Loading

இசை – 4

ஓங்கி ஒலித்த நதியின் குரலில் இருவரும் நெருப்புக்கனலை கக்கியபடி நின்றனர். தன்னை அடித்து விட்டான் என்று பிறைக்கும், எப்படி தன் அனுமதி இல்லாமல் தன்மேல் கை வைக்கலாம் என்று ஆத்ரேயனுக்கும் கோவம்.

அடிக்கும் காற்றையும் மழையையும் மறந்து சண்டைக்கோழிகளாக இருவரும் முறைத்து கொண்டு நிற்க, “எப்பா ராசா எங்க உயிரை காப்பாத்துபா” என்று ஆத்ரேயனை சுரண்டினான் மதன்.

தளிரும் பயத்தில் மதனை பிடித்து கொண்டு நிற்க, ஹாசினியும் விடாமல் வேதாவோடு ஒன்றி நின்றாள். வேதாவுடன் வேறு பெண் ஒன்றி நிற்பதை கண்டதும் தளிருக்கு வயிறு எரிந்தது. தனக்கு ஏன் இவ்வாறு தோன்றுகிறது? என்று புரியாமல் கோவத்தை இழுத்து பிடித்து கொண்டு நின்றாள்.

“தேவியே ஏன் இந்த தயக்கம்” என்று மீண்டும் நதியின் குரல் எதிரொலிக்க, “ஏய் நீ யாரு முதல்ல?” என்று ஆத்ரேயனின் மீதிருந்த கோவத்தை நதியின் மீது காட்டினாள்.

கடுப்பாகிய வருண் “அது யாரா இருந்தா உனக்கு என்ன? முதல்ல எங்க உயிரை காப்பாத்து” என்று மன்றாட, “கண்ணை திறந்து பாரு எருமை… நானும் சாவா வாழ்வானு தான் போராடிட்டு இருக்கேன்” என்று எகிறினாள் பிறையும்.

அடிக்கும் காற்றில் பறந்து விடுவோமோ? என்ற பயத்தில் “அதான் நல்லுள்ளம் கொண்ட பேய் ஒண்ணு சொல்லுதே அந்த ஆளு கூட சேர்ந்து நதில நின்னா இந்த காத்தும் மழையும் நின்னுரும்னு” என்று வேதாவும் கெஞ்சிட, “என்னால முடியாது” என்றாள் பிறை வீம்புடன்.

மதனும் “ஆதி தங்கம் ப்ளீஸ் தங்கம்… அந்த பொண்ணை கூட்டிட்டு போய் நதில நில்லுடா” என்று கெஞ்ச, குளிரில் நடுங்கியபடி “அண்ணா என்னால முடில” என்று தளிரும் கலங்கிட, “உன்னைய நம்பி இங்க வந்ததுக்கு எனக்கு இது தேவைதான் போல” என்றான் மதன்.

அசால்ட்டாக ஆத்ரேயன் “நானா இங்க வரலாம்னு சொன்னேன்” என்று எதிர்கேள்வியை எழுப்ப, “எப்பா ராசா… நான்தான் கூட்டிட்டு வந்தேன் போதுமா? தயவு செஞ்சு இந்த கன்னிப்பையன் உயிரை காப்பாத்துபா” என்றவன் விட்டால் அழுது விடுவேன் என்ற ரீதியில் இருந்தான்.

இன்னும் ஹாசினி வேதாவை ஒட்டி நின்றிருப்பதை கண்டு தளிருக்கு கோவம் கோவமாக வர, அமைதியாக நிற்க பெரும்பாடு பட்டு போனாள். நிமிடங்கள் கடக்க கடக்க நதியின் அடங்காத கோவத்தில் காற்றும் மழையும் அதிகரிக்க தொடங்கியது.. “டேய் போய் தொலையேன்டா” என்று ஒருபுறம் மதனும், “பிறை உனக்கு நாங்க முக்கியம் இல்லையா?” என்று மறுபுறம் வருணும் வேதாவும் பெண்ணவளின் மனதை கரைக்க முயன்றனர்.

குளிரில் நடுங்கிய தளிருக்கு உடல் நடுக்கம் எடுக்க தொடங்கியதில் “அண்ணா என்னால முடில” என்று வெடவெடத்து போய் முணுங்கிட, இதற்கிடையில் இவர்களுடன் சிக்கி இருந்த பாதி பேர் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதை கண்ட ஆத்ரேயனின் மனது இளகியதோ என்னவோ?

திரும்பி பிறையை ஏறிட்டவனின் விழிகள் பெண்மகளை அளந்தது.. அவள் ஒன்றும் பேரழகி அல்ல.. மாநிறமாக இருந்தாலும் கலையான முகம் தான்.. அதற்கு பொருத்தமே இல்லாமல் எப்போதும் விஷத்தை கக்கிடும் கருந்தேள் விழிகள்..

இப்போதும் ஆடவன் தன்னை எடை போடுவதை உணர்ந்த பெண்ணவளின் கருந்தேள் விழிகள் விஷத்தை ஆண்மகனின் மீது பாய்ச்சிட தொடங்க, அதை அலட்சியமாக ஒதுக்கியவன் பிறையின் கையை பிடித்தான்.

அவ்வளவுதான் பிறையின் சிரமதில் சினமேற, அவனிடமிருந்து கையை விலக்கிட முற்பட்டாள்.. அவன் விட்டால் தானே? வலுக்கட்டாயமாக தன் விரலுடன் அவள் விரலை பிணைத்த ஆத்ரேயன் அவளை இழுத்து கொண்டு சலசலத்து ஓடிய நதியின் அருகே செல்ல செல்ல காற்றும் மழையும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

விட்டால் தாங்களும் நதியுடன் அடித்து செல்லப்பட்டு விடுவோமோ? என்ற பயத்தில் ஒருவரை ஒருவர் விடாமல் பற்றி இருக்க, தூக்கி அடித்த காற்றில் மதனை பிடித்திருந்த தளிரின் கரங்கள் லேசாக விடுபட்டதில் “அண்ணா” என்று கத்தினாள்.

அதற்குள் வேதா தளிரை பிடித்து தன்பக்கம் இழுத்திருக்க, வேதாவை பிடித்திருந்த ஹாசினி தடுமாறிய நேரத்தில் அவளை வருண் பிடித்து கொண்டான். பாவம் மதன் தான் யாரையும் பிடிக்க வழியில்லாமல் மரத்தை கட்டி கொண்டு “எல்லாம் ஜோடி ஜோடியா கட்டி பிடிச்சுட்டு சுத்துதுக நான் மட்டும்… ஙே” என வராத கண்ணீரை சுண்டி விட்டு புலம்பினான் அந்நிலையிலும்!

ஆத்ரேயனின் வலுக்கட்டாயத்தில் தன் கையை ஆடவனின் கைக்குள் பொருத்தி இருந்த பிறை, நதியை நெருங்கும் சமயம் இறுக்கி பிடித்து கொண்டு “யாழ்வரே!” என்று முணுங்கினாள்.

ஆத்ரேயனின் மனதும் ஏதோ தான் இழந்த ஒன்றை பெற்று விட்டோம் என்பதை போல் தான் துடித்தது.. இருவரும் காலை நதியில் வைக்கும்போது ஒருவரை ஒருவர் விழிகளால் தழுவி கொண்டனர்.. அப்பார்வையில் சிறிதும் கோவமில்லை ஏதோ விரக்தி ஒன்று தான் இருந்தது.

மழைநீருடன் சலசலத்து ஓடிய நதி, தன் தேவன் தேவியின் பாதம் பட்டதும் அமைதியாகிட, விடாது பெய்த மழையும், காற்றும் கூட சட்டென்று அடங்கியது. “தேவியே!” என்று தழுதழுக்க வந்த குரல் “எம்மை மன்னித்து விடுங்கள்.. தாங்கள் இருவரையும் வரவழைக்க எமக்கு வேறு வழி தெரியவில்லை” என்று மனதார மன்னிப்பை கோரி அவர்களின் பாதத்தை நனைத்தது.

நடந்தது என்னவென்று புரியவில்லை.. சுயநினைவு வந்ததும் படக்கென்று இருவரும் கையை  பிரித்து கொண்டவர்கள் மீண்டும் முறைத்து கொண்டனர். வேதாவின் பிடியில் நின்றிருந்த தளிரை வெடுக்கென்று தள்ளி விட்ட ஹாசினி “அவன் என் ஆளு” என்றாள் சினம் மிகுந்து.

ஹாசினி தள்ளி விட்டதில் தடுமாறி கீழே விழுந்த தளிரின் கையை சிறுசிறு முட்கள் பதம் பார்க்க, “அம்மா” என்று வலியில் அலறினாள். “ஹே லூசே” என்று ஹாசினியை அடக்கியவன் தளிரை தூக்கி விட்டான்.

“வேதா” என்ற ஹாசினியை கண்டு கொள்ளாமல் “ரொம்ப அடிப்பட்டிருச்சா?” என்று மென்மையாக வினவிட, அவனின் சாந்தமான கேள்வியில் “இல்லை” என்றாள் தலையை குனிந்து.

ஹாசினி மன்னிப்பு கேட்க மாட்டாள் என்று தெரிந்து வேதாவே “அவங்களுக்கு பதிலா நான் சாரி கேட்டுக்கறேன்.. மனசுல வெச்சுக்காதீங்க” என்று மன்னிப்பை வேண்ட, “வேதா நீ ஏன்டா இவகிட்ட மன்னிப்பு கேட்கணும்.. அவதான் கேட்கணும்.. முதல்ல உன்னைய அடிச்சது அவதான்” என்று தளிர் அடித்ததை ஞாபகப்படுத்தினாள்.

ஆனால் தளிருக்கும் சரி வேதாவிற்கும் சரி அந்த ஞாபகமே இல்லாமல் போக, “நான் எப்ப அடிச்சேன்” என்று தளிரும், “இவங்க எப்ப என்னைய அடிச்சாங்க” என்று வேதாவும் ஒருசேர கேட்டனர்.

வருணும் மதனும் வாயை பிளந்திட, “வேதா” என்று வந்த ஹாசினியின் வார்த்தையை காதில் வாங்கி கொள்ளாத வேதா “இங்க பாரு ஹாசினி உன்மேல எப்பவும் எனக்கு காதல் வராதுனு எத்தனை தடவை சொல்றது.. நீ காதலிக்கறேனு என்மேல ஓவரா உரிமை எடுத்துக்கறது நல்லதுக்கு இல்ல இப்பவே சொல்லிட்டேன்” என்றான் காட்டமாக.

இதில் ஹாசினியின் கண்கள் கலங்கி கண்ணீரை உகுக்க தயாராக, “சாரிங்க” என்று மீண்டும் தளிரிடம் மன்னிப்பு கேட்டவன் பிறை எங்குவென்று தேடினான்.

இன்னும் பிறையும் ஆத்ரேயனும் சீறும் கோழிகளாக தான் நின்றிருந்தனர்.. “ப்ரோ” என்ற வேதாவை முறைத்த ஆத்ரேயன் “யாருக்கு யாருடா ப்ரோ?” என்று கொந்தளித்தான்.

‘இப்ப என்ன சொல்லிட்டோம்னு இப்படி கத்தறாரு’ என்று வேதா முழிக்க, மதனோ “ஏன் பாஸ் உங்க தோஸ்துக்கு உறவுமுறை தெரியாதா?” என்று தீவிரமாக கேட்டான் வருணிடம்.

“ஏன் பாஸ்” என்று வருணும் புரியாமல் கேட்க, “இல்ல இங்க இருக்கற ஒரு பேய் அம்மா அவங்க ரெண்டு பேருத்தை ஒண்ணு சேர்க்க போராடிட்டு இருக்கு.. அந்த நேரத்துல இவரு ப்ரோனு கூப்பிட்டா எப்படி? அக்காவோட புருசன் மச்சான் தான் ஆவாரே?” என்று முடித்தான் நியாயமான பதிலில்.

இதை ஆத்ரேயனும் பிறையும் மட்டும் கேட்டிருந்தால் அவனுக்கு சங்கு ஊதி இருப்பார்கள்.. அவனின் நல்ல நேரம் இதை தளிர் மட்டுமே கேட்டிருக்க, “அண்ணாக்கு ஏத்த ஜோடி தான்” என்று மனதினுள்ளே சிரித்து கொண்டாள்.

“பாஸ் என் பிரெண்டுக்கு அண்ணாங்கற வார்த்தை அலர்ஜி அதான்” என்று பல்லை காட்டிய மதனை பாராபட்சம் பார்க்காமல் மூக்கிலே இரண்டு குத்து விட்ட ஆத்ரேயன் “கொன்றுவேன் பார்த்துக்க” என்று மிரட்டினான்.

நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு “பாஸ் பாஸ் முதல்ல நம்ம இங்கிருந்து வெளில போகணும்.. அதற்கான வழியை தேடுவோம்” என்ற வருணின் கூற்றே அனைவருக்கும் சரியெனப்பட்டது.

முதலில் தங்களுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று தேட, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒருபுறம் ஒதுங்கி இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சுடன் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

என்ன நடந்துச்சு?

இப்ப நம்ம எங்க இருக்கோம்?

நம்மளைய காணாம தேடுவாங்களா?

அய்யோ நம்ம அவ்வளவுதானா?

என்னைய காணாம என் புள்ளக அழுவாங்களே?

நான் இல்லாம என் பொண்டாட்டி, புள்ளக என்ன பண்ணுவாங்களோ?

ப்ச் என் அம்மா அப்பவே சொல்லுச்சு நான் கேட்காம வந்து இப்படி மாட்டிக்கிட்டனே? என்று பலவாறான புலம்பல்கள் தான் அங்கு எதிரொலித்தது.

ஏனோ பிறையின் மனது தன்னால் தான் இவர்களுக்கு இந்நிலையோ என்று இம்சிக்க, தன்னை பின்தொடரும் குரலை எதிர்ப்பார்த்து காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பேசாமல் தானே எழுந்து தனியாக சென்று விடலாமா? என்று கூட யோசித்தாள். வேதா விட மாட்டான் என்பதற்காகவே அமைதியாக இருந்தவள் யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்து நழுவினாள்.

இதை யாரும் கவனிக்கவில்லை தான்.. ஆனால் கழுகு கண்களுக்கு சொந்தக்காரனான ஆத்ரேயனின் விழிகளில் சிக்கி தொலைந்தது. ‘இவ எங்க போறா?’ என்ற யோசனை எழுந்தாலும் ‘அவ எங்க போனாலும் எனக்கு என்ன?’ என்று தோளை குலுக்கி கொண்டான்.

பிறை சென்றதையும் அறியாமல் மற்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்வதில் பிஸியாக இருந்தனர்.

“பாஸ் உங்களைய பத்தி சொல்லுங்க” – வருண் 

“நான் மதன்.. மதன் சிபிஐ” – மதன்

“வாவ் மாஸ் தான் போங்க” – வருண்

“இப்படினு சொல்லிக்க எனக்கும் ஆசைதான்.. பட் என் கெரகம் இதோ இவன் நடத்தற காண்ட்ராக்ட்ல குப்பை கொட்டறேன்” என்றவனை கோரசாக காறி துப்பினர் வருணும் வேதாவும். 

“சரி சரி.. உங்க அருமை பெருமைகளை கூறவும்” – மதன்

“நான் வேதா.. பிறையோட ஒட்டி பிறந்தவன்.. ஒரு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாடி பிறந்ததுல அவ எனக்கு அக்கா ஆகி தொலைஞ்சுட்டா” – வேதா

“அவனவனுக்கு ஆயிரம் கவலை.. இவனுக்கு இது மட்டும் தான் கவலை” என்று வருண் அவன் காலை வார, வேதாவின் கண்களுக்கு அகப்படாமல் ஆத்ரேயனின் பின்னே மறைந்து அமர்ந்திருந்த தளிர் குறுஞ்சிரிப்பை உதித்தாள்.

நண்பனை தீயாய் முறைத்து விட்டு “அவ கலெக்டர்…” என்று ஆரம்பித்தவனை தடுத்த மதன் “அப்படினு சொல்லிக்க போறீயா?” என்று கண்ணடித்து மதன் கேட்டதும், கடுப்பில் அவன் தொடையில் கிள்ளிய வேதா “அவ என்ன உன்னைய மாதிரினு நினைச்சீயா? அவ உண்மையாவே கலெக்டர் தான்டா என் வெண்ணை” என்றான் சீறலுடன்.

“ம்ம்ம்ம் சண்முகம் பெரிய இடம் தான்.. உன் அக்கா கலெக்டர்னா சாரு போலீஸா?” என்று மதன் உதட்டை பிதுக்கு கொண்டு கேட்டிட, வேதாவை முந்தி கொண்ட வருண் “அங்கதான் டிவிஸ்ட்டே” என்று நிறுத்தினான்.

வருண் என்ன கூறுவான் என்பதை அறிந்திருந்த வேதா அவனின் வாயை மூடி “அன்னைக்கு யாருக்கும் தெரியாம தம்மடிச்சதை அங்கிள் கிட்ட சொல்லிருவேன்.. அங்கிள் நம்ப மாட்டாங்கனு நினைக்காத அதைய வீடியோ எடுத்து வெச்சுருக்கேன்” என்றான் நக்கலாக.

வேதா கூட எப்போதாவது தம்மும் தண்ணீயும் அடிப்பான்.. ஆனால் வருணுக்கு அந்த பழக்கம் எதுவுமில்ல.. காரணம் அவனின் தந்தை தான்.. கல்லூரி முடித்த சமயத்தில் ஒருநாள் தம்மடித்து தந்தையிடம் மாட்டி கொள்ள, வளர்ந்த பையன் என்பதையும் மறந்து பெல்ட்டால் விளாசி விட்டார்.. அந்த பயம் தான் இன்றுவரை தொடர்கிறது.

கண்ணாமுழியே வெளியில் வந்து விடுமளவிற்கு வருண் முழித்து கொண்டிருக்க, மதன் இதனை சாதாரணமாக எடுத்து கொண்டு ஹாசினியிடம் பேச்சை திருப்பினான். அதன்பிறகு தான்  “தப்பிச்சேன்டா சாமி” என்று நெஞ்சை நீவி கொண்டான் வருண்.

“நான் ஹாசினி.. இவங்க கூட தான் கிட்டத்தட்ட ஏழு வருசமா குப்பை கொட்டறேன்.. இப்பத்துக்கு விஐபி தான்.. சீக்கிரம் குடும்ப தலைவியா மாறணும்னு வெய்ட்டிங்” என்றவள் வேதாவை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

அவள் பார்வைதனை தவிர்த்த வேதா “அந்த பொண்ணு?” என்று அவ்வப்போது எட்டி பார்த்தபடி இருந்த தளிரை பார்த்து பேச்சை இழுக்க, “என் தங்கச்சி மேன்.. என் பாசமலரு” என்றான் வடிவேல் பாணியில்.

“உன் தங்கச்சியா பாஸ்” என்று வருண் பல்லை காட்ட, “எனக்கும் தங்கச்சி தான் பாஸ்” என்று மதனும் அவனை போலவே பல்லை காட்டி கூறினான்.

வேதா புரியாமல் முழிக்க, “மிஸ்டர். ஆத்ரேய யாழ்வன் சாரோட தங்கச்சி தான் இளந்தளிர் மேடம்” என்று கெத்தாக மதன் கூறியதும், ‘இளந்தளிர்’ என்று தனக்குள் புன்னகைத்து கொண்ட வேதா “ஆமா யாரு அந்த ஆத்ரேய யாழ்வன்?” என்று சாதாரணமாக தான் கேட்டான் வேதா.

ஆனால் பதறி போன மதன் “அடேய்.. வாயை மூடுடா” என்று வேதாவின் வாயை பொத்தி “என்னைய சாவடிக்காம விட மாட்டீங்க போல” என்றவன் மெதுவாக ஆத்ரேயன் பக்கம் திரும்பினான்.

அவனின் எண்ணம் இங்கில்லாததை உணர்ந்து “ஹப்பாடா” என்று பயத்தை கை விட்டவன் “அவன் தான்டா.. அவன் முன்னாடி முழுபேரையும் சொல்லி தொலைஞ்சராதீங்க.. யாரு எவனு பார்க்க மாட்டான் வாய்லயே ஒரு குத்து விட்டான் வெய்யுங்க முன்னாடி இருக்கற மொத்த பல்லும் நம்ம கைல விழுந்துரும்” என்றான் பாவமாக.

“ஆத்தி” என்று இருவரும் வாயை மூடி கொள்ள, வருணுக்கு தான் அந்த அதிமுக்கியமான கேள்வி ஒன்று தோன்றியது.. “அப்பறம் வொய் பாஸ் இன்னும் உங்க பிரெண்டு உங்களைய அடிக்காம இருக்காங்க” என்று கேட்டிட, “வொய் பாஸ் வொய்.. இப்பதான் அவன்கிட்ட அடி வாங்குனது உங்க கண்ணுக்கு தெரிலயா?” என்று நொடித்து கொண்டான்.

“சும்ம்ம்ம்ம்மா பாஸ்.. நீங்க மட்டும் தான் வந்துருக்கீங்களா?” – வேதா 

“எஸ் பாஸ்.. முதல்ல எங்க டீம் மெம்பர்ஸூம் வர்றதா தான் இருந்துச்சு.. என் பாசமலர் வர்றது தெரிஞ்சதும் தலைதெறிக்க ஓடிட்டானுக எல்லாரும்” – மதன்

“ஏன் பாஸ் இவங்க வந்தா என்ன?” – வருண் 

“என் பாசமலரு எல்லாருகிட்டயும் பாசமலர் படம் ஓட்ட தொடங்கிருவானு பயம் தான்.. என் தங்கச்சியை சீக்கிரம் அந்த மலைநாய்கிட்ட புடிச்சு 

குடுக்கணும்” – மதன்

“எதே? மலைநாய் கிட்டயா?” – வேதா

“அது என் மச்சானுக்கு நான் வெச்ச செல்லப்பேரு பாஸ்” – மதன்

“உங்க தங்கச்சி அப்ப மிங்கிளா?” – வருண்

“ம்ம்ம்ம் அப்படியும் வெச்சுக்கலாம்” – மதன்

“ஓஓஓஓ” என்ற வேதாவின் குரலில் சுருதி குறைந்திருக்க, தளிரை பற்றி தன்னவன் ஆர்வமாக கேட்டிருப்பதை பார்த்து முகம் சுணங்கி இருந்த ஹாசினியின் முகம் இப்போது பிரகாசமடைந்தது.

மெதுவாக தலையை நிமிர்ந்து வேதாவை தளிர் பார்த்திட, அவன் தன்னை தான் பார்த்திருப்பதை உணர்ந்து பட்டென்று தலையை குனிந்து கொண்டவளுக்கு வெக்கம் பிடுங்கி தின்ன “அய்யோ” என்று நாக்கை கடித்து கொண்டாள்.

‘நம்மளைய பார்த்து மேடம் ஏன் இப்படி பயப்படறாங்க?’ என்று குழப்பத்தை தாங்கிய விழிகளுடன் வேதா அமர்ந்திருக்க, அதே நேரம் நதியினுள் இருந்து ஒலித்த குரல் கூறியதை கேட்டு பிறை மட்டுமின்றி மதனின் பேச்சில் கடுப்பாகி எழுந்து வேறுபக்கம் சென்ற ஆத்ரேயனும் திகைத்து நின்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. அடேய் என்னடா எல்லாருக்கும் ஒரு ஜோடி கொடுத்துட்டு மதன தனியா விட்டீங்க🤣🤣🤣🤣🤣 ஹாசினியா …… இளந்தளிரா 🤪🤪🤪🤪🤪🤪

    2. Interesting ud sis nice hasini avan dha pudikkalanu solran la en avana imsai pannura thalir commited nu vera madhan lusu solludhu veda andha malamadu ne dha nu therinja epdi irukum

    3. அடேய்…முதல்ல இந்த நதிய ரெண்டு சாத து சாத்துங்கடா…ஆ..ஊ…னா ஒரு வாய்ஸ குடுத்து எல்லாரையும் கதிகலங்க வச்சிடுது….
      ஏன்பா ஏய்…அந்த நதி உங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்க அரும்பாடு பட்டுட்டு இருக்கு…. நீங்க என்னடானா கண்ணுல லாவாவ வச்சுக்கிட்டு மாறி மாறி முறைச்சிட்டு இருக்கீங்களே….
      இந்தாமா ஹாசினி அதுதான் வேதா தெளிவா சொல்லிட்டான்ல உன் மேல அவனுக்கு காதல் வராதுனு…அப்புறம் ஏன்மா அவன இந்த பாடு படுத்துற…இதுவே ஒரு பொண்ணு புடிக்கலனு சொல்லியும் ஒரு பையன் அவள டாச்சர் பண்ணா எவ்வளவு பேச்பு பேபுவீங்க…இப்ழோ நீ மட்டும் அவன டாச்சர் பண்ணலாமா….
      இதுல தளிர வேற தள்ளி விட்டுட்டு…நீ தள்ளி விட்டத மட்டும் ஆத்ரேயன் பாத்திருக்கனும் செவிலு திரும்பி இருக்கும்….
      இந்த பிறை வேற எங்க போய் துலைஞ்சாள்னு தெரியலயே….