Loading

ராம் மிகுந்த போராட்டத்தில் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..

 

 

 விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..

 

 

 முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..

 

 

 விடுமுறை அன்று அவர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு சென்ற சீதாவின் நடவடிக்கை இந்த சீதாவில் ஒரு துளி கூட இல்லை..

 

 

 

 முழுக்க முழுக்க ஹோம்லி லுக்..

 

 

 அவள் சென்னைக்கு வருகிறாள் என்று தெரிந்ததுமே கண்மணி அவளுக்கு விதவிதமாக சல்வார் டிசைன் அவள் கையால் பண்ணி அதைப் தைத்து வைத்திருந்தாள்..

 

 

 

 அதில் ஒன்றுதான் சீதா இன்று உடுத்தி இருந்தாள்..

 

 

 

 முன்பு காலேஜ் செல்லும்போது ராம் கட்டிய தாலியை மறைத்துச் சென்றவள்.. அதனால் பல இன்னல்களை அனுபவித்து விட்டாள்..

 

 

 தோழிகள் நெருங்கி பேச்சு கொடுக்கும் போதும் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்..

 

 

 சூடு கண்ட பூனை அல்லவா சீதா..

 

 

 இனி அனைத்திலும் முன் ஜாக்கிரதையாகவே இருக்க பழகிக் கொண்டாள்..

 

 

 சீதாவை நெருங்கி பேச முடியாத நேரத்தில் கரணுக்கு இப்படி ஒரு விபத்து நடந்ததை எப்படி கூறுவது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்..

 

 

 

 ஊருக்கு போன இடத்தில் சீதாவை கட்டாயப்படுத்தி தான் இந்த வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்று தான் நினைத்தார்கள்..

 

 

 

 சீதாவாவது இப்படி முற்றுமுழுதாக தன் அடையாளத்தை மாற்றிக் கொள்வதாவது..

 

 

 ஹோட்டல் கட்டிட வேலை அதற்குரிய அனைத்து வேலைகளுக்கும் நடுவிலும் அவள் படித்தாள்..

 

 

 அதனால் இந்த பரிட்சைகள் அவளுக்கு கஷ்டமாக தெரியவில்லை..

 

 

 தினமும் வந்து நல்லபடியாக பரீட்சையை எழுதிவிட்டு விஐ பி வீட்டிற்கு சென்று விடுவாள்..

 

 

 அப்படியே அவள் இறுதி பரீட்சை நாளும் முடிந்து அன்று ராம் வருவதற்காக வெளியே காத்திருந்தாள்..

 

 

 அப்போது அவள் தோழிகள் அவளை சுற்றிக் கொண்டார்கள்..

 

 

“ ஏய் சீதா என்னடி ஆச்சி உனக்கு?.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட.. எங்க மாடல் சீதா வா இது..” என்று ஆளுக்கு ஒவ்வொரு கேள்வியாக கேட்டு அவளை தொல்லை செய்தார்கள்..

 

 

“ ஹேய்.. உங்க கூட பேசக்கூடாதுனு இல்லடி.. சாரி பேச மூடு இல்ல.. நீங்களும் உங்க பேரன்ஸ் உங்களுக்கு வெட்டிங் பிளான் பண்ணி இருந்தா கட்டாயம் பண்ணிட்டு ஹேப்பியா உங்க லைஃப் என்ஜாய் பண்ணுங்க..

 

 நான் முத்துவை ரொம்ப லவ் பண்ணுறேன்.. ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்..

 

 

 ஒரு காலத்துல எதெல்லாம் நான் தகுதியின்னு நினைச்சு பழகினேனோ இன்னைக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லன்னு ஆயிடுச்சு..

 

 

எதெல்லாம் நான் வெறுத்தேனோ இன்னைக்கு அது மட்டும் தான் என் வாழ்க்கைக்கு சந்தோசத்தை கொடுக்குது..

 

 

 அப்படி உங்களுக்கும் பிடிக்காததுகள் இருந்தால் அதை பிடிக்க வச்சுக்கோங்க..

 

 

 காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் அதாவது பாய்ஸ் கூட டச்சப்ல இருக்காதீங்க..” என்றாள்..

 

 

“ என்னவோ போடி சீதா..! ஏதோ சொல்ற. சரி அதை விடு.. நம்ம கரண் இருக்கான்ல. அவனுக்கு பெரிய ஒரு ஆக்சிடெண்ட் ஆகி கை,கால்,போய் கண் போய்.. பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. எல்லாத்துக்குமே உதவிக்கு ஒரு ஆள் தேவைப்படுது. ரொம்ப கஷ்டபட்டுட்டு இருக்கான் டி.. இதை உன்கிட்ட சொல்லத்தான் உனக்கு அழைக்க முயற்சி செஞ்சோம் ஆனா உன்னோட கைபேசி ஸ்விட்ச் ஆப்ன்னு சொல்லுச்சு.. சரி ஊருக்கு போக முதல் அவனை போய் ஒரு எட்டு பார்த்துட்டு போ.. நாங்க எல்லாம் முன்னவே போய் பார்த்துட்டு வந்துட்டோம்.. ” என்றார்கள்..

 

 

 

 அவள் போய் அந்த தெரு நாயை பார்ப்பதா? என்று நினைத்துக் கொண்டாள்..

 

 

 

 சற்று நேரத்தில் அங்கே ராம் வரவும் காரில் ஏறி சென்று விட்டாள்..

 

 

“ ஏன் முத்து வர லேட் ஆயிடுச்சு?..” என்றாள்..

 

 

“ இன்னைக்கு கொஞ்சம் அதிக டிராபிக் டா.. ஏன்டா முகம் ஒரு மாதிரி இருக்கு என்ன ஆச்சு?..”

 

 

அவன் அப்படி கேட்டதும் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது..

 

 

இப்போதெல்லாம் சீதா தொட்டதுக்கும் கவலை பட்டு அழுது ராம் துணையை தேடுகிறாள்..

 

ராம் அன்புக்கு பழகிக்கொண்டாள்.. 

 

 

 தோழிகள் அவளுடன் பேசியதை கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

 

 

“ சாரிடா எல்லாம் என்னால தான்.. ஆனாலும் அதையே நினைச்சுகிட்டு எங்கேயும் போகாம இருக்கிறது கூடாது தானே.. என் பொண்டாட்டி அந்த பாதிப்பு எல்லாம் கடந்து வந்துட்டான்னு காட்டனுமா? இல்லையா?..” என்று அவன் கேட்கவும்

 

 

 சிறு குழந்தை போல் ‘ ஆம்.’ என்று தலையாட்டி விட்டு கண்களை துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்..

 

 

“ இதுதான் என் சமத்து பாப்பாக்கு அழகு..” என்று கூறி அவள் கன்னத்தை தட்டி விட்டு காரை வேகமாக செலுத்தி கொண்டு ஹாஸ்ப்பிட்டல் வந்தார்கள்..

 

 

 ராம் காரை இவ்வளவு வேகமாக ஓட்டுவதற்கு காரணம் விஐபியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்திருந்தது..

 

 

 

 கண்மணிக்கு காலையில் இருந்து உடல்நிலை கொஞ்சம் சரியில்லை..

 

 

 ஆனால் முக்கியமாக முடித்துக் கொடுக்க வேண்டிய சாரீஸ் கொஞ்சம் இருந்ததால் அந்த வேலையை பார்ப்பதற்காக பொட்டிக் சென்றாள்..

 

 

 அவளுக்கு இருக்கிற வேலை செய்வதற்கு உடல்நிலை ஒத்துழைக்காததால் சோர்வாகவே வேலையை செய்து முடித்தாள்..

 

 

 அதையும் மீறி அப்படியே எழும்போது மயங்கி கீழே விழுந்து விட்டாள்..

 

 

 

 ஆபீஸ் வேலைகளை முடித்துக் கொண்டு விஐபி அவளை அழைக்க வந்தான்..

 

 

 

 அப்போது கண்மணியின் தாய் அவனுக்கு அழைத்து விஷயத்தை கூறவும் வேகமாக வந்து அவளை தூக்கிக்கொண்டு காரில் போட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்..

 

 

 

 மருத்துவமனை வந்ததும்தான் ராமுக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் அவனும் வேகமாக அங்கே வந்து சேர்ந்தான்..

 

 

 

 அவளை பரிசோதித்த பெண் மருத்துவர் அவள் குழந்தை உண்டாகி இருப்பதை கூறினார்..

 

ஆனால் அவள் கர்ப்பப்பை ரொம்ப வீக்காக இருப்பதாகவும் அவளுக்கு இந்த குழந்தை வேண்டாம் அபாஷன் பண்ணி விடுமாறும் கண்மணியிடம் கேட்டுக் கொண்டார்..

 

 

 அவளுக்கு குழந்தையை தாங்கக் கூடிய அளவுக்கு கர்ப்பப்பையில் சக்தி இல்லை என்றும் தெளிவாக கூறினார்..

 

 

 

 சிறு வயதில் இருந்தே தந்தையின் உழைப்பு இல்லாததால் கண்மணியின் தாயும் அவரால் முடிந்தளவு தான் உணவை கொடுத்தார்..

 

 

 சடங்காகும் வயதுக்கு பின்பாவது பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்..

 

 

 ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கக்கூடிய சக்தியை அவள் உடலும் மனமும் கர்ப்பப்பையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்..

 

 

 போதுமான அளவு ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கண்மணிக்கு இருக்கவில்லை..

 

 

 அவளும் ஒரு வயதுக்கு மேல் பொட்டிக்கில் இருந்து வேலை வேலை என்று ஓடியதால் அவளை கொஞ்சம் கவனிக்க தவறிவிட்டாள்..

 

 

 இப்படியே சென்றதால் இந்த குழந்தையை தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கவில்லை..

 

 

 

 உருவாகிய இந்த குழந்தையை அளித்தாலும் இனி அவளுக்கு குழந்தை உருவாக வாய்ப்பில்லை என்பதை மருத்துவ தெளிவாக கூறினார்..

 

 

 

 இனி குழந்தை உருவாக வாய்ப்பில்லை என்பதை கேட்டதும் கண்மணி மனம் உடைந்து கொஞ்ச நேரம் அழுதாள்..

 

 

 அவர்கள் காதலுக்கு சாட்சியாக ஓர் குழந்தை வேண்டும் என்று விருப்பப்பட்டவள் என்ன நடந்தாலும் பரவாயில்லை இந்த குழந்தையை சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்..

 

 

 

 அந்த உறுதியான முடிவை எடுத்ததும் மருத்துவரிடம் வேண்டி கேட்டுக்கொண்டாள்..

 

 

“ மேடம் ப்ளீஸ் எனக்கு கர்ப்பப்பையில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கு அதனால இந்த குழந்தையை அபார்ஷன் பண்ணனும் என்ற விஷயத்தை மட்டும் என்னை தவிர எங்க வீட்ல யாருக்குமே தெரிய வேண்டாம்..

 

 

என் கணவருக்கோ இல்ல வீட்ல யாருக்கும் தெரிஞ்சா கட்டாயம் என் மேல இருக்க பாசத்துல இந்த குழந்தையை அபார்ஷன் பண்ண தான் சொல்லுவாங்க..

 

 

 இனிதானே உருவாகாது.. இப்ப உருவாகிய குழந்தையை கட்டாயம் நான் பெத்துக்கணும்..

 

 ப்ளீஸ் என்னோட நிலைமை புரிஞ்சு கொள்ளுங்க.. நானும் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..

 

 

விஜய்கிட்ட கொஞ்சம் வீக்கா இருக்காங்க.. அதனால கவனமா பார்த்துக் கொள்ளுங்க என்று மட்டும் சொல்லுங்க போதும்..

 

 

 அப்புறம் அவரே என்னை தாங்கி தாங்கி ரொம்ப நல்லபடியா பார்த்து கொஞ்சம் ஆரோக்கியமாக மாத்திடுவார்..

 

 

 மன்த்லி செக்கப் வரும்போது நீங்க சொல்ற அட்வைஸ் கட்டாயம் ஃபாலோ பண்ணி ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு என்ன ரொம்ப கவனமா பார்த்துக்கிறேன். இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க பிளீஸ் மேம்..” என்று அவர் கையைப் பிடித்து கண்களில் கண்ணீர் வடிய கெஞ்சி கேட்டுக் கொண்டாள்..

 

 

 

 மருத்துவம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கர்ப்பப்பை குழந்தையை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை எப்படி மருத்துவ முறையில் வளர்ச்சி அடைய வைக்க முடியும்..

 

 

 அதுவும் குழந்தை உருவாகிய பின் வாய்ப்பே இல்லை..

 

 

ஆனாலும் மருத்துவர் கண்மணியின் தாய்மையின் கண்ணீருக்கு முன் தலைவணங்கி அவள் கூறியது போன்று விஐபி யை அழைத்து ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளும்படி மட்டுமே கூறினார்..

 

 

 

 அந்த ஒரு வார்த்தை போதுமே அவனுக்கு சும்மாவே மனைவியை தாங்குவான் இனி கேட்கவா வேண்டும்..

 

 

 தன் அத்தான் அப்பாவாகிய விஷயத்தை சீதா கேள்விப்பட்டதும் சந்தோஷமாக கைகுலுக்கி வாழ்த்து கூறினாள்..

 

 

 ராம் இருவருக்கும் வாழ்த்து கூறினான்.. சந்தோஷமாக ஸ்வீட் வாங்கிக் கொண்டு அனைவரும் இரண்டு கார்களில் வீட்டிற்கு சென்றார்கள்..

 

 

ராம் ஊரிலும் அனைவருக்கும் சந்தோஷமாக விஷயத்தை பகிர்ந்து கொண்டார்கள்..

 

 

 

 அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டே சீதாராம் ஜோடி ஊருக்கு வந்துவிட்டார்கள்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்