உன் விழிகளின் ஆழத்தில்
விழுந்து விட்டேன்
உன் கன்னக்குழி ஆழத்தில்
தொலைந்து விட்டேன்
உன் செயல்களின் ஆழத்தில்
வியந்துவிட்டேன்
உன் எண்ணங்களின் ஆழத்தில்
மயங்கிவிட்டேன்
உன் மெளனத்தின் ஆழத்தில்
துவண்டுவிட்டேன்
உன் மௌனத்தின் ஆழத்தை
கண்டறிய முயற்சித்தும்
தோற்றுவிட்டேன்
சரணாகதி ஆகின்றேன்
என்னவனே உன்னிடத்தில்
கூறிவிடு உன் மெளனத்தின் ஆழத்தை
என் மெளனக்காதலனே
ஆழமான என் காதல் கொண்டு
இன்னும் ஆழமாய் உன்னை
காதலிக்க என் பிரியமான
மெளனத்தின் மெளனனே
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1