Loading

எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்தும் முடியாமல் உடைந்து போய் அவள் முன்பே அழுதுவிட்டான்..

 

 

 

 ஊர் அறிந்த செலிபிரிட்டி. ஆறடி ஆண்மகன் என்றாலும் அவனுக்கும் வலி வேதனைகள் இருக்கும் தானே..

 

 

 மடை திறந்த வெள்ளமாக அனைத்தும் வெளியே வந்தது..

 

 

“ பிளீஸ் டா தங்கம்.. இந்த மாமாவுக்கா கொஞ்சம் சீசர் பண்ண சப்போர்ட் பண்ணுடா..” என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்..

 

 

 அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு கையை நீட்டினாள்..

 

 

“ என்னடா வேணும்..” என்றான்..

 

 

 தண்ணீர் ஏதும் கேட்கிறாளோ என்று பார்த்தான்..

 

 

“ சத்தியம் பண்ணுங்க மாமா..”

 

 

“ என்ன சத்தியம்.. அதெல்லாம் பண்ண மாட்டேன் போடி.. ”

 

 

 ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது..

 

“ சத்தியம் பண்ணாட்டி.. நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.. ” என்றாள். அதில் பேச வேண்டியதை பேசி முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் தெரிந்தது 

 

 

“ என்னடி இப்படி பாடா படுத்துற?.. சரி என்னன்னு சொல்லு..”

 

 

“ ஒருமுறை நான் தூங்கிட்டேன்னு நினைச்சு நீங்களும் அத்தையும் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்.. பிறக்கிற எல்லாருமே ஒரு நாள் மண்ணுக்குள்ள போவாங்க அது விதி..

 

ஆனா நான் அவங்க எல்லாருக்கும் முன்னாடி கூடிய சீக்கிரமே போயிடுவேன்னு விதி இருக்குன்னு நீங்க பேசிக்கிட்டதை கேட்டேன்..

 

 

 அடுத்த நாள் என்னோட ஜாதகத்தை எடுத்துட்டு நானே ஒரு ஐயர சந்திச்சு என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்துகொண்டேன்..

 

 

 அதுல என்னென்ன சொல்லணுமோ எல்லாத்தையும் அவர் சொல்லிட்டார்..

 

 

 நான் உங்க மேல வச்ச காதலா இல்ல நீங்க என் மேல வச்ச காதலா தெரியாது.. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுடுச்சு..

 

 

என் ஆயுள் குறைவுன்னு தெரிஞ்சே நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னா அப்போ உங்க காதல் எவ்வளவு புனிதமானதா இருக்கணும்.. 

 

 

 அந்த காதலுக்கு நான் மரியாதை செய்ய வேண்டாமா?.. அதுதான் நம்ம காதலுக்கு சாட்ச்சியா இந்த பாப்பாவை பெத்து கொடுக்கலாம் என்று முடிவு செஞ்சு எல்லாத்தையும் தாங்கி கிட்டேன்..

 

 

 

 

 அப்புறம் முக்கியமான விஷயம் அம்மாக்கு இந்த விஷயம் இதுவரைக்கும் தெரியாது. அது தெரியாமலே போகட்டும்..

 

 அவங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்கன்னு உங்களை வெறுத்திடுவாங்க..

 

 

 நான் போனதுக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்க..

 

 

 நீங்கதான் அவங்களை பாத்துக்கணும்.. இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க உங்க உதவி எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தனியாகவே வாழ முடிவெடுத்துடுவாங்க..

 

 

 அடுத்து அவங்ககிட்ட உண்மையை மறைத்து நீங்க என்னை வேணும்னு கல்யாணம் பண்ணி இப்படி பண்ணிட்டதா தான் நினைப்பாங்க..

 

 

 உங்க செயலில் இருக்கும் காதல் அவங்க கண்ணுக்கு தெரியாது.. மக உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டாங்களேன்னு கோவம் தான் அவங்களுக்கு வரும்..

 

 உங்களையும் அத்தையையும் தவிர மற்ற எல்லாருக்குமே நான் சிக்கலான பிரசவத்துல இறந்து விட்டதாகவே இருக்கட்டும்.. 

 

 

 

 அத்தை கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க தெரியாதது தெரியாததாவே இருக்கட்டும்..

 

 

 சரி வெளியே இருக்க எல்லாரையும் கூப்பிடுங்க பேசணும்..” என்று தாயைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு கணவனை எச்சரித்தாள்.. 

 

 

 

 விஐபிக்கு கண்மணி மீது மிகுந்த கோபம் இருந்தது.. அவள் மட்டும் உடல்நிலை சரியாகி இருந்தால் இந்நேரம் அவள் அப்படி பேசியதற்கு அவனே அவளை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான்..

 

 

 தற்போது கையறு நிலையில் நின்றான்..

 

 

 அவள் கூறியது போல் வெளியே நின்ற மற்றவர்களை உள்ளே அழைத்து வந்தான்..

 

 

 ஒரு கையில் தாயையும் மற்றொரு கையில் கணவனையும் பிடித்திருந்தாள்..

 

 

 “ அத்தை உங்களை உங்க மகன் நல்லா பார்த்துபார்.. என் கவலை எல்லாம் என் மாமாவை நல்லபடியா பார்த்துக்கணும்..

 

 

 நான் இல்லாத உலகத்துல அவர் வாழ பழகிக்கணும்..

 

 

 அதே மாதிரி என் அம்மாவையும் நல்லா பாத்துக்கோங்க..

 

 

 நான் இந்த உலகத்தை விட்டு போனதுக்கு அப்புறம் எங்க காதல் சாட்ச்சியா பொறந்த எங்க குழந்தையை யாரும் என்னை காரணம் காட்டி வெறுக்க கூடாது..

 

 

 கூடிய சீக்கிரம்.. என் பிரிவில் இருந்து வெளியே வந்து என் மாமாவுக்கு என் பாப்பாக்கும் அடுத்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும்..

 

 

 இந்த உடல் மட்டும்தான் உங்களையெல்லாம் விட்டுப் போகுது இந்த உயிர் எப்பவுமே உங்களை சுத்திக்கிட்டே இருக்கும்..

 

 

 நான் நிம்மதியா ஆத்மா சாந்தி அடையிறதும் இந்த உலகத்துல சுத்திட்டு இருக்கறதும் உங்க கையில தான் இருக்கு..

 

 

 அவருக்கு ஒரு நல்ல மனைவியும் என் பாப்பாக்கு ஒரு நல்ல தாயையும் என்னைக்கு தேடி கொடுத்து அவங்க வாழ்றதை சந்தோஷமா பார்க்கிறேனோ அன்னைக்கு நான் இந்த உலகத்தை விட்டு போயிடுவேன்..

 

 

 

 

 

இவ இந்த உலகத்தை விட்டு போயிட்டா இவளுக்கு என்ன தெரியும்னு நெனச்சு மாமா வேற கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னாலும் யாரும் அத கேட்டுட்டு இருக்காம கட்டாயம் பண்ணி வைக்கணும்..

 

 

 இது இந்த கண்மணி மேல சத்தியம்..

 

 

இது என் கடைசி ஆசை.. நான் போயிட்டு வருவேன் மாமா.. உங்க மறு காதலுக்கு பரிசாக உங்க பாப்பாவா பிறந்து வருவேன் ” என்று கூறிவிட்டு அனைவரையும் பார்த்து காய்ந்து போன இதழை விரித்து கண்ணில் கண்ணீர் வழிய சிரித்தாள் பாவை..

 

 

 அவளை சுற்றி உள்ள அனைவர் கண்ணிலும் இரத்த கண்ணீர்..

 

 

 பிரசவ வாட்டிற்கு கண்மணியை அழைத்து சென்ற சிறிது நேரத்தில் குழந்தை கத்தும் சத்தம் கேட்டது..

 

சீசர் மூலம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள் பேதை..

 

 

 

 குழந்தை பிறந்த சந்தோஷத்தை கூட அங்கு யாரும் அனுபவிக்கவில்லை..

 

 

 மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் பிபி மற்றும் சுகர் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை..

 

அதற்கு அவள் உடல் ஒத்துழைக்க வில்லை என்பதே சரியானது 

 

 

 

 இறுதியில் அவள் ஆயுசு குறையும் என்கிற பலனே உண்மையாகிவிட்டது.. கணவனை மட்டும் அழைத்து வரும்படி கூறினாள்.. அவன் வந்ததும் அவன் கையில் குழந்தையை குடுக்கும் படி கூறினாள்..

 

 ஒவ்வொரு வார்த்தையும் அவள் பேசுவதற்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள்..

 

அதை கேட்டு விஐபி கையில் குழந்தையை வாங்கிகொண்டு மனைவி அருகே வந்தான்..

 

 

கணவன் கையை பிடித்துக் கொண்டே “ மா.. மா மா இது நம்ம பாப்பா.. நல்லா அன்பா, பாசமா,செல்லமா பாப்பாவை பார்த்துக்கோங்க.. அவளுக்கு அம்மா இல்லாத குறை தெரியாம இ இருக்க நீங்க கல்யாணம் பண்ணியே ஆகணும்.. இது என் கடைசி ஆசை.. மாமா எனக்காக ஒரு பாட்டு.. உங்க குரல் கேட்டு எப்படி என் வாழ்கை உங்களோடு அழகாக ஆரம்பித்ததோ அப்படியே அஸ்தமிக்கட்டும்..” என்று கேட்டாள்..

 

 

இருவர் கண்ணிலும் கண்ணீர்..

 

 

அவள் விரும்பிய அவன் குரலையும் அவளோடு முடிவுக்கு கொண்டு வர நினைத்தானோ என்னவோ அவள் ஆசைப்படி பாடினான்..

 

“ நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை.. கண்மணியே..

 

 உன் முகம் பார்த்து இனி என் விடியல் எங்கே..

 

உன் காதல் என்றாலும் உன் வார்த்தை பொல்லாதது..

 

 

 அவ்வார்த்தை போல் என்னை கூர்வாளும் கொல்லது..

 

(ஓஹோ ஓஹோ )

 

[ நீ இல்லை என்றால் ]

 

 அன்பே அன்பே உன் ஆணை என்று இதை ஏற்றால் என் வாழ்வில் மரணம் மிஞ்சும்..

 

 

 என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்..

 

 என் உள்ளம் உன் காதல் மட்டும் ஏற்கும்..”

 

 அவன் பாடும் பொழுது அவள் கை அவள் உயிர் பிரிந்ததை எடுத்துக்காட்டுவதற்காக அவன் கையில் இருந்து தொய்ந்து விழுந்தது..

 

 

முதலிரவு அன்று அவன் காதலாக பாடும் பொழுது அவனுக்கு போட்டியாக அவள் எசப்பாட்டு பாடியது தான் நினைவு வந்து இன்னும் அவனை வாட்டியது

 

 

 அவள் ஆசைப்படியே கணவனின் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே அவள் உயிர் உடல் கூட்டை விட்டு பிரிந்தது..

 

 

 

 கையில் இருந்த குழந்தையையும் கவனிக்காமல் விஐபி அந்த இடத்திலேயே ஓய்ந்து அமர்ந்து விட்டான்..

 

 

 வேகமாக அங்கே வந்த தாதி ஒருவர் குழந்தையை வாங்கி பரிசோதித்து விட்டு தாய் உயிர் பிரிந்ததால் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததோ என்னவோ இப்படி எட்டு மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் நிறைகுறைவாகவும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாட்டோடும் பிறப்பார்கள்…

 

 

 ஆனால் கண்மணியின் குழந்தை குறைவான நிறையோடு இருந்தாலும் ஆரோக்கியத்தோடு பிறந்தது..

 

 

தாதி வெளியே போய் மீராவிடம் குழந்தையை குடுத்துவிட்டு கண்மணியின் மரணத்தை கூறினாள்..

 

 

 அதைக் கேட்டதும் ராம் வேகமாக ஓடிவந்து விஐபி தூக்கி நிறுத்தினான்..

 

 

 மீராவும் விஐபியும் அவர்களுக்கு இப்படி ஒருநாள் வரும் என்று தெரிந்து கொண்டார்கள் தான்.. ஆனால் இவ்வளவு வேகமாக அந்த நாள் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை..

 

 

 மருத்துவமனையில் அனைத்தையும் முடித்துக் கொண்டு கண்மணியின் உடலை பெற்றுக் கொண்டு விஐபியின் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு சென்றது..

 

 

 சீதா தான் குழந்தையை தன் கையில் வாங்கி பாக்கெட் பால் கலந்து பருக்கினாள்..

 

 

 பிறந்த பச்சை குழந்தை அந்த பாலை குடிக்க முடியாமல் அதை அப்படியே துப்பியது..

 

 

 சீதாவை தவிர யாரும் குழந்தையின் பக்கமும் திரும்பி பார்க்கவில்லை..

 

 

 ஊரில் இருந்து கணேசன், யமுனா, துர்கா, அவள் கணவன், பாட்டி,தாத்தா என அனைவரும் விமானம் மூலம் வந்து சேர்ந்து விட்டார்கள்..

 

 

 கண்மணியின் தாய் தான் மகளின் இழப்பை தாங்க முடியாமல் மிகவும் வருந்தினார்..

 

 

 விஐபி ஹாஸ்பிட்டலில் வைத்து கொஞ்சம் அழுதான்.. அதன் பின் அவன் மனம் அப்படியே கல்லாக இறுகி விட்டது…

 

 

 கண்மணிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்து கண்மணி உடலை தகனம் செய்தார்கள்..

 

 

 அந்த வீட்டில் தன் மனைவியாக மருமகளாக உயிரும் உடலுமாக வாழ்ந்த ஒருத்தி அந்த நேரத்தோடு இனி அங்கு இல்லை..

 

 

வாழ்நாளில் இனி அவளை யாரும் மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாள்..

 

 

 அத்தோடு கண்மணியின் அத்தியாயம் முடிந்து விட்டது..

 

 

கண்மணியின் மறைவில் சீதாவும் ராமும் மிகவும் மனதளவில் ஒடிந்து விட்டார்கள்..

 

 

 

 

 சீதாவின் ஆசை அத்தானின் இந்த நிலையை பார்த்து அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்..

 

 

 இந்த துன்பத்தில் சீதாவின் வயிற்றில் உருவாகிய கருவை பற்றி அவளுக்கும் தெரியவில்லை.. யாருக்கும் தெரியவில்லை..

 

 

 தாய் தன் வரவை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் கரு அதன் வரவை தெரியப்படுத்தியது..

 

சீதாவிற்கும் வாமிட். சோர்வு மயக்கம் என அவதிப்பட்டாள்..

 

ராம்தான் அவளை பார்த்துக்கொண்டான்..

 

ராம் அவன் குழந்தையின் வரவால் ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டான்..

 

ஆனாலும் துக்க வீட்டில் அவன் சந்தோசம் நீடிக்க வில்லை..

 

 

கணேசன், யமுனா,துர்கா வீட்டினார் ஊருக்கு சென்று விட்டார்கள்..

 

அங்கே ஹோட்டல் முன்புபோல் ராம் நண்பன் மற்றும் துர்கா கணவன் பார்த்துக்கொண்டார்கள்.. 

 

அதனால் சீதா ராம் ஜோடி மீரா,விஐபி,குழந்தை, கண்மணியின் தாய் நால்வருக்கும் ஆறுதலாக சென்னையில் இருந்தார்கள்..

 

 

 

சீதாவும் மாசக்கையில் வாடுவதால் யசோதா மற்றும் மீரா தான் தற்போது குழந்தையை பார்த்துக்கொண்டார்கள்..

 

குழந்தையை இன்னும் அதன் பின் விஐபி தூக்கவில்லை..

 

 

 

கண்மணியின் மறைவின் பின் அவர்கள் வாழ்ந்த அறை மற்றும் அவள் உடைதான் அவனுக்கு மூச்சு விடுவதற்கு வழிகாட்டியது..

 

 

 

விஐ பி காதல் மனைவியின் மறைவோடு பாடல் உலகத்திற்கே ஒரு முழுக்கை போட்டுவிட்டு விஐபியே இனி இல்லை என்று முடிவை எடுத்தான் இந்திர பிரகாஷ்..

 

 

 அதுவே மீடியா உலகத்திற்கு தீனியாக அமைந்ததால் தொடர்ந்து பேசப்பட்டது.. 

 

 

 இனி இந்திர பிரகாஷின் வேட்டை தொடரும்..

 

 

************* முற்றும் **********

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்