இமை 53
விஜய்யின் அலைபேசியில் வீடியோ கால் வரவும் அவனிடமிருந்து ஃபோனை பிடிங்கி அதை உயிர்பித்த எழில் முகத்தில் காயத்துடன் அஷ்வின் முகம் தெரிய, முதலில் அது யார் என்று தெரியாமல் குழம்பிய எழில், “அய்யோ யார் இவங்க முகத்தில் இப்படி காயமா இருக்கு?..” என்று பதட்டமாக கேட்க
எழிலின் பதட்டத்தில் சற்று கடுப்பான விஜய் “உன் அக்கறை, சர்க்கரை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அந்த மூஞ்சியை உத்து பாரு..” என்று கடுப்புடன் சொல்ல, அவன் கோபத்திற்கான காரணம் புரியாமல் அலைபேசியை சற்று உற்று பார்த்தவள் அது அஷ்வின் என்று தெரிந்ததும், ஒரு நொடி தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், விஜய்யை இறுக அணைத்து கொண்டு தன் காதலை வெளிப்படையாக கூறியிருந்தாள்…
அஷ்வினை பார்த்ததும் அக்கறையாக விசாரித்த எழிலை முறைத்து பார்த்து கொண்டு இருந்த விஜய்க்கு எழில் தன் காதலை வெளிப்படையாக கூறி அணைக்கவும், சில கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன் மறு நொடி தானும் எழிலை இறுக அணைத்து கொண்டு, “நானும் லவ் யூ சோ மச் மை அழகி!!.. என்றபடி அவள் இதழில் முத்தமிட போக
“அடேய்.. டேய் நாங்க இங்க தான் இருக்கோம்..” விதுரனும், ஷக்தியும் தங்கள் கண்களை மூடியபடி அவசரமாக சொல்ல, அதில் விஜய் சுயம் அடைந்து சிறு வெட்கம் கலந்த அசட்டு புன்னகையுடன் விலகி அமர்ந்தான்
படுத்திருந்த அஷ்வின் முகத்தை காட்டியபடி ஷக்தி “மிஸ்டர் விஜயேந்திரன்..! இதோ இவன் முகத்தை பார்க்கிற கொடுமையை விட, உன் வெட்கத்தை பார்க்கிறது ரொம்ப கொடுமையாக இருக்குடா.. தயவு செய்து வெட்கம் மட்டும் படாத..” கேலி பேச,
“ஃப்ளவர் வந்துட்டியா..?” விஜய் ஷக்தியின் பின்னால் பார்த்து கேட்க, “அச்சோ இல்லம்மா சும்மா பேசிட்டு இருந்தோம்..” என்று ஷக்தி அவசரமாக திரும்பி சொல்ல அங்கு யாரும் இல்லாததை உணர்ந்து, விஜய்யை முறைத்து பார்த்தான், “அது அந்த பயம் இருக்கணும் மாப்பி..” மீசையை முறுக்கியபடி கண் சிமிட்டி கூறிய விஜய்யை அருகில் இருந்த எழில் ரசித்து பார்த்து கொண்டு இருக்க..
தன்னவளின் பார்வை மாற்றத்தை உணர்ந்த விஜய், “சரி.. சரி அந்த அழுகி போன அஷ்வின் முகத்தை பார்க்கிற கொடுமையும் வேண்டாம்.. என் வெட்கத்தை பார்க்கிற கொடுப்பினையும் வேண்டாம்..”
“நீங்க ஃபோனை வச்சிட்டு போங்கடா என்று இன்டைரக்டாக சொல்ற.. அப்படி தான..?” விதுரன் கேட்க, “சே.சே. அப்படி இல்லைடா.. நான் டைரக்டா தான் சொல்றேன்..” விஜய் நமட்டு சிரிப்புடன் கூற, “இருவரும் விஜய்யை முறைத்தபடி இணைப்பை துண்டித்து விட்டு திரும்ப
“டேய் கதவை திறங்கடா..” தயாளன் கழிவறையில் இருந்து கத்தி கொண்டு இருக்க, “எங்கேயோ கேட்ட குரல்.. இந்த குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..” ஷக்தி யோசிக்க, “அடேய் தயாளனை பாத்ரூம்க்குள்ள வச்சு பூட்டினதை மறந்தே போய்ட்டோம்.. அவர் தான் இப்படி கத்திட்டு இருக்கார்..” தன் இடது புருவத்தை பெருவிரலால் நீவியபடி விதுரன் அந்த அறையில் இருந்த கழிவறை கதவை திறந்து விட்டான்..
சற்று நேரத்திற்கு முன் இங்கு நடந்ததை ரீவைண்ட் செய்வோம்.. விஜய் எழிலை அழைத்து சென்றதும் தங்கள் மனைவிமார்களை அனுப்பி விட்டு அஷ்வின் அறைக்கு வந்தவர்கள், அங்கே கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தயாளனை அவர் சுதாரிக்கும் முன் குண்டு கட்டாக தூக்கி கொண்டு கழிவறையில் விட்டு கதவை அடைத்து விட்டு
அஷ்வினை நெருங்க, தன் அறைக்கு வந்த ஆடவர்களை குழப்பமாக பார்த்து கொண்டு இருந்த அஷ்வின், இருவரும் அவனின் தந்தையை தூக்கி கொண்டு செல்வதை அதிர்ச்சியுடன் பார்த்தவன், கத்தி யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதபடி முகத்தில் இருந்த காயம் வலி கொடுக்க
தன்னை கொல்ல தான் அந்த விஜய் இவர்களை அனுப்பி இருக்கிறானோ என்ற அச்சத்தில் இருவரையும் பார்த்து கொண்டு இருக்க, அவன் நினைத்ததற்கு மாறாக அவர்கள் வீடியோ காலில் யாரையோ அழைத்து தன்னை காண்பிக்கவும் மறுமுனையில் இருந்த எழிலை பார்த்து அதிர்ந்தான்..
அதுவும் அவள் தன்னை பார்த்ததும் விஜய்யை அணைத்து கொண்டு தன் காதலை சொன்னதும் அவன் அதிர்ச்சி இன்னும் அதிகமாக.. எழில் சந்தோஷத்தை வன்மத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.. ஃபோனை வேறுபக்கம் காண்பித்த விதுரன்
“ஷக்தி இது என்ன? தன் ஆள்காட்டி விரலை காண்பித்து கேட்க,
“இது விரல்..” ஷக்தி பதில் சொல்ல
“இதை வச்சு கண்ணை குத்தினால் என்ன ஆகும்?.. விதுரன் கேட்க
“குத்தி பாரேன்..” ஷக்தி சொல்லி முடிக்கும் முன், விதுரன் அஷ்வின் கண்ணை குத்தி விட்டிருந்தான்.. அஷ்வின் வலியில் துடிக்க,
“இவன் வலிக்குதுன்னு சொல்றான்.. அப்படியா பொறு நானும் குத்தி பார்க்கிறேன்.. என்று அஷ்வின் தடுக்கும் முன் அஷ்வினின் மற்றொரு கண்ணில் ஷக்தி குத்தி விட்டிருந்தான்.. “அஷ்வின் வலியில் துடிப்பதை பார்த்து “இந்த கண்ணில் குத்தினாலும் வலிக்குது போல..” என்று ஷக்தி சொல்ல,
“டேய் என் மகனை என்னடா பண்றிங்க.. அவனுக்கு மட்டும் எதாவது ஆச்சு..” என்று உள்ளிருந்து தயாளன் கத்தி கொண்டு இருக்கும் போது தான் விதுரன் கதவை திறந்து விட்டான்.. கண்களை மூடிக் கொண்டு வலியில் கத்தி கொண்டு இருந்த அஷ்வினின் அருகில் வந்தவர்,
“என்னடா ஆச்சு.. இவனுங்க என்ன செஞ்சானுங்க.. அடேய் என்னடா செஞ்சிங்க என் பையனை..?” தயாளன் ஆவேசமாக கேட்டபடி இருவரையும் திரும்பி பார்க்க ஷக்தியும், விதுரனும் எப்போதோ அங்கிருந்து சென்று விட்டிருந்தனர்.. “பொடி பசங்க பயந்துட்டானுங்க..” தயாளன் முணங்கியபடி மருத்துவரை அழைத்து அஷ்வின் கண்களை பார்க்க சொல்லிவிட்டு
அலைபேசியில் தன் ஆட்களை அழைத்து மருத்துவமனை வரும்படி கூறியவர் அவர்கள் வந்ததும் அங்கு அஷ்வின் காவலுக்கு அவர்களை இருக்க வைத்து விட்டு இன்னும் சிலரை தன்னுடன் அழைத்துச் செல்ல, அஷ்வின் அவர் கரத்தை பற்றி கொண்டு விட மறுத்தான்..
“நான் இங்கேயே இருந்தால் இவனுங்களை எதுவும் செய்ய முடியாது.. அவனுங்களை எதாவது செய்யணும்னா நான் வெளியே போகணும்..” தயாளன் கூறிய அடுத்த நொடி அஷ்வின் அவர் கரத்தை விட்டிருந்தான்..
இங்கு தான் கூறும் முன்பே அஸ்வினுக்கு தண்டனை கொடுத்திருந்த விஜய்யை நினைத்து எழில் மனம் கர்வம் கொண்டது.. அதுவும் தான் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தாளோ அதையே செய்திருந்தை பார்த்ததும் சந்தோசத்தில் திக்குமுக்காடி போனாள்.. தன்னை மறந்து தன் காதலை வெளிப்படையாக கூறிவிட்டாள்..
ஷக்தியும் விதுரனும் அழைப்பை துண்டித்ததும், “ஆனாலும் இந்த அண்ணாங்க உங்களை வச்சு செய்றாங்கள்ல ஆனாலும் நல்லா இருக்கு..” என்று சிரிப்புடன் கூறிய எழிலை விஜய் முறைத்து பார்த்து
“ஓ அவனுங்க என்னை கலாய்க்கிறது உனக்கு பிடிச்சிருக்கு அப்படி தானே?” விஜய் கோபம் போல் கேட்க “ உங்களுக்கு இன்னும் சரியாக கோப பட தெரியலை மிஸ்டர் ஹோட்டல் கார்..” என்று கேலி பேசிய ராங்கியின் உதடுகளுக்கு தக்க தண்டனை கொடுத்த பிறகே அவளை விட, “வர வர பேட் பாய் ஆகிட்டு வர்றிங்க..” தன் உதட்டை துடைத்தபடி பொய் கோபத்துடன் கூறிய எழிலை அணைத்து கொண்ட விஜய்,
“இனியும் நாம இங்க தனியாக இருந்தால் நிச்சயமாக நான் பேட் பாயாக தான் ஆகிடுவேன் நினைக்கிறேன்..” என்ற கண் சிமிட்டி கூறிய விஜய்யின் பார்வையில் முகம் சிவந்த எழில், “போதும் போதும் வீட்டுக்கு போகலாம் காரை எடுங்க..” என்று உத்தரவிட்டு விஜய்யிடம் இருந்து விலகி அமர்ந்தாள்..
மறுப்பு எதுவும் கூறாமல் காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஜய்யிடம் “அந்த அஷ்வினை இப்படி செய்விங்க நான் இதை நினைச்சே பார்க்கல தெரியுமா..? அதுவும் நான் அவனை எப்படி பனிஷ் செய்யணும் என்று சொன்ன அடுத்த நொடி அவனை அப்படி காயத்தோடு காட்டுனிங்க இது எப்படி சாத்தியம்?.. எழில் இன்னும் வியப்பு மாறாமல் கேட்க
“நான் இங்கே தானே இருக்கேன் அதான் நீ மனசுக்குள் நினைச்சதை நான் செஞ்சு முடிச்சேன்..” விஜய் எழில் நெஞ்சு குழியை ஒரு விரலால் தொட்டு காண்பித்து கூற, எழிலிற்கு அவன் தொடுகையில் உடல் சிலிர்க்க விஜய்யை நிமிர்ந்து பார்த்த எழில், “ஏன் நான் இங்க இல்லையா.. இங்க இருக்கிற என்கிட்ட கேட்க வேண்டியது தான” பதிலுக்கு எழிலும் அவன் இதய பகுதியை சுட்டி காட்டி கூற,
“விஜய் இல்லை என்று மறுப்பாக கூறவும் அவனை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த எழிலிடம் என் இதயமே நீ தானே..” என்று கண்சிமிட்டி கூறவும், “உங்களை..” என்று விஜய்யின் கழுத்தை நெறிப்பது போல் தன் கரத்தை விஜய்யின் கழுத்தை நோக்கி கொண்டு போக.. அந்த கள்வனோ அழகான வசீகர புன்னகையுடன் அவளையை பார்த்து கொண்டு இருந்தான்..
அவன் பார்வையில் எழில் தன் கரத்தை கீழே இறக்கி விட்டு விஜய் தோள் சாய்ந்து கொண்டாள்
யாராவது துன்பத்தில் இருந்தா அவங்களுக்கு உதவி செய்யலேனாலும் பரவாயில்லை ஆனால் அவங்களை பார்த்து சந்தோஷ பட கூடாது என்று சொல்லி தான் வளர்த்தாங்க.. ஆனாலும் இந்த அஷ்வின் இப்படி இருக்கிறதை பார்த்ததும், என்னை மீறி சந்தோஷத்தை வெளிப்படுத்திட்டேன்..”
“எப்போதும் உன் சந்தோஷத்தை நீ இப்படி தான் வெளிப்படுத்தனும் ராங்கி..” என்று விஜய் குறும்பாக கண்சிமிட்டி கூற, விஜய் கூறியது முதலில் புரியாமல் பார்த்த எழில், தான் சந்தோஷத்தில் அவனை அணைத்ததை கூறுகிறான் என்று புரிந்ததும், முகம் சிவக்க முகத்தை மறுபக்கம் திருப்பி கொண்டு,
“இப்படியே பேசிட்டு இருந்திங்கன்னா நான் காரை விட்டு இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்டுவேன்..” என்று மிரட்ட,
“வாய்ப்பில்லை லிட்டில் கேர்ள்.. இது ஒன்வே.. என்கிட்ட வந்துட்டேல்ல இனி திரும்ப போக முடியாது.. இந்த காரிலேயும், வாழ்க்கையிலேயும்” என்று அழுத்தமாக கூறியவன் குரலில் மிரட்டல் இருக்க, ஏனோ அந்த குரல் அவளுக்கு பயத்தை கொடுப்பதற்கு பதிலாக பாதுகாப்பையே கொடுத்தது.. இருவரும் வீடு வந்து சேர, அங்கு இவர்களுக்காக அனைவரும் காத்து கொண்டு இருந்தனர்.. அதிலும் சுமித்ரா விஜய்யை பெரும் கோபத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்.
வெகு நேரம் இருவரையும் பார்க்காமல் இருந்த உள்ளே வந்து கொண்டிருந்த விஜய், எழிலை பார்த்து அவர்களிடம் ஓடி வந்தாள்.. தங்களிடம் ஓடி வந்த நேத்ராவை தூக்கி கொண்ட விஜய், “மை ஸ்வீட் பேபி.. எங்களை காணோம் என்று தேடுனிங்களா..” அழுது கொண்டு இருந்த நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டு கேட்க
விஜய்யின் கழுத்தை கட்டி கொண்ட நேத்ரா “ஆமா உங்களை காணோம்.. ம்மா எங்க போனிங்க?.. நான் பயந்து போய்ட்டேன்.. என்று அழுத நேத்ராவை இருவரும் சமாதானம் செய்து கொண்டு இருக்க, விஜய் அருகில் வந்த சுமித்ரா அவனை ஓங்கி அறைந்திருந்தார்.. ஒரு நிமிடம் அங்கு ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருக்க அனைவரும் சுமித்ராவையும், விஜய்யையும் அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்தனர்..
“உன்னோட விளையாட்டுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியா எல்லாரையும் பதட்டபட வைப்பது.. அப்படி என்னடா பெரிய காதல் பொல்லாத காதல்.. ஊர் உலகத்தில் வேற பொண்ணே உனக்கு இல்லையா.. அப்படி என்னடா இவ உனக்கு முக்கியமா போய்ட்டா..!? என்று ஆத்திரமாக கேட்க
அன்னையின் பேச்சில் திகைத்த விஜய், “அம்மா நான் செஞ்சது தப்பு தான் அதுக்காக ஏன்மா இப்படி பேசறிங்க?. எனக்கு லிட்டில் கேர்ள் எவ்வளவு முக்கியம் என்று இங்க இருக்கிற எல்லாரையும் விட உங்களுக்கு தெரியும் தானே..” விஜய் தன் அன்னையை பரிதாபமாக பார்க்க
“அதுக்காக சாகிற வரைக்கும் போவியா.. விசயம் கேள்விப்பட்டதும் நான் எப்படி துடிச்சு போனேன் தெரியுமா.. எல்லாம் நடிப்பு என்று தெரிந்ததும் உன் மேலே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது..” என்று கோபமாக பேசிய சுமித்ராவை திகைப்போடு பார்த்த எழில்,
“ஆண்டி பிளீஸ் தப்பு என் மேல தான்..” என்று இடைமறித்து
“நான் உன்கிட்ட எதுவும் பேசலம்மா என் பையன் கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீ கொஞ்ச நேரம் அமைதியாக இரு..” என்று முகத்தில் அடித்தார் போல் கூறிய சுமித்ராவை எழில் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க
“அம்மா.. என்னம்மா இப்படி பேசறிங்க.. நான் எது செஞ்சாலும் எனக்கு முழு சப்போர்ட்டா இருக்கிற நீங்களே இப்படி பேசறிங்க..?. ஆதங்கமாக கேட்ட விஜய்யிடம்,
அதான் நான் செஞ்ச பெரிய தப்பு.. இப்போ சொல்றேன் கேட்டுக்க இனி இந்த பொண்ணு எனக்கு மருமகளா வர கூடாது.. வரவே கூடாது..” என்று உத்தரவிட
“நீங்க என்ன என்னை மறுக்கிறது.. நானே இவரை விட்டு..” என்ற எழிலை இடைமறித்து
“ஏய் இன்னொரு வார்த்தை எதாவது பேசின நான் உன்னை கொன்றுவேன்..” என்று கோபத்தில் கர்ஜித்த விஜய்யிடம் சுமித்ரா எதுவோ கூற
விஜய்யோடு சேர்ந்த அங்கிருந்த அனைவரும் உச்சபட்ச அதிர்ச்சியில் சுமித்ராவை பார்த்தபடி நின்றிருந்தனர்..
அப்படி சுமித்ரா என்ன சொல்லி இருப்பாங்க.. தெரிஞ்சா பதில் கமெண்ட்ல சொல்லுங்க நட்பூக்களே..
அப்பறம் போலி டாக்டர் யார் என்று கேட்டிருந்திங்க அவரும் அடுத்த பதிவில் வருவாங்க..