199 views

ஆட்சியர் கனவு 33💞

மஹாராஷ்டிரா மாநிலம். நாசிக் மாவட்டம்.

நாசிக் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் தேசிய மாணவர் படை மாணவர்களும்  மற்றவர்களை பிரார்த்தனை  கூடத்தில் கூட்ட தயார்படுத்திக்கொண்டு இருந்தனர். (அவர்கள் ஹிந்தியில் பேசட்டும்.. நாம் தமிழிலேயே அறிவோம்.)

அப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி ரேஷ்மா அன்வர் “சார், மேடம் கிளம்பிட்டாங்களா..?” என்று அங்கு இருந்த பாதுகாவலரிடம் கேட்டார்.

பாதுகாவலர் “யெஸ் மேம். இன்னும் கால் மணி நேரத்துல வந்துருவாங்க” என்று பதில் அளித்தார்.

ரேஷ்மா “ஓகே சார்… வேற ஏதாவது மேடம்க்கு ரெடி பண்ணனுமா, சார்..?” என்று வினவ,

பாதுகாவலர் “நாட் நெசசரி மேம்” என்றுவிட்டார்.

இவர்கள் கதைத்துகொண்டு இருக்க, தன் மகிழுந்தில் வந்து இறங்கினாள் நாசிக் மாவட்டத்தின் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்.

நாசிக் மாவட்டம் மஹாராஷ்டிரத்தில் உள்ள கலாச்சார சிறப்பு வாய்ந்த மாவட்டம். இங்கு உள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டவர் குகைகள் மிகவும் புகழ் பெற்றது. இது மிகவும் இனிமையான 
பருவநிலைக்கு பெயர் பெற்றது. இந்திய அரசின் வங்கித்தாள் 
அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.

அப்பள்ளியில் பல மாணவர்கள் வழி மாறுவதாகவும், போதை பொருட்களுக்கு அடிமையாகிறார்கள் எனவும் தகவல் வர, எந்த வித முன்னறிவிப்புமின்றி அங்கே சென்றாள் திவ்யதர்ஷினி.

ஆனால் ஊழலுக்கு பெயர் போன இக்காலத்தில் குள்ளநரிகளுக்கு பஞ்சமில்லை என்ற நிலை உள்ளதே. ஏதோ ஒரு நரி செய்த சதியால் அப்பள்ளி நிர்வாகி முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் வருவது அறிந்து போனது.

தாமதமாக அறிந்திருந்தாலும் பதுக்க வேண்டிய விஷயங்களை பதுக்கி, கொடுக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, கமுக்கமாக தனக்கு கொடுத்த அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார் பள்ளி தலைமையாசிரியை ரேஷ்மா.

கணினிமயமாகிவிட்ட இச்சூழ்நிலையில் பெற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகிறது. 24 மணி நேரமும் தொலைபேசியில் தன் கவனத்தை தொலைக்கின்றனர் குழந்தைகள்.

இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு, சிலர் அறியாத நபர்களின் போலி அன்பிற்கு அடிமையாகி தன் வாழ்வில் தடம் மாறுகின்றனர். இதில் ஆண், பெண் என்று எந்த பாகுபாடும் இல்லை. எந்த குழந்தையும் தனக்கு சரியான நேரத்தில் கிடைக்காத அன்பை மற்றொருவரிடம் இருந்து தான் எதிர்பார்க்கின்றனர். அதுவே அவர்களின் வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது.

சிலர் இவ்வாறு என்றால், நாம் அறியாத பல விஷயங்கள் சமூகத்தின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அடித்தள வேலையாக (அண்டர் கிரவுண்ட் கிரைம்ஸ்) நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் போதை பொருள்.

நம் நாடு பல வழிகளில் இதை தடைசெய்தாலும் ஏதோ ஒரு வகையில் இன்னும் போதை பொருள் விற்பனை இங்கு உலா வருகிறது. இதை கருப்புத்துணி போடப்பட்ட அமிர்தமாகவே கருதுகின்றனர் இதற்கு அடிமையானவர்கள்.

இவற்றில் கொடுமை என்னவென்றால் இவையனைத்தும் சிறு குழந்தைகள் முதல் பருவக்குழந்தைகள் (18-21) வயது வரை உள்ள இளைஞர்களிடம் மட்டுமே அதிக ஆளுமையை செலுத்துகிறது. இதிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க உடனே முடியாது. ஆனால் எந்த செயலுக்கும் ஒரு முதல் அடி தேவை. அந்த முதல் அடி தான் இங்கு யார் எடுத்துவைப்பது என்று அனைவரும் அறியாமல் இருக்கின்றோம்.

மகிழுந்தை விட்டு இறங்கிய திவ்யா, அனைத்தையும் யூகித்து கொண்டாள். தான் வந்தது முதல் இனி இங்கு எதுவும் கிடைக்காது வரை. அறிந்தவள் முகத்தில் வெற்று புன்னகை.. நேர்மையாக வேலை செய்யும் அனைவருக்கும் கிடைக்கும் வெகுமதி பணியிடமாற்றம். அதே வெகுமதி தான் திவியிற்கும். தான் பணிக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினாள்.

தன் சுய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு மாவட்ட ஆட்சியர் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். தன் குடும்ப சிக்கல்களை கருத்தின் ஒரு ஓரம் வைத்துவிட்டு, நாசிக்கில் முடிக்காத பல விஷயங்களை முடித்தாள். இவையனைத்தும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நன்மதிப்பை பெற்றாள். எல்லாம் அந்த ஒரு வழக்கை கையில் எடுக்கும் வரை.

அதன்பிறகு பல அடிகள் அவள் வாழ்வில் இருந்தும் முடிக்கும் தருவாயில் அவளுக்கு கிடைத்த வெகுமதி பதவி இறக்கத்துடன் கூடிய பணியிடமாற்றம். போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு விசாரித்து கைது செய்யும் பிரிவில் ஒரு பணி..

போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையோடு இணைந்து செயலாற்றும் பிரிவு. நாசிக் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளராக ஒன்றரை வருட காலம் பணியாற்றி பின் அதே மாவட்டத்தில் தனக்கு அதிகாரம் இருந்தும் செய்யமுடியாத பணியில் இருக்கிறாள் பெண்ணவள்…

மகிழுந்தில் இருந்து இறங்கியவள் தன் அருகில் இருந்த பாதுகாவலரிடம் பேசி பள்ளியை சோதனை இட சொன்னாள். எல்லாம் முன்னாடியே அறிந்த படியால் இவர்களின் தேடல் பூஜ்ஜியத்தில் தான் முடிந்தது.

ரேஷ்மா “மேடம்… நீங்க தேவையில்லாம எங்க ஸ்கூல்லோட பேர கெடுக்குறீங்க..” என்று எகிற,

திவி “நான் தேவையில்லாமலாம் பண்ணல.. மிஸ்.ரேஷ்மா.. எனக்கு வந்த தகவல் அப்டி.. அதுனால தான் நான் இங்கே ரைட் க்கு வந்தேன்.. என்று சத்தமாக பேசிவிட்டு, அவள் காதருகில் வந்து “இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து மறைச்சி வைப்பீங்கன்னு நானும் பாக்குறேன். கண்டிப்பா உன்னையும் உனக்கு மேல இருக்குறவனையும் அரேஸ்ட் பண்ணுவேன்.” என்று அடிக்குரலில் கர்ஜித்தாள் பெண்ணவள்.

அவள் கூறிய வார்த்தைகள் சாதரணமாகினும் கூறிய விதம் அவளை நடுங்க வைத்தது.

முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ரேஷ்மா “உன்னால முடிஞ்சத பாத்துக்கோ. மிஸஸ் திவ்யதர்ஷினி ஆதித்யா” என்று அழுத்தமாக கூறியவள், பின்  “என்ன சொன்ன மிஸ் ரேஷ்மாவா.? உனக்கு தெரியாதுன்னு நினைக்குறேன். ஐம் நாட் மிஸ் ரேஷ்மா. ஐம் மிஸஸ் ரேஷ்மா. ரேஷ்மா அன்வர். அண்ட் என் ஹஸ்பண்ட், என் கூட தான் இருக்காரு” என்று அழுத்தமாக கூறியவளை தன்னால் இயன்ற அளவு முறைத்த திவி,

அவளை திமிராக பார்த்து, “வெல்… என்ன சொன்ன..? அவர் உன்கூட இருக்காரா.? வாரே வா… வாட் அ லைஃப்.. நல்லா பாத்துக்கோமா உன் ஹஸ்பண்ட்ட.. அப்ரோம் மிஸஸ் ரேஷ்மா பழையபடி மிஸ் ரேஷ்மாவா ஆகிட போற”, என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு சென்றாள்.

பின் தன் அழைப்பேசி அலற, அதை செவிக்கு இணைத்தவள் பேசினாள்
” யெஸ் சார்.. சாரி சார். இங்க எதுவும் இல்லை” என்று கூற,

மறுபுறம் அவளின் மேல் அதிகாரி காச் மூச் என்று கத்த, அதை கேட்டு கொண்டே தன் மகிழுந்தில் பயணத்தை தொடர்ந்தாள் திவி.

“எல்லாம் இவனுங்களுக்கே தெரியும். தெரிஞ்சும் எப்டி அமைதியா இருகாணுங்க. இதுல ஒன்னும் இல்லன்னு சொன்னா மட்டும் நம்ம மேல எகிறானுங்க.” என்று தன் வாயிற்கு வந்ததை கத்த, நல்ல வேளை ஓட்டுனருக்கும் உடன் இருந்த பாதுகாவலனிற்கும் தமிழ் தெரியாததால் தப்பித்தாள், இல்லை என்றாள் அவளின் கதி..? இப்போது கார் கதவிற்கும் காது இருப்பதை அவளும் அறிந்ததே.

இந்த நிகழ்வுகளில் மாலை நேரமே வந்து விட, தன் இல்லத்திற்கு சென்றவளை அவள் குழந்தையின் சிரித்த முகம் வரவேற்க, இது வரை இருந்த இறுக்கம், கோபம் சென்று மனதில் வலியும் இதழில் புன்னகையும் தான் வந்தது.

அவளை கண்டவளுக்கு தன் கடந்த கால நினைவுகளே மேலோங்கியது.

திருமணம் முடிந்து சம்பிரதாயங்கள் சிறப்பாக நடக்க, தன்னவனின் சீண்டல்களில் தன்னை தொலைத்தாள் பெண்ணவள். சீண்டல்களினால் எழுந்த செம்மை முகத்தில் பரவ தன்னை மறந்தான் ஆதி.

அன்று இரவு தன் தாய், அத்தை கூறிய அறிவுரைகளை கேட்டவளின் மனம் மிகவும் பதட்டத்துடன் இருக்க, அவளின் மன எண்ணங்கள் கைகளில் பிரதிபலித்தது. அனைவரும் அவளை ஆதியின் அறைக்குள் தள்ளிவிட, முகத்தில் பூத்த வியர்வையை தன் முந்தானையில் துடைத்து கொண்டே தன்னவனை தேடினாள்.

அவனோ சாளரத்தில் நின்று நிலவை ரசித்து கொண்டு இருந்தான். அப்போதும் திவிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு வித பயம் பரவ, அவனருகில் சென்றவள் “ஆதி” என்று அழைத்தாள் மென்மையாக.

ஆதி தன்னவள் உள்ளே வரும்போதே அறிந்தவன், அவளின் செய்கையில் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு நின்றிருக்க, அவளது அழைப்பில் திரும்பியவன் “ஏய் குட்டச்சி.. என்ன தூங்கள நீ.?” என்று வினவ,

அவள் தான் பே என விழித்து கொண்டு இருந்தாள். அவளின் முழிகளை கண்டவன் தன்னை மறந்து அவளை ரசிக்க, தன்னை சமன்படுத்திக்கொண்டு “என்ன டி இப்டி முழிக்குற.? போ போய் தூங்கு.. நாளைக்கு காலேஜ் போகணும்ல” என்றதில் திவிக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

திவிக்கு அப்போது தான் மூச்சே சீரானது. திவி “நீ தூங்கல.?” என்று கேள்வியாய் கேட்க,

ஆதி “இல்ல யது.. ஆஃபிஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு. கல்யாண வேலையில நெறய ஒர்க் பெண்டிங் பாக்கணும் டி” என்று கூற,

திவி மணியை பார்த்து விட்டு “இப்போவே மணி பத்து.. இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் ?” என்று வினவினாள்.

ஆதி சிரித்து விட்டு “தெரியலையே” என்றான் பெருமூச்சை விட்டபடி..

திவி “சரி…நீ வா வந்து தூங்கு.. நாளைக்கு ஆஃபிஸ் தான போற அப்போ பாத்துக்கலாம்” என்று அழைக்க,

அவளின் கூற்றில் என்ன அறிந்தானோ, அலுவலக வேலையை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி உறங்க சோஃபாவின் அருகே சென்றான்.

திவி “அங்க எங்க போற..?” என்று கேள்வியாய் பார்க்க,

ஆதி “அப்ரோம் வேற எங்க படுக்க?” என்றான் அவளை ஆராய்ந்தபடி.

திவி “பெட் தான் இருக்குல்ல.. வா இங்க” என்று அழைக்க,

ஆதி “ஆர் யூ ஸ்யூர்…? உனக்கு ஓகே தான?” என்று வினவ,

திவி “ரொம்ப பண்ணாத டா… வா ” என்று அழைத்து, படுத்தாள்.

ஆதியும் வந்து நடுவில் இடைவெளி விட்டு படுக்க, சிறிது நேரத்தில் இருவரும் உறக்கத்தை தழுவினர்.

அப்போது திவியின் மேல் பல்லி விழ, பதறியடித்து கொண்டு எழுந்தவளின் முந்தானை கீழே நழுவ, அவள் இட்ட சத்தத்தில் ஆதியும் எழுந்தான். அவளின் நிலைக்கண்டு ஆண்மகனின் மனம் தடுமாறிட பயந்த பாவையவள் மேனியை அணைக்க படுக்கையில் இருந்து எழுந்தான் ஆதி.

எழுந்தவன் அவளை தன் மார்போடு அணைத்திட பெண்ணவள் திணறி போனாள். ஆதி “லவ் யூ யது… லவ் யூ சோ மச் டி மை பொண்டாட்டி” என்று கத்த,

இவன் இட்ட சப்தத்தில் திவி தன் தூக்கம் கலைந்து எழுந்தாள். ஆதி தலையணையை இறுகி அணைத்து கொண்டு உளறி கொண்டு இருக்க, திவிக்கு அடக்க முடியாத சிரிப்பு தான் வந்தது.

திவி “ஆதி… டேய் லூசு” என்று அவனை உழுக்கிட, ஆதி திடுக்கிட்டு எழுந்தான்.

ஆதி ‘ச்சை எல்லாம் கனவா..?’ என்று மனதிற்குள் புலம்பியபடி தலையில் அடித்து கொள்ள, இவனின் செய்கையில் திவி குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

திவி “என்ன ஆச்சு…?”

ஆதி “அது.. அது.. ஒரு கனவு டி.. வேற ஒன்னும் இல்ல”..

திவி “கனவா.. என்ன கனவு.. கனவுல என்ன.?” என்று ஆர்வமாய் வினவ,

ஆதி ‘அயோ சொன்னா வேற கலாய்ப்பாளே… வேற வழி இல்லை… சொல்லித்தான் ஆகணும்.’ என்று தனக்கு வந்த கனவை கூற,

திவி அடக்க முடியாத சிரிப்பை சிரித்து விட்டு “என்ன டா சூரிய வம்சம் படம் பாத்தியா..? அதுல இந்த சீன் தான வரும்…” என்று சிரித்து கொண்டே கூற, ஆதி தான் கடுப்பானான்.

திவி நிறுத்தாமல் “அப்ரோம் ஏதோ பாட்டு வருமே. என்னது…? ஹான்.. சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு… வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெளக்கு வெளக்கு” என்று பாட,

ஆதி “ஹான்.. ஆமா டி.. வா… வந்து வெளக்குறேன் வா டி “என்று அவளை சீண்டிக் கொண்டே அவள் அருகில் வர,

திவி “டேய்… டேய்..” என்று பின்னே சென்றவள், சுவற்றில் மோதி கொண்டாள்.

நினைவுகளின் பிடியில் இருந்தவள் நிகழ்வில் உண்மையிலேயே சுவற்றில் மோதி கொண்டு தன்னிலை பெற்றாள்.

தாயின் வருகையை அறிந்த குழந்தை ஓடி வந்து திவியின் கால்களை கட்டி கொண்டது.

திவி “எழில் மா… சாப்டியா.?” என்று தான் நான்கு வயது மகள் ஆறெழிலிடம் கேட்டாள்.

எழில் “இல்ல யது மா.. நீ வராம நான் எப்டி சாப்த.. நீ தான மா எனக்கு ஊத்தி விதுவ..” என்று தன் மழலை மொழியில் கூறினாள்.

தான் வீட்டை விட்டு வெளியில் வந்து பல கஷ்டங்களை கடந்தாலும் தனிமையின் பிடியில் இருக்கும் வலி அவளை மிகவும் பாதித்தது. அப்போது தான் கையில் எடுத்த வழக்கில் பல இடையூறுகள் வந்து அவளின் மனஅழுத்தம் மோசமடையும் வேலையில் மருந்தாக கிடைத்தவள் தான் ஆறெழில். தன் கரங்களில் அவள் கிடைத்த வேலை அவளுக்கு வயது மூன்று.

தனக்கு கிடைத்தவளை தன் மகளாய் பாவித்து உடனே தத்தெடுத்து கொண்டாள் தனிமையின் பிடியில் இருந்து விடுபட…

திவி “சரி.. குட்டி.. இப்ப சாப்பிடலாமா..?” என்று கேட்க,

தன் குட்டி தலையை வேகவேகமாக ஆட்டினாள் எழில்.

எழில் “யது மா.. இன்னைக்கு எப்தி போச்சு.?” என்று கேட்க,

திவி “இன்னைக்கு… நாட் பேட்.. அம்மாவோட பாப்பாக்கு எப்டி போச்சு.?” என்று தன் மகளிடம் கேட்டாள் திவி.

எழில் “சூப்பதா போச்சு.. நானும் கவினும் ஹைட் அண்ட் சீக் விளையாண்டோம்மே” என்று கைத்தட்டி கூற,

திவி “பார்ரா.. அப்ரோம்.. .?”

எழில் “அப்தோம்…?” என்று யோசிக்கும் முகபாவம் கொண்டாள் மழலையவள்.

“அப்ரோம்.. என்ன.. மேடம் ரொம்ப அடம் ஐஸ்கிரீம் வேணும்ன்னு” என்று கூறிக்கொண்டே உள் நுழைந்தாள் மீனா.

மீனா கூறியதை கேட்டு திவி எழிலை முறைக்க, எழில் முகத்தை பாவமாக வைத்து கொண்டு “அம்மா… ” என்று அழைத்தாள் மென்மையாக..

திவி “எத்தனை டைம் சொல்லி இருக்கேன் எழில்மா.. ஆல்ரெடி குட்டிமாக்கு கோல்ட் இருக்குள்ள.?” என்று செல்லமாய் கடிந்து கொள்ள,

எழில் “யது..மா.. ப்ளீஸ்.” என்று கெஞ்ச,

திவி “அச்சோ.. செல்லம்.. இன்னைக்கு ஒன்னு தான் ஓகே வா.”என்று மகளின் ஆசையை நிராசையாக்கிட விரும்பாமல் கேட்டாள் திவி.

மீனா “அட கொடுமையே.. ஏன் யது நீ அவளை திட்டுவன்னு பாத்தா.. நீயே அவளுக்கு வாங்கி தரேன்னு சொல்ற.. அவளுக்கு செல்லம் கொடுத்து ரொம்ப கெடுக்குற நீ ” என்று தன் தோழியை கடிந்து கொண்டாள் மீனா.

திவி அவளை பாவமாய் பார்க்க, எழில் “ஏய் பிஸ்.. அம்மாவ ஏன் திட்டுத.. எத்தனை ததவ சொல்லி இருக்கேன்.. யது அம்மாவ தித்தாதன்னு.” என்று அன்னைக்காக மல்லுக்கட்டினாள் வாண்டு.

மீனா “அம்மா தாயே.. நான் ஒன்னும் உங்க அம்மாவ திட்டல.. நீ சாப்பிடு வா.. அம்மா வொர்க் முடிச்சிட்டு வரட்டும்..” என்று சரண்டர் ஆகிட,

எழில் திவியின் காதில் “ம்மா.. நாம ஐஸ்கிரீம் சாப்த போதப்போ இந்த பிஸ்ச டேங்க்குள்ள வச்சு பூட்டுபோட்டு போய்த்தலாம்.. அப்போ தான் அமைதியா இருக்கும் என்ன டீலா.?” என்று கேட்க,

திவி “ஹான் ஓகே டீல்.. குட்டி” என்று மகளிடம் திட்டத்திற்கு செவிமடுத்தாள் திவி.

“வாட் தி ஹெல் இஸ் ஹாப்பனிங் ஹியர்.?” என்று காட்டுக்கத்தல் கத்திக்கொண்டு இருந்தான் கோகுல்.

அவன் முன் தேவ் மற்றும் ஹரி இருக்க, சந்தனா திமிருடன் அங்கே நின்று கொண்டு இருந்தாள்.

தேவ் “அண்ணா.. இப்போ என்ன ஆச்சு?”

கோகுல் “என்ன ஆச்சா.? இன்னும் என்ன ஆகல.? நாலு வருஷம் ஆச்சு நான் இந்த கம்பனிக்கு எம்.டி ஆகி. இது வரை லாஸ் அண்ட் ப்ரோஃபிட் எதுவுமே வரல. நாலு வருஷம் முன்னாடி நான் கையில் எடுக்குறப்போ எப்டி இருந்ததோ அப்டியே தான் இருக்கு. நீங்க என்ன பண்றீங்க.?” என்று கர்ஜ்ஜிதான்.

தேவ் ‘குரங்கு கையில பூ மாலை கொடுத்தா எப்டி இருக்குமோ அப்டி தான் இந்த கம்பனியும் உன் கையில மாட்டிக்கிட்டு சின்னப்படுது. இதுல இந்த குண்டு பூசணிக்கா சந்தனா வேற’ என்று மனதில் புலம்பி கொண்டு இருந்தான்.

ஹரி “கோகுல்.. ” என்று பேச வாயெடுக்க,

சந்தனா “ஹெலோ எத்தனை டைம் சொல்றது.. ஹி இஸ் தி எம்.டி ஆஃப் திஸ் கம்பெனி.. கால் ஹிம் சார் ” என்று கூற,

அதில் எழுந்த கடுங்கோபத்தை வெளிக்கொணராது, ஹரி “சாரி மேம்.. சார்.. நமக்கு வர பிராஜக்ட் எல்லாம் பாரதி எப்டியோ கவர் பண்ணிட்டாங்க.. ” என்று கூற,

தேவ் ‘பின்ன.. என் முட்டக்கன்னின்னா சும்மாவா?யார்கிட்ட.? எல்லாம் என் அண்ணா அண்ணி அண்ட் தி கிரேட் மேன் என் ட்ரைனிங் ஆச்சே!’ என்று அவளின் நினைப்பில் திளைத்து கொண்டு இருக்க,

சந்தனா “என்ன தேவ், இன்னும் அந்த பாரதிய நினைச்சிக்கிட்டு இருக்கியா.?” என்று கண்களில் அனல் போங்க கேட்டிட,
 
அவளின் வார்த்தையில் எழுந்த அதீத கோபத்தை மனதில் வைத்து கொண்டு தேவ் “அப்டிலாம் ஒன்னும் இல்ல அண்ணி. நான்… நான்… அவள பத்தி நினைக்கல” என்று கூறினான்.
மனதிலோ ‘கருமம்.. இந்த குண்டு பூசணிக்காவலாம் அண்ணின்னு கூப்டனும்ன்னு என் தலையெழுத்து’ என்று மானசீகமாய் தலையில் அடித்து கொண்டான்.

கோகுல் “டோன்ட் டாக் அன்னெசசரி. அடுத்து என்ன பண்ணலாம்?” என்று கேட்டவனின் மனதில் என்ன உதித்ததோ,
தான் இட்ட திட்டத்தை நிறைவேற்ற ஆயுத்தமானான்.

கோகுல்.”நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. சந்தனா, உடனே சுப்ரியாக்கு கால் பண்ணி வர சொல்லு” என்று அவளுக்கு கட்டளை பிறப்பித்தான்.

வெளியில் வந்த தேவ் “என் அண்ணா இருந்தா இவ்ளோ தூரம் பேச விட்டு இருக்க மாட்டாங்க.. ” என்று வலியுடன் கூறியவனை,

தோளோடு அணைத்து கொண்டான் ஹரி “எல்லாம் மாறும்டா. கவலைப்படாத. வா.. நாம போய் பாரதிய பாத்துட்டு வரலாம்” என்று இழுக்க,

தேவ் “அந்த முட்டக்கன்னிய பாக்கவா… ” என்று இழுத்து, “ஹான்.. ஆமா வாங்க… அப்டி அவ என்ன தான் பண்ணிவச்சி இருக்கான்னு பாக்கலாம்.” என்று அவளை காண புறப்பட்டனர்…

கனவு தொடரும்🌺🌺🌺🌺

கதைல இன்னும் நிறைய திருப்பங்கள் வரும் பிரண்ட்ஸ்.. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம்.. இன்னும் கதையை நல்லா கொண்டு போக நிச்சயம் உங்க கமெண்ட்ஸ் முக்கியம் பிரண்ட்ஸ்..

நன்றி…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்