அப்படித் தானே அவர்கள் கிழித்த கோட்டை தாண்டியதில்லையே இதுவரை…  நரபலி கொடுக்கும் அளவிற்கு என்ன  விஷயம் தேவைப்பட்டிருக்கும் அவர்களுக்கு…’ புரியாமல் குழம்பியவளுக்கு கண்ணீர் அருவியாய் வழிய ஜீவன் சங்கடமாக அவளைப் பார்த்தான்.

“தேவா…!!” என்று அழைக்க சட்டென தன் தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டாள் தேவான்ஷி. 

“ப்ளீஸ் அழாதீங்க அனு ரிலாக்ஸா இருங்க அடுத்து நாம என்ன செய்யலாம் என்று யோசிப்போம் “என்றான் ஜீவன்.

“உங்களுக்கு தெரியாது சார் அவங்க எவ்வளவு பாசமா எங்களை வளர்த்தாங்கனு…  ம்ம்ஹ்ஹ்” என்று மீண்டும் அழத் துவங்க ,தேவான்ஷி அதட்டினாள்.

“இல்ல நான் அழலை நான் தெரிஞ்சுக்கனும் அவங்க எதுக்காக நரபலி கொடுக்க துணிஞ்சாங்கனு நாங்க தெரிஞ்சுகிட்டே ஆகனும் …”என்று அழுத்தமாக உரைத்தாள்.

“சரி சரி கண்டுபிடிக்கலாம் நீங்க அமைதியாக வாங்க அனு… ” என்று சமாதானம் செய்தவன் சென்னையை நோக்கி பறந்தான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கதிர்வேலன் இரவெல்லாம் உறங்கிடவில்லை. திருமணம் செய்து கொள்கிறேன் என கேட்டதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்ற மணிமேகலை தான் அவரது நினைவில் இருந்தார்.

‘தப்பா நினைச்சிருப்பாளோ… நான் அப்படி கேட்டிருக்க கூடாதோ ..!!” என்றெல்லாம் எண்ணியவர் இறுதியாக.,’ ஏன் கேட்க கூடாது…? அவள் பெண் இல்லையா …?நான் என்ன திருமணம் ஆன பெண்ணிடமா கேட்டேன்…!! மணமாகாதவளிடம் தானே கேட்டேன்…!! அதிலும் என் வயதை ஒத்த பெண்,  கேட்டதில் தவறு இல்லை…!!  பிடித்தால் செய்து கொள்ளட்டும் இல்லை என்றால் வேண்டாம்… ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால்…’  என்று யோசித்தவர் .,”ஸ்ஸ்ஸ் முடியலை ஏதாவது சொல்லிட்டு இல்ல ஏன் இப்படி பேசுனீங்க னு அடிச்சுட்டாவது போயிருக்கலாம் “என்று புலம்பியே நொந்து போனார் கதிர்வேலன் .

இங்கே மணிமேகலைக்கும் இதே நிலை தான்…  கதிர்வேலன் திடீரென அப்படி கேட்டிடுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை…  இத்தனை நாளும் திருமணம் என்பது பெரிய விஷயமாக தோன்றவில்லை மணிமேகலைக்கு, ஆனால் இன்று கதிர் அப்படி கேட்டதும் இயல்பாக இருக்க முடியவில்லை அவரால்.

மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அப்படியே உறங்கியும் போய் இருந்தார் மணிமேகலை.

கைபேசியை எடுத்து மணிமேகலையின் எண்ணை பதிவு செய்ய ,மீண்டும் அழிக்க,  இப்படியே செய்து கொண்டிருக்க, ஒரு வழியாக காலையில் ஆறு மணிக்கு அழைத்து விட்டார் கதிர்வேலன்.

“ஹலோ…. !!”சில நிமிடங்கள் அமைதியாக கழிய மணிமேகலை செருமவும்… 

“கொஞ்சம் ஏழு மணிக்கு ஆபிஸ் வந்திடுங்க பேசனும் ப்ளீஸ் மேகா “என்று ப்ளீஸ் மேகாவில் அழுத்தம் கொடுத்து கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

“ஃப்பூ ஃப்பா… ” என்று அலுத்துக் கொண்டு எழுந்தவர் தயார் ஆகச் சென்றார்.

கூறியது போலவே ஏழு மணிக்கு கதிரின் அலுவலகத்தில் இருக்க அதற்கு முன்பாகவே கதிர் அங்கிருந்தார்.

“வாங்க மேகா..!!” என்றவரின் விழிகள் நன்றாக சிவந்திருந்தது.

“எதுக்கு வர சொன்னீங்க… ?” என்று கேட்க,” உள்ளே ரூம் இருக்கு அங்கேப் போய் பேசிக்கலாம் வாங்க ப்ளீஸ்” என்றிட , மணிமேகலை எதுவும் பேசாமல் பின்னால் சென்றார்.

“ரெண்டு காஃபி…” என்று ப்யூனிடம் ஆர்டர் செய்து வரவழைத்து விட்டு அமைதியாக இருக்க காஃபி வந்தது. ப்யூன் சென்றதும் மீண்டும் அதே கேள்வி…  “ஏன் வரச் சொன்னீங்க ??”என்று

கதிர் தடுமாற மணிமேகலை நிமிர்ந்து பார்த்தார் .

“நைட் எல்லாம் தூங்கலை போலிருக்கு எப்படி சாரி கேட்கிறதுனு யோசிச்சிங்களோ…??”

“இல்லை…!!”

“அப்புறம் கண் சிவந்து இருக்கு…”கிண்டலாக கேட்டார் மணி.

“நான் கேட்டதுக்கு என்ன பதில் சொல்வீங்களோனு திங்க் பண்ணிட்டு இருந்தேன்…!! என்ன சொல்லப் போறீங்க..?” நான் என் முடிவில் தீர்க்கமாக இருக்கிறேன் என்று கூறாமல் கூறினார் கதிர்.

“ஓஓஓ அப்போ நீங்க கேட்டது உங்களுக்கு தவறா தெரியலை “என்று உஷ்ணமாக கேட்க

“இல்லை…”  என்றதும் கோபத்துடன் முறைக்க கதிரோ எவ்வித தயக்கமும் இன்றி,” நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே…!!” என்று கேட்க இப்போது தடுமாறுவது மணிமேகலையின் முறையாகிப் போனது.

“காஃபியை குடிங்க…”என்று இயல்பாய் தன் காஃபியை குடிக்க,  மணிமேகலையால் இயல்பாக இருக்க முடியவில்லை.

சட்டென்று மணிமேகலையின் அருகில் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தவர்…  அவரின் கையைப் பிடித்துக் கொண்டு .,”மேகா நான் அவங்களுக்காக வீம்பு பிடிக்க கேட்டேன் னு தயவு செய்து நினைக்காதீங்க….  அவங்க மேல இருந்த கோபத்தில் உங்க கிட்ட கேட்டேன் தான் பட் யோசித்து பார்த்ததில் நாம மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன தப்பு னு தோணுச்சு… “என்றார் அமைதியாக

“என் வயசு என்ன தெரியுமா…  32 முடியப் போகுது…  இந்த வயசில் இது  தேவையா எனக்கு …??”

“அப்போ என் வயசு என்ன மேகா எனக்கு கிட்டத்தட்ட 37 வயசு ஆகுது…!!  ஏன் இதுக்கு மேல கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன…??ஆக்டர்ஸ் அன்ட் சில நடிகைகளே 35 க்கு மேல் தான் மேரேஜ் பத்தி யோசிக்கிறாங்க… ” என்றார் வேகமாக.

“நல்லா பேசுறீங்க… ஆனால் நம்ம ஏஜ்க்கு இது தேவையா…??” என்றார் மேகா. 

“எது… காதலா…  காதலுக்கு வயசு எல்லாம் கிடையாது மா…” என்று ரசனையாக சொல்ல, மணிமேகலை சிரித்து விட்டார்.

“இந்தச் சிரிப்பு சம்மதத்திற்கான சிக்னலா நான் எடுத்துக்கலாமா…??” தன் காரியத்தில் கண்ணாய் இருந்தார் கதிர்.

“அது சரி உங்க வீட்டில் உள்ளவங்க ஏற்கனவே நான் உங்களை மயக்கிட்டதா சொல்றாங்க இதில் நம்ம கல்யாணம் பண்ணா அவ்வளவு தான்…  இதெல்லாம் நடக்காது சார் விடுங்க… “என்று எழ முயற்சித்தவளை விடாமல் தடுத்து நிறுத்தினார்.

“ஏன் இந்த வயதில் காதலிக்க கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா மேகா…??  இல்ல இந்த காலத்தில் உள்ள பசங்களை மாதிரி ரோஸ் வச்சு ப்ரபோஸ் எல்லாம் பண்ணா தான் ஒத்துப்பீங்களா இல்லை டேட்டிங் ஏதாவது போகனுமா” என்று குறும்பாய் கேட்க

“இப்ப உள்ள பசங்க எல்லாம் வாட்ஸப் பேஸ்புக் னு ப்ரப்போஸல் கொடுத்து பாஸ்டா இருக்காங்க” என்றார்.

“ஓஓஓ அப்புறம் வேறு என்ன பிரச்னை மேகா..??” இன்னும் தவிப்பாய் தான் கேட்டார். மணிமேகலை பதில் தரவில்லை.

“ஏன்  உங்க வீட்டில் யாரும் எதுவும் சொல்வாங்களா… ??”ஜீவன் எதுவும் சொல்லி விடுவானோ என்று கேட்க

“நோ சான்ஸ், ஜீவன் நான் செட்டில் ஆக வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பான், ஆல்ஸோ வேதாவும் அப்படி தான் அவங்களைத் தவிர எனக்கு சொந்தம் என்று என் அண்ணன் பொண்ணு விழி மட்டும் தான் அவளும் அப்படி தான்…  மற்ற எந்த உறவும் எங்களுக்கு இல்லை இருந்த அண்ணனும் இப்போ இல்லையே…!!” என்றார் கவலையாக

“ஓஓஓ சாரி மேகா அப்போ ஏன் நடக்காது எல்லாம் நடக்கும் உங்க சம்மதம் இருந்தால் போதும்” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் மணிமேகலை.

கதிர்வேலனின் காதல் நிறைவேறுமா பார்க்கலாம்..

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. அடப்பாவிகளா…புள்ளைங்களயே நரபலிகுடுக்க பாக்குற கூட்டமா நீங்க….நரபலிகுடுக்க ஏன்டாபுள்ளைங்கள வளக்கனும்….பாசமா வளத்துட்டு அவங்க உயிர எடுக்குறதுக்கு அவங்க பொறந்ததும் அநாதை ஆசிரமத்துல விட்டிருக்கலாமே……

      ஜேபிக்கு கல்யாணத்துக்காக அவங்க அப்பா பாத்த பொண்ணு தேவா தானா….அவ அனு காதுல என்ன சொன்னாள்….அவள் ஏன் அடிக்கடி ஜேபிய உத்து உத்து பாத்தாள்….

      யாரு அந்த உருவம் அவங்கள ஃபாலோ பண்ணது….அந்த சாமியார் ஆளா….

      மேகா ஏன் ஜோசிக்குறீங்க….டக்குனு ஓகே ளசொல்லிடுங்க….கதிரும் நல்லவர் தானே….நீங்த அவர கல்யாணம் பண்ணியாவது அந்த வீட்டுல அவருக்கு எதிரா இருக்கவங்கள அடக்குங்க…..

      1. Author

        ஹீஹீஹீ ஜேபி பத்தின ரகசியம் அதான் அனு அப்படி பார்க்கிறா 😁😁😁😁 அப்போ கதிருக்கும் மேகலைக்கும் கல்யாணம் பண்ணிடலாமா 😍😍😍😍😍 நன்றி மா

    2. நரபலி கொடுக்குற அளவு பெத்தவங்க இவ்வளவு கொடூரமா இருக்காங்களே😒😒😒😒🤔ஓகே சொல்லிடுங்க மேகா😍😍😍😍

    3. Ada kodumaiye aven aven kulantha ilanu aluthuttu irukanga ivunga ennana petha kulanthaiya narapazhi kudukka pakuranga… Eee ava pei nu summa nadikkirennu kathula sollirupalo🤔🤔 mega y yosikira ivlo azhaga propose pannirukan … Athum kadhaluku vayasu deva ila …. K solliru dum dum dum vachuruvom.