193 views
அனைவரையும் நடுங்கச்செய்யும் அந்தகார வேளையிலே ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டின் நடுவே யாரும் அறியாவண்ணம் ஓர் மாளிகை. அதிலிருந்து ஓர் ஓலக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
பதின்மவயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தியின் உடம்பில் நகக்கீறல்கள் பதிந்திருக்க அதிலிருந்து குருதி ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அப்பேதையவளின் ஓலம் அந்தக் காட்டையே நடுங்கச்செய்துகொண்டிருந்தது.
அவள் முன்னே உருவில் பலமடங்கு பெரிய ஓர் ஓநாய் தன் முன்னேயுள்ள இரையை வெறித்தபடி நின்றிருந்தது. அதன் கையிலிருந்த நகங்களில் குருதி படிந்திருந்தது. தன் பசி இன்னும் அடங்கவில்லை எனும் ரீதியில் வாயில் எச்சில் ஒழுக அது தன் இரையை கவ்விப் பிடிக்க தயாராக இருந்தது.
தன் முன்னேயுள்ள ஓநாய் கண்டு கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவுக்கு மரண பீதியுடன் கீழே கிடந்தாள் மங்கையவள். கண்ணிமைக்கும் நொடியில் தன் இரையை நோக்கிப் பாய்ந்த ஓநாய் தன் பற்தடத்தை அவள் உடம்பில் இறக்கியிருந்தது.