Loading

ஆட்சியர் கனவு 13💞

பொருள் உணர்ந்தால்
தகுமா.?
எந்தன் காதல் கைகூடுமா.?
அல்ல கனவு கண்டு நான்
கானல் நீராய் போவேனா?
விடை உந்தன் நெஞ்சில்!

 

கவிதையின் பொருள் உணர்ந்த ஆதி, அவளை நான் புரிந்து கொள்ளவில்லையா..?
அவளை பற்றி என்ன எனக்கு தெரியாது என்று அறையே அதிரும்படி கத்தினான்.  நண்பனின் இந்நிலையை இருவராலும் தாங்க முடியவில்லை.

 

சக்தி உடனே திவியை அழைக்கபோக, ஆதி அவனை தடுத்தான்.

 

ஆதி “வேண்டாம் டா.. அவ கிட்ட எதுவும் சொல்லாத… எனக்கு புரிஞ்சமாதிரி காட்ட நானும் விரும்பல.. அவள பத்தி தெரிஞ்சிக்குறேன்.. அப்ரோம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். “

 

சக்தியோ அவள பத்தி அவள தவிர யாரலையும் சொல்ல முடியாது டா.. அத நீயே புரிஞ்சிக்குவ என்று நினைத்து விட்டு “இப்போ நீ என்ன பண்ண போற.?” என்றான் கேள்வியாய்.

 

ஆதி “அவள பத்தி தெரிஞ்சிக்க போறேன்… இதை பத்தி நீங்க ரெண்டு பேரும் அவ கிட்ட மூச்சே விட கூடாது.. முக்கியமா நீ ..! தங்கச்சி அப்டி இப்டினு அவ கிட்ட ஏதாவது சொன்ன… நீ பாக்காத ஆதிய பார்ப்ப..” என்று விஷ்ணுவையும் சக்தியையும் எச்சரித்தான்.

 

இது வரை நடந்த விஷயங்களை ரவீயிடம் சமையல் அறையில் இருக்கும் போது கூறிவிட்டாள். கோவிலுக்கு வந்து, இறைவனை மனதார நினைத்த திவி அவள் இது வரை மறைத்து வைத்திருந்த உண்மைகளை கூற தொடங்கினாள்.

 

திவி “…. ஆதி நினைக்குற யது நான் இல்லை…! அவனோட யது செத்துட்டா..” என்றவுடன், ரவீ அதிர்ந்தாள்.

 

ரவீ “என்ன திவி சொல்ற?.. யது நீ இல்லயா..?”

 

திவி “ஆம்” என்பது போல் தலையசைத்து, கூற தொடங்கினாள்…

 

“யது..  எங்க குடும்பத்துல அவ தான் எல்லாமே.! எனக்கும் அவளுக்கும் ஒரே வயசு தான். யதுவர்ஷினி.

 

அவ பிறந்த உடனே அவள ஒரு சர்ச்ல போட்டு போய்ட்டாங்க.. அந்த பக்கம் அப்பா வரப்போ தான் அவள பாத்து எடுத்துட்டு வந்தாங்க. அவளும் நானும் ஒன்னு தான். நான் பிறந்ததுல இருந்து ஆதி எங்க கூட சேரவே மாட்டான். “

 

ரவீ “அப்போ ஆதி..?” என்று கேள்வியாய் பார்க்க,

 

திவி “ம்ம்ம்.. ஆதி என் மாமாவோட பையன் தான்..”

 

ரவீ “வாட்.. ” என்று அதிர்ச்சியில் இருக்க,

 

திவியே மேலும் தொடர்ந்தாள். “அவன் என் மேல இருந்த கோவத்துல என்னையும் யதுவையும் சேத்து ரொம்ப டார்ச்சர் பண்ணுவான். அப்போ என்ன தெரியும் எங்களுக்கு 3 வயசு. அவனுக்கு ஆறு வயசு. ஆனா அவன் செம பிரில்லியண்ட். அப்போவே ரொம்ப மெச்சூர்ரா எல்லாமே பண்ணுவான். சில விஷயங்களை தவிர.. குழந்தைங்க எல்லார்க்கும் அவங்க அம்மா அப்பா அவங்களுக்கே அன்பா இருக்கணும்னு ஆசை இருக்கும்ல.. அதே தான் அவனுக்கும். உண்மையாலுமே மாமாவும் அத்தையும் அவன்மேல் அவ்ளோ பாசம் வச்சி இருந்தாங்க.. ஆனா அவன் முன்னாடியே எங்க மேலேயும் பாசம் காட்டுவாங்க.. அது அவனுக்கு பிடிக்காது. சின்ன வயசுல இருந்தே ஆதினா யதுக்கு ரொம்ப பிடிக்கும்.  எனக்கு அவன கண்டாலே சுத்தமா பிடிக்காது.  அன்னைக்கு அப்படித்தான்..

 

ஆதி “ஏய் குட்டச்சி… அந்த சாக்லேட் தாடி”

 

திவி “போ தா.. என்ன குட்டச்சின்னு கூப்தா தத மாத்தேன்.. எதும மாது (எருமை மாடு)”

 

ஆதி “ஏய்.. ஒழுங்கா மாமான்னு கூப்பிடு டி” என்று அவளை கொட்ட,

 

திவி அழுக, யது “.. அயோ.. அவளையே அதிக்குறியா நீ… இது இது.. மாமா… மாமா.. ஆதி…ஆதி.. வ்யா வ (திவ்யா வ) கொத்தித்தான்(கொட்டிட்டான்). வ்யாக்கு தலை வலிக்குது.. அழுவுரா.. ” என்று யதுவும் அழுக,

 

ஆதி “ஏய்.. நீ ஏன் அழுகிற..? உன்னையே நான் ஒண்ணுமே பண்ணலல..”

 

யது “நீ.. நீ.. அவள அடிச்சல.. அவ மட்டும் அழுதா அம்மா ஒன்னும் சொல்ல மாத்தாங்க.. உனக்கு தான் பேசுவாங்க.. நானும் அழுவேன்.. அப்போ தான் உன்னை அதிப்பாங்க” என்று தேம்பி தேம்பி அழ,

 

அங்கு சத்தம் கேட்டு வந்த சரவணப்பெருமாள் (ஆதியின் அப்பா) வந்தார். திவியும் யதுவும் அவரின் காலை கட்டிக்கொண்டு அழுக, பெருமாள் “ஏன் செல்லங்களா.. அழுகுறீங்க..? என்ன ஆச்சு..?”

 

திவி “மாமா.. மாமா.. அவன் என்ன கொத்தித்தான்… வதிக்குது..” என்று தேம்பி அழுக,

 

யது “என்னையும் தான் மாமா.. இங்க இங்க என்று கைகளை நீட்டி இங்களாம் கிள்ளிதான் மாமா..”

 

பெருமாள் அவனை முறைத்து “ஏன் டா குழந்தைங்களை அடிக்கிற..?”

 

ஆதி “அப்பா, அவளுங்க ரெண்டு பேரும் பொய் சொல்றாங்க. என்ன எருமன்னு அவ சொல்றா. அதுலாம் கேக்க மாட்டீங்களா..?” என்று குற்றம் சுமத்தினான்.

 

ரோஜா (திவி & யது அம்மா) “அப்படியா கண்ணு சொன்னாளுங்க. யார் என் மருமகனை அப்டி சொன்னது.?”

 

ஆதி “அத்தை.. தோ அவ தான்.. அந்த குட்டச்சி தான் சொன்னா..!” என்று திவியை மாட்டி விட, 

 

திவியும் யதுவும் ஒருவரை ஒருவர் அர்த்த பார்வை பார்த்தனர்.

 

ரோஜா “நினைச்சேன்.. இவ மட்டும் தான் அடங்கவே மாட்டிங்குரா.. இவ பேசுறது மட்டும் இல்லாம,  வர்ஷினியையும் சேத்து கெடுக்குறா” என்று அவளை திட்ட,

 

பெருமாள் “சும்மா சும்மா குழந்தைங்கள திட்டாத, இவன் குட்டச்சின்னு சொல்லாம இருந்தா அவங்க ஏன் அப்டி சொல்ல போறாங்க.?” என்று அவரிடம் கேட்க,

 

ரோஜா “எல்லாம் நீங்களும் அண்ணியும் கொடுக்குற செல்லம்.. அதான் இப்போவே இவ்ளோ ஆட்டம்.. பெரியவளுங்க ஆகி என்ன பண்ண போராலுங்களோ.?” என்று தலையில் அடித்து கொண்டார்.

 

திவியும் யதுவும் இன்னும் அழுகையை நிறுத்தாமல் இருக்க, பெருமாள் இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். ரோஜா ஆதியை அழைத்து கொண்டு உள்ளே வர, பெண்கள் இருவரும் (சிவஞானம்) தாத்தாவின் மடியில் அமர்ந்து இருந்தனர். அதை கண்டு ஆதிக்கு கோவம் வர,

 

ஆதி “ஏய் இறங்குங்க.. அவர் என் தாத்தா.. !” என்று திவியின் கை பிடித்து இழுத்தான்.

 

திவி “போ தா.. எதும.. நான் வதமாத்தேன்.. நான் டார்லிங் மதில தான் உக்காதுவேன்..” என்று சொல்ல,

 

ஆதி “நீ இறங்கு” என்று யதுவிடம் கூற,  யதுவும் இறங்க போக, திவி அவளின் கையை பிடித்து “ஏய் எங்க தி போத.? போவாத.. நாம எப்போவாவது தான் வதோம்.. இவன் எப்ப பாது இங்க தான இதுக்கான்.. இன்னைக்கு ஒது நாள் நாம உட்காதுவோம்” என்றாள்.

 

இவர்களின் கலாட்டவில் அனைவரும் சிரிக்க, ஆதிக்கு கோவம் வந்தது.

 

சிவஞானம் “நீயும் வா டா.. வா வந்து இங்க உட்காரு..!” என்று திவிக்கும் யதுவுக்கும் இடையில் அமர்த்த, அவன் இருவரையும் பார்த்து சிரித்தான்.

 

“இப்போவே உனக்கு என் ரெண்டு பொண்ணுங்களும்  கேக்குதா டா. எப்டி ரெண்டு பேரையும் வச்சி சமளிப்ப.?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் திவி யதுவின் தந்தை ராஜா.

 

பெருமாள் “வாங்க மாப்பிள்ளை.. அதுக்குள்ள மூணு பேரையும் கூட்டிட்டு போக வந்துடீங்களா..?”

 

ராஜா “என்ன பண்றது.. போன வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு.. அதான் மச்சான்.”

 

தெய்வானை “வாங்க அண்ணா.. ” என்று வரவேற்க,

 

ராஜா “என்னமா.. இப்போவே உன் பையன் ரெண்டு பேருக்கு நடுவுல உட்காந்துட்டு இருக்கான்..?”

 

ரோஜா “உட்காந்தா என்ன இப்போ..?  ரெண்டு பேர்ல ஒருத்தர இவனுக்கு கட்டி வச்சிடுவோம் .! என்ன அண்ணி நான் சொல்றது.?”

 

தெய்வானை “அதுவும் சரி தான்.. நீங்க என்னங்க சொல்றிங்க.?” என்று கேட்க,

 

பெருமாள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, சிவஞானம் “டேய் என்ன டா யோசிக்குற.?”

 

பெருமாள் “ரெண்டு பேர்ரா.. எப்போவும் திவ்யா தான் என் வீட்டு மருமக.. எங்க இருந்தோ தூக்கிட்டு வந்தவளாம் என் வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது” என்று கூற, அவரின் வார்த்தையில் அனைவருமே ஆடித்தான் போயினர்.

 

ஆனால் இவர்கள் கூறும் எதையும் கேட்கும் நிலையில் அந்த பிஞ்சுகள் இல்லை.

 

மூவரையும் பார்த்த ராஜா தான் கூற வந்த கடுஞ்சொற்களை முழுங்கி விட்டு “பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு பேசுறீங்க மச்சான்.?” என்று கடிந்து கொள்ள,

 

பெருமாள் “ஏற்கனவே ஒரு அனாதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் போய்ட்டான்.. அவங்கனால எங்க அம்மாவும் எங்களை விட்டு போய்ட்டாங்க.. அந்த வலி என்னன்னு உங்களுக்கும் தெரியும்னு நினைக்குறேன்.. அவன் பண்ண தப்புனால எவ்ளோ பிரச்சனை வந்ததுன்னு உங்களுக்கு தெரியும்.. அதே தப்ப நான் செய்ய விரும்பல!”

 

தெய்வானை “அவங்க பண்ண தப்புக்கு இந்த குழந்தை என்னங்க பண்ணும்.? என் இப்போவே இப்டி ஒரு எண்ணம் உங்களுக்கு.?” என்று கூற

 

பெருமாள் “உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ சும்மா இரு.” என்றார்.

 

அனைத்தையும் கேட்டும் கேட்காமலும் சிவஞானம் அமர்ந்து இருக்க, ஒரு ஜோடி காதுகள் புரியாமல் அனைத்து வார்த்தைகளையும் தன்னுள் பதிய வைத்து கொண்டது.

 

திவி “அத்தை.. அத்தை.. உங்க வயிறு ஏன் பெதுசா இருக்கு. ?”

 

ஆதி “ஏய் குட்டச்சி… அதுக்குள்ள என் பாப்பா இருக்காலாம்.. அவ வரட்டும் உன்னை அவள வச்சு நல்லா அடிப்பேன்.. நீ  பக்கத்துல வராத, போ அந்த பக்கம்” என்று அவளை தள்ளி விட்டான்.

 

ராஜா “ரோஜா.. பிள்ளைங்களை கூட்டிட்டு வா.. இனிமே இங்க வர தேவ இல்ல.. அவர் யதுவ எப்டி பாக்கிறாருன்னு புரிஞ்சிகிட்டல.. வா..” என்று சிவஞானம் மடியில் இருந்த யதுவை அவர் தூக்கிக்கொள்ள, தெய்வானை அருகில் இருந்த திவியை ரோஜா அழைத்தார்.

 

திவி “பை அத்தை.. பை மாமா.. பை டார்லிங்” என்று பெரியவர்களிடம் சொல்லிவிட்டு பை எதும” என்று விட்டு ஓடியே விட்டாள்.

 

அவர்கள் சென்ற பிறகு, தெய்வானை “எப்டிங்க நீங்க அப்டி சொல்லலாம்.? யதுக்கு விவரம் தெரியாதுனால எதுவும் பெருசா நடக்கல. இல்லன்னா அந்த குழந்தை மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்.”

 

பெருமாள் “நீ சும்மா இரு.. எப்ப பாரு யது.. யது.. அவள கண்டாலே எனக்கு பிடிக்கல, யார் வீட்டு பொண்ணோ, அவ அப்பா அம்மா பெத்து போட்டு போய்ட்டாங்க. அவங்க வளக்குறாங்க.. அதுக்குன்னு அவள வீட்டு மருமகளாளம் என்னால நினச்சு கூட பாக்க முடியல. போய் அடுத்த வேலைய பாரு” என்று கூறி விட்டு சென்றார்.

 

ராஜா “எப்டி உன் அண்ணா இப்டிலாம் பேச கத்துகிட்டாரு.. அந்த பிஞ்சு மூஞ்ச பாத்தாவது அப்டி பேசக்கூடாதுன்னு அவர்க்கு தெரிய வேண்டாம். உன் அப்பா கூட அப்டியே அமைதியா இருக்காரு” என்று கத்த,

 

ரோஜா “எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. யதுவ நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவங்க முன்னாடி நிறுத்தனும்.. வார்த்தையால சொல்றத விட செயல்ல தாங்க காட்டனும்.. இன்னைக்கு அவர் பேசுன பேச்சுக்கு அண்ணாங்குறதுனால அமைதியா வந்துட்டேன்” என்றார்.

 

திவி “அம்மா.. அம்மா.. உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்”

 

ராஜா “யது எங்க மா.?”

 

திவி “அவ தூங்கிட்டா.!”

 

ரோஜா “ம்ம் சொல்லு.. என்ன கேக்கணும்.?”

 

திவி “அனாதன்னா என்ன மா.?”

 

ராஜாவும் ரோஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

 

ரோஜா “உனக்கு இந்த வார்த்தையை யார் மா சொன்னா.?”

 

திவி “நீங்களும் மாமாவும் இன்னைக்கு பேசிக்கிட்டு இருந்திங்கள. அப்போ நானும் அதை கேத்தேன்.. அவர் ஏன் யதுவ அனாதைன்னு சொன்னாரு.?”

 

ராஜா “அவர் அப்டி சொல்லவே இல்லயே திவ்யா.. உன் காதுல தப்பா விழுந்து இருக்கும்.. அப்ரோம் இன்னொரு விஷயம் இதை பத்தி நீ யது கிட்ட சொல்ல கூடாது சரியா.?”

 

திவி “ஏன் ப்பா.?”

 

ராஜா “அது.. அது.. ஹான்.. சும்மாவே ஆதி உங்க ரெண்டு பேரையும் அடிப்பான்.. இத வெளில சொன்னா யதுவ எப்ப பாரு அடிப்பான்.. அவ பாவம் தான..?” என்று கூற

 

திவி “ம்ம் ஆமா…. ஆமா..! அப்ரோம் அந்த எதும யதுவ அதிக்கும். நீங்களும் யார்கித்தையும் சொல்லாதீங்க.. நானும் சொல்ல மாத்தேன்.. அம்மா நீங்களும் தான்” என்றாள்.

 

ரோஜா “ம்ம் சரி நீ போய் தூங்கு!”

 

இரண்டு தினங்கள் கழித்து,

 

ரோஜா “என்னங்க.. ஆதிய நாளைக்கு ஸ்கூல்ல சேக்க போராங்களாம். அதனால ஒரு தடவ எல்லாரும் போய் பாத்துட்டு வந்துடலாமே.?’

 

ராஜா “என்ன பேசுற நீ..? அவர் யதுவ எப்டி பேசுனாரு. அதுக்குள்ள மறந்துட்டியா.?”

 

ரோஜா “அவர் பேசுனதுக்கு ஆதி என்னங்க பண்ணுவான்?”

 

ராஜா “அவர் தம்பி பண்ண விஷயத்துக்கு யது என்ன பண்ணுவா.?”

 

ரோஜா பதில் கூறாமல் அமைதி ஆகிட, திவியும் யதுவும் அங்கே வந்தனர்.

திவி “ப்பா..ப்பா.. அத்தை வீத்துக்கு போலாம் ப்பா.. ப்ளீஸ் ப்பா!”

 

யது அமைதியாக இருக்க, திவி “ஏய் கேளு தி.. அப்போ தான் மாமா ஐஸ் வாங்கி ததுவாரு” என்று அவளிடம் நைசாக கூற,

 

யது “ம்ம் ஆமா ப்பா.. ப்ளீஸ் ப்பா.. நாங்க தமத்து (சமத்து) பிள்ளையா இருப்போம் ப்பா.” என்று கேட்டாள்.

 

ராஜா பெரு மூச்சை விட்டு, “ம்ம் போய்ட்டு வாங்க.. சீக்கிரம் வரணும் என்ன. இங்க பாரு ரோஜா, எக்காரணத்தை கொண்டும் உன் அண்ணா பக்கத்துல கூட யதுவ விற்றாத.” என்று கூறி விட்டு அனுப்பினார். அவர் வேலை நிமித்தமாக வெளியில் செல்ல, மூவரும் ஆதியின் வீட்டுக்கு சென்றனர்.

 

ஆதி “ஐஐ.. அத்தை வந்துட்டாங்க.. அத்தை வந்துட்டாங்க..!” என்று குதித்துகொண்டு செல்ல,

 

பெருமாள் “எங்க நீ வரமாட்டியோன்னு நினைச்சேன்மா.. வா.. உள்ள வா..!” என்றார்.

 

ரோஜா அவரிடம் பேசாமல், “அண்ணி, நான் உங்களையும் ஆதியையும் பாக்க தான் வந்தேன். அதுவும் இல்லாம இனிமே இங்க அடிக்கடி வரமாட்டேன்னு சொல்லிட்டு போக தான் வந்தேன்..” என்றார்.

 

தெய்வானை “என்னமா சொல்ற.?”

 

ரோஜா “ம்ம் ஆமா அண்ணி.. இவர் பேசுன பேச்ச இனிமே என் பொண்ணுங்க கேட்க வேண்டாம். பிஞ்சு மனச கஷ்டப்படுத்த நான் விரும்பல” என்றார்.

 

திவி “மாமா.. ஐஸ் வாங்கி தாங்க மாமா..”

 

பெருமாள் “வா செல்லம்.. வாங்கி தரேன்” என்று அழைக்க, திவியும் யதுவும் சென்றனர்.

 

வீட்டின் பின்புறம் ஆதி, திவி, யது மூவரும் இருக்க, அங்கு சில வானர கூட்டங்களும் இருந்தது.

 

யதுவும் திவியும் ஐஸ்க்ரீமை ரசித்து ருசித்து சாப்பிட,  ஆதி “எனக்கு குடுங்க டி.. ஏய் குட்டச்சி! தா டி”

 

யது “ம்ம். இந்தா.. நான் இன்னும் சாப்தல.” என்று அவனிடம் நீட்ட,

 

திவி “ஏய்.. அது மாமா உனக்கு தந்தது.. அவனுக்குலாம் தத கூதாது.. ” என்று தடுக்க, அது ஆதியின் சட்டையில் பட்டு விட்டது.  இதை பார்த்து திவியும் மற்ற சிறுவர்களும் சிரிக்க,

 

யது “அச்சோ.. ஐஸ் கொதிதித்துச்சு.. ப்ச்.. இது நான் தொதச்சு விதுதேன்..” என்றாள்

 

யது அதை துடைத்து கொண்டு இருக்க, திவி “ஏய்.. நீ ஏன்தி அதுலாம் செய்யுத.? எதும போ தா.. ” என்று அவனை தள்ள,

 

ஆதி “என்னையா தள்ளுற”, என்று அவளை தள்ளி விட, இவள் பிடி இல்லாமல் கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் அருகில் இருந்த கல்லின் மேல் விழுந்து மயங்கினாள் திவ்யா..

 

யது “அயோ.. வ்யா.. வ்யா.. எந்திதி” என்று அழுக,

 

ஆதி “ஏய் குட்டச்சி..நடிக்காத எந்திரி” என்று கூற,

சிறுவன் “போச்சு.. அவ செத்துட்டா.. போச்சு. போச்சு.  உன்ன உன் அப்பா அம்மா அடிப்பாங்க. உன் மாமா உன்னை போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவாறு”

 

யது “வ்யா..வ்யா..”என்று அழுக,

 

ஆதி “ஏய் எந்திரி டி.. இனிமே உன்ன அடிக்க மாட்டேன். ஐஸ் கேக்க மாட்டேன்.. எந்திரி டி” என்று அழுக,

 

யது”போ.. போ.. எல்லாம் உன்னாலதான்.. வ்யா..  அம்மா.. மாமா” என்று கத்த,

 

பயத்தில் அங்கிருந்து ஓடினான் ஆதி.

 

அவன் அழுது கொண்டே ஓடியதை பார்த்து, திவி சிரித்துகொண்டே எழ,
யது “உனக்கு ஒன்னும் இல்லல வ்யா..?”

 

திவி “இல்ல யது.. இங்க இங்க தான் அடி.. பரவால்ல.. அவன் எப்தி அழுதான் பாத்தியா.?” என்று சிரிக்க,

 

அங்கு சத்தம் கேட்டு பெரியவர்கள் வந்தனர். ரோஜா “அச்சச்சோ.. என்ன ஆச்சு.? ஏன் நீ அழகுற, நீ என்ன டி கீழ விழுந்துட்டு சிரிக்குற.?” என்று கேட்டார்.

 

திவி “ம்மா.. ம்மா.. ஆதி என்ன தள்ளி விட்டுட்டு ஓதித்தான் ம்மா.!” என்றாள் சிணுங்கி கொண்டே.

 

பெருமாள் “அவன் வரட்டும் பேசிக்கலாம். நீ அழாத.!” என்றார். மூவரும் கிளம்ப, கிளம்பும் தன் தங்கையை ஏக்கத்துடன் பார்த்தார் பெருமாள்.

 

கனவு தொடரும்🌺🌺🌺🌺..

கதையை பற்றி தங்களது கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க நட்பூக்களே..

இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்..

நன்றி.. 💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்