Loading

ஆட்சியர் கனவு 23💕

வெள்ளைநிறத்தை செம்மையாக்கிட தன் வரவை பரிசளித்தான் கதிரவன்…

சோம்பல் முறித்து எழுந்த ஆதி, தனக்கு வந்த கனவை நினைத்து கொண்டு கீழே வந்தான்.

திவி மாடிக்கு வந்து அவன் நெற்றியில் இதழ் பதித்து, “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தியா மாமா. எப்பவும் நீ சந்தோசமா இருக்கணும். உனக்காக நான் எதுவும் செய்வேன்” என்று திவி உரைக்க,

ஆதி “நீ இல்லாம நான் இல்ல யது.. சீக்கிரம் உன் காதல என்கிட்ட சொல்லிடு டி” என்றான்.’ இப்போது நினைத்தால் கூட அவன் முகத்தில் புன்னகை கீற்று வீசியது.

“கனவுல வந்த மாதிரி நேர்லயும் அப்டியே விஷ் பண்ணா எப்டி இருக்கும்?” என்று நினைத்து கொண்டே வந்தான்.

ரோஜா “எந்திரிச்சுட்டியா ஆதி, இந்தாப்பா” என்று கேட்டுக்கொண்டே அவனிடம் காப்பி டம்ளரை நீட்டினார்.

ஆதி “தான்க்ஸ் ஆண்டி.. மத்தவங்க எல்லாரும் எங்க.?” என்றான் ஆராய்ந்தபடி.

ரோஜா “பவியும் பாரதியும் தூங்குறாங்க. திவ்யா கிளம்பிட்டா ஆதி”

ஆதி “எங்க போய் இருக்கா.?”

ரோஜா “தெரியல, உன்னையும் ரெடி ஆக சொன்னா. அவ ரூமயே யூஸ் பண்ணிக்கோ. பெட்ல உனக்கு ட்ரெஸ் இருக்கு ஆதி” என்று விட்டு நகர்ந்தார்.

ஆதி ‘காலைல எங்க போய் இருக்கா இந்த குட்டச்சி.? எப்ப பாரு சுத்திக்கிட்டே இருக்கா. ஒரு இடத்துல இருக்காளா? அத்தையும் மாமாவும் கூட எதுவும் கேட்குறது இல்ல’ என்று புலம்பி கொண்டே அவள் அறைக்கு சென்றான்.

அங்கு மெத்தையில் வெள்ளை சட்டையும் கருப்பு காலசாராயும்  இருக்க, அதை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்து விட்டு குளியலறைக்கு சென்றான்.

குளித்து முடித்து விட்டு வந்தவன் உடையை அணிந்து கொண்டு, தயாராகி வந்தான்.

வெளியில் அவன் நண்பர்கள் பட்டாளமும் பவி, பாரதி, ரோஜா, ராஜா என அனைவரும் இருந்தனர்.

அனைவரும் ஒரு சேர, Wish you many more happy returns of the day aathi.. என்று கத்த, அவன் கண்களோ திவியை தான் தேடியது. தனக்கு முதல் வாழ்த்து திவி தான் கூற வேண்டும் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமே.!

திவியை காணாமல் மற்ற அனைவரது வாழ்த்தையும் அமைதியாக சிறு புன்னகையுடன் ஏற்று கொண்டான்.

பவி & பாரதி “ஹாப்பி பர்த்டே மாமா”. என்று கூற,

ஆதி தான் திகைத்தான். இது வரை எந்த உறவு முறையும் கூறி அழைக்காமல் இருந்தவர்கள் மாமா என்று கூறியது அவனுக்கு அத்துணை மகிழ்ச்சி, இதைத்தானே கேட்க வேண்டும் என்று அவனும் ஏங்கி கொண்டு இருந்தான். தனக்கு உண்மை தெரிந்தும், மூன்றாவது மனிதன் போல தானே பழகி கொண்டு இருந்தான். இப்போது இவர்கள் அழைத்தது ஆதிக்கோ அதீத மகிழ்ச்சி.

ராஜா மற்றும் ரோஜா விடம் சென்றவன் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க, ராஜா அவனை அணைத்து கொண்டார்.

ஆதி “மாமா.. அத்தை.. உங்களுக்கு?”

ராஜா “திவ்யா எல்லாமே சொல்லிட்டா ஆதி..” என்றார் புன்னகையுடன். ரோஜாவும் அதை ஆமோதிக்க, ஆதிக்கு தான் எல்லையில்லா சந்தோசம். தனக்கும் இப்போது சொந்தங்கள் வந்துவிட்டது, தொலைந்த சொந்தம் மீண்டும் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி.

அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, அப்போது திவி அங்கு வந்தாள். வந்தவள், அவள் அன்னையிடம் சென்று, “எல்லாரும் சாப்டங்களாம்மா?” என்று கேட்க,

ரோஜா “எல்லாரும் சாப்டாங்க. நீ மட்டும் தான்” என்றார்.

திவி “ம்ம் சரி.. நான் சாப்டு ஆதிய கூட்டிட்டு வரேன்.. நீங்க எல்லாரும் முன்னாடி கிளம்புங்க.!” என்றாள்.

ரோஜா “ம்ம் சரி சீக்கிரம் கிளம்பி வாங்க!” என்று விட்டு அனைவரும் கிளம்பினர்.  ஆதி மாடியில் இருந்ததால் திவி வந்ததை அவன் அறிந்து இருக்கவில்லை.

அனைவரும் கிளம்பி விட, திவி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். ஆதி கீழே வர, யாரும் அங்கு இல்லை. திவி இருப்பதை கண்டவன், அமைதியாக அவளருகில் சென்றான். அவள் பாட்டிற்கு அதிமுக்கியமான வேலை செய்து கொண்டு இருக்க, இவன் வந்ததை அவள் கவனிக்கவில்லை.

திவியின் அருகில் வந்தவன் அமைதியாக அவள் கன்னத்தில் தன் இதழ்களை பதித்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் எதிரில் அமர்ந்து கொண்டான்.

திவிதான் தான் கண்டது கனவா நனவா என்று குழம்பி போய் இருந்தாள். திவி அவன் செயலில் சிலையாக இருக்க, அவனோ கடினப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தான்.

ஆதி “ஓய்.. குட்டச்சி.. சாப்டல.? ஏன் பேயரஞ்ச மாதிரி உட்காந்துட்டு இருக்க?” என்றான் கேலியாக.

திவி தான் குழம்பிவிட்டு  அவனை பாராமல் உணவில் கவனம் செலுத்தினாள்.

ஆதி “உன்னை தான் கேட்கிறேன். காதுல விழுகலயா திவ்யதர்ஷினி.?” என்று ஒற்றை புருவம் தூக்கி கேட்டான். அதில் கடுப்பானவள் “இப்போ உனக்கு என்ன வேணும்.?” என்றாள் பல்லைக்கடித்து கொண்டே.

ஆதி “எல்லாரும் எங்க போய் இருக்காங்கடி குட்டச்சி.?”

திவி “தெரியாது..” என்று விட்டு, மீண்டும் “என்ன நீ டி சொல்ற.? ஹான்.?” என்று கத்தினாள்.

ஆதி “அப்டி தான் டி சொல்லுவேன் டி என்ன டி பண்ணுவ டி.?” என்று டி க்கு அழுத்தம் கொடுத்து பேச,

திவிக்கு ஒரு பக்கம் மனது காற்றில் பறந்தாலும், மற்றொரு பக்கம் கொலை வெறி வந்தது. “ஏய்… டி சொன்ன அவ்ளோதான்.. நீ டி போட்டு பேச நான் ஒன்னும் உன் பொ..”என்று சொல்ல வந்தவள், எருமை பொறுக்கி” என்று திட்டிவிட்டு எழுந்தாள்.

ஆதி தான் சிரிப்பை அடக்கி கொண்டு, அவளின் கை பிடித்து இழுக்க, திவி தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள். அதில் இருவரின் இதழ்களும் மோதி கொள்ள, திவி அடித்து பிடித்து எழுந்திட, ஆதி தான் இறக்கையே இல்லாமல் பறந்து கொண்டு இருந்தான்.

திவி அடுக்களைக்குள் சென்று அங்கிருந்து குரல் மட்டும் கொடுத்தாள் “இன்னும் ஒரு ஹால்ப் அன் ஹவர்ல வெளில போனும்.. ” என்று விட்டு உள்ளயே இருந்தாள். எங்கே வெளியில் சென்றால் அவளின் முகமே காட்டி கொடுத்து விடும் அவளின் காதலை, முகமோ  செவ்வானமாக சிவந்து இருந்தது அல்லவா!

ஆதி சிரித்து கொண்டே டி.வி.யை ஆன் செய்தான்.
அவன் நேரமோ இல்லை அவளின் நேரமோ இருவரை சீண்டவே பாடல் ஓடி கொண்டு இருந்தது.

இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா

இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா

கண்ணுல கத்திசண்டை
கையில கம்புசண்டை
கன்னத்தில் முத்த சண்டை வரியா

என்று ஓடி கொண்டு இருக்க, திவியோ உள்ளே பாத்திரங்களை உருட்டி கொண்டு இருந்தாள்.

ஆதி சிரித்து விட்டு அடுத்த சேனலை மாத்த,

இச்சு இச்சு இச்சு இச்சு கொடுவெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடுநச்சு நச்சு நச்சு நச்சு கொடு ரைட்டா ரைட்டு

என்று வர, அதில் மேலும் கடுப்பானவள், வேகமாக வந்து அவனிடம் ரிமோட்டை பிடுங்கி டி.வி யை ஆஃப் செய்தாள்.

ஆதி எதுவும் கூறாமல் உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்ய, அதில் சிவந்தவள் அதனை மறைத்து விட்டு அவனை முறைத்து விட்டு சென்றாள்.

ஆதி ‘எப்ப டி நீ என்ன ஏத்துக்க போற.? கண்டிப்பா நீயே வந்து உன் காதல சொல்லுவ யது’ என்று நினைத்துக் கொண்டான்.

தயாராகி வந்தவள், எங்கோ பார்த்து கொண்டு “போலாம்” என்றாள்.

அவன் அமைதியாக அவளை ரசிக்க, அவள் மீண்டும் “உன்னை தான் போலாம்” என்றாள் கடுப்பாக.

ஆதி “சுவத்துக்கிட்ட சொன்னா அது தானே கூட்டிட்டு போகணும்.. நான் இல்ல டி குட்டச்சி..” என்றான் நக்கலாக.

திவி “ப்ச்..” என்று விட்டு அவனை நோக்கி, “போலாமா.?” என்றாள் கேள்வியாக,

ஆதி “ஓஓ.. போலாமே” என்றான். அவனுக்கோ பேரானந்தம். பின்னே தன் வண்டியில் தன்னவள் உடன் முதல் பயணம் அல்லவா!

வண்டியை ஸ்டார்ட் செய்தவன், “கடவுளே என் பர்த்டே இவ்ளோ சிறப்பா போகுது. சொன்ன மாதிரியே நல்ல நல்ல சுவிச்சுவேஷனா அமைச்சு தரியே பிள்ளையராப்பா.. உனக்கு 1000 தேங்காய் உடைக்குறேன், அப்டியே அவளே காதல சொல்லிடனும்’ என்று ஒரு வேண்டுதலை போட்டான்.

ஆதி “எங்க போகணும்?”

திவி “நான் ரூட் சொல்றேன்.” என்று விட்டு வண்டியில் ஏறினாள்.

இருவருக்கும் நடுவே தன் கைப்பையை வைத்தவள் “ம்ம்..போலாம்” என்றாள்.

ஆதி தான் கடுப்பாக “இப்போ இந்த பேக் அவசியமா” என்றான் பல்லைக் கடித்து கொண்டே.

திவி நமட்டு சிரிப்புடன் “ரொம்ம்பப அவசியம் தான்.. போ” என்றாள்.

திவி வழி சொல்ல சொல்ல, அவனும் பதில் ஏதும் கூறாது சென்றான். இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்ய, அதை ரசித்தவாறே இருவரும் பயணித்தனர்.

அவன் வண்டி, ஒரு வீட்டின் முன் நிற்க, ஆதியோ குழப்பமாக திவியை பார்த்தான்.

திவி “என்ன அங்கேயே நிக்குற? வா உள்ள போலாம்..” என்று அவனை அழைக்க,

ஆதி “இது யார் வீடு யது.?”

திவி “ஹான்.. என் மாமனார் வீடு.. பேசாம வா டா எருமை” என்க,

ஆதி”குட் ரெஸ்பெக்ட்..!” என்று விட்டு அவள் பின்னே சென்றாள்.

வீடே இருட்டாக இருக்க, ஆதி “என்னடி பாளடைஞ்ச  பங்களாக்கு கூட்டிட்டு வந்து இருக்க?” என்றான்.

திவியிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆதி “திவ்யா.. எங்க டி இருக்க.?” என்று அங்கேயே ஆணி அடித்தபடி நின்று விட்டான்.

சரியாக அவன் முகத்திற்கு நேரே வெளிச்சம் பரவ, திவி ஆதியின் தாய் தந்தையோடு அவனருகில் வந்தாள்.

அனைத்து விளக்குகளும் ஒளிர, அங்கு அனைவரும் இருந்தனர். ஆதி தான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
செல்வி, சக்தி, ராஜா, ரோஜா, பவி, பாரதி, ஆதியின் தாய் தெய்வானை, தந்தை சரவணப்பெருமாள், தம்பி தேவ் மித்ரன், அவர்களின் தாத்தா சிவஞானம், விஷ்ணு, ரவீணா, சுப்ரியா மற்ற நண்பர்கள், என அனைவரும் அங்கு இருந்தனர்.

திவி ஆதியின் அருகில் சென்று அவனின் கை பிடித்து “ஆதி” என மென்மையாக அழைத்தாள். அவன் கண்ணீரை அடக்கிக் கொண்டு திவியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆதிக்கு பேச வார்த்தைகளே வரவில்லை.
திவி”என்னடா எருமை முழிக்குற.? இவங்க யாருன்னு தெரியலையா என்ன.?”என்றாள் யோசனையாக.

ஆதி இல்லை என்று தலை அசைத்து விட்டு, பசுவை பார்த்த கன்றை போல, தன் தாய் தந்தையை அணைத்து கொண்டான்.

அந்த நிகழ்வு அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தான் கொடுத்தது.

பதினெட்டு வருட பிரிவு அல்லவா.? ஆதி தான் தொலைத்த சொந்தம் மீண்டும் கை சேர்ந்தது எண்ணி பெரும் உவகை கொண்டான். திவியும் இந்த அன்பில் உருகி தான் போனாள்.

தேவ் “அண்ணா…” என்று அழைத்தது தான் தாமதம், ஆதி அவனையும் சென்று அணைத்து கொண்டான்.

ஆதி “உங்கள பார்ப்பேன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல. ஆனா அந்த நம்பிக்கை யதுவால தான் அதுவும் ரெண்டு நாள் முன்னாடி தான்டா வந்துச்சு” என்றான் கண்ணீர் மல்க.

தேவ் “உங்கள பிரிஞ்சு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ண்ணா.. அம்மா அப்பா என்கிட்ட எதுவுமே சொல்லல ண்ணா. திவி சொன்னப்ப தான் எனக்கு தெரியும் அண்ணா. எனக்கு அண்ணா இல்லன்னு நான் கஷ்டப்பட்டத விட, இருந்தும் உங்கள பாக்காம இந்த ஒரு நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன் அண்ணா!” என்று அழுது விட்டான்.

சிவஞானம்”என்ன மறந்துட்டியா ஆதி.?” என்று கேட்க,

ஆதி “அய்யோ டார்லிங்க்.. உங்கள எப்டி மறப்பேன். என் செல்ல தாத்தாவ. ஹான்.?” என்று அவரை அணைத்து கொண்டான்.

சிவஞானம் “உன்னை பார்ப்பேன்னு எனக்கு தெரியும் ஆதி.. கண்டிப்பா திவ்யா உன்னை எங்க கூட சேத்து வைப்பான்னு தெரியும்.. என் பேத்தினா சும்மாவா” என்றார் மீசையை முறுக்கிய படி.

ஆதிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவன் திவியை பார்க்க, அவளோ கவியிடம் சண்டை இட்டுக் கொண்டு இருந்தாள்.

திவி “சொன்னா கேளு கவி. ரெண்டு பீஸ் எடுத்தா மாட்டிக்குவோம். ஒன்னு எடுத்து ஆளுக்கு பாதி பாதி சாப்டலாம்” என்க,

கவி “இல்ல திவி.. பெருசா எடுத்தா தான் சந்தேகம் வரும்.. நாம குட்டி குட்டி பீஸ்ஸா எடுத்துக்கலாம்” என்றாள்.

இவர்களை நோக்கி வந்த சபரி, “என்ன இங்க பட்டிமன்றம்?”

கவி”அது ஒன்னும் இல்ல டா. ஆதி இன்னும் கேக் வெட்டல.. பட் இது ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்ல.. சோ நான் என்ன சொல்றேன் அவன் அழுது முடிச்சு கேக் வெட்டுறதுக்குள்ள இது உருக்கிடும்ல? அதான் நானும் திவியும் ரெண்டு பீஸ் எடுத்து சாப்டலாம்னு சொன்னேன். ஆனா திவி ஒன்னு எடுத்து ரெண்டு பேர் சாப்டலாம்னு சொல்றா.. நீ என்ன சொல்ற.?” என்றாள் கேள்வியாக.

சபரி தலையில் அடித்து கொண்டு, “நான் என்ன சொல்றேன்னா இதை அப்டியே எடுத்துட்டு போய் ஆதிக்கிட்ட குடுக்கலாம்” என்று விட்டு அதை எடுத்து கொண்டு ஓடி விட்டான்.

கவியும் திவியும் அவனை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தனர்.

திவி “எல்லாம் உன்னால தான்.. நான் அப்போவே சொன்னேன் ஒன்னாவது எடுக்கலாம்னு” என்று எகிற,

கவி “லூசு.. நானும் தான் சொன்னேன் ரெண்டு எடுக்கலாம்னு, கேட்ட நீ..? உன்னால தான்.”

திவி “உன்னால தான்..”

கவி “உன்னால தான்..”

என்று இருவரும் சண்டை இட்டு கொண்டு இருக்க, ஆதி தான் கடுப்பானான். “இன்னும் இவ நமக்கு விஷ் பண்ணவே இல்ல. ஆனா அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்கிறா.. சாமி முடியல..” என்று மனதில் அவளை திட்டிக்கொண்டு இருந்தான்.

விஷ்ணு திவி அருகில் சென்று “நீங்க இப்படியே சண்டை போடுங்க.. அவன் கேக் வெட்டிட்டு சாப்டுட்டு போய்டுவான்” என்று கூற, திவியும் கவியும் வேகமாய் ஆதியை நோக்கி சென்றனர்.

கவி “ஹான் ஹான்.. சீக்கிரமா கேக் வெட்டுங்க.!” என்றிட, திவியும் கேக்கை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

அங்கு இவர்களை தவிர இரண்டு ஜோடி கண்கள் பார்வையாலேயே பேசி கொண்டு இருந்தன.

ஆதி கேக்கை வெட்ட, முதலில் தன் தாய்க்கும் தந்தைக்கும் கொடுத்தான். பின் திவிக்கு கொடுக்க போக, அவளோ அவனை கண்டு கொள்ளாது அவளாகவே கேக்கை கட் செய்து கொண்டு இருந்தாள்.

ஆதி தான் அவளை கடுமையாக முறைத்து கொண்டு இருந்தான். ‘ஏன்டி குட்டச்சி, காலைல இருந்து ஒரு விஷ் கூட இல்லை. ம்ம் சரி கேக் குடுத்தாவாவது விஷ் பண்ணுவான்னு பாத்தா, இவ பாட்டுக்கு கேக்க கட் பண்ணி சாப்டுறா.. இரு டி.. இன்னைக்கு முழுக்க உன்னை என்ன பன்றேன்னு பாரு’ என்று மனதில் நினைத்து விட்டு அனைவருக்கும் கேக்கை கொடுத்தான்.

பவியும் பாரதியும் “ஆதி மாமா.. இந்தாங்க மாமா” என்று அவனுக்கு ஊட்ட, ஆதியும் புன்னகையோடு வாங்கி கொண்டான்.

தேவ் திவியிடம் பேசி கொண்டு இருந்தான்.

தேவ் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. நீங்க சொன்னப்போ எனக்கு எப்டி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல..”

திவி “ப்ச்.. இதுல என்ன டா தேவ் இருக்கு.. தேன்க்ஸ்லாம் சொல்ற..? ஹான்.. என்கிட்ட தான்க்ஸ் சொல்ல கூடாதுன்னு எத்தனை டைம் சொல்லி இருக்கேன். ” என்று அவன் காதை பிடித்து திருகினாள்.

தேவ் “சரி சரி.. அப்ரோம் எப்போ என் அண்ணன்கிட்ட லவ்வ சொல்ல போறீங்க. அண்ணி.?”

திவி “சீக்ரட்..உஸ்..” என்று அவன் வாயில் விரலை வைத்தாள். அதில் அவன் அவளின் கையை கடிக்க, திவி அவனை மொத்தி கொண்டு இருந்தாள்.

தேவ் “ஆஆ.. அடிக்காதீங்க.. அப்ரோம் எங்க அண்ணா கிட்ட சொல்லுவேன்”

திவி “டேய் உன் நொண்ணண் முன்னாடி என்ன அண்ணின்னு கூப்டதா டா.. அப்ரோம் அவன் கண்டு பிடிச்சிடுவான்” என்றாள்.

தேவ் “தங்கள் ஆணைப்படி” என்று பணிந்து கூற,

திவி சிரித்து விட்டு “சோ ஸ்வீட் டா நீ” என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டு இருந்தாள்.

இதை அனைத்தையும் கண்ட ஆதி மிகவும் கடுப்போடு இருந்தான். அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும் அவன் அவளை கடித்ததும், இவள் அவனை கொஞ்சுவதும் ஏனோ ஆதியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. “நம்மல தவிர எல்லார்கிட்டையும் நல்லா பேசுரா.. குட்டச்சி.. இவள..” என்று விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான்.

கனவு தொடரும்… 🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. hello!,I rwally like our writing soo much!

      percentage we ommunicate mofe about your post on AOL? I need ann
      experet onn this space tto unravel myy problem. May be that
      is you! Taking a liok forward to look you.

      Look intoo my bpog post :: 049