Loading

         அத்தியாயம் 1

 

    இந்த கதையில் “ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற தலைப்பை வைத்து நான் கூறுவது எல்லோரும் படித்து  முடித்து முன்னேறுவது எவ்வளவு ஒரு சாதனை. அதுவும் குடும்பச் சூழ்நிலை  சரியல்லாமல் இருந்தும், அந்த கஷ்டத்திலும் படித்து முன்னேறி  ,நம்ம  பெற்றவங்கள சந்தோஷப்பட வச்சு அவங்க மனசு நிறைந்து, நம்மள வாழ்த்தி அவர்கள் கண்களில் இருந்து வரும் பாருங்க அந்த “ஆனந்தமாய்  வரக் கூடிய கண்ணீர் ‘அது தான். அந்த ஆனந்தத்தை தரக் கூடிய பெண்ணைப் பத்தி பார்க்கலாம்….

                                                            

          ஒரு   அழகான  கிராமம்.  அந்த கிராமத்தில்  ஒரு அழகான குடும்பம். அந்தக் குடும்பத்தில்  அம்மா,  அப்பா, அக்கா, தம்பி,  என நான்கு பேரும் இருந்தார்கள். அம்மா என்பவள் வீட்டு வேலைகளைப் பார்த்து கொண்டிருப்பவள். அப்பா விவசாயி, அக்கா  பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறாள். தம்பி  குணா எட்டாம்வகுப்பு படிக்கிறான். குணா என்பவன் குறும்புகாரன். ஆனால் படிப்பில் மிகவும் தங்கமானவன். நிர்மலா கொஞ்சம் படிப்பில் மக்கு தான். ஆனால் அவள் அப்பாவின் ஆசை என்னவென்றால் இரு பிள்ளைகளையும் நன்றாகப்  படிக்க  வைத்து  நல்ல வேலையில்  பார்க்கணும் அது தான்  அவள் அப்பாவின் ஆசை. 

 

நிர்மலா வீட்டு  வாசலில்  கந்துவட்டிக்காரன் வந்து வேலாயுதம்  எப்ப தான் நீ பணம் தர போகிறாய்  என்று  உரத்த குரலில் கூறினான் கோபு. 

                                     கோபு…. என்னை  மன்னிச்சுடுப்பா!  என்னிடம்  பணம் இல்லை என்று கூறினான். இரண்டு  நாள்  கழித்து வீட்டுக்கு வருகிறாயா என்று கூறினார். இங்க பாரு வேலாயுதம்  நானும்  போனமாசம்  வந்தேன்.  உன்னுடைய பெண்டாட்டி  அடுத்த  மாசம் வாங்கனு சொன்னால்  அதனால்  தான் இப்போ  வந்தேன். நீ இரண்டு நாள் கழித்து வர  சொல்கிறாய். என்னால் அங்கும்  மிங்கும் அலைய முடியாது.

 

 எனக்கு  இப்பொழுது  வட்டி காசு கொடுங்கள். நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும்  என்றான் கோபு.  வட்டி காசு வாங்காமல்  இந்த இடத்தை விட்டுநகலமாட்டேன்  என்று கூறினான் கோபு. 

             என்னங்க  கொஞ்சம் இங்கே வாருங்கள் என்று  அழைத்தாள்  மரகதம்.     

                                                    இந்தாங்க, நம்முடைய  பிள்ளைங்க படிக்கிறதுக்காக நான் சேர்த்து வைத்து  இருந்தேன். இதை  குடுத்துட்டு வாங்க  நமக்கு கெளரவம்  தான் முக்கியம் . 

              உடனே  வேலாயுதம் அந்த காசை கோபுவிடம் கொடுத்தான். அவனும் வாங்கியவுடன்  கிளம்பி விட்டான். 

நிர்மலாவும், குணாவும், பள்ளிக்குக் கிளம்பினார்கள். பின்பு  வேலாயுதமும்  விவசாயத்தைப்பார்க்கக்  கிளம்பினார். 

              பள்ளிக்கூடத்தில்  நிர்மலா  தன்னுடைய  வீட்டில்  நடந்ததைப் பற்றி  நினைத்துக் கொண்டிருந்தாள். 

             ஆசிரியர் பாடம் நடத்துவதை நிர்மலா கவனிக்கவில்லை.வீட்டில் அப்பா, அம்மாவைப் பற்றி சிந்தனையில் இருந்தாள். அதை கவனித்த  ஆசிரியர்  நிர்மலாவை  எழுப்பி கேள்வி கேட்டார். நிர்மலா பதில் தெரியாமல் அப்படியே நின்றாள்.

                   ஆசிரியர் நிர்மலாவை திட்டினார். உன்னுடைய கவனம் வகுப்பில் இருக்கனும்.  இனிமேல் பாடத்தை கவனிக்காமல் இருந்த உனக்கு தண்டனை  கடுமையாக இருக்கும் புரியுதா?  உட்காருமா என்று கூறினார்.  

                சரி!   சார் என்று மனவருத்தத்துடன் கீழே அமர்ந்தாள். மதியம் 1 மணி  ஆனது. 

அனைவரும் சாப்பிடச்சென்றனர். நிர்மலாவும்  சாப்பிட்டு வந்தாள். தோழிகள்  அனைவரும்  அவளை  விளையாட அழைத்தனர் .நான் வரவில்லை  நீங்கள் எல்லோரும்  போய் விளையாடுங்க நான் வரல, நீ இல்லாமல் நாங்க எப்போது விளையாடினோம்.  நாங்களும்  விளையாட போகல என்று கூறி விட்டு  அனைவரும் வகுப்பில் இருந்தனர். 

                              பின்பு சற்று  யோசித்தாள். நமக்காக  இவர்கள் ஏன் விளையாடமல் இருக்கனும். 

                      ஓய்! “தோழிகளே வாருங்கள் ,விளையாட போகலாம்’

       எல்லோரும்  சந்தோஷமாக விளையாடினார்கள். பின்பு  வகுப்பிற்குள்  எல்லாரும் வந்தனர். 

 

                               நிர்மலா  பாடத்தை கவனிக்க  தொடங்கினாள். பள்ளி முடிந்து குணாவையும், கூட்டிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். 

             மறுநாள், 

                                    காலையில்  சீக்கிரம் எழுந்து படிக்கத்தொடங்கினாள். பள்ளியிலும் பாடத்தைக் கவனிக்க தொடங்கினாள். தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதை நோக்கமாகஇருந்தாள். தன் தம்பியை நன்றாக படிக்க  சொன்னாள். இவளும் வகுப்பில் முதலாவதாக வந்தாள். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஆசிரியர்கள் “நிர்மலாவை பாராட்டினார்கள்.” மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றாள். நிர்மலா முகத்தைப் பார்த்த மரகதம் என்னடி! இவ்வளவு  சந்தோஷமாக இருக்கிறாய்?  அம்மா  நான் தான் வகுப்பிலே முதல் மார்க்  என்னை ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள். பள்ளிக்கூடத்தில்  நடந்ததை எல்லாம்  கூறினாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மரகதம் அடுப்பில் வைத்த  வெந்நீர் அதிகமாக சூடாகி விட்டது. அதை  உணர்ந்த  நிர்மலா அடுப்பை அணைத்து விட்டு வந்தாள். பின்பு மெய்மறந்து  போன  அம்மாவை நினைவுக்குக் கொண்டு வந்தாள்.கடைக்குச் சென்று வந்த  குணா அம்மாவிடம் கொடுத்து விட்டு விளையாட கிளம்பினான்…..

 

          கிளம்பிய குணாவை மரகதம் அழைத்தாள்….. 

     ……………..ஏய்…… இங்கே வாடா…. என்னம்மா கிளம்பும் போது கூப்பிடுகிறாய்.. ……சொல்லும்மா… 

 

       …..நீயும் நல்லா படிக்கணும் என்கிற நினைப்பு இல்லையா …… டா…. அதெல்லாம் இருக்குமாம்!….. நான் விளையாடப் போய்ட்டு…….. வந்து செல்லுறேன் என்று வேகமாக ஓடினான்…… 

                       பின்பு மரகதம் விளையாடப்  போய்ட்டு வீட்டுக்கு வருவான்ல…….. அப்புறம் பார்ப்போம் என்று நினைத்தாள். 

 

            மணி7ஆனது…..

 

                     விளையாடச் சென்ற  குணா வீடு திரும்ப வில்லை. அதை நினைத்துகவலையாக வாசலில் உட்கார்ந்து இருந்தாள்.பின்பு வேலையை முடித்து வந்த வேலாயுதம்,மரகதத்தைப் பார்த்தார்… 

 

             என்னாச்சு! ஏன்? கவலையாக வாசலில் உட்கார்ந்து  இருக்கிறாய்?……. என்று கேட்டான் வேலாயுதம்…… 

              அதற்கு மரகதம் விளையாடச் சென்ற குணா வீடு திரும்பி வரவில்லை…… கொஞ்சம் அவனைப் பார்த்து கூப்பிட்டு வாருங்கள்….. கிளம்பினான்…… வேலாயுதம்…. 

           குணாவைத் தேடி கந்தசாமி வீட்டிற்குச் சென்று குணா இங்கு வந்தான் என்று கேட்டார். அதற்கு கந்தசாமியின் மகன் கோபால்  நாங்கள் எல்லோரும் ஒன்றாக தான் விளையாடினோம். 

                     ஆனால்,குணா அப்போதே வீட்டிற்குச்  சென்று வருகிறேன் என்று கூறி கிளம்பி விட்டான். 

             உடனே, அங்கிருந்து கிளம்பி எல்லா நண்பர்கள் வீட்டிற்குப் போய் பார்த்து,கேட்டான்.அங்கேயும் வரவில்லை  என்று கூறினார்கள். 

       ..  எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு வீட்டிற்குச் சென்றான். அங்கே…. மரகதம்

   கேட்டாள் .  அதற்கு வேலாயுதம் அவனை எல்லா இடத்திலும் போய் பார்த்தேன்….. எங்கேயும் இல்லை என்று கூறினார்.

      …….அந்த அதிர்ச்சியில் கீழே அமர்ந்த 

மரகதம் எதுவும் பேசாமல் இருந்தாள்…………

              நிர்மலா படித்தவுடன், அம்மாவிடம்  வந்து எனக்கு சாப்பாடு வைம்மா!…..என்றாள். 

              அம்மா எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தாள். என்னம்மா!… 

   எதற்காக எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள்…. அப்பாவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள் …….

          தம்பி இன்னும் விளையாடப் போய்ட்டு வரவில்லையா!……. 

        இதோ வந்துவிட்டேன், என்று கூறி உள்ளே நுழைந்தான்…… மரகதம் எழுந்து குணாவை  அடித்தாள்….. 

        எதற்காக என்னை அடித்தீர்கள்!.. என்று அழுது கொண்டே கேட்டான்….. 

            நீ  எங்கே போய்ட்டு வருகிறாய்?…. சொல்லுடா !…. உங்க அப்பா உன்னை எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து இப்போ தான் வந்தாங்க…….  உன்னை எங்க தேடியும் காணும் உங்க அப்பா சொன்னதும் எனக்கு எப்படி ஆயிற்று தெரியுமா?….. 

          நீ…. எங்கபோய்ட்டு வர்ற…. உனக்கு அதிகமாக செல்லம் கொடுக்கறேன்ல  அதான் ஊரைச்  சுத்திக் கிட்டு  வர்ற,அப்படித்தான என்று கோபத்துடனும், மன உளைச்சலுடன் அழுது கொண்டே சொன்னாள். 

              அம்மா அழுததைப் பார்த்த நிர்மலா, குணா, நீ எங்க போன ,அக்கா நான் பள்ளிக்கூடம் மைதானத்தில் விளையாடிக்  கொண்டிருந்தேன்……. என்னுடைய நண்பர்கள் கூப்பிட்டார்கள்….. அதான் விளையாடச் சென்றேன்…… அம்மாவிடம் கூறிவிட்டு போக வேண்டியது தானே!…. 

      அம்மாவிடம் சொன்னால் விடமாட்டாங்க அதான் சொல்ல வில்லை….. 

          நீ சொல்லாமல் போனதால்  தாற்  ,அம்மாவும்.,அப்பாவும்  எப்படி பயந்துட்டாங்க …..

..இனிமேல் நீ… 

         எங்கு போனாலும்  வீட்டுல சொல்லிட்டு  போ!…. 

சரி அக்கா,…… 

         குணா அப்பாவிடம் சென்று இனிமேல் எங்கீ சென்றாலும் சொல்லிட்டு போகிறேன்…. 

 

என்னை மன்னித்து விடுங்கள் …

..

சரிடா!…… அழாத இனிமேல் இப்படி செய்யக் கூடாது, என்று அணைத்துக் கொண்டார்…… வேலாயுதம்….. 

 

              மரகதமும் சமாதானம்ஆனாள்…… 

          நிர்மலா அம்மாவிடம் பசிக்கிறது என்றாள். உடனே…. மரகதம் வேகமாகச்  சென்று சாப்பாடு எடுத்து வைத்தாள்….. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்…… 

   மறுநாள்

                 பள்ளிக்கூடம்  சென்றாள் நிர்மலா, அங்கே தேர்வு முடிந்ததும் விரைவில் வீட்டிற்கு வந்தாள்… அவள் அம்மா,என்னம்மா  நிர்மலா இன்று சீக்கிரம் வந்துவிட்டாய்!..

           அம்மா….. இன்னிக்கு வகுப்பில்  திருப்புதல் தேர்வு வைத்தார்கள் .அந்த exam  எல்லாம் முடிந்தது. நாளைக்கு  Hall  ticket  வாங்க போகனும்மா!…  .

 

          நாளையில் இருந்து  examக்கு லீவு விட்டுருவாங்க.. வீட்டில் இருந்து படிக்கனும்… என்றாள் நிர்மலா… குணாவை எங்கே அவனுக்கு லீவு இல்லையா!…

     அவனுக்கு லீவு கிடையாது. அவன் சாயங்காலம் தான்  வருவான். ம்ம்ம்……… சரிம்மா!… நீ படி அம்மாவுக்கு வேலை இருக்கிறது. 

 

          மதியம் 1.30 மணி ஆயிற்று….

 

             அப்பாவுக்கு நான் சாப்பாடு கொண்டு குடுத்துட்டு  வருகிறேன்….. 

        நீ சாப்பிடும்மா!….. சரிம்மா நான் வைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன்… 

 

..நீ போய் பார்த்து போய்ட்டு வா என்று கூறினாள். நிர்மலாவும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படித்துவிட்டு  ,தூங்கிவிட்டாள்…. 

 

       மணி 4 ஆனது,

 

        மரகதம் வந்து பார்க்க…நிர்மலா தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை தொந்தரவு  செய்யாமல் அவளுடைய வேலையைப் பார்க்கச் சென்றாள்….  மரகதம் துணியைஅலசிக் கொண்டிருந்தாள். 

 

குணாவும் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சீக்கிரமாக வந்தான்…… வந்தவுடன் dress change செய்து விட்டு துவைக்க கொடுத்தான்… .

 

அவளும் வாங்கிஅலசி முடித்து விட்டு வந்தாள்….. 

         குணா  காபி கேட்டான். அதற்குள்ளும் நிர்மலா எழுந்து வந்தாள்….. கொஞ்ச நேரம் இருங்க அம்மா துணியை துவைத்து காயப் போட்டுட்டு வருகிறேன் என்றாள்…. குணாவும், நிர்மலாவும் பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசி கொண்டிருந்தனர். மரகதம் வந்து இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தனர்….. காபி குடித்து  விட்டு நிர்மலா  படிக்கச் சென்றாள். 

 

குணாவைத் தேடி நண்பர்கள் வந்தனர்…… அவனை  விளையாடக் கூப்பிட்டனர்…. குணா நான் வரல்ல நீங்க போய் விளையாடுங்க!…  என்று  கூறினான்….. பிறகு சிறிது நேரம் கழித்து நிர்மலா படித்துக் கொண்டிருந்தாள்….

 

அவங்க அக்காவிடம் கூட சொல்லாமல் எழுந்து வெளியே சென்றான்… 

 

நிர்மலாவும் குணாவைப் படிக்க அழைத்தாள்… ஆனால்  அவனோ  எந்த  ஒரு பதிலும் கூற வில்லை… .உடனே  நிர்மலா ஹாலில் வந்து  பார்க்க அவனை  காணவில்லை… .

 

அதே சமயத்தில் அவங்க அம்மாவும்  கடைக்குப் போய்ட்டு நுழைய… நிர்மலாவைப் பார்த்து என்னாச்சு.. டி… பதற்றமாக இருக்கிறாய்… 

 

அம்மா.. திரும்பவும் குணாவைக் காணோம்… மறுபடியும் விளையாடச் சென்று விட்டான்… .

ஆனந்த லீலை தொடரும்… ..

 

      

   

    

         

 

            

          

          

      

      

            

                  

  

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்