Loading

மீராவோட உணர்வ புரிஞ்சு கிட்ட மீனாட்சி..சரி இங்கையே படுத்துக்கட்டும்னு விட்டுட்டா…தூங்குறதுக்கு முன்னாடி எப்போதுமே கதை பேசிட்டேதான் இருப்பாங்க ரெண்டு பேரும்…ஆனா அன்னைக்கு மட்டும் என்ன காரணமோ தெரியல… ரெண்டு பேருக்கும் பேச்சே வரல…அமைதியா தூங்கிட்டாங்க…

 

மறுநாள் எந்திரிச்சு எல்லா வேலையையும் செஞ்சு வச்சிட்டு…ஊருக்கு போக தேவையான எல்லாத்தையுமே எடுத்து வச்சிட்டு மீரா ஆதிய எழுப்ப போனா…

 

எந்திரிச்சு குளிக்கிறியா அத்த அப்போ இருந்து கத்திட்டே இருக்காங்க….நேரம் ஆச்சு… அப்படினு சொல்லி எழுப்ப….எந்திரிக்கவே மனமில்லாம ஆதி எந்திரிச்சான்…

 

யாருக்கா இருந்தாலும் ஆழமான தூக்கத்துல இருந்து எழுப்புனா உடனே கண்ணு முழிக்க முடியாதுல…ஆனா மீனாட்சி சத்தம் கேட்டதுமே ஆதி எந்திரிச்சிட்டான்…. எந்திரிச்ச அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு அவன் கண்ண மூடவே இல்ல…இருக்கி மூடி இருந்த கண்ணு மெல்ல மெல்ல விரிஞ்சு அப்படியே நின்னுருச்சு…

 

அவ பேசுன வார்த்த கூட காதுல விழாத அளவுக்கு அவளையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தான்….

 

“சொன்னது கேட்டதா உனக்கு…எந்திரிச்சு குளிக்க போ…படுக்கைய விட்டு எந்திரி”

 

(மீரா பேச பேச ஆதி அவளையே கண் இமைக்காம பாத்துட்டு இருந்தான்…. அப்புறம் சட்டுனு தலைய கீழ தொங்க போட்டு கையால கண்ண தேச்சு முகத்த தேச்சுட்டு….எழுந்து நின்னான்)

 

“ம்ம்ம் தண்ணி காய வச்சிட்டியா எனக்கு”

 

“ம்ம்ம் பாத்ரூம்ல இறக்கி வச்சிட்டேன்…போ “

 

ஓஓ…. அப்படியா அப்படினு கேட்டுட்டு தான் போர்த்தி இருந்த போர்வைய எடுத்து மடிக்க ஆரமிச்சான் ஆதி…ஐயோ அதெல்லாம் நீ ஒன்னும் பண்ண வேணாம் நீ போய் குளி போ…நான் மடிச்சுக்குறேன் அப்படினு சொல்லி மீரா போர்வைய வாங்குனா… ம்ம்ம் சரினு சொல்லி ரூம விட்டு வெளிய போன ஆதி…உடனே திரும்ப உள்ள வந்துட்டு..இந்த சேல உனக்கு நல்லா இருக்கு அப்படினு சொன்னான்…அதே சந்தோஷத்துல வேகமா இவ திரும்பி அவன் முகத்த பாக்குறதுக்குள்ளையே அவன் திரும்ப போய்ட்டான்…கைல இருந்த போர்வைய கீழ போட்டுட்டு ஆர்வத்துல அவன் முகத்த தேடி ரூம விட்டு வெளிய வந்தா ஆனா அதுக்குள்ள அவன் பாத்ரூம் உள்ளையே போய்ட்டான்…

 

மூனு பேரும் பரபரனு கெளம்பி மாமா வீட்ல போய் அங்க இருந்த வேலைய பாத்துட்டு இருந்தாங்க….விரதம்ன்றதால எதுவுமே சாப்பிடல…அதுனால முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா கோவிலுக்கு போய்ட்டு சாமிய கும்பிட்டு கெடாய வெட்டி சமச்சு சாப்பிட்றனும்னு பிளான் பண்ணாங்க…அதுக்காகவே சமயல் செய்ய தேவையான எல்லா பொருளையும் ஒரு பெரிய கேன் முழுக்க தண்ணியையும் எடுத்து வண்டில ஏத்திட்டு… எல்லாரும் கெளம்பி போனாங்க…

 

மாமா வீட்ல இருந்து கோவிலுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும்…கோவிலுக்கு போறதுனால யாரும் தூங்கிறக் கூடாதுனு வண்டில பாட்டு போட்டு கூடவே பாடிட்டு ஒருத்தர ஒருத்தர் கேளி பண்ணி சிரிச்சுகிட்டே போனாங்க….

 

கோவிலுக்குதான போறோம் அதுனால பக்தி பாடலா போடுங்க அப்படினு சொன்னாங்க…பாட்டு மட்டுமே ஓடிட்டு இருந்தது…எல்லாரும் அமைதி ஊர்வலம் போற மாதிரி சைலன்டா வந்தாங்க….என்னப்பா இது ஒரு கல கலப்பே இல்ல…இங்க பெரியவங்கள விட குழந்தைங்கதான் நெறையா பேர் இருக்காங்க இப்படி பாட்டு போட்டா எப்படி…நல்ல சினிமா பாட்டா போடுங்க…. அப்படினு மாமா சொல்ல….சினிமா பாட்டு அந்த வண்டில கேக்க ஆரமிச்சது…சினிமா பாட்டு போட்டதும் குழந்தைங்களோட சேந்து பெரியவங்களும் ஆடி பாடி சந்தோஷமா போய்ட்டு இருந்தாங்க…

 

அவ்ளோ கூட்டத்துல எல்லாரும் உண்மையாவே சத்தம் போட்டு பாடி ஆடிட்டு இருந்தாங்க ஆனா ரெண்டு பேர் மாட்டும் கண்ணாலையே ஓடிட்டு இருந்த பாட்டுக்கு டூயட் அடிட்டு இருந்தாங்க….

 

சில விஷயம் எல்லாம் வார்த்தையால சொல்லாட்டியும் புரியும்ல அதுதான் அங்க நடந்துட்டு இருந்தது…இப்போலாம் நீ என் கண்ணுக்கு வித்தியாசமா தெரியுற…என் கோவத்தையும் தாண்டி எனக்கே தெரியாம நான் உன்ன ரசிக்க ஆரமிச்சுட்டேன்…நீ மெல்ல மெல்ல என் மனசுக்குள்ள வர ஆரம்பிச்சிட்ட….நானா உன்ன இந்த அளவுக்கு பிரமிப்பா பாக்குறேனு என்னால நம்பவே முடியல….என்ன மனசுல என்னவெல்லாம் தோனுதுனு என்னால உன்கிட்ட சொல்ல முடியல….சோ நீயே என்ன புரிஞ்சுக்க ட்ரை பண்ணு அப்படினு சொல்லாம சொல்ற மாதிரி ஆதியோட பார்வ இருந்தது….

 

கூட்டத்துல ஆளுக்கு ஒரு பக்கமா உக்காந்து இருந்தாலும்… ரெண்டு பேருமே பார்வையால பக்கத்துல இருந்தாங்க…எல்லா நேரமு பாத்த அது நல்லா இருக்காதுனு அப்பப்போ பாத்துப்பாங்க….மீராவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவ பின்னாடி உக்காந்திருந்தனால முன்னாடி இருக்க ஆதிய ஈசியா பாக்க முடிஞ்சது…ஆனா ஆதிக்குதா கொஞ்சம் கஷ்டம்…ஒவ்வொரு முறையும் திரும்பி திரும்பி பாக்க வேண்டியதா இருந்தது….

 

அத்தன கூட்டதுக்கு நடுவுலையும் அது ரொம்ப ரகசியமாவும் அழகாவும் இருந்தது …. ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு உக்காந்து வார்த்தையால பேசி இருந்தாகூட இந்த அளவுக்கு அழகா இருந்திருக்குமானா சந்தேகம்தான்….அந்த நேரம் சொல்லால சொல்லி விளக்க முடியாத அளவுக்கு அழகா இருந்தது….

 

ரொம்ப நேரத்துக்கு அப்புறம் வண்டி மெது மெதுவா நகந்து கடைசியில நின்னுச்சு…அப்பாடி எப்படியோ ஒரு வழியா வந்துட்டோம்டா சாமி அப்படினு வண்டில இருக்க அத்தன பேரும் பெருமூச்சு விட….அந்த ரெண்டு பேர் மட்டும்…ஐயோ அதுக்குள்ள வந்துட்டோமா இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே போய்ட்டே இருந்திருந்தா சூப்பரா இருக்கும்லனு மனசுக்குள்ளையே முனங்கிட்டு இருந்தாங்க…

 

வண்டிய விட்டு இறங்குன அப்புறமும் கோவில் இருக்க மாதிரி எந்த ஒரு அறிகுறியும் இல்ல…பாக்குற இடம் எல்லாம் காடு மேடாதான் இருந்தது….

 

என்ன மாமா வண்டி எதும் பிரச்சனை ஆகிருச்சா…கோவிலுக்கு போறதுக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தி எல்லாரையும் இறங்க சொல்லிட்டீங்க…அப்படினு ஆதி கேக்க…

 

டேய் இதுக்கு அப்புறம் நடந்துதான் போகனும்…இங்க பாரு காட்டுக்குள்ள ஒரு பாதை தெரியுது பாரு அது வழியாதான் போகனும்….சும்மாவே நடக்க முடியாது இதுல இந்த பாத்திரம் பண்டம் எல்லாத்தையும் தூக்கிட்டு வேற ஏறி போகனும் அப்படினு வசந்தி சொல்ல….

 

என்னது ஏறி போகனுமா அப்படினு ஆதி ஷாக் ஆகுறான்….(அவன் ஏறிடுவான்…மீரானால ஏற முடியாதேனு மனசுல நெனச்சு பதறுனான்)….ஆமா மாப்ள ஒரே கிலோமீட்டர் மட்டும் தான் பேசிகிட்டே ஏறுனா ஒன்னும் தெரியாது சீக்கிரம் போய்றலாம் அப்படினு மாமா சொல்ல….உடனே மீராவ பாத்தான்…..

 

மீராவ பாத்ததுமே ஆதி அத்த எங்க அப்படினு அவ கேக்க…அம்மா முன்னாடியே போய்ட்டு இருக்காங்க பாரு மீரா அப்படினு வசந்தி சொன்னா…

 

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்