Loading

              பகுதி-01

அந்த வீட்டில் அவனின் சத்தமே ஓங்கி ஒலித்தது. 

“என்னை டார்ச்சர் பண்ணாம கிளம்புறிங்களா … !!,  வரும் போதெல்லாம் கல்யாணம் கல்யாணம் ஏன் இப்படி தொல்லை பண்றீங்க….?? நான் நிம்மதியாக இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவே இல்லையா …? ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன்…, கல்யாணம் பண்ணி நீங்க எல்லாம் என்ன சந்தோஷமா இருக்கீங்க…. ??  என்னை அந்த குழிக்குள் தள்ளப் பார்க்குறீங்க … தயவு செஞ்சு கிளம்புங்கப்பா… ” என்று கோபமாக ஆரம்பித்தவன்,  கெஞ்சுதலாக முடித்தான்.

“விழி அவன் கிட்ட சொல்லிப்  புரிய வை இவன் என்ன கல்யாணம் பண்ணாம சாமியாரா போகப் போறானா…??” தந்தையானவர் அவனின் தங்கையிடம் கத்தினார்.  

“டேய் உங்க அப்பாவுக்கு புரியவே இல்லடா…!! கல்யாணம் பண்றவனை விட சாமியார் தான்  அஜால் குஜாலா இருக்காங்கனு ” முணுமுணுத்தான்  வேதாந்த்.

நல்ல வேளை நம் நாயகனின் காதில் விழவில்லை… இல்லை என்றால் இவனுக்கு விழுந்திருக்கும்.

“உனக்கு ஜீவப்ரியன் னு பேர் வச்சதுக்கு பதிலா என்  ஜீவனை வாங்குற ப்ரியன்னு பேர் வச்சிருக்கலாம்… !! ஏன் டா இப்படி உயிரை வாங்குற…. ?? அம்மா இல்லாத பையன் னு பார்த்து பார்த்து அந்த குறை தெரியாமல் வளர்த்தேன் இல்ல , அதான் இந்த கொழுப்பு…  ” என்றவரோ  தணிந்த குரலில்.,” தம்பி சொன்னாக் கேளு டா , எனக்கு முன்ன மாதிரி உடம்பு இல்லடா “என்றார் பரிதவிப்புடன் .

ஜீவன் அவரை சமாளிக்க இயலாமல் “அப்பா உடம்பு சரியில்லை னா ஹாஸ்பிடல் போகலாம் வாங்க…  நல்ல ட்ரீட்மெண்ட் தர ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணி சரியாக்கிடுறேன். இல்லையா வீட்டிலேயே  டாக்டர் நர்ஸ் அப்பாயின்ட் பண்றேன்…  அதை விட்டுட்டு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்ப்பா”  என்றான் அயர்ந்த குரலில்.

“அண்ணா அவனுக்கு தான் பிடிக்கலைனு சொல்றான் இல்ல, நீ ஏன் கம்பெல் பண்ற…?  நானே இன்னும் மேரேஜ் பண்ணாம சுத்திட்டு இருக்கேன். நீ சின்ன பையனைப் போய் கல்யாணம் பண்ண சொல்லி டென்ஷன் படுத்துற…  லீவ் ஹிம் அண்ணா… ” என்றார் அந்த மாடர்ன் மங்கை மணிமேகலை.

வயது 32ஐ தொட்டு விட்டது  ராமமூர்த்தியின் இளைய தங்கை.  இவருக்கும் ஜீவப்ரியனுக்கு ஐந்து வருட வித்தியாசம் மட்டுமே…  காலம் கடந்து பிறந்த பெண் . அதிக செல்லம்…  ஏனோ திருமணத்தில் நாட்டமில்லாது  நவநாகரீக வாழ்வின் பிரஜையாக உலா வருகிறார். 

 

ராமமூர்த்தி கடுப்பாக “நீ சும்மா இரு உன்னை பார்த்து தான் என் மகன் கெட்டுப் போயிட்டான்… ” தங்கையை கடிந்து கொண்டார்.

“இது நல்ல கதையா இருக்கே…  நானா அவனை கல்யாணமே பண்ணாம கட்டை பிரம்மச்சாரியா இருக்க சொன்னேன்…??”  என்று எகிறிய மணிமேகலையை விழி வந்து சமாதானம் செய்தாள்.

ஜீவனோ “அப்பா நான் சொல்றது சொல்லிட்டேன் இதுக்கு மேல எங்க விருப்பம் ” பட்டென்று சொன்னவன் வெளியேற ,

ராமமூர்த்தி கோபமாக ., “இருக்கும் போது அருமை தெரியாது டா…  நான் போன பிறகு தேடுவ என்னை , அப்பன்னு ஒருத்தன் இருந்தா நம்மளை இப்படி விட்ருப்பானான்னு நினைப்ப பாரு அப்போ நீ கூப்டா கூட என்னனு கேட்க நான் இருக்க மாட்டேன்….  ” என்றார்.

“அப்பா ஏன் இப்படி பேசுறீங்க….??” விழி பதறிட,  ஜீவன் அதற்குள் நண்பனோடு கோபமாக வெளியேறி இருந்தான்.

 

“பின்ன என்ன மா இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல் மா…?  நீ எல்லாம் நான் சொன்னதைக் கேட்டு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இல்ல…  இவன் மட்டும் ஏன் மா இப்படி இருக்கான்…  ??”கலங்கினார் அந்தப் பெரிய மனிதர்.

இங்கே ஜீவனைப் போட்டு திட்டிக் கொண்டிருந்தான் வேதாந்த்.

ராமமூர்த்தியை திட்டி விட்ட கோபத்தில் இருந்த வேதாந்த் “ஏன் டா இப்படி பண்ற ??அவர் பாவமில்லையா…!!  வெடுக்குனு பேசுற…  உன்னை என்ன கொலையா பண்ண சொல்றாரு…  கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றாரு… ” என ஜீவனை திட்டி கொண்டிருந்தான்.

“ஆமாடா நீயும் வந்திடு வக்காலத்து வாங்க… !! அவர் பொண்ணுப் பார்க்க அழைச்சுட்டு போனாரே நீயும் தானே வந்திருந்த…  என்ன சொன்னாங்க எல்லாரும் யோசித்து பாரு…  இந்த பையனோட அம்மா தானே ஓடிப் போனது, இந்த கேள்வியை எத்தனை இடத்தில் கேட்டுட்டாங்க தெரியுமா…?   அவமானமா இருக்கு….  அந்த இம்சை தாங்க முடியாமல் தான் அந்த ஊரை விட்டு இங்க சென்னையில் வந்து இருக்கேன்…!!,   எல்லாத்தையும் விடு … லவ்வுனு ஒண்ணு பண்ணேனே அந்த  சரிகா என்ன சொல்லிட்டுப் போனா… ? , ம்ம்ம் சொல்லு…! என்ன சொல்லிட்டு ப்ரேக் அப் பண்ணா…?  உன் அம்மா மாதிரி நீயும் நாளைக்கு குழந்தை பிறந்த பிறகு விட்டுப் போனா என்ன பண்றது …? அதனால நீ எனக்கு வேணாம் னு சொல்லிட்டுப் போனா….!!  எனக்கு கல்யாணமே வெறுத்திடுச்சு.  வேண்டாம் இதை பத்தி பேசினா கோபம் தான் வருது எனக்கு…!!”  என்று படபட பட்டாசாய் வெடித்து தள்ளினான்.

அவன் வெடிக்கட்டும் வாங்க நாம அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் பார்த்து விட்டு வருவோம்.

ஜீவப்பரியன் ( அலைஸ் )ஜேபி…  வயது 27  ,அப்பா ராமமூர்த்தி,  தங்கை  வேல்விழி ,வயது 24, அம்மா வனஜா , ஜீவனுக்கு பத்து வயதாக இருக்கும் குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 

ராமமூர்த்தி கிராமத்துவாசி, சேலம் பக்கத்தில் உள்ள ஒரு சிற்றூர் தான்….  தனது கிராமம் தான் அவருக்கு உயிர் , உடல் ,எல்லாம்…  ஆனால் வனஜாவிற்கோ பட்டணத்து வாழ்க்கை சினிமா  மோகம்..  நல்ல சிவந்த நிறம் ஆகையால் தன் அழகின் மீது கர்வமானவரோ  தனியே கிளம்பி விட்டார் திரைத்துறையில் கால் பதிக்க…  ஆனால் தற்போது எங்கே இருக்கிறார் என்று எவரும் அறிந்திடாத விடயம்…  இவர்களும் மான அவமானத்திற்கு கட்டுப்பட்டு தேடவில்லை… தன் கிராமத்திலேயே இருந்தால் யாராவது ஏதாவது சொல்வார்கள் என்றெண்ணி இடம் பெயர்ந்தனர்.

கோவை மாநகரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு தன் மனைவி இறந்து விட்டார் என்ற பெயரில் அங்கிருந்தனர். அதற்கு காரணமும் ஜீவன் தான்…  அவனுக்கு அப்போது ரெண்டுங் கெட்டான் வயது…  தன் அன்னையைப் பற்றி பேசுவது எல்லாம் ஓரளவு புரிந்து இருந்தது .   மற்றவர்கள் வனஜாவைப் பற்றி கேலி பேசும் போதெல்லாம் கோபம் தாறுமாறாக வந்திட வயதுக்கு மீறி நடந்து கொண்டான். 

அடிதடி என்றால் அல்வா சாப்பிடுவது போல என்பது மாதிரி இருந்தது அவனது நடவடிக்கைகள்.  

அதனாலேயே  மாணவர் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார் அவனது தந்தை.  அங்கே கிடைத்தவன் தான் அவனது தோழன் வேதாந்த்… 

வேதாந்திற்கு பெற்றவர்கள் இல்லை . பாட்டி மட்டுமே,  அவன்  ஏராளமான சொத்துக்கு அதிபதி…  ஆனால் அவை இருந்தும் இல்லாதது போல தான் … வேதாவின் பாட்டியை ஏமாற்றி ஏமாற்றி உறவினர்களே எல்லா சொத்துக்களையும் எழுதி வாங்கி கொண்டனர்.  சிறுவன் ஆதலால் அவனுக்கும் எதுவும் தெரியவில்லை  எட்டு வயதில் பாட்டியும் இறந்திட,   இறுதி காரியங்களை செய்ததற்கு இனாமாக அவனுக்கு இருந்த வீட்டையும் வாங்கிக் கொண்டான் மாமன்காரன்.  அவனின் பெரியப்பா சற்று கருணையோடு நடந்து கொண்டார்  . இத்தனை சொத்துக்களை அவனறியாமல் கொடுத்ததற்காக பட்ட படிப்பை  அவனை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  அதற்கு மேலும் அவன் தானாக படித்து கொள்வானோ பிழைத்துக் கொள்வானோ அது அவன் பாடு என்று விட்டு விட்டார்.  அவனும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வந்து விட்டான். ஜீவனின் நல்ல நட்பு அவனை கௌரவமாக வாழ வைத்தது.  அவனை வெளிநாட்டிற்கு படிக்கவும்,  பணிபுரியவும் அனுப்பி வைத்தது வரை ஜீவன் தன் தந்தையின் உதவியோடு வேதாந்திற்கு செய்திருந்தான்.

ஜீவன் நெகுநெகுவென்ற உயரம்…  அடர்ந்த புருவங்கள், கூர் நாசி ,  தாடி வைப்பது அவனது தார்மீக உரிமை போல அது இல்லாமல் அவனிருந்ததில்லை… கொஞ்சம் அல்ல அதிகமே முரட்டுத்தனம்… அப்பாவிடம் தொழில் செய்கிறேன் என்று பணம் வாங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றான்… வீட்டிற்கு தேவையான  மிக்ஸி , கிரைண்டர் ஃப்ரிட்ஜ் எல்லாம் விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறான் … அனைத்தும் கிடைக்கும் அவனிடம்…  ஒரு சிறு கடையில் ஆரம்பித்த அவனது தொழில் இன்று சென்னை மற்றும் கோவையில்  கிளைகள் துவங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது… பெரிய தொழில் அதிபர் எல்லாம் கிடையாது…  ஆனால் அவனது கடை பெயர் சொன்னால் சற்று தெரியும் அளவிற்கு இருந்தது அவனது வளர்ச்சி. 

 

இவ்வளவு போதும் நாயகனின் அறிமுகம்….  வாங்க நம் நாயகியை பார்த்து விட்டு வருவோம்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

“ம்மா போதும் மா , எவ்வளவு தான் ஊட்டுவீங்க…?,  அப்பா சொல்லுங்க…!! ” சிணுங்கினாள் அந்த சிறு மலர்.

 

“இப்படி சாப்பிட்டா அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறது நல்லா சாப்பிடனும் ம்ம்ம் சாப்பிடு…  ” என்று ஊட்டி விட்டார் அவளது அன்னை.

“அக்கா அம்மா சொல்றாங்க இல்ல சாப்பிடு,  அப்புறம் மாமா எங்களை திட்டப் போறாங்க” என்று சலித்து கொண்ட தங்கையை முறைத்தாள் தேவான்ஷி.

அனுவோ “சரி சரி முறைக்காத…!!”  என்றிட , அவளைப் பார்த்து புன்னகைத்த தேவான்ஷி “இல்லாத மாமாவுக்கு இவ்வளவு பில்டப்பா… ??” வம்பு செய்தாள் .

அனுகீர்த்திகா சிரிப்புடன் “யார் சொன்னா இல்லாத மாமான்னு , அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க …என்று அக்காவிடம் கேட்டு விட்டு தன் தந்தையிடம் “டாடி சொல்லலையா அவளுக்கு…  !!” என கேட்டாள்.

இளங்கோவன் புன்னகையுடன் “ஆமா டா அப்பா உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன் பையன் தங்கமானவன்,  ஒரு பையன் … ” எனும் போதே  இடை நிறுத்திய தேவான்ஷி  .,”உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகேப்பா…  !! “என்றாள்.

இளக்கோவன் மகளைப் பெருமையாக பார்த்தபடி “என் தங்கம்!” என கேசம் வருடியவர், “அப்புறம் இன்னொரு விஷயம் டா கல்யாணம் சிம்பிளா தான் வச்சிருக்கோம் ரிஷெப்ஷனுக்கு எல்லாரையும் இன்வைட் பண்ணிடலாம் சரியா… !! நீ மறுக்க மாட்டேன் னு தான் அடுத்த வாரமே வச்சிருக்கோம்… ” என்றார்.

தேவான்ஷிக்கு படபடப்பாக இருந்தது.

தேவான்ஷிக்கு “ஏன் இந்த அவசரம்??” என்ற கேள்வி எழுந்தாலும் ,’தன்னைப் பெற்றவர்கள் விருப்பமே தன் விருப்பம்’  என்று மனதை சமன் படுத்திக் கொண்டாள்.

இந்த அன்பான குடும்பத்தை பற்றிய அறிமுகம்.

நாயகி தேவான்ஷி வயது 23 ஆகிறது.  முதுகலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றாள்…  இவ்வீட்டின் மூத்த இளவரசி. 

அவளது தங்கை  அனுகீர்த்திகா வயது 21 அக்காவை போலவே கணினியில் இளங்கலை பயின்று கொண்டிருக்கின்றாள். தந்தை இளங்கோவன்  **** பேங்கில் மேனேஜராக பணிபுரிகிறார்.  தாய் விஜயா இல்லத்தரசி.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தன் மகனிடம் பேசாமல் ராமமூர்த்தி மகளிடம் “விழி உன் அண்ணனை ரெடி ஆகி வரச்சொல்லு, இன்னும் நாலு நாள் ல அவனுக்கு கல்யாணம்…  பொண்ணு பார்க்க தான் வர மாட்டான், அதான் நானே எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்… !! ” என்றார். 

“முடியாது என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது “என்று கத்தி விட்டு சென்றான் ஜீவன் .

ராமமூர்த்தி கோபமாக “இதோப் பாரு டா நீ மட்டும் நாளைக்கு வரலை, அப்புறம் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்… ” என்றார். 

 

“இதையே நீங்க பல தடவை சொல்லியாச்சு வேற ஏதாவது இருந்தால் யோசிங்க… நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்”  என்றவன் கிளம்பி விட்டான் அலுவலகத்திற்கு.

ராமமூர்த்தி தளர்ந்து போய் “நான் செத்தா வந்து தானே ஆகனும்…!!   அப்போ அப்பான்னாலும் வர மாட்டேன்,  ஆயா ன்னாலும் வர மாட்டேன் ” என்று வார்த்தைகளை விட விழி பதறி விட்டாள்.

 

விழி பதறியபடி “அப்பா என்ன பேசுறீங்க??  அண்ணன் வருவாரு, நான் அழைச்சுட்டு வரேன்” என்று தந்தையை சமாதானம் செய்தாள்.

ராமமூர்த்தி “என் வேதனை அவனுக்கு புரிய மாட்டேங்குது மா “என்றவர் கிராமத்திற்கு கிளம்பி விட்டார்.

 

அன்று மாலை அலுவலகம் முடிந்து வந்த ஜீவனோ .,” என்ன கிளம்பிட்டாரா…? எப்ப பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம் னு ஒரே தொல்லை பண்ணிட்டு…” என்க விழி கோவமாக முறைத்தாள்.

விழியோ தன் அண்ணனுக்குப் புரிய வைத்திடும் நோக்கில் “அவர் மனசு உங்களுக்கு தான் அண்ணா புரிய மாட்டேங்குது,  அம்மா இல்லாம வளர்த்த பிள்ளைங்க தறிகெட்டு தான் அலையும் னு நம்ம சொந்தக்காரங்க எல்லாம் ஜாடை மாடையா பேசுறாங்களாம்… ஏற்கனவே அத்தையும் கல்யாணம் பண்ணாம இருக்கிறதால தப்பு தப்பா பேசுறதால தான் அப்பா இவ்வளவு அவசரப்படுறாரு… நமக்காக  வேற கல்யாணம் கூட பண்ணிக்காம நம்மளை இவ்வளவு தூரம் வளர்த்திருக்கார்… அவருக்காக இதை கூட பண்ண மாட்டியா??” என  இறைஞ்சுதலாக கேட்க ஜேபி மனமிறங்கி வந்தான்.

 

ஜீவன் புன்னகை முகத்துடன் “சரிம்மா நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன் அவர் கிட்ட யார் பொண்ணுனு கேட்காம கூட சம்மதிக்கிறேன்…  ஆனா பேரன் பேத்தி னு அவசரப்பட கூடாது என சொல்லிடு “என்றான்.

 

விழி சிரித்துக் கொண்டே , “நீ முதல்ல கல்யாணம் பண்ணு அப்புறம் மத்ததை பேசலாம் “என்றவள் தன் தந்தையிடம் தகவல் கூற செல்ல

ஜீவனோ “வேண்டாம் விழி நேராப் போய் சர்ப்ரைஸ் பண்ணலாம்” என்று தங்கையை குடும்பத்துடன் அழைத்து கொண்டு சேலத்திற்கு கிளம்பினான்.

அங்கே அவனது தந்தை  உறக்கத்திலேயே  மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்திருந்தார்.

…… தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    13 Comments

    1. நைஸ் ஸ்டார்ட்டிங்😍😍😍😍 இந்த ஜேபி இதே முன்னாடியே சொல்லிருந்தா மனுஷன் உயிரோடுவாது இருந்திருப்பார் போல🥺 பாவம் போய்ட்டாரு.

      1. மிக்க மகிழ்ச்சி அர்ச்சு மா விதி வலியது மரணம் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது மா

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    3. அடக்கடவுளே…அவன் மனசு மாறி வர்ர நேரத்துலயா இப்படி நடக்கனும்…..அவனாவது அவருக்கிட்டயே கல்யாணம் பண்ணிக்குறேனீ அப்பானு சொல்லி இருக்கலாம்…..🥺🥺🥺🥺🥺

    4. அடே வேதாந்த் உனக்கு குசும்பு அதிகம்பா🤣🤣🤣🤣…..ஜீவப்பிரியன் அழகான பெயர் தேர்வு…வனஜா செய்தது தவறு.. அவரின் பக்கம் வரும் அத்தியாயங்களில் நியாயம் இருந்தாலும் ஜீவன் குடும்பம் அனுபவித்த வலி அனுபவித்ததுதானே..ஹீரோயின் டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போல😍😍😍😍…சேட் ஜீவாவோட அப்பா இறந்துட்டாங்களே அதுக்குள்ள😒😒😒

      1. மிக்க நன்றி மா ஆமாம் ஆமாம் அவன் சேட்டைக்காரன் பா உண்மை தான் மா வேதனையை அனுபவித்தது அனுபவித்தது தான் மாற்ற இயலாது

    5. Name selection ellam super sis…. Good start… Acho pavam jp appa starting la eh iranthutaru…. Jp rmba feel panna poran…. Munnadiye aven accept panniruntha intha attack vanthurukathu…. Vizhi kum ipo yarum ilama aairuchu …. Kathai rmba arumaiya iruku sis. . All the best….

    6. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.