Loading

அத்தியாயம் – 18

“சொல்லு ராகவ்.. என்கிட்ட இருந்து விடுதலை கேட்டது நீ.. சொல்லு.. ஆமாவா இல்லையா?” என்று அவள் மீண்டும் நெருக்கிக் கேட்க, ராகவுக்கு எப்படி பதில் கூறுவதென்று தெரியவில்லை.

“ஆமாம் மணி.. நானா தான் டிவோர்ஸ் செய்துக்கலாம்னு சொன்னேன்.. ஆனா..” என்று அவன் பாதியில் தடுமாறி நிறுத்தவும், மணியே மேலும் தொடர்ந்தாள்.

“ஆனா என்ன ராகவ்? எஸ்.. நான் தான் சொன்னேன்.. இந்த நிலைமை நரகமா இருக்குனு நான் தான் சொல்லித் தொலைச்சேன்.. ஆனா எனக்கு அப்போ புரியல ராகவ்.. எல்லாரும் என்ன ஃபோர்ஸ் பண்ணினதா நினச்சேன் நான்..

கூடவே நீயும், மனோவும் உங்களோட கேம்ல என்ன யூஸ் பண்ணிக்க நினைக்கறீங்கன்னு நினச்சேன்.. அதையும் தாண்டிக் கல்யாணத்துக்கு முன்னநாடி இதைப்பத்தி எல்லாம் பேச உன்னைத் தேடி வந்தப்போ நீ என்கிட்டே எப்படிடா பிஹேவ் பண்ணின?

எனக்குத் தெரியல.. இத்தனை வருஷமா என்ன முறச்சுகிட்டே இருந்த ஒருத்தன், கல்யாணம்ன்ற பேச்சு வந்ததும் இப்படி நடந்துக்கறத என்னால புரிஞ்சுக்க முடியல..

கடைசியா நீ என்கிட்டே விளையாட்டுக்குச் சொன்ன மாதிரி, சொத்துக்காகவோ இல்ல வேற ஏதாவது ஆதாயத்துக்காகவோ தான் நீ என்ன கல்யாணம் செய்துக்கிட்டதா நினச்சேன்.

அதைவிட நீக்க யாராவது நான் வளர்ந்துட்டதா நினச்சங்களாடா? சொந்தத்துக்குள்ள கல்யாணம் செய்தா எந்தப் பிரச்சனையும் வராதுன்னு நினச்சங்களே தவிர, அப்படி சொந்தத்துக்குள்ள கல்யாணம் செய்தா, அது சைக்கலாஜிக்கலி என்ன எப்படி அஃபக்ட் பண்ணும்னு யாருமே யோசிக்கல..

அதனால தான் நான் உன்கிட்ட அப்படி சொன்னேன்.. எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு.. என்னால் அவரும் தாலி கட்டிக்கிட்டதுக்காக்கவே மட்டும் உன் கூட வாழ முடியும்னு தோனல.. ஆனா நான் சொல்லறதை கேட்கக் கூட யாரும் இல்ல.

அத்தைகிட்ட ஒரே ஒரு நாள் நான் அவங்க ரூமில் தங்கிக்கறேன்னு கேட்டதுக்கு, அவங்க எல்லாரும் சேர்ந்து என்ன இங்க தனியா விட்டுட்டு போய்ட்டாங்க..

இப்டியாடா பிரச்சனையைத் தீர்ப்பாங்க.. அது எனக்கு இன்னும் எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்துச்சு தெரியுமா?

சும்மா கிணத்துல தள்ளிவிட்டுட்டா நீச்சல் கத்துக்கலாம்னு ஆயிரம் கதை சொல்லலாம்.. ஆனா அப்படித் தள்ளிவிட்டா, அந்தத் தண்ணி மேல இருக்கற பயம் இன்னும் பலமடங்கு அதிகமாகி.. மொத்தமா நீச்சலையே வெறுத்துப் போகவும் செய்யும்னு ஏன் இவங்க யாருக்குமே தெரியல?

என்னோட இந்தக் கோபத்தையும், ஆதங்கத்தையும் என்னால யார்கிட்டயும் சொல்ல முடியல.. அந்த நிலைமைல தான் நான் உன்கிட்ட அப்படிப் பேசினேன்.

ஆனா.. நான் டிவோர்ஸ்ன்னு எல்லாம் நினைக்கல.. யாராவது தண்ணில தத்தளிச்சுட்டு இருக்கற என்ன கரை சேர்த்திட மாட்டங்களான்னு நினச்சேன்.. ஆனா நீ டிவோர்ஸ்ன்னு சொன்னதும் எனக்குள்ள ஒரு நடுக்கம்!

அப்போ தான் நான் உணர்ந்தேன்.. என்ன தான நான் உன்கூட சண்டை போட்டுட்டே இருந்தாலும், என்னால உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுன்னு.

என்னோட இதயத்தை ரெண்டா கிழிச்சு, அது உதிர்த்த ரத்தத்துல தான் நான் டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டேன்.

அதுக்கப்பறம் தான் நான் உன்கூடவே இருக்கணும்னு ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சேன்.

யோசிச்சுப் பாரு ராகவ்.. வெட்கத்தைவிட்டு ஒரே ரூம்ல, ஒரே பெட்டுல என் பக்கத்துல உன்ன படுக்கச் சொன்னேன்.. நீ என்ன வேண்டாம்னு நினைச்சாலும் பரவாயில்ல.. நமக்கு டிவோர்ஸ் கிடைக்கற வரைக்குமாவது உன்ன பார்த்துட்டே இருக்கலாம்னு உன்கூடவே வேலை செய்ய வந்தேன்.

ஒரே ரூம்ல காலைல இருந்து, சாயந்திரம் வரைக்கும் உன் கூடவே இருக்கணும்னு நினச்சேன்.. ஆனா உன்னோட மரமண்டைக்கு எதுவுமே புரியல..

இப்போ.. இப்போ கூட உனக்குப் பிடிச்ச கலர் கருப்புன்னு தெரிஞ்சுட்டு, அதே கலர்ல ட்ரெஸ் பண்ணிட்டு வந்தேன்.. நான் இப்படியான ஆளெல்லாம் கிடையாது.

உனக்கே தெரியும். இதுவரைக்கும் என் ஆசைக்கு.. என் விருப்பத்துக்குத் தான் என்ன சுத்தி இருக்கற எல்லாருமே நடந்திருக்காங்க.. ஆனா.. இப்போ நான், உனக்காக யோசிக்கறேன்..

உனக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சு, அதன்படி நடந்துக்கறேன்.. இதெல்லாம் புரியாம பேசறான் பேச்சு..” என்று அவள் ஐப்பசி மாதப் பெருமழையாய் கொட்டித் தீர்க்க, இமைகளைச் சிமிட்டக் கூட மறந்து போய் நின்றிருந்தான் ராகவ்.

“மணி.. நீ என்ன சொல்ல வர.. நான்.. நான் ஏதோ வேற மாதிரி யோசிச்சனே?” என்று ராகவ் கூற, “மண்ணாங்கட்டி..” என்று பொரிந்தாள் அவள்.

“நீ யோசிச்சியா? யோசிச்சு தான் டிவோர்ஸ் கொடுக்கறேன்னு சொன்னியா?” என்று அவள் மேலும் பொரிய, ராகவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்த மணியோ, அவன் எதுவுமே கூறாது தரையைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கவும், தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

சற்று நேரம் பொறுத்து தலைநிமிர்ந்த ராகவோ.. “ஏய்.. ஏய் மணி..” என்று பதட்டமாக அழைத்தபடியே சென்று அவள் காலருகே அமர்ந்துகொள்ள, அப்பொழுதும் மணி தலை நிமிரவில்லை.

“இங்க பாரேன்.. ப்ளீஸ்..” என்று அவன் கெஞ்சியும் கூட மனமிறங்காது இருந்தவளை பார்க்கக் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

மனதில் இருப்பதை இருவரும் வெளிப்படையாகப் பேசாது போனதால் எப்பேர்ப்பட்ட நெருக்கடிக்கு ஆளாகிவிட்டிருக்கிறோம் என்று எண்ண எண்ண மனம் பதைத்தது.

ஆனால் நல்லவேளையாகக் காரியம் கைமீறிப் போகும் முன் உண்மை தெளிந்ததால், ஓரளவுக்குச் சேதாரம் இல்லாது தப்பிக்க முடிந்தது என்று எண்ணியவனுக்கு மறுகணமே ஒன்று பலமாக உறைத்தது!

‘ஒருவேளை நான் அவசரப்பட்டு டிவோர்ஸ் கேட்டதால இவ என்ன மொத்தமா வெறுத்துட்டாளா?’ என்று உள்ளுக்குள் அஞ்சியவன், “மணி ப்ளீஸ்.. இப்படி இருக்காத.. நான் மடையன்.. முட்டாள்.. மனசுல என்ன இருக்குன்னு சொல்லாம நானும் கஷ்டப்பட்டு.. உன்னையும் படுத்தி எடுத்துட்டேன்.

நீ சின்னப்பொண்ணு.. உனக்கு என்ன தெரியும்?.. நான் தான் உன்கிட்ட பேசியிருக்கணும்..” என்று அவன் முடிக்கக் கூட இல்லை, அவனது சட்டைக் காலரைப் பிடித்திழுத்து அவன் இதழோடு, இதழ் பொருத்தியிருந்தாள் அவள்!

அவன் திகைப்புடன் விழி விரிக்க, அதே வேகத்தில் அவனை விடுவித்தவள்.. “இனிமேல் நான் சின்னப்பொண்ணுன்னு சொன்ன.. பிஞ்சிக்கும் உனக்கு!

சின்னப்பொண்ணா டா? நான் சின்னப்பொண்ணா? எனக்கு இருபத்து ரெண்டு வயசாகுது. சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு சொல்லி என் ஃபீலிங்ஸ எவனும் மதிக்கறதே இல்ல..” என்று முகத்தின் மீது விழுந்த முடியை ஒற்றைக் கையால் கோதிவிட்டு தலைசிலுப்பி அவள் சொல்ல, ராகவின் கண்களின் அதிர்ச்சி இன்னமும் விலகியபாடில்லை.

“மணி.. அப்போ.. அப்போ நீயும் என்ன..” என்று அவன் இன்னமும் இழுக்க.. அவனைப் பார்த்தவள் கடுகடுவென முறைத்துக் கொண்டே.. “உன்னையெல்லாம்..” என்று அதற்கும் ஒரு கத்து கத்திவிட்டு அறைக்குள் என்றுவிட்டாள்.

இப்பொழுது அவளைப் பின் தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்று ராகவுக்குப் புரியவே இல்லை. திருமண உறவு வெறும் உடல் தேவைக்கானது என்று மட்டும் அவன் நினைத்திருந்தால், அவள் முத்தத்தில் விட்டதை, இவன் மொத்தமாய் தொடர்ந்திருப்பான்.

ஆனால்.. அவள்மீது காதலல்லவா வந்து தொலைத்திருக்கிறது இவனுக்கு? இருவரும் சந்தோஷமாய் சரசமாய் இணைய வேண்டும் என்று இப்பொழுது விரும்பியது அந்தக் காதல் மனம்.

அதே சமயம் என்ன தான் அவள் முத்தமிட்டிருந்தாலும், அது அவள் கோபதத்தில் செய்தது. காதலாலோ, அன்பினாலோ அல்ல என்பதையும் அவன் தெளிவாகவே புரிந்திருந்தான்.

இப்பொழுது அவனது கவலை எல்லாம் தன்னவளின் மனதை எப்படி சமாதானப்படுத்துவது என்பது தான்!

ஆனால் இப்பொழுதே போய் அவளிடம் மேலும் மேலும் பேசி அவளது மனக்குழப்பத்தை அதிகப்படுத்த விரும்பாமல் சிறிது நேரம் அவளைத் தனியே விட நினைத்தான் அவன்.

எனவே அவனே சென்று அவளுக்குப் பிடித்த உணவாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தான். ஏற்கனவே சாப்பிட வெளியே அழைத்துச் சென்று எதுவும் வாங்கிக் கொடுக்காமல் பாதியிலேயே அழைத்து வந்துவிட்டோம்.. அவள் பசியாக இருப்பாளே என்ற குற்றவுணர்வு வேறு அவனுக்கு.

எனவே உடனடியாகப் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேறியவன், கடைக்குச் சென்று பிரியாணிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து, அடுத்த அரைமணி நேரத்தில் பிரியாணியை சமைத்து முடித்தவன், கையில் தட்டுடன் அறைக்கதவைத் தட்டினான்.

உள்ளே படுக்கையில் குப்புறப் படுத்திருந்தவள், தலையை மட்டும் தூக்கி.. “கதவு திறந்து தான் இருக்கு..” என்று இறுக்கமான குரலில் கூற, கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

அவளோ ஒரு பழைய இரவு உடையில், தூக்கிச் சுற்றிய கொண்டையுடன் அவள் குப்புறப் படுத்திருந்தாள்.

அவளைப் பார்க்கையில் சிறு வயதில் பள்ளிக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்து அவள் இப்படி படுத்திருந்தது நினைவு வந்தது ராகவுக்கு.

மனோவும், ராகவும் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களுடன் தானும் செல்லுவேன் என்று இரண்டரை வயது குழந்தையான மணி அடம்பிடிக்க அவளைக் குடும்பமே சேர்ந்து கொஞ்சி சமாதானம் செய்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

அதைக் கண்டு மனோவும், அவனுமே.. “அவ என்ன அவ்வளவு பெரிய மகாராணி.. அவ வயசு என்னன்னு கூடத் தெரியாம இப்போவே ஸ்கூலுக்கு வருவாளாம்.. இங்க வீட்டுல அவளுக்கு ஆயா வேலை செய்யறது பத்தாதுன்னு இப்போவே அவ ஸ்கூலுக்கு வந்தா, அங்கேயும் வந்து நாம தான் அவளுக்கு ஆயா வேலை பண்ணனும்..’ என்று அந்தச் சிறு வயதில் பெரிய மனிதர்களாக இவர்களும் பேசி நொடித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்து, இதழுக்குள் சிரித்துக் கொண்டான்.

அன்றிலிருந்து எப்பொழுதுமே அவளுக்குக் கோபமோ.. அல்லது ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ, இப்படித் தான் சோபாவிலோ அல்லது பெட்டிலோ குப்புறப் படுத்துக் கொள்ளுவாள்.

அவள் இப்படி இருந்தாலே அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று தெரிந்துவிடும். ஆனால் என்ன பிரச்சனை என்று அவளாக வாயைத் திறந்து கூறினால் தான் தெரியவரும். அவ்வளவு பிடிவாதமானவள் அவள்!

இப்பொழுது அவளது பிடிவாதத்தை இவன் தான் எப்படியாவது போக்கியாக வேண்டும். மெல்ல அவளருகே சென்று அமர்ந்தவன்.. “மணி..” என்றான் மெதுவாக.

அதற்கு அவளிடமிருட்னது பதில் வராது போகவும்.. ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே..’ என்று எண்ணியவன், “மணி..” என்று மீண்டும் அவனது தோளைத் தொட்டு எழுப்பினான்.

ஆனால் அதற்கும் தோளைக் குலுக்கி அவனது கையைத் தட்டிவிட்டவள் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள்.

“பிரியாணி கொண்டு வந்திருக்கேண்டி.. சாப்பிட்டுட்டாவது கோபப்படு..” என்று அவன் கூற, அவனைத் தலை தூக்கிப் பார்த்தவளோ..

“பிரியாணிக்காக என் கோபத்தை விட்டுக்கொடுத்துடுவேன்னு நினைக்கறியா?” என்று கூறிவிட்டு மீண்டும் படுத்துக்க கொண்டாள்.

“உஃப்ப்ப்ப்பப்..” என்று மீண்டும் இதழ் குவித்து ஊத்திக்க கொண்டவன்.. அவளை வெறுப்பேத்தும் விதமாக..

“ஹ்ம்ம்.. இவ்வளவு டேஸ்ட்டா இதுவரைக்கும் நான் பிரியாணி செஞ்சதே இல்ல.. ம்ம்ம்ம்.. செமயா இருக்கு..” என்று சத்தமாகக் கூற, மணியின் கோபமோ கோடைகால வெயிலைப் போலச் சுருக்கென்று ஏறிக்கொண்டே போனது.

“ஆஹா.. என்ன டேஸ்ட்டு..” என்று அவன் கூறியபடி ஒரு வாய் எடுத்து வைக்கும் முன், அவன் கையிலிருந்து அந்தத் தட்டைப் பிடுங்கியவள், அதை ஓரமாக வைத்துவிட்டு அவனை முறைக்க.. அவனோ..

“ஏய்.. கொரங்கே.. உனக்குப் பிரியாணி வேண்டாம்னா ஏண்டி என்னையும் சாப்பிட விடமாட்டீங்கற?” என்று அவன் கேட்க, அவளோ..

“நான் கோபமா இருக்குறப்போ உனக்கு பிரியாணி கேட்குதாடா வெண்ண?” என்றாள் உச்சபட்ச கடுப்பில்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்