அத்தியாயம் 19
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு இணையாக மக்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகரம்.
‘தி நியூ இன்டியா நீயூஸ்’ சேனல் என்று பொரிக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தின் உள்ளே ஒவ்வொரு செக்ஷனிலும் மக்கள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ரவிச்சந்திரன் தன் ஐடி கார்டைக் காண்பித்து விட்டு அந்த சேனலின் எடிட்டிங் டீமின் ஹெட் ரஞ்சித்தைப் பார்ப்பதற்கு அவன் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார்.
தன் நண்பனின் சித்தப்பா என்று தெரிந்தாலும் அவர் அலுவலக விஷயமாக வந்திருப்பதால் மரியாதை நிமித்தமாக “குட் மார்னிங் சார் உட்காருங்க” என்றான் ரஞ்சித்.
“குட் மார்னிங் ரஞ்சித்” என்று நார்மல் நல விசாரிப்புகள் முடித்து விட்டு ” அப்புறம் ரஞ்சித் மதி இருந்தப்ப வந்த கடத்தல் கேஸ் நியூஸ் பத்தின சில டீடெயில்ஸ் வேனும் எனக்கு. அதைப்பத்தி பேசலாமா?” என்றார் ரவி.
“ம் பேசலாம் சார். நீங்க கேளுங்க” என்றான்.
“நான் நேராக விஷயத்துக்கே வர்றேன். அந்த கேஸ்ல ப்ரூஃப் உயர் அதிகாரிங்க கைக்கு போய் அவங்ககிட்ட இருந்து குற்றவாளிகள் கையில போயிடுச்சுனு நியூஸ் வந்துச்சே. எதை வச்சு அந்த மாதிரி நியூஸ் போட்டேங்க?. ப்ரூஃப் எங்க கிட்ட இருக்குனு டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கே தெரியாதப்போ உங்க சேனலுக்கு எப்படி நியூஸ் கிடைச்சது?. அதுக்கான ஆதாரம் உங்க கிட்ட இருக்கா?” என்று அடுக்கடுக்காக கேள்விக் கேட்டார்.
“அது வந்து சார்…” என்று இழுத்து ‘எப்படி இதற்கு ஆதாரம் இப்போது இல்லை என்று சொல்வது’ என்று நினைத்து விட்டு “அது வந்து சார் எங்களுக்கு அப்போ அன்நோன் நம்பர்ல இருந்து கால் வந்துச்சு. அதை வச்சு தான் நியூஸ் போட்டோம் குற்றாவளிங்க தப்பிக்கக் கூடாதுங்குறதுக்காக ” என்று வாய்க்கு வந்ததை சொன்னான் பதட்டத்தோடு.
“ஓஓ… எந்த நம்பர்ல இருந்து கால் வந்தாலும் நம்பி அப்டியே சேனல்ல டெலிஹாஸ்ட் பண்ணிருவேங்க?. ம் அப்படியா? ” என்று போலீஸ் அதிகாரிகளுக்கே உரிய சந்தேகமாகக் கேட்டார்.
அவர் குரலில் சிறிது பயந்தவன் “இல்லை சார் அவன் கிட்ட ஆதாரம் இருக்குனு சொன்னாங்க. அதான்…” என்று இழுத்தான். முகம் முழுவதும் பயத்தில் வியர்வை வடிந்தது.
“இப்போ எங்க போச்சு அந்த ஆதாரம்?. என்ன சொன்னேங்க?. குற்றவாளிங்க தப்பிக்கக் கூடாதுனு பண்ணேங்களா?. நீங்க அந்த மாதிரி பண்ணதால தான் அந்தக் கேஸ்ல கலெக்ட் பண்ண எல்லா எவிடன்ஸையும் தொலைச்சுட்டு இருக்குறோம்” என்றார் சினமேற.
ரஞ்சித்திற்கு என்ன சொல்வது இதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
அவரே ” இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு எந்த நம்பர்ல இருந்து கால் வந்தது. என்ன ஆதாரம் என்னனு டீடெயில்ஸ் வேனும். இல்லை பொய்யான தகவல் பரப்புனதுக்காக உங்க சேனல் மேல கேஸ் போட வேண்டியது வரும்” என்று எச்சரித்து விட்டு கிளம்பினார்.
ரஞ்சித் பொத்தென்று சீட்டில் அமர்ந்து விட்டான். ‘குட்டிப்பிசாசு உன் பேச்சைக் கேட்டு பண்ணதுக்கு இதுவும் வேனும் இன்னமும் வேனும். இவருக்கு நான் எந்த டீடெயில்ஸ் குடுக்குறது’ என்று யோசனையில் ஆழ்ந்தான்.
அவர் அலுவலகம் உள்ளே நுழைந்ததுமேப் பார்த்த வைஷாலி ‘ஆத்தாடி இவர்கிட்ட சிக்குனோம் தோண்டி தோண்டி கேள்விக்கேட்டே நம்மகிட்ட உண்மையை வாங்கிடுவாரு. நாமளும் பயத்துல அம்புட்டையும் ஒலறிடுவோம்’ என்று சீட்டில் குனிந்து அமர்ந்து கொண்டாள்.
அவர் சென்ற பிறகு அருணையும் அழைத்துக் கொண்டு ரஞ்சித் அறைக்குச் சென்று என்ன ஏதென்று விசாரித்தனர். “உங்களயெல்லாம நம்பி ஒரு வேலையைக் கொடுத்தேன்ல எனக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை தான். உங்களோட சேர்ந்து என் சீட்டும் கிழியப் போகுது ” என்று தலையிலடித்துக் கொண்டான். ‘ஆமா பெரிய எம்எல்ஏ சீட்டு. ஓவரா சீன் போடாதடா குரங்கு மூஞ்சி’ என்று மனதில் நினைத்து விட்டு “நான் மதிக்கிட்ட போன் பண்ணிக் கேட்கிறேன் சார்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று மதிக்கு அழைத்தாள் உடனடியாக.
மதி, தன் தோழியின் அழைப்பைக் கண்டவுடன் சந்தோஷமாக அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்தவள் மறுமுனையில் அவள் “முக்கியமான விஷயம் சொல்லனும் பக்கத்துல யாராவது இருக்காங்களா?” என்று கேட்கவும் “ஏய் இரு இருடி” என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெதுவாக அறைக்குள் வந்து பேச ஆரம்பித்தாள்.
அவள் என்ன சொன்னாலோ “ம் என்கிட்ட தான் இருந்துச்சு. இப்போ இல்லைடி. அன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்ட்ல காணாமப் போயிடுச்சு” என்று நடந்ததை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
அவள் சொல்லி முடிக்கவும் பின்னாலிருந்து ஒரு குரல் “வாவ் சூப்பர் சூப்பர். இந்த மாதிரி ஒரு கேம் நான் பார்த்ததே இல்லை. பெத்தவங்க மரியாதைப் பத்தியும் கவலையில்லை. உனக்கு ஏதாவது அன்னைக்கு நடந்துருந்துச்சுனா அவங்க என்ன ஆவாங்கனும் கவலையில்லை. உனக்கு உங்க சேனல்ல க்யுரியாசிட்டிய உருவாக்கி அதன் மூலம் சேனல்ல நம்பர் ஒன்னுனு காண்பிச்சுக்கிடனும். இதுல உனக்கு என்னடி பெருமை இருக்கு. அன்னைக்கு நான் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தாலும் என்ன ஆயிருக்கும் தெரியுமா?. நீ என்னடானா அசால்டாக நான் தான் ஆதாரத்தை எடுத்தேன் அதை தொலைச்சேனு சொல்ற ம்ம்” என்று ஏற்கனவே அடுத்த ஸ்டேட்டுக்கு வெங்காய மூட்டைகளை அனுப்ப டிரான்ஸ்போர்ட் கூட கிடைக்காத கோவத்தில் இருந்தவன் இப்போது இதுவும் சேர்ந்து கொள்ள அவள் கன்னத்தில் தன் ஐவிரலையும் பதித்தான்.
பால் வண்ண பளிங்குக் கன்னத்தில் அவன் முரட்டுக்கைகள் அடித்ததில் ஐவிரல்களும் பதிந்திருந்தது. எப்போதும் கோவப்படுபவள் முதன்முதலாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கண்களில் நீர் வடிய நின்றிருந்தாள்.
“சே பொறுப்புனு ஏதாவது ஒன்னு இருக்கா. அவங்கவுங்க சுயநலத்துக்காக கூறுகெட்டத்தனமா ஏதாவது பண்ணிட்டு உங்களால மத்தவங்க கஷ்டப்படுறது கொஞ்சம் கூட கண்ணுக்குத் தெரியல. உங்களை மாதிரி ஆளுங்களைப் பார்த்தாலே எரிச்சலா வருது” என்று தமிழ் மேல் உள்ள கோவத்தில் இவளையும் பொறுப்பில்லாதவள் என்று திட்டி விட்டுச் சென்று விட்டான்.
கண்களில் நீர் வழிய துடைக்கக் கூட மனமின்றி அமர்ந்து விட்டாள். அவள் அதை எதற்காக எடுத்தாள் என்பதற்கான காரணமே வேறு. இப்படி அதைத் தொலைத்து இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் தன் தந்தையை நிறுத்துவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. ‘பொறுப்பில்லாதவளாம். அப்புறம் ஏன்டா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதனால இவனுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு. என்னை சகிச்சுக்கிட்டு இருக்குற மாதிரி பேசுறான். காட்டான். இதுக்குலாம் சேர்த்து வச்சு ஒரு நாள் இருக்குடா’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டிருந்தாள்.
‘சே அன்னைக்கு மட்டும் அதை தொலைக்காமல் இருந்துருந்தா?’ என்று நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
ரவிசச்ந்திரனும் அவரது டீமும் இரவும் பகலும் சேகரித்த ஆதாரம் எல்லாவற்றையும் ஒரு பென்டிரைவில் போட்டு வைத்திருந்தார். அன்று இரவு அவரின் உயர் அதிகாரியிடம் எல்லா ஆதாரங்களையும் காண்பித்து குற்றவாளிகளை அரெஸ்ட் செய்வதற்கான வாரண்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவரின் உயர் அதிகாரி ‘அரெஸ்ட் பண்ற வரைக்கும் இது வெளில தெரிய வேண்டாம்’ என்று சொன்னதால் அதை ரகசியமாக வைத்திருந்தார். உயர் அதிகாரி அவர்களுக்கு விலை போனதை மதியின் நீயூஸ் சேனலின் ரகசிய துப்பறிவாளர்கள் மூலம் அறிந்தவள் இந்த ஆதாரம் இருந்தாலும் குற்றவாளிகள் பெரிய இடம் என்பதால் எப்படியும் பொய் சாட்சி என்று சொல்லி வெளியே வந்துவிடுவார்கள் என்று எல்லாரையும் விட மீடியாக்களுக்கு பவர் அதிகம். மீடியாவில் வெளிவந்து விட்டால் அவர்களை கைது பண்ணாமல் இருக்க முடியாது. அதனால் அன்று சந்தர்ப்பவசமாக ரவியும் வீட்டிற்கு வந்து டீபாயில் ஆதாரத்தை வைத்து விட்டு சற்று தள்ளி யாரிடமோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று கிடைத்த கேப்பில் மதி அவரின் பென்டிரைவில் இருந்து அவளின் பென்டிரைவிற்கு மாற்றி விட்டு போல்டரை டெலிட் செய்யாமல் எம்ட்டி போல்டராக மாற்றி வைத்து விட்டாள்.
அந்த ஆதாரத்தை நியூஸ் சேனலில் காண்பிக்கும் முன்னே சேனலிலும் மகக்ளிடையே க்யூரிய்சிட்டியை உருவாக்க ஒரு நியூஸை பரபரப்பாக்கினர். ஆதாரத்தை டெலிஹாஸ்ட் செய்வதற்குள் மதியை வைத்து மிரட்டி ரவியிடம் இருந்து ஆதாரத்தை வாங்கினர். மதி அதை டெலிஹாஸ்ட் செய்யக் கொண்டு போகும் போது தான் ரவுடி கும்பல் அவளை ஆக்ஸிடென்ட் செய்து கடத்தியது.
அதையெல்லாம் நினைத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ‘அன்று மட்டும் தான் கடத்தப்படாமல் இருந்திருந்தால்?… தன் தந்தைக்கு இப்படியொரு கெட்டபெயர் வந்திருந்திருக்காது’. அவளுக்கு அன்று என்ன நடந்தது என்றெல்லாம் நினைவிலில்லை. அன்று கடத்தக்காரர்களிடம் இருந்து அழைத்த வந்த பிறகும் அவள் பையிலிருந்த பென்டிரைவ்வை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.
வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவளை அவள் அத்தை கனிமொழியின் அழைப்பில் சுயநினைவு வந்து “சொல்லுங்க அத்தை” என்றாள் சுரத்தேயில்லாமல். “இந்தா மதி வெற்றியோட துணி. அவன் துணி கூட வச்சிடு” என்று வெற்றியின் துணிகளை கொடுத்து விட்டுச் சென்றார்.
அவள் கபோர்டை திறந்து உள்ளே வைக்கும் போது துணிகளை சரி செய்ததில் உள்ளிருந்து சிறிய பௌச் ஒன்று வந்து கீழே விழுந்தது. அதைக் கவணிக்காமல் துணிகளை வைத்து விட்டுத் திரும்பியவளின் காலில் ஏதோ தட்டுப் படவும் ‘என்ன அது’ என்று யோசனையோடு கீழே குனிந்து பௌச்சை எடுத்தவளுக்கு பேரதிர்ச்சி. எதைத் தொலைத்து விட்டோம் என்று நினைத்தாளோ எதைத் தொலைத்ததால் அத்தனை ஏச்சு பேச்சுகள் வாங்கினாளோ அது அவள் கையில் இருந்தது. ஆம் அந்த பௌச்சுக்குள் தான் அந்த பென்டிரைவ் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி.
உடனே ‘இதைப்பற்றி வைஷாலியிடம் சொல்லலாம்’ என்று போனை எடுத்தவள் ‘இல்லை இதை நேர்ல போய் தான் முடிக்கனும்’ என்று முடிவு பண்ணி அவள் அத்தையிடம் சென்றாள்.
மெதுவாக “அத்தை எனக்கு வீட்டு ஞாபகமாக இருக்கு. நான் ஊருக்கு போயிட்டு வரட்டுமா?” என்றாள்.
“என்ன மதி திடீர்னு. வெற்றி வேற இல்லையே இப்போ. அவன் காட்டுல நிறைய சோலி கிடக்குனு அது விஷயமாக அலைஞ்சுட்டு இருக்கானே.”
“இல்லத்தை நானே போய்ப்பேன். நான் வேலை பார்த்த கம்பெனிலயும் நான் முடுச்சுக் குடுக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு. அதான் என்னை அர்ஜென்டா வர சொல்றாங்க”.
“சரி மதி போயிட்டுவா. வெற்றி கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடு. உங்க மாமனார் கிட்ட நான் சொல்லிக்கிறேன் “.
“ம் ஓகே அத்தை தேங்க்ஸ்” என்று வேக வேகமாக கிளம்பினாள்.
சென்னை செல்லும் பேருந்தில் ஏறியும் அமர்ந்தாச்சு. ‘வெற்றிக்கு அழைத்து சொல்லலாமா?’ என்று யோசித்தவள் பின் ‘என்னை அடுச்சான்ல அவனே போன் பண்ணட்டும். நம்மளைத் தேடுறானா இல்லையானு பார்க்கலாம்’ என்று நினைத்து அவனிடம் சொல்லாமலே கிளம்பி விட்டாள்.
தொடரும்..
Vanguna adi pathula pola madhi ku
தொடர்ந்து வாசித்து என்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றிங்க.
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.