Loading

ஆட்சியர் கனவு 36 💞

ஆதியின் கூற்றில் பெண்ணவள் அதிர்ந்து தான் போனாள். இருந்தும் அதை வெளிக்கொணராது,

திவி “என்ன, நீங்க புதுசா ஏதாவது கதை சொல்ல போறீங்களா மிஸ்டர் ஆதி.?” என்று மார்பின் குறுக்கே தன் கைகளை கட்டிக் கேட்டாள் ஆதியின் திவி.

தனக்குள் எழுந்த சினத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு “நான் சொல்றத முதல கேளு, அப்ரோம் நீ பேசு” என்றான் அழுத்தமாக.

திவி “நீங்க சொல்றத எல்லாம் கேட்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல!” என்று தன் நிலையில் மாறாது இருந்தவளை ஆதி தான் ‘இவளை என்ன செய்தால் தகும்’ என்ற ரீதியில் பார்த்தான்.

பின் அவளருகில் நெருங்கியவன் அவள் கன்னங்களை தன் இரு கைகளால் சிறை செய்தவன் அவள் கண்களில் ஏற்படும் மாற்றத்தைத்தான் பார்த்து கொண்டு இருந்தான் விழி அகற்றாது.

ஆணவன் நெருக்கத்தில் பெண்ணவள் வெலவெலத்து போனாள். திவி “ஒ.. ஒழுங்..கா… நகரு” என்று அவளின் நா தந்தியடிக்க, அதை ரசித்தபடியே அவள் இதழ் நோக்கி குனிய, ஆதியின் திடீர் செயலில் திவிக்கு வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் தான் வந்தது.

அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் கவி பாடினான் அவளிடம் இறைஞ்சி…

என்னுள் ஆதியும் நீ..

அந்தமும் நீ...

மூன்று நிமிட இடைவெளி

நம் வாழ்வில் மூன்று வருட

பிரிவாக...

உன் சொற்கள் என் காதில்

விழவில்லை..!

உணர்ந்து நான் பேசும்போது

நீ என்னருகில் இல்லை.!

உன் எண்ணக்குவியலை

யானும் அறிவேன்..!

உன்னவன் உன்

எண்ணக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவன் ஆயிற்றே.!

உன் மேல் நான்

சந்தேகம் கொண்டால்

காதலும் கனலை கக்கும்

என்பதை

அறியாமல் இருப்பேனா..?

செய்யாத தவறுக்கு இருவரும்

அனுபவித்துவிட்டோம்

பிரிவு எனும்

மரண தண்டனையை...

என் காதலை விட

உன் காதல் ஆழமானது

என்று அறிந்த நொடி.!

ஏழு ஜென்மம்

உன்னோடு வாழ்ந்த

உவகை கொண்டேனடி.!

எனக்கு ஒரு

சந்தர்ப்பம் தருவாயா.?

என்னவள் எனக்கானவள்

என்மீது கொண்ட காதலை

என்னிலிருந்து எடுத்து நிரூபிக்க..?

ஆணவனின் கூற்று அவளின் மனதை அசைக்கத் தான் செய்தது. கண்கள் விடாமல் கண்ணீர் மழையை பொழிய, ஆதியின் மஞ்சத்தில் சாய்ந்து, தன் நெஞ்சில் உள்ள எண்ணங்களை கண்ணீர் எனும் வர்ணமாய் தீட்டினாள்.

அவளின் தலையை ஆதரவாக தடவியபடி அவள் அழுகை கேவல் ஆகும் வரை அமைதி காக்காது,

ஆதி “யது… நீ என்ன யோசனைல இருக்கன்னு எனக்கு தெரியல டி.. ஆனா, ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ” என்று அவளை நிமிர்த்த,

அவளோ அவனை புரியாது ஏறெடுத்தாள். “உனக்குள்ள தான் நான் இருக்கேன். நீ என்ன விட்டு போன அடுத்த நிமிஷம் தான் டி எனக்கு புரிஞ்சது. நீ இல்லாம என் வாழ்க்கை முழுமையடையாதுன்னு. அப்ரோம், எனக்கு தெரியும் ஆறெழில் யாருன்னு. பாஸ்ட் இஸ் பாஸ்ட். இப்போ அவ நம்ம குழந்தை புரியுதா.?” என்றான் அழுத்தமாக.

ஆடவனின் புரிதலில் மகிழ்ந்தவள் “எழில்…” என்று ஏதோ கூறவந்தவளின் வாயை தன் கரம்கொண்டு மூடியவன் “எனக்கு எல்லாம் தெரியும் டி. இது நமக்குள்ளேயே இருக்கட்டும் சரியா. என்னைக்கும் ஆரா க்கு தெரியவேண்டாம். அவளுக்கு எப்போவும் நாம தான் அப்பா அம்மா” என்றான் அவளின் முகத்தை கையில் ஏந்தியபடி.

இத்தனை வருடங்களாய் தான் அனுபவித்த வலிகள் அனைத்தும் இன்று தன் மன்னவன் நெஞ்சில் மகிழ்வாய் மாறிய நொடியை விழிகள் மூடி ரசித்தவாறே இருந்தாள்.

ஒரு ஆண் இல்லாமல் பெண்ணால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம். எவ்வளவு கஷ்டங்களையும் கடந்து விடலாம். ஆனால், ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஆணால் ஒரு சிறு கஷ்டத்தையும் கூட தாங்க முடியாது என்பதை இன்று மனதார உணர்ந்தான் ஆதி. தாயாக, தங்கையாக, தமக்கையாக, தோழியாக, மனையாளக, மகளாக என்று ஏதோ ஒரு விதத்தில் ஆண்களுக்கு துணை நிற்கிறாள் பெண்ணவள் உறுதுணையாக.!

ஆதி “இனிமே என்னைய விட்டு போக மாட்டல யது?” என்று கேட்டான் ஏக்கமாக..

திவி மறுப்பாக தலையசைத்து அவன் நெஞ்சில் இன்னும் புதைய, ஆதி அவளை மேலும் இறுக அணைத்து கொண்டான்.

திவி “இன்னைக்கு தான் இந்த யது நியாபகம் வந்தாளா.?” என்றாள் பொய் கோபத்துடன்.

ஆதி அவளின் மூக்கை பிடித்து ஆட்டி, அவளிடம் பேச ஆரம்பிப்பதற்குள் “நீங்க வீட்டை விட்டு வந்த ஒரு வாரத்துக்குள்ள அண்ணா உங்களை கண்டுபுடிச்சு இங்க வந்துட்டாங்க அண்ணி” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தனர் அவர்களின் பட்டாளம்.

அனைவரையும் கண்டு திகைத்தவள் தன்னவனை பார்க்க, அவன் கண்ணடித்து அவளின் காதின் அருகில் “இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போறோம் டி குட்டச்சி?” என்றான் குறும்பாக.

அதில் சிவந்தவள், அவனை விட்டு விலகி அனைவரையும் கண்டு நெளிந்து கொண்டு இருந்தாள்.

அப்போது மீனா எழிலை அழைத்து கொண்டு வர, எழில் தான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள்.

விரைந்து தன் தந்தையின் அருகில் சென்றவள் “ஆதி பேபி… எல்லாரும் எப்போ வந்தாங்க.?” என்று கேட்டாள் ஆர்வம் மிகுந்த குரலில்.

ஆதி அவளை தூக்கி கொண்டு “இப்போ தான் பேபி வந்தாங்க..” என்றான்.

ஆதி “இவங்க..” என்று அறிமுகப்படுத்த துவங்க, எழில் “எனக்கு நியாபகம் இருக்கு பேபி. தேவ் சித்தப்பா, பாரதி சித்தி, சத்தி பெரிப்பா, ரவீணா பெரிம்மா, பவி சித்தி, விஷ்ணு மாமா “என்றாள் அனைவரையும்.

இவளின் செயலில் அனைவரும் விழி விரித்து நிற்க, திவிக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

திவி “எழில் மா.. உனக்கு இதுலாம் யார் சொன்னா.?” என்று குழப்பமாக கேட்டு வைத்தாள்.

எழில் ஆதியை பார்க்க, திவி “ஓய்.. கேட்டது நான். அங்க என்ன பார்வை. சொல்லு டா.?” என்று கேட்டாள்.

எழில் ஆதியின் கையில் இருந்து இறங்கி, திவியிடம் சென்று அவளை சோபாவில் அமர வைத்தாள்.

எழில் “யது மா, பாப்பாவ நீ திட்ட மாட்டல.?” என்று பீடிகை போட்டாள் மழலை.

திவி “ஹான்.. மாட்டேன்.. சொல்லு” என்று மகளை மடியில் அமர்த்தினாள்.

எழில் “நீ தெய்லி ஆபிஸ் போனதுக்கு அப்ரோம் நான் ஆதிப்பா கூட பேசுவேன். அப்ரோம் அப்பா ஸ்கூல்லுக்கு வரது என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாரு.. இவங்க எல்லார் கூடவும் நான் தெய்லி போன்ல பேசுவேன்” என்று பாவமாய் கூற,

திவி தான் பேச்சற்று இருந்தாள். எழில் மேலும் “தினமும் பிஸ் தான் அப்பாக்கு போன் போட்டு தரும்” என்று மீனாவையும் மாட்டி விட, மீனா “அடுப்புல ஏதோ கருகுற மாதிரி இருக்கு” என்று கூறி விட்டு ஓடியே விட்டாள்.

ஆதி “போதும் டி.. சும்மா சும்மா என் பேபிய முறைக்காத.. நான் தான் உனக்கு தெரியாம கால் பண்ணுவேன் போதுமா.. நீ வா பேபி போலாம்” என்று எழிலை தூக்கி கொண்டு சென்று விட்டான். பின்னே இருந்தால் அனைத்தையும் கண்டு பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்பாலே.

மற்ற அனைவரும் திவியின் அருகில் வந்து அமர, திவி எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்.

தேவ் “அண்ணி.. சாரி அண்ணி.. ப்ளீஸ் அண்ணி “என்று கெஞ்ச,

பாரதி “இன்னும் என்ன யோசனை.? அடுத்து எங்களை எல்லாம் விட்டு வேற எங்கேயாவது போலம்னா.?” என்று முறைத்தாள்.

திவி சடார்ரென்று நிமிர, பவி “போதும் கா.. இனிமே இங்க இருக்க வேண்டாம்.. எல்லாரும் அங்க போலாம்” என்று அழுக, அதற்கும் திவி பேசாமல் அமைதி காத்தாள்.

சக்தி “போலாம் டா பவி.. உன் அக்காக்கு இங்க பெரிய வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு அவளே வருவா” என்ற கூற்றில், திவி அவனை நோக்க,

விஷ்ணு அவளை அந்நிலையில் காண இயலாது எழுந்து சென்றான்.

ரவீணா எதுவும் பேசாமல் தன் மகனை அவனிடம் கொடுத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

அனைவரும் கனத்த மனதுடன் அறைக்குள் செல்ல, அந்த ஹாலில் திவியும் இன்மொழியன் மட்டுமே இருந்தனர்.

மொழியன் “சித்தி.. என்னை அதிப்பிங்களா.?” என்று அவன் பயந்து கேட்க, திவியோ திருத்திருவென முழித்தாள். “சொல்லுங்க சித்தி.. என்ன அதிப்பீங்களா.?” என்று கேட்க,

அனிச்சையாக அவளின் தலை மறுப்பாக அசைந்தது.

மொழியன் “எனக்கு உங்களை ரொம்ப பிதிக்கும் சித்தி. சத்திப்பா எப்பவும் உங்களை பத்தி தான் சொல்லுவாரு. அம்மா கூட சித்திக்கு ரொம்ப கோவம் வரும்ன்னு சொல்லுவாங்க” என்று கூற,

அவனின் மழலை மொழிக்கு கண்டுண்டவள் “நீங்க அடம்பண்ணா அம்மா என்ன பண்ணுவா.?”

மொழியன் “திவி சித்தி கிட்ட சொல்லுவேன்னு அம்மா தித்துவாங்க” என்றான் உதட்டை பிதுக்கியபடி.

அதில் வாய்விட்டு சிரித்தவள் “என்னைய இவ்ளோ டெரர் ரேஞ்சுக்கு சொல்லி வச்சி இருக்காளே” என்று சிரிக்க, அவளின் சிரிப்பில் தானும் சிரித்து “ஆனா நீங்க சோ ஸ்வீட் சித்தி..” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். இதில் பாவம் இரண்டு ஜீவன்கள் தான் பொறாமையில் பொங்கியது.

ஆதியுடன் வந்த எழில் வேகமாக இறங்கி திவியின் அருகில் சென்று “ஏய்.. என் யதும்மாக்கு நான் மட்டும் தான் முத்தா தருவேன். வேற யாரும் கிஸ் பண்ண கூடாது” என்று அதட்ட, பாவம் மொழியன் தான் ஆதியின் அருகில் சென்று அவனின் காலை கட்டிக்கொண்டான்.

ஆதி அவன் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து “டேய், எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க கூடாதுன்னு” என்று மிரட்ட, அதில் உதட்டைப் பிதுக்கி அழும் நிலைக்கே சென்று விட்டான் இன்மொழியன்.

திவி அவனை தூக்கி கொண்டு “அச்சோ… விடு செல்லம்.. அவங்களுக்கு பொறாமை.. இங்க மட்டும் தான் குடுத்த, இங்க.?”என்று மறுகன்னத்தை காட்ட,

“அதான் நான் இருக்கேன்ல டி” என்று மொழியன் கொடுப்பதற்குள் ஆதி கொடுத்துவிட்டான்.

இதில் திவி சிலையென இருக்க, எழில் “ஹேங்.. யது மா.. நானு..” என்று அழுக,

ஆதி அவளை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுக்க, எழில் “இனிமே நான் ஆதி பேபி கூடவே இருக்கேன். போ மா “என்று சண்டையிட்டாள்.

திவி தான் “சரி தான் போ டி..  என்கூட என் பையன் இருக்கான்..” என்று மொழியனுக்கு முத்தம் கொடுக்க,

ரவீணா “ஹான்.. நாங்களாம் வேண்டாம். மொழியன் மட்டும் வேணுமா திவி உனக்கு.?”என்று பொய்யாய் முறைத்தாள்.

திவி “ஆமா.. ஆமா.. ஆதி நீ என்ன சொன்ன.? எப்ப பாரு இவன் எனக்கு முத்தம் கொடுப்பானா..?” என்று அதிமுக்கியமான கேள்வியை எழுப்ப,

சக்தி “ஆமா திவி.. அவன் குழந்தைல இருந்தே உன் போட்டோக்கு முத்தம் கொடுப்பான். ஆதி திட்டுறத கூட காதுல வாங்க மாட்டான்” என்று மொழியனை பற்றி கூறினான்.

மொழியன் “ஆமா சித்தி. ஆதிப்பா ரொம்ப பேட்.. நீங்க இல்லாதப்போ ஆதிப்பா பேட் வாட்டர் குடிப்பாரு. நான் பாத்து இருக்கேன்” என்று ஆதியை மாட்டி விட்டான்.

ஆதி “அயோ.. பயபுள்ள சரியான டைம்ல போட்டு கொடுத்துட்டானே.” என்று அங்கிருந்து நழுவ,

திவி மொழியன் கூற்றில் அவன் கூற வந்ததை உணர்ந்து தன்னவனை தேட, அனைவரும் நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தனர்.

அனைவரும் பேசினாலும் அன்று தனக்காக பேச ஒருவரும் முன் வரவில்லை என்ற கோவம் பெண்ணவள் மனதில் இருக்க, ஆதியை தவிர்த்து வேறு யாரிடமும் திவி பேசவில்லை.

கனவு தொடரும்🌺🌺🌺🌺

கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க.. ஈவினிங் அடுத்த யூடி வரும்.. 🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்