Loading

 

 

 

 

 

வீட்டிற்கு வந்து பூட்டிய கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

 

 

“அகரன்! வா சாப்பிடலாம். நா நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்.”

 

 

வீடு முழுவதும் அமைதி மட்டுமே நிலவியது.

 

 

மீண்டும் ஒரு முறை அழைத்து விட்டு அவனின் அறை நோக்கிச் சென்றாள்.

 

அறையும் வெறுமையையே பரிசளித்தது.

 

 

“எங்க போனான் இவன்?”என மனதில் நினைத்துக் கொண்டு அறையின் வெளியே சென்று தேட முற்படுகையில் அறையின் அருகே இருந்த மேசையில் ஒரு மண்நிற காகிதம் தென்பட்டது.

 

 

காகிதத்தை முன்னாலும் பின்னாலும் திருப்பி பார்த்தாள்.ஆனால் அதில் எதுவும் இருக்கவில்லை. பின் அதனை கீழே எறிந்து விட்டு நகரும் போது, காகிதம் பறந்து வந்து தீராவின் கையில் அடைக்கலமானது. 

அவளும் ஒன்றும் புரியாமல் தன் வலக்கையை எடுத்து காகிதத்தில் வைத்த நொடி 

கண்கள் கூச ஒரு ஒளி தோன்றி மறைந்தது.

 

 

தன் கையை அதன் மீதிருந்து எடுத்துப் பார்க்கும் போது வெறுமையாய் இருந்த காகிதத்தில் எழுத்துக்கள் தென்பட்டன.

 

அதில்….

 

 

“நான் உங்களை பாக்க 

நீங்க போற இடமெல்லாம் வந்தேன். ஆனா நான்  அந்த  நயவஞ்சகனுக்கு  பயந்து உங்க முன்னாடி வரல. கடைசியா உங்கள பாத்தே ஆகனும்னு வந்தப்போ தான் அவனோட ஆட்களால தாக்கப்பட்டு மயங்கி விழுந்து இருந்தேன்.

 

 

கண் முழிச்சதும் உங்கள எப்பிடி பாக்குறதுனு யோசிச்சிட்டு இருந்தப்போ தான் நீங்க என்னை பாக்க அங்க வந்தீங்க. உங்கள பாத்த சந்தோஷத்தில எனக்கு பேச்சே வரல.

 

நீங்க என்னை சொந்தமா நினைச்சு கூப்பிட்டீங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்பறம் நீங்க, உங்களுக்கு யாருமே இல்லனு சொன்னதும்

 என்னால தாங்கிக்கவே முடியல. ஏன்னா நானும் அதே வலியை அனுபவிச்சிருக்கேன்.

 

அதனால உங்க கூடவே வாரேன்னு சொன்னேன்.

 

 

நம்ம ஊரு ரொம்ப அழகா, அமைதியா இருந்தது. நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஆனா அவன் எல்லாத்தையும் அழிச்சிட்டான். உங்க அம்மாவையும் அப்பாவையும் கொன்னுட்டான். இனி உங்களையும் கொல்லப்பார்ப்பான். 

 

நான் உயிரோட இருக்கது தெரிஞ்சு தேடிட்டுருப்பான். அதனால நான் உங்க கூட இருக்கது ஆபத்து. 

 

 

நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது எல்லாம் உங்க அப்பா கிட்ட தான் தெரிஞ்சுக்க முடியும். அவ்வளவு தான் இப்ப நான் உங்க கிட்ட சொல்ல முடியும்”

 

(ஒவ்வொரு வரிகளும் வாசித்து முடிக்கும் போது மறைந்து சென்று, அடுத்த வரிகள் தோன்றின)

 

 

“உங்க தேடல் பயணம் ஆரம்பமாகி முடியும் நேரம் நான் உங்க கூட இருப்பேன்னு நம்புறேன். 

உங்களால மட்டும் தான் தொலைஞ்சு போன எங்க சந்தோஷத்த திருப்பி தர முடியும். உங்களுக்கு உறுதுணையா எப்போதும் இருக்கனும்னு ஆசை படுறேன். ஆனா என்னைக்காவது உங்களுக்கு உறுதுணையா இருக்க முடியாத நிலைமை வந்தா என்னை மனிச்சிடுங்க அக்கா.

 

 

இப்போ உங்ககிட்ட இருந்து கொஞ்சம் விலகியிருக்கேன்.

 

 

-அகரன்- “

 

 

முழுவதும் அவள் வாசித்து முடித்ததும் 

 

அகரனது கடிதம் தங்க நிற தூசுத்துகள்களாக மாறி காற்றில் பறந்து மறைந்து சென்றது…

 

 

மனதில் எழுந்த குழப்பத்துடன் அதே இடத்தில் அமர்ந்தாள். 

 

 

நினைவுகள் அவளது கடந்த காலத்தை நோக்கி பயணித்தது….

 

 

 

கள்ளங்கபடமற்ற அழகான முகத்துடன் கவலை நிறைந்த கண்களுடன் 

 

கன்னத்தில் கை வைத்து 

 

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தாள்

 

ஒரு எட்டு வயது சிறுமி….

 

 

ஆறடியில் கம்பீரமான ஒரு உருவம் இதனைப் பார்த்து தானும் ஒரு சிறுவனாய் மாறி அவளைப் போன்றே தானும் கன்னத்தில் கை வைத்து , அவளருகே அமர்ந்து கொண்டது.

 

 

அவ்வுருவத்தை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் அதே நிலையில் அமர்ந்து கொண்டாள்.

 

 

“ஏன் என்னோட தீராக்குட்டி இப்பிடி இருக்கீங்க?”

 

 

“அம்மா என்னை அடிச்சிட்டாங்க”

 

 

“ஏன் அம்மா அடிச்சாங்க? நீங்க ஏதாவது தப்பு பண்ணிங்களா?”

 

 

இல்லை என வேகமாக தலையாட்டி பின்

தனது தந்தையின் நீலக்கண்களைப் பார்த்து ஆம் என தலையாட்டினாள்.

 

 

அவளது தந்தை அவளருகே அமர்ந்தவாறே வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு “அப்பிடி என்ன பண்ணீங்க?” என குனிந்து மெதுவான குரலில் கேட்டான் மருதன்.

 

 

“நீங்க, ஒரு பொருள காத்துல மிதக்க வைக்கிறத சொல்லிக்கொடுத்தீங்கல்ல” என இழுக்க

 

 

“ஆமா”என அவளைப்போலவே இழுத்து கூறினான்.

 

 

“அத அம்மா கிட்ட செஞ்சு காட்டனும்னு போனேனா…

அப்ப அம்மா , சாப்பாட்டெல்லாம் மேசைல எடுத்து வைங்கன்னு சொன்னாங்க “

 

 

“சரி..” என அவனும் பொறுமையாக கதை கேட்டான்.

 

 

“அப்ப…

 

சாப்பாட்டெல்லாத்தையும் காத்துல பறக்கவச்சு மேசைக்கு கிட்ட கொண்டு வரும் போது தவறி கீழ கொட்டிருச்சு. அதான் அம்மா அடிச்சாங்க. 

 

அம்மா என்னை அடிச்சனால அவங்க கிட்ட நான் பேச மாட்டேன்”என உதட்டை பிதுக்கினாள்.

 

 

“அப்பிடி சொல்லக் கூடாது. நீங்க தப்பு பண்ணதால தானே அம்மா அடிச்சாங்க” என மெதுவாக கூறினான்.

 

 

“அப்ப அத எனக்கு எடுத்து சொல்லி புரியவச்சிருக்கலாம் தானே எதுக்கு அடிச்சாங்க? எனக்கு வலிக்குது தெரியுமா?” என கன்னத்தை காட்டினாள்.

 

 

“அச்சோ! வலிக்குதா?”என அவள் கன்னத்தில் முத்தமிட்டு

 

“நீங்க சாப்பாட கொட்டிட்டீங்கன்னு ஒரு வேகத்தில அடிச்சிருப்பாங்களே தவிர வேணும்னே அடிச்சிருக்க மாட்டாங்க. ஏன்னா, சாப்பாடு நமக்கு கடவுள் குடுக்குற வரம் மாதிரி

 

அது நிறைய பேருக்கு கிடைக்காம கஷ்டப்படுறாங்க. அப்பிடி இருக்கும் போது கிடைக்கிற சாப்பாட்டை வீணாக்க கூடாது சரியா?”

 

 

“ம்ம்..”என தலையாட்டினாள்.

 

 

“உனக்கு இத அம்மா சொல்லி புரியவச்சிருக்கலாம். 

 

அம்மா அடிச்சதும் தப்பு, நீங்க செஞ்சதும் தப்பு.

 

இப்போ இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மன்னிப்பு கேட்பிங்களாம், அப்பறம் நாங்க மூணு பேரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடுவோமாம்” என தன் புதல்வியை உள்ளே அழைத்துச் செல்ல எத்தனிக்க 

 

கதவருகே நின்றிருந்தாள்…..

 

அளவான உயரமும் மெல்லிய தேகமும் நீண்ட முகமும் அன்பு நிறைந்த அழகான கண்களும் சிறிய உதடுகளும் கொண்ட

 

தீராவின் தாய் மகிழ்நிலா.

 

 

தாயும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ஒரே நேரத்தில் மன்னிப்புக் கோரினர். பின்

இருவரும் சிரித்து விட்டு அணைத்துக்கொண்டனர்.

 

“அம்மா நான் இனி அப்பிடி பண்ண மாட்டேன் மா”

 

 

 

“சாரி டா நானு உங்கள அடிச்சிருக்கக் கூடாது.”

 

 

 

இப்படியே இருவரும் மாறி மாறி அன்புமழை பொழிந்து கொண்டிருந்தனர்.

 

இதனை ரொம்ப நேரமாக பார்த்து பொறுமையிழந்து 

 

“அம்மா! தாயே! ரொம்ப 

பசிக்குது மா

 

தயவுபண்ணி சாப்பாடு போடுங்கம்மா”

 

என கெஞ்சினான்.

 

 

பெண்கள் இருவரும் சிரித்துவிட்டனர்.

 

பின் மூவருமாக உள்ளே சென்று 

 

ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒரு நல்ல உணவைத் தயார் செய்து,

 

மேசையில் சுற்றி அமர்ந்து,சேர்ந்து உண்டனர்.

 

 

மறுநாள்….

 

 

தீரா ஒரு கல் மேடையில் அமர்ந்து 

 

சில மிட்டாய்களை, தன்னைச் சுற்றி ஒவ்வொரு இடத்தில் அந்தரத்தில் தொங்க வைத்து 

 

ஒரு கையால் மிட்டாயை எடுத்து சாப்பிட்டு கொண்டிருக்க,

 

மறுகையின் விரல்கள் காற்றில் இசை மீட்ட 

 

அவ் அழகிய இசைக்கேற்ப

 

மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் தன்னாலே உயிர்ப்பெற்று மேலெழுந்து அசைந்து ஆடியது.

 

 

“ஏய்!!! 

 

நீ இப்போ என்ன பண்ண?” என ஒரு குரல் கேட்கும் திசையில் திடுக்கிட்டுத் திரும்பினாள் தீரா…….

 

 

 

 

 

 

 

அவள் திரும்பிய திசையில்…

 

சுருள் சுருளான கேசம்குறும்பு மின்னும் கண்கள்சிறிய உதடுகள்கொண்ட ஒரு சிறுமி தீராவை நோக்கி நடந்து வந்தாள்…

 

தீரா என்ன செய்வதென்று புரியாமல் அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

 

“நீ இப்போ மேஜிக்(magic) பண்ண தானே? நான் ஹேரிப்போட்டர்(harry potter)பாத்துட்டு என் செல்லம்ஸ் கிட்ட சொன்னேன், மேஜிக் பண்றவுங்க இருப்பாங்கன்னு.ஆனா செல்லம்ஸ் இதெல்லாம் கற்பனை னு சொன்னாங்க.

 

“தீரா அவள் பேசுவதைக் கேட்டு விட்டு விழித்துக் கொண்டிருந்தாள். பின் , தன்னை அவள் சந்தித்த நிகழ்வை, அவளது நினைவுகளிலிருந்து அழிப்பதற்கு தன் சக்தியைப் பயன்படுத்த எத்தனிக்கும் போது…

 

“என்னோட பேரு ரக்ஷிதா. எங்க வீட்ல நானு அப்பறம் செல்லம்ஸ் மட்டும் தான். எனக்கு மேஜிக்னா ரொம்ப புடிக்கும். நாம ரெண்டு பேரும் ஃபெரெண்ஸ் ஆவமா?”என்றவள் கேட்ட பின்பு தன் முயற்சியை கைவிட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தாள்.

 

அவள் சிரிப்பதைப் பார்த்து விட்டு

“ஐ!! ஜாலி எனக்கொரு மேஜிக் பண்ற ஃபெரெண்டு கிடைச்சாச்சு.” எனமேலும் கீழும் குதித்தாள்.

 

“ஷ்….சத்தம் போடாத .எனக்கு நீ தான் முதல் ஃபெரெண்ட். ஆனா இத பத்தி வேற யார்க்கிட்டயும் சொல்லக் கூடாது”

 

அவள் வாயில் விரல் வைத்து “சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்” என்றாள்.

 

இப்படியே அவர்கள் சந்திப்பும் தொடர்ந்தது.நட்பும் வளர்ந்தது.தீராவின் வீட்டிலும் ரக்ஷிதா ஒரு அங்கமாகிப்போனாள்.

மருதன் ரக்ஷிதாவைப் பார்த்தவுடன் நிம்மதியை உணர்ந்தான்.

ஆனால் ஒரு காலைப்பொழுது தம் அழகிய கூட்டை வேரோடு அழித்துவிடும் என்பதை அறியாது போயினர்.

 

அந்நாளும் உதயமானது…

 

மகிழ்நிலா, “தீரா இங்க வா” 

 

“சொல்லுங்கமா”

 

தாங்கள் தீராவுடன் இன்றுதான் இருக்கப்போகின்றனர் என்பதை உணர்ந்தனரோ என்பது தெரியவில்லை ஆனால் யாருக்கும் தீங்கு நினைக்காத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தை ஆசையுடன் பார்த்தனர்,அவளின் பெற்றோர்கள்…

 

“ஏன் என்ன இப்பிடி பாத்துட்டு இருக்கீங்க?”

 

மருதன்,”ஒன்னுமில்லை சும்மா தான். சரி இன்னைக்கு நான் உனக்கு சொல்லிக்குடுத்தெல்லாம் செஞ்சுக்காட்டனும் சரியா? இப்ப உன்ன யாராவது தாக்க வந்தா எப்பிடி உன்ன பாதுகாக்கப்போற என்றத பாக்கபோறோம்.”

 

“நான் தயார்பா”தந்தையும் தாயும் ஒரு புறம் இருக்க

மகளோ அவர்களின் எதிர்புறம் சற்றுத்தள்ளி நின்றாள்.

 

மூவரின் வலக்கையிலும் ஒரு ஒளிப்பிளம்பு தோன்றியது. பெற்றோர் இருவரும் அவ்வொளிப்பிழம்புகளை தம் மகளை நோக்கி அனுப்பிக்கொண்டிருக்க,அதனை தனது கையில் இருக்கும் ஒளிப்பிழம்பால் தாக்கினாள்.இவளை தாக்க வந்த பிளம்புகளோசிறுத்துகள்களாக மாறித்தெறித்து மறைந்தது.

 

“ம்ம்..பரவாயில்லை ஆனா நீ உங்க அம்மா அளவுக்கு இல்லை.திரும்பவும் முயற்சி பண்ணு இந்த முறை தாக்குதல் பலமா இருக்கும்”

 

“பேச்ச குறைச்சு தாக்குதலை ஆரம்பிங்க”

 

மகிழ்நிலா,”உங்க மக உங்களமாதிரியே தான்  இருக்கா”

 

“உங்களுக்கும் தனியா சொல்லனுமா?”

 

“நீ ரொம்ப பேசுற. இப்ப பாரு தாக்குதலை” என தன் இருகைகளையும் நீட்டியவாறே இறுக்கிப்பிணைத்து சிறிது நேரம் கண்களை மூடித்திறந்து பிணைத்திருந்த கைகளை விடுவிக்க மூன்று சிவப்பு நிறப்பிளம்புகளை அவளை நோக்கி அனுப்பினாள்.

 

அவளும் சலைக்காதுகண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நீல நிற ஒளிப்பிழம்பால் தாக்கி சிதறவைத்தாள்.

 

பெற்றோர் தம் மகளின் திறமையைக் கண்டு பூரிப்படைந்தனர்.”நீ உங்க அம்மாவ சமாளிக்கலாம் ஆனா என்னை சமாளிக்க முடியாது” என கூறியவாறே அடுத்த தாக்குதலுக்கு தயாராக காற்றில் மிதந்தான்.

அவளும் தன் தந்தைக்கு சலைத்தவளில்லை என்பதை நிரூபிக்கதானும் காற்றில் மிதந்து தாக்குதலுக்கு தயாராக நின்றாள்.

 

காலம் தாழ்த்தாது தன் இருகைகளிலும் நீல நிற பிழம்புகளை ஏந்தி தன் ஒரு காலை காற்றிலேயே முன்னால் வைத்து தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்க தானும் தன் இடக்கையில் நீல நிறப்பிழம்பை ஏந்தி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இன்னொரு நீல நிறப்பிழம்பு அவளைத் தாக்க வந்துக்கொண்டிருந்தது.

அது வரும் திசையை நோக்க,

அங்கு நிலா ஒரு சவால் பார்வையுடன் சிரித்தபடி நின்றிருந்தாள்.

அவளும் ஒரு புன்முறுவலுடன் தன் தந்தையின் தாக்குதலுக்கு தன் இடக்கையால் ஈடு கொடுத்தவாறேதன் வலக்கையால் அந்த ஒளிப்பிழம்புக்கு பதிலளித்தாள்.

 

இறுதியில் தந்தையின் சவாலுக்கும் பதில் கொடுத்து வெற்றியடைந்தாள்.”இப்ப என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?”

 

“நீ திறமைசாலி தான். அதனால உனக்கொரு சின்ன பரிசு” என மருதன் கூறி முடிக்கவும்

தீராவின் கழுத்தைச்சுற்றி ஒரு மெல்லிய ஒளி தோன்றி மறையவும் சரியாக இருந்தது.

 

மெல்லிய வெள்ளி நிற சங்கியில்ஒரு ஊதா நிறக் கல்லினுள் இவர்கள் மூவரின் உருவமும் கைக்கோர்த்தப்படி சிரித்துக்கொண்டிருக்கும் பதக்கம் ஒன்று  கோர்க்கப்பட்டு தீராவின் கழுத்தைச் சுற்றி பற்றியிருர்தது.

 

அதனைக் கைகளால் தொட்டுப்பார்த்து மகிழ்ந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

 

அவர்களும் தீராவை அணைத்துக் கொண்டனர்.மூவரின் கைகளும் உடலை இணைத்திருக்க மனமோ அன்பால் பிணைந்திருந்தது.அந்தப்பொழுதை இன்னும் அழகாக்க தீராவின் கழுத்தில் இருந்த பதக்கம் மின்னியது.மருதன் அணைப்பினைத் தளர்த்தி மற்றைய இருவரையும் விளக்கிவிட்டு தீராவைப் பார்த்து”இப்பொ இறுதித்தாக்குதல்” என

 

“நான் தயார்பா”

 

“நீ தான் ஆரம்பிக்கனும். ஆனால் பலமானதா இருக்கனும்”அவளும் சரியென தலையாட்டி விட்டு கண்களை சிறிது நேரம் முடித்திறந்து கைகளை நீட்டிப்பிணைத்து விடுவிக்க 

தங்க நிற ஒளிப்பிழம்பொன்று மூன்றாய்த்திரிந்து இருவரையும் நோக்கிச்செல்ல 

ஒரு பெரிய ஒளி தாக்கியது…..

 

கண்களைக் கசக்கி தீரா விழித்துப் பார்க்க நிலத்தில் விழுந்திருந்தாள்.

 

சுற்றி தன் பெற்றோரைத்தேட

அவர்கள் இருவரும் பேச்சு மூச்சின்றி நிலத்தில் கிடந்தனர்.

தன் கண்களையே நம்ப முடியாமல் அவர்கள் அருகே ஓடிச்சென்று இருவரையும் தட்டி எழுப்பிப் பார்த்தாள்.

அவர்கள் எழும்பவில்லை.இருவருக்கும் மாறி மாறி முத்தமிட்டு மீண்டும் எழுப்பிப் பார்த்தாள்.

 

அவர்கள் எழும்பவில்லை.

 

தன் சக்தியைப் பயன்படுத்தி ஏதேதோ செய்து பார்த்தாள்.

 

அவர்கள் எழும்பவில்லை.

 

கண்களில் கண்ணீருடன் “அம்மா! அப்பா! எங்கிட்ட விளையாடாதீங்க.எனக்கு உங்க கூட சண்டை போட்டு ரொம்ப பசிக்குது எழும்பி வாங்க சாப்பிடலாம்” எனக் கூறியும்

அவர்கள் எழும்பவில்லை.

 

இந்த இழப்பினைஅந்தப் பிஞ்சு உள்ளம் ஏற்காமல் தவித்தது.அவர்களையே பார்த்தப்படி அசைவற்று அமர்ந்திருந்தாள்.அந்நேரம் தீராவைப் பார்க்கவென வந்த ரக்ஷிதா, அவள் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு பயந்து அவளருகே ஓடிச்சென்று பார்க்க தன்னையும் மகளாய் நேசித்த இரு உள்ளங்கள் பேச்சற்று கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.”தீரா ! என்ன நடந்தது?”என குரல் நடுங்க கேட்டாள்.

 

அவளிடம் மௌனமே பதிலாக வந்தது.தீராவின் அருகே அமர்ந்து அவளின் தோளில் கை வைத்து “என்ன நடந்தது தீரா?” என துக்கத்தை அடக்கி கேற்க”எல்லாம் என்னாலதான்! எல்லாம் என்னால்தான் ” எனக் கத்தி

தன்னையே அடித்துக்கொண்டு கதறி அழுதாள்.

 

அவள் சொல்வது புரியாமல் அவளை அணைக்க

தீரா, ரக்ஷிதாதாவின் நெஞ்சில் சாய்ந்து அழுதுக்கொண்டே நடந்தைக் கூறினாள்.

 

அவள் சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல்அவளையே கண்ணீரோடு பார்த்து அணைத்தபடியே அமர்ந்திருந்தாள்…..                                             

 

தொடர்வாள்….

 

 

-கி.பிரஷாதி-

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்