5)தணிக்கையும் ஏனோ?
“வலிகளை பூசிவரும் இந்த வரிகளில்
வனம் கண்டுகொண்ட
ஒருத்தியின் ஒத்தையடிப் பாதை
இங்கே ஏமாற்றங்கள் மட்டுமல்ல
ஏற்க மறுக்கப்பட்டு
கேள்விக்குறிகளாக்கப்பட்ட
தகுதிகளும் ஒதுங்கியுள்ளன…
உடைப்பெடுத்த மடையாய்
உழன்றிடும் இந்த புலம்பல்கள்
யாரோ ஒருவரது சஞ்சலங்களை
கருவறுக்கச் செய்கின்றன..
யாருடைய கவனமும் சிதைக்காத
வேலியோர இடுக்கில் பூத்துள்ளன
மயிர்மாணிக்கப் பூக்கள்!!
சங்கரியின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு அடித்து கொண்டு இருந்தது…
மெல்ல ஏற்கனவே சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிற அந்த மெசேஜை எடுத்துப் பார்த்தாள்
I’m beating only for you – heart
இதய துடிப்பு லோகோவுடன் இசிஜி போன்ற கோடுகள் அடங்கிய படம் அதை நீக்கி விட்டு அப்படியே அமர்ந்திருந்தாள்
எவ்வளவு முயன்றும் கோபத்தை கட்டுப்படுத்த இயலாது…
பற்களை நறநறவென கடிக்க ஆரம்பித்தாள்
அறிவு கெட்ட மனமே இன்னிக்கு உனக்கு பெரிய சோதனை இருக்கு…
தேவைக்குமீறி யாருகிட்டேயும் பேசாமல் இருக்கணும்…
உன்னோட கோபம் உரிமையா கூட மத்தவங்களுக்கு தெரியலாம்…
அதனால் அமைதியா விலகிடு அது தான் நல்லது எனது மூளை அறிவுத்தியது…
அடுத்த சில நொடிகளில் அலைபேசி அழைக்கவும்
சங்கரி கிளம்பியாச்சா? செந்தில்
அண்ணா நான் மட்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போறேன்…
மலர் , ராஜி, அன்பு எல்லாமாய் போறோம்..
கொஞ்சம் ப்ரீயா இருக்கும்…
என்ன போகட்டும்மா என்றாள் சற்றே வருத்தத்துடன்…
செந்தில் சிரித்து கொண்டே
என்னடா இதெல்லாம் கேட்கணுமா…
நானே சொல்லணும் என்று நினைச்சேன்.
பார்த்து பத்திரமா போய்ட்டு வா…
ஆமா சுடிதாரா… புடவையா என்க…
அடர் பச்சை நிற ரெடிமேட் சுடிதாரை கூறினாள்
ஏம்மா வேற ஏதாவது கிராண்டா போட்டு போயேன் என்றான் செந்தில்
இல்லணா… இதுவே போதும்…
சும்மா தலையை காட்டிட்டு வர போறேன்…
சரிம்மா பார்த்து போ.. போனதும் எனக்கு போன் பண்ணு…
சரிண்ணா என்று கிளம்பி தயாராகி அம்மாவிடம் கூறிவிட்டு மலர், ராஜி அன்போடு கிளம்பினாள்
ராஜ் மற்றும் அன்பு இவளுடைய கல்லூரி பற்றி கேட்டுக் கொண்டே வந்தனர்…
ஒரு நான்கு வழி பாதை சந்திப்பு
அங்கே ஆண்கள் பிறரும் இருக்க…
எல்லாம் கிளம்பலாம் என்று இருவர் இருவராக தாவிக் கொண்டு சைக்கிளை மிதித்தபடி கிளம்பினர் கூடவே ஒரு ஜோடியும் மகிழ்வுடன்…
திருமண மண்டபம் வந்ததும் அனைவரும் வெளியே சைக்கிளை ஸ்டாண்டுபோட்டு அங்கேயே புதிதாக வந்த இருவருடனும் பேசிக்கொண்டு இருந்தனர்
மலர் முன்னே அலைபேசியில் பேசியபடி நகர்ந்து விட
இவள் செந்திலுக்கு அலைபேசியில் முயற்சித்து கொண்டே இருந்தாள்
டேய் வாடா உள்ளே போகலாம் என்று பாலா அவனது கைப்பற்றி இழுக்கவும்
அது யார் றா… உங்க கேங்க் தான…
ஏன் அங்கேயே நிக்கறா?!
அமைதியா பயந்த சுபாவம் போல
இன்ட்ரோ கொடு மச்சான்
கொஞ்சம் டைம்பாஸ் ஆகும்
என்று கார்த்திக்கின் குரல் கேட்டது.
அப்போது தான் கவனித்தவன் வேகமாய் இவளிடம் நெருங்கி “எல்லாரும் உள்ள போயிட்டாங்க
இங்கே இன்னும் எதுக்கு தள்ளி நின்னுகிட்டு இருக்க…
உள்ளே வா…
என்று அவன் சாதாரணமாக அவளை நோக்கி கூறுவது போல தெரிந்தாலும்
அவனது பார்வையில் கோபம் இருந்தது சங்கரிக்கு புரிந்தது
விருட்டென மண்டபத்தின் உள்ளே செல்ல அங்கே நட்பூக்களை தேடிக் கொண்டு இருக்கிற நேரத்தில்
என்னடா இன்ட்ரோ கொடுன்னு சொன்னா அவளை அவன் உள்ளே அனுப்பி விட்டுட்டான் என்றான் கார்த்திக்.
டேய் உனக்கு நேரம் சரியில்லை.
ஒழுங்கா வாய மூடிக்கிட்டு வாடா
என்றான் பாலா..
டேய் நல்லவனே முதல்ல அவனோட ஆளு பிருந்தா அவன தேடுது .
மத்ததெல்லாம் உள்ள போய் பேசுவோம் வா… என்று மற்றவரையும் அழைத்து வந்து சேரில் அமர்ந்து கொண்டான் பாலா..
அனைவரும் பேசிக்கொண்டு இருக்க
ஒரு ஓரத்தில் அமர்ந்து செந்திலுடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவளை பார்த்து
ஏய் நல்லா இருக்கியா?
ஏன் இப்படி ரொம்ப தூரம் போய் படிக்க ஒத்துக்கிட்ட..?
மொசேஜ் அனுப்பினாலும் பதில் வரதில்ல.
என்று முருகன்.., முல்லை, சுகந்தி, சீதா பலரும் மாற்றி மாற்றி கேள்விகளை கேட்க..
மெதுவாய் முறுவலிப்பதோடு நிறுத்திக் கொண்டாள் சங்கரி
ஹலோ ஹலோ ...
முதல்ல அக்காவை மேடையில் போய் பார்த்து விட்டு வரலாம் வாங்க என்று அழைத்தான் முருகன்
– தொடரும்
#அப்படிஎன்னசொல்லிவிட்டேன்