Loading

அத்தியாயம் -10

கண்மணிக்கு வருணை அவனோடு தனியே விட்டு விட்டு வருவதில் கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை..!

அவள் அங்கு நின்றுந்தாலும் அவளின் கவனம் முழுக்க வருணையே சுற்றி இருந்தது..! ஊர் தலைவரிடம் செக்கை கொடுத்து விட்டு, வேகமாக அவனை வந்தடைந்தாள்.

கார்தி ஏதோ சொல்லுவதும், அதற்கு வருணின் முகம் வாடுவதையும் பார்த்தவளிற்கு கோபம் எறிமலையாய் பொங்கி கொண்டு வந்தது.

” ச்சே.. இந்த பன்னி மூஞ்சி வாயனுக்கு வேற வேலையே இல்ல போல. எப்ப பாத்தாலும் இவர ஏதாவுது ஒன்னு சொல்லிட்டே இருக்கான். இன்னிக்கு உன்ன பேச்சுற பேச்சுல துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடுறியா இல்லயானு மட்டும் பாரு..!” என மனதினுள் சபதம் எடுத்து கொண்டவள், நேரே கார்த்தியிடம் வந்து ஏதோ பேச வாய் எடுக்க, அவளின் கைய பிடித்து தடுத்தான் வருண். கண்களாலேயே அவளை அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டான்.

” உங்க ஸ்டுடென்ட்ஸ கூட்டிட்டு வந்து எப்போ வேணும்னாலும் செக் பண்ணி செர்டிபிகேட்ஸ் வாங்கிக்கலாம். நாங்க இங்க இன்னும் அஞ்சு நாள்
இருப்போம். “

” அப்படி எல்லாம் உன்ன சும்மா விட்டுற முடியாது. தானா ஆடு வந்து சிக்கும் போது பிரியாணி போடாம இருக்க நான் என்ன பழைய மாறி லூசு கார்த்தினு நெனச்சியா? இப்போ ரொம்ப தெளிவாயிட்டன்..! நீ பண்ணுனதுல்ல கொஞ்சமாவுது திருப்பி பண்ண வேணா!? சோ.. இப்போ இந்த கேம்ப் முடியற வரைக்கும் நானுமே உங்களோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..!
ஒன்னும் அவசரம் இல்லை ஒவ்வொரு பசங்களா செர்டிபிகேட் வாங்கினா போதும். என் கண்ணு முன்னாடி தான் எல்லா நடக்கனும்..! ஏன்னா உன்ன நம்ப முடியாது பாரு! ஒருதடவ உன்ன நம்புனதுக்கே வாழ்க்கை ஃபுல்லா மறக்காத மாறி நீ செஞ்சு விட்டுட்ட..! “

அவனின் வார்த்தை அம்பால் வருணின் மனதை குத்தி கொண்டிருக்க, கண்மணிக்கு சுறுசுறுவென கோவம் வந்தது.

“ஹலோ மிஸ்டர்..! என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? நீங்க சொன்ன மாறி எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது, போனா போவுது பாவமேனு எங்க கேம்ப் மூலமா செர்டிபிகேட் வாங்கி கொடுக்கலாம்னு
பாத்தா ஓவரா தான் பேசறீங்க? கூடவே டேரா போட பாக்கறீங்க! உங்கள எல்லாம் சேத்திக்க முடியாது. உங்களுக்கு எங்க வசதியோ அங்கேயே போய் செர்டிபிகேட்டும் வாங்கிகோங்க”

” கண்மணி கம்முனு இரு..! சரி நீங்க சொன்ன அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் நா பண்ணி வைக்கறேன் ” என்றவன் அவ்விடம் விட்டு நகர, கண்மணிக்கு தான் மிகவும் அவமானமாக போய்விட்டது.

‘அவருக்காக தானே பேசுனேன் இப்படி பேசிட்டு போறாரு..!’ என வருந்தியவள்,

” ஏன் பாஸ் அவன் சொன்னதுக்கு எல்லாம் ஓகே சொன்னேங்க? எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்கற மாறில இருக்கு நீங்க பண்ணுறது? “

” எனக்கு என்னோட ப்ராஜெக்ட்ட நல்லபடியா முடிக்கனும் கண்மணி அவ்ளோ தான். அவன பத்தி எனக்கு நல்லா தெரியும், நா எத வேணானு சொல்லறேனோ அத தான் அவன் வேணும்னே பண்ணுவான்..! “

“அதுக்குனு அவன் பிரச்னை பண்ணுவானு தெரிஞ்சே கூட வெச்சுக்க முடியுமா?”

” எனக்கு டைம் இல்ல கண்மணி எப்படியாவுது சீக்கிரம் இத முடிக்கனும் புரிஞ்கோ !” என்றவனின் முகத்தில் குழப்பமும் கவலையும் படர்ந்திருந்தது.

அவனின் கவலை முகத்தை பார்த்தவளிற்கு மனம் கணக்க,
“இப்படி மூஞ்ச வெச்சிக்காதீங்க..! சரி விடுங்க அதான் நா இருக்கேன்ல.. என்னய தாண்டி உங்கள எந்த சக்தியும் ஒன்னும் பண்ணிற முடியாது. கண்மணி இருக்க பயமேன்..!”

ஆயிற்று.. இதோடு ரெண்டு நாட்கள் கார்த்தி அவர்களுடன் வந்து தங்கி..!

கண்மணிக்கு எங்கேயாவுது போய் நங் நங்கு என்று தலையை இடித்து கொள்ளலாம் போல் இருந்தது. ஏன் என்றால் கார்த்தி கேட்ட கேள்வி அப்படி..!

” அல்லோ கேம்ப் நடந்தி ஊருக்கு சேவ பண்ணுறவங்களே யாராவது இருக்கீங்களா இங்க வாங்க கொஞ்சம் எமர்ஜென்சி ” என ரோட்டில் இருந்து கத்தி கொண்டிருந்தான் கார்த்தி.

” அய்யோஓஓ.. ஈஷ்வரா இவன் தொலை தாங்க முடிலயே!” என சலித்து கொண்ட கண்மணி.வேண்டா வெறுப்பாக அவன் முன்பு வந்து நின்றாள்.

” என்ன “

” என்ன என்னனு கேக்கற.. மரியாதை மரியாதையா பேசும்மா!”

“ஓஹோ..! அப்படியே ஆகட்டும் ஐயா.. முதியவர் ஐயா..! தங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருப்பின் தயவு செய்து காவல் நிலையத்திலேயோ அல்லது மனநிலை மருந்தவமனையையோ நாடி போகவும். இப்படி எங்கள் நாடி நரம்பு எல்லாம் வெடித்து சிதறும் அளவிற்கு உங்களின் கேள்விக்கணையால் எங்களை நார் நாறாக கிழித்து தொங்க விட வேண்டாம்..! கூறும் கூறி தொலையும் என்ன புகார் உமக்கு”

அவளின் செயலில் மனதினுள் சிரித்தவன் அதை வெளி காட்டி கொள்ளாது, ” புகார் எனக்கு இல்ல இவங்களுக்கு தான்” என்றான் கையில் வைத்திருக்கும் ஆட்டு குட்டியை பார்த்து..!

” என்னவாம் பிரச்சனை “

” அப்படி கேளு..! இந்த ஆட்டு குட்டி சாருக்கு கால் பிராக்ஷர் ஆயிடுச்சாம். காலையில்ல இருந்து ஒரே அழுக..! அவங்க அம்மா கிட்ட பேசி இங்க வைத்தியம் பாத்துக்கலாம்னு கூட்டிட்டு வந்துட்டேன்..! போ.. போ.. போய் டாக்டர வர சொல்லு வீட்டுல பையன காணோனு தவிச்சிட்டு இருப்பாங்கள..!?
பாவம் ரொம்ப வலி போல மூஞ்சி எப்படி வாடி கிடக்குது பாரு! என்ன முழிக்கற? இது எல்லாம் சரிப்பட்டு வராது. எங்க அவன், உன் பாஸு..!?கூப்பிட்டு அவன, என்னமோ ஊர்காரங்களுக்கு கேம்ப் நடத்தி நல்லது பண்ணுறேன்னு ஊர் மக்கள ஏமாத்த பாக்கறான?வர சொல்லு அவன மொதல..!”

காதில் புகை வராத குறை தான் கண்மணிக்கு..! வந்த நாள் முதல் இதே போல் தான் ஏதோ ஓர் கலவரம் செய்து கொண்டே இருக்கிறான். வருணை காப்பாற்ற பலி ஆடு போல் மாட்டி கொள்வது என்னவோ கண்மணி தான்..!

அப்படி தான் அன்று, கேம்ப்பிற்கு வந்த ஏதோ ஓர் பாட்டி இரும்பி விட்டாறாம்..! அதற்கு அவன் அவர்கள் கேம்ப் நடத்தும் தெரு முழுவதுமே கண்மணியை கூட்ட விட்டுவிட்டான்..

இது போல் இன்னும் பல..!!! இவை அனைத்தையும் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான் வருண்.

அடபாவிஈஈஈ..! உன்ன ஏதோ பெரிய வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி வெச்சா இப்படி பண்ணுறியே..!!
அப்போ டம்மி டப்பாவாடா நீயு..!

வெக்கம் அவமானம் துக்கம்..!
படிக்கற உங்களுக்கு மட்டும் இல்ல எழுதற எனக்குதேன்..!!!

அஷ்வினி அனுப்பிய சாம்பிள் மாடல்களை பார்த்து கொண்டிருந்தாள் சாத்விகா.

மகிஷா அவள் முதுகில் ஏறி விளையாடி கொண்டிருந்தாள்.

“மகிம்மா, அம்மா ஒர்க்கா இருக்கேன் அந்த பக்கம் போ “

“ம்ஹ்ம்.. மம்மி கூட தான் விளையாடுவேன் “

” போய் பார்பி டால் கூட விளையாடுவியாம். அப்றம் அம்மா வந்து உன்கூட விளையாட சேந்துப்பனாம் ஓகேவா? “

“மாட்டேன் மாட்டேன் ” என்றவள் அவளின் ஜடையை பிடித்து இழுக்க,

” சொன்னா கேக்க மாட்டியா ” என சுள்ளேன்ன கத்தினாள் சாத்விகா.

அதில் மிரண்ட குழந்தை உதட்டை பிதுக்கி கொண்டு அழ ஆரம்பிக்க, துருவ் தான் மகளை தூக்கி கொண்டான்.

” அச்சசோ கண்ணம்மா. அம்மா இல்லனா என்ன? அப்பா கூட விளையாடலாம் வாங்க செல்லம் ” என மகளை கொஞ்சியவன் மனைவியை முறைக்க தவறவில்லை..!

‘க்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ‘ என சலித்து கொண்டவள் வேலையில் மூழ்கி போனாள்.

அன்று நடந்த சண்டைக்கு பிறகு இருவருமே பேசி கொள்ளவில்லை. அவரவர் நியாயம் அவரவருக்கு பெரிதாகி போக, துணையிடமே குறை தேடியது மனம்.

பச்சை கண்ணாடி போட்டு கொண்டு பார்த்தால் அனைத்தும் பச்சையாக தான் தெரியுமாம்..! அப்படி தான் ஆகி விட்டது அவர்கள் நிலமை..!

அசையாய் அரவணைத்த விஷயங்கள் யாவும் இப்பொழுது தொல்லையாகி போனது..!

அவன் எப்பொழுதும் சாப்பிட தட்டை டைனிங் டேபிளிலேயே தான் வைத்து விட்டு செல்வான். சிறு வயது முதற் கொண்டே அவனின் பழக்கம் அது.
அவளும் இந்த நான்கு வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அதை சுமையாக எண்ணியது இல்லை. ஆனால் இப்பொழுது அவளிற்கு அது குறையாக தெரிய ஆரம்பித்தது.

” சாப்பட்ட ப்ளேட்ட எடுக்க வேண்டியது தானே! நா என்ன உங்களுக்கு வெச்ச வேலகாரியா? “

” அப்படி தான் டி வெப்பன் உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்கோ..!”

குபு குபுவென கோபம் கொப்பளித்தது அவளிற்குள்..!

எப்பொழுதும் ஆஃபிஸ் கிளம்பும் முன் அவனின் சட்டையை அவள் தான் ஐயன் செய்து வைப்பாள். இன்று வேண்டும் என்றே அதை செய்யாமல் விட்டுவிட்டாள்.

” என் வேலைய இனி யாரும் பாக்க தேவ இல்ல..! நானே பாத்துப்பேன். ” என்றவன் அவசரமாக ஐயன் செய்கிறேன் என கையை பொசுக்கி கொண்டது தான் மிச்சம்.

உள்ளே ஓர் நிமிடம் மனம் துடித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவள், அவனை கண்டும் காணாதது போல் தான் இருந்தாள்..!

‘ அனுபவிக்கட்டும் நா எத்தன தடவ அழுதிருப்பேன் எதாவுது கண்டு கிட்டாரா ‘ அவள் மனம் அவளிற்கு வக்காளத்த வாங்கியது..!

எப்பொழுதும் விடுமுறை நாட்களில் இரண்டு மணி நேரம் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆட செல்வான் துருவ்.

இந்த வாரம் வேண்டும் என்றே அவன் கிளம்பும் நேரம் பார்த்து மகளை அவனோடு விளையாட விட்டுவிட்டாள். மகளின் அடத்தை தாண்டி அவனால் வெளியே செல்ல முடியவில்லை. அவள் பார்த்து கொண்டால் பரவாயில்லை, ஆனால் அவள் தான் வேலை இருக்கிறது என லேப்டாப்புடன் உட்கார்ந்து விட்டாளே..!!

முதல் முறையாக அவள் வேலைக்கு செல்வதை வெறுத்தான் துருவ்..!
அவனை அவமதிப்பதற்காகவே இவள் இப்படி நடந்து கொள்கிறாள், என எண்ணினான். எல்லா பிரச்சனையும் அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து தான் என தப்பு கணக்கு போட்டவன்.

அதை அவளிடமே கூறி வைக்க, சலங்கையில்லாமலேயே ஆடி விட்டாள் சாத்வி.

இருவரும் ஒருவரை ஒருவர், மாற்றி மாற்றி குறை கூறி அவர்களுக்குள் அடக்கி ஆள நினைத்து தோற்று போனர்.

மணவாழ்கை எனப்படுவது பட்டம் விடுவது போல் தான்..!

எவ்வளவுக்கு எவ்வளவு அந்த கயிற்றை நாம் நம்பிக்கையோடு விடுகிறோமோ அந்த அளவிற்கு அது உயர பறக்கும்..!

பட்டத்தை கைக்குள் அடக்க நினைத்து இறுகப்பற்றி இழுத்தால், கையையும் கிழித்து விட்டு பட்டமும் அறுந்து போகும்..!

இரவு உணவு ஊர் தலைவரின் வீட்டில் இருந்து வந்தது. அவர் வீடுக்கே கூப்பிடறார் ஆனால் வருண் தான் மறுத்து விட்டான்.

” எங்க ஊருக்கு வந்துருக்க ஒரம்பர நீங்க..! கண்டிப்பா ஒரு வேள சாப்பாடாவுது சாப்டே ஆகனும்” என வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

அதை பார்த்த உடனே கண்மணிக்கு குஷி ஆகிவிட்டது. ‘ ஐ.. சோறு சோறு வீட்டு சோறு..!’ என மனதிற்குள்ளவே குத்தாட்டம் போட்டவள்,

” பாஸ் வெளிய ஃபையர் கேம்ப் மாறி செட் பண்ணி எல்லாரும் சுத்தி உக்காந்து சாப்பிடலாமா? சூப்பரா இருக்கும் பாஸ்..! எனக்கு ரொம்ப நாள் ஆச அப்படி சாப்பிடனும்னு நா போய் எல்லாம் ரெடி பண்ணுறேன் “

உண்மையிலேயே நிலவொளியில் , குளிர்காற்றும், நெருப்பில் இருந்து வந்த கதகதப்பும் ஒன்றாய் சேர்ந்து வீசிட, மனதிற்கு அந்த காட்சி அத்தனை இதத்தை அள்ளி தந்தது..!

சுற்றி அனைவரும் உக்கார்ந்து கொள்ள கண்மணி தான் பரிமாறி கொண்டிருந்தாள்.

” இந்தாங்க பிரியாணி வெச்சிக்கோங்க..! சாப்பிடுங்க இது எப்படி பத்தும்..! மட்டன் கோலா உருண்ட வெறும் பத்து பீஸ் தானே வெச்சேன் அதுலாம் சாப்பிடலாம் அப்றம் இருங்க போய் சில்லி கொண்டு வரேன்..!” என வருணின் தட்டையே நிறைத்து கொண்டிருந்தாள் கண்மணி.

வருண் பக்கத்தில் வெறும் தட்டுடன் அமர்ந்திருந்த மாதவோ, ” அம்மாடி பரதேவத..! ஏன் இப்படி கிள்ளி வைக்கற பேசாம குண்டாவோட ஒரேடியா கொட்டிறேன்..! நீ பரிமாறுறேனு சொல்லும் போதே சுதாரிச்சிருக்கனும்
வெறும் ப்ளேட்ட பாத்தே எனக்கு வெறி ஆகுது..! ஒழுங்கா எனக்கு போடுறியா இல்லயா.”

” ம்ம்ச் இரு டா டேங்கர் லாரி..! அதான் என்னமோ ஜிம் போறேன் டையட் இருக்கேன்னு அன்னைக்கு சொன்னில இப்போ என்ன வந்து சோறு கேக்கற? சோறு எல்லாம் கிடையாது அந்த பக்கமா போனேனா புல்லு இருக்கும் அத போய் மேஞ்சுக்க போ..!”

அதில் கிளுக் என சிரித்த அஷ்வினி,
“இருங்க நா போய் கொண்டு வரேன்..!”

‘ஆஹா.. இவ கொண்டு வாருவானு தெரிஞ்சி இருந்தா முன்னாடியே சண்ட போட்டு இருப்பேனே!’ என தன்னை தானே கடிந்து கொண்ட மாதவன்,

அவள் பரிமாறும் அழகை ரசித்து கொண்டிருந்தான். ” இதே மாறியே இப்பவும் இருந்தா நல்லா இருக்கும் “

” என்ன “

” ஒன்னுமில்ல” என்றான் மெல்லிய சிரிப்போடு.

கண்மணி தானும் தட்டில் போட்டு கொண்டு வருணின் அருகில் அமரலாம் என போக அதற்குள் கார்த்தி வந்தமர்ந்து விட்டான்.

‘ வந்துருச்சு டா கரடி..!’

“தேங்க் யூ ” என்றவன் அவள் கையில் இருக்கும் தட்டையும் பிடிங்கி கொள்ள, நன்றாகவே அவனை முறைத்து பார்த்தவள் மாதவை அதட்டினாள், ” இந்தா டேய் எந்திரி மொதல்ல..! நானே சோகமா இருக்கேன், நீ மட்டும் சோடியா உக்கார பாக்கறீயோ எந்திரிச்சி போடா தடியா..!” என்றவள் அவனை விரட்டி விட்டு அஷ்வினி பக்கத்தில் அமர்த்துக்கொண்டாள்.

‘ அடி பிசாசு குட்டி..! நீ சோகமா இருந்தா என் சோடிய பிரிச்சு விடுவியா? மொதல உன் தொலையில்ல இருந்து எஸ்கேப் ஆக உனக்கு ஒரு ஜோடிய கோர்த்து விடனும்..! இப்போ தான் அவளே ஏதோ கொஞ்சமா சிரிச்சி பேச ஆரம்பிச்சிருக்கா அது பொறுக்கலயா உனக்கு.. வன்மம் சூழ் உலகு டா இது மாதவா..’

அவனின் கதறலிற்கு செவி கொடுப்போர் இங்கு யாருமில்லை..!

அஷ்வினி சீக்கிரமே சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அதை கவனித்த கண்மணி என்ன வென்று வினவ,

“இல்ல, வயிறு ஃபுல் ஆகிருச்சி. போதும் தூக்கமா வருது பை ” என சொல்லி விட்டு செல்ல, அவளின் முகத்தில் உள்ள மாற்றதை கவனித்த மாதவனிற்கு ஏதோ சரி இல்லை என தோன்றியது. ஆனால் உடனே அவள் பின்னால் செல்ல முடியாததால் . போன் பேசுவது போல் அங்கிருந்து நகர்ந்தவன் யாரும் பார்க்கா வண்ணம் அஷ்வினியின் அறையை நோக்கி சென்றான்.

கதவு சின்ன இடைவெளி விட்டு திறந்து தான் இருந்தது, இருப்பினும் அவளின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்வது அநாகரிகமாக இருக்கும் என கருதியவன், அவளை அழைத்து பார்த்தான். எந்த பதிலும் இல்லாமல் போக, கதவி நீக்கி உள்ளே போக பாத்ரூம்மில் அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது.

எதுவும் யோசிக்காமல் உள்ளே போய் அவள் தலையை இறுக பற்றி கொண்டான்.

அவள் வாந்தி எடுத்து முடித்த பின்,

“என்ன ஆச்சி ஏன் இப்படி? ” என கேள்வி கேட்டவன் அப்பொழுது தான் அவளை முழுதாக கவனித்தான்.

கைகளில் அங்கங்கே சிவப்பு சிவப்பாக தடிப்பு வந்திருந்தது. முகத்தில் வேர்வை துளிகள் துளிர்க்க சரியாக நிக்க கூட முடியாமல் தடுமாறி கொண்டிருந்தாள்.

” அய்யோ.. இத எப்படி மறந்தேன் ” என பதறியவன்,

” உனக்கு தான் கத்திரிகா அல்லர்ஜினு தெரியும்ல அப்பறம் ஏன் சாப்பிட.. சே என் தப்பு தான் நா தான் ஒழுங்கா கவனிக்காம விட்டுட்டேன்! வா ஹாஸ்பிட்டல்
போலாம் “

” இல்ல டேப்லேட் போட்டா சரியாகிரும் ” அவள் சொல்லி முடிபதற்குள்,

“எங்க ” என அவன் பாட்டிற்கு பதட்டமாய் ரூம்மில் தேட அவளின் ஹாண்ட் பாக்கை திறந்த மாத்திரையை எடுத்திருந்தாள்.

” இந்தா தண்ணி ” என பதட்டமாக பாட்டலின் மூடியை கழட்டி அவளிடம் நீட்ட அவனே பாதி தண்ணீரை கொட்டி இருந்தான்.

அவள் மாத்திரையை போட்ட பிறகு தான் அவனிற்கு மூச்சே வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவளும் தன்னிலை அடைய,

“எதுக்கும் ஹாஸ்பிட்டல் போலாமா ” என்றான் பரிதவிப்பாய்.

“இல்ல.. சரி ஆகிரும் எனக்கு தெரியும் “

அவளின் கையை பற்றி கொண்டவன்,

” ஒரு நிமிஷம் உயிரே போய்யிருச்சு தெரியுமா ” என்றான் கலக்கமாக

அவனின் பேச்சில் தடுமாறி போனாள் அஷ்வினி.

“அது எப்படி தான் மித்தவங்க சோத்துல்ல மண்ணள்ளி போட்டுட்டு இப்படி நிம்மதியா சாப்பிட முடியுதோ “
வருணை பார்த்து கேட்டான் கார்த்தி.

அவன் பதில் ஏதும் பேசாமல் சாப்பிடுவதை தொடர,

“கொஞ்சம் கூட உருத்தவே இல்லல ஒனக்கு? அது எப்படி உருத்தும் எல்லாம் தெரிஞ்சி தானே பண்ண! ஆனா ஒன்னு என் சந்தோசத்த கெடுத்த நீ மட்டும் சந்தோசமாவே இருக்க கூடாது..!”

வெற்று புன்னகை வீசினான் வருண்.

வருண் முன்னாடியே கண்மணியிடம் எச்சரித்திருந்தான் அவனிற்கும் கார்த்திக்கும் நடுவுல வர கூடாது என.

இருந்தாலும் கண்மணியால் கார்த்தியின் பேச்சுக்களை சகித்து கொள்ள முடியவில்லை.

” இப்போ இவரு அப்படி என பண்ணிட்டாருனு இப்படி பேசறீங்க? ” பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டாள்.

“அத இந்த உத்தமன் கிட்டயே கேளு என்ன பண்ணுனானு “

அன்று தான் கல்லூரியின் கடைசி நாள். செமஸ்டர் எக்ஸாம் எழுதி முடித்து விட்டு
அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.

சிலரின் முகத்தில் கல்லூரி முடித்த சந்தோசம்,
சிலரின் முகத்தில் பிரிவின் சோகம்,
சிலரின் முகத்தில் எதிர்காலத்தின் பயம், என ஓர் கலவையாக தான் இருந்தது அந்த கல்லூரி வளாகம்.

” என்ன டா கார்த்தி ஒரு மாறி இருக்க? என்ன ஃபீலிங்க்ஸா? ” என்றான் வருண் கிண்டலாக.

“சீ.. தூ.. அதுலாம் ஒன்னும் இல்ல.. அம்மா ஊருக்கு வர சொல்லறாங்க டா! ஆனா என்னோட ஸ்போர்ட்ஸ் கரீயர் இங்க தான் இருக்கு..! நா நேஷனல் டோர்னமெண்ட்ல ஜெயிச்சா தான் எனக்கு ஸ்பான்ர்ஸ் கிடைப்பாங்க அது வரைக்கும் ட்ரைனிங் எடுக்கறதுக்கு வீட்டுல காசு கேக்கவும் புடிக்கல.. 9-5 ஜாப் போனா என்னால ஸ்போர்ட்ஸ்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாது. அதான் ஒரே யோசனையா இருக்கு டா..”

” இவளோ தானா? இதுக்காடா இப்படி உக்காந்துட்டு இருந்த? “

” இவளோ தானாவா? எங்க நீ ஒரு ஐடியா சொல்லு பாப்போம்!”

“எங்க அப்பாவும் ஆஃபிஸ் வா ஆஃபிஸ் வாங்கறாரு..! அங்க தனியா போக எனக்கும் போர் அடிக்கும் நீயு என்கூட வந்துரு..! ஐ.. மீன் சும்மா பேருக்கு மட்டும் வா போதும். அதுல வர சம்பளத்த வெச்சு நல்ல கோச் போட்டு நேஷனல்ஸ்க்கு பிரிப்பேர் பண்ணு..! சோ சிம்பிள்.”

” மாப்ள..! ” என ஆனந்தமாக கட்டி கொண்டான் வருணை.

” கண்டிப்பா நா சம்பாரிச்சி அந்த காச திருப்பி கொடுத்துருவேன் டா கணக்கு வெச்சிக்கோ..!”

“ம்ம்க்கும் இது தான் தேவை இல்லாத ஆணிங்கறது..! நீ எனக்கு தர மிக பெரிய கிப்ட் என்ன தெரியுமா? இந்தியன் டீமோட ஜெர்ஸ்ஸிய போடறது.”

கல்லூரி முடித்து இரண்டு வருடங்கள் ஆகிற்று.

இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது பாஸ்கெட்பால் நேஷனல் டோர்னமெண்டிர்க்கு..!

மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து கொண்டிருந்தான் கார்த்தி.
அவனின் அசாத்திய திறமையை பார்த்து நிச்சயம் அவன் தான் ஜெய்ப்பான் என்ன அனைவரும் அவனை பாராட்டி கொண்டிருந்தனர்.

டோர்னமெண்டிர்க்கு இன்னும் இரண்டு நாட்களே மீதம் இருக்க,

” கார்த்தி ஒரு முக்கியமான வேல டா, திருச்சி வரைக்கும் போய் பேமெண்ட் கொடுத்துட்டு வரனும். யாரயும் நம்ப முடியாது நீயே நேர்ல போய்
பேசிட்டு வா “

“இன்னும் ரெண்டு நாள் தான் டா இருக்கு மேட்ச்க்கு..! எல்லாம் பேக் பண்ணனும். அங்க சப்மிட் பண்ண வேண்டிய செர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்து வைக்கனும் “

” அதுலா நா பாத்துக்கறேன் நீ போய்ட்டு வா “

திருச்சிக்கு பஸ் ஏற பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தவன், அம்மாவிடம் பேசலாம் என போன்னை தேட, அப்பொழுது தான் உணர்ந்தான் போனை கொண்டு வரவில்லை என..! போன்னை சார்ஜ் போட்டிருந்தவன் கிளம்பும் முன் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருக்க அதை அப்படியே மறந்து விட்டிருந்தான்.

‘ஸ்சோஓஓ ‘ என நொந்து கொண்டவனிற்கு மறுபடியும் ரூம்மிற்கு செல்ல சோம்பேறி தனமாக இருந்தது.

வருணை எடுத்து வர சொல்லலாம் என அழைக்க, அவனோ எடுத்தபாடில்லை.

” இந்த எருமைக்கு இருக்கு ” என அவனை திட்டி கொண்டே அவன் ரூம்மிற்கு வந்து சேர்ந்தான் கார்த்தி..!

பூட்டி இருந்த கதவு நீக்கி இருக்க, சந்தேகத்துடன் உள்ளே நுழைந்தவன். அங்கு இருந்த காட்சியை பார்த்து அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தான்.

நேஷனல் டோர்னமெண்ட்டில் கலந்துகொள்ள சமர்ப்பிக்க வேண்டிய அவனின் செர்டிபிகேட்ஸ் அனைத்தையும் தீயிட்டு எறித்து கொண்டிருந்தான் வருண்..!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
29
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. kavitharajasekaran28175

      Hi,
      Humour sense if urs is very nice tackled thru Kanmani’s dialogue delivery with all ethugai monais and kalaai words…very nice to read..
      Karthik kita Ava panna alaparai is cute…
      Then the fb n the twist… interesting.. waiting for your next episode dr🔥🔥🔥