Loading

தணிக்கையும் ஏனோ? தளும்புதடி நெஞ்சம்

 

“முயல்குட்டி பெண்ணவள் முகத்தில் முறைப்புகளை முந்தியடித்தபடி

வானவேடிக்கைகளாய்

மலர்ந்திரும் முகபாவங்களில் மூழ்கித்தான் போகுறதென் வானம்!!!

 

கல்யாணி அத்தையுடன் பேசியபடியேயிருந்த சங்கரி எதிரே வந்த தன் அண்ணனைக் கண்டதும் அவள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்

 

எப்படிடா இருக்க…?!

 

தேர்வெல்லாம் நல்லா எழுதியிருக்கியாவென?

 விசாரித்த செந்தில் 

 

பொய்யா முகத்தை உர்ருன்னு வைக்காத…

 

என்று சிரித்தபடியே அவளது பையை பிடுங்கிக் கொண்டான்

 

அத்தை நீங்களும் ஏறிக்கோங்க…

 

ஏறுடா தங்கம் வீட்டில் எல்லாம் உனக்காக காத்திருக்காங்க…

 

எதுவும் சொல்லாமல்

 அத்தை இருக்காங்க… வீட்டுக்கு போனதும் இருக்கு உனக்கு

என்று யோசித்தபடி  

அவனுடன் வண்டியில் ஏறிக்கொண்டாள்…

 

அந்த ஓட்டு வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு

நீ இறங்கிக்கடா..

நான் போய் அத்தையை அவங்க வீட்டில் விட்டுட்டு வர்றேன்னு..

அவளது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான் செந்தில்..

 

உள்ளே நுழைந்ததும் அன்னை பார்வதி வந்து மகளை பாசமாய் அணைத்துக் கொண்டார்…

 

போய் பல் தேய்ச்சுட்டு வா…

 

காபி போட்டு வைக்கிறேன் என்க…

 

சரிம்மா..

என்றபடி பின்கட்டுக்குள் சென்று

பல்துலக்கி முகம் கழுவிவிட்டு வந்தாள்…

அப்பா எங்கம்மா…

அவரு வெள்ளனமே கிளம்பி போயிருக்காரு கழனிகாட்ட பார்த்துட்டு வர…

அண்ணன் எங்கடி…பாவம் புள்ள…நைட் ஷிப்ட் முடிச்சு வந்து தூங்ககூட இல்ல…உடனே உன்னை கூட்டிகிட்டு வர வந்துட்டான் என்று அவளது முறைப்புக்கு காரணமான தகவலை 

கூறிக்கொண்டே காபி தம்பளரை கையில் திணித்தார் பார்வதி..

 

சங்கரி ஏதோ பேச வாயெடுக்கையில்

கேள்வியின் நாயகனே அங்கே வந்து சேர்ந்தான்..

 

அம்மா…

ஏற்கனவே அவ என் மேல கோபமா இருக்கா…

தூங்காமல் போய் …

எவ்ளோ சொல்லியும் அவள போய் வண்டியில் ஏத்திகிட்டுவர போனேன்னு…

 

தங்கம் அண்ணாவுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லடா…

நீ இப்படி வாடிப்போயிருந்தால் நல்லாயில்ல…

 

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

ஓடிவந்து அவனருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள் 

 

காபி குடிச்சிட்டு போய் தூங்குண்ணா

 

கண்ணெல்லாம் சிவந்துபோய் கிடக்கு பாரு…

 

நாம அப்புறம் பேசிக்கலாம் என்றாள் வருத்தத்துடன் சங்கரி

 

ரொம்ப எல்லாம் சீரியஸா பேசாதம்மா

 

ஊரு தாங்காது…

 

எனக்கு காபி வேண்டாம் 

நீயும் குடிச்சுட்டு போய் தூங்கு

 

நான் போய் படுக்கிறேன்…

 

அம்மா ஒரு ஒன்பது மணிக்கு எழுப்புங்க…

என்று சொல்லிக்கொண்டே போய் கயிற்றுக்கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்…

அவனுக்குத் தெரியும் …

 

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தங்கையின் வாயிலிருந்து 

அர்ச்சனை தான் கிடைக்கும்…

 

என் செல்லக்குட்டி… என்று மனதில் தங்கையின் தலையில் கொட்டியபடி

போர்வையை இழுத்து விட்டுக் கொண்டான்

இதுதான் அவர்களது உறவு…

கண்ணீர் விட்டு பாசத்தை எப்போதுமே வெளிப்படுத்துவதில்லை

“திட்டும் சொற்களில் கூட தித்தித்துக் கொண்டிருந்தது அவர்களது உறவு”

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்