அத்தியாயம் -9
அவர்கள் தங்கி இருந்த லாட்ஜின் வெளி வராண்டாவில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தாள் அஷ்வினி.
” இன்னுமா நீ வரைஞ்சு முடிக்கல? ” என கேட்டப்படி அவள் அருகில் வந்து அமர்ந்தான் மாதவன்.
“இல்ல போஸ்ட்ர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன், ஆனா குழந்தைகளுக்கு பொம்ம வரையறது தான் பாக்கி, இங்க சரியா சிக்னல் வேற கிடைக்க மாட்டேங்குதா, சோ நெட்டும் எடுக்கல! எந்த போட்டோஸ்யும் பாக்காம வரையறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு”
“அவளோ தானே? இதுக்கு ஏன் இவளோ டென்ஷன். குழந்தைகளுக்கு கிருஷ்ணர்னா ரொம்ப புடிக்கும் அதயவே வரைஞ்சுரு!”
” அதான் போட்டோஸ் பாக்காம வரைய முடிலனு சொல்லறேன்ல”
“அதான் நேர்லயே இருக்குல அப்போ அத வரைய வேண்டியது தானே “
“நேர்லயா என்ன சொல்ல வரீங்க? “
இடது கையின் நடு மூன்று விரல்களை மடித்து, புல்லாங்குழல் போல் அவன் உதட்டின் அருகே வைத்து காலை சற்று மடித்து அவன் நிக்க, அவன் தோற்றத்தை பார்த்து பக்கென சிரித்த அஷ்வினி, ” ஏன் இப்படி போஸ் கொடுத்து நிக்கறீங்க? “
“பார்த்தா தெரில.. நா தான் கிருஷ்ணன். என்ன பாத்து அப்படியே வரை..! எவளோ தத்ரூபமா வருதுனு மட்டும் பாரு ” கொஞ்சம் கூட கேலி இல்லாமல் சீரியசாக அவன் சொல்ல அதில் மேலும் சிரித்தாள் அஷ்வினி.
“ஹேய் என்னம்மா சிரிக்கற? என் வரலாறு தெரியாம பேசிட்டு இருக்க நீ..!
பேன்சி டிரஸ் காம்பெட்டிஷன்ல ஒரே கிருஷ்ணர் வேஷம் போட்டு மூணு வருஷம் தொடர்ந்து கப் அடுச்சுவன் ம்மா நானு..! அது மட்டும் இல்லாம என்கூட ராதையா ஜோடி போட்டு நிக்க நீ நான்னு எத்தன பொண்ணுங்க க்யூல நின்னாங்க தெரியுமா? “
அவள் இன்னும் சிரித்து கொண்டே இருக்க, ” நீ என்ன நம்புலனு நெனைக்கறேன் இரு இரு உனக்கு ஆதாரத்தோட ப்ரூஃப் பண்ணுறேன்..! ” என்றவன் அவன் போனில் எதயோ தேட,
“இல்ல இல்ல நம்புறேன்..”
“ஆங் அது நல்ல புள்ளைக்கு அழகு..! உனக்கு என் போட்டோவ வாட்ஸாப் பண்ணுறேன் அதே மாறி வரைஞ்சிடு ஓகே..!” என்றவன் அவ்விடம் விட்டு நகர அடக்கப்பட்ட சிரிப்போடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அஷ்வினி.
அதை மனதில் குறித்து கொண்ட மாதவன், ” எவ்வளவு நாள் ஆச்சு இவள இப்படி சிரிச்சி பாத்து..!” என எண்ணியவனின் மனம் பின்னோக்கி சென்றது.
அன்று இன்டர் காலேஜ் மீட் முடிந்து அவளை பஸ் ஸ்டாப்பில் வைத்து பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை அவன் எங்கும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுள் தோன்றவில்லை, சொல்ல போனால் அவளை மறந்தே போயிருந்தான்.
அன்று அவனிற்கு மிகவும் பிடித்த நடிகரின் படம் ரிலீஸ். எவ்வளவு முயன்றும் அவனால் முதல் நாள் டிக்கேட்டை வாங்க முடியவில்லை, அடுத்த நாள் தான் டிக்கேட் கிடைத்தது.
ஷோ ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னரே திரையறங்கிற்கு வந்து விட்டான், அவன் நண்பர்கள் படை சூழ..!
” எல்லாம் இவனால தான்! முன்னாடியே டிக்கெட் புக் பண்ணுடா பண்ணுடானு தலையால தண்ணி குடிச்சேன்..! கேட்டானா இந்த பரதேசி? அதுலாம் நா பார்த்துக்கறேன், நா பார்த்துக்கறேன்னு சொல்லி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாரு? ம்ம்ச்.. சிரிக்காத எரும வர காண்டுல ஒன்னு வெச்சற போறேன்..! ” என பொறிந்து கொண்டிருந்தான் மாதவன்.
” விட்றா விட்றா ஒரு நாள் தானே தள்ளி போச்சு. அதுக்கு ஏன் இப்படி பீல் பண்ணுற? அதான் இப்போ கொஞ்ச நேரத்துல படம் பாக்க போறோம்ல அப்றம் என்ன? “
“போடா உனக்கு அந்த பீல் புரியாது. ஆசையா காத்திருந்து லவ் பண்ணி, எப்படியாவுது இன்னிக்கி லவ்வ சொல்லிறலாம்னு போகும் போது, அந்த பொண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்?”
“அட பக்கி மாடே ஃபர்ஸ்ட் டே ஷோவுக்கும் கல்யாணத்துக்கும் முடிச்சு போடுற ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப”
” அதுலாம் அனுப்பவிக்கறவனுக்கு தான் தெரியும், நீ பே..!”
அவன் சொன்ன சொல் அவனிற்கே ஒரு நாள் பழிக்க போகிறது என பாவம் அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை..!
படத்தின் இடைவெளி ப்ரேக்கில் அவனின் நண்பர்கள் அனைவரும் கேன்டீனிற்கு சென்று விட, அவன் மட்டும் அமர்ந்திருந்தான்.
கையில் ஜூஸ் பாட்டலுடன் அவனிற்கு முன் சீட்டில் வந்தமர்ந்த அஷ்வினியை அப்பொழுது தான் கவனித்தான் மாதவன்.
அவளை பார்த்ததும் உள்ளுக்குள் ஓர் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள அவளையே கவனித்து கொண்டிருந்தான். ஜூஸை குடித்து கொண்டே போன் நொண்டிக்கொண்டிருந்தாள்..!
அவள் அருகில் அமர்ந்திருந்தவள்,
“அச்சசோ அஷ்வினி, அம்மா தான் கூப்பிடறாங்க டி. இந்தா உன் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லிரு டி”
” அடிபாவி அப்போ வீட்டுல நீ சொல்லிட்டு வரலயா? “
“சொன்னா அப்படியே அனுப்பி வெச்சிட்டு தான் மறு வேல பாப்பாங்க நீ வேற ஏண்டி..!”
“இருந்தாலும் இது ரொம்ப தப்பு டி அவங்க கிட்ட ஏன் பொய் சொன்னா?”
” ஏ.. நீ என்னடி என்னமோ நா பொய் சொல்லிட்டு எவன் கூடயோ ஓடி போன மாறி பேசிட்டு இருக்க? ஜஸ்ட் ஒரு படம் தானே அதுவும் நம்ம ப்ரண்ட்ஸ் கூட தானே? “
“சின்னதோ பெருசோ..! தப்பு தப்பு தான். எவளோ கஷ்டப்பட்டு நம்மள வளத்தறாங்க?சின்ன வயசுல இருந்து நம்மகாக ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து பண்ணுறாங்க..! அவங்க வாழ்றதே நம்ம சந்தோசத்துகாக தான். அப்படி இருக்கும் போது நீ அவங்க கிட்ட பொய் சொன்னனு தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அத யோசிச்சி பாத்தியா “
“அடி ஆத்தா தெரியாம உன்கிட்ட சொல்லிட்டேன். ஆள விடு..! கருத்து சொல்லியே கழுத்தறுப்பா சரியான பூமர் ஆண்ட்டி. பாவம் உன்கிட்ட எந்த மகராசன் எப்போ வந்து சிக்க போறானோ? ” என அவள் நொடிந்து கொள்ள, அஷ்வினியின் பேச்சில் கவரப்பட்ட மாதவ் அவளையே இமைக்காது பாத்துக்கொண்டிருந்தான்..!
தூங்கி கொண்டிருந்த கண்மணிக்கு யாரோ விடாமல் கதவை தட்டும் சத்தம் கேட்டது. சலித்து கொண்டே எழுந்தவள் அரை தூக்கத்திலேயே கதவை நீக்கி விட்டாள்.
” டேய் மாதவா நானே இப்போ தா என் ஆளோட நல்ல சீன் செட் ஆகி கனவுல இருந்தேன், வந்து டிஸ்டர்ப் பண்ணுற? நான் கனவ கன்டின்யூ பண்ணுறேன், எதுவா இருந்தாலும் சீக்கரம் சொல்லிட்டு கெளம்பு..!” என மெத்தையில் விழுந்தவாறே கண்களை மூடி கூறினாள்.
“யாரு கண்மணி உன் ஆளு? ” என்ற வருணின் குரலில் பதறி அடித்து எழுந்தவள்,
” நீ.. நீ நீங்க எப்படி? “
” பாஸ் தான் நீ போன் எடுக்கலனு சொன்னாரு. அதான் கூட்டிட்டு வந்தேன்” என பதிலளித்தான் மாதவன்.
” ஓஹ்.. ஒரு 5 மினிட்ஸ் இதோ ரெடி ஆகிட்டு வந்தறேன்”
” குளிக்காம வந்தராதடி!”
” எனக்கு தெரியும்..! நீ தான் சரியான அழுக்கு மூட்ட மூட்டிட்டு கெளம்பு “
இன்றும் ஏனோ வழக்கத்தை விட அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாள் தயாராக. இதோடு மூன்றாவது துணியை மாற்றி போட்டு விட்டாள். ஆனால் ஏனோ எதுவும் அவளிற்கு திருப்தி தரவில்லை…!
” அவரு ப்ளூ கலர் ஷர்ட் தானே போட்டு இருந்தாரு..! அப்போ நாமளும் அதே கலர்லயே போட்டுபோம் ” என எண்ணியவள் ப்ளூ கலர் சுடிதாரை தேர்வு செய்து போட்டுகொண்டாள்.
ஒன்றுக்கு இரண்டு முறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்ட பின்பு தான் வெளியே வந்தாள்.
” சொல்லுங்க பாஸ் எதுக்கு கூப்பிட்டீங்க? “
” அதுவா, சக்தி காலையில கூப்பிட்டு இருந்தாரு அவங்க அப்பா கிட்ட பேசிட்டாராம் பட் இருந்தாலும் அவங்க அப்பா முன்னாடி நல்ல விதமா பேர் எடுக்க சொல்லறாரு..!”
“என்னமோ துணி எடுக்கற மாறி பேர் எடுக்க சொல்லறாரு? எங்க போய் எடுக்காறதாம் “
“அதான் முழுசா கேளு. இன்னிக்கு அன்டர் 12 பாஸ்கெட் பால் (under 12 basket ball ) காம்பெடிஷன் கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு நடக்குதாம். அதுல பாஸ்கெட் பால் அகாடமி நடத்துறவங்க தான் சீப் கெஸ்ட்டா வராங்களாம். நல்லா விளையாடுற ஸ்டுடென்ட்ஸ அவங்க செலக்ட் பண்ணிப்பாங்க. அங்க போய் நம்மனாள முடிஞ்சத ஸ்பான்சர் பண்ண சொல்லி கேட்டு இருக்காரு..! ஊர் தலைவரும் அங்க வருவாராம், சோ அவரு முன்னாடி ஒரு நல்ல இமேஜ் க்ரியேட் ஆகும் ல..”
“ஓஓஹோ.. ரைட்டு ரைட்டு “
” அங்க போறானால என்னால பிரசன்டேஷன் ஒர்க் பண்ண முடியாது நீ அத கொஞ்ச பாத்துக்கறியானு உன்ன கேட்க தான் கூப்பிட்டேன்.. “
“லாமே.. பாத்துக்கலாமே..! ஆனா ஒரு கண்டிஷன் நானு உங்க கூட வருவேன்”
அவளை மேலும் கீழுமாக பார்த்தவன்,
” நா அங்க போறதால தான் உன்ன வேலய பாக்க சொன்னேன். நீயும் என்கூட வந்துட்டா அப்போ வேலைய யார் பாக்குறதாம் “
“அதுலாம் நா பண்ணிருவேன் பாஸ்..! அங்க போய்ட்டு வந்த உடனே கடகடனு உக்காந்து எல்லாத்தையும் முடிச்சிருவேன் ப்ளீஸ் ப்ளீஸ் நானு வரேனே..! இதுக்கு முன்னாடி நா பாஸ்கெட்பால் மேட்ச் பார்த்ததே இல்ல தெரியுமா? “
” ஆனா.. “
” ஆனாவும் இல்ல ஆவனாவும் இல்ல வாங்க வாங்க “என்றவள் அவன் கையை பிடித்து இழுத்து சென்றுவிட்டாள்.
இருவரும் காரில் போய் கொண்டிருக்க, வருண்ணை ரகசியமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் கண்மணி.
‘ அட அட என்ன கலரு..! என்ன கலரு..!
கண்ணு அப்படியே குலாப் ஜாமுன் மாறி..!
மூக்கு அப்படியே ப்ரெஞ்ச் ப்ரைஸ் மாறி..!
உதட்டு அப்படியே லாலிபாப் மாறி..!
மொத்ததுல்ல நீங்க ஒரு பவுடர் அடிச்ச பௌர்ணமி ஆதி..! இவ்வளவு நாளா இந்த அழக நா எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டேன்..! அப்போ உண்மையிலயே இது லவ் தானோ? அச்சசோ மணி எப்படியோ 22 வருஷ சிங்கிள் வாழ்க்கைக்கு இனியோட டாட்டா பை பை சொல்லிறலாம் ஜாலி.. ஜாலி..! என்றவள் மனதிற்குள் குதுகலித்துக் கொண்டாள்.
” ஆக்சுவலி கண்மணி கொஞ்ச நாளாவே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ணு நெனச்சிட்டு இருந்தேன். “
” எனக்கிட்டயா? என்ன பாஸ்”
” உன்ன பாத்தா “
” என்ன பாத்தா..!” என்றவள் கண்களில் ஆர்வம் மின்ன கேட்க,
” என்னோட தங்கச்சி மாறியே இருக்கு.. “
அவனின் தங்கச்சி என்ற அழைப்பு அவளிற்குள் ஒரு லிட்டர் பாவக்காய் ஜூஸை அள்ளி கொட்டியது போல் இருக்க, உடனே முகத்தை சுழித்தாள்.
” அவளும் இப்படி தான் நேரிய அடம் பண்ணுவா..அப்றம் “
அவனின் பேச்சை தொடர விடாமல்,
” நா ஒன்னும் உங்களுக்கு தங்கச்சி இல்ல புரிஞ்சிதா? இன்னொரு வாட்டி தங்கச்சி கிங்கச்சிணு சொன்னேங்க ஓடுற காருல இருந்து எட்டி குதிச்சிருவேன் பாத்துக்கோங்க..! அப்றம் உங்க மேல தான் கொலை கேஸ் விழும்! எனக்கு இருக்கற ஒரு அண்ணனே போதும், வேற யாரயும் என்னோட அண்ணனா தத்தெடுக்கற ஐடியா எல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல. நா உங்க ப்ரண்ட் அத மட்டும் நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க ஓகே..!” என்றாள் கோபம் தெறிக்கும் குரலில்.
இருவரும் மேட்ச் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பெரிய கரகோஷத்தோடு மேட்ச்சும் ஆரம்பமானது..!
” பாஸ் இதுல எப்படி பாஸ் பாயிண்ட்ஸ் கவுன்ட் பண்ணுவாங்க? கிரிக்கெட்ல விக்கேட் அவுட் ஆகுற மாறி இந்த விளையாட்டுலயும் இருக்கா? அத எப்படி கண்டு புடிக்கறது “
பாஸ்கெட்பால் விளையாட்டு செய்முறையை பொறுமையாக கண்மணிக்கு விளக்கி கொண்டிருந்தான் வருண்.
” நீங்க விளையாடுவிங்களா இவ்வளவு டீடைல்டா சொல்லறீங்க? “
” நா விளையாட மாட்டேன் ஆனா “
“ஆனா..!?”
“டேய்..கார்த்தி இன்னும் கொஞ்ச நேரத்துல்ல மேட்ச் ஆரம்பிக்க போகுது அந்த கிளாஸ் உள்ள போய் என்ன டா பண்ண போற? “
அவன் நண்பன் கார்த்தியை கேள்வி கேட்டான் வருண்.
” நீ சத்தம் போடாம கதவு கிட்ட நின்னு யாராச்சி உள்ள வராங்களானு மட்டும் பாத்து சொல்லு ” என்ற கார்த்தி யார் பேக்கையோ நொண்டி, அதில் இருந்த ரெகார்ட் நோட்டையும் செல் போனையும் எடுத்தான்.
” கார்த்தி..! எதுக்கு டா இப்போ அதுலாம் எடுக்கற. சும்மா பிரச்னையை வளத்தாதடா சொன்னா கேளு..!”
“அதுலாம் எனக்கு தெரியும் நீ வா ” என்றவன் ஒரு முறை கிளாஸ் ரூம்மில் இருந்து வெளியே எட்டி பார்த்து. யாரும் அவர்களை பார்க்கவில்லை, என்பதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்தான்.
” மச்சா தினேஷூ..! இந்தா புடி அந்த ப்ரணவோட பஞ்சாங்கமே இதுல தான் இருக்கும். இனி ரெண்டு நாளைக்கு ஒரே என்டர்டைன்மெண்ட் தான்..! யாரு கண்ணுலயும் படாம பத்ரமா வெச்சிரு..! முக்கியமா இந்த வருண் கிட்ட மட்டும் கொடுத்தறாதா. நீதி நேர்மை நியாயம்னு சொல்லிட்டு அவன் கிட்டயே போய் திருப்பி கொடுத்தாலும் கொடுத்துருவான். நா போய் மேட்ச் விளையாடிட்டு வரேன்” என்றவன் அவனின் டி-ஷர்டை கழட்டி ஐந்தாம் நம்பர் ஜெர்சியை மாட்டிக் கொண்டான்.
பாஸ்கெட் பால் தான் அவனின் உயிர் மூச்சு..! அவன் இருந்தால் நிச்சயம் அவனின் அணி தான் ஜெய்க்கும்.
அடுத்து வர போகும் நேஷனல் செலக்ஷனில் செலக்ட் ஆகி இந்திய அணிக்காக விளையாடுவது தான் அவனது வாழ்நாள் லட்சியமே..!
அவனின் விளையாட்டை பார்ப்பதற்காவே காலேஜில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது..! விளையாட்டிலும் சரி வாழ்கையிலும் சரி எதிரி என ஒருதன் வந்து விட்டால் அவனை அடிச்சு துவம்சம் செய்யாமல் விடமாட்டான். மிகவும் கோவகாரன் என சொல்வதை விட முன்கோபி என சொல்லவது தான் மிக சரியாக இருக்கும்..! யாருக்காவும் எதுக்காவும் அடங்க மாட்டான் வருண் ஒருவனை தவிர..!
வழக்கம் போல் இந்த முறையும் வெற்றி அவனையே வந்தடைந்தது. வேர்வை வழிந்தோட வந்து நின்றவனை, ஒரு முறை முறைத்து விட்டு குளுக்கோஸ் கலந்த தண்ணீரை நீட்டினான் வருண்.
இரவு ஹாஸ்டல் ரூம்மில் அவனின் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்க,
” டேய் பாரு டா எல்லா பொண்ணுங்க நம்பரும் வெச்சிருக்கான்”
” டேய் அப்போ நிஷா நம்பர் இருந்தா கொடேன் “
“அடிங்க அழையாத பக்கி..! “
” இரு இரு யார் கிட்ட எல்லாம் எப்படி கடல வறுத்து இருக்கானு படிச்சி பாப்போம் “
” அன்பே ப்ரியா..!
இன்னைக்கு நீ ஃப்ரியா..?
அட ச்சை இவ்வளவு கேவலமான பிக் அப் லைன் நா எங்கயும் படிச்சது இல்லடா..!”
” இத வெச்சி நாளைக்கு அவன இப்படி ஓட்டுறேனு பாரு “
” டேய்.. கொஞ்சம் கம்முனு இருங்க டா. ரெண்டு நாள் கழிச்சு போன்ன எங்க எடுத்தியோ அங்கயே போய் வெக்கற..!
உன் ஆசைக்கு ரெண்டு நாள் அவன அழைய விட்டறலாம். ஆனா போன்ல இருந்து எந்த விஷயமும் வெளிய போக கூடாது இப்போவே சொல்லிட்டேன்!” என கார்த்தியை அதட்டினான் வருண்.
ப்ரணவ்.. இவர்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் டிப்பார்ட்மென்ட் அவன் மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட்.
வழக்கம் போல் இருக்கும் டிபார்ட்மென்ட் சண்டை தான் இருவருக்குள்ளும் ஆனால் இந்த முறை அவன் வாய் வளர்த்தது வருணிடம்..!
உயிர் நண்பனை ஒரு வார்த்தை சொல்லி விட்டால் சும்மா விட்டு விடுவானா கார்த்தி..!
ப்ரணவின் போன் ஸ்கீர்ன் ஷாட்டுகளை அவன் நட்பில் இருக்கும் அனைவருக்குமே அனுப்பி வைத்தான். வருணிடம் சொல்லாமல் அவனை ஒரு வழி பண்ணிவிட்டான்.
” பாஸ்ஸ்..! “
” ஹான்.. “
” ஆனாக்கு அப்றம் கோமாக்கு போய்ட்டீங்க? நீங்க விளையாடுலனா அப்றம் யார் விளையாடுவானு கேட்டேன்.. “
“அது.. அப்றம் பேசிக்கலாம் விடு “
தோலை குலுக்கி கொண்டு மேட்ச்சில் கவனம் வைத்தாள் கண்மணி..!
மேட்ச் முடியும் தருவாயில் தான் ஊர் தலைவர் வீராசாமியும் அவர் மகன் சக்திவேலும் வந்தனர்.
“பாஸ் பாஸ் அவங்க வந்துட்டாங்க பாருங்க வாங்க அவங்க கிட்ட போய் பேசலாம் “
” சரி வா.. “
” இருங்க இருங்க ஒரு நிமிஷம்..!” என்றவள் அவள் ஹாண்ட் பேக்கில் இருந்த பவுடர் டப்பாவை எடுத்து வைத்தாள்.
என்ன என்பது போல் அவன் கேள்வியாய் பார்க்க, சிறு வெட்கத்தோடு அவன் நெற்றியின் அந்த பவுடரை திருநீர் போல் பூசி விட்டாள்.
அவனை தொட்ட ஸ்பரிஸம் அவளுள் ஆயிரம் மத்தாப்பை பூக்க விட, முகம் கொள்ளா புன்னகையோடு அவனை பார்த்தாள்.
ஆனால் அவனோ வெகு சாதாரணமாக இருக்க, அவளிற்கு தான் புஸ் என ஆகி விட்டது.
” ஏன் தீடீர்னு ” என கேட்க,
அதில் தன்னிலை அடந்தவள்,
“அதுவா ஊர் தலைவர பாருங்க எப்படி பட்டையும் கொட்டையுமா இருக்காருனு அப்போ அதுக்கு ஏத்த மாறி நாமளும் இருக்கனும் ல சைக்காலிஜி பாஸ்.. சைக்காலிஜி..!”
சக்திவேலின் பரிந்துரைப்பால் நன்றாகவே பேசினார் ஊர் தலைவர்.
” தம்பி உங்க கிட்ட ஒரு உதவி
வேணுமே” என்றார் வருணை பார்த்து.
“சொல்லுங்க ஐயா..!”
” இப்போ விளையாண்ட பசங்களுக்கு எல்லாம் பிசிகல்லி ஃபிட் ( physically fit ) அப்படினு மெடிக்கல் செர்டிபிகேட் வேணும். ஏனா இவங்க திறமைய பார்த்து அவங்க அகாடமில சேத்திக்கறதுக்கு அந்த செர்டிபிகேட்டும் வேணுமாம். அதான் நீங்க கேம்ப் நடத்தறீங்களே, அத உங்க கிட்டயே அத ரெடி பண்ணிக்கலாம்னு ஒரு யோசனை..!”
” கண்டிப்பா பண்ணிறலாம் இதுல யோசிக்க என்ன இருக்கு!? “
” ரொம்ப சந்தோசம்..! டேய் சக்தி போய் அவர கூட்டிட்டு வா இவங்களே என்ன தேவையோ அத பேசி தெரிஞ்சிக்கிட்டும்”
சக்தி போய் மாணவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் அகாடமி ஷேர் மேன்னை கூட்டி வர அவங்க அவர்கள் முன்பு வந்து நின்றான் கார்த்தி..!
‘இவனா..? இவன் அன்னைக்கு மால்ல பாத்தவனாச்சே? ‘ என எண்ணிய கண்மணியின் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.
வருணின் முகமோ எந்த வித உணர்வையும் வெளி காட்டாது இறுகி போய் இருந்தது.
கார்த்தியோ இதை ஏற்கனவே எதிர்ப்பார்த்தது போல் வருணை ஒரு நக்கலான பார்வை பார்த்தான்.
” தம்பி இவரு தான் வருண். இங்க ஃபிரீயா மெடிக்கல் கேம்ப் நடத்தறாரு. பசங்கள உங்க அகாடமில சேத்திக்கறதுக்கு தேவையான செர்டிபிகேட்ஸ் இவரு கிட்டயே வாங்கிக்கோங்க. அப்றம் எந்த உதவினாலும் என்கிட்ட கேளுங்க நா வரேன். “
” கண்மணி ஊர் தலைவர் கிட்ட போய் நம்ம கம்பெனி சார்பா நடந்த காம்பெடிஷனுக்கு இந்த செக்க கொடுத்துட்டு வந்துரு “
” அது.. இவன்..” என்றவள் யோசனையாய் நெளிய,
” நா.. போனு சொன்னேன். இந்தா செக்க புடி ” என்றான் அதட்டலாய்,
அரை மனத்தாய் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கண்மணி.
” என்ன கேம்ப் நடத்தறயாமா? உண்மையாலும் மித்தவங்களுக்கு நல்லது செய்ய கூட உனக்கு
தெரியுமா? “
“உங்களுக்கு என்ன தேவையோ அத மட்டும் என்கிட்ட பேசுனா நல்லா இருக்கும் “
” பார்றா… ஆனா எனக்கு நல்லா இருக்காதே, ஆமா இப்போ தான் விஷயம் தெரிஞ்சிது உன் தேவ முடிஞ்ச உடனே என்ன தான் கழட்டி விட்டேனு பார்த்தா, உன் கேர்ள் ஃப்ரெண்டையும் தொரத்தி விட்டுட்ட போல வெக்கமா இல்ல..!? “
அவனின் கேர்ள் ஃப்ரெண்ட் என்ற வார்த்தையை கேட்டவனிற்கு மனதினுள் சொல்ல முடியாது வலி ஒன்று எட்டி பார்த்தது..!
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.
மிக்க நன்றி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் 😍😘❤️
Very nice episode… So many. Hows and why’s scattered here and there to be enlightened… Waiting for that.. Nice
Sure.. 😍 will be revealed in few episodes😊