Loading

அழகு தேவதையாக அவள் அறைகுள் வரவும் ராம் கட்டிலில் இருந்து எழுந்து வந்து அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி மேசையில் வைத்து விட்டு அவள் கையை பிடித்து அழைத்து சென்று அவன் அருகில் அமர வைத்தான்..

 

 

சீதா தலையை குனிந்து இருந்தாள்..

 

 

“ ஏய் காரமிளகாய் இப்படி வெட்கப்படுவது எல்லாம் உனக்கு செட் ஆகாதுடி.. என் அதிரடி சீதாவா இது..” என்று கூறி ராம் சிரித்தான்..

 

 

“ துரைக்கு ரொம்ப ஆசைதான்.. வெட்கப்பட்டு கால்ல விழுவேன்னு நினைப்போ..” என்றாள்..

 

 

“ அப்பாடா சீதா ஃபார்முக்கு வந்துட்டா.. நானும் வந்தது சீதா உருவத்தில் வேறு யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்.. யாருடி உன்னை கால்ல விழ சொன்னது.. நீயே விழ வந்திருந்தாலும் நான் விட்டு இருக்க மாட்டேன்..

 

 நமக்குள்ள எந்த ஒரு பார்மாலிட்டியும் வேணாம்.. நீ எப்பவுமே சீதாவா இருக்கலாம்..” என்றான்.. அதைக் கேட்டு சீதா சிரித்து விட்டு அவனுடன் பேச முடிவெடுத்தாள்..

 

 

 

 

“ முத்து முதல் நாம கொஞ்சம் பேசலாமா?..” என்றாள்..

 

 

“ தாராளமா பேசலாம்டா.. இன்னைக்கே நமக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.. நீ இன்னும் மூணு மாதம் படிக்க வேண்டும்.. அதை முடிச்சதுக்கு அப்புறம் ஆறுதலா ஆரம்பிக்கலாம் ரிலாக்ஸா இருடா..” என்றான்..

 

 

“ ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலைன்னு சொல்றது உனக்கு தான்டா பொருத்தமா இருக்கும் மக்கு புருஷா.. நீ இப்படியே பழம் மாதிரி இருந்தா நமக்கு அறுபதாவது வயசிலும் பாப்பா வராது.. இது சரிவராது முதல் ஆக்சன் அடுத்தது பேச்சு..” என்று கூறிவிட்டு அவன் அருகே இன்னும் நெருங்கி அமர்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்..

 

 

“ என்னை நீ என்னடி நினைச்சுட்ட.. பாவம் சின்ன பொண்ணு கொஞ்சம் விட்டுக்கொடுப்போம்னு பார்த்தா உன் வாய் ஓவரா போகுது..” என்று கூறி அவள் கையை பிடித்து இழுத்து அவளை மடியில் அமர்த்தி கொண்டு இதழோடு இதழ் பொருத்தினான்..

 

 

 அவளும் அவன் முத்த யுத்தத்திற்கு ஈடு கொடுத்து அவள் கையை ராமின் பின் தலையில் வைத்து அழுத்தி பிடித்தாள்..

 

 

 ராம் தலை முடியை தோள் வரையிலும் வளர்த்து அழகாக பராமரித்திருந்தான்.. மிகவும் சாப்டாக இருந்தது..

 

 

 காற்றில் அவன் தலை முடி அசைவது அவ்வளவு அழகாக இருக்கும் அவனுக்கு..

 

 

 இதழ் முத்தத்தில் ஆரம்பித்த அவர்கள் தாம்பத்தியம் படிப்படியாக முன்னேறி பரிபூரணமாக இருவர் ஒத்துழைப்போடும் அரங்கேறியது..

 

 

 

 இருவரும் சரிசமமாக ஒத்துழைத்து உழைத்தார்கள்..

 

 

 அவன் வேகத்தை தாங்க முடியாமல் அவள் தான் களைத்து போனாள்..

 

 

 அருகில் இருந்த டவல் ஒன்றை எடுத்து அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வையை துடைத்து விட்டான் ராம்..

 

 

 அறையில் குளியலறை இல்லாததால் இருவரும் ஒன்றாக வெளியே வந்து அந்த இரவு நேரத்தில் ராம் தண்ணீர் எடுத்து கொடுக்க சீதாவும் குளித்து அவளை தொடர்ந்து அவனும் குளித்துவிட்டு அறைக்கு சென்று இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு உறங்கினார்கள்..

 

 

 

 கூடலினால் ஏற்பட்ட உடல் களைப்பால் அவள் பேச நினைத்ததை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அவளும் உறங்கி விட்டாள்..

 

 

 வழமை போல் ராம் நேரத்தோடு எழுந்து காலை உணவை அங்கேயே செய்து வைத்து விட்டு காபியை போட்டு வைத்து அவளுக்காக காத்திருந்தான்..

 

 

 அவளும் சரியாக எழும் நேரத்துக்கு அன்றும் எழுந்து வெளியே சென்று முகம் கழுவி விட்டு வந்து காபியை குடித்துவிட்டு அறைக்கு சென்று உடை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் குளித்துவிட்டு உடைமாற்றிவிட்டு அங்கே வந்தாள்..

 

 

 அப்போது ராம் துர்கா வீட்டிற்கு சென்று அவர்களை இங்கே அழைத்து வந்தான்..

 

 

 

“ என்ன மாப்பிள்ளை நீங்க.. நீங்களே சமைச்சு இருக்கீங்க.. அங்க உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி வச்சிருந்தோம் தானே..” என்றார் யசோதா..

 

 

“ இதில் என்ன அத்தை இருக்கு.. யார் பண்ணினா என்ன?..” என்றான்..

 

 

“ சரி மாப்பிள்ளை உங்க கிட்ட பேச முடியாது.. நீங்க இருங்க நாங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறோம்..” என்று கூறிவிட்டு யசோதாவும் யமுனாவும் சாப்பாடு எடுத்து வைத்து அனைவருக்கும் பரிமாறினார்கள்..

 

 

 காலை உணவை முடித்துக் கொண்டு ஹாலில் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் போது அங்கே வந்து சீதா ராமை அறைக்குள் அழைத்து சென்றாள்..

 

 

 பெரியவர்கள் அங்கே இருக்க சீதாவின் இந்த செயலில் தன்னிடம் முக்கியமாக ஏதோ பேசப்போகிறாள் என்று புரிந்து கொண்டு என்னவென்று கேட்டான் ராம்..

 

 

“ நம்ம எதிர்கால திட்டத்தைப் பற்றி ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் முத்து.. காலத்தை வீணடிக்காமல் பெரியவங்க கிட்ட சொல்லி முறையா கேட்டு அதற்கான வேலையை கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கணும்.. என்னன்னு கேக்க மாட்டீங்களா?.. ” என்றாள்..

 

 

“ நான் என்னன்னு கேக்க மாட்டேன்.. நீ சொல்றதை அங்க வச்சு சொல்லு.. என் பொண்டாட்டி வார்த்தைக்கு மறுப்பேச்சு இல்லாம நானும் சம்மதம் சொல்லுவேன்.. ” என்றான்..

 

“ என் புஜ்ஜு குட்டி.. உங்க ஆசை வேலையை கொஞ்சம் குறைச்சிக்கணும்.. அதுக்கு ஓகே யா?.. நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கு.. முதல் நிறைய ரூம் வச்சு பெரிய வீடு கட்டணும்.. அடுத்து யமுனாவுக்கு நல்லபடியா மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.. மாமாவ நல்லபடியா பாத்துக்கணும்.. நமக்கு பாப்பாங்க பிறப்பாங்க.. இனி அவங்க படிப்பு செலவு இப்படி நிறைய இருக்கு.. இந்த காலத்து விலைவாசிக்கு நடுவுல ஆட்டோ மட்டும் ஓட்டி அதில் வரும் வருமானத்துல நம்ம குடும்பம் அடிப்படை தேவைக்கே கஷ்ட படணும் அப்படி இருக்கும் போது எப்படி ஹாப்பியா போகும்? ..

 

 

நான் வசதியாக வாழ்வதற்காக இதை சொல்லலை.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல காலி இடத்தில ஹோட்டல் கட்டுவோம்.. நம்ம இடம் மெயினுக்கு கொஞ்சம் பக்கத்துல தானே.. நல்லா பிசினஸ் போகும்.. உங்ககிட்ட இருக்க சேவிங்ஸ் அப்புறம் என்கிட்ட இருக்க நம்ம பணத்தையும் எடுத்து முதல் சிறிய அளவில் ஆரம்பிப்போம்..

 

 

அப்புறம் கஸ்டமர் சாப்பாட்டு டேஸ்ட் பிடிச்சு போய் வந்தால் கல்யாணம், பர்த்டே பார்ட்டி இப்படி பெரிய பெரிய பங்க்ஷனுக்கு ஆர்டர் எடுத்து பண்ணி கொடுப்போம்.. ஃபுல் அண்ட் ஃபுல் உங்க ரெசிபி அண்ட் கை பக்குவத்துல தான் பண்ணனும்.. கிச்சன் ஹெல்புக்கு பொண்ணுங்க.. அப்புறம் சர்வரா ஆண்கள் வேலைக்கு வைக்கலாம்.. போக போக பெரிய ஆர்டர் எடுத்தா ஒரே நாள்ல அதிகமான பங்ஷன் வரும் அவங்க எல்லாம் புக் பண்ணினால் இரண்டு இடத்துக்கும் நீங்களும் இன்னும் ஒரு ஆள். அப்புறம் நானும் ஒரு ஆளும் கொண்டு போகலாம்.. நமக்கு ரெண்டு கார், ஆட்டோ இருக்கு.. காலைல செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் அவங்க செய்து தந்ததும் நீங்க கை பக்கத்துல குக் பண்ணி வச்சிட்டு வழமையான நீங்க முக்கியமா போற ஆட்களுக்கு மட்டும் அவங்க அழைத்தால் ஆட்டோ எடுத்துட்டு போங்க.. அப்படி போய் அதுல வர பணத்துல கார்க்கும் ஆட்டோக்கும் பெட்ரோல் போட்டுக்கலாம்.. அதுல பணம் மிச்சம் இருந்தால் சமைக்க தேவையான பொருட்கள் வாங்கிக்கலாம்.. அப்படி கொஞ்சம் இப்ப கஷ்டப்பட்டு உழைச்சு பணத்தை கொஞ்சம் மிச்சப்படுத்திட்டா எதிர்கால வாழ்க்கையில நாம சந்தோஷமா இருக்கலாம்..

 

 

பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதால நானும் உங்க கூட எல்லாத்திலும் சப்போர்ட்டா இருந்து பார்த்துப்பேன்.. இதுதான் முடிவு இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?..” என்றாள்..

 

 

“ அடடே என் கார மிளகாய் குள்ள இவ்வளவு நல்ல யோசனையா?.. ஒரு ஆண் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது முக்கியமா ரெண்டு பேர் தான்.. அவனை பெத்த அம்மா அடுத்து அவன் மனைவி.. அம்மா இருந்திருந்தால் ஒருவேளை நான் நல்லா படிச்சு நல்லா இருந்திருப்பேனோ என்னவோ?.. அது தெரியல.. ஆனா இப்ப என் பொண்டாட்டி மூலமா நம்ம எதிர்காலம் நல்லா இருக்க போவது உறுதி. எனக்கு முழு சம்மதம் டா.. ” என்றான்..

 

 

“ சரி அப்போ வாங்க. பெரியவங்க வெளிய காத்திருக்காங்க ரொம்ப நேரமா.. நாம போய் எல்லாரிடமும் விஷயத்தை சொல்லிடுவோம்.. ” என்று கூறி அவன் கைகளோடு கைகளை கோர்த்துக் கொண்டு சந்தோஷமாக வெளியே வந்தார்கள்..

 

 

 

 அவர்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் முன்பு வந்து சீதா அவள் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி விளக்கமாகவும் அதிலுள்ள சாதக பாதங்கள் அனைத்தையும் எடுத்து கூறினாள்..

 

 

 அவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கான முடிவை பற்றி அவள் கூறியதும்.. யசோதா மீரா விஐபி மூவரும் சம்மதம் தெரிவித்தார்கள்..

 

 

 அவர்கள் சொத்து அவளுக்கு மட்டும் தானே அவள் விருப்பப்படி அவள் வாழ்க்கை அமைத்துக் கொள்ளட்டும் என நினைத்துக் கொண்டார்கள்..

 

 

ராம் உடன் சேர்ந்து அவள் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்..

 

 

 நான் என்று இருந்த சீதா இன்று நாம் என்று பேசியதை பார்த்தவர்கள் அவள் மாற்றத்தினை புரிந்து கொண்டார்கள்..

 

 

 அன்று துர்கா வீட்டில் மதியம் சீதா ராம் மற்றும் விஐபி கண்மணி ஜோடிக்கு கல்யாண விருந்து ஏற்பாடாகியது..

 

 

 

 அந்த கல்யாண விருந்தை முடித்துக் கொண்டு மாலை நேரம் யசோதாவும் கிருஷ்ணனும் பிறந்த இடத்திற்கு சென்றார்கள்..

 

 

விஐபி தந்தையின் பழைய வீட்டையும் அந்த இடத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்..

 

 

 அவன் அருகே வந்து யசோதா அவன் தந்தையின் பழைய நினைவுகளைப் பற்றி சிலவற்றை கூறிவிட்டு அவனைத் தட்டி கொடுத்தார்..

 

 

 அவர்கள் இங்கிருந்து சென்னைக்கு சென்றதும் யசோதா கிருஷ்ணனின் பெற்றோர் அந்த இடத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள்..

 

 

 இப்போது அங்கே எத்தனையோ ஆட்கள் மாறி வேறு ஒருவர் இருந்தார்..

 

 

 கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து சென்று நாளை விஐபிக்கு ரெக்கார்டிங் இருப்பதால் அதிக லீவ் எடுத்து விட்டதால் ஆபீஸ் வேலைகளும் அதிகம் குவிந்து கிடந்தது…அதனால் அன்று இரவில் அனைவரிடமும் கூறிக்கொண்டு விஐபி கண்மணியும் மீராவும் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார்கள்..

 

 

 சீதா இனி நிரந்தரமாக தன் வசிப்பிடம் கணவன் ஊர் தான் என்று கூறிவிட்டாள்..

 

 

 அவளுக்கு இனி சென்னை வேண்டாம் என்று தோன்றிவிட்டது..

 

 

 மூன்று மாதம் முடிந்து பைனல் எக்ஸாமை வந்து எழுதுவதாக கூறிவிட்டாள்..

 

 

 தன் தோழிகள் தன்னை எதிர்பார்ப்பார்கள் என்பதால் அவர்களிடம் இதைப் பற்றியும் கூறாமல் மூன்று மாதம் இங்கு இருந்து விட்டு வந்து எக்ஸாம் எழுதுவதாக மட்டும் கூறி விட்டு அவர்கள் கரணுக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி கூற வரும்பொழுது அதை கேட்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டு சிம் கார்டை மாத்திக்கொண்டாள்..

 

 

 

 விஐபி, மீராவோ யாரும் புது அலைபேசி எண்ணை யாருக்கும் கொடுக்கப் போவதில்லை..

 

 

 

 இனியும் தாயை அங்கே தனியாக விட்டுவிட்டு அவர் தங்களை நினைத்து கவலைப்படுவதை விரும்பாமல் தாயையும் தங்களுடனே வைத்துக் கொண்டாள் சீதா..

 

 

 

 சென்னைக்கு எதற்காவது சென்றால் விஐபி வீட்டில் தாங்கிக் கொள்ளலாம் அதனால் சீதாவின் வீட்டையே சென்னையில் விற்க ஏற்பாடு பண்ண சொல்லிவிட்டாள்..

 

 

 

 அடுத்தடுத்து அவர்களின் ஹோட்டல் திறப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்..

 

 

 சமைக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து பெரிய அளவில் கட்டிடத்தை கட்டினார்கள்..

 

 

 சீதாவின் வங்கி கணக்கில் இருந்த பணம். ராமின் பணம் மற்றும் அவர்கள் வீடு வித்த பணம் என அனைத்தையும் அந்த ஹோட்டலுக்கு தான் போட்டார்கள்..

 

 

 

 கட்டிட வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க ஹோட்டல் நடத்துவதற்கு லைசன்ஸ் எடுத்து விட்டு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், மேசைகள் கதிரைகள் என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகவே வாங்கி சேர்த்துக் கொண்டார்கள்..

 

 

 இங்கு சென்னையில் விஐபி ரெக்கார்டிங் வேலை என பிசியாக இருந்தான்.. நேரம் கிடைக்கும் போது எல்லாம் மனைவியுடன் காதலோடு பேசி சிரித்து அவளை சந்தோஷமாக வைத்திருந்தான்..

 

 

 

 கண்மணி நல்ல மருமகளாக மாமியாருக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு தயாராக இருப்பாள்.. விஐபி அவளை அழைத்துக் கொண்டு அவளை பொட்டிகில் இறங்கிவிட்டு மீண்டும் வரும்போது அழைத்து வருவான்..

 

 

 இப்படி அவர்கள் நாட்கள் வசந்தமாக சென்றதால் மூன்று மாத காலம் போனதே தெரியவில்லை..

 

விஐபி பயம் ஒருபக்கம் இருந்தாலும் கண்மணியை கண்ணின் மணி போல் பார்த்துக்கொண்டான்..

 

 

 சீதாவின் பைனல் எக்ஸாமுக்கு அட்மிஷன் விஐபிக்கு கிடைத்ததும் அதை அழைப்பில் கூறினான்..

 

 

 அதைக் கேட்டதும் சீதா பிடிவாதமாக போக மாட்டேன் என்று கூறிவிட்டாள்..

 

 

ராம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தான் ஆனால் வேலைக்காகவில்லை..

 

 

 இறுதியாக ராம் கோபமாக பேசாமல் இருந்தான்.. அவன் பேசாமல் இருந்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளே வழிய வந்து பேசினாள்.. அதன் பின் ராம் பேரம் பேசி அவனே காரில் சீதாவை சென்னைக்கு அழைத்து சென்றான்..

 

 

 

 மீண்டும் அவர்கள் சென்னை பயணம் தொடர்ந்தது..

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்