Loading

“ காரணம் ரொம்ப அதிகமாவே இருக்கு.. அங்கேயே அவனை ரெண்டு மிதி போட்டு அவன் வாயாலேயே உண்மையை வரவழைச்சு இருப்பேன்.. அவன் உன் முன்னாடி மாட்டிக்கொள்ள கூடாதுன்னு உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னால்.. ஆதாரம் இல்லாம நீ என்னை நம்புவியா?.. இல்லதானே.. அதனால தான் அவன் எந்த அளவுக்கு போறானோ போகட்டும்னு விட்டுட்டு அவனை பின் தொடர்ந்து வந்தேன்..” என்றான்..

 

 

“ என்னது பின் தொடர்ந்து வந்தியா?.. நீ வர கொஞ்சம் லேட் ஆகி இருந்தாலும் என் வாழ்க்கையே அவனால நாசமா போயிருக்கும்..” என்றாள்.. அவள் வாழ்க்கை நிலை என்னவென்று நினைத்து கண்கள் கலங்கியது..

 

 

“ அடியேய்.. அப்படி போக நான் விட்டுடுவேனாடி.. அன்னைக்கு ஊர்ல அந்த அபத்து நேரத்துல முத்து வா, முத்து வான்னு நான் யாருன்னே தெரியாம என்னை அழைத்த நேரம் உன்கிட்ட இருந்த நம்பிக்கை இப்ப கட்டின புருஷனா இருக்கும்போது என் மேல நம்பிக்கை இல்லையா என்ன?.. ஆதாரம் கடிதம் மட்டும் இல்ல.. இந்த போன்ல இருக்கிறதையும் பார்.. பார்த்துட்டு மொத்தமாக கேட்க வேண்டிய கேள்விகளை கேளு..” என்று கூறிவிட்டு அவன் கைபேசியில் இருந்த சில காணொளிகளை அவள் முன்பு போட்டு காட்டினான்…

 

 அதில் இருந்ததும் இதுதான்..

 

‘ டேய் மச்சான் நேத்து திடீர்னு சீதாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா.. நாம இத்தனை வருஷம் அவளை அனுபவிக்க காத்திருந்தது வேஸ்ட்டா போய்டுமோ..’ என்றான் தீபன்..

 

 என்றும் இல்லாமல் திடீரென்று அவள் ஊருக்கு செல்வதாக கூறியதும் மதுரையில் இருக்கும் அவன் நண்பர்களை வைத்து அவளை பின் தொடர்ந்தான்..

 

 

 அப்படித்தான் அந்த ஊரில் திடீரென்று சீதாவுக்கு திருமணம் நடந்ததை கரண் தெரிந்து கொண்டான்..

 

 

 திருமணம் முடிந்து விட்டது என்று அலைபேசியில் அழைத்து நண்பன் கூறியதும் அதை தீபன் கரணிடம் கூறினான்..

 

 

 அடுத்த நாள் சீதாவை காலேஜில் முதல் முதலாக இறக்கி விட வந்த ராமை பார்த்துவிட்டு கரண் அன்று மாலை தீபனை சந்தித்து ராமை பற்றி கூறி வயிறு குலுங்க சிரித்தான்..

 

 

‘ டேய்.. அவன் ஒரு காட்டான் டா.. சீதா அவனை தன் ஹஸ்பண்ட் என்று கூட எங்களிடம் அறிமுகப்படுத்தவில்லை.. அப்படி இருக்கும்போது அவ எப்படி அவனோட சேர்ந்து வாழப்போறா?.. அது நடக்கவே நடக்காது.. நமக்கு தான்டா சீதா எப்பவுமே ஃபர்ஸ்ட் கிடைப்பா அது எப்பவுமே தப்பாது.. அவளுக்கு நாம தான் ஃபர்ஸ்ட் ஆனா நமக்கு அவ எத்தனையாவதோ கணக்கே இல்ல.. இந்த மூணு வருஷமா அவளை யாரும் பார்க்காத நேரம் ரசிச்சு பார்க்கிறதும்.. அவளுக்கு முன்னுக்கு நல்லவன் மாதிரி நடிக்கிறதும் எவ்வளவு பெரிய கஷ்டமா இருக்கு.. நான் அனுபவிக்கிற இந்த கஷ்டத்துக்கும் சேர்த்து வைத்து அவளை சும்மா அப்படி அனுபவிக்கணும்.. ” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்..

 

அந்த வீடியோ முடிந்து விட்டது..

 

 

 

 அடுத்த வீடியோ விஐபி யின் திருமணத்திற்கு அடுத்த நாள் பதிவாகி இருந்தது..

 

“ டேய் மச்சான்.. சீதாவுக்கு கல்யாணம் நடந்தது யாருக்குமே தெரியக்கூடாது அதற்கு முதல் நாம அவளை அனுபவிக்கணும் என்று நினைத்தேன்.. ஆனால் இந்த மீடியாகாரன் மொத்த பேருக்கும் தெரிய வைத்துவிட்டான்.. இனி எங்க கூட சுத்திகிட்டு திரியுற கொஞ்ச லூசு கூட்டங்கள் அவளுக்கு அட்வைஸ் பண்ணி அவளோட மனசு மாத்தியே அவனோட சேர்ந்து வாழ வச்சிடுவாங்க.. இதுக்காகவா அவ தாலி வெளியே தெரியவும் தாலி தெரியாமல் இருக்க ஃபுல் நெக் வச்ச டிரஸ் உனக்கு நல்லா இருக்குன்னு சொல்லி அவளை தினமும் அதையே போட வச்சேன்.. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு..

 

முன்ன பிளான் பண்ணின மாதிரி காலேஜ் ஃபுல்லா முடிஞ்சு லாஸ்ட் டேய் அன்னைக்கு நாம அவளை மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு போயி ரேப் பண்ண நினைத்ததை கூடிய சீக்கிரம் பண்ண பிளான் பண்ணணும்.. நாளைக்கு காலேஜ் வருவா.. நாளைக்கு செட்டாகாது.. இன்னும் ரெண்டு நாளில எங்களுக்கு லாஸ்ட் எக்ஸாம் முடியும்.. அன்னைக்கு எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பார்ட்டி கொடுக்கிறதா சொல்லி இருக்கா.. நாம முன்னாடி போட்ட அதே பிளானை அன்னைக்கு பண்ணினா எல்லாம் ஓகே ஆகும்.. சரி மயக்க மருந்து கைவசம் இருக்காடா?..” என்றான் கரண்..

 

 

“ இருக்குடா மச்சி.. நாளைக்கு அந்த தையல் கிளாசுக்கு போயிட்டு டெய்லி ஆறு மணிக்கு வருமே அந்த பொண்ணுக்கு வச்சிருக்கமே டா..” என்றான் தீபன்..

 

 

“ அட..! யார்ரா இவன் அந்த பொண்ணுக்கு எப்பவுமே கொடுத்து சம்பவம் பண்ணலாம்.. ஆனால் இவளுக்கு பார்ட்டி கொடுக்கிற அன்னைக்கு கட்டாயம் கொடுத்து பண்ணியே ஆகணும்.. அந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவள் எக்ஸாம் முடிஞ்சு ஊருக்கு போறதா பிளான் பண்ணி இருக்காங்க.. அங்க போய் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. சீதா பிரஸ் பீஸா நமக்கு வேணும்னு காத்திருந்தது இன்னும் ரெண்டு நாளில் நாம் திட்டமிட்டபடி நடந்தே ஆகணும்.. அதுக்கு எல்லாம் ரெடி பண்ணிவை.. சீதா மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடிச்சதும் பத்து நிமிஷத்துல மயங்கிடுவா அதுக்கு முதல் நான் அவளை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி கார்ல ஏத்திட்டு வந்துடுறேன்.. என்ன நம்ம பிளான் நல்லபடியா நடக்கும் சரி நீ இப்ப போயிட்டு வா..” என்று கூறி இருவரும் பிரிந்து சென்றதும் அந்த வீடியோ முடிந்தது..

 

 

 

 அடுத்த வீடியோ இன்று காலை 11 மணி அளவில் நடந்தது..

 

 

 அதில் தீபன் அந்த ராஜ் ஹோட்டலில் ஒரு சர்வரை அழைத்து “ யோவ் நல்லா பாத்துக்கோ.. இன்னைக்கு இந்த பொண்ணு தான்.. லாஸ்ட்டா அந்த பொண்ணு குடிக்கிற ஆப்பிள் ஜூஸ்ல இந்த மயக்க மருந்தை கலந்திடு..” என்று கூறி சீதாவின் புகைப்படத்தை காட்டி அவனுக்கு ஒரு கட்டு பணத்தையும் கொடுத்தான் தீபன்.. 

 

அந்த சர்வர் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து பாக்கேட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..

 

 அத்தோடு அந்த வீடியோவும் முடிந்து இருந்தது..

 

 தொடர்ந்து அந்த மூன்று வீடியோவையும் பார்த்ததும் அவளால் தாங்க முடியவில்லை..

 

 சீதாவை அப்படியே இழுத்து அவன் தோளில் சாய்த்து கொண்டு முதுகை தட்டி கொடுத்து “ அழாதடி அதுதான் எதுவும் நடக்கலையே.. இனியும் அவனால எதுவுமே பண்ண முடியாத அளவுக்கு அவனை கொண்டு வந்துட்டேன்.. இதுதான் உனக்கு அவனுக செய்ய இருந்த துரோகம்.. அதைத்தான் போட்டு காட்டி இருக்கேன்.. முதல் வீடியோ அந்த தீபனுக்கு தெரியாம அவன் போன்ல இருந்து சுட்டது.. இரண்டாவது வீடியோ அவர்கள் மேல எனக்கு சந்தேகம் வந்ததுமே இன்னைக்கு என்னை கொண்டு வந்து இறக்கி விட்டாரே அந்த ஆட்டோக்கார அண்ணன் கமல்.. அவர்கிட்ட சொல்லி இருந்தேன்.. அவர் தான் அந்த வழியா ஆட்டோவில் வரும்போது அவனுக பேசிட்டு இருந்ததை பார்த்து ஒளிஞ்சி இருந்து வீடியோவை எடுத்து எனக்கு அனுப்பி விட்டார்..

 

அடுத்த வீடியோ நானே இன்னைக்கு எடுத்தேன்..” என்றான்..

 

 மனைவியை கை வளைவில் வைத்து ஆறுதல் படுத்திக் கொண்டு அனைத்தையும் கூறினான் ராம்.

 

 அவன் செயல் அவளுக்கு கோபம் வரவும் அணைத்து இருந்த கையை விளக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்..

 

‘ ஐயையோ முறைக்கிறளே.. இப்ப என்ன பூதம் வரப்போகுதோ தெரியல… ’ என்று நினைத்து அவள் முகத்தையே பார்த்திருந்தான் ராம்.. 

 

 

 

“ டேய்.. கடிதத்தை நான் படிச்சாலும் நம்பி இருக்க மாட்டேன் சரி.. ஹோட்டல்ல அப்பவே வச்சு சொல்லியிருந்தாலும் அதுக்கு அந்த தெரு நாய் இல்லன்னு மறுத்து பேசி இருப்பான் அதுவும் சரி.. இவ்வளவு தெளிவா அந்த பொறுக்கி நாயோட திட்டத்தை வீடியோவை எடுத்து வச்சிருக்கீங்க.. முன்கூட்டியே என்கிட்ட காட்டி இருந்தால் நான் கொஞ்சம் அலர்ட்டா இருந்து இருப்பேன் தானே.. வீடியோவை என்கிட்ட ஏன் காட்டல?..” என்று கேட்டாள்.. அவள் கண்ணில் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் என்னும் கேள்வியும் தொக்கி நின்றது..

 

 

“ இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்திருக்கிற காலத்துல சாதாரணமா ஒரு வீடியோ கொண்டு வந்து நான் காட்டினா நீ நம்பி இருப்பியா?.. ஏதோ எடிட் பண்ணியதுனு சொல்ல மாட்டியா? சொல்லுடி.. அதுக்குத்தான் உண்மையான ஆதாரத்தை நீ பார்த்து நம்பணும்னு நினைத்து இந்த வீடியோவை உன்கிட்ட காட்டாமல் அவன் போக்குலையே அவனை விட்டு புடிக்க நினைச்சேன்.. நீ குடிச்ச ஜூஸ் அவன் மயக்க மருந்து கலந்த ஜூஸ் இல்ல.. அந்த சர்வரை வீடியோ காட்டி வேலை போயிடும்னு மிரட்டி நானே என் கைப்பட ரெடி பண்ணினேன்.. என் பார்வையில் அவன் அந்த ஜூஸ் எடுத்து வந்து உனக்கு தந்தான்..

 

நான் கூடவே இருந்து அப்படி பண்ண விடுவேனாடி.. அந்த பொறுக்கியோட உண்மையான முகம் என்னன்னு நீயும் தெரிஞ்சுகிட்ட.. என்னையும் நீ தவறாக புரிந்து கொள்ளவில்லை.. அது போதும் எனக்கு..” என்றான்..

 

 

 

 

 

 

“ ஆமா உனக்கு உன் பாடு.. அதை அனுபவித்த ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சு துடிச்சு போன எனக்கு தான் அதோட வலி என்னனு தெரியும்..

 

ஆதாரம் இல்லன்னா நான் நம்ப மாட்டேன் சரி.. சும்மா என்கிட்ட சொல்லி இருக்கலாமே கொஞ்சமாவது நான் அலர்ட்டா இருந்திருப்பேன்.. 

 

 

ஏதோ இந்த அளவுல எல்லாமே முடிஞ்சிடுச்சு.. ஆனாலும் அப்படி என்ன ஆதாரம் இல்லாம அந்த நாயை பற்றி என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு வீம்பா இருந்திருக்க நீ..” என்று கேட்டாள் சீதா…

 

 

 

 

“ ஏன்னா நான் சொல்லுறதை நீ நம்பாமல் பொய் சொல்லி உன்னை என் பக்கம் இழுக்க நினைக்கிறேன்னு என்னை தப்பா நினைச்சி வெறுத்துடுவியோன்னு எனக்கு பயம் டி..

 

நான் சின்ன வயசுல தான் அம்மா பாசம்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.. யார் கண் பட்டுச்சோ அது நிரந்தரம் இல்லாம போயிடுச்சு.. எங்க அம்மாவுக்கு அடுத்து அம்மாவுடைய இடத்துல வச்சி நான் நேசித்த ஒரே பொண்ணு நீ தாண்டி..

 

 நீ நினைக்கலாம்.. என்ன இவ்வளவு குறுகிய காலத்தில் லவ் பண்ணி இருக்கேன்னு சொல்றான்.. இது எந்த அளவுக்கு உண்மையான காதல் என்று உனக்கு சந்தேகம் இருக்கலாம்..

 

 

 

 ஆனா உன்னை முதல் முதலா பார்த்த போது யாரோ ஒரு பணக்கார பொண்ணு போலனு நினைத்தேன்..

 

 

 ஆனா எப்ப நீ என்னை நம்பி எனக்காக காத்திருந்தியோ அந்த தவிப்பான முதல் பார்வையில எனக்குள்ள என்னமோ சம்திங் பண்ணுச்சு.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. வாழ்ந்தா உன்னோடு தான் வாழணும்.. இல்லாட்டி கல்யாண வாழ்க்கையே வேணாம்..

 

 காதல் யார் மேல எப்ப எந்த நிமிஷம் வரும்னு தெரியாது..

 

 அப்படி உன் மேல எனக்கு வந்த காதலை அனுபவிக்க விடாமல் நீ பண்ணிடுவியோன்னு ஒரு தவிப்பு ஏன் பயம்னு கூட சொல்லலாம்.. 

 

உன் வெறுப்பு கலந்த ஒரு பார்வையை கூட என்னால தாங்கிக்க முடியாது.. நீதான் எனக்கு உயிர்.. நீ என்னை வெறுத்து ஒதுக்கி இருந்தால் எனக்கு இருக்கிற கடமைக்கும் பொறுப்புக்காகவும் மட்டும் வாழ்ந்திருப்பேன்..

 

ஆனா உயிர் இல்லாத உடலா நடை பிணமா என் குடும்பத்துக்காக வாழ்வேனே தவிர உன்னை தொல்லை செய்யவும் மாட்டேன்.. எனக்காக வேறொரு வாழ்க்கையை தேடிகிட்டு சந்தோசமா வாழ்ந்து இருக்கவும் மாட்டேன்.. நாம கல்யாணம் பண்ணினதும் நீ என்னை பிடிக்கலன்னு சொன்னது திட்டுனது எல்லாமே நான் ஏத்துக்கிட்டேன்.. 

 

ஏன்னா?. நீ என் கூட இருக்க.. இப்ப இல்லாட்டிலும் உண்மையான பாசமும், காதலும் தோற்றுபோகாது.. ஒரு காலத்துல உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு நான் முழுசா நம்பினேன்.. அப்படி நீ வரும் போது நான் உன்னை ஏதும் காயப்படுத்தாமல் என்னால உனக்கு எந்த ஒரு கஷ்டமும் ஏற்பட்டு இருக்காமல் நீ முழு மனசோட என்னை ஏத்துக்கொள்ளணும்.. அதுக்காகத்தான் நீ எவ்வளவு திட்டினாலும் நான் அதை கடந்து போனேன்..

 

ஏன்னா?. என்னையும் திட்டுவதற்கு அதிகாரமா பேசுறதுக்கு ஒரு ஆள் இருப்பதால் சந்தோசம் தான் எனக்கு கிடைச்சதே தவிர நீ திட்றதால எப்பவும் உன் மேல கோவமே வந்ததில்லை.. நான் பண்ணியதில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடு..” என்றான்.. 

 

 

 அவன் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கவும் அவள் அவன் கையை கீழே இறக்கிவிட்டு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..

 

 

 அணைத்தது மட்டுமில்லாமல் அவன் நெற்றி கண்ணம் என முத்தமிட்டாள்..

 

 

 அவன் காரமிளகாவின் செயலை இன்னும் நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

 

 

“ என்னடா பாக்குற முத்தம் கொடுத்தால் திருப்பி கொடுக்கணும்னு தெரியாதா?..” என்றாள்..

 

 

“ நான் கொடுத்தால் பாப்பா கிஸ் கொடுக்க மாட்டேன்.. பாப்பாவை வரவைக்கிற கிஸ் கொடுப்பேன் பரவாயில்லையாடி?..” என்று தன் மனைவியை பார்த்து கண் சிமிட்டு கொண்டே கேட்டான்..

 

 

“ உங்களுக்கு அப்படி கிஸ் பண்ண தெரிஞ்சு தைரியமும் இருந்தால் தாராளமா கொடுக்கலாம் யார் வேணாம்னு சொன்னா?..” என்றாளே பார்க்கலாம்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்