Loading

ஆட்சியர் கனவு 46 💞

தன்னவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்ற ஆதங்கமே ஆதியை வாட்ட, தன் தாயிடம் பேசிக்கொண்டிருந்த அவனது கவனத்தை மட்டுமல்ல அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது சக்தியின் மகிழுந்து.

சக்தியும் ரவீணாவும் மாலையும் கழுத்துமாக வந்திறங்க, அன்றைய நாள் அதிர்ச்சியின் பிடியில் தான் சென்றது. அதுவரை அமைதி காத்த செல்வி தன் வளர்ப்பு மகன் செய்த காரியத்தில் பளாரென்று அடித்து விட்டார்.

“என்ன காரியம் செஞ்சிட்டு வந்து இருக்க சக்தி.? உனக்கும் சந்தனாவுக்கும் நிச்சயம் டா இன்னைக்கு. ஆனா..? நீ.?” என்று தன் ஆற்றாமையை கோபமாக காட்டினார். இதை சிறிதும் சந்தனா கூட எதிர்பார்க்கவில்லை.

ஆதி ஒரு நக்கல் சிரிப்புடன் அவளை நோக்கி, “என்ன பிளான் பிளாப் ஆகிடுச்சுன்னு ஷாக்கா இருக்கா.?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம். அதில் மேலும் கடுப்பானவள், “என்ன எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டிங்கள? உங்களை சும்மா விட மாட்டேன். என்ன மாமா இது.. இதான் நீங்க வாக்கு கொடுக்குற லட்சணமா.? மருமக என்ன டா ன்னா அப்டி.  இப்போ உங்க ரத்தம் ன்னு சொன்னீங்க.. இவனே இப்படி பண்ணிட்டு வந்து நிக்குறான். அப்போ என் நிலை.?” என்றவள் போலி கண்ணீர் வடிக்க, ஏனோ தான் போட்ட திட்டம் வேலை செய்யவில்லை எங்கே தவற விட்டோம் என்பதே அவளின் முழு எண்ணமாக இருந்தது.

செல்வி “சக்தி.. பதில் சொல்லு டா. என்னைக்காவது உன் விருப்பத்துக்கு மாறா நான் ஏதாவது செஞ்சி இருக்கேனா.? இப்போவும் நீ சம்மதம் சொல்லி தான டா, நிச்சயம் ஏற்பாடு பண்ணோம்..?” என்றவர் தன் கோபத்தை ரவீணாவிடம் காட்டினார்.

“என்ன பண்ணி என் பையன மயக்குன நீ.? அன்னைக்கு வந்து கேட்டபோ முடியாதுன்னு சொன்னல.? இப்போ என்ன சொத்து இவன் பேருக்கு வரும்ன்னு தெரிஞ்ச உடனே இப்படி ஒரு நாடகமா.?” என்றார் வார்த்தை அளவின்றி.

அதுவரை அமைதியாக இருந்த சக்தி, “போதும் நிறுத்துங்க மா.. என்ன நடந்ததுன்னு தெரியுமா.? ” என்று கத்திவிட்டு நேற்று நடந்ததை கூறலானான்.

சக்தி சந்தனா கூறிய உடன் வேகமாக சென்னை புறப்பட்டவனை தடுத்தது ஆதியின் குரல் “எங்க போற.? அதுவும் இந்த நேரத்துல..”

“ஆதி… ஒரு கேஸ் விஷயமா வர சொல்லி இருக்காங்க.. அ.. அதான் டா.”

“ஓ.. சரி.. அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டம்.? ரிலாக்ஸ் டா.. நான் இப்போ சென்னை போய் கையோட யதுவ கூட்டிட்டு வரேன். நாம அன்னைக்கு பேசுன மாதிரி காலைல நிச்சயதார்த்தத்தை நிறுத்த தான் போறோம். சரியா?”

சக்திக்கு தான் என்னவோ போல் இருக்க, சந்தனா கூறியதை சொல்லி விட்டான். அதை கேட்டு ஆதி அதிர்ந்தாலும் “டேய், கொஞ்ச நேரம் முன்னாடி தான் டா யது பேசுனா.!எனக்கு என்னமோ ரூம்ல வேற யாரோ இருப்பாங்க ன்னு தோணுது. சரி நீ கிளம்பு. அப்பப்போ எனக்கு அப்டேட் பண்னு.. டேக் கேர். “

“சரி டா.. நீயும் சேஃப் ஆ இரு..!” என்றுவிட்டு புறப்பட்டான்.

ஆதி அதற்குள் ஒரு திட்டம் தீட்டி, பல தகவல்களை சேகரித்து இருந்தான்.

ஆதி நினைத்ததை போலவே, அறையில் மயங்கி இருந்தது ரவீணா தான். சக்தி சரியாக அவள் அறைக்குள் நுழைய, அந்த அறை வெளியே பூட்டப்பட்டது. ரவீணாவை எழுப்பும் குறியில் இருந்தவன், இதை கவனிக்க வில்லை.

சிறிது நேரத்தில் அவ்விடமே பரப்பரபாக, திவியும் ரேஷ்மா அறையில் இருந்து வெளியே வந்தாள். காவலர்கள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் “மேடம், இங்க பிராத்தல் நடக்குறதா எங்களுக்கு நியூஸ் வந்தது. ஒவ்வொரு ரூம் மும் செக் பண்ணனும்.” என்றவர்கள் முதலில் திறந்தது ரவீணா சக்தி இருந்த அறையையே.

அதற்குள் மற்றவர்களும் வந்து இருக்க, திவி இதை பார்த்து அதிர்ந்து போனாள்.

மீடியாவும் அசிஸ்டண்ட் கமிஷ்னர் என்று அறிந்த உடனே பல கேள்விகளை எழுப்ப, காவலர்களோ அவனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட தொடங்கினர். இதில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத சக்தி, “சார். என் மனைவி கூட இருக்கேன். நான் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லனுமா.?” என்ற ஒற்றை கேள்வியில் மீண்டும் திவிக்கே மயக்கம் வந்து விட்டது.

அவர்களின் ஆசிரியரோ ரவீணாவையும் சக்தியையும் கேள்வியால் துளைக்க, ஒரு வழியாக பதில் சொல்லிவிட்டு தனியே அமர்ந்தனர் உடன் திவியும்.

திவி “இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமா?”

சக்தி அவளை பாவமாக பார்க்க, ரவீணா சக்தியை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தாள்.

திவி “என்ன பதிலே காணோம். சார்க்கு அவ்ளோ அவசரமா.? இப்போ ரவி வீட்ல என்ன பதில் சொல்லுவா? ஹான்.. அது மட்டும் இல்ல, செல்வி அம்மா உடஞ்சி போயிடுவாங்க. இதெல்லாம் நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லல. அப்ரோம் ஏன் இப்படி.?” என்று கத்தினாள்.

ரவீ “நீ எதுவும் பேசாத திவி. நான் தான் அவரை தாலி கட்ட சொன்னேன்.!” என்றதில் திவிக்கு மீண்டும் தலை சுற்றுவது போல தான் இருந்தது.

திவி “அடி கிராதகி! அப்ரோம் ஏன்டி அவரை முறைச்சிட்டு திரியுற.?”

ரவீ “இத்தனை நாள் என்ன தூரத்துல இருந்தே பார்ப்பாராம். நான் பேச போன் பண்ணா ஆதி அண்ணா கிட்ட குடுத்துட்டு போய்டுவாராம். அப்டி இருக்குறப்போ.. இப்போ மட்டும் நான் எப்படி கண்ணுக்கு தெரிஞ்சேன்.?” என்று எகிறினாள்.

பாவம் சக்தி தான் அவளை பார்த்து பரிதாபமாக அமர்ந்து இருந்தான். ‘அவசரப்பட்டு கல்யாணம் செஞ்சிக்கிட்டோமோ?’ என்று தற்போது யோசித்தான். (காலம் கடந்து யோசித்து என்ன பயன் ராசா.. அனுபவி)

பின் நீண்ட பெருமூச்சு ஒன்று விட்டவன், இரவில் நடந்ததை கூற, இருவரும் அதிர்ந்து விட்டனர். ‘இப்படியும் பெண்ணா?’ என்று ரவீ யோசிக்க, ‘தனக்காக இவன் இத்துணை தூரம் வந்தானா.?’ என்று சக்தியை பாசமாக பார்த்தாள் அவள்.

பின் சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு, “உங்களுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு.. “

சக்தி “என்ன திவி.?”

திவி “ஹான்.. இப்போ சொல்ல மாட்டேன். பர்ஸ்ட் வீட்டுக்கு போய் நான் எல்லாரையும் சமாதானம் படுத்தி வைக்கிறேன். நீங்க அப்ரோம் வாங்க. அப்போ எல்லார் முன்னாடியும் சொல்றேன்” என்று கூறிவிட்டு அனைவரும் சேலம் பயணமாகினர்.

“உண்மையாலுமே இது திவியை பழி வாங்க தான் செஞ்சி இருக்காங்க. அதுல எங்களுக்கு ஒரு நல்லது நடந்து இருக்கு.. அது சரி எங்க திவி.?” என்று ஆதியிடம் தன் வினாவினை தொடுக்க, மனமுடைந்து போனான் அவன்.

அப்போது சரியாக காவல்துறை அவர்கள் வீட்டிற்கு வர, ஆதியும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். சக்தி “அரஸ்ட் ஹிம்” என்று ராஜரத்தினத்தை கை காட்ட, பெருமாள் முதற்கொண்டு அனைவரும் மேலும் அதிர்ந்தனர்.

ராஜரத்தினம் “நான் என்ன செஞ்சேன்.? இப்போ ஏன் என்ன அரஸ்ட் பண்றீங்க?”

சக்தி “நீங்க குழந்தைகளை கடத்தி, விக்குறீங்க மிஸ்டர் ரத்தினம். இதுக்கெல்லாம் எவிடன்ஸ் பக்காவா இருக்கு. மவனே உள்ள போடி. வந்து லாடம் கட்டுறேன்.” என்றதில் செல்வி முற்றிலும் உடைந்து போனார்.

சந்தனா அதிர்ந்து நிற்க, ஆதி அவள் முன் சொடுக்கிட்டு, “உன்னோட அழிவு காலம் ஆரம்பிச்சிடுச்சு சந்து பேபி. என் யதுவ என்கிட்ட இருந்து பிரிச்சல்ல. யுவர் கவுன் டவுன் ஸ்டார்ட்.”

சக்தி “என்ன டா சொல்ற.?”

ஆதி திவி வந்ததிலிருந்து இங்கு நடந்தவற்றை கூற, சக்தியும் ரவீணாவும் வெகுவாக ஆத்திரம் கொண்டனர். ரவீ “என்ன சொன்ன? என் திவியை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.? அவளுக்கு இந்த விஷயம் நேத்து தான் தெரியும். எப்படி நீங்க அவள வீட்டை விட்டு அனுப்பலாம்.? அதுவும் நீங்க எப்பிடி ஆதி அண்ணா விட்டீங்க.? எவ்ளோ செஞ்சாலும் அது நினச்சு பார்க்க இந்த வீட்ல யாருக்கும் மனசு இல்லல? ச்சை. நீயெல்லாம் ஒரு பொண்ணா.? இவ்ளோ கீழ்த்தரமா நடந்து இருக்க.?” என்று சீறினாள்.

சந்தனா “ஏய், என்ன பேச உனக்கு என்ன டி உரிமை இருக்கு.?”

ரவீ “உரிமை.? நான் இந்த வீட்டு மருமக.. நீ இங்க நிக்கவே உரிமை இல்லை. வெளியே போ டி” என்று கத்தினாள்.

பின் அங்கு கோகுல் செய்த செயலும் அவன் கேட்ட சொற்களும் மேலும் அனைவரையும் நடுங்கத்தான் செய்தது.

வானத்தையே வெறித்தவள், ஆதியின் தொடுகையில் சுயம் பெற்றாள். அவனை நோக்கி சிறு புன்னகை ஒன்றை வீசியவள், மீண்டும் திரும்பி கொள்ள, ஏனோ அப்புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை ஆதியும் உணர்ந்து தான் இருந்தான்.

அவளை தோளோடு அணைத்தவன், அமைதியாக இருக்க, ஆதூரமாக அவன் மேல் சாய்ந்து கொண்டாள். இத்தனை நேரம் நிலவும் இப்போது பிரகசாமாய்.

மீனா “யது.. ஆரா உன்னை தேடுவா” என்றபடி அங்கே வர, இருவரின் மோன நிலையை கண்டு எதுவும் கூறாமல் சென்று விட்டாள்.

ஆதி “யது..”

திவி “ம்ம்”

ஆதி “இங்க வந்து ரொம்ப கஷ்டப்பட்டியா?”

திவி “உன் அளவுக்கு இல்லன்னு நினைக்கிறேன்” என்றபடி சிரித்தாள்.

அதில் அவள் நெற்றி முட்டி அதில் இதழ் பதிக்கும் சமயம், “ஆதி” என்று அழைத்தபடி சக்தி வந்தான்.

“நான் இவனுங்களுக்கு என்ன செஞ்சேன்ன்னு தெரியல.. நான் எப்போ கிஸ் பண்ண வந்தாலும் மூக்கு வேர்த்துடும். இவனுங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்” என்று கருவியவன், கடுப்புடன் “என்ன டா.?”

சக்தி “மொழியன் கூப்டுறான் டா, உன்ன.”

ஆதி “இப்போ அவனுக்கு என்னவாம்.?”

சக்தி “நீ தான் டா எப்போவும் கதை சொல்லி தூங்க வைப்ப. அதான் கூப்டுறான்.”

ஆதி “ஏன் டா உயிரை வாங்குற.? வரேன் போ.!” என்றவனை சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள் ஆதியின் யது.

அப்போது சரியாக ஆறெழிலும் வர, திவி “எழில் மா. சாப்டியா.? இங்க வா”

ஆரா “யது மா, நான் இன்னைக்கு ஆதி பேபி கூட ஸ்டோரி கேட்க போறேன். சோ ஆதி பேபி கூட தான் ஸ்லீப்பிங். குட் நைட் யது மா” என்றபடி ஆதியின் காலை கட்டிக்கொள்ள, திவி “ஆரா, அப்பா சொல்லு. அது என்ன ஆதி பேபி.? நான் கூட அப்டி கூப்பிட்டது இல்ல டி.!”

“அதான் என் பொண்ணு கூப்டுறா. நீ வா பேபி.” என்றபடி ஆராவையும் மொழியனையும் அழைத்து கொண்டு கதை கூற ஆரம்பித்தான்.

வெகு நாட்கள், இல்லை வருடங்கள் கழித்து, ஆதியின் செய்கையை ரசித்தபடி அவளும் உடன் அமர, அவன் கூறிய கதைகளில் சொக்கி போனவள், அப்படியே உறங்கியும் போனாள். இருவரும் உறங்கிய பின்னர் அவன் நிமிர்ந்து பார்க்க, காலை குறுக்கி உறங்கும் தன்னவளும் குழந்தையாய் தான் தோற்றமளித்தாள் அவனின் கண்களுக்கு.

பிள்ளைகளை மீனாவிடம் ஒப்படைத்து விட்டு, தன்னவளை கைகளில் ஏந்தியபடி அறைக்கு சென்று மெதுவாக அவளை படுக்க வைத்து தானும் அவளருகில் உறங்கினான். வெகு நாட்கள் பிறகு தன் மனதிற்கு பிடித்த ஸ்பரிசத்தை உணர்ந்த இருவரும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றனர்..

கனவு தொடரும் 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்