Loading

தளர்ந்த நடையுடன் இறங்கி வந்த மகனை கண்ட சுந்தரம் நடந்ததை ஓரளவு ஊகித்துக்கொண்டார். வள்ளியோ விறுவிறுவென அவன் அருகில் சென்றவள் “தம்பி! நீங்க நம்ம ஐயாவோட பொண்ண பத்தி சொன்னதெல்லாம் வச்சு அவங்க ரொம்ப பதுமையா இருப்பாங்கன்னு பாத்தா தடாலடியால இருக்காங்க.. அம்மாடி… அவங்க பேசுறத பார்த்து எனக்கே பக்குனு இருந்திச்சு தெரியுமா…” என நெஞ்சைப்பிடித்துக்கொண்டு கூற

சுந்தரம் தான் “விடு வள்ளி… ஐயாவோட பொண்ணு வெளிநாட்டில படிச்சவங்க.. கொஞ்சம் அப்டி இப்டி தான் பேசுவாங்க…அத போய் பெரிய விசயமா பேசிக்கிட்டு.. கார்த்தி நீ வா…” என்று அவனை கையோடு இழுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவர் அவனது முகவாட்டத்தை  கண்டு “என்னடா..” என பரிவாக கேட்க

தந்தையிடம் மறைக்கவிரும்பாது நடந்தவற்றை கூறியவன் “பாப்பா ஏன்பா இப்டி பண்றா.. இது அவளோட குணமே இல்லையே.. அவளுக்கு எல்லாரையும் பிடிக்கும்பா… எல்லாரும் வேணும்னு நினைப்பா… அ..அவளுக்கு ஒழுங்கா கோபப்படக்கூட தெரியாதே.. ஆனா.. இப்..இப்ப ஏன்..” என்று பேசக்கூட முடியாது குரல் கரகரக்க கேட்க..

அவனது வேதனையை உணர்ந்த சுந்தரமோ பொறுமையாக “கார்த்தி… நீ இன்னும் பத்து வயசுல பார்த்த சுருதிய பத்தி பேசிட்டிருக்க… இப்ப அவங்களுக்கு இருபத்திமூனு வயசாகுது… அவங்க அப்ப இருந்தமாதிரியே இப்பவும் இருக்கனும்னு அவசியம் இல்லையேபா.. வளர வளர எல்லாரும் மாறத்தான் செய்வாங்க.. வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்.. நீ அத நினைச்சு வருத்தப்படாத….”

“இல்லப்பா.. அவ பேசினத என்னால தாங்கிக்க முடியல..” அவன் கண்களும் கலங்கத்தொடங்க

“கார்த்தி… நான் சொல்றத கேளு… அவங்க எத்தனையோ வருசம் கழிச்சு இப்ப தான் இந்தியா வந்திருக்காங்க… நம்ம ஐயா முகத்தில இப்ப தான் உண்மையான சந்தோசமே தெரியுது… எந்தவிதத்திலயும் நாம அவங்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடாது….

“என்னப்பா பேசுறீங்க.. நான் ஏன்பா தொந்தரவா இருக்கபோறன்…”

“இல்லடா.. சுருதிமா.. உன்ன அடிச்சது திட்டினது ஐயாக்கு தெரிஞ்சா அவரு ரொம்ப வருத்தப்படுவாரு.. கண்டிப்பா இத பத்தி அவங்ககிட்ட கேட்பாரு.. வீணா அப்பாக்கும் பொண்ணுக்கும் நடுவில  மனஸ்தாபம் தான் வரும்.. இதெல்லாம் தேவையா சொல்லு..”

“அப்பா நான் இதெல்லாம் போய் அங்கிள் கிட்ட சொல்லுவனா.. இப்ப என்ன என் பாப்பா தான என்ன திட்டினா… அவளுக்கு என்ன திட்ட உரிமையில்லயா என்ன…” என்று சட்டென்று கண்களைத்துடைத்து தனது கவலையை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் கூறியவனை வருத்தத்துடன் ஏறிட்டவர் அவன் தலையை கோதிவிட்டு “நீ எதையும் யோசிக்காம வீட்டுக்கு போ.. “என்று கூறிவிட்டு நகர கார்த்திக்கும் அவுட்ஹவுஸ் நோக்கிச்சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவன் அங்கிருந்த சிறிய சோபாவில் அவன் அவளுக்காக வாங்கிய டெடிபியரை கண்டவன் இது வள்ளியின் வேலை தான் என்பதை புரிந்து சிறு மகிழ்ச்சியுடன் அந்த பொம்மையை ஸ்பரிசித்து பார்த்தான். 

அவன் மனதில் இருந்ததெல்லாம் இனி அவளை எந்த வகையிலும் கோபப்படுத்தக்கூடாது… அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும் என்பது தான்.. அதோடு ஒரு வாரம் இங்கிருந்து நாராயணனை நன்றாக பார்த்துக்கொண்டு திரும்பவும் பாண்டிச்சேரிக்கு சென்று விட முடிவு செய்தான். 

கார்த்திக் இங்கிருந்த காலங்களில் அவனுக்கு மூன்று வேளையும் அந்த வீட்டில் தான் சாப்பாடு.. அதுவும் நாராயணனுடன் ஒன்றாக அமர்ந்து தான் உணவருந்துவான். அந்த வீட்டில் அவனை ட்ரைவரின் மகனாக யாரும் பார்ப்பதில்லை. அந்த வீட்டுப் பிள்ளையாகத்தான் அனைவரும் அவனை நடத்தினர். எல்லோருக்கும் அவனென்றால் ரொம்ப இஷ்டம்…. வேலை கிடைத்து அவன் பாண்டிச்சேரி சென்றிருந்தாலும் லீவுக்கு வந்தால் அனைவரின் அன்பிலும் கவனிப்பிலும் ஐக்கியமாகிவிடுவான்..

இன்றோ அவனுக்கு அந்த வீட்டுக்கு செல்லவே தயக்கமாய் இருக்க அவுட்ஹவுசிலேயே இருந்து கொண்டான். அவனது மனநிலை புரிந்து சுந்தரமே அவனுக்கு மதியமும் இரவும் உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு தனது முதலாளியை பார்த்துக்கொள்ள அந்த வீட்டில் தங்கிக்கொண்டார்.

மறுநாள் விடிந்ததும் நாராயணனை பார்க்க மனதை திடப்படுத்திக்கொண்டுஅந்த வீட்டிற்கு வந்தவன் அவர் அறைக்குச் செல்ல அப்போது தான் குளியலறையில் இருந்து வெளியில் வந்தவர் அவனை கண்டதும் “வாப்பா.. என்ன நேத்தெல்லாம் ஆளையே காணோம்….” என வினவ அவன் தான் “இல்ல அங்கிள் அது வந்து.. நான் வரும் போது நீங்க தூங்கிட்டு இருந்தீங்க” என்று கூறி சமாளிக்க

“ஓ.. அப்டியா..” என்றவர் முகத்தை துடைத்துக்கொண்டு “சரி வாப்பா சாப்பிடலாம்..” என்று அழைக்க

அவனோ “அங்கிள் ஸ்ரெயின் பண்ணிக்காதீங்க… நீங்க இருங்க நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்திட்டு வாறன்..” என்று கூற

அவரோ “டேய் என்ன பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்ணாத.. நான் சரியாயிட்டன்.. என்னால நாள் முழுதும் ரூமுக்குள்ளயே இருக்க முடியல… அட்லீஸ்ட் சாப்பிடயாச்சும் வெளிய வாறன்.. நீ வா..” என்று கூற அவனும் சரியென்று அவரை அழைத்துக்கொண்டு சென்றான்.

இருவரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த சமயம் கார்த்திக்குக்கு போன் ஹால் வர எழுந்து போன் பேசச் சென்றான்.

அந்நேரம் மாடிப்படிகளில் இறங்கிவந்த சுருதி “ஹாய் டாட் குட் மார்னிங்..” என்று உற்சாகமாக கூற அவரும் மலர்ந்த முகத்துடன் “குட் மார்னிங் மா.. வா.. வந்து சாப்பிடு” என்று அழைக்க,

அவளும் “ஓகே டாட்” என்றவள் வந்து இருக்கையில் அமர, அங்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த வள்ளி அவளுக்கும் தட்டு வைத்து இரண்டு சப்பாத்திகளை வைத்து தேங்காய் சட்னியும் வைக்க,

அந்நேரம் போன் பேசிவிட்டு வந்த கார்த்திக் சுருதியை கவனிக்காது நேராக கதிரையில் வந்து அமர்ந்து சப்பாத்தியை பிய்த்து வாயில் வைத்தவன் சடார் என்ற கதிரையின் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க அப்போது தான் கண்டான் கோபவிழிகளுடன் தன்முன்னால் நின்று கொண்டிருந்த சுருதியை..

அவளைப்பார்த்தவனுக்கு ஐயோ என்று தான் இருக்க நாராயணனோ அவளது செய்கையில் “என்னாச்சுடா… ஏன் எந்திரிச்சிட்ட” என்று புரியாமல் கேட்க

“டாட்.. ஐ ஆம் சாரி.. என்னால கண்டவங்க கூடலாம் சரிசமமா உக்கார்ந்து சாப்பிட முடியாது.. நான் ரூமுக்கு போறன்..” என்று கூறி நகரமுற்பட அவளது வார்த்தையில் காயம்பட்டவன் தன்னால் எதற்கு அவள் சாப்பிடாமல் செல்ல வேண்டும் என்று நினைத்து எழுந்து கொள்ள முனைய அவன் கைபிடித்து அமர்த்திய நாராயணன் கோபமாக “சுருதி.. என்ன பேச்சு இதெல்லாம்… சாப்பிடுறவங்கல இப்டி நீ இன்சல்ட் பண்றது சரியா..” என்று கண்டிக்க

அவளோ “அதெல்லாம் எனக்கு தெரியாது டாட்… வேலைக்காரங்களையெல்லாம் எதுக்கு டைனிங் டேபிள் ல அலவ் பண்றீங்க… நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் வேணாமா..” என கோபமாகவும் அதேசமயம் அவனைப்பார்த்து முகம் சுழித்தபடியும் தந்தையிடம் கேட்க மகளது பேச்சில் நாராயணனுக்கு உண்மையில் கோபம் வந்துவிட்டது.

மகளை கடுமையுடன் பார்த்தவர் “சுருதி பார்த்துப்பேசு… நான் யாரையும் முதலாளி தொழிலாளினு பிரிச்சுப்பார்த்தது கிடையாது. அதோட கார்த்திக் ஒன்னும் வேலக்காரன் கிடையாது… அவன நீ இந்தமாரிலாம் பேசாத… உக்கார்ந்து சாப்பிடு..’ என கூற அவளுக்கோ அங்கு அமர்ந்து சாப்பிடுவதில்  துளியும் இஷ்டமில்லை. அவள் அமராது இருக்க கார்த்திக் தான் தனது தந்தை கூறியது போல் தந்தைக்கும் மகளுக்கும் நடுவில் தன்னால் மனஸ்தாபம் வந்துவிட்டது என்று கலங்கினான்.

நாராயணன் கோபத்தை குறைத்துக்கொண்டு “உன்கூட ஒன்னா உக்கார்ந்து சாப்பிட்டு எத்தன வருசம் ஆச்சு… இப்பயாச்சும் அந்த சந்தோசத்த எனக்கு குடுக்க மாட்டியாமா..” என ஆற்றாமையுடன் கேட்க, அவரின் சோர்ந்த குரலில் வேறு வழியற்று கார்த்திக்கை முறைத்த வண்ணமே கதிரையில் அமர்ந்தவள் அமைதியாக உண்ணத்தொடங்கினாள்.

கார்த்திக்கு தான் உணவு தொண்டையை விட்டு இறங்க மறுக்க கடினப்பட்டு விழுங்கிக்கொண்டான்.

அந்த இடத்தை மெளனமே ஆட்சிசெய்ய நாராயணன் தான் சுருதியிடம் “அம்மாடி.. உனக்கு வீட்டிலேயே இருக்க போரடிக்கும்ல.. நான் வேணும்னா சுந்தரத்திட்ட சொல்லி உனக்கு சென்னைய சுத்திக்காட்ட சொல்லவா…” என கேட்க

அவளோ சாப்பிட்டுக்கொண்டே “எதுக்கு டாட் நான் தான் வன் வீக்ல திரும்பவும் அமெரிக்கா போகப்போறனே.. அப்றம் எதுக்கு இங்க சுத்தி பார்க்கனும்.. ஆட்சுவலி நான் ரிட்டேர்ன் டிக்கெட்டும் போட்டுத்தான் வந்தன்… இன்னும் ப்வைப் டெய்ஸ்ல கிளம்பிருவன்…” என்று அசெல்ட்டாக அவர்கள் இருவரின் இதயத்திலும் வெடிகுண்டை போட்டு விட்டு கை கழுவி எழுந்து சென்று விட நாராயணனும் கார்த்திக்கும் தான் அவளது பதிலில் அதிர்ச்சியாகி நின்றிருந்தனர்.

தன் மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்துவிட்டாள்.. இனி எப்போதும் எங்களுடன் தான் இருப்பாள்  என்று மகிழ்ச்சியில் இருந்தவருக்கு வந்த அடுத்த நாளே அந்த மகிழ்ச்சியை நிலைக்காமல் செய்து விட்டாள். அவளது பதிலில் இருவரும் திகைத்து நிற்க கார்த்திக் தான் அவள் கூறிய செய்தியில் கலங்கிப்போனான்.

அவள் அவனிடம் உதாசீனமாக நடந்து கொண்டாலும் பலவருட பாசம் அவள் மேல் துளிகூட கோபத்தை வரவைக்கவில்லை. தன்னை புறக்கணித்தாலும் இனி இந்த வீட்டிலேயே எல்லோருடனும் இருப்பாள் என்ற சந்தோசத்தில் இருந்தவனுக்கு அவளது கூறிச்சென்றது வேதனையை தர என்ன ஆனாலும் அவளை இங்கிருந்து செல்ல விடக்கூடாது என்று முடிவெடுத்தான். ஆனால் எப்படி தடுப்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

அவளிடம் சென்று பேசவும் தயக்கமாய் இருந்தது.. ஆனால் அதற்காக நடப்பது நடக்கட்டும் என்று அவளை விட்டுவிடவும் முடியாது. அவளது வருகைக்காக எத்தனை வருடங்கள்  காத்திருந்தான். இப்போது அவ்வளவு சுலபத்தில் அவளை விட்டுவிடுவானா என்ன?

மாலை நேரம் தோட்டத்திற்கு வந்தவன் அங்கு வள்ளி குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு பூக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை கண்டு அவரை திட்டிக்கொண்டே குழந்தையை வாங்கியவன் அங்கிருந்த பென்ஜில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தான். 

அப்போது “வள்ளி” என்ற சுருதியின் அழைப்பில் திரும்பியவள் சுருதி போர்டிகோவில் நிற்பதை கண்டு பைப்பை போட்டுவிட்டு அவள் அருகில் ஓடியவள் “என்னம்மா ஏதாச்சும் வேணுமா…” என கேட்க

அவளோ கார்த்திக் வைத்திருந்த குழந்தையை பார்த்து “அது உன் பேபியா..” என கேட்க

“ஆமாம்மா.. என் புள்ள தான்.. பேரு லக்ஸ்மி..” என்று மலர்ந்து கூற 

ஓ! என்றவள் சில விநாடிகள் குழந்தையையும் அவனையும் ஊடுருவிவிட்டு வள்ளியிடம் திரும்பி “அவன் சரியில்ல.. உன் பேபிய அவன் கூட பழக விடாத…” என்று உத்தரவு போல் கூற வள்ளி தான் அவள் கூறியதில் திருதிருவென விழித்து ஒரு முறை கார்த்திக்கை பார்த்துக்கொண்டாள். அவனும் சுருதியை பார்த்துக்கொண்டிருந்தாலும் தூரத்தில் இருந்ததால் அவள் கூறியது அவனுக்கு கேட்கவில்லை. வள்ளிக்கோ  கார்த்திக் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நேற்று வந்த பொண்ணு தம்பிய பத்தி இப்டி தப்பா சொல்லுதே. இது தெரிஞ்சா கார்த்திக் தம்பி மனசு என்ன கஷ்டப்படும்..” என்று அவனுக்காக வருந்தியவள் எதுவும் பேசாது கையை பிசைந்து கொண்டு நின்றாள். 

அவளது மெளனத்தை கண்டு தோளை குலுக்கியவள்  “நான் சொல்றத சொல்லிட்டன்.. இனி உன் இஷ்டம்.. இப்ப உன்ன எதுக்கு கூப்பிட்டன்னா, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வாறன்.. டாடி கிட்ட சொல்லிடு..” என்றவள் அங்கு நின்றுகொண்டிருந்த காரில் ஏறப்போக, வேகமாக அவளை மறித்த வள்ளி “அம்மா நீங்க ஏன் தனியா போகனும். இருங்க நான் யாராவது ட்ரைவர வரச்சொல்றன்.” என்று கூற

அவளோ “நான் என்ன குழந்தையா.. எனக்கு தனியா போக தெரியாதா… எனக்கு செல்ப் ட்ரைவிங் தான் பிடிக்கும்.. நான் கிளம்புறன்” என்று கூற

வள்ளியோ “இல்லம்மா.. நீங்க கார் ஓட்டுவீங்க தான்.. ஆனா இங்கத்தய ரோடு உங்களுக்கு பழக்கம் இல்லல்ல… இப்ப நான் உங்கள தனியா போக விட்டா ஐயா என் மேல தான் கோபப்படுவாரு பிளீஸ்மா..” என்று தயங்கி தயங்கி கூற

அவளும் யோசித்துவிட்டு “சரி.. ட்ரைவர வரச்சொல்லு..” என்று கூறி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து போன் பார்க்க, வள்ளியின் நேரம் அந்நேரம் அந்த வீட்டில் ஒரு ட்ரைவர் கூட இல்லை. எல்லோரும் மதியம் உணவுண்ண வீட்டிற்கு சென்றவர்கள் இன்னும் வராமல் இருக்க சுந்தரமும் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.. வள்ளியோ “போக இருந்தவங்கள வலியப்போய் நானே தடுத்து உக்காரவச்சிட்டனே… இப்போ ட்ரைவருக்கு நான் எங்க போவேன்..” என்று பயந்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற விறுவிறுவென கார்த்திக்கிடம் சென்றவள் “தம்பி நம்ம சின்னம்மா வெளிய போக கிளம்பினாங்க.. நான் தான் தெரியாத இடம் தனிய போகாதீங்க ட்ரைவர கூப்பிடுறன்னு சொல்லி உக்கார வச்சன்.. இப்ப பார்த்த ட்ரைவர்ஸ் ஒருத்தர் கூட இந்த நேரம் பார்த்து வீட்டில இல்ல… இத சொன்னா அவங்க என்ன உண்டில்லன்னு ஆக்கிருவாங்க.. பிளீஸ் தம்பி அவங்கள நீங்க கூட்டிட்டு போறீங்களா….” என கிட்டத்தட்ட கெஞ்சுதலாக கேட்க

அவன் மாட்டேன் என்றா சொல்வான்.. “அக்கா பாப்பா எதுக்கு தனியா போகனும்.. அதுவும் பழக்கமில்லாத ஊர்ல இந்தாங்க லக்ஸ்மிய பிடியுங்க.. நான் அவள என் கார்ல கூட்டிட்டு போறன்…” என்றவன் குழந்தையை வள்ளியிடம் கொடுத்து விட்டு சுருதியிடம் சென்றவன் “பாப்..” என்று ஆரம்பித்து நாக்கை கடித்துக்கொண்டவன் குரலை செருமி “மேடம்” என்றழைக்க அவளோ நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்க்க “நீங்க எங்கயோ வெளிய போகனும்னு சொன்னீங்கன்னு வள்ளி அக்கா சொன்னா… வாங்க நான் ட்ராப் பண்றன்..” என்று கூற அவளோ அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வள்ளியை பார்த்தாள்.

வள்ளி தான் எச்சிலை விழுங்கிக்கொண்டு “அதுவந்தும்மா ட்ரைவர் ஒருத்தரையும் காணோம் அதான்.. தம்பி உங்கள பத்தரமா கூட்டிட்டு போவாரு…”  என்றவள் அவள் மறுத்து விடுவாளோ என பயத்தோடு பார்க்க 

சுருதியோ “பக்கத்தில ஏதாச்சும் மாலுக்கு வண்டிய விடு..” என்று மட்டும் கூறியவள் ஊஞ்சலில் இருந்து எழுந்து கொள்ள, கார்த்திக் போர்ட்டிகோவின் ஓரமாக பார்க் பண்ணியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நிறுத்த அவளோ பின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் அவனும் காரை கிளப்பினான்.

வழி நெடுகிலும் அமைதியே ஆட்சி செய்ய கார்த்திக் அவளிடம் அமெரிக்கா செல்வதை பற்றி பேசலாம் என்றால் அவள் தான் இயர் போனை காதில் மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டு வந்தாளே.. இதில் எங்கிருந்து பேச என நொந்து கொண்டவன் நேராக ஒரு சாப்பிங் காம்ப்ளக்சில் வண்டியை நிறுத்தினான்.

அவன் நிறுத்தியதும் சுருதி காரிலிருந்து இறங்க அவனும் இறங்கி அவள் அருகில் வந்தான். அவனை பார்த்தவள் “நீ எதுக்கு வாற..” என கேட்க

“இல்ல துணைக்கு…”

“ஹேய்.. நான் ஒன்னும் பாப்பா கிடையாது புரியுதா..” என சிடுசிடுக்க அவனோ நீ எப்பவுமே என் பாப்பா தான்..” என நினைத்துக்கொண்டு வெளியில்

“இல்ல மேடம்… இந்த இடம் உங்களுக்கு புதுசு..  ஆதான்”

“சோ வாட்.. எனக்கு என்ன பார்த்துக்க தெரியும்.. குறுக்க பேசாம நான் வரும் வரைக்கும் காரிலயே வெயிட் பண்ணு..” என்று அழுத்தமாகவும் அதிகாரமாகவும் கூறியவள் முன்னே நடக்க அவனுக்கோ சிறுவயதில் இருந்து அவளுக்கு துணையாக இருந்தவன் இப்போது அவளை தனியாக விட மனம் வராமல் அவள் திட்டினாலும் வாங்கிக்கொள்ளவோம் என்று மனதை தைரியப்படுத்திக்கொண்டு அவள் பின்னேயே செல்ல காலடி ஓசை கேட்டு திரும்பி பார்த்தவள் அவன் தன் பின்னாலேயே வருவதை கண்டு “இடியட் உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா… நாய் மாதிரி என் பின்னாடியே வந்திட்டிருக்க..” என்று சிறிதும் நாகரிகம் இல்லாது அவனை திட்ட, அவனும் என்னதான் மனதை திடமாக வைத்திருக்க முயற்சி செய்தாலும் அவள் உதிர்க்கும் வார்த்தைகள் வேதனையையே பரிசாகத் தந்தது.

அவனோ “இல்ல மேடம்.. எனக்கும் கொஞ்ச திங்ஸ் வாங்க வேண்டி இருக்கு… அதான் வாறன்…” என்று சமாளிக்க அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டவள் அந்த காம்ப்ளக்ஸுக்குள் நுழைந்து கொண்டாள். 

அவன் அவ்வாறு கூறினாலும் அங்கு அவள் சென்ற இடமெல்லாம் அவனும் பின்னாலேயே வர ஒரு கட்டத்தில் கடுப்பாகியவள் உனக்கு இருக்கு என்று மனதில் கருவிக்கொண்டு நகர கார்த்திக்கும் அவள் பின்னாலேயே சென்றான்.

சட்டென்று ஒரு இடத்தில் நின்றவள் நேராக அவனிடம் வந்து “எதுக்கு என் பின்னாடியே வாற..” என அமைதியாக கேட்க

“இல்ல மேடம்… அதான் சொன்னனே நான் எனக்கு தான் திங்ஸ் வாங்க வந்தன்..

“ஓ.. அப்டியா இந்த இடத்தில சார் வாங்க வேண்டிய திங்ஸ் என்ன இருக்கு…” என்று புருவத்தை உயர்த்தி அவள் கேட்க..

அவனோ “அது வந்து..” என்று அப்போது தான் அந்த இடத்தை நன்றாக பார்க்க அதுவோ பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் கடை… ஐயையோ போச்சுடா என்று அவளிடம் என்ன கூறுவது என்று தெரியாது பேய் முழி முழிக்க அங்கு இருந்த பெண்களும் அவனை ஒரு மாதிரியாக பார்க்க 

சுருதியோ விடாது “சொல்லு இங்க என்ன வாங்க வந்த..” என்று மிரட்டலாக கேட்க “இல்ல.. நான் ..அது..” என்று அவனோ பேச முடியாது திணற

அவளும் விடாது “உன் கேள் பிரண்டுக்கு ஏதாச்சம் கிப்ட் பண்ணலாம்னு வாங்க வந்தியா…” என அவனை திணரடிக்க 

“சிச்சீ..” என்று வேகமாக தலையை இடம்வலமாக ஆட்டி சட்டென்று அங்கிருந்து நகர்ந்து வாசலுக்கு வெளியில் வந்து நின்றவனுக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்தது..

“ச்ச.. இந்த பாப்பா.. இப்டி பண்ணீட்டாளே… இவளா மாறீட்டா.. இல்லவே இல்ல… பழைய சுட்டித்தனம் கொஞ்சம் கூட குறையவே இல்ல அவளுக்கு… வாண்டு.. வாண்டு” என்று தன் தலையில் கொட்டிக்கோண்டே அவளை திட்டிக்கொண்டான்.

தொடரும்.

குரங்குவெடி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  15 Comments

  1. Archana

   இது என்னடா கார்த்திக்கு வந்த சோதனை தேவையா இந்த வேதனை 🤧🤧🤧🤧

  2. Oosi Pattaasu

   ‘அன்னை மடி தேடி’ செமையான டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி.
   இதோட பாஸிட்டிவ்ஸ்னா,
   1.சுருதி, கார்த்திக் நடுல ஒரு ஸ்பேஸ் இருந்தாலும், ஒரு பாண்டிங்கும் இருக்குமோன்னு யோசிக்க வைக்கிற ரைட்டிங் ஸ்டைல்.
   2. எல்லாரோட கேரக்டரையும் ஆரம்பத்துலயே டிஃபைன் பண்ணிட்ட விதம்.
   3. கார்த்திக், சுருதி அவன் நெனைச்ச மாதிரி இல்லைன்னாலும் பரவால்லனு, எந்த பிரச்சினையும் பண்ணாம அக்செப்ட் பண்ணிக்கிற விதம் நல்லாருக்கு.
   நெகட்டிவ்ஸ்னு பார்த்தோம்னா,
   1.சுருதி கேரக்டர் ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கோன்னுத் தோணுது. ஸ்டார்டிங்லயே ஹீரோயின் ஓவரா பண்ணா, அப்புறம் நாங்க கார்த்திக்கு வேற ஹீரோயின் போட சொல்லிருவோம்.😜😜
   2. அங்கங்க சில ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது.
   3. ஹீரோயின் அமெரிக்கால இங்கிலீஷ்ல பேசுறத ட்ரான்ஸ்லேட் பண்ணும்போது, ரொம்ப இலக்கணத் தமிழ்ல எழுதாம, நார்மலா எழுதுனா நல்லாருக்கும்னு தோணுதுப்பா.
   மொத்தத்துல இந்த ஸ்டோரி கார்த்திக், சுருதி எப்படி சேருவாங்கன்னு நம்மள பரபரப்புலயே வைச்சுருக்கும்னு நெனைக்கிறேன்…

   1. Kurangu vedi
    Author

    ஹாய் சகி, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நிச்சயம் அவை என்னை ஊக்கப்படுத்தும். நீங்க கமெண்ட்ல சுருதியோட காரக்டர் ரொம்ப டாமினேட்டிங்கா இருக்குனு சொன்னீங்க. ஆனா இந்த கதைக்கு இந்த குணாதிசயம் கட்டாயம் தேவைப்படுறதால வரும் எபிசோட்டுகளில் அது இன்னும் அதிகமாக தான் இருக்கும். பொருத்துக்கொள்ளுங்கள் சகோதரி.
    அடுத்து எழுத்துப்பிழை.. நான் யுடி போட்டதும் திரும்ப சைட்ல போய் அத படிக்கும் போது மூனு இடத்தில எழுத்துப்பிழைய கவனிச்சன்.. ஆனா பதிவிட்ட யூடில திருத்தம் செய்ய மனம் வரல.. ஆனா இனி எழுத்துப்பிழை இல்லாம எழுத ட்ரை பண்றன்.
    அடுத்து இலக்கணத் தமிழ்.. நான் வாசிச்ச பல கதைகள்ல எழுத்தாளர்கள் இன்னொரு மொழிய மொழிபெயர்ப்பு செய்யும் போது சுத்தத்தமிழ்ல தான் எழுதுறாங்க.. நானும் இப்ப தான் கதை எழுத கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறதால நானும் அவங்கட மெதெட்டையே போலோ பண்ணினன். பட் அது கதையோட ரசிப்புத்தன்மைய பாதிக்கும்னா கண்டிப்பா மாத்திக்கிறன்.
    அன்ட் இந்த வார வாசகர் போட்டில வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 💐💐

  3. Sangusakkara vedi

   1. சிக்குனான்ட்டா சேகர்ங்குற மாதிரியான ரொம்ப அழகா ஆர்வத்தை தூண்டும் மாதிரியான காதல் கதை.

   2. எல்லா விசயங்களையும் கார்த்திக்கோட புரிதல் அற்புதம்

   3. தான் எதிர்பாரார்த்த சுருதி இல்லாம வேற சுருதி வரவும் அவளோட வார்த்தைகள் வரம்பு மீறும் போது ஒரு அப்பா கண்டுச்ச அப்பாக்கு சபாஷ் டாடி போட வைக்குது.

   4. கதையை ரீட் பண்ணும் போது இந்த கார்த்திக் ஏதோ பண்ணி சுருதி கோவப்படுத்திட்டான்னு தோணுது. அதுக்கு ரீவீட்டு அடிக்குதோ சுருதின்னு தோணுது.

   மைனஸ்னு பார்த்தா சின்ன சின்ன மிஸ்டேக் தான்
   1. அங்க அங்க ஸ்பெல்லிங் எரர்ஸ்

   2. கமா, புள்ளி, செமி கோலன் இதெல்லாம் இம்பூருவ் பண்ணனும்.

   3. சுருதிக்கு நீங்க டீஸர் கொடுக்கும் போது இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன். பட் அப்படி இல்ல புஸ்ன்னு ஆய்ருச்சு…

   1. Kurangu vedi
    Author

    ஹாய் சகி, உங்க கருத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சி பண்றன். கமா, புள்ளி, செமி கோலன் இது எல்லாம் எங்க போடனும்னு சத்தியமா எனக்கு தெரியாது. நானும் குத்து மதிப்பா அங்க அங்க அடிச்சு விடுறன்.. இனி கவனமா பார்த்து போட முயற்சி செய்றன்.
    டீஸர் பார்த்து அதிகமா எதிர்பார்த்தன்னு சொன்னீங்க.. அப்டி என்னத்த எதிர்பார்த்தன்னு சொன்னாத்தானே இடையில எங்கயாவது புகுத்த முடியுமானு யோசிக்கலாம். இந்த கமெண்ட படிச்சீங்கன்னா கொஞ்சம் சொல்லிருங்க.
    அன்ட் இந்த வார போட்டில வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள் சிஸ்💐💐

  4. சுபாஷினி இணைய காதலி

   #வலுசாறு_இடையினில்
   #kurangu_vedi
   #தூரிகை_பட்டாசு_போட்டி
   #Suba_reviews
   #InkEraser

   பிடித்தது

   😍 சுருதியை அதிரடியாகவும் கார்த்திக்கை ரொம்ப மென்மையாக காட்டிய விதம்
   😍 கதையின் அமைப்பு ஏதோ குறிப்பு வைத்து கொண்டு போவது போல் அமைந்துள்ள தோற்றம்
   😍 உணர்வை கடத்தும் பாணி

   பிரியாணியில் இடையூறு செய்யும் ஏலக்காய் போல

   😑 சில இடத்தில் எழுத்து பிழை
   😑 ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதும் பொழுது ஏற்படும் வாக்கியபிழை
   😑 கதாபாத்திரத்திற்கு இன்னும் அதன் தன்மையை வழங்கவில்லையோ என்ற எண்ணம்.

   மொத்தத்தில் நிறையும் குறையும் கலந்து ஒரு நல்ல கதை.

   1. Kurangu vedi
    Author

    ஹாய் அக்கா உங்க கருத்துக்கு நனி நன்றி.
    என் கதைல குறிப்பிருக்கா.. அட இது தெரியாம போச்சே..
    புரியாணியில் இருக்கும் ஏலக்காயா? அடடே உவமை அணி..
    சில இடத்தில் எழுத்துப்பிழை.. I know.. I know…
    வாக்கியப்பிழை.. அப்டின்னா என்ன🤔🤔🤔
    கதாப்பாத்திரத்திற்கு இன்னும் அதன் தன்மைய வழங்கலன்னா கதாப்பாத்திரத்த வர்ணிக்கலன்னு மீன் பண்றீங்களோ?🤔🤔
    உங்க கமெண்ட் நல்லா இருக்கு.. thank you🙈🙈

  5. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

  6. hani hani

   ரொம்ப அழகான கான்செப்ட்… கதை இப்போ தான் மூனு எபி போயிருக்கு.. கதா பாத்திரத்தில எந்த குறையும் இல்ல. ஆனா… எனக்கு இதுல மிஸ் ஆகுற லாஜிக் தான் இடிக்குது.

   1.. அமெரிக்கா டூ இந்தியாக்கு ஃப்ளைட்‌ டைமிங் 24 மணி நேரமாச்சும் ஆகும். வெறும் 12 மணி நேரத்துல அவ வர்ரது இட்ஸ் நாட் அக்ஸப்டபிள்.

   2. இந்த கதை நடக்குறது சென்னையில… ஆனா பேசுறது எல்லாமே இலங்கை தமிழ். சென்னையில இருக்கவங்களோ பாண்டிச்சேரி ல இருக்கவங்களோ இப்படி பேச மாட்டாங்க. இதுவும் லாஜிக் மிஸ்டேக்.

   3 வாக்கியம் முடியவே இல்ல. முற்றுப்புள்ளி ரொம்ப முக்கியம். ஒரு வாக்கியத்துல இரண்டுக்கு அதிகமான கமா போடுற மாதிரி இருந்தா படிக்குறவங்களுக்கு குழப்ப ஆரம்பிச்சுடும். சோ முற்றுப்புள்ளிய சரியான இடத்துல வச்சுடுங்க. வாக்கியம் முற்றுப்பெறும் போது தான் அதோட அழுத்தம் பதியும்.

   4 ரொம்ப போல்ட் ஹீரோயின். எனக்கு பிடிச்சுருக்கு இவள.

   5 ஹீரோ சார் அடி வாங்கிட்டாரு பாவத்த.. அவருக்கு ஒரு நியாயம் பண்ணுங்கபா..

   6 க்யூட் டாம் அண்ட் ஜெர்ரி பேர்னு பார்த்தா அவ தான் கெத்தா இருக்கா.. போகப்போக நம்ம ஹீரோவும் நல்லா வருவாருனு எதிர் பார்க்குறேன். வாழ்த்துக்கள்.

   1. Kurangu vedi
    Author

    அக்கா என் நாடே இலங்கை தான்.. இதில் எங்கிருந்து நான் சென்னைத்தமிழில் எழுத😭😭. எனக்குத்தான் தெரியாதே…
    டைமில லாஜிக் இடிக்குதா.. நான் எந்த இடத்திலயும் நேரத்த சொல்லவே இல்லயே.. அமெரிக்கா டு இந்தியா கிட்டத்தட்ட பதினெட்டு மணித்தியாலம் தான். கார்த்தி மாலையில் அவள நினைக்குறான்.. அந்த நேரம் சுருதி அமெரிக்கா ஏர்போட்டுக்குள்ள நுழையறா.. காலம சுந்தரம் ஏத்தப்போறார். அவ்வளவும் தான சொன்னன்.
    அப்டி பார்த்தா ஈவினிங் நாலு மணில இருந்து காலம பத்து மணி என்டு கணக்கு வச்சிருக்கலாமே..
    அடுத்து கமா, முற்றுபுள்ளி எல்லாம் எங்க வரும்னு சுத்தமா எனக்கு தெரியாது வேற கதைகள படிச்சு படிச்சு இப்ப தான் கொஞ்சம் இம்புரூவ் ஆயிருக்கன். இந்த பட்டாசுப்போட்டி முடியறதுக்குள்ள பிக்கப் பண்ணிருவன்னு நினைக்குறன்.
    என்ன இருந்தாலும் நிறை குறைகள நச்சுன்னு சொன்னீங்க.. அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி💐💐

    1. hani hani

     உங்க எழுத்துலயே தெரியுது. நீங்க இலங்கைனு. ஆனா சென்னையில நடக்குற மாதிரி கதை இருக்கும் போது இலங்கை தமிழ்ழ பேசினா லாஜிக் மிஸ்னு படிக்குறவங்களுக்கு தோனும். இப்பவே சென்னை மக்கள ஃப்ரண்ட் பிடிச்சு பேசிக்கோங்க. கதையோட நகர்வுக்கு தேவை படும்.

     இருபத்தி நாலு மணி நேரம் சகி. ஒரு பகல் ஒரு இரவு முழுமையா தேவைப்படும். மாலை கிளம்பி காலையில வர முடியாது. அடுத்த நாள் மாலையில தான் சென்னை வந்து சேர முடியும். இப்போவே இதெல்லாம் சரி பண்ணிட்டீங்கனா கடைசியில ஜட்ஜ் பண்ணுறவங்க கண்ணுல மாட்டிற கூடாதுல அதான் சொன்னேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️

     1. Kurangu vedi
      Author

      நன்றி அக்கா❤❤. நான் கூகுள் ஆண்டவரிடம் போய் சேர்ச் பண்ணும் போது 17 மணித்தியாலம்னு இருந்திச்சு. அதான் அத வச்சு எழுதினன்.. பட் இந்தியால இருக்க உங்களுக்குத்தான உண்மையான டைம் தெரியும். இனி இதுபோல மிஸ்டேக் நடக்காம பாத்துக்கிறேன்.

  7. Oosi Pattaasu

   கார்த்தி பாசம் வச்சுருக்கான் டீப்பா, அவனுக்கு சுருதி என்னைக்குமே பாப்பா…

  8. kanmani raj

   அமைதியான கார்த்திக்கு ஜோடி, அடாவடி சுருதியா? இப்பவே கண்ணை கட்டுதே…