Loading

வாங்க மக்களே கதைக்குள்ள போகலாம் …………

எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டே போய்ட்டு இருக்காங்க ………….இன்பாக்கு அப்போ தான் அந்த புத்தகம் ஞாபகம் வருது ……….அதை எடுத்து படிக்குறா ………….

இனியன் : என்ன மா படிக்க ஸ்டார்ட் பண்ணியாச்சா

இன்பா : ஆமா பா நீயும் வரியா படிக்கலாம்

இனியன் : ஹாபா சாமி நீயே படி என்ன விடு

இன்பா : போ பா

இன்பா படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டா …………….

ரகு : படிக்க ஆரமிச்சுட்டா போலயே

அஞ்சலி : ஆமா ஆமா படிக்கட்டும்

100 வருஷம் முன்னாடி …………மருத்துவ மலை செல்வ செழிப்பா இருந்துச்சு ………….அங்க அந்த ராஜா பரம்பரை தான் எல்லாமே அந்த மக்களுக்கு எல்லாமே அவ்ளோ நல்லா செஞ்சாங்க ………….அங்க இருக்க மக்களுக்கு இந்த ராஜா வீட்டுமேல அவ்ளோ பாசம் வெச்சிருக்காங்க ………….ராஜா பேரு அதியன் ராணி பேரு செந்தளிர் இவங்களுக்கு இரண்டு பெண் குழந்தைங்க மூத்த பொண்ணு பேறு அகில்மதி இரண்டாவது பொண்ணு பேரு எழில்மதி ……….அகில்மதி பேருக்கேத்த மாறியே பிரகாசமா இருப்பா ………வீரமா இருப்பா ………………யாருக்கும் பயப்பட மாட்ட …………..எந்த விசியம்னாலும் தைரியமா பேசுவா ………………..ஆனா எழில்மதி அப்டி இல்லை பயந்தவ ………..அவளுக்கு அம்மா ஆப்ப தான் உலகம் ……………அகில்மதிக்கு வரன் பாத்துட்டு இருந்தாங்க ஆனா ஆகில்மதி பிடிப்பு இல்லாமையே இருந்தா ………………………

செந்தளிர் : அகில்மதி நீர் என்ன தான் நினைத்து கொண்டு உள்ளாய் உன் தந்தை உனக்காக இவ்ளோ வரன் பார்க்கிறார் அனால் நீர் எதுமே கூற மாட்டேங்கிறாய் நாங்கள் என்ன தான் செய்வது

அகில்மதி : அன்னையே என்னை மன்னித்து விடுங்கள் நான் ஒருவரை

செந்தளிர் ; ஒருவரை………….

அகில்மதி : விரும்புகிறேன்

செந்தளிர் : யார் அது

அகில்மதி : நம் ருத்திரனை ……………

செந்தளிர் :அகில்மதி 😡😡😡😡😡

அகில்மதி : அன்னையே …………😰😰😰😰

செந்தளிர் : பேசாதே ……..என்ன சொல்கிறாய் ஒரு படைத்தலைவனை

அகில்மதி : ஆமாம் நம் படைத்தலைவனை தான்

செந்தளிர் : இன்னோரு முறை வார்த்தையை கூறாதே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை

அகில்மதி : அன்னையே ஏன்

செந்தளிர் ; அவர்கள் நம் தகுதிக்கு உள்ளவர்களா நாம் எங்கே அவர்கள் எங்கே

அகில்மதி : அன்னையே இது தான் என் முடிவு நான் ருத்திரனை தான் விரும்புகிறேன் இதில் மாற்றம் இல்லை

அதியன் : சபாஷ் மகளே சபாஷ்

அகில்மதி : தந்தையே

அதியன்: உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம் மகளே

அகில்மதி : தந்தையே

அதியன் : ஆம் மகளே………..உன் விருப்பப்படி நடக்கட்டும்

அகிலமதி : மிகவும் நன்றி தந்தையே

அகிலமதி ரொம்ப சந்தோசமா அவளோட அறைக்கு போய்ட்டா ……………

செந்தளிர் : என்ன அரசே நீங்கள் இப்படி செய்து விட்டர்கள்

அதியன் : என்ன தளிர் நான் நம் மகளுக்காக இவ் வார்த்தையை கூறினேன் ஆனால் அவன் உயிரோடு இருந்தால் தானே நம் மகள் அவனை விவாகம் செய்ய இயலும்

செந்தளிர் : மிகவும் நல்ல யோசனை தான் ………..ஆனால் நம் மகளின் நிலைமை

அதியன் : அதை பற்றி நீர் வருத்தம் கொள்ளாதே நான் பார்த்து கொள்கிறேன்

செந்தளிர் : நல்லது அரசே ………………..

இனியன் : இன்பா…….ஹே இன்பா

இன்பா : என்ன ஆச்சு

இனியன் : ஒன்னும் இல்லை சாப்பிடலாம் வா

இன்பா : இதுக்கா இப்டி கூப்பிட

இனியன் : ஆமா

இன்பா : எவ்ளோ ஆர்வமா படுச்சுட்டு இருந்தேன் தெரியுமா

இனியன் : பரவலா வா சாப்டுட்டு படிக்கலாம்

இன்பா : சரி வா

அங்க ஏற்கனவே ரகுவும் அஞ்சலியும் சாப்பாட்டை எடுத்து வெச்சுட்டு இருந்தாங்க ……….

இன்பா : ஆமா எப்போ வாங்குனீங்க

ரகு : நீ இந்த உலகத்துல இருந்தா ஆகும் புக் படிக்கச் ஆரமிச்ச உடனே உலகத்தை மறந்துட்டா என்ன செய்ய

இன்பா : சரி…….சரி………….வாங்க சாப்பிடலாம் …………..

எல்லாரும்  உக்காந்து சாப்பிட்டாங்க ………..

அஞ்சலி : நான் பாட்டு கேக்க போறேன் நீங்கல்லாம்

ரகு : நான் தூங்க போறேன்

இனியன் : நான் கொஞ்ச நேரம் காத்து வாங்க போறேன்

இன்பா : நான் புக் தான்

இனியன் : ஹே வா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்

இன்பா : சரி  வா

இவங்க ரெண்டு பேரும் கதவுகிட்ட வந்துட்டாங்க ……………..

இனியன் : நீ என்ன படுச்சுருக்க

இன்பா ; bs .c .cycology  நீங்க

இனியன்: நான் agri

இன்பா : நீங்க agri  படுச்சுட்டு ஏன் இந்த வேளைக்கு வந்தேங்க

இனியன் : ஒரு மாறுதலுக்கு தான்

இன்பா : சரி  பா

இனியன் : உங்க அம்மா அப்பா என்ன பன்றாங்க

இன்பா : எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான்

இனியன் : சாரி

இன்பா : பரவால்லை அப்பா நான் சின்ன வயசா இருக்கிறப்போவே இறந்துட்டார் அம்மா தான் என்னை வளத்தாங்க ………..

இனியன் : ஹ்ம்ம் பேரு என்ன

இன்பா : அம்மா பேரு செந்தமிழ் அப்பா பேரு அகத்தியன்

இனியன் : சரி சரி………….

இன்பா : நான் போய் புக் படிக்கவா

இனியன் : வேணாம் நாளைக்கு காலைல படி இப்போ அமைதியா இரு

இன்பா : அப்படிங்கிற

இனியன் : ஆமா

இன்பா : சரி பா தூங்கலாமா

இனியன் : தூங்கலாமே

இவங்க இரண்டு பேரும் போய் படுத்து தூங்கிட்டாங்க …………..எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருகாங்க ……………

ஒரு காடு ஒரே ஆந்தை சத்தமா கேக்குது அதுக்குள்ள இன்பா நடந்து போய்ட்டு இருக்கா ………….யாரோ இன்பாவை கூப்பிடுறாங்க ………..

இன்பா : யாரு அது

இன்பாவ யாரோ பின்தொடர்ந்து வராங்க திரும்பி பார்த்தா அங்க யாருமே இல்லை ………திடீர்னு அவ முன்னாடி இனியன் வரான் ……………

இன்பா : நீ இங்க என்ன பண்ற வா சீக்கிரமா இங்க இருந்து போய்டலாம் ……….

இனியன் : நம்ப இங்க இருந்து போகமுடியாது இன்பா

இன்பா : ஆனா ஏன்

இனியன் : நம்ப இங்க மாட்டிகிட்டோம் போகமுடியாது அந்த மொழியாள் நம்பலை விடமாட்டா

இன்பா : யார் அந்த மொழியாள் அவ ஏன் நம்மள விடணும்

இனியன் : அவளுக்கு உன்னை பிடிக்காது

இன்பா : ஏன் அவளுக்கு என்னை பிடிக்காது

இனியன் : ஏன்னா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதுனாலே அவளுக்கு உன்னை பிடிக்காது

இன்பா : எனக்கு புரில என்ன சொல்ற நீ

அப்போ எங்க இருந்தோ வந்த ஒரு உடம்பு இல்லாத தலை இன்பா காலுக்கிட்ட விழுது…………….

இன்பா : 😱😱😱😱   ஆஆஆஆஅ …………

இவ கத்துனா சத்தத்துல இனியன் ,ரகு ,அஞ்சலி வேகமா இவை கிட்ட வந்தாங்க …………

இன்பா : காப்பாத்துங்க ……….

இனியன் : ஹே  ஹே  ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை

அப்போ தான் இன்பா கண்ணு முழுச்சு பார்த்தா ……………..எல்லாமே கனவு ………

அஞ்சலி : ரிலாக்ஸ் ஒன்னும் இல்லை

இன்பா : தண்ணீ ……..

ரகு : இந்தா குடி

இன்பா : ம்ம்ம்ம்

வேகமா தண்ணி குடுச்சா …………….

இனியன் : கெட்ட கனவா

இன்பா : ஆமா பா

இனியன் : சரி விடு அமைதியா தூங்கு

இன்பா : ம்ம்ம் …………………

எல்லாரும் தூங்க போய்ட்டாங்க …………….இன்பா அவ மனசுக்குலயே நெனைச்சுகிட்டா …………

இன்பா : யார் அது மொழியாள் இனியன் தான் என் கனவுல வந்தது ………..ஒன்னுமே புரிலயே ……….

அதே நேரம் காட்டுக்குள்ள……………

பள்ளத்துல விழுந்த ராம் மெதுவா எழுந்து மேல வந்தான் ………….கும் இருட்டு …………கண்ணு  தெரியாம மெதுவா மேல எழுந்து வந்தான் ………….

ராம் : விக்கி ………விக்கி …………..

அப்படி ஒரு மயான அமைதி ………….ஒரு குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேக்கும் அவ்ளோ அமைதி ………..ராம் விக்கியை தேடிகிட்டு மறுபடியும் காட்டுக்குள்ள போனான் ……………

ராம் : விக்கி எங்க டா இருக்க 😭😭😭😭

அப்போ அங்க ஏதோ சத்தம் கேட்டுச்சு ………….ராம் பயந்துட்டே திரும்பி பார்த்தான் …………..தலை இல்லாம  முண்டம் மட்டும் இருந்துச்சு ………….

ராம் : ஆஆஆஆ …………..

அவனோட சத்தம் அந்த காடுமுழுக்க கேட்டுச்சு …………..

கொஞ்ச நேரத்துல அங்க இருந்த ஒரு மரத்துல ராம் தலைகீழா தொங்கிட்டு இருந்தான் உயிர் இல்லாம …………..அவனோட உடம்புல ரத்தம் இல்ல ………….அவனோட கூடல் வயித்துல இருந்து வெளிய இருந்துச்சு ……………அவனோட கூடலை ஒரு உருவம் ரசுச்சு சாப்டுட்டு இருந்துச்சு ……………அவனோட ரத்தத்தை ஒரு உருவம் ரசுச்சு குடுச்சுட்டு இருந்துச்சு ………………………அப்போ அங்க ஒரு கருப்பு உருவம் வந்துச்சு ……………

கருப்பு உருவம் : சாப்பிடுங்க நல்ல சாப்பிடுங்க …………

அங்க அவனோட ரத்தத்தை குடுச்சுட்டு இருந்த உருவம் இந்த கருப்பு உருவம் கிட்ட வந்துச்சு ………………

உருவம் : சொல்லுங்க ராணி நாங்க என்ன பண்ணனும்

கருப்பு உருவம் : உங்களுக்கு இப்போ வேலை இல்லை ஆனா கூடிய சீக்ரம் வரும்

உருவம் : உங்களுக்காக என்ன வேணா செய்வோம் ராணி

கருப்பு உருவம் : சந்தோசம் பொய் ரத்தத்தை குடி

உருவம் : அகில்மதி உன்னை விடமாட்டேன் என் ருத்திரனை நீ அழைத்து சென்றுவிட்டாய் ஆனால் நான் உன்னை உயிரோட விடமாட்டேன் இம்முறை ………………..

அந்த காடே அதிரூர அளவுக்கு கத்துச்சு …………………………

அந்த உருவம் யாரு ?? இன்பாக்கு  ஏன் இப்படி ஒரு கனவு வரணும்  ?? அகில்மதி அப்போ உயிரோடையா இருகாங்க ?? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் நண்பர்களே ………………

மீண்டும் வருவாள் ……………..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்